10/10/2006

ஆடுதுறை ரகு - ஒரு ஹைபெர் லிங்க்

இது ஒரு மீள் பதிவு. இன்னொன்றா என்று நம்பியார் குரலை விவேக் மிமிக்ரி செய்வது போல கூவ நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம். இந்த மீள்பதிவுக்கு வலைப்பதிவர் கிருஷ்ணா அவர்களே பொறுப்பு. இப்போது இந்த ஹைப்பர்லிங்குக்குப் போவோமா? கிருஷ்ணா அவர்களுக்கு நம்பிக்கை வராவிட்டால் இதில் உள்ள முதல் பின்னூட்டங்களின் தேதிகளைப் பாருங்கள்.

சமீபத்தில் 1972-ஆம் வருஷம் நான் பம்பாயில் சி.பி.டபிள்யூ.டி யில் இளநிலைப் பொறியாளராக இருந்தேன். ஒரு நாள் கேன்டீனில் வைத்து என் நண்பர் வெங்கடராமன் எனக்கு ஒரு புது நபரை அறிமுகப் படுத்தினார். "ராகவன் இவர்தான் ஆடுதுறை ரகு" என்று. அவரும் ஹல்லோ என்று கை குலுக்கினார். அவர் வயதும் என் வயதும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. திடீரென்று என் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்தது.

உடனே ரகுவை நான் கேட்டேன்: "உங்கள் பெரியப்பா பெயர் T.P. கிருஷ்ணமாச்சாரியா?"
ரகு (திகைப்புடன்): "ஆமாம், உங்களுக்கு எப்படி...?"
நான்: "அவருடைய ஷட்டகர் பெயர் சீனுவாசந்தானே?"
ரகு: "ஆமாம், ஆனால் நீங்கள் எப்படி...?"
நான்: "சீனுவாசன் என்னுடைய மாமா."
வெங்கடராமன்: "சே, இதான் ஐயங்கார்களுடன் பிரச்சினை. ஏதாவது உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். "(அவர் ஐயர்)
ரகு: "இப்போது நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?"
நான்: "உங்கள் பெரியப்பாவின் மனைவியும் என் மாமியும் சகோதரிகள்".
ரகு (அழும்போல ஆகி விட்டார்): "எப்படி சார் கண்டு பிடித்தீர்கள்?"
நான்: "இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ரகு. சமீபத்தில் 1955-ல் என் சின்ன மாமாவுக்குப் பெண் பார்ப்பதற்காக என் அம்மா, சின்ன மாமா மற்றும் உங்கள் பெரியப்பா கும்பகோணம் சென்றனர். திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் உங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த வீட்டில் ரகு என்று என் வயதுடையப் பையன் இருந்ததாக என் அம்மா கூறியிருந்தார். இப்போது ஆடுதுறை ரகு என்று என் காதில் விழுந்தவுடனேயே அந்த ஞாபகம் வந்தது. ஆகவே உங்களைக் கேட்டேன்."

அப்பொது கணினி அறிவு எனக்கோ வேறு யாருக்குமோ இல்லை. இப்போது அது நடந்திருந்தால் இதை ஒரு ஹைப்பெர்லிங்கிற்கான உதாரணமாக ரகுவிடம் கூறியிருப்பேன்.என் வாழ்க்கையில் இம்மாதிரி பல ஹைப்பெர்லிங்குகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

dondu(#11168674346665545885) said...

"மெட்டி ஒலி" மாணிக்கம், போஸ், ரவி மற்றும் கோபி ஆகியோர் ஒருவருக்கொருவர் ஷட்டகர்கள். சகலைகள் என்றும் கூறுவர். ஷட்டகர் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

P.V.Sri Rangan said...

//ஷட்டகர் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.//

நீங்களென்னாக்கா யாருங்க சார்? அம்பிகளா? நன்னா இருக்கோய் உம்முடைய ஐயர்க் குசும்பு!இன்னாத்த மாமோய் சொல்றே?ஒன்னுமா புரியேல்லே.ஐயங்காக்காரூ,ஐயங்காக்காரூ... ஐயரூகாக்காரூன்னு பினாத்திகிட்டிருக்கிறியே டோண்டூ மண்டூ...

dondu(#11168674346665545885) said...

Karunaa said...
//ஷட்டகர் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.//

நீங்களென்னாக்கா யாருங்க சார்? அம்பிகளா? நன்னா இருக்கோய் உம்முடைய ஐயர்க் குசும்பு!இன்னாத்த மாமோய் சொல்றே?ஒன்னுமா புரியேல்லே.ஐயங்காக்காரூ,ஐயங்காக்காரூ... ஐயரூகாக்காரூன்னு பினாத்திகிட்டிருக்கிறியே டோண்டூ மண்டூ...

கருணா அவர்களே, நடந்தது நடந்தபடி கூறினேன். அதில் நான் ஐயங்கார் என்பது எதேச்சையாக வந்தது. நிகழ்ச்சிக்கு சுவை கூட்டியது. இதில் உமக்கு என்ன ஐயா ஆட்சேபணை இருக்க முடியும்? நான் என்ன எழுத வேண்டும் என்று உம்மிடம் ஆலோசனை கேட்டதாக ஞாபகம் இல்லையே? அப்படி ஏதாவது கேட்டால் கூறுங்கள்.
உம்முடைய பின்னூட்டத்தை அழிக்க நினைத்தேன். உம்முடைய நாகரிகமும் மற்றவருக்கு புரியட்டுமே என்று விட்டு விர்ட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்பதிவில் முக்கியமானது ஹைப்பெர் லிங்கே. "ஆடுதுறை ரகு" என்றப் பெயரைக் கேட்டவுடனேயே அச்சொல் என்னை 1972-லிருந்து 1955-க்கு இட்டுச் சென்றது. ரகுவிடம் நான் அவர் பெரியப்பாவைப் பற்றிக் கேட்டது மைக்ரோ நொடிகளில் நடந்தது.

"திடீரென்று என் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்தது."
இந்த வாக்கியத்தை எழுதவோ ஏன் படிக்கவோ எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட வேகமாக ஹைப்பெர் லிங்க் செயல்பட்டது.

அதைக் கூற நான் முனைந்த போது அதைப் படித்த பேராசிரியருக்கு "ஷட்டகர்" மற்றும் "ஐயங்கார்" வார்த்தைகள் விஞ்ஞானி பாவ்லோவ் அவர்கள் ஆராய்ந்த எதிர் வினையைத் தூண்டி விட்டது என்று நினைக்கிறேன்.

ஆனால் என்ன செய்வது, இதற்காக யதார்த்தத்தை விட முடியுமா? ஒரு ஐயர் மற்றும் இரு ஐயங்கார்கள் தங்களுக்குள் அப்படித்தான் பேசிக் கொள்வார்கள். சகலை என்று கூற மாட்டார்கள், ஷட்டகர் என்றே கூறுவார்கள்.

Dres.K.Paramuveelan,Phd,MRCP,MRCS. அவர்களே, டேக் இட் ஈஸி. மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய நீங்கள் இன்னும் அதிகப் பொறுமை காப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன், தாங்கள்?

என் தரப்பில் நான் கூல் டௌன் ஆனதாலேயே இப்போது இப்பின்னூட்டத்தை இட்டேன். உங்கள் புரிதலில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஏனெனில் உங்கள் "தூண்டில்" வலைப்பூவில் மொழிப்போர்கள் பற்றி எழுதிய உங்கள் பதிவு என்னைக் கவர்ந்தது. நான் கூட அதில் பின்னூடமிட்டிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

P.V.Sri Rangan said...

Mr.Rahavan,I always prefer to believe the best of everybody-it saves so much trouble.It may be that we become more learned through the knowledge of others.Wiser we become only through ourselves!You are not better,if you are praised,and not worse,if you are abused.
Friendships are like floating bridges that connect islands.

-எனவே,அனைத்தும் மறந்து நாம் மேலே செல்வோம்.உங்களைப் புரிந்துகொள்கிறேன் திரு.இராகவன்.தங்கள் மேலான விளக்கங்களுக்கு நன்றி.
நட்புடன்
கருணாநந்தன் பரமுவேலன்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி கருணாநந்தன் பரமுவேலன் அவர்களே. நான் எதிர்பார்த்தபடியே நீங்கள் என்னைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.

இப்போது ஹைபெர்லிங்குகளைப் பார்ப்போம். என் வாழ்வில் பல முறை இவற்றை சந்தித்தவன். அவற்றை வெவேறு தருணங்களில் பதிவாகப் போட்டு வந்தேன். அப்போதெல்லம் தமிழ்மணம் இப்போதளிக்கும் இற்றைப்படுதல்கள் இல்லை. எல்லா வலைப்பூக்களையும் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது. ஆகவே பலர் என் ஹைப்பெர்லிங்குகளை மிஸ் செய்திருப்பார்கள். ஆகவே அவற்றை ஒவ்வொன்றாகப் புதிப்பிக்க எண்ணம். நேரமிருப்பின் பாருங்கள். தமாஷாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கோஇஞ்சாமியின் பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமில்லாததால் நீக்கப்படுகிறது. வழக்கம் போல லிங்க் மட்டும் வைத்துக்கொள்ளப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மரத் தடி said...

//நீங்களென்னாக்கா யாருங்க சார்? அம்பிகளா? நன்னா இருக்கோய் உம்முடைய ஐயர்க் குசும்பு!இன்னாத்த மாமோய் சொல்றே?ஒன்னுமா புரியேல்லே.ஐயங்காக்காரூ,ஐயங்காக்காரூ... ஐயரூகாக்காரூன்னு பினாத்திகிட்டிருக்கிறியே டோண்டூ மண்டூ..//

கருணா அவர்களே.. சரியான நெற்றியடி கொடுத்தீர்கள்! ஷட்டகர், அம்பிகள், வடகலை, தென்கலை, நாமம், பூணூல் எனப் பேசும் பிராமனர்களுக்கு தங்களின் பதில் நல்ல சவுக்கடி.

krishjapan said...

மன்னிக்கவும். இதைப் போன்றதல்ல அது.

slip of tongue wil always tell the truth என்பார்கள். ஒரு சொல் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்துகிறது...."முதன்முதலில்".

செந்தழல் ரவி இன்றைய பதிவில் எழுதியிருப்பார்.. அண்டார்டிகாவில் இரண்டு வருடம் வேலை செய்தேன் என்று சொன்னால், போய் பார்க்கவா போகிறார்கள் என்று...

dondu(#11168674346665545885) said...

எதுவும் எதைப் போன்றும் முழுமையாக இருக்க முடியாது. சீரியசாகவே கூறுகிறேன். 1961-ல் இதைப் படித்த போது என் மனதில் நின்றது இது. அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன், முழுப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். அப்பரீட்சை ஏப்ரல் 12, 1961-ஆம் வருடம் ஆரம்பித்தது.

அப்படித்தான் நினைவுகள் தேதிவாரியாகப் பிரிக்கப்படுகின்றன என் மனதில்.

இந்த ஹைப்பெர்லிங்கை நான் இங்கு காட்டியதன் காரணமே எனது ஞாபக சக்தியைப் பற்றிக் கூறவே. அதே நேரம் எனது ஞாபகசக்தி அப்படி ஒன்றும் தனித்துவம் வாய்ந்ததல்ல. என் நண்பர் நாராயணன் என்னுடன் பத்தாவது படித்தவர். எதேச்சையாகக அவர் நம்பரைத் தெரிந்து கொண்டு அவருடன் 2002-ல் தொலைபேசினேன். அவரிடம் வெறுமனே அவருடன் பள்ளியில் படித்ததைக் கூறி என் பெயரைக் கூறியதும் அவர் உடனே ஹிந்து நிருபர் மகன்தானே என்று கேட்டு என்னை அசத்தினார்.

நான் கூற வருவது இதுதான். ஞாபகசக்தி என்பது விசித்திரமானது. சில பழைய ஞாபகங்கள் மனதில் நிற்கும் சில சமகால விஷயங்கள் மறந்து போகும். முழுமையான நினைவு என்று எதுவுமே கிடையாது என்றுதான் கூற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சென்ஷி said...

அட.. நம்ம ஊர் பக்கம் வந்தீங்களா

எனக்கும் ஆடுதுறைதான் அய்யா

ஆடுதுறைய பத்தி தெரிந்ததை சொல்லுங்களேன்

சென்ஷி

dondu(#11168674346665545885) said...

ஆடுதுறையை பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் அது ரகுவின் ஊர் என்பது மட்டுமே. இப்போது சென்ஷிக்கும் அதே ஊர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

"செந்தழல் ரவி இன்றைய பதிவில் எழுதியிருப்பார்.. அண்டார்டக்காவில் இரண்டு வருடம் வேலை செய்தேன் என்று சொன்னால், போய் பார்க்கவா போகிறார்கள் என்று..."
அதுக்குப் செந்தழல் ரவியைப் போய் கேளுங்க. டோண்டு ராகவன் எப்படி பொறுப்பாவார்?

கண்டிப்பாக இந்தப் பழைய பதிவு பல மாதங்களுக்கு முன்னால் உங்களுக்கு இப்போது பதில் சொல்வதற்காகப் போடவில்லை என்பதையாவது உணர்கிறீர்களா?

நீங்கள் ஒரு விஷயத்தை கூகள் பக்கத்தில் இந்த ஆண்டு பார்த்தீர்கள். அதே விஷயத்தை டோண்டு சார் 45 வருடத்துக்கு முன்னால் விகடனில் பார்த்திருக்கிறார். இதில் உங்களுக்கென்ன பிரச்சினை? எந்த ஆதாரத்தில் அது உண்மையில்லை என்று கூறுகிறீர்கள்?

கிருஷ்ணன்

Nathanjagk said...

சங்காவின் பதிவின் மூலம் இந்த இடுகைக் குறிப்பு அறிந்து வந்தேன். நல்லாயிருக்கு உங்க ​​ஹைப்பர்லிங்க். இதற்குதான் முன்பெல்லாம் ஊர்​பேரை ஒரு அடைமொழியாக பயன்படுத்துவர். இப்போது அதெல்லாம் மலையேறிவிட்டது.

ஷங்கி said...

என் வலைப்பூவில் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களின் இந்த இடுகையை நான் முன்பே படித்திருக்கிறேன். அப்போது மேய்தல் மட்டுமே தொழிலாதலால் பின்னூட்டம் போடுவதில்லை. உங்கள் அனுபவப் பதிவுகளுக்கு நான் ரசிகன்.
மீண்டும் நன்றி.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது