எனது கார் என்னை கிழக்கு பதிப்பகம் எதிரே விட்டுவிட்டு அடையாறுக்கு விரைந்தபோது மணி மாலை 5.40. கீழே வெண்குழல் சேவைக்காக ஒதுங்கியிருந்த மூன்று பதிவர்கள் அதிஷா, கேபிள் சங்கர் மற்றும் அகிலன் மாடியில் மீட்டிங் துவங்கி விட்டதை உறுதி செய்தனர். மாடியில் போனதுமே கண்ணில் பட்டது கோவி கண்ணனும் அவர் அருகில் அமைந்திருந்த டி.வி. ராதாகிருஷ்ணனும்தான்.
அப்போது தமிழ் நாடகங்களைப் பற்றி பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. நல்ல நாடகங்கள் சரியாக ஓடாததற்கு காரணங்களில் டிக்கெட் விலைகள் அநியாயத்துக்கு உயர்ந்ததும் ஒரு காரணமே என ராதாகிருஷ்ணன் கூறினார். நல்ல நாடகங்கள் மக்களிடம் எடுபடாமல் போகின்றது என்றும் கூறப்பட்டது. அப்படி ஒரேயடியாக மக்கள் மேல் பழி போடக்கூடாது என பத்ரி அவர்கள் நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினார். இதைத்தான் எல்லா விஷயங்களிலும் சொல்லி வருகிறார்கள் என அவர் புத்தகங்களை உதாரணமாக காட்டினார். ரசிகர்களை ஒன்றிணைக்கும் தேவை இருப்பதையும் கூறிய அவர் இளம் தலைமுறையினரை இதற்காகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும் கூறினார்.
ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “சொல்லக் கொதிக்குது மனசு” பற்றி பேச்சு திரும்பியது. பொதுவாகவே நாடகங்களுக்கு செலவழிக்கும் தொகையை அதை பார்க்கும் ஆடியன்ஸுடன் ஒப்பிட்டால் அது மிக அதிகம் என அபிப்பிராயம் கூறப்பட்டது. உதாரணத்துக்கு ஐயாயிரம் ரூபாய் செலவழித்து ஒரு ஊரில் நாடகம் போட்டால் மிஞ்சிமிஞ்சி போனால் 1000 பேர் பார்க்கலாம். அதுவே 2 லட்சம் ரூபாய்கள் செலவழித்து தொலைகாட்சி நாடகமாக போட்டால் ஒரு கோடி பேர் வரை பார்க்க முடிகிறது என்ற கணக்கும் கூறப்பட்டது.
எல்லாவற்றுக்கும் ஒரு ப்ரமோஷன் தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டது. சினிமா புகழ் உள்ள நடிகர்கள் நடித்தால் அதுவே நாடகத்துக்கு பெரிய விளம்பரமாக ஆகிறது. கிரேசி மோகன், எஸ்.வி. சேகர் ஆகியோரது நாடகங்கள் போவதற்கு காரணம் அவர்களது சினிமா புகழும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
பிறகு இப்போதுதான் முடிவடைந்த புத்தகக் கண்காட்சி பற்றி பேச்சு திரும்பியது. அதிலும் பபாசி சரியாக ப்ரமோட் செய்யவில்லை என கூறப்பட்டது. போன ஆண்டை விட இந்த ஆண்டு ப்ரமோஷனுக்காக செய்யப்பட்ட செலவு குறைவு, இருப்பினும் கூட்டம் வந்ததற்கு காரணம் கடந்த பல ஆண்டுகளாக செய்யப்பட்ட ப்ரமோஷனே காரணம் என கூறப்பட்டது. இம்மாதிரி வரும் ஆண்டுகளிலும் அதிக அக்கறையுடன் முன்னிறுத்தாவிட்டால் பத்தாண்டுகளில் அதன் முக்கியத்துவம் குறையும் என்ற அச்சத்தையும் பத்ரி வெளியிட்டார்.
