10/13/2006

CPWD அனுபவங்கள் - 6

இதன் முந்தையப் பகுதிகளின் சுட்டிகள்:

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
குட்டி ரேவதியும் CPWD-யும்

அன்று கோட்டகப் பொறியாளர் (மின்சாரம்) எங்கள் சைட்டுக்கு (CRPF முகாம், ஆவடி) வரும்போதே சற்று டென்ஷனுடன் வந்தார். மெயின் கேட்டிலேயே ஜீப்பை நிறுத்தி விட்டு நான் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த தெருவிளக்கு கேபிள் போடும் குழிக்கு அருகில் வந்தார்.

சிறிது நேரம் நான் மேற்பார்வை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென்று "ஏன் அம்மாதிரிக் கடிதம் எழுதினீர்கள்" என்று கேட்டார். எனக்கு அவர் கேட்பது புரியவில்லை. பிறகு அவர் என்னை ஜீப்பில் ஏறுமாறு கேட்டுக் கொண்டு அலுவலகம் அழைத்துச் சென்றார். அங்குதான் மனிதர் விளக்கினார்.

சில நாகளுக்கு முன் எங்கள் அலுவலகத்துக்கு ஸ்பெசிஃபிகேஷன் கமிட்டியாரிடமிருந்து ஒரு சர்குலர் வந்திருந்தது. அதில் High Rupturing Capacity (HRC) பியூஸ்கள் காலாவதியான பிறகு இரண்டாக வெட்டிப் போடுமாறு கூறப்பட்டிருந்தது. ஏனெனில் பழையதை வைத்து spurious பியூஸ்கள் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு வருகின்றனவாம். இந்த பியூஸ்கள் ரொம்ப பாதுகாப்பானவை, அதே சமயம் விலையும் அதிகம். முதல் முறை வாங்கிப் போட்டு விடுவார்கள். அது ப்ளோ அவுட் ஆனதும் இன்னொன்று வாங்காது சாதாரண கம்பிகளையே பியூஸாக உபயோகிப்பார்கள். இதுதான் யதார்த்த நிலை. அதே சமயம் கம்பி பியூஸ்களை (rewirable fuses) உபயோகிக்கும் ஸ்விட்சுகளும் இருந்தன.

ஆகவே என்ன நடந்ததென்றால் HRC-க்கு பதிலாக சாதாரண மின் கம்பிகளையே உபயோகிப்பார்கள். நான் என்ன செய்தேனென்றால், ஸ்பெசிஃபிகேஷன் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதாவது செய்யப் போவது சாதாரண கம்பிகளை உபயோகிப்பதே. அதற்கு பேசாமல் ரிவைரபிள் பியூஸ் உள்ள ஸ்விட்சையே போட்டுத் தொலைக்கலாமே என்று ஒரு இன்லேண்ட் லெட்டரில் எழுதி தில்லிக்கு போஸ்ட் செய்து விட்டு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். அக்கடிதம் தில்லியில் போய் பெரிய புயலையே கிளப்பி விட்டது. அங்கிருந்து ஒரு பெரிய ஓலை எல்லா கோட்டகங்களுக்கும் வந்தது. அதில் ஒவ்வொரு கோட்டகத்தில் உள்ள சைட்டிலும் நான் சொல்வது போலத்தான் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லியிருந்தார்கள். அதை எடுத்துக் கொண்டு எங்கள் EE வந்திருக்கிறார். அவர் எங்கள் ஏ.இ.யிடம் கேட்ட்க அவர் மென்று விழுங்கியிருக்கிறார். இப்போது இருவருமே என்னை "அடே பாதகா" என்பது போல பார்த்தனர்.

சரி பதில் அனுப்ப வேண்டுமே. இ.இ. பேசாமல் தனது சைட்டுகளில் HRC பியூஸ்கள்தான் போடுகிறோம் என்று சத்தியம் செய்யாத குறையாக எழுதி அனுப்பி விட்டார். சொல்லி வைத்தாற்போல எல்லா டிவிஷன்களிலிருந்தும் அதே பதில் அனுப்பப்பட்டு விட்டது.

என் சக இஞ்சினியர் என்னிடம், "என்ன சார் இவ்வாறு ஆகி விட்டதே, ஸ்பெசிஃபிகேஷன் கமிட்டி உங்களை விளக்கம் கேட்டால் என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். நான் கூறினேன்: "ஒன்றும் நடக்காது. ஊரே சிரித்தால் கல்யாணம். எல்லாமே ஒப்புக்கு செய்யும் வேலை. நோண்ட மாட்டார்கள். அப்படி நோண்டினால் நான் ஏதாவது ஜூனியர் இஞ்சினியர் Materials at site (MAS) அக்கவுண்டைப் பார்க்கச் சொல்வேன். அதுவும் கடந்த 5 வருடங்களுக்கு. அப்போது எல்லோரும் மாட்டுவார்கள். ஆகவே இதை அப்படியே அமுக்கி விடுவார்கள் பாருங்கள்" என்றேன். அதுதான் நடந்தது.

இந்த ஒப்பந்தக்காரர்கள் பில்கள் போடும்போது பார்ட் பில்கள் வேலை நடந்து கொண்டிருக்கும்போது போடுவோம். அதில் ஒரு டிக்ளரேஷன் தர வேண்டும். அது இவ்வாறு தரப்படும்:

1. It is hereby declared that the work measured and paid for in this part bill has been done as per agreement.
2. Part rates are proposed in Government interest.
3. Contractor has removed all debris from site.

நான் என்ன செய்தேன் என்றால், பில்லை எல்லாம் எழுதிவிட்டு மேலே உள்ளதை மட்டும் ஹிந்தியில் எழுதுவேன். ப்ரமாணித் கியா ஜாத்தா ஹை, என்று ஆரம்பித்து அது செல்லும். முதல் தடவை எழுது ஏ.இ.யிடம் கொடுத்தேன். அவர் என்னை புருவம் உயர்த்திப் பார்த்தார். நான் அவரிடம் இந்த டிப்பார்ட்மெண்டில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் வேலை செய்ய அனுமதி உண்டு என்பதை எடுத்துக் கூற சிரித்துக் கொண்டே கையெழுத்திட்டார். டிவிஷன் ஆஃபீசில் ஆடிட்டர் டென்ஷன் ஆனார். இ.இ.யிடம் போயிருக்கிறார். அவரும் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார். பில்லை திருப்பி அனுப்பப் போவதாக என்னை ஆடிட்டர் போனில் மிரட்ட, அவர் தைரியமிருந்தால் எழுத்தில் ஆட்சேபிக்குமாறு கூற அவரும் ஜகா வாங்கினார். பிறகு என்னிடம் அழாக்குறையாக என்ன எழுதியிருக்கிறேன் என்று கேட்க நானும் விளக்க, மனதேயில்லாது பாஸ் செய்தார். எல்லாம் ஒரு தமாஷுக்குத்தான். டிவிஷன் ஆபீசில் அக்காலக் கட்டத்தில் நான் தயாரித்த பில்கள் சுலபமாக ஹிந்தி எழுத்துக்கள் இருந்ததால் தேடி எடுக்க முடிந்தது.

ஆனால் விஷயம் அதோடு முடியவில்லை. தில்லியிலிருந்து ஒரு ஆடிட் பார்ட்டி வந்திருந்தது. டிவிஷன் ஆபீசில் இந்த பில்களைப் பார்த்து விட்டு எங்கள் சப்டிவிஷனையே ரேண்டம் ஆடிட்டுக்குத் தேர்ந்தெடுத்தனர். இப்போது ஏ.இ. டென்ஷனார். "என்னங்க நீங்க இப்படி மாட்டி விட்டீர்கள் என்று சாடினார். எனக்கும் உதறல்தான். ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது. அவர்கள் வந்தது என்னைப் பார்ப்பதற்கே. என்னுடன் சந்தோஷமாக ஹிந்தியில் உரையாடிவிட்டுச் சென்றனர். காட்டிய ரிஜிஸ்தர்களில் ஒப்புக்கு புரட்டிப் பார்த்து விட்டு கையெழுத்திட்டு விட்டு சென்றனர். அப்போதுதான் எங்களுக்கும் மூச்சு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

tbr.joseph said...

ஏன் சார், நீங்க அப்பவே குசும்பு பண்றதுல பயங்கர கில்லாடி போலருக்கே:)

dondu(#4800161) said...

ஆவடியில் இருந்த 7 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் பொன்னான கனாக் காலம். அதில் எனது தந்தையின் கடைசி 5 ஆண்டுகளும் நிம்மதியாகக் கழிந்தன.

வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொண்டது இங்குதான். பம்பாயில் கவலையற்ற பிரம்மச்சாரி வாழ்க்கை. இங்கோ கல்யாணமான வாழ்க்கை.

ஆனால் எனது மனது 25 வயதிலேயே நின்று விட்டது. இப்ப மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று என் நண்பர்கள் நினைப்பது புரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dinakar said...

Dondu sir,

I am unable to understand this post.You have used lots of technical words.

dondu(#4800161) said...

Dinakr, let me explain in English. A main switch of capacity 200 Amps is quite big in size. it can cater to a load 100 Kilowatts easily. When the switch capacity is exceeded due to overload or due to short circuits, the current path should break to prevent damages to the equipments serviced by the switch. Just for that purpose a fuse is used. It is a sort of weak link which gives out first, thereby preventing further flow of electric current to costly equiments. This fuse is replaceable with a new one. This is the general picture.

In households you would have seen the linemen fitting the fuse carriers with new wires. These are called rewireable fuses. And cost the least. Then there are HRC fuses. When the HRC fuses blow out, there is no spark generated, which would have been the case with rewireable fuses. In that way fire hasards are avoided with HRC fuses. But the catch is, they are quite costly. And they have to be specifically purchased for various amperages and kept in stock. This creates a sort of bookkeeping headache for the Junior Engineers, who are already overworked.

But in the case of rewireable fuses only the fusewire is to be purchased and their ratings can be changed at will, by bunching together the required number of wire strands.

A typical site maintained by CPWD has got so many switches to look after and with just one item of wire, all the switchwes can be catered, whereas with HRC fuses, it is just not possible.

