புதுக்கோட்டுக்கு ஜூட் - 4
புதுக்கோட்டுக்கு ஜூட் - 3
புராணங்களில் உள்ள புதுக்கோட்டுக்கு ஜூட் விஷயங்களைப் பார்ப்போமா?
1. துரோணர் அரசகுலத்தை சேர்ந்தவர்களுக்கே வில்வித்தை பயிற்சி அளிப்பதாக கூறிகொள்பவர்். அவரிடம் கர்ணன் வந்து தனக்கும் சொல்லித் தருமாறு கேட்டதற்கு இதைத்தான் கூறினார். பேசாமல் அதை ஏற்று கொண்ட கர்ணன் துரோணரின் மாணாக்கர்களோடு சேர்ந்து பயிற்சி பெற்றுவந்த அஸ்வத்தாமனைக் காட்டி அவர் யார் எனக் கேட்க, துரோணரும் அவன் தன் மகன் எனக் கூறினார்? அவர் மட்டும் அரச குடும்பத்தை சேர்ந்தவரா எனக் கேட்டு விட்டு தன் வழியே சென்றான்.
மேலே சொன்னதும் புதுக் கோட்டுக்கு ஜூட்டுக்கு ஒரு உதாரணமாக வைத்து கொள்ளலாம் என்றாலும் அதே துரோணர் இதைவிட பெரிய புதுக்கோட்டுக்கு ஜூட் விட்டார். ஏகலைவன் என்னும் வேடுவச் சிறுவன் தூரத்திலிருந்து கொண்டு இவர் பாண்டவருக்கும் கௌரவருக்கும் வில்வித்தை கற்பிப்பதை பார்த்து தானுm அவ்வித்தையை கற்றான். துரோணர் போல ஒரு பிரதிமை தயார் செய்து தினம் அதை வணங்கி, தனது பயிற்சிகளை செய்து வந்தான்.
ஒரு நாள் அருச்சுனன் வேட்டை நாய்களுடன் அப்பக்கம் வேட்டையாட வந்தான்.அவனது நாய்கள் ஏகலைவன் மேல் பாய, அவன் நாய்களின் வாய்களை அம்புகளால் கட்டினான். அதைக் கண்ட அருச்சுனனுக்கு மிக ஆச்சரியம். ஏனெனில் அம்மாதிரி நாய்களின் வாய்களை அம்பினால் கட்ட அவனுக்கு மட்டும்தான் தெரியும் என அதுவரை நினைத்து வந்துள்ளான். அச்சமயம் அப்பக்கம் வந்த துரோணரும் இதை கண்டு வியப்புற்று ஏகலைவன் எங்கிருந்து இவ்வித்தையைக் கற்றான் என கேட்க, ஏகலைவனும் துரோணரே அவனது மானசீக குரு என்று வினயத்ய்துடன் கூறினான்.
இப்போதுதான் துரோணர் மிகப்பெரிய புதுக்கோட்டுக்கு ஜூட் விட்டார். அதாகப்பட்டது தனக்கு ஏகலைவன் குருதட்சணையாக தனது வலக்கை கட்டைவிரலைத் தரவேண்டும் என அநியாயமாகக் கேட்டார். அரசகுமாரர்களும் செய்யத் துணியாததை அந்த வேடுவச்சிறுவன் செய்தான். கட்டைவிரலை அறுத்துத் தந்தான், புகழ்பெற்றான்.
ஆனால் துரோணருக்கோ அது ஒரு பெரிய பிளாக் மார்க். என்னால் இப்போது இதை எழுதும்போதே கோபத்தை அடக்க இயலவில்லை. ஆனால் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த மகானுபாவரே அம்மாதிரி இன்னொரு புதுக்கோட்டுக்கு ஜூட் விவகாரத்தில் இரையாகி பிராணனை விட்டார். அதை சிறிது நேரம் கழித்து பார்ப்போம்.
15-ஆம் நாள் யுத்தம். அதற்கு முந்தைய நாள் அபிமன்யுவை கௌரவர் தரப்பில் உள்ள் அத்தனை மகாரதர்களும் சேர்ந்து துரோணரின் ஆலோசனைப்படி கொன்றனர். பத்ம வியூகத்துக்குள் போகத் தெரிந்தவர்கள் பாண்டவர் தரப்பில் மூவர் மட்டுமே, அவர்கள் அருச்சுனன், கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு. ஆனால் அபிமன்யுவுக்கு உள்ளே போகத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. இருந்தாலும் அருச்சுனரும் கிருஷ்ணரும் அச்சமயம் யுத்த களத்தில் வேறிடத்தில் இருந்ததால் அபிமன்யு மட்டும் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு. ஆனால் துரியோதனனின் தங்கை துச்சலையின் கணவனும், சைந்தவ அரசனுமான ஜயத்ரதனின் குறுக்கீட்டால் அபிமன்யுவை பீமனும் மற்றவர்களும் தொடர இயலாது போயிற்று. அதை பின்னால் அறிந்த அருச்சுனன் அடுத்த நாள் மாலைக்குள் ஜயத்ரதனை வதம் செய்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான்.
இப்போதுதான் துரியனும் ஜயத்திரதனும் சேர்ந்து ஒரு புதுக்கோட்டுக்கு ஜூட் விடுகின்றனர். அதாவது ஜெயத்திரதன் யுத்தத்துக்கு வராது ஒளிந்து கொள்கிறான். அப்புறம் அருச்சுனன் எப்படி அவனைக் கொல்ல இயலும், ஆகவே அவன் தீப்புகவேண்டியதுதான் என்பது துரியனின் திட்டம். அதுவும் கதிரவன் மறைவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்வரை அத்திட்டம் வெற்றி பெறும் என்றுதான் தோன்றியது. அந்த எண்ணத்துக்கு தூபம் போடுவது போல கதிரவன் திடீரென மறைந்தான். அழுகினி ஆட்டம் ஆடிய ஜெயத்ரதன் மகிழ்ந்தான். அப்பாடா பிழைத்தேன் என எண்ணியபடி வெளியில் வந்தான். அழுகினி ஆட்டம் என்று நான் தெரிந்துதான் கூறினேன். ஏனெனில் அவன் யுத்த வீரன். யுத்த களத்தில் இருந்து சண்டை போட்டிருக்க வேண்டியது அவன் கடமை. ஆட்டத்துக்கே வராமல் ஒளிவதல்ல. அது சுத்த வீரனுக்கு அழகல்ல.
ஆனால் துரியனும் சரி, ஜயத்திரதனும் சரி, ஒன்றை மறந்து விட்டனர். இவர்களுக்கு மேல் பெரிய அளவில் புதுக்கூட்டுக்கு ஜூட் விடக்கூடியவர் பாண்டவர் வசம் இருக்கிறார் என்பதுதான் அது. அவர்தான் கிருஷ்ணர். பாண்டவர் தரப்பில் துயரக் குரல்கள், கௌரவர் தரப்பில் சந்தோஷ ஆட்டங்கள். ஜயத்திரதன் ரதத்தின் மேலேறி நின்று டப்பாங்குத்து ஆட்டம் போடுகிறான். கிருஷ்ணன் அருச்சுனனின் காதோடு ஏதோ சொல்லிவிட்டு செயல் படத் துவங்குகிறார். அவர் என்ன செய்திருந்தார் என்றால் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைத்து வைத்திருந்தார். சக்கரத்தை இப்போது விலக்கி கொள்கிறார். சூரியன் பிரகாசிக்கிறான். அருச்சுனன் அப்போது விட்ட பாணம் ஒன்று ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது. இப்போது இன்னொரு சிக்கல். ஜெயத்திரதன் தலையை யார் தரையில் தள்ளினாலும் தள்ளுபவர் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்னும் ஒரு வரம் வேறு இருக்கிறது. ஆகவே கண்ணன் சொன்னபடி அருச்சுனன் அடுத்த சில் அம்புகள் செலுத்தி அத்தலையை ஊருக்கு வெளியே ஒரு பர்ணசாலைக்கு செலுத்துகிறான். அங்கு ஜெயத்திரதனின் தந்தை (தன் மகனுக்காகா மேலே சொன்ன அழுகினி வரம் பெற்றவர்) தரையில் அமர்ந்து தியானம் செய்த வண்ணம் இருக்கிறார். அவர் மடியில் அத்தலை போய் விழுகிறது. என்னவோ தன் மடியில் விழுந்து விட்டதே என்பதற்காக அதைச் சட்டென்று உதறிவிட தலை தரையில் விழ ஜ்ர்யத்திரதனின் தந்தையின் தலை உடைகிறது.
அன்று முதன் முறையாக இரவு யுத்தம் நடக்கிறது. அருச்சுனனுக்காக சேமித்து வைத்திருக்கும் சக்தி ஆயுதத்தை கர்ணன் ஒரு கோபாவேசத்தில் கடோத்கசன் மீது செலுத்த அவன் மரிக்கிறான், ஆனால் அருச்சுனன் உயிருக்கு எமனாய் இருந்த அந்த ஆயுதம் வீணாயிற்று. இதுவும் புதுக்கோட்டுக்கு ஜூட் மன்னன் கிருஷ்ணனின் கைங்கர்யம். துரோணர் பிரும்மாஸ்திரம் விடத் தயாராகும்போது மீண்டும் கண்ணன் ஆலோசனையின்படிம் பீமன் அசுவத்தாமன் என்னும் யானையை கொன்று, துரோணர் காது கேட்க அசுவத்தாமனை கொன்றேன் எனக் கூற, தன் மகன் இறந்து விட்டானா எனக் கலங்கிய துரோணர் பொய்யே பேசாதவன் என புகழ் பெற்றிருந்த யுதிஷ்டரரை கேட்க, அவரும் மென்று விழுங்கிக் கொண்டே அசுவத்தாமா ஹதஹ, (அசுவத்தாமன் இறந்தான்) எனக் கூறி விட்டு, குஞ்சரஹ (அசுவத்தாமன் இறந்தான், ஆனால் அது ஒரு யானை). அவர் குஞ்சரஹ எனக்கூறியது துரோணர் காதில் விழாதவண்ணம் கண்ணன் தனது பாஞ்சஜன்யம் என்னும் சங்கெடுத்து ஊதுகிறார். துரோணரும் யுத்தம் செய்வதை நிறுத்திவிட்டு தரையில் நிராயுதபாணியாக அமர, அவரைக் கொல்லவென்றே துருபதனின் மகனாக வந்த திருட்டத்துய்மன் அவர் கழுத்தை கத்தியால் வெட்ட அவரும் இறக்கிறார்.
துரோணரின் இந்த மரணம் அவர் ஏகலைவனுக்கு செய்த துரோகத்துக்கான தண்டனை என்று கூறுபவர்களும் உளர்.
இம்மாதிரி புராணங்களிலும் இதிஹாசங்களிலும் இந்த புதுக்கோட்டுக்கு ஜூட் விவகாரம் பல உண்டு. அவற்றை இதே வரிசையில் பின்னால் வரும் பதிவுகளில் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
6 hours ago
14 comments:
நீங்கள் tamilhindu.com ல் திரு. ஹரி க்ருஷ்ணன் எழுதும் மஹாபாரதம்
பற்றிய தொடரைப் படிக்கிறீர்களா?
தேவ்
rdev97@gmail.com
மகாபாரததில் எல்லாருமே பிராடு பயளுக தான் போலருக்கே!
ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றி மாற்றி கடுக்கா கொடுக்குறாங்க!
மகாபாரதக் கதையில் உள்ள கதாபாத்திரங்கள்
உலகத்தில் வாழும் பலதரப் பட்ட மக்களின் குணாதியங்களை பிரதிபலிப்பதாய் இருப்பாதாய் பெரிய பேச்சாளர்கள் சொல்வார்கள்.
மஹாபாரதத்தைப் படித்தால் வாழ்வில் எது நியாயம், எது அநியாயம் என்று தெரிந்து கொள்ளலாம். தர்பத்தின் சூட்சுமத்தையும் அறிந்து கொள்ளலாம். ஒருத்தருக்கு நியாயமாக இருப்பது இன்னொருவருக்கு அதுவே அநியாயமாக இருக்கும். இதை விதுர நீதியிலும் சாந்தி பர்வத்திலும் ரொம்ப அழகாக உதாரணத்துடன் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
எளிய தமிழில் சோ அவர்கள் எழுதிய மஹாபாரதம் பேசுகிறது புத்தகத்தை போன மாதம் தான் படித்து முடித்தேன். ஒரு முறை படித்தோம் முடித்தோம் என்று கடாசி விடாமல் அதை அடிக்கடி படிக்க வேண்டும். அப்படி ஒரு வாழ்க்கை நீதி மஹாபாரத்தத்தில் புதைந்திருக்கிறது.
@விஜய்
முடிந்தால் ராஜாஜி அவர்கள் எழுதிய வியாசர் விருந்தையும் படித்து விடுங்கள். நாற்பதுகளில் கல்கி பத்திரிகையில் குழந்தைகளுக்காக அவர் எழுதிய தொடர் அது.
கர்ணன் விஷயத்தில் எவ்வளவு புதுக்கோட்டுக்கு ஜூட்கள் விடப்பட்டன என்பதையும் இப்பதிவில் கூறியுள்ளேன், பார்க்க:
http://dondu.blogspot.com/2008/06/1.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
nanri
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
வியாசர் விருந்து சென்னையில் எங்கு கிடைக்கும்?
[வெள்ளிக் கிழமை கேள்வி]
நேற்று உங்களை சந்தித்த போது கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த கேள்விகள் இவை. எதனாலோ, கேட்க முடியவில்லை.
அதனால் பின்னூட்டம் மூலமாக கேட்கிறேன்.
1. இந்தியா மீது மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் படையெடுத்தார்கள் என்பதை நம்புகிறீர்களா?
2. ஜவஹர்லால் நேஹ்ருவின் Discovery of India புத்தகத்தைப் படித்ததுண்டா? அதில் அவர் எழுதியதை என்னவோ ஆய்வுக் கட்டுறையாக எடுத்துக் கொண்டு அதையே சில சரித்திர ஆரய்ச்சியாளர்கள் ஆரியப் படையெடுப்பு உண்மை என்று சொல்கிறார்களே, உங்களின் அபிப்பிராயம் என்ன?
3. ஹராப்பா மொஹஞ்சதாரோவில் இருந்தவர்கள் தான் உண்மையான இந்தியர்கள். அவர்கள் தான் இன்று தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
4. கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா?
5. மார்கழி சீசனில் கச்சேரி போகும் வழக்கமுண்டா?
6. அயல் நாட்டு மொழிகளான ஃப்ரென்சு ஜர்மன் இத்தாலி போன்ற மொழிகளில் பாண்டித்யம் பெற்ற நீங்கள் சமிஸ்கிருதம் கற்க வில்லையா? சமிஸ்கிருதத்தைப் படிப்பதனால் டப்பு தேராது என்று விட்டு விட்டீர்களா? :-)
Dear Dondu
Nice to read historical events in your style. If possible write some thought about reforms did by "Emperumann" Sri Ramanujar.
This will be a good deed to make so called "Pagutharivalargal" to know how they are all just "Tom, dick and harry" before his revoutions.
Regards,
Giri
/மாநில உரிமம் என்று கூறலாமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்/
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றிகள்
முதலில்
வருகைக்கும்
தங்களின் எண்ண அலைகளைப் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றிங்க
நான் இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்
எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.
" மாநில உரிமை " என்பதை தனிச்சொல்லாக பயன்படுத்தும்பொழுது
சிக்கலில்லை. அதுவே சொற் தொடரில்
எடுத்து ஆளும்பொழுது சற்று கடினம்
உள்ளதை உணர்கிறேன்.
உரிமம் என்பதை license
என்னும் பொருளில் கையாளுகின்றோம்
இருந்தப்பொழுதும்
தங்கள் சொல்லுவது எனக்கு பொருத்தமாக தோன்றுவதால்
state permit என்பதை மாநில உரிமம்
மாற்றிக் கொள்கிறேன்.
மீண்டும்
ஒரு முறை
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றிகள்
1. பெங்களூர் பயணம் எப்படி இருந்தது ? எங்கெல்லாம் தங்கினீர்கள் , சென்றீர்கள் ?
2. போகும் வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டீர்களா ?
3. சென்னை-பெங்களூர் சாலைப் போக்குவரத்து எப்படி ?
4. தற்போதைய சென்னையையும் தற்போதைய பெங்களூரையும் கம்பேர் பண்ணி ஒரு பதிவு போட முடியுமா ?
for thursday
நீ ஃப்ராடு பண்ணவே இல்லை?
சத்யமா சார்?
செபி எங்கே? இன்கம்டாக்ஸ் எங்கே?
எல்லோருக்கும் கும்பகர்ண தூக்கம்!
வர்ல்ட் பாங்கை டாமேஜஸ் என்று
பயமுறுத்தி பணம் வந்தால்
சமாளித்துவிடலாம் என்று
நினைத்தார் போல இருக்கு,
நடக்கவில்லை..
அசந்தர்ப்பமான போஸ்ட்! அக்னிஹோத்ரம் எழுதிய
'இந்து மதம் எங்கே செல்கிறது' புத்தகத்தை முரசொலி
விமர்சிக்க, சோவின் அட்டைப்பட கார்ட்டூனை
விமர்சித்து மின்சாரம் எழுத இரண்டையும்
இட்லிவடை போஸ்ட் செய்த வேகத்திலேயே
உங்கள் போஸ்டும்!! தாங்குமா தமிழ் உலகம்?
1. பாங்குகளில் உள்ள லாக்கரில் வைத்துள்ள நமது பொருட்கள் திருடுபோனால் வங்கியிடமிருந்து இழப்பிடு கிடைக்குமா?
2.தமிழக காவல்துறை காமராஜ் ஆட்சி,பக்தவச்சலம் ஆட்சி ,அண்ணா ஆட்சி,கலைஞர் ஆட்சி,எம்ஜிஆர் ஆட்சி,ஜெயலலிதா ஆட்சி ஒப்பிடுக?
3.மின்னணு முறை ஓட்டு இயந்திரம் 100 % பாதுகாப்பானதா? ப்ராடு பண்ண முடியுமா?
4.ஜெயலலிதா மேல் உள்ள வழக்குகளின் இறைய நிலை?
5. செஞ்சி ராமசந்திரன் மற்றும் எல்.ஜி கணேசன் என்ன செய்கிறார்கள்?மீண்டும் மதிமுக வில் சேர்வார்கள் என்று சொல்லப்பட்டதே?
Post a Comment