பேச்சு இப்போது சங்கமத்துக்கு சென்றது. முதலாம் ஆண்டில் சாதாரண நிலையில் நடத்தப்பட்ட அது பிறகு அரசின் அமோக ஆதரவால் இப்போது பெரிய அளவில் நடப்பது சுட்டிக் காட்டப்பட்டது. இருப்பினும் திமுக இத்துடன் அதிகமாக அடையாளம் காணப்பட்டதால் அதன் முக்கியத்துவம் மாற்று கட்சிகளின் ஆட்சியில் குறையலாம் என்றும், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் பத்ரி கூறினார். ஜெகத்ரட்சகன் கஸ்பார் அவர்களின் புலிகள் தொடர்பு பற்றியும் சிலர் எடுத்து கூறினர்.
திசம்பர் மாத இசைவிழாவும் அரசு நிதியுதவியுடன் நடக்கிறது என்னும் கூற்றை பத்ரி மறுத்தார்.
திடீரென பேச்சு சுனாமி பக்கம் திரும்பியது. முதல் இரண்டு நாட்களில் வந்த உதவிகள் spontaneous- ஆக வந்தவை என கூறப்பட்டது. பிறகுதான் அவரவர் வசூல் செய்ய கிளம்பியது பற்றி கூறப்பட்டது. ஆனால் இது சம்பந்தமாக பல குறைகள் இருந்தாலும் அரசு இயந்திரம் செயல்பட்டது உலக அளவில் ஆவலை தூண்டின என்றும் கூறப்பட்டது. அமெரிக்காவில் காத்ரீனா புயலில் இறந்தவர்களின் உடல்களை கரை சேர்த்து அந்திம கிரியைகளை குழப்பமில்லாமல் செய்வதற்கு நம்மூர் ஹெல்த் ஆஃபீசர் அமெரிக்காவுக்கு தருவிக்கப்பட்டு அவரிடமிருந்து ஆலோசனை பெற்றதும் கூறப்பட்டது.
இவ்வளவு பிணங்கள் சுனாமியில் கரை ஒதுங்கினாலும் ஒரு காலரா மரணம் கூட நிகழவில்லை என்பது நமது செயல்பாட்டுக்கு பெரிய சான்றாக விளங்கியதும் கூறப்பட்டது.
சுனாமி பற்றிய எச்சரிக்கைகள் பற்றிய தனது செயல்பாடுகளை இஸ்மாயில் அவர்கள் விளக்கினார். மேலதிகத் தகவல்களை அவரே தருவார்.
இப்போது சந்திப்புக்கு வந்தவர்கள் தமது சுய அறிமுகங்களை ஆரம்பித்தனர்.
அவ்வாறு செய்தவர்கள்:
1. லக்கிலுக்,
2. வெண்பூ,
3. சிங்கப்பூர் விஜய் ஆனந்த்,
4. அ.மு. சய்யது (மலைப்பொதிகை),
5. பிகுலு (bigulu.blogspot.com)
6. அருண் (வாசகர், சங்கரன் கோவில்)
7. பத்ரி
8. சென்னை தமிழன்
9. நர்சிம் (யாவரும் கேளிர்)
10. முரளி கண்ணன்
11. கேபிள் சங்கர்
12. கோவி. கண்ணன்
13. ராம் சுரேஷ்
14. படித்துறை கணேஷ்
15. அகிலன்
16. லட்சுமி
17. பாலபாரதி
18. அசன் அலி
19. டி.வி. ராதாகிருஷ்ணன்
20. சங்கர் (வாசகர்)
21. அதிஷா
22. அக்கினி பார்வை
23. அறிவானந்தன் (வாசகர்)
24. முகம்மது இஸ்மாயில்
25. வெங்கட் என்னும் வெண்பூ
26. மருத்துவர் ப்ரூனோ
யாரேனும் விட்டு போயிருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
இப்போது பாலபாரதி பத்ரியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை மலிவு பதிப்பாக வெளியிட வேண்டுமென்று. பத்ரி அவரிடம் இதற்கான ஒரு லிஸ்ட் தருமாறு கேட்டார். சமுத்திரத்தின் படைப்புகள் குறித்து பத்ரி உடனேயே சாதகமான பதிலை கூறினார். புதுமைப்பித்தனின் படைப்புகளும் தேவை என கூறப்பட்டது. இது சம்பந்தமாக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் நா. பார்த்தசாரதி, மயிலை வெங்கடசாமி ஆகியோர்.
இப்போது சில புத்தகங்களை கண்காட்சி ஸ்டால்களிலிருந்து விற்பனை செய்வதை போலீசார் வாழ்மொழி உத்திரவு மூலம் தடுத்தது பற்றி பத்ரியிடம் கேட்கப்பட்டது. அவர் கூறப்போவதை நான் நோட் செய்வதை கவனித்த பத்ரி “டோண்டு ராகவன் நோட் செய்கிறார். அவர் இதை வெளிப்படையாகவே எழுதலாம்” எனக் கூறிவிட்டு மேலே சொன்னார்:
போலீஸ் அம்மாதிரியெல்லாம் வாய்மொழி உத்தரவு போட சட்டத்தில் இடம் இல்லை. ஆனாலும் போட்டார்கள் என்றால் அந்த கண்காட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரலாம் என்பதை முன்னிறுத்தித்தான் அவ்வாறு செயல்பட்டனர். பபாசி இதற்கு மறுத்திருந்தால் அவர்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் பபாஸி அவ்வாறு செய்யாது புத்தக விற்பனையாளர்களைத்தான் கட்டுப்படுத்தியது. இந்த விஷயம் கூட இரண்டாம் நாள்தான் நடந்தது. இதை கிழக்கு பதிப்பகம் கடைபிடித்தது. ஆனால் அவர்களிடம் புத்தகம் வாங்கி விற்பனை செய்பவர்கள் இது விஷயமாக போலீசாருடன் கண்ணாமூச்சி நடத்தினர்.
ஆனால் அதனால் எல்லாம் தனக்கு பொருள் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் கூற விரும்பவில்லை. இதை ஒரு கொள்கை விஷயமாகவே பார்க்க விரும்பினார். இம்மாதிரி வாய்மொழி உத்திரவுகளை தடை செய்யும் திசையில்தான் செல்ல வேண்டும். மறுத்திருக்க வேண்டிய பபாசி இம்மாதிரி விட்டுகொடுத்தது தவறு. அந்த அமைப்பே பல்லில்லாத அமைப்பாக போய்விட்டது. அதன் பகுதியாக இருக்கும் தானும் அவ்வாறே என நகைச்சுவையுடன் பத்ரி குறிப்பிட்டார்.
முரளி கண்ணன் கண்காட்சி நடந்த இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி பேசினார். நிரந்தர புத்தகக் கண்காட்சி எக்மோரில் நடப்பதை லக்கிலுக் எடுத்துரைக்க, பத்ரி அது ஒரு பெரிய புத்தகக் கடை மட்டுமே என கூறினார். ஆனால் பபாசி புத்தகக் கண்காட்சியில் 650-க்கும் அதிக அளவில் காட்சியாளர்கள் வருவதை அவர் சுட்டி காட்டினார். கலைஞர் இதற்காக நிரந்தர இடத்தை இலப்வசமாகவோ அல்லது டோக்கன் லீசுக்கோ தருவதாக கூறி இரண்டாண்டுகள் ஆகியும் பபாசி ஒன்றுமே செயல்படாது இருக்கிறது.
திடீரென எங்கிருந்தோ இஸ்ரேல் என பேச்சு வர டோண்டு ராகவனின் காதுகள் கூர்மையாயின. அவனது இஸ்ரேல் சம்பந்த பதிவுகள் பற்றி இஸ்மாயில் அவர்கள் கேள்வி கேட்க, அடுத்த ஐந்து நிமிஷங்களுக்கு அவன் இஸ்ரேல் பற்றி பேச ஆரம்பிக்க, சட்டென சில பதிவர்கள் ஏனோ மாயமாக மறைந்தனர். முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருக்கிறதே என பயந்த சிலர் பேச்சை சினிமா பக்கம் திருப்பினர். ஆனால் அவன் அதற்குள் இஸ்ரேலுடனான தனது பூர்வஜன்ம பந்தத்தை சொல்லிவிட்டிருந்தான்.
அப்போதுதான் வந்திருந்த சினிமா தயாரிப்பாளர் ஷண்முகப் பிரியன் மிருதுவான குரலில் பேச ஆரம்பித்தார். பேச்சு சன் டீவி எடுக்கும் படங்களை பற்றி மாற, லக்கிலுக், கேபிள் சங்கர் ஆகியோர் மினிமம் காரண்டி, டிஸ்ட்ரிப்யூட்டர்கள் படும் அவதி ஆகியவை பற்றி பேச ஆரம்பித்தனர். அது பற்றி அவர்களே தத்தம் பதிவுகளில் கூறினால் அதன் மவுசே தனிதானே.
அதே போல மதப்பிரசாரம் பற்றியும் ஒருவர் பேசினார். அது தவறு என்று கூறிய ஒருவர் மேலே கூறியதும் சுவாரசியமாக இருந்தது. இசுலாமியரான அவர் தம் மதத்தவரையே இது பற்றி கேள்வி கேட்பதாகவும் அது பற்றிய பதில்கள் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறினார். இப்பதிவை அவர் படித்தால் அவரை நான் இதில் பின்னூட்டமிடவோ அல்லது தனது வலைப்பூவில் இது சம்பந்தமாக பதிவிடவோ கேட்டு கொள்கிறேன்.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றியும் பேச்சு வந்தது. முதலில் குறைந்த அளவே பிரிண்ட் எடுத்தவர்கள் இப்போது படம் அமோகமாக போக, ஆயிரக்கணக்கில் பிரிண்டு எடுப்பது பற்றி பேச ஆரம்பித்தனர். முதல் இரண்டு நாட்களிலேயே படம் தேறுமா தேறாதா என்பதை கணிக்கலாம் என ஒருவர் கூற, நான் சமீபத்தில் 1962-ல் வெளி வந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” படம் இரண்டாம் வாரம்தான் பிக்கப் ஆனது பற்றி கூறினேன். சுப்பிரமணியபுரம் என்னும் படமும் அவ்வாறுதான் பிக்கப் ஆனது பற்றி இன்னொருவர் கூறினார்.
நடுவில் கூல் ட்ரிங்க், சாக்லேட் ஆகியவை வழங்கப்பட்டன. அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் வாழ்க.
நேரம் இரவு எட்டரை ஆக, மீட்டிங் கலைய ஆரம்பித்தது. நான் என் வீட்டம்மாவுக்கு ஃபோன் செய்து காருடன் வருமாறு கூற அவரும் 15 நிமிடங்களில் வந்து சேர்ந்தார். காருக்காக காத்திருக்கும் நேரத்தில் இஸ்மாயிலுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் துரௌபதி, அஸ்வத்தாமா ஆகியோர் பற்றி பேசினார். மகாபாரதத்தை நன்கு படித்து வைத்திருக்கிறார்.
காரில் ஏறி வீட்டுக்கு வரும்போது நேரம் இரவு ஒன்பதரை மணி.
நல்ல அனுபவம். இடம் கொடுத்த பத்ரிக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
18 hours ago
25 comments:
ஆனாலும் ரொம்பத்தான் சுறுசுறுப்பு டோண்டுசார்.
நீங்க சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பரஸ் தான் சார்..இவ்வளவு சீக்கிரத்தில பதிவா???
சென்னைப் பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..
//எனது இஸ்ரேல் சம்பந்த பதிவுகள் பற்றி இஸ்மாயில் அவர்கள் கேள்வி கேட்க, அடுத்த ஐந்து நிமிஷங்களுக்கு நான் இஸ்ரேல் பற்றி பேச ஆரம்பிக்க, சட்டென சில பதிவர்கள் ஏனோ மாயமாக மறைந்தனர். //
வெளியே சென்றதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்து விட்டீர்களே :)
டோண்டு சார் நேரடி ஓளிபரப்பு சூப்பர்
எதுவும் மிஸ் ஆகாமல் பதிவு செய்திருக்கிறீர்கள்...மூச்சிரைக்க நோட்ஸ் எடுத்தது வீண்போக வில்லை.
நன்றி டோண்டு...
புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் கிடைக்குமோ இல்லையோ, சென்னை பதிவர் சந்திப்புக்கு ஒரு மொட்டை மாடி கிடைத்துவிட்டது போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.
அங்கயே வந்து இருந்த ஒரு பீல் கொண்டு வந்துடீங்க டோண்டு சார் !
//6. கேள்வி கேட்டவர், பதிலை பார்த்து பின்னூட்டம் விடவில்லை என்பது வாடிக்கையா?
பதில்: வாடிக்கை இல்லை. இரண்டு முறைகள் மிக வெளிப்படையாக நடந்துள்ளது. முதலாதவதாக சம்பந்தப்பட்ட இஸ்மாயில் என்பவர் கேட்டு கொண்டதற்கிணங்க அவருடைய 18 கேள்விகளுக்கு தனிப்பதிவில் பதிலளித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை.//
சென்னை பதிவர் சந்திப்பில் முகம்மது இஸ்மாயில் தனது கேள்விகள் பற்றி உங்களிடம் ஏதும் பேசினாரா?
@நக்கீரன் பாண்டியன்
கேட்காமல் இருப்பேனா, அவருக்கென மெனக்கெட்டு பதிவு போட்டு, அவர் அதற்கு எதிர்வினை ஆற்றாதது பற்றி கேட்டேன்.
அவர் தனக்கு எழுத நேரம் இல்லை என விளக்கினார். தான் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார். சுனாமி எச்சரிக்கை சம்பந்தமாக பல பூர்வாங்க வேலைகளில் ஈடுபடுவதால் பல பிற விஷயங்கள் செய்ய நேரம் இல்லாமல் போய் விடுகிறது என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் சூப்பர்
நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே. எனது பதிவர் சந்திப்புகள் பற்றிய பதிவுகள் நான் அவற்றை இட்டவுடன் ஓரளவுக்குத்தான் பூர்த்தியாகின்றன. மற்ற பதிவர்கள் தத்தம் பார்வை கோணத்திலிருந்து பின்னூட்டங்கள் இட்டோ அல்லது தங்களது வலைப்பூவில் தனிப்பதிவாக போட்டாலோதான் சந்திப்பு பற்றிய விவரங்கள் பூர்த்தியாகின்றன.
உதாரணத்துக்கு நான் வந்தபோது நீங்கள் நாடகங்கள் குறித்து பேசி கொண்டிருந்தீர்கள். இத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள உங்களது பார்வை கோணம் இங்கு மிக உபயோகமானதாக இருக்கும்.
ஆகவே இங்கு அது பற்றி பின்னூட்டமிட்டாலும் சரி அல்லது உங்கள் வலைப்பூவில் தனிப் பதிவு இட்டாலும் மிக நன்றாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
மின்னல் வேக பதிவுக்கு நன்றி!
நான் என் நண்பனிடம் சொன்னது இதுதான் “ பாரு , நாம மொட்டை மாடியுஇல் இருந்து இறந்ங்குவக்குள், டோண்டு சார் பதிவர் சந்திப்பை பற்றி பதிவை போட்டுவிடுவார்”.. நான் சொன்னது சரிதான்...சரி ஃபாஸ்ட்..
ஜாக்கிரதை! பெரும் அண்டப்புளுகுகளை கட்டவிழ்த்துவிட்டு புலம்பெயர் தமிழர்களிடம் கொள்ளையடிக்க தயாராகிறார்கள் புலி முகவர்கள்!!
- கனடா கந்தசாமி
‘cartoon-1ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்!!’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்!!!!’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!!!.’
என்ன இது! ஒரே அதிரடி செய்திகளாக இருக்கின்றன என அதிர்ந்து போய்விட்டீர்களா? இது எமது ‘தேசியத்தலைவர்’ வே.பிரபாகரன் அவர்களின் செல்லப்பிராணிகளால், ஜனவரி 24ந் திகதி கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளாகும். இந்த வதந்திகளை பரப்புவோர் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்னவென்பதும் ஒன்றும் புரியாத புதிரல்ல.
புலிகள் கடைசியாக வன்னியில் சேடமிழுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, தமது இறுதிமூச்சை விடுவதற்கு முன்னர், இந்த மாதிரியான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களை வலையில் வீழ்த்த வகுக்கப்பட்ட தந்திரம். ஆனால் இவர்களது கவலை புலிகளின் துக்ககரமான முடிவைப்பற்றியதல்ல. புலிகளின் பெயரால் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலராகவும் ஈரோவாகவும் பிராங்காகவும் வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து ருசி கண்டவர்கள், இனிமேல்அதற்கு வழியில்லாமல் போகப்போகிறதே என்ற ஏக்கத்தில், கடைசித்தடவையாக பொய்புரட்டுகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களிடம் அடிக்கக்கூடியதை அடிக்கும் முயற்சியே இது.
முன்பு வசூலாகும் பணத்தில் 20 முதல் 25 வீதம்வரை கமிசனாகபெற்ற புலி முகவர்கள், இப்பொழுது புலிகள் கணக்கு கேட்கும் நிலையில் இல்லாத கையறு நிலையை பயன்படுத்தி, வசூலிப்பதை முழுவதுமாக தமது பைக்குள் போடும் துணிச்சலால் வந்த வினை இது. ஆனால் ‘பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லு’ என்பதை கூட மறந்துவிட்டனர்.
கல்மடுவிலுள்ள 10 ஏக்கர் மத்திய வகுப்பு திட்டத்திலுள்ள, 500 ஏக்கர் வயல் காணிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்யும் ஒரு சிறியகுளத்தை உடைத்து, 1500 இராணுவத்தினரை நீரில் மூழ்கடித்துள்ளதாக ‘அப்பாவித்தனமாக’ கதை அளந்துள்ளனர்! இவர்களின் அண்டப்புழுகுகளால் ‘தலைவர் உள்ளுக்கை விட்டுத்தான் அடிப்பார்’ (அது என்ன அடி என்பது தலைவருக்கு தான் வெளிச்சம்!) என்ற மாஜையில் மயங்கிக்கிடந்த கனடா வாழ் சருகுபுலிகள் எல்லாம் களிப்படைந்து பல இடங்களில் ‘தண்ணிப்பார்ட்டி’ வைத்துக்கொண்டாடினார்களாம். இந்தபார்ட்டிகளில் சருகுபுலிகளின் வெற்றிப்போதை தலைக்கேறியதால், அதை மேலும் ஏற்றுவதற்காக, விஸ்கி போத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளித் தீர்த்தனராம்!
இந்த கொயபல்ஸ் மோசடிக்கும்பலில் உள்ள பலரின் பெயர்களில்தான், ஐரோப்பாவிலும் கனடாவிலும் புலிகள் ஏராளமான வர்த்தக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த பேர்வழிகளில் பலர் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பமான உடனேயே, தமது பெயரிலிருந்த புலிகளுக்கு சொந்தமான வியாபாரங்களை விற்றுவிட்டு, பெரும் தொகை பணத்துடன் வேறு நாடுகளுக்கு இடம் மாற ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர்முதல்தடவையாக வியாபாரத்தில் நஸ்டக்கணக்கு காட்டி, புலிகளுக்கு கணக்குவிட ஆரம்பித்துவிட்டனர். புலிகளே பெரும் கொள்ளைக்காரர்கள் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் பார்த்திருந்த இந்தப் பெருச்சாளிகள், புலிகளின் கொள்ளைகளுடன் ஒப்பிடுகையில், தமது ‘சிறு கொள்ளை’ அவ்வளவு மோசமானதல்ல என்ற நினைப்புடனேயே இந்த கைங்கரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.
எனவேவருங்காலத்தில் இன்னும் என்னென்ன வெடிகளை வெடித்து, மக்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தப்போகிறார்களோ தெரியவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர், கடந்த 25 வருடங்களாக தமது மூளையை கழற்றி புலிகளிடம் அடகு வைத்துவிட்டு வந்திருக்கையில், அடகு கடைக்காரர்களுக்கு மட்டுமின்றி, அதற்கு துணைநின்ற தரகர்களுக்கும்கொண்டாட்டத்துக்கு மேல் கொண்டாட்டம் தான் போங்கள்!
பெரிய மாநாடே நடந்துருக்கும் போலருக்கே!
கோவி.கண்ணன்
விஜய் ஆனந்த் போன் நம்பர் இருந்தால் எனக்கு எஸ்.எம்.எஸ் பண்றிங்களா?
//கோவி.கண்ணன்
விஜய் ஆனந்த் போன் நம்பர்//
என்னிடம் அவை இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோன்ட் டூ சார், நன்றிகள் பல.
பதிவர் சந்திப்பை தவற விட்ட குறையே தெரிய வில்லை.
அருமையான பதிவு.
குப்பன்_யாஹூ
டோண்டு சார்,
மின்னல் வேக பதிவுக்கு நன்றி!
டோண்டு சார் கலக்கீட்டீங்க.... சும்மா ஒரு கல்யாண குணத்துக்காகத்தான் குறிப்பெடுக்கறீங்கன்னு நெனச்சேன். ஆனா அசத்திட்டீங்க சார். கொஞ்ச நாளுக்கு முன்னாடி கலைஞருக்கு பின்னாடி உட்கார்ந்து குறிப்பெடுக்க ஆள் தேடிகிட்டிருந்தாங்க.... ஜஸ்ட் மிஸ் சார், நீங்க...
- சென்னைத்தமிழன்
FOR THURSDAY !
தமிழ் நாட்டிலே பலர் சொன்னதையும்,
சிலர் சொல்ல நினைத்ததையும், நேற்று
மஹிந்தா ராஜபக்சே, உள்ளங்கை
நெல்லிக்கனி போல சொல்லியிருக்கிறார்.
மு.க. ஸ்ரீலங்காவுக்குப் போகக் கூட
வேண்டாம் உடனே தன்னுடைய கவிதை
மடல் மூலம் ஒரு வேண்டுகோள் -
புலித்தலைவர் பிரபாகரனை,ஆயுதங்களை
கீழே போட்டு விட்டு, சரணடையச்சொல்லுவாரா?
லக்ஷக்கணக்கான தமிழர்கள் உயிர்களையும்,
உடைமைகளையும் காப்பது மு.க. கையில்
தான் உள்ளது!
1) குமுதத்தில் பதலக்கூர் ஸ்ரீனிவாசுலு எழுதிவரும் 'ஒரு நடிகனின் கதை' - வாரிசு நடிகராய் பின் கட்சித்தலைவரானவரைக் குறிக்கிறதா ? இந்த வார கதையில் வரும் காமெடி நடிகர் - பெல் நடிகர் தானே ? படம் 16 சம்பந்தப்பட்டது தானே ? முந்தைய வாரத்தில் குறிப்பிடப்பட்ட நடிகை தற்போது அரசியல் கட்சியில் இருப்பவர் தானே ?
2) இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சீயீஓக்களில் 2ஆம் இடம் கலாநிதி மாறனாமே ? (முகேஷ் அம்பானிக்குப் பிறகு)http://www.businessworld.in/Pdf/highest_paid_rankings.pdf
? அதனால் தான் சன் பிக்சர்ஸ் வெளியீடுகளா ? சன் குழுமத்திற்கு யார் ஆடிட்டர் ?
3) லக்கிலுக் எழுதிய புத்தகத்தின் உங்கள் விமர்சனம் எப்போது வரும் ?
1.பெரியவர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாய் இருந்த காலம்?எப்படி?
2.தமிழக தொழில் அமைச்சராய் இருந்த போது செய்திட்ட சாதனைகள்?
3.ஜெ.யை அவர்தான் பின்னல் இருந்து இயக்குகிறார் என்பார்களே?
4.காஞ்சிமடத்தோடு இவரது தொடர்பு கடைசி காலத்தில் சுமுகமாய் இருந்ததா?
5.டெல்லியில் இருந்தபோது பெரியவரை நேரில் சந்ததித்த அனுபவம் ஏதும் உண்டா?
இல்லை சென்னை வந்த பிறகாவது ?
1)பாகிஸ்தானின் சுதந்திரம் ரத்தம் சிந்தாமல் கிடைத்தது என்ற கூற்று சரியானதா?
2)அமெரிக்காவில் வாழும் இஸ்ரேலியர்களின் ஓட்டுக்காகத்தான் இஸ்ரேலின் காசா பகுதி தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறலாமா?
3)இலங்கைக்கு ராஜபக்ஷே அழைப்பையேற்று செல்லாமல் இருப்பதற்க்கு கருணாநிதி என்ன காரணம் சொல்லுவார்?
4)ஜெயலலிதா என்ன காரணம் சொல்லுவார்?
5)தங்கள் தந்தையாரின் பத்திரிக்கை நிருபர் அனுபவங்களை பதிவாக எழுதும் எண்ணமுண்டா? சுட்டி தயாராக உள்ளதா?
Please EDIT before PUBLISHING
மாலன் எழுதிய ‘ஜனகனமன’ படித்திருக்கிறீர்களா?
If possible, add this as my first question in the list asked by me earlier.
Post a Comment