நான் ஏற்கனவே இட்டிருந்த “ஒரு தவறு இன்னொறு தவற்றை நியாயப்படுத்தாது” என்னும் பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவை வைத்து கொள்ளலாம்.
மறுபடியும் கூறுகிறேன், பிரிவு 498-A பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுவதை குறித்து ஒரு மாற்று கருத்து இருக்க இயலாது. அதற்காகவே டெடிக்கேட் செய்திருக்கும் உங்கள் வலைப்பூ கூறும் பல விஷயங்கள் ஏற்று கொள்வதாகத்தான் உள்ளன. ஆனால் சில வார்த்தை பிரயோகங்கள் உங்கள் வலைப்பூவின் நோக்கத்தை திசை திருப்புகின்றன. 4 பேரை மணந்த ஐயங்கார் சங்கீதா என்ற ரேஞ்சில் எல்லாம் தலைப்பு வைக்கிறீர்கள். ஒரு ஐயர் பெண்மணி தன் மறுவிவாகத்தை குறித்து விளம்பரம் தந்தால் அவர் முந்தைய கணவனை கொடுமைப்படுத்தியே வந்திருப்பார் என வெறும் மொக்கையான ஊகத்தில்தான் எழுதுகிறீர்கள். அதை சேலஞ்ச் செய்து நான் பின்னூட்டம் இட்டால் ஆதாரம் தராது விலாங்கு மீனாக நழுவுகிறீர்கள். சங்கீதா குற்றவாளி என்பது வெள்ளிடைமலை என்பதையும் கூறிவிடுகிறேன்.
அதே சமயம் குடித்து கொண்டே ஆபாசப்படம் பார்க்கும் மனைவிகளை வெறுமனே ஜாதி, மதம் எல்லாம் தலைப்பில் குறிப்பிடாமல் எழுதுகிறீர்கள். ஆக உங்களுக்கு இரண்டு அஜெண்டாக்கள் உள்ளன என்று புரிந்து கொள்ள முடிகிறது.
1. பிரிவு 498-A -ஐ தவறாக பிரயோகம் செய்யும் பெண்கள், இது வெளிப்படையாக இருக்கிறது, இதில் பிரச்சினை இல்லை. வரவேற்கத் தக்கதுதான்.
2. அவ்வாறு தவறான பிரயோகங்களை செய்யும் பெண்கள் பார்ப்பனராக இருந்தால் மட்டும் குதித்துக் கொண்டு தலைப்புகள் வைக்கிறீர்கள், ஐயங்கார்/ஐயர் என்றெல்லாம் கூவிக்கொண்டு. மற்ற சாதிப் பெண்களானால் சாதிப் பெயரை குறிப்பிட மாட்டீர்கள். இந்த அஜெண்டாவை நீங்கள் வெளிப்படையாக கூறவில்லைதான், ஆனால் உங்கள் இடுகைகளின் பேட்டர்ன்களை பார்க்கும்போது அது பல்லிளிக்கிறது.
இது எதில் போய் முடியும் என்றால் உங்கள் முதல் அஜெண்டா மறக்கப்பட்டு இரண்டாவதில்தான் அதிகம் நேரம் செலுத்த வேண்டியிருக்கும். முதல் அஜெண்டாவின் முக்கியத்துவம் வைத்து பார்க்கும் போது, Can you afford this luxury?
நீங்கள் தனிப்பட்ட மனிதரா அல்லது குழுவா என்பதை நான் அறியேன். எதுவாக இருந்தாலும் நான் கூறப்போவதில் மாற்றம் இல்லை, ஒரே ஒரு விஷயம் தவிர. அதாகப்பட்டது, நீங்கள் தனியாளாக இருந்து வக்கீலாகவும் இருந்தால், உங்கள் கட்சிக்காரர்கள் அரோகராதான் என்று இந்த லட்சணத்தில் உண்மை நோக்கத்தை மறந்து நீங்கள் இடுகைகளை எழுதுவதைப் பார்த்து தோன்றுகிறது.
மேலும் என்ன நடக்கும் என்றால் இம்மாதிரியாக குருட்டுத்தனமாக சம்பந்தமில்லாமல் ஜாதிப் பெயரை இழுப்பதால் இந்தாளுக்கு/இந்தாட்களுக்கு வேறு வேலை இல்லை, நாம் நம் வேலையை கவனிப்போம் என்ற ரேஞ்சில் மற்றவர்கள் விலகி விடுவர்.
நீங்கள் செய்வதற்கும் விடுதலை, நந்தன், உண்மை ரேஞ்சில் உள்ள பத்திரிகைகள் “சைக்கிள் திருடிய பார்ப்பனர்” என்ற தொனியில் எழுதவதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. கீழ்வெண்மணியில் நாயுடு தலித்துகளை எரித்தால் கூலித் தகராறுக்காக விவசாயிகளை திசைதிருப்பிய கம்யூனிஸ்டுகளை மட்டும் தாக்கி தலைவர் அறிக்கை விடுவார், தலித்துகளை எரித்த நாயுடு என்றெல்லாம் அப்பத்திரிகைகளில் தலைப்புகள் போட மாட்டார்கள். அதைத்தான் நீங்களும் செய்கிறீர்கள். நிஜமாகவே அவர்தான் உங்கள் தலைவர் எனத் தோன்றுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம். உங்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
9 hours ago
5 comments:
நல்ல பதில் பதிவு
அந்தப்பதிவு ஜாதிப்பெயரை பயன்படுத்துவதால் அதன் நோக்கமே திசைமாறுகிறது.இனிமேலாவது மாற்றிக்கொள்வார் என நம்புவோம்
ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உறவி்ன் பிரச்சினையில் ஜாதி எங்கே வந்தது என்று தெரியவில்லை.
-----
பெரியார் ஏற்படுத்திய கலகம் நன்மைக்கே எனபது என் கருத்து,பெரியாரை விமர்சிப்பது உங்கள் உரிமை,ஆனால் இந்தப்பதிவில் நீங்கள் அதனை தவிர்த்திருக்கலாம்
//பெரியாரை விமர்சிப்பது உங்கள் உரிமை,ஆனால் இந்தப்பதிவில் நீங்கள் அதனை தவிர்த்திருக்கலாம்//
இம்மாதிரி ஜாதி பார்த்து விமரிசனம் வைப்பது பெரியார் மற்றும் திராவிட கழக பத்திரிகைகளின் செயல். அதைத்தான் இப்பதிவரும் செய்தார்.
எப்படி இப்பதிவரது இச்செயல் அவரது உண்மை நோக்கத்திலிருந்து திசை திருப்புகிறதோ அதே போலத்தான் இன்றும் கூட பெரியாரது மேலே குறிப்பிட்ட செயல்பாடு அவரை கணிசமான மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி வந்திருக்கிறது. அதையும் இங்கே சொல்லியே தீர வேண்டும்.
என்னதான் இருந்தாலும் இதெல்லாம் அவர் பற்ற வைத்தது, அவருக்கு அதற்கான கிரெடிட்டை தந்தே ஆக வேண்டும். அதுதான் பகுத்தறிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்ப்பன எதிர்ப்பு பலமுனை தாக்குதலா நடக்குது போல!
எனக்கு ஒரு சந்தேகம்!
மற்ற பெண்கள் தவறு செய்தால் அது சகஜம், சொல்வத்ற்கு ஒன்றுமில்லை,
பார்பன பெண்கள் தவறு செய்தால் கண்டிப்பாக சொல்லவேண்டும் ஏனென்றால் அது நடப்பது அரிது என நினைத்தார்களோ!
என்ன எழவோ!
சாதி நம்மள விட்டு போறேன்னு சொன்னாலும் இவனுங்க விடமாட்டானுங்க போலிருக்கே!
கடைசீ லைனை (மட்டும்) ஏற்றுக்கொள்கிறேன்...
எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது போல் இவர்கள் எல்லோரும் ஒரு நிலைப்பாட்டினை எடுத்து விட்டு அந்த நிலைப்பாட்டிலேயே உழன்று கொண்டு இருப்பவர்கள். இவர்களை எல்லாம் திருத்த இயலாது , அது நமது வேலையும் கூட இல்லை
Post a Comment