மூன்றாம் பகுதி
இரண்டாம் பகுதி
முதல் பகுதி
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். சோ அவர்கள் பேச்சு கோர்வையின்றி போவது போன்ற தோற்றம் சில இடங்களில் வரலாம். அதற்கு முக்கியக் காரணமே பார்வையாளர்கள் தரப்பிலிருந்து அவ்வப்போது உரத்த குரலில் வரும் கேள்விக்கணைகளே. அவை பல நேரங்களில் பேச்சின் போக்கை மாற்றின. இருந்தாலும் சோ அதை செய்ததற்கு காரணம் அக்கேள்விகளின் முக்கியத்துவத்தைக் கருதியே. அவர் பேச்சு எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை என்பதையும் கூற வேண்டும் (extempore).
சோ அவர்கள் மன்மோகனின் அரசை தான் பாராட்டிய ஒரு விஷயத்துக்கு வந்தார். அதுதான் அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவுடன். அவரது பிடிவாதத்தால்தான் இது நிறைவேறவே செய்தது. அவரை இந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். ஒரு பிரதமராக நடந்து கொண்டார். மற்றப்படி ஒரு பியூன் போலவே அவர் செயல்பாடு இருந்தது.
இத்தருணத்தில் இதிலும், இலங்கை விஷயத்திலும் கருணாநிதி எடுத்த “தெளிவான” நிலைகளையும் அவர் பட்டியலிட்டார். இந்த ஒப்பந்தம் வரவேண்டும் - இடதுசாரிகளின் எதிர்ப்பு நியாயமானதே. ஏன் எதிர்க்கிறீர்கள் என கேட்டால், இல்லையே ஆதரித்தேனே என கூறலாம். ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் இல்லையே எதிர்த்தேனே என்று கூறிவிடலாம். அதே போல இலங்கை விஷயத்தில்: ஈழத்தமிழ்தான் தீர்வு - அங்குள்ள மக்களின் விருப்பமே முக்கியம் - மத்திய அரசின் நிலையே என் நிலை. (எஸ்.வி. சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நினைவுக்கு வருகிறது. அதில் சிகாமணி எம்.எல்.ஏ.வாக நாடகத்தினுள்ளேயே வேடம் கட்டுகிறார். ரிப்போர்டர் இலங்கை பற்றி கேட்க அவர் பதில் சொல்கிறார்: இலங்கை விஷயம் அன்னிய நாட்டின் சதி - ஏழை மக்கள் முன்னேற வேண்டும் - இந்த ஊர் எல்.கே.ஜி. வகுப்பில் படிக்கும் குழந்தைகள் ஒரு நாள் பள்ளிக்குன் செல்லாமல் புறக்கணிப்பார்கள். என்னங்க இது என ரிப்போர்டர் கேட்க சேகரின் பதில், “பின்னே என்னங்க, அங்கே என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது, ஏதோ இந்தமாதிரி சொல்லிக் கொண்டால்தான் பிழைக்கலாம்)
பிறகு சோனியா காந்தி பற்றி பேச ஆரம்பித்தார். அவருக்கு இந்தியா மேல் அவ்வளவு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை என்றார். அவர் இந்திய குடியுரிமையைப் பெறவே பல ஆண்டுகள் யோசித்துள்ளார். க்வாட்ரோக்கி பணம் வங்கியிலிருந்து எடுக்க உதவி செய்துள்ளார். அவரால் கருணாநிதி மற்றும் மன்மோகனுடன் மட்டுமே ஒத்து போக முடிந்தது. ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி முதலிய பெண்மணிகளுடன் அவருக்கு ஆகவில்லை. அவருக்கு பிடித்த ஒரே பெண்மணி அவரது கணவர் ராஜீவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான நளினி மட்டுமே (அரங்கில் சிரிப்பு). இவ்வாறான கூத்துக்கெல்லாம் இடம் தரும் மத்திய அரசு போக வேண்டியதே.
தமிழக அரசு? கலைஞர் அவர்களுக்கு குடும்ப பாசத்துக்கான அவார்ட் நிச்சயம் தரவேண்டும். குடும்பத்தின் எல்லா கிளைகளுக்கும் (பயங்கர சிரிப்பு) பங்கீடுகள், பட்டுவாடாக்கள். இருந்தும் அவர் குடும்பத்தினர் யாருக்கும் திருப்தியில்லை. தனக்கு கிடைத்ததைவிட இன்னொருவருக்கு கிடைத்ததை நினைத்து மனப்புழுக்கங்கள். இது மேலும் மேலும் தொடரும்.
இருப்பினும் இந்த குடும்ப ஒற்றுமை ஒரு சாதனையே. ஸ்பெக்ட்ரம் ஊழல் முடிந்தது. தினகரன் எரிப்பு மற்றும் கொலை விவகாரங்கள் ஒழிந்தன. பி.எஸ்.என்.எல். விவகாரம் பழைய கதை. டி.ஆர். பாலு எரிவாயு பிரச்சினை பற்றி பேசும்போது அரங்கத்தில் எழுந்த சிரிப்பால் அவர் சொன்னது காதில் விழவில்லை. நான் பக்கத்தில் இருந்தவரை கேட்ட போது அவரும் பேய்முழி முழித்தார். அரசு கேபிள் காலி. ஆக ஊழல் விஷயத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே வல்லிய கூட்டணி.