Got the picture? Now read my post again.

Regards,
Dondu N.Raghavan

dinakar said...

That was a great job, dondu sir.You literally did an english tranlsation for me.Thank you.I will go through the english translation and your posting once again.

Nowadays why arent you writing in your english blog?

dondu(#4800161) said...

It suffices to remember that in a costly item, namely a switch with HRC fuses, the rewireable solution was resorted to due to many considerations and I blew the whistle.

I sort of became unpopular with my EE because of that.

Regards,
Dondu N.Raghavan

Muse (# 5279076) said...

வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொண்டது இங்குதான்.

பாடம் 1:

நேர்மையை அடிப்படையாகக் கொண்டுள்ள அமைப்புக்களில் நேர்மைக்கு ஆதரவாக என்ன வேண்டுமானாலும் காரியம் செய்துகொள்ளலாம்.

பாடம் 2:

எல்லா அமைப்புக்களும் ஏதேனும் சில சட்ட திட்டங்களை உறுதியாகப் பின்பற்ற விரும்புகின்றன. புத்திஸாலியாக இருக்கும்பக்ஷத்தில் அவற்றைப் பயன்படுத்தி குஸும்புகள் செய்யலாம்.

பாடம் 3:

அமைப்புக்களின் அடிப்படைகள், சட்டதிட்டங்கள் என்னதான் நேர்மை, ஒழுக்கம் என்று போதித்தாலும் நடைமுறையில் அதெல்லாம் சில விஷயங்களில் நடப்பதில்லை.

(இதில் நேரடியாக சொல்லாத) பாடம் 4:

பாடம் 3ன் அடிப்படையில் விஷயங்கள் அதிகம் நடக்கத் துவங்குமானால் அந்த அமைப்பிலிருந்து, பாடம் 1ல் அதிக விருப்பமுள்ளவர் விலகிவிடுவர்.

மேலும் பல நெளிவுசுளிவுகளை எதிர்பார்க்கிறோம்.

dondu(#4800161) said...

"எல்லா அமைப்புக்களும் ஏதேனும் சில சட்ட திட்டங்களை உறுதியாகப் பின்பற்ற விரும்புகின்றன. புத்திஸாலியாக இருக்கும்பக்ஷத்தில் அவற்றைப் பயன்படுத்தி குஸும்புகள் செய்யலாம்."
அதே அதே. ஹிந்தி ஆங்கிலம் இரண்டிலும் அலுவகக் காரியங்கள் நடக்கலாம் என்பது விதி. அதைத்தான் நான் பின்பற்றி பலரது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டேன்.

அது மட்டுமல்ல. பில்கள் அனுப்பும்போது கவரிங் லெட்டர் என்பதன் வாசகங்கள் ஒரு டெம்பிளேட் போல மனதில் அமைந்து விட்டன. உதாரணத்துக்கு:

Please find herewith in triplicate, the cc3 and final bill for the work of .... (cc --> contractor current) என்று வாசகம் ஆரம்பிக்கும். பிறகு என்னென்ன இணைத்துள்ளோம் என்றெல்லாம் எழுதி அனுப்ப வேண்டும்.

இதிலும் ஒரு குறும்பு செய்தேன். அதாவது, மேலே கூறிய வாசகத்தை இவ்வாறு மாற்றினேன்: Please find herewith in triplicane, the cc3 and final bill for the work of .... என்று மாற்றினேன். அவ்வாறு பல பில்கள் சென்றிருக்கின்றன. ஒரு தடவை கூட என்னை ஏண்டா பாவி இப்படியெல்லாம் படுத்துகிறாய் என்று யாரும் கேட்கவில்லை.

பிறகு பல ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட க்ளெர்க்கிடம் இதை கேட்க, அவர் கூறினார், "சார் எனக்கு இது முதலிலேயே கண்ணில் பட்டது, ஆனால் ராகவன் சார் தப்பாக எழுத மாட்டார், ஆகவே எனக்குத்தான் தெரியவில்லை என விட்டு விட்டேன்" என்று கூற. நான் கொஞ்சம் ஃபீலிங்ஸாகி விட்டேன்.

அது ஒரு தமாஷ் காலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Cervantes said...

"Please find herewith in triplicane, the cc3 and final bill for the work of ...."

இது ரொம்ப ஓவர் சார். ஆடிட்டர் திருவல்லிக்கேணி போய்த்தான் அந்த பில்லை எடுத்துக் கொள்ளவேண்டுமா? சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது. உங்கள் CPWD மற்றும் IDPL அனுபவங்கள் ரொம்ப சுவாரசியமாக இருக்கின்றன. ஒவ்வொன்றாய் பின்னூட்டமிட வேண்டும்.

கிருஷ்ணன்

dondu(#4800161) said...

நன்றி செர்வாண்டஸ்,

தமிழ்மணத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Varadhan said...

அன்புள்ள திரு.ராகவன் அவர்களுக்கு

வணக்கம். உங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது. தொடருங்கள்

அன்புடன்
வரதன்

Anonymous said...

Very Interesting!
Thank You!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது