10/26/2006

கணினி அறிவுக் களஞ்சியங்கள்

கணினி அறிவு உலகத்தில் பொதுப்படையாக எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக
கணினி கால் செண்டர்களுக்கு வந்த உண்மையான புகார்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இது பற்றி எனது ஆங்கிலப் பதிவிலும் எழுதியுள்ளேன். Proz.com என்னும் மொழிபெயர்ப்பாளர் தலை வாசலிலும் எழுதியுள்ளேன்.

தகவல் மையம் (த.மை.): நீங்கள் என்னக் கணினி வைத்திருக்கிறீர்கள்?
வாடிக்கையாளர் (வா.): வெள்ளை நிறக் கணினி...

> > ====

வா.: என் பெயர் செலின். என்னால் கணினியிலிருந்து ஃப்ளாப்பியை வெளியே எடுக்க இயலவில்லை.
த.மை.: பட்டனை அழுத்திப் பார்த்தீர்களா?
வா.: பார்த்தேன், ஆனால் அப்படியே மாட்டிக் கொண்டுள்ளது.
த.மை: சீரியஸான புகார்தான், இதோ குறித்துக் கொள்கிறேன் ..
வா.: வேண்டாம்... ஒரு நிமிஷம்... அடேடே நான் ஃப்ளாப்பியை உள்ளே திணிக்கவே இல்லை.... மேஜையின் மேலேயே இருக்கிறது, ஹி ஹி ஹி.

> > ====

த.மை: திரைக்கு இடப்புறம் உள்ள "மை கம்ப்யூட்டர் ஐக்கானில் க்ளிக் செய்யவும்.
வா.: உங்களுக்கு இடதா அல்லது எனக்கு இடதா?

> > ====

த.மை.: வணக்கம். ஏதேனும் உதவி தேவையா?
ஆண் வா.: ஹலோ... என்னால் ப்ரிண்ட் செய்ய முடியவில்லை.
த.மை: ஸ்டர்ட்-ல் க்ளிக் செய்து ...
வா: இதோப் பாருங்க; இவ்வளவு தொழில் நுட்பமெல்லாம் நமக்கு வராது! நான் என்ன பில் கேட்ஸா!

> > ====

வாய்ஸ் மெயில் செய்தி: ஹலோ, நான் மார்த்தா பேசுகிறேன். என்னால் பிரிண்ட் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு தடவை முயற்சிக்கும்போதும் கணினி 'பிரிண்டரை கண்டுபிடிக்க இயலவில்லை' என்று செய்தி தருகிறது. ப்ரிண்டரைத் தூக்கி அதன் திரை முன்னால் ஆட்டியும் அதுக்குப் புரியலை, சொன்னதையே சொல்லிட்டிருக்கு...

> > ====

வா.: என்னால் சிவப்பு எழுத்துகள் பிரிண்ட் செய்ய முடியவில்லை...
த.மை: உங்களிடம் இருப்பது கலர் பிரிண்டர்தானே?
வா.: இல்லை.

> > ====

த.மை: உங்க மானிட்டர்லே என்ன பாக்குறீங்கம்மா?
வா.: என்னோட பாய்ஃபிரண்ட் கொடுத்த கரடி பொம்மைதான் இருக்கு, என் பிறந்த நாளுக்காக வங்கியது.

> > ====

த.மை: இப்போ F8 அழுத்தவும்.
வா.: பிரயோசனமில்லை, வேலை செய்ய மாட்டேங்குது.
த.மை.: என்னதான் பண்ணீங்க நீங்க?
வா.: நீங்க சொன்ன மாதிரி F-கீயை 8-முறை அமுக்கினேன, ஆனால் ஒண்ணும் வரமாட்டேங்குது.

> > ====

வா.: என்னோட கீபோர்ட் வேலை செய்ய மாட்டேங்குது.
த.மை: அதை கணினியோட சேத்திருக்கீங்களா?
வா.: தெரியல. கணினி பின்னால் எல்லாம் போய் பார்க்க முடியாது.
த.மை.: கீபோர்டை எடுத்துக்கிட்டு 10 அடி பின்னாலே வாங்க.
வா.: ஓக்கே
த.மை.: உங்க கையோட கீபோர்ட் வந்துதா?
வா.: வந்துது.
த.மை.: அப்படீன்னாக்க கீபோர்ட் இணைக்கப்படல்லை. வேறே இன்னொரு கீபோர்ட் பக்கத்திலே இருக்கா?
வா.: அட ஆமாம், இதோ இன்னொண்ணு இருக்கே. ...இது வேலை செய்யறது, ஹி ஹி ஹி!