முன்பெல்லாம் லட்சமெல்லாம் பெரிய தொகை. இப்போது ஆயிரம் கோடி கூட சாதாரணமாக உச்சரிக்கப்படுகிறது. நமக்குத்தான் ரோஷம் வேண்டும். எலெக்ஷனில் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும். ஆனால் அன்றைக்கென்றுதான் கிரிக்கெட் மேட்ச் டிவியில் வரும், அதை பார்க்க உட்கார்ந்து விடுவார்கள்.
இலங்கை பிரச்சினை தமிழகத்தை பொருத்தவரை இன்னொரு தமாஷ். ராஜினாமா என ஒரு பெரிய நாடகம் ஆடப்பட்டது. அதுவும் கருணாநிதி யார் ராஜினாமாக்களை பெற்று கொள்ள? சபாநாயகருக்கல்லவா அவற்றை அனுப்ப வேண்டும்? கனிமொழி அம்மையார் செய்தது சுத்தம். அப்பாவிடம் ராஜினாமா கொடுத்து விட்டார். கனிமொழி ராஜினாமா என கொட்டை எழுத்துக்களில் பத்திரிகைகளில் தலைப்பு செய்தி? யாரிடம் கொடுத்தார்? அப்பாவிடம். கூடவே மனித சங்கிலி தமாஷ். எல்லோரும் நடுரோட்டில் நின்று கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து கொள்வார்களாம். சார், அப்படி கையை பிடிக்காவிட்டால் பாக்கெட்டில் கை போட்டு விடுவார்களே (சிரிப்பு, கைதட்டல்).
பிரணாப் முகர்ஜி இலங்கை போவாரா? போனால் மட்டும் என்ன செய்யப் போகிறார்? சிலோன் டீ நன்றாக இருந்தது எனச் சொல்லுவார். மன்மோகன் சிங் கூறுகிறார், அவருக்கு இங்கு அதிக வேலை என்று. என்ன வேலை? எச்சரிக்கை விடுவதுதானே, அதை கொழும்புவிலிருந்தும் செய்யலாமே. எல்லாமே நாடகம். கருணாநிதி லெட்டர் எழுதுவார், மன்மோகன் கவனிப்பதாக சொல்லுவார். காரியம் ஆயிற்று. இல்லாவிட்டால் கருணாநிதி உயிரையே தருவேன் என்பார்? எத்தனை முறை தருவார்? அதற்கு பதிலாக கையைத் தருகிறேன், காலைத் தருகிறேன் என்று சொன்னாலாவது ஏதோ சீரியசாக இருப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம்.
“கூவம்”? என்று ஒரு குரல் பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வர அதுதான் எழுபதிலேயே மணந்து விட்டதே என்றார். ஒக்கேனக்கல்? சினிமா நடிகர்களை நன்கு பழி வாங்கினார். முதலில் கர்நாடகா தேர்தலுக்காக அதை தள்ளி வைக்கிறேன் என்றார். இப்போது தேர்தல் முடிந்து ஆறுமாதம் ஆகிவிட்டதே.
இன்னொரு கூத்து உண்ணாவிரதம். காலையிலேயே மூக்கு பிடிக்க சாப்பிட வேண்டியது. அது ஜீரணம் ஆகவே மாலைவரை ஆகிவிடுமே. நடுவில் நினைத்தாலும் சாப்பிட முடியாதே. இவர்கள் என்ன அகத்திய முனிவரா, “வாதாபி ஜீரணோபவ” என்று கூறுவதற்கு?
சட்டக் கல்லூரி விஷயம், போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. இப்போது கூட அதற்கான வீடியோக்களில் போலீசார் பத்தடி தூரத்திலேயே இருக்கின்றனர், செல்பேசியில் பேசிக் கொண்டு? யாரிடம் இருந்து ஆணைகள் பெற்றனர்? திருமங்கலம் தொகுதியில் தங்கள்மீது தாக்குதல் நடந்ததற்கு கம்ப்ளைண்ட் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் (ஆடியன்ஸில் சிரிப்பு) கைது செய்யப்படுகிறார். எங்கோ கோர்ட்டில் நின்று வாதாடி கொண்டிருந்த பாண்டியன் குண்டுவீச்சு செய்ததாக கூறுகிறார்கள். காடுவெட்டி குருவை முதலில் கைது செய்தார்கள். பிறகு அவரை கைது செய்தது சரியான நடவடிக்கையே என கோர்ட் கூறிய பிறகு பாமகவுடன் சுமுகமாக போய்விட்டதாக எண்ணி அவர் விடுதலை செய்யப்படுகிறார். இப்போது பாமக பிடி கொடுக்காத நிலையில் குருவை விட்டது குறித்து கையை பிசைகிறார்கள்.
மின்சார வெட்டு விவகாரம். அதிமுக அரசு காலத்தில் போடப்பட்ட அத்தனை திட்டங்களும் நாசம் செய்யப்பட்டன. ஆற்காட்டாரின் சால்ஜாப்புகள். மழையில்லை, காற்றில்லை, மத்திய மின்தொகுப்பிலிருந்து மின்சாரம் வரவில்லை.
முதல்வர் தலைமையில் ரெவ்யூ மீட்டிங்குகள் நடக்கும்போது ஜெயலலிதா காலத்தில் அது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனம். முதல்வர் எல்லா விஷயங்களையும் நன்கு படித்து அதிகாரிகளை கேள்விகளால் வாட்டி விடுவார். கலைஞர் விஷயத்தில்? அவர் கேட்பார் “உளியின் ஓசை” பார்த்தீர்களா? அதிகாரி சொல்வார் “அது ஒரு காவியம் ஐயா” (சத்தியமாக அவர் அதை பார்த்திருக்க மாட்டார்). “எனது லேட்டஸ்ட் கவிதை எப்படி”? “அற்புதம் சார்”. “இன்றைய பேப்பர் படி, இன்னும் அருமையான கவிதை எழுதியுள்ளேன்” ரிவ்யூ மீட்டிங் ஓவர்.
கலைஞரும் வீரமணியும் ஒருவரை ஒருவர் பாராட்டுவது ரொம்பவே ஓவர். அதுவும் முதல்வருக்கு பாராட்டுகளை கேட்பதில் அலுப்பே ஏற்படவில்லையே. ஏதோ வயதானவர் தன்னை பாராட்டும் வார்த்தைகளை கேட்க விருப்பபடுகிறார் என விட்டாலும் அதை முதல் மந்திரியாக இருந்து கொண்டு செய்வதா? முதல்வராக இருக்கவே தகுதியற்றவர்.
காவேரி விஷயம்? மறந்தே போச்சு. நானே அதை பற்றி பேசுவதில்லை. ஒக்கனேக்கல் தண்ணீர் விஷயம் தகராறு. தண்ணியில் தகராறு என்பதால் ராமதாசுடன் தகராறு. அவர் மதுவிலக்கு வேண்டுமென்றால் டாஸ்மாக் கடைகளை இரவு பத்து மணிக்கே மூடுவேன் என்ற கண்துடைப்பு. ஏன், பத்துமணிக்குள் ஒருவன் அன்று இரவுக்கு தேவைப்படும் அளவுக்கு பாட்டில்களை வாங்கி எடுத்து போக இயலாதா?
பாபர் மசூதிக்கு பிறகுதான் பாஜக விரும்பத்தகாத கட்சி என்பதை உணர்ந்தேன் என்று சொல்லும் கருணாநிதி அந்த இடிப்புக்கு பிறகுதான் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஐந்து ஆண்டுகள் மந்திரி சபையில் இருந்து மாறனுக்கு அரசு செலவில் மருத்துவம் எல்லாம் பார்த்திருக்கிறார். இப்போது பசப்புகிறார். முந்தைய கூட்டணிக்கு முன்னாலேயும் பாஜகவினர் பண்டாரங்கள், பரதேசிகள் என்றெல்லாம் கூறியுள்ளார். காந்தியை கொன்ற கட்சி என்கிறார். கோட்சே ஆர்.எஸ்.எஸ். தேவைக்கதிகமாக மென்மையாக இருக்கிறது என அதிலிருந்து விலகி பத்தாண்டு கழித்துத்தான் மகாத்மா காந்தியை கொன்றது நடந்தது. ஆக, கருணாநிதி வாயைத் திறந்தாலே குழப்பம்தான்.
பாவம் தமிழக காங்கிரஸ். ஆட்சியில் பங்கு கேட்பார்கள். கிடைக்காது. அன்னை சோனியாவிடம் கேட்போம் என்பார்கள். அடுத்த நாள் அன்னை சோனியா சொல்வதை கேட்போம் என்பார்கள்.
விஜயகாந்த்? தெளிவின்மைக்கு கலைஞருடன் போட்டி. கூட்டணி வைக்க மாட்டேன். தமிழ் மக்களின் நலனுக்கு ஆதரவாக இருப்போம் என எழுதித் தரும் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி. மின்வெட்டை ஆறுமாதங்களில் தீர்ப்பேன். ஆனால் எப்படி என சொல்ல மாட்டேன். ஏனெனில் அதை வைத்து மின்வெட்டு பிரச்சினையை தீர்த்து விடுவார்கள். குடும்ப ஆட்சியை எதிர்ப்பார். ஆனால் அவரது எல்லா கட்சி விவகாரங்களிலும் அவர் மனைவி என்னவோ அவருடனேயே இருப்பார். அவர் செய்வதெல்லாம் திமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை பிரிப்பதுதான் ஆகவே அவரை ஒரு மாற்றாக நினைப்பவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள். அவர் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள்.
மத்தியில் பிஜேபிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அது அரசு அமைத்தால் தீவிரவாதத்தை இரும்பு கரத்துடன் அணுகுவார்கள். லஞ்ச ஊழல் விவகாரங்கள் குறையும். கூட்டணி கட்சிகளால் கேவலப்படுவது குறையும். (இந்த இடத்தில் ஜெயலலிதா பாஜகவை நடத்தியது பற்றி அவர் மழுப்பியது எனக்கு ஏற்புடையதல்ல). பொருளாதார தாரளமயமாக்கம் ராஜீவ் நரசிம்மராவால் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு அதிக ஊக்கம் தந்தது பாஜக.
தமிழகத்தில்: பல சமயங்களில் அதிமுகவை நானே எதிர்த்திருக்கிறேன். ஜயலலிதா தன் கட்சியில் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று கூறும் பிறகட்சித் தலைவர்கள் தங்களாலும் அப்படி நடந்து கொல்ள முடியவில்லையே என்று மனதுக்குள் பொருமுகின்றனர். அவர் ஆட்சி காலத்தில் போலீஸ் திறமையுடன் செயல்பட்டது. வீரப்பன் ஒடுக்கப்பட்டான். கலைஞரோ தமிழ்தீவிரவாதம் ஏற்புடையதே என கூறி சொதப்பினார். சட்டக் கல்லூரி விவகாரம் அவர் ஆட்சியில் நடந்திராது. மந்திரிகள் மேல் அவரது ஆளுமை முழுமையாக இருந்தது. வணிகர்கள் வணிக வரிகளை ஒழுங்காக கட்டினர். எல்.டி.டி.இ. அடக்கி வாசிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டது. தேசீய ஒருமைப்பாட்டு குழுவில் அவர் பலமுறை தேசீய பார்வையுடன் பேசியுள்ளார். திமுகவிடம் அந்த பார்வை இல்லை. தொழில் முன்னேற்றத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். மழைநீர் சேமிப்பு திட்டம் அவரது வெற்றிகளில் ஒன்று. மாநில அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் விஷயத்தில் முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் ஊழியர்களை யோசிக்க வைத்தன. அவற்றை பின்னால் விலக்கி கொண்டதுதான் துரதிர்ஷ்டவசமானது. மோடியை தவிர்த்து வேறு எந்த முதல் மந்திரியும் அவர் அளவுக்கு தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு கையாளவில்லை.
தைரியமாக தன்னை ஆத்திகர் என காட்டிக் கொண்டார். இந்த விஷயத்தில் கருணாநிதி செய்வதுபோல நடிப்பு எல்லாம் இல்லை. மற்ற மந்திரிகளும் கோவில்கள் எல்லாம் போவார்கள். ஆனால் அதை திருட்டுத்தனமாக செய்வார்கள். இப்போது தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. அவர் முதன் மந்திரியாக இப்போது தேவைப்படுகிறார். அவருடன் நான் பல விஷயங்களில் மாற்று கருத்து கொண்டுள்ளேன். அணுசக்தி ஒப்பந்தம், காஸா விவகாரம் போன்ற உதாரணங்களை இங்கு தரலாம்.
கூட்டத்தின் தரப்பிலிருந்து வைக்கோ? என்ற குரல் வர, சோ கூறினார். வைக்கோவை பக்கத்தில் வைத்து கொண்டே அவர் புலிகள் விரோத நிலையை எடுக்கிறார். அவர் தெளிவாகத்தான் உள்ளார். நீங்கள் கேள்வி கேட்க வேண்டுமானால் வைக்கோவை கேளுங்கள் என்றார்.
சத்யம் விவகாரத்தில் வெளியில் தெரிவது பனிப்பாறையின் மேல்முனை என்றார். ராமலிங்க ராஜு எந்த பெரிய குற்றத்தை மறைக்க இந்த குற்றச்சாட்டை ஏற்று கொண்டார் என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்றார். இன்னும் எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், நஷ்ட அளவுகள் என்ன என்பதெல்லாம் அவதானித்து பார்க்க வேண்டும் என்றார்.
வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டினார். இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் திமுக குடும்பம் தமிழகத்தையே அழித்துவிடும் என எச்சரித்தார்.
அரங்கம் தந்து உதவியதற்கு அரங்க நிர்வாகிகளுக்கு நன்றி, திறமையாக பாதுகாப்பு ஏற்பாட்டை செய்த போலீசாருக்கு நன்றி, திரளாக வந்த வாசகர்களுக்கு நன்றி. “என்னால் முடிந்தது கருத்துக்களை நாணயமான முறையில் தெரிவிப்பதே (honest expression of opinion). அதனாலேயே எனக்கு மரியாதை தரப்படுகிறது. அதற்கு பங்கம் வருமாறு நடக்க மாட்டேன்.
தேசீய கீதத்துடன் விழா முடிந்தது.
சில கொசுறு தகவல்கள் டோண்டு ராகவன் பார்வை கோணத்திலிருந்து. மீட்டிங்கிற்கு சில நாட்கள் முன்னால் ராம்குமார் என்பவர் என்னை செல்பேசியில் தொடர்பு கொண்டு மீட்டிங்கிற்கு சீஃப் கெஸ்ட் யாரென்று கேட்டார். அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை என கூறிவிட்டேன். அவரும் மீட்டிங்கிற்கு வந்திருக்கிறார். அரங்கின் வெளியில்தான் இடம் கிடைத்தது. நடுவில் ஆடியோ பிரச்சினை வர பேச்சுக்களை கேட்க இயலவில்லை. அவர் தான் பாதியிலேயே சென்று விட்டதாய் பின்னால் எனக்கு போன் செய்து சொன்னார். நல்ல வேளையாக நேற்று நான் வந்த நேரம் அரங்கம் இன்னும் நிரம்பவில்லை. இனிமேலும் இம்மாதிரி நடக்காமல் இருக்க சோ அவர்கள் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வெளியில் ஒரு டெக்னீஷியன் செல்பேசியுடன் தயாராக இருக்க வேண்டும். இணைப்பு ஒயர்கள் மக்கள் காலில் இடறி அறுபடாமல் இருக்க அவற்றை சுவற்றின் வழியாக உயரே வைக்க வேண்டும். போன ஆண்டு போலவே இந்த ஆண்டும் நான் செல்பேசி எடுத்து செல்லவில்லை. போலீசார் அதை அனுமதிக்காவிட்டால் எங்கு வைப்பது என்ற தயக்கமே. அப்படியே எடுத்து வருபவர்களும் அவற்றை வைப்ரேஷன் மோடில் வைப்பது நலம்.
இட்லி வடையாரின் ஆடியோ சுட்டி இங்கே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
13 hours ago
42 comments:
Thanks Dondu Sir for your posts on Thuglak anniversary meet - almost got the feel of having attended the function personally.
\\வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டினார். இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் திமுக குடும்பம் தமிழகத்தையே அழித்துவிடும் என எச்சரித்தார்\\
well said
Dear Dondu Sir,
You have done a great service by connecting CHO to us. Your review is quite professional and I appreciate your efforts. CHO's great strength is that he is a great pragmatist and he normally chooses best possible persons , alternatives among the available one.
Hope the politicians do read about this and take some action.
Season's Greetings and Happy Pongal
Murali Natarajan,
Singapore.
சோவின் அரசியல்பார்வை சரியாகத் தான் இருக்கிறது,ஆனால் மக்கள் இதை கண்டு கொள்ளப்போவதில்லை என தெரியாமல் பாவம் நாவரள கத்தி கொண்டிருக்கிறார்.
வரள என்ன ள வரும்?
ழ, ல ஒண்ணும் புரியல
கொஞ்சம் சொல்லி கொடுங்க!
மிகவும் அருமையாக நாங்கள் அங்கு வந்து கேட்டது போலவே தெளிவாக எழுதியதற்கு மிகவும் நன்றி !
தமிழக அரசு தை முதல் நாளை தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் இனி வரும் ஆண்டு முதல் அந்த நாளை அமெரிக்கா,இங்கிலாந்து தேசங்களில் நடைபெறும் விடுதலை விழாபோல் கொண்டாடப் படும் என்று அறுதியிட்டு உறுதியாய் தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறாரே.
இது பற்றி சோவிடம் யாரும் கருத்து கேட்க வில்லையா?
இந்த ஆண்டே பெரிய கோவில்களில் எல்லாம் அரசின் உத்தரவுப்படி இந்து அறநிலயத் துறை சார்பில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபுஷேகங்கள் பூஜைகள் செய்யப் பட்டன.
அரசு அலுவலங்கள் ஒளி விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டன.
தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர் திருத்தம்(லை,றா)அனைவராலும் ஏற்றுக்கொண்டதை போல் ஆன்மிக அன்பர்கள்,சோதிடத்தை நம்பும் மனிதர்கள் இந்த தமிழ் ஆண்டு மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்களா?
உங்களின் கருத்து என்ன?
@அனானி
கொம்பு வைத்த லை, னை, ணை முதலிய எழுத்துக்கள் குடியரசு பத்திரிகை அச்சகத்தில் தேய்ந்து போயின. அவற்றை புதிதாக வாங்க பெரியாரின் சிக்கனமனது இடம் கொடுக்காகதால் சீர்திருத்த எழுத்துகளுக்கு அவர் சிலரை கேட்டு வைத்தார். அவரே செய்தாரே நாமும் செய்ய வேண்டியதுதான் என சிறிதும் பகுத்தறிவில்லாத திராவிட அரசியல்வாதிகள் அதை செய்து, பிறகு அரசு அமைத்தவுடன் அதை கட்டாயமாக்கினார்கள். அதுதான் சீர்திருத்த எழுத்துக்களின் வரலாறு.
பார்க்கலாம் தமிழ் புத்தாண்டு அடுத்து வரும் அரசுகள் கையில் என்ன பாடுபடப் போகிறது என்று.
தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. அதையெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என அம்மாதிரி காரியங்கள் செய்ய ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கிறதாலேயே செய்வதைப் பார்த்தால் பழைய வாக்கியம் நினைவுக்கு வருகிறது, “பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்”
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வரள என்ன ள வரும்?//
ள சரிதான், ஆனால் வறள என்று வரும். உங்களுக்கு ர ற வும் தகராறு போலிருக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ள சரிதான், ஆனால் வறள என்று வரும். உங்களுக்கு ர ற வும் தகராறு போலிருக்கு.//
தகராறே முதலில் தகராறகத் தான் இருந்தது, அப்போதெல்லாம் சின்ன தகராறுக்கு சின்ன ர-வும் பெரிய தகராறுக்கு பெரிய ற-வும் போட்டுகொண்டிருந்தேன்.
உச்சரிப்பின் அழுத்தத்தை சரியாக சொலி கொடுக்காமல் விட்டதே இந்த தவறுக்கு காரணமாக நினைக்கிறேன்.
தமிழ் எழுதுவதில் எனக்கு தகராறு உண்டு என்பதை ஒத்து கொள்கிறேன்.
//தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. அதையெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என அம்மாதிரி காரியங்கள் செய்ய ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கிறதாலேயே செய்வதைப் பார்த்தால் பழைய வாக்கியம் நினைவுக்கு வருகிறது, “பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்”//
மிகவும் சரியான வரிகள்.
எனக்கென்னமோ கடவுள் குழம்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது.
\\தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. அதையெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என அம்மாதிரி காரியங்கள் செய்ய ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கிறதாலேயே செய்வதைப் பார்த்தால் பழைய வாக்கியம் நினைவுக்கு வருகிறது, “பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்”
அன்புடன்,
டோண்டு ராகவன்\\
யார் என்ன சொன்னாலும் ,எழுதினாலும்,பேசினாலும்,யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும்
தமிழகத்தில் அடுத்து அமையப்போவது
கலைஞர் அவர்கள் தலைமையில் முரட்டு பெரும்பான்மையுடன்( 1971 ல் தி.மு. கழகம் பெற்ற பெரும்பான்மை)கழக ஆட்சிதான்.
பொதுவாய்ப் பார்க்கும் போது கழகத்திற்கு எதிரிகளே இல்லை போலிருக்கிறது.
அதிமுக கூடாரம் கல கலத்துபோயுள்ளது.
கம்யூனிஸ்டுகளின் ஒட்டு பலம் மிகக் குறைவாய் உள்ளது.
பா.ம.க மீண்டும் கலைஞர் கூட்டணியில், விரைவில்
விஜயகாந்தும்,சரத்தும் பிரிப்பது அதிமுக வாக்குகளைத்தான்.
அழகிரியின் அசாத்திய கருணாநிதித்தந்திரங்கள்
சன் டீவி+ கலைஞர் டீவி 10 சானல்களின் இடிப் பிரச்சாரம்.
மாநில அரசு ஊழியர்களில் 99.99 % திமுக அனுதாபிகள்( ஜெயலலிதாதான் அவர்களுக்கு சிம்ம சொப்பனம் ஆச்சே)
பத்திரிக்கை பலம் கூடுகிறது.
200 சீட்களுக்கு மேல் பெற்று வரும் ஆட்சியின் சட்டத்தின் முன்னால்
அப்பாவியும்,எதையும் சகித்துக் கொள்ளும் இந்துக்களால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறிர்கள்?
இந்து திருடன்,திமிதித்தல் காட்டு மிராண்டித்தனம்,ராமன் ராம நிந்தனை என நாளும் சொல்லும் நாத்திகர்கள்தானே இன்றும் இந்துக் கோவில்களில் அறங்காவலராய்
செயல்படுவதைக் கூட எதிர்க்க துணிவில்லாத, ஒற்றுமையற்று பல ஜாதிகளாய் பிரிந்து இருக்கும் இந்துக்கள்,அரசின் இந்த தமிழ் புத்தாண்டு( 500 தமிழறஞர்களின் முடிவு-தை முதல் நாள் ) அறிவிப்பை முதலில் எதிர்த்தாலும் பின்னால் ........
நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு . சோ அவர்களது பேச்சின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது
குருமூர்த்தி பேச்சு காணோம், பேச வில்லையா டோண்டு சார்.
ஆடியோ அல்லது பிரிண்ட் லிங்க் போடவும், குருமூர்த்தி பேச்சை,
துக்ளக் வாங்கி படிக்கும் எண்ணம் இல்லை.
குப்பன்_யாஹூ
Don't miss Cho's speech on Annual Day to be telecast in Jaya TV: Saturday, 17th Jan at 11AM
@குப்பன் யாஹூ
இம்மாதிரி ஆண்டுவிழா கூட்டங்களில் சாதாரணமாக சோ மட்டும்தான் பேசுவார். சிறப்பு விருந்தினர் என யாரையாவது கூட்டி வரும் சமயம்தான் விருந்தினரும் பேசுவார். உதாரணம் மோடி, அத்வானி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வால் சார்,
இப்படி கைப்புள்ள மாதிரி ஆயிடுச்சே !! நான் வாங்காத அடியா ! இதுவரைக்கும் ஒடுனதில்ல ஒரு தடவை கூட அழுததில்லை என்கிற மாதிரி எனக்கு "ர" "ற" ள","ல" எல்லாமே தகராறுன்னு ஒரு லிஸ்டே தருகிறீர்களே! நான் விளையாட்டா உங்க "ல" வை லந்து பண்ணப் போக, இப்படி ஒவ்வொரு லைனையும் பயந்து பயந்து எழுத ஆரம்பிச்சுட்டீங்களே! வாலைக் கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் ஒரேடியா ஒட விடக் கூடாது என்று தான் நான் இரண்டு நாளா பின்னூட்டமே இடவில்லை.மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது என்பார்கள்,குரங்க நினத்துக் கொண்டு கசப்பை மறந்து விடுவார்களாம். எழுத்துப் பிழைய நினத்துக் கொண்டே இருப்பதால் உங்கள் புரட்சிகரமான கருத்துக்களை இப்போதெல்லாம் நீங்கள் தருவதே இல்லை.நான் உங்கள் பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு ரசிகன். என்னுடைய பழைய நன்பர்கள் ஆர்.என்.ஆர் மற்றும் கந்தசாமி ஆகியோரின் பொது நன்பர் ஜக்கு அவர்களின் கருத்துக்களைப் போலவே இருப்பதால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
வாலில்லாத தம்பி.
டோண்டு சார்!
முதல் திருத்தம் - சோ பேசும்போது கையில் ஒரு
காகிதத்தைப் பார்த்துத் தான் தன் பேச்சைக் கொண்டு
சென்றார்! (உபயம் ஜயா டி.வி.இன்று காலை ஒளி
பரப்பு) - சோ தோற்றத்தில் முன்பு மாதிரியே இருந்தாலும்
பேசுவதற்குச்சற்று சிரமப்பட்டார் என்றே தெரிகிறது.
அவரது கனைப்பும், இருமலும் வெளிப்படையாகவே
தெரிந்தன!. ஒளிபரப்பு பெரிய அப்ரிட்ஜ்ட் வெர்ஷன்!
தன் குழுவை அறிமுகப் படுத்தியது நன்றாகவே
இருந்தது!.
//அவர் பேச்சு எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை என்பதையும் கூற வேண்டும் (extempore).//
இது நான் எழுதியது.
//சோ பேசும்போது கையில் ஒரு
காகிதத்தைப் பார்த்துத் தான் தன் பேச்சைக் கொண்டு சென்றார்! (உபயம் ஜயா டி.வி.இன்று காலை ஒளி
பரப்பு)//
நானும் பார்த்தேன்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால் எதைப் பற்றி பேசுவது என்பதற்கு ஒரு சுமார் ஐடியாவை வைத்திருப்பதற்காக அக்காகிதங்களை வைத்திருக்கலாம். வாசகர்கள் கேட்ட கேள்விகளின் தொகுப்பாகக் கூட இருக்கலாம். அதே சமயம் ஆடியன்ஸிலிருந்து கேட்பவர்கள் கேள்விகளையும் சமாளிக்க வேண்டும்.
மற்றப்படி முழுக்க முழுக்க பேப்பரை பார்த்து படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாலில்லா அண்ணே!
உங்கள் பாராட்டுக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை.
பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு புது மூட நம்பிக்கையை உருவாக்குவதும் முட்டாள்தனம் என்று நினைப்பதே என் பங்கு.
பகுத்தறிவு என்பது யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பதே அடிப்படை.அதை விட்டு அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்பது பகுத்தறிவின் உச்சக்கட்ட முட்டாள்தனம்
தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. அதையெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என அம்மாதிரி காரியங்கள் செய்ய ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கிறதாலேயே செய்வதைப் பார்த்தால் பழைய வாக்கியம் நினைவுக்கு வருகிறது, “பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்”
---------------------------------
Ondre Sonneer, Nandre Sonneer, Adhaiyum Indre Sonnneer.
//நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு . சோ அவர்களது பேச்சின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது//
எங்கள் ஊரில் இன்று காலையில் இருந்து ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரண்டு சந்நேல்களை கருணாநிதியின் அடிவருடிகள் தடை செய்து விட்டனர்.
(ஜனவரி செவேன்டீத் ௨009 )
ஆர்.என்.ஆர்., கந்தசாமி மற்றும் ஜக்குவை பற்றி டோண்டு சாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங் பர்சனாலிட்டி.
வால், உங்க பின்னூட்டம் நல்லா இருந்துச்சு
வாலில்லாத தம்பி
“வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டினார். இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் திமுக குடும்பம் தமிழகத்தையே அழித்துவிடும் என எச்சரித்தார்.”
“(இந்த இடத்தில் ஜெயலலிதா பாஜகவை நடத்தியது பற்றி அவர் மழுப்பியது எனக்கு ஏற்புடையதல்ல).”
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது.
புள்ளிராஜா
\\பாஸ்கர் said...
//நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு . சோ அவர்களது பேச்சின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது//
எங்கள் ஊரில் இன்று காலையில் இருந்து ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரண்டு சந்நேல்களை கருணாநிதியின் அடிவருடிகள் தடை செய்து விட்டனர்.
(ஜனவரி செவேன்டீத் ௨009 )\\
the complete speech will be available in youtube.com shortly.
for example the last year Speech by CHO Ramasamy(Tuglak anniversary )Part1& part 4
is avilable here.
http://in.youtube.com/watch?v=IJFIUOsVsoY
http://in.youtube.com/watch?v=eCgGxF1Pwgg
தமிழகத்திலும் சில பத்திரிக்கையாளர்கள் இன்னும் அறிவுடன் இருக்கிறார்கள் என்பதற்கு சோ ஒரு எடுத்துக்காட்டு என்றும் மீண்டும் நிரூபித்துள்ளார்.
கவரேஜ்க்கு நன்றி.
Cho is the only sanity left in today's Media.
//பகுத்தறிவு என்பது யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பதே அடிப்படை.அதை விட்டு அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்பது பகுத்தறிவின் உச்சக்கட்ட முட்டாள்தனம்//
//பாஸ்கர் said...
//நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு . சோ அவர்களது பேச்சின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது//
எங்கள் ஊரில் இன்று காலையில் இருந்து ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரண்டு சந்நேல்களை கருணாநிதியின் அடிவருடிகள் தடை செய்து விட்டனர்.
(ஜனவரி செவேன்டீத் ௨009 )//
in jeya tv and jeya plus the recordings of the speech of cho supporting jeyalaitha and admk rule is being telecasted repeatedly.
//தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. //
True.
It means that others, Muslims, Christians, non-Tamils resident in TN or accepted TN as their homes, should not celebrate this festival.
This New Year is for Hindus only.
The above begs the big question: WHAT SHOULD BE THAT FESTIVAL WHICH CAN BE CALLED A COMMON FESTIVAL FOR TAMILIANS?
It entails a further small question:
IF, INDEED, THERE IS NO SUCH FESTIVAL THAT CAN BE COMMONLY CELEBRATATE BY ALL TAMILS, IRRESPETCIVE OF DIFFERENCES AMONG THEM, IS NOT TIME THAT WE FOUND OUT OR CREATED SUCH A FESTIVAL?
We must find ways to unite people; and if that is done, via a celebration of a festival by one and all, that will bring a feeling of oneness among us as Tamils.
I understand other cultures have it. We lack it.
What do you think Shri Dondu Raghavan?
துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் பற்றி இத்தனை விரிவாக, வாசிக்க சுவாரசியமாக எழுத வேண்டியதற்காக நீங்கள் செலவிட்ட உழைப்பிற்கும், நேரத்திற்கும் நன்றிகள் பல.
எ.அ.பாலா
Dear Raghavan Sir,
Pranams! As I have told over phone on saturday, I have scanned and posted the details of Mr.Cho's contribution as a Rajya Sabha M.P. Can you please give this link in your blog.
http://pudhirthamizhan.blogspot.com/2009/01/so-great-mp.html
Thank you very much.
Regards,
நவீன பாரதி.
மிக்க நன்றி நவீன பாரதி அவர்களே.
பார்க்க: http://dondu.blogspot.com/2009/01/blog-post_5918.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்றும் அதனால் அதிமுகவுக்கே வாக்களிக்கும் படியும் சோ கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. புலி ஆதரவாளர்களும் பகுத்தறிவாளர்களும் பாஜகவுக்கு மாபெரும் வெற்றியை வரும் தேர்தலில் கொடுக்க முடிவெடுத்துள்ளார்கள் அவர்கள் கணிப்பு படி 87%வாக்குகள் பாஜகட்சி பெறும்.
//வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்றும் அதனால் அதிமுகவுக்கே வாக்களிக்கும் படியும் சோ கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. புலி ஆதரவாளர்களும் பகுத்தறிவாளர்களும் பாஜகவுக்கு மாபெரும் வெற்றியை வரும் தேர்தலில் கொடுக்க முடிவெடுத்துள்ளார்கள் அவர்கள் கணிப்பு படி 87%வாக்குகள் பாஜகட்சி பெறும்.//
அப்படி நடக்காது
நடந்தால் சோ பாஜகவை கடுமையாய் விமர்சிப்பார். இது உறுதி.
துகளக் தலையங்கம் இப்படி வரும்
விநாசகாலே விபரீதபுத்தி
தமிழ் நாட்டில் பாஜவுக்கு பிராமணர்களில் 87 % ஆதரவு முதலில் கிடைக்கட்டும். பார்க்கலாம்.
அடியேன்னு ஆசைய ஆசையாய் சொல்றதுக்கு ஆம்பிடையாளை காணோமாம்
பிடி பிடின்னு பிள்ளையாண்டன் எனும் பேராசையா?
BJP இல.கணேசன் பேட்டி
கேள்வி : நான்கு மாதத்தில் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால்,இலங்கை தமிழர் பிரச்சினையை எவ்விதம் அணுகுவீர்கள்?
பதில் : பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் என்பதை நிச்சயமாக சொல்கின்றேன். ஆனால், எப்படி என்று இப்போது கூறமுடியாது. ஈழத் தமிழருக்கு சம உரிமை என்பது அவர்களது பிறப்புரிமை. ஆகக் கூடியது ஆறுமாத காலத்துக்குள் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இங்கு வந்த அகதிகள் தந்திரமாக, கௌரவமாக தாயகம் திரும்பி முகமாக வாழச்செய்வோம். நாங்கள் உங்களுடன் இருக்கின்??ம். பண்பாட்டு ரீதியில் ஒன்று பட்டுள்ளோம். தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடுங்கள். ஆண்டவனும் உதவுவார். தேசிய சிந்தனையில் ஒன்றுபட்டவர்கள், உணர்வுள்ளவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஈழத் தமிழருக்கு நல்ல முடிவு, விடிவு நிச்சயம் ஏற்படும்.
இது எப்படி இருக்கு?
//இந்த இடத்தில் ஜெயலலிதா பாஜகவை நடத்தியது பற்றி அவர் மழுப்பியது எனக்கு ஏற்புடையதல்ல//
//திறமையாக பாதுகாப்பு ஏற்பாட்டை செய்த போலீசாருக்கு நன்றி//
சமயத்துக்கு ஏற்றார் போல மழுப்புவது தானே சோ.. வெற்றிகரமாக செய்கிறார்...
நன்றாக கவரேஜ் செய்துள்ளீர்கள்.
விழாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் 40ஐக் கடந்தவர்கள். பெண்கள் வெகு வெகு சிலரே.
இவர்கள் யார்? இவர்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களிப்பரா?
இந்தக் கூட்ட வாக்கு போதும் என்று ஜெயலலிதா இருந்துவிடுவாரா?
அன்றி, இக்கூட்டம் படித்த கூட்டம். பொதுவாக இக்கூட்டம் வாக்குச்சாவடிக்கு வராது.
இது சோவின் அரசியல் நையாண்டியை இரசித்துவிட்டு போகும். சாலமன் பாப்பையா பட்டிமண்டபத்துக்கு வந்து சிரித்து மகிழ்ந்து விட்டுப் போகும் கூட்டத்தைப்போல.
ஒரு நாள் கூத்து!
\\இந்தக் கூட்ட வாக்கு போதும் என்று ஜெயலலிதா இருந்துவிடுவாரா?\\
தமிழ் நாட்டை பொருத்தவரை வலிமையான
கூட்டணிதான் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும்.
திருமங்கலத்தில் நடத்திய கூத்து( இரண்டு கழகங்களும்)
234 தொகுதியிலும் பண்ண முடியுமா?
கேப்டன் விஜய்காந்த் சேரும் கூட்டணி வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனி.
காங்கிரஸ்+திமுக+விஜயகாந்த்( 15+15+10) என்ற தகவல் உண்மையென்றால்
சோ சொல்லுவது போல், இனி யாராலும் தமிழகத்தின் அரசியலை
//கூடவே மனித சங்கிலி தமாஷ். எல்லோரும் நடுரோட்டில் நின்று கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து கொள்வார்களாம். சார், அப்படி கையை பிடிக்காவிட்டால் பாக்கெட்டில் கை போட்டு விடுவார்களே (சிரிப்பு, கைதட்டல்).//
ஜனநாயக முறையில் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் சாதாரணப் பொதுமக்களை இப்படிக் கேவலமாக சித்தரிக்க சோ போன்ற பார்ப்பனிய சாதி வெறி பிடித்த நாயால் தான் முடியும்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
கருணாநிதி - மனித சங்கிலி, ராஜினாமா நாடகம்.
திருமா (குருமா) - உண்ணா விரத நாடகம். (ஹீரோ)
டாக்டர் ராமதாஸ் - அறிவிக்கை மன்னன்.
வை கோ: ! காணவில்லை ! ஐயோ பாவம்
இதெல்லாம் இலங்கை தமிழருகாகவா!! கண்டிப்பாக இல்லை !!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தான் !!.
Dondu can you please remove sudalai madan's radical comment.
Thanks
Post a Comment