நம் கதாநாயகனை முதலில் ஒரு கிராமத்தில் பார்க்கிறோம். மிலிட்டரியில் சேரு சேரு என அவன் மாமா கமல்காந்த் நச்சரிப்பதால் அவனுக்கு பயந்து கிராமத்துக்கு வந்துள்ளான். வந்த இடத்தில் விமலா என்னும் சென்னை பெண்ணுடன் மோதல். பிறகு அங்கிருந்து கிளம்பி சென்னைக்கே திரும்ப வருகிறான்.
மோகன்குமார் என்னும் கவுரவ நடிகர் (அவர் மகாபாரதம் சினிமாவில் கௌரவர்களில் ஒருவராக நடித்தவர்) வீட்டில் வேலையில் சேர அங்கு விமலாவை சந்தித்து திடுக்கிடுகிறான். அவள் மோகன் குமாரின் பெண். வழக்கம்போல இன்னும் சில மோதல்களுக்கு பிறகு காதல் மலருகிறது.
இதற்குள் மோகன் குமார் ராமாயணம் பற்றி எடுக்கப்படும் சினிமாவில் ராமராக நடிக்கிறார். அதில் அனுமன் வேடம் போட வேண்டும் என்று நம் கதாநாயகனிடம் கூற அவன் மறுக்கிறான். குரங்கு மாதிரிஎல்லாம் மூஞ்சியை