> > ====

த.மை: உங்க கடவுச் சொல் small letter a as in apple, a capital letter V as in Victor, மற்றும் எண் 7.
வா.: எண் 7 கேப்பிடலிலா?

> > ====

ஒரு வாடிக்கையாளரால் இணையத்துக்கு செல்ல இயலவில்லை.
த.மை: சரியானக் கடவுச் சொல்லை உபயோகித்தீர்களா?
வா.: நிச்சயமாக. மற்றவர்கள் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.
த.மை.: கடவுச் சொல்லைக் கூற இயலுமா?
வா.: ஐந்து நட்சத்திரங்கள்.

> > ====

த.மை.: என்ன ஆண்டி-வைரஸ் ப்ரொக்ராம் பாவிக்கிறீர்கள்?
வா.: நெட்ஸ்கேப்.
த.மை.: அது ஆண்ட-ிவைரஸ் இல்லையே.
வா.: ஓ, மன்னிக்கவும்...இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

> > ====

வா.: எனக்கு இப்போது பெரிய பிரச்சினை. என் நண்பன் எனக்கு ஒரு ஸ்க்ரீன்சேவர் அளித்துள்ளான். ஆனால் எலிக்குட்டியை நகர்த்தும்போதெல்லாம் அது மறைந்து விடுகிறதே!

> > ====

த.மை.: மைக்ரோஸாஃப்ட் உதவி மையம், உதவி தேவையா?
வா.: வணக்கம்! கடந்த 4 மணி நேரமா காத்திருக்கேன், எப்போ வருவீங்க?
த.மை.: என்னது..? மன்னிக்கவும், என்ன உங்கள் பிரச்சினை?
வா.: நான் இப்போது வோர்ட் கோப்பில் வேலை செய்கிறேன், உதவிக்கான பட்டனை 4 மணி நேரத்துக்கு முன்னாலேயே அமுக்கியாயிற்று. எப்பத்தான் நீங்க உதவி பண்ணப் போறீங்க?

> > ====

த.மை.: என்ன உதவி வேண்டும்?
வா.: முதல் தடவையாக மின்னஞ்சல் அனுப்பறேன்.
த.மை.: சரி, அதிலே என்ன பிரச்சினை?
வா: அதாவது, எங்கிட்டே எழுத்து a இருக்கு, ஆனால் அதை சுத்தி எப்படி வட்டத்தைப் போடறது?

> > ====

வா.: ஹலோ, என்னோட கணினிலே ஒரு பாகம் உடைஞ்சுப் போச்சு.
த.மை: என்ன பாகம்?
வா.: காப்பி கப் ஹோல்டர்.
த.மை.: இன்னாது???
வா.: அதாங்க, நடுவிலே ஓட்டையோட ஒரு டிரே மாதிரி இருக்குமே. ஒரு பட்டனை அழுத்தினா, டொய்ன்னு வெளியே வருமே, அதுங்க ... காப்பியெல்லாம் கூட கீழே கொட்டிடிச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி இந்தப் பக்கத்துக்கு

13 comments:

Cervantes said...

கணினியைப் பொருத்தவரை எல்லாமே தெரியும் என்று யாருமே கூறிவிட முடியாதுதான்.

ஆனால் காப்பி கப் ஹோல்டர்? இது டூ மச், இல்லே இல்லே த்ரீ மச். :))))

கிருஷ்ணன்

யோசிப்பவர் said...

டோண்டு ஸார்,
இது பழைய மெய்லு!!!;)

dondu(#4800161) said...

நன்றி கிருஷ்ணன் அவர்களே. அடுத்தப் பதிவைப் பார்த்தால் என்ன கூறுவீர்களோ தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

நீங்கள் சொல்வது சரிதான் யோசிப்பவர் அவர்களே. இன்று மாலை வெளியே செல்லும் அவசரத்தில் இருந்ததால் லிங்குகள் தரத் தவறி விட்டது. இப்போது கொடுத்துள்ளேன். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாட்டாமை said...

நல்ல நகைச்சுவையான பதிவு டோண்டு அவர்களே.

நீங்கள் பொதுதுறையில் பணிபுரிந்த போது தானே கணிணிகள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தன? நீங்கள் வேலை செய்த நிறுவனங்களை கணினி மயமாக்கிய போது ஏதேனும் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்சனைகள் நிகழ்ந்தனவா? அப்படி இருந்தால் அதைப் பற்றிய ஏதேனும் சுவாரசியமான தகவல்கள் இருந்தால் பதிவாகவோ, பின்னூட்டமாகவோ இடுங்கள். எங்களுக்கு தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்

GiNa said...

இதை படித்தவுடன் நான் சமீபத்தில் 1988ல் பம்பாயில் கணினி ஆசிரியராக பணியாற்றியபோது நடந்தது லிங்க் வந்தது.

அப்போது DOSல் dBase III மென்பொருளில் ஒவ்வொரு கட்டளயும் கொடுத்தபின் Enter கீயை அமுக்கவேண்டும். குப்தா என்றொரு மாணவர் எவ்வளவு முறை சொன்னாலும் அதைமட்டும் செய்யவே மாட்டார். ஒருமுறை கட்டளையை கொடுத்துவிட்டு சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்தார், ஒன்றுமே நடக்கவில்லை. lab assistant வெறுத்துப்போய், "குப்தாஜி, இப்படியே உட்கார்ந்திருந்தால் உங்கள் தாடி வேண்டுமானல் இன்னும் பெரிசாக வளரும், ஆனால் Enter அடிக்காதவரை கணினி எவ்வளவு முறைத்துப்பார்த்தாலும் ஒன்றும் செய்யாது" என்றான்!

dondu(#4800161) said...

தாடியாவது வளர்ந்ததா குப்தாஜிக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#4800161) said...

நாட்டாமை அவர்களே. எனது நிறுவனத்தில் கணினி 1991-ல் அறிமுகம் ஆனது. கணினி அருகில் கூட போக முடியாதபடி காபந்து எல்லாம் செய்திருந்தார்கள். நான் விருப்ப ஓய்வு பெற்றது 1993-ல். அப்போதுதான் தட்டுத் தடுமாறி வேலைகள் நடந்தன.

என்னைப் பொருத்தவரைக்கும் நான் முதலில் கணினியைத் தொட்டதே பிப்ரவரி 2002-ல் தான்.

இப்போது தினம் ஒரு புது விஷயம் கற்றுக் கொள்வதில் வயதே குறைந்தது போன்ற ஃபீலிங்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

nagoreismail said...

நல்ல நகைச்சுவையான பதிவு, இது போல் வேடிக்கை எல்லாம் கால் சென்டரில் பணி புரிந்த எனது உறவினர் ஒருவரிடம் கேட்டிருக்கிறேன், பதிவிற்கு நன்றி, நாகூர் இஸ்மாயில்

சீனு said...

//ஒரிஜினல் அவரது வன்தகட்டிலேயே உள்ளது. நான் அதையும் மொழிபெயர்ப்புடன் அனுப்ப வேண்டுமாம். :)))))//
இல்லை. ஒரிஜினல் வந்தவுடன் அதனை அவர்கள் அனுப்பிய ஒரிஜினலுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.

dondu(#4800161) said...

"ஒரிஜினல் வந்தவுடன் அதனை அவர்கள் அனுப்பிய ஒரிஜினலுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்."

ஜோக் அடிக்கிறீர்களா? ஒரிஜினலை ஒரு இப்படிச் சேமி நகல் எடுத்துக் கொண்டு, அதைத்தான் மொழிபெயர்ப்பேன். அவர்களது ஒரிஜினலை நான் தொடவே மாட்டேன். இதில் என்ன விஷயம் என்றால் நான் அவருடன் டெலிஃபோனில் பேசி இதை விளக்கியது, அவர் தலையில் அடித்துக் கொண்ட சத்தம் எனக்குக் கேட்டது. அடுத்து அவர் இட்ட சத்தம் ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜாம்பஜார் ஜக்கு said...

http://papaasangam.blogspot.com/2008/05/blog-post_08.html

//இது சம்பந்தமாக நானும் பதிவிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_26.html//

தலீவா, நீங்க இன்னும் எதப்பத்தி இன்னும் பதிவு எளுதலன்னு ஒரு லின்க் தர முடியுமா? :)))))

மெய்யாலுமே ஆச்சரிய‌மா கீது பதிவுலக டோனி அவர்களே (எத்தினி நாளுக்குதான் டென்டுல்கர்னே சொல்லிகினு இருக்கறது. டென்டுல்கருக்கு வயசாவுதுல்ல! :)))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

dondu(#11168674346665545885) said...

//டென்டுல்கருக்கு வயசாவுதுல்ல! :)))))//

இது அவருக்கும் தெரியுமா? :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது