1/25/2009

செந்தழல் ரவியின் பதிவுக்கு பதில் அளிக்கும் நோக்கத்தில்

படிப்பு விதிகளை கற்று கொடுக்கும். வாழ்க்கையோ விதிவிலக்குகளையே முக்கியமாக கற்று தருகிறது. படிப்பு என்பது பாடம் நடத்திவிட்டு தேர்வு வைப்பது. ஆனால் வாழ்க்கையோ தேர்வு நடத்திவிட்டு பாடம் கற்று தருகிறது என்றும் கூறலாம்.

வாழ்க்கை ஒற்றை பரிமாணத்தில் இயங்க முடியாது.

தர்க்க சாத்திரத்தில் ஒருவிதி உண்டு. அதை இவ்வாறு பார்க்கலாம்.

முதலில் நால்வகையான வாக்கியங்கள்.

1. எல்லா மனிதர்களும் நல்லவர்கள் ( All men are good - Universal affirmative - Proposition A) அ என வைத்து கொள்ளலாம்
2. ஒரு மனிதரும் நல்லவர் அல்ல (No men are good - Universal negative - proposition E) எ என வைத்து கொள்ளலாம்
3. சில மனிதர்கள் நல்லவர்கள் (Some men are good - Particular affirmative - Proposition I) ஐ என வைத்து கொள்ளலாம்
4. சில மனிதர்கள் நல்லவர்கள் அல்ல (Some men are not good - Particular negative - Proposition O) ஓ என வைத்து கொள்ளலாம்.

டிடக்சன் (deduction) என அழைக்கப்படும் தர்க்க சாத்திரத்தின் இப்பிரிவில் எல்லா வாக்கியங்களையும் முதலில் மேலே குறிப்பிட்ட நான்கு வகைகளில் ஒரு வகையாக சுருக்கி எழுதுவது இன்றியமையாதது.

இப்போது வரும் விஷயம் உண்மை மற்றும் பொய் பற்றியது. உதாரணத்துக்கு வாக்கியம் 1 உண்மை என வைத்து கொண்டால், வாக்கியம் 3-ம் உண்மைதான். ஆனால் வாக்கியம் இரண்டும் நான்கும் பொய்யாகி போகும். அதே போலத்தான் வாக்கியம் 2 உண்மை என வைத்து கொண்டால், வாக்கியம் 4 உண்மை, வாக்கியங்கள் 3 மற்றும் 1 பொய்.

மேலே சொன்னது எல்லோருக்குமே புரிந்து விடும். ஆனால் வாக்கியம் 3 அல்லது 4 உண்மை என்றால் மற்ற வாக்கியங்களின் நிலை என்பதில்தான் குழப்பமே வரும். சில மனிதர்கள் நல்லவர்கள் என்பது உண்மையானால் சில மனிதர்கள் நல்லவர்கள் அல்ல என்பது உண்மையா என்றதற்கு நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பி.யு.சி. லாஜிக் பாடம் படிக்கும்போது முதலில் அது உண்மை என்றுதான் எழுதினேன். ஏனெனில் வாழ்க்கையில் நாம் நல்லவர்களையும் பார்க்கிறோம் நல்லவர்கள் அல்லாதவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?

ஆனால் எங்கள் லாஜிக் ஆசிரியர் முகம்மது காசிம் அவர்கள் நான் எழுதியது தவறு என்றார். சிலர் நல்லவர்கள் அல்ல என்பது சந்தேகத்துக்குரியது என்றார். அவர் சொன்ன வாதம் என்னவென்றால், எனக்கு தெரிந்தவரை நான் பார்த்த சிலர் நல்லவர்களே. நான் அவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். நல்லவர்கள் அல்லாதவர்களை பற்றி நான் அறியேன். ஆகவே அவர்களைப் பற்றி பேச இயலாது என்பதுதான் அந்த வாதம். அச்சமயம் எனக்கு அது புரியவில்லை. சில ஆண்டுகளாயின. அதுதான் வாழ்க்கை கற்று தந்த பாடம்.

இப்போது செந்தழல் ரவியின் இப்பதிவுக்கு வருவோம்.

அவர் தலித்துகளின் பெருமைகளை பட்டியலிடுவதாக எண்ணி அவர்களை இழிவுபடுத்தவே செய்கிறார். அதில் அவர் விதந்தோதியிருக்கும் விஷயங்களை தவிர்ப்பதே தலித்துகளுக்கு தாங்கள் முன்னேற விரும்பினால் இருக்கும் ஒரே வழி.

அவர் எழுதுகிறார்:

இரட்டைக்குவளை முறை வைத்து மற்ற சாதியால் தனி குவளையில் உணவு வழங்கப்பட்டு, தனி டம்ளரில் டீ கொடுக்கப்பட்டாலும் " ஆண்ட" என்று சொல்லி எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாங்கி குடிக்கும் காந்தீய சமூகம் பறையர் சமூகம். இதில் என்ன பெருமை இருக்க இயலும்? நீ யாரடா ஜாட்டான் என்னை ஒதுக்குவது, நாங்களே ஒற்றுமையாக இருந்து அவ்வாறு இரட்டைக் குவளை கடைகளை புறக்கணிப்போம். முன்பே இவ்வாறு முன்னேறிய நாடார்களை போல நாங்களும் முன்னேறுவோம் என்ற சண்டைமனப்பான்மை அல்லவா தேவை? தலித் அதிகாரிகளை காத்திருப்பில் வைக்கிறார்களா, அதை உங்களுக்கு சாதகமாக திருப்பி கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.

திருக்கோவில்களில் கருவறைகளில் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, வெளியில் இருந்து கும்பிட்டு செல்லும் அற்புத சமூகம் இந்த சமூகம்...
அப்படிப்பட்ட சாமியே தேவையில்லைதானே. மேலும் உங்களுக்கு முன்னேறுவதற்கு தோதான பல வேலைகள் செய்ய பாக்கியிருக்கின்றன. அந்த சாமிகளை நீங்களே புறக்கணியுங்கள். பொருளாதார அளவில் முன்னேறுங்கள். தானே மற்றவர்கள் ஓடிவருவார்கள்.

எல்லா ஊரிலும் சேரி என்று தனியாக தள்ளிவைத்தபோதும் சரி, தொட்டால் தீட்டு என்று ஒதுக்கியபோதும் சரி, எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அதை ஏற்றுக்கொண்ட மென்மை சமூகம் பறையர் சமூகம்...
கண்டிப்பாக எதிர்ப்பை காட்டத்தான் வேண்டும். ஆனால் அதையும் உடனடி பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும். உயர்சாதியினர் என தங்களை அழைத்து கொள்பவர்களுக்கு தரும் சேவைகளை நிறுத்தி விடுங்கள். முடிந்தவரை நகரங்களுக்கு குடியேறுங்கள். இதற்கும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். நாடார்களை மனதில் இருத்துங்கள்.

மற்ற சாதியினருக்கு உட்பிரிவுகள் பல இருந்தாலும் பறையர் சமூகத்தில் அனைவரும் பறையர் என்று வழங்கியது. இதில் இருந்தே தெரியவில்லையா, அது ஒரு சமத்துவ சகோதரத்துவ சமூகம்...
இது உண்மையே அல்ல. தலித்துகளிலும் உட்சாதிகள் உண்டு. அங்கும் ஒடுக்குமுறைகள் உண்டு. இதை மீறித்தான் அவர்கள் ஒன்றுபட வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் போன்ற மாபெரும் பர்சனாலிட்டிகளை கொண்டது இந்த சமூகம். அம்பேத்கர் வடநாட்டு பறையர், தமிழ்நாட்டு பறையரைவிட நல்ல பர்சனாலிட்டி...
பெர்சனாலிட்டி பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், அவர் செய்த ஒரு தவறை மட்டும் செய்துவிடாதீர்கள். அதாவது தலித்துகளுக்கு தனி வோட்டர் லிஸ்ட் வந்ததை எதிர்த்து காந்தியடிகள் இருந்த உண்ணாவிரதத்துக்கு பணிந்து வாபஸ் பெற்று கொண்டது. நான் அம்பேத்கராக இருந்திருந்தால் இம்மாதிரி அடாவடியான கோரிக்கை/உண்ணாவிரதத்துக்கு செவி சாய்த்திருக்கவே மாட்டேன். சாகட்டும் என விட்டிருப்பேன்.

திராவிட இயக்கங்களின் வரலாற்றில் பறையரின் பங்கு பெரும்பங்கு. பறையரிடம் ஓட்டு வாங்க ஆயிரம், ஐநூறு எல்லாம் செலவு செய்ய தேவையில்லை...பத்து ரூபாயும் சாராயமும் கொடுத்தாலே போதும். இதில் இருந்தே தெரியவில்லையா, இந்த பறையர் சமூகம் ஒரு சிறந்த சிக்கன சமூகம்...
இங்கெல்லாம் சிக்கனம் செல்லாது என இப்பதிவரின் நக்கலான ஸ்டேட்மெண்டிலிருந்தே தெரிகிறது அல்லவா.

அரசு இலவசமாக கொடுத்த சீருடைகளை அணிந்துகொண்டு, பள்ளி செல்லும் பிள்ளைகள் அரசு வழங்கும் மதிய உணவை அழகாக உண்டு, செருப்பு அணியாத கால்களில் வெய்யிலை பொருட்படுத்தாமல் வீடு திரும்புவது அழகு. இதில் இருந்தே தெரியவில்லையா ? இந்த சமூகத்தில் சகிப்பு தன்மை இயல்பிலேயே வந்துவிடுகிறது என்று ?
சகிப்பு தன்மை என்பது தம்மை சிறுமைபடுத்தும் எந்த விஷயங்களிலுமே இருக்கக் கூடாது என்பதே நிஜம்.

எல்லா சமூகத்தை பற்றியும் எழுதிவிட்டீர்களே, இனி பறையன், சக்கிளி, அருந்ததியர், ஒட்டன் என்று மற்ற சாதியை பற்றியும் பெருமையாக எழுதுங்களேன் சாதி வெறியர்களே?
இங்குதான் லாஜிக் துணைக்கு வருகிறது. ஒரு சாதியின் நல்ல விஷயங்களை பற்றி எழுதினால் அது மற்ற சாதிகளை மட்டம் தட்டுகிறது, அவ்வாறு எழுதுபவர்கள் சாதி வெறியர்கள் என்பது லாஜிக்கில் குறைபாடு உள்ளவர்கள் சிந்திப்பது.

ஆகவே, பொங்கி எழுங்கள் தலித் தோழர்களே. நீங்கள் இதனால் இழக்க இருப்பது அடிமை சங்கிலிகளே.

உங்களுக்கு அனுதாபம் காட்டுபவர்கள் உங்களை அப்படியே அடக்கி வைக்க நினைப்பவர்கள். ஏதோ அரசு வந்துதான் உங்களை பாதுகாக்க வேண்டும் என உங்களை நினைக்குமாறு தூண்டுபவர்கள் எங்காவது முன்னேறிவிடப் போகிறீர்களே என கவலைப்படுபவர்கள். உங்களுக்கு தேவை நீங்கள் முன்னேற வேண்டும் என்னும் ஆதங்கத்தில் உங்கள் குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுபவர்களே. முந்தைய பத்தியில் நான் சுட்டியுள்ள பதிவிலிருந்து சில வார்த்தைகள்:

“இதையெல்லாம் சொல்லிவிட்டு இன்னும் சில கூறுவேன். தலித்துகளும் தத்தம் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும். என்ன நடக்கிறது என்றால் அவர்களில் பலர் ஒரு மொந்தை கள்ளுக்கும் ஒரு வேளை அசைவ சாப்பாட்டுக்கும் தங்கள் உழைப்பை வழங்கி விட்டு சென்று விடுகின்றனர். அதிலும் தங்கள் சகோதரர்களையே ஆண்டைக்காக அடிப்பதும் நடக்கிறது. பார்த்திபன் நடித்த பாரதி கண்ணம்மா இதை சரியான பார்வை கோணத்தில் காட்டாவிட்டாலும் காட்டிய அளவிலேயே மனதை பாதித்தது. அக்கொடுமையை பற்றி சரியாகக் கூறாது பூசி மொழுகிவிட்டு மீனாவுக்காக உடன்கட்டை ஏறுவது போன்ற அபத்த காட்சி.
பெற வேண்டிய கூலி கிடைக்கவில்லையென்றால் வேலை செய்ய முடியாது என்று இருப்பதே உத்தமம். மிகக் கடினமான செயல்தான் இருந்தாலும் ஏதேனும் பெரிய அளவில் இவ்வாறு செய்ய வேண்டும். அவர்களிலேயே படித்து பெரிய நிலைக்கு வந்து விட்டவர்கள் தங்களது ஏழை சகோதரர்களிடமிருந்து விலகி நிற்பது துரதிர்ஷ்டவசமானது”.

ஒன்று நினைவில் இருக்க வேண்டும். சாதி இல்லை, இருந்தாலும் என்னளவில் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன், அது பற்றி பேசவே மாட்டேன் என நினைப்பவர்கள் நெருப்பு கோழி போல மணலுக்குள் தலைகளை புதைத்து கொள்பவர்கள்.

கலப்பு திருமணம் வேண்டும் என பேசுபவர்கள் தங்களுக்கு என வரும்போது மட்டும் முறைப்பெண்களை மணந்து கொண்டு தங்கள் பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்ததாகவும், தமது குழந்தைகளுக்கு கலப்புத் திருமணம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்போவதாகவும் (யார் அப்போது இதயெல்லாம் நினைவில் வைத்து கொள்ள போகிறார்கள் என்னும் தெனாவெட்டில்) பசப்புபவர்கள். அல்லது அப்படியே செய்து கொண்டாலும் ஐயர் அல்லது ஐயங்கார் பெண்களாக தேடி காதலித்து மணம் முடிப்பவர்கள். அவர்களையெல்லாம் நம்புவது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்.

ஆனால் ஒன்றில் மட்டும் அவர்களை பின்பற்றலாம் தலித்துகள். தமது நலன் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி செயல்படவேண்டும் என்பதே அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

32 comments:

Anonymous said...

//அவர்களிலேயே படித்து பெரிய நிலைக்கு வந்து விட்டவர்கள் தங்களது ஏழை சகோதரர்களிடமிருந்து விலகி நிற்பது துரதிர்ஷ்டவசமானது”.//


இது அண்ணல் அம்பேத்கார் அவர்களின் கருத்துக்கு எதிரானது.
அவர் முன்னேறிய மக்கள் பிறரை கைதூக்கி முன்னேற்ற வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் முன்னேறிவிட்டவர்கள் நகரங்களில் பெரிய வீடுகளை கட்டிக்கொண்டு,நவீன பார்ப்பனர் போல், ஒரு பகுதியினர் செயல் படுவது மாறவேண்டும்.

குடுகுடுப்பை said...

நீங்கள் சொல்வதும் அடங்க மறு கோட்பாடுதான். நான் கேட்பது அடக்க மறுவும்.கோவிலில் பூஜை செய்ய தலித்துகளை அழையுங்கள்,அடுத்த சங்கராச்சியார் தலித் சமூகத்தில் இருந்து வரட்டும்.

ஜாதி இன்றைக்கு ஒழிக்க முடியாது,ஆனால் ஒரு தலித் சங்கராச்சாரியார் ஆக முடியும்.

Anonymous said...

குடுகுடுப்பை ஐயா, தலீத் என்ன, ஒரு அய்யங்கார் கூட அந்த மடத்தில் உள்ளே நுழைய முடியாது. ஸ்மார்த்தர்கள் என்கின்ற ஐயர்கள் ராச்சியம் அது. சரிதானே டோண்டு சார்? கோவிலகள், மடங்கள் சாதி உட்பிரிவுகளால் நடத்தப்படுகிறது. வெறும் பர்பனர்கள் என்று
ஒற்றை வார்த்தையில் சாதி சொல்லப்படுகிறதே தவிர, அங்கு இருக்கும் துவேஷம் எதிலும்
குறைந்ததில்லை.

வாசகன் said...

ரவி எழுதியிருப்பதே உங்கள் பதிவைக் கண்டித்து எழுதிய அங்கதப் பதிவு என்பது உங்களுக்க விளங்கவில்லையா அல்லது விளங்காதது போல் நடிக்கிறீர்களா?

அவர் ஏதோ உண்மையாகப் பறையர்களைப் பாராட்டி எழுதினால் என்ன எழுத வேண்டுமோ அதை எழுதி இருப்பதைப் போல் அவற்றைத் திருத்தி எழுதி இருக்கிறீர்களே...

அவர் பதிவு முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு இது போன்ற சாதீயப் பாராட்டுப் பதிவுகளை நீங்கள் எழுதும் முக்கிய நோக்கம் சாதீய ரீதியாகப் பதிவுலகில் மீண்டும் ஒரு கனலைக் கிளப்பி அதில் நீங்கள் மையப் புள்ளாயாக இருந்து விளம்பரக் குளிர் காய நினைக்கிறீர்கள் என்பது.அதற்கான உங்கள் நேரடியான பதில் என்ன?

தவிர உங்கள் சாதீயப் பாராட்டுப் பதிவுகளில் பறையர்களைப் பற்றி எழுதினால் உண்மையில் நீங்கள் என்ன எழுத முடியும்?

சதுக்க பூதம் said...

// அவர் செய்த ஒரு தவறை மட்டும் செய்துவிடாதீர்கள். அதாவது தலித்துகளுக்கு தனி வோட்டர் லிஸ்ட் வந்ததை எதிர்த்து காந்தியடிகள் இருந்த உண்ணாவிரதத்துக்கு பணிந்து வாபஸ் பெற்று கொண்டது.//

இரட்டை வாக்கு முறை மட்டும் அன்றே நடைமுறை படுத்த பட்டிருந்தால், இன்று உண்மையிளேயே பலம் வாய்ந்த ஆதி திராவிட தலைவர்கள் உருவாகி ஆதி திராவிடர்களது வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்து ஏற்ற தாழ்வுகளை சிறிதளவாவது குறைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அம்பேத்காரது இந்த முயற்ச்சியை ஆதரிக்கும் நடு நிலை கொள்கையை உங்களிடமிருந்து எதிர்பார்க்க வில்லை. ஆச்சிரியமாக இருந்தது

dondu(#11168674346665545885) said...

//இது போன்ற சாதீயப் பாராட்டுப் பதிவுகளை நீங்கள் எழுதும் முக்கிய நோக்கம் சாதீய ரீதியாகப் பதிவுலகில் மீண்டும் ஒரு கனலைக் கிளப்பி அதில் நீங்கள் மையப் புள்ளியாக இருந்து விளம்பரக் குளிர் காய நினைக்கிறீர்கள் என்பது.அதற்கான உங்கள் நேரடியான பதில் என்ன?//

அது தவறான கண்ணோட்டம்.

//தவிர உங்கள் சாதீயப் பாராட்டுப் பதிவுகளில் பறையர்களைப் பற்றி எழுதினால் உண்மையில் நீங்கள் என்ன எழுத முடியும்?//

இப்போதைக்கு அவர்கள் முன்னேறுவதுதான் முக்கியம். ஆகவே அவர்களது போராட்ட உணர்வுதான் அவர்களுக்கு தேவை. மற்றவர்கள் பாராட்டு அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அம்பேத்காரது இந்த முயற்ச்சியை ஆதரிக்கும் நடு நிலை கொள்கையை உங்களிடமிருந்து எதிர்பார்க்க வில்லை. ஆச்சிரியமாக இருந்தது//
இங்கு டோண்டு ராகவன் நடுநிலை எதுவும் வகிக்கவில்லை. அம்பேத்கரின் முதல் நிலைக்குத்தான் ஆதரவு தெரிவிக்கிறான். அவர் மற்றவர்கள் பேச்சாஇ கேட்டு கிடைத்த சலுகையை விட்டு கொடுத்ததை பெரிய மடத்தனமாக பாவிக்கிறான்.

மறுபடியும் கூறுகிறேன், தலித்துகள் தீவிரமாக போராடி முன்னுக்கு வரவேண்டும். தமது சமூக முன்னேற்றம்தான் அவர்களுக்கு பிரதானமாக இருக்க வேண்டும். திருமாவளவன் போன்ற தலைவர்கள் அதன் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
//இது போன்ற சாதீயப் பாராட்டுப் பதிவுகளை நீங்கள் எழுதும் முக்கிய நோக்கம் சாதீய ரீதியாகப் பதிவுலகில் மீண்டும் ஒரு கனலைக் கிளப்பி அதில் நீங்கள் மையப் புள்ளியாக இருந்து விளம்பரக் குளிர் காய நினைக்கிறீர்கள் என்பது.அதற்கான உங்கள் நேரடியான பதில் என்ன?//

அது தவறான கண்ணோட்டம்.//


இன்னும் விரிவாய் சான்றுகளுடன் விளக்கவும்.

Anonymous said...

எஸ்.வி. சேகர் அறிக்கை
இறைவனால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் சமம் என்று வாழ்ந்து கொண் டிருப்பவர்கள் பிராமணர்கள். இவர்கள் என்றுமே ஜாதிக் கலவரங்களில் ஈடுபட்டதில்லை. வன்முறையை நம்புகிறவர்களும் இல்லை. கடவுள் நம்பிக்கையையும், தனி உழைப்பையும், திறமையையும், மத நெறிகளையும் நம் நாட்டின் இறையாண்மைக் குரிய அனைத்து சட்ட திட்டங்களையும் மதித்து அதன் வழி நடப்பவர்கள்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் அனைவரும் சமம் என்ற நியாயமான குறிக் கோளுடன் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கான சமூகநீதி போராட்டங் களின் பலன் இன்று 69 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும், வாய்ப்பில்லாதவர்களுக்கும் முன்னேறுவதற்கு பிராமண சமுதாயம் தடையாக இருந்ததில்லை. அதே சமயம், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு சரியான சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்று கருத்து இல்லை.

தமிழகத்தில் வாழும் 40 இலட்சம் பிராமணர்களில் பெரும்பாலோர் தினசரி வருமானத்திற்கு, புரோகிதம், அப்பளம் இடுவது, சமையல் வேலை, பிணம் சுமப்பது, ஈமச் சடங்குகள் செய்வது என அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பிராமண சமுதாயத்தின் கரங்களை வலுப்படுத்தவும், கல்வி, வேலை வாய்ப்பில் சமூக நீதி கிடைக்கவும், தமிழக பிராமணர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் முன் சமர்ப்பிப்போம்.

இந்த முயற்சியை நம் அரசும் பகிர்ந்துகொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த 7 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் என நம்புவோம். ஒருமித்த கருத்து உள்ள அனைத்து பிராமணர்களும், பிராமண சங்கங்களும் இணைவோம்.

இதற்காகவே தென்னிந்திய பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு துவங்கப்படுகிறது. இக்கூட்டமைப்பின் துவக்க விழாவில், பிராமணர்கள் முன்னேற்றம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

- இதுதான் திரு. எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ.யின் அறிக்கை.




இது எப்படியிருக்கு?

7 % கிடைக்குமா?

உ.பிரேதேச மந்திரம் தலித்,பார்ப்பனர் அரசியல் தமிழகத்தில் கூட்டணி அமையுமா?

டோண்டுவுக்கு இது உடன்பாடா?

பிற்பட்டோர் அமைப்புகள் இதை அனுமதிக்குமா?

வாக்காளன் said...

ஒரு தலித் வீட்டிலிருந்து வரும் பலகாரம் என்றால் அதை உதாசீனபடுத்தி குப்பையில் போடுவது அல்லது தன் வீட்டு வேலைக்காரகளுக்கு தருவது..அவர்களின் பொருளை , அவர்களை தொடுவது தீட்டு என்பது.... அதே அவர்களிடம் இருந்து வரவேண்டிய பணம் என்ற ஜலம் தெளிச்சு எடுத்து வைப்பது என்பது இன்றும் 90% பிராமனர்கள் செய்வது..

எங்கே ஒரு ஐயங்காரை ஒரு முருகன் கோவிலுக்கு வர சொல்லுங்க.. இல்லை ஒரு ஐயரை முனீஸ்வரன் கும்பிட சொல்லுங்க.. எல்லோரும் கடவுள்கள் தானே.. இந்து மதம் தானே..

Anonymous said...

//வாக்காளன் said...
ஒரு தலித் வீட்டிலிருந்து வரும் பலகாரம் என்றால் அதை உதாசீனபடுத்தி குப்பையில் போடுவது அல்லது தன் வீட்டு வேலைக்காரகளுக்கு தருவது..அவர்களின் பொருளை , அவர்களை தொடுவது தீட்டு என்பது.... அதே அவர்களிடம் இருந்து வரவேண்டிய பணம் என்ற ஜலம் தெளிச்சு எடுத்து வைப்பது என்பது இன்றும் 90% பிராமனர்கள் செய்வது..//


இதில் பிராமணரை மட்டும் குறை சொல்வது அபாண்டம்.

தாழ்த்தப்பட்ட சமூகம் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு பிற்பட்ட சமுதாயமும் ஒரு காரணம்.


தனக்கு உயர் அதிகாரியாய் உள்ள தலித்துக்கு கூழை கும்பிடு போடு பிற ஜாதியினர் , அவரை தான் கட்டிய வீட்டில் வாடகைகக்கு குடி அமர்த்த
சம்மதிக்கும் தாராள மனது உடையவர்களை பார்ப்பது மிக அரிது.


மத்திய அரசு அலுவலகங்களில் இந்த காரணத்திற்காகவே ,பதவி உயர்வு பெரும் தலித்துகள் பிற மாநிலங்களுக்கு செல்வதை விரும்புவதில்லை.

வாக்காளன் said...

அனானி??? %$$%$ (ரியலி???)

தீட்டு என்ற பழக்கம் பற்றி பேசுகிறேன்.. மனிதர்கள் மீது தீட்டு என்ற கொடுமையான வன்முறையை ஏவியது பிராமனர்கள் என்பது மறுக்க முடியா உண்மை..

ரவி said...

/////இது போன்ற சாதீயப் பாராட்டுப் பதிவுகளை நீங்கள் எழுதும் முக்கிய நோக்கம் சாதீய ரீதியாகப் பதிவுலகில் மீண்டும் ஒரு கனலைக் கிளப்பி அதில் நீங்கள் மையப் புள்ளியாக இருந்து விளம்பரக் குளிர் காய நினைக்கிறீர்கள் என்பது.அதற்கான உங்கள் நேரடியான பதில் என்ன?//

Dondu : அது தவறான கண்ணோட்டம்.
Ravi : Yes True, My Post Is againts a Weekly.

///சாதீய ரீதியாகப் பதிவுலகில் மீண்டும் ஒரு கனலைக் கிளப்பி அதில் நீங்கள் மையப் புள்ளியாக இருந்து விளம்பரக் குளிர் காய நினைக்கிறீர்கள் என்பது///

I Dont think Dondu Sir will think upto that extent.(or he dont have that kurukku butthi - cross mind )

dondu(#11168674346665545885) said...

//dont have that kurukku butthi - cross mind//
நன்றி ரவி. பை தி வே, குறுக்கு புத்தியின் சரியான ஆங்கில மொழியாக்கம் crooked mind.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணிகண்டன் said...

***நன்றி ரவி. பை தி வே, குறுக்கு புத்தியின் சரியான ஆங்கில மொழியாக்கம் crooked mind.
********
ரொம்பவே ரசிச்சேன் இத !

K.R.அதியமான் said...

//// அவர் செய்த ஒரு தவறை மட்டும் செய்துவிடாதீர்கள். அதாவது தலித்துகளுக்கு தனி வோட்டர் லிஸ்ட் வந்ததை எதிர்த்து காந்தியடிகள் இருந்த உண்ணாவிரதத்துக்கு பணிந்து வாபஸ் பெற்று கொண்டது.//

இரட்டை வாக்கு முறை மட்டும் அன்றே நடைமுறை படுத்த பட்டிருந்தால், இன்று உண்மையிளேயே பலம் வாய்ந்த ஆதி திராவிட தலைவர்கள் உருவாகி ஆதி திராவிடர்களது வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்து ஏற்ற தாழ்வுகளை சிறிதளவாவது குறைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அம்பேத்காரது இந்த முயற்ச்சியை ஆதரிக்கும் நடு நிலை கொள்கையை உங்களிடமிருந்து எதிர்பார்க்க வில்லை. ஆச்சிரியமாக இருந்தது

///

No. wrong and highly retrogressive assumption, as Ambedhakar himself realised later. Gandhji was assasianted in 1948 and Indian Constitution was framed later and adapted in 1950. and Dr.Ambethkar was the cheif architect of this constitution. There was no effort by him or other leaders to reverse the Poona Pact of Gandhiji and Ambethkar. separate electorates will only further divide a society. But Gandhiji supported reserved constituiencies (for a fixed period, not this infinte period, as it has become now) for
daliths.

Prem Rajan said...

அய்யா ரவி போன்ற பதிவர்களை புறக்கணிப்பது சால சிறந்தது. தலித் முன்னேற்றம் சாதி ஒழிப்பி என்று சொல்லும் பல மாந்தர்கள் சொந்த சாதியில் அதிக சீர்சனத்தியோடு திருமணம் செய்வது தெரிந்ததே


இதை விட கீழதரமாக சாதி ஒழிப்பு என்று சொல்லி சொல்லி பார்பனர் வீட்டு பெண்களை தேடி அலைவதும் பொதுவாக நடப்பதே.


தலித் முன்னேற்றம் சாதி ஒழிப்பு என் கை வலிக்க இணையத்தில் சண்டை போடும் ஆசாமிகள் ஏன் பார்பன சாதி பெண்களை தேடி அலைகின்றனர்? ஒரு அருந்ததிய பெண்ணையோ அல்லது தலித் சாதியில் இருந்து ஏன் பெண் எடுப்பது இல்லை ????

காதல் திருமணம் கலப்பு திருமணம் என்பது பார்பன சாதி பெண்ணை திருமணம் செய்வது மட்டும் அல்ல.

இவ்வாறு செய்து விட்டு முகமூடி மாட்டி சாதி ஒழிப்பு பிராசாரம் செய்யும் அறிவிலிகளை அடையாளம் காண்போம்.

ரவி said...

Prem Rajan ( or Cons be a Anony Rajan)

I am getting what u r tellin. u cant stop me by attacking me personally.I give u shit.

Anonymous said...

வருணாசிரம தர்மத்தினை தக்க வைக்கும் போராடும் பாப்பான் டோண்டு அவர்களின் தில்லாலங்கடி டகால்டி பதிவுக்கு நீங்கள் பதில் எழுதி நீங்கள் உங்கள் தரத்தினை தாழ்த்தி கொள்ள வேண்டாம்
ஏனெனில் சிலர் எதிர்ப்பிலே வளர்பவர்கள் அதாவது அனைவரும் வேட்டி சட்டையில் இருக்கும் போது ஒருவர் மட்டும் பேன்டு சட்டையுடன் இருப்பது எப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்குமோ அதே போலத்தான் இதுவும்...

ஒரு பார்பானும் ஏர் ஏன் ஓட்டவில்லை?
ஒரு பார்ப்பானும் ஏன் ஈழ தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை
இந்த பார்ப்பான் ஒரிசாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்து சாப்பிடுறானா?
போண்டா வாயன் எனக்கு பெண் கொடுப்பான?

இது சாம்பிள் தான் ..

இவனுடைய சாதி பற்றிய குப்பைகளை படித்து பார்தால் ஒன்று உங்களுக்கு புரியும்
இவன் தான் சார்ந்த பார்பானியத்தை பற்றி ஒரு பதிவு போடவில்லை!ஏன்?

இவனுடைய நோக்கம் எல்லாம் காளியினுடைய பிள்ளைகள் மற்றும் ...பிள்ளைகள் என்று நமக்குள்ளேயே பிரிவினையை ஊட்டுவதாகத்தான் உள்ளது..

இவர்கள் மென்மையானவர்கள் புனிதமானவர்கள் என வரலற்றில் இருந்து எல்லா படையெடுப்புகளில் இருந்து தப்பிவிட்டார்கள் ..எந்த போண்டா வாய் பார்ப்பனும் தன் இனத்தினை காக்க போர் செய்தது இல்லை! இனி தற்கால நிலமையின் படி தமிழினத்திற்கு எதிராக எவன் நிற்பவன் ஆயினும் வன்முறை அவனை நோக்கி திருப்புதல் வேண்டும்! இதில் பாவம் புண்ணியம் சுண்ணாம்பு என்று ஒன்றும் இல்லை

Anonymous said...

மத்திய அரசு அலுவலகங்களில் தென் மாவட்டங்களில் பல உயர் பதவிகளில்
தேவேந்திர குல வேளாளர்கள் இருக்கிறார்கள். ஒன்று இரண்டு பதவிகளில் ஆதிதிராவிடர் இருக்கிறார்கள்.
முன்னவ்ர்கள் ,பின்னவர்களை எதிலும் சேர்த்துக் கொள்வது கிடையாது.

எல்லா அலுவலகங்களிலும் பெரும்பாலன கடைநிலை ஊழியர்கள் பலதரப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் உள்ளனர்.(பார்ப்பனர்,பிள்ள,நாடார்,தேவர்,செட்டியார்,நாயுடு......அருந்ததியர்).

துப்புரவுப் பணி செய்யும் அருந்த்தியர்களை பிற தேவேந்திர குல வேளாள அலுவலர்கள் சரியாக நடத்துவதில்லை.வேலைக்கு வந்து நாலு காசு சேர்ந்ததும் பார்ப்பனராய் மாறிவிடுகின்றனர் என்று கேலியாய் சொல்லப்படுவதுண்டு.

அந்த அருந்ததியர்கள் பல பேரிடம் சாதிச் சான்றிதழ் கூட கிடையாது.

தாழ்த்தப் பட்ட ஜாதிகளிடையே துப்புரவுப் பணி செய்யும் அருந்ததியர்கள் நிலை கொடுமையிலும் கொடுமை.

18 % இடஒதுக்கீட்டு சலுகையும் அரசு இவர்களுக்கே ஒரு 10 ஆண்டுக்காவது கொடுத்தால் தான் இவர்கள் மற்ற இரு பிரிவினரை போல் முன்னேறமுடியும்.

அரசியல் கட்சிகளுக்கு இதைச் செய்ய மனம் வருமா?


இந்த பாவப் பட்ட ஜென்மங்களுக்கு பரிந்து பதிவு போடக் கூட படித்த பதிவர் யாரும் இருப்பது மாதிரி தெரியவில்லை.

இந்த உண்மைகளை வெளிக் கொண்டுவரும் பதிவினை டோண்டு அவர்கள் பதிவு செய்வார்களா?

Anonymous said...

//வருணாசிரம தர்மத்தினை தக்க வைக்கும் போராடும் பாப்பான் டோண்டு //

இந்த கொமண்டை போட்டது செந்தழல் ரவி இல்லை.,

Anonymous said...

\\மத்திய அரசு அலுவலகங்களில் தென் மாவட்டங்களில் பல உயர் பதவிகளில்
தேவேந்திர குல வேளாளர்கள் இருக்கிறார்கள். ஒன்று இரண்டு பதவிகளில் ஆதிதிராவிடர் இருக்கிறார்கள்.
முன்னவ்ர்கள் ,பின்னவர்களை எதிலும் சேர்த்துக் கொள்வது கிடையாது.\\


பதவியுயர்வில் தாழ்த்தப்பட்டடோருக்கு (எஸ்சி,எஸ்டி பிரிவினர்)மட்டும் செண்ட்ரல் கவர்ண்ட்மெண்ட் பதவிகளில் சலுகையுள்ளதால் பெரிய பதவிகளுக்கு பணிமூப்பு இருந்தாலும் ஏனைய பிறபட்ட ஜாதியினர்(ஓபிசி)செல்ல முடிவதில்லை.

தமிழக அரசில் உள்ளதுபோல் பிற்பட்ட ஜாதியினருக்கு (ஓ.பி.சி)பதவியுயர்விலும் பிரதிநிதித்துவ கோரிக்கை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்டவில்லை.

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 27 % பதவியுயர்வில் மத்திய அரசுப் பணிகளில்
ஓ.பி.சிக்கு கிடைக்குமா?

Anonymous said...

//Anonymous said...
//வருணாசிரம தர்மத்தினை தக்க வைக்கும் போராடும் பாப்பான் டோண்டு //

இந்த கொமண்டை போட்டது செந்தழல் ரவி இல்லை.,//

நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்களே!

Anonymous said...

//23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’//


ஜெயகாந்தனா இப்படி!
என்ன ஆச்சு இவருக்கு?

பட்டங்களும் பரிசுகளும் ஒரு மாமனிதனை !

வெற்றி said...

திரு டோண்டு சார்,
ஜாதி என்பதே ஒரு இழிவான சொல்லாக பார்க்கும் இக்காலத்தில்,ஜாதியைப் பற்றி பெருமையாக எழுத தேவையில்லை என்பதே என் தாழ்மையானக் கருத்து.ஒருவரின் முன்னேற்றத்திற்கும்,ஜாதிக்கும் துளியளவு சம்மந்தம் இருக்கப் போவதில்லை.ஆனால் ஒருவரின் இழ் நிலைக்கும் ஜாதிக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.
எனவே தயவு செய்து ஜாதியை வைத்து ஒருவரை உயர்த்தியோ இழிவு படுத்தியோ எழுத வேண்டாம்.
ஏனென்றால் எல்லா ஜாதியிலும் நல்லெண்ணக் காரர்களும்,கொலைகாரப் பாவிகளும் இருக்கிறார்கள்.ஜாதி என்றைக்கும் தனி மனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதில்லை.
விவேகா நந்தர் சொன்னதைப் போல,'நீ எதை நினைக்கிறாயோ!அதுவாவே ஆகிறாய்!உன்னை நாய் என்று நினைத்தால் நாயாகிறாய்!சிங்கம் என்று நினைத்தால் சிங்கம் ஆகிறாய்!
ஜாதி ஒரு நோய்!
ஜாதி ஒரு பேய்!
ஜாதி ஒரு சாபக் கேடு!
ஜாதி ஒரு குப்பை மேடு!

Anonymous said...

1. is the fall of Mullai theevu is end of LTTE?
2. in the non existent of LTTE will srilankan tamils can attain self autonomy ?
3. will this fall of mullai theevu can bring peach for srilankan tamils?
4. why the indian tamils in srilanka are treated as slaves by Northern tamils of lanka?

Anonymous said...

centaral educational(reservation in admission)act 2007

//மத்திய உயர்கல்வியில் இருக்கின்ற மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவது கூடாது என்பதும் அதற்குபதிலாகப் புதிதாக இடங்களை உண்டாக்கி அதன்பிறகு வரும் மொத்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளில் தவணை முறையில், 27% இடங்களைத் தருவதே என்பதுவே இச் சட்டத்தின் நோக்கமாகும்.//

இது பிற்பட்ட ஜாதிகளுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் இல்லையா?

வஜ்ரா said...

You can always expect this as you being a brahmin writing about castes and their societal significance in ancient and modern days.

The dalit thing is a trump card that these people who claim to "oppose" caste system play (yet they have no shame in claiming reservation and marrying their cousin on the basis of castes). And they play it every time there is a danger for their domination.

You should have expected this beforehand.

I expected that an experienced blogger like you would just ignore that non-sense. Did'nt you know that you can never make sense with people who are in the opposing end of the political spectrum ?

dondu(#11168674346665545885) said...

//The dalit thing is a trump card that these people who claim to "oppose" caste system play (yet they have no shame in claiming reservation and marrying their cousin on the basis of castes). And they play it every time there is a danger for their domination.//
இந்த ட்ரம்ப் கார்ட் ஒரு கத்தி போன்றது. இரண்டு பக்கமும் வெட்டும். நான் வெட்டினாலும் வெட்டும். ஆகவே கவலை வேண்டாம்.

இம்மாதிரி பேர்வழிகளை தலித்களே அடையாளம் கண்டுணர்வார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தொண்டு இராகவன் சொல்கிறார்:

சாமி பேரால், உன்னைத் தள்ளினால், அந்த சாமிகளே வேண்டாம் என்று ஒதுக்கி விடு என்று தலித்துகளுக்கு உபதேசம் செய்கிறார்.

அப்படியானால், அவர்கள் இசுலாமியர்களாகவோ, கிருத்துவர்களாகவோ மாற வேண்டும் என்கிறாரா?

dondu(#11168674346665545885) said...

//அப்படியானால், அவர்கள் இசுலாமியர்களாகவோ, கிருத்துவர்களாகவோ மாற வேண்டும் என்கிறாரா?//
கண்டிப்பாக இல்லை. அவ்வாறு செய்தால் அவர்களது இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். நாத்திகராக இருந்தாலும் இந்து மதத்தில் இருக்கலாம். அதில் பிரச்சினை இல்லை. கலைஞரே இந்து என்றால் திருடன் சொல்லியும் இதற்காகத்தானே இந்து மதத்தில் இருக்கிறார்.

கிறித்துவரானாலும் அங்கும் இதே சாதி வெறி உள்ளது. இசுலாமியர்களை கேட்கவே வேண்டாம். உள்ளே ஒருமுறை சென்றால் திரும்ப இயலாது. ஃபத்வா போட்டு கொன்று விடுவார்கள். அதனால்தான் அம்பேத்கரையே இசுலாமிய மதத்துக்கு மாற வேண்டாமென பெரியாரே அறிவுரை கூறியுள்ளார்.

நான் தலித்தாக இருந்தால் இருக்கும் எல்லா சலுகைகளையும் பயன்படுத்துவேன். ஆலயம் செல்ல மறுப்பேன், அதை நான் புறக்கணிக்கவும் செய்வேன்.

நீ என்னடா ஜாட்டான் என்னை ஒதுக்குவது, நான் உங்க எல்லோரையும் ஒதுக்குகிறேன் என கோவில்களில் அடாவடி செய்பவர்களை ட்ரீட் செய்வேன். ஊர் வசூல் என்று கோவில் உறசவங்களுக்காக காலணா கூட என்னிடமிருந்து பெற இயலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அய்யா டொன்டு,
ஒப்புக்கு மாறாடிப்பது என்பது உங்களுடைய பதிவுகளில் தெரிகிறது. ஆக்கப்பூர்வமான நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய கருத்துக்களை எழுதுங்கள். நகரத்திலிருந்து கொண்டு கிராமத்திலிருக்கும் தலித்துக்களை பற்றி அவர்களது கஷ்டங்களும், துயரங்களும் எழுத உங்களால் முடியாது. நகரத்தில் சேரிக்களில் குடியிருக்கும் மக்களை இவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்.
/////முன்னேறிவிட்டவர்கள் நகரங்களில் பெரிய வீடுகளை கட்டிக்கொண்டு,நவீன பார்ப்பனர் போல், ஒரு பகுதியினர் செயல் படுவது மாறவேண்டும்.////
இது 100 சதவீதம் உண்மை.
மேலும் இது போன்ற ஜாதியம் தோய்ந்த கட்டுரைகளை எழுதுபவர்கள் கிறிஸ்த்தவ மிஷ்னறிகளின் கைக்கூலிகளோ என்று சந்தேக பட தோன்றுகிறது
பாலாஜி....

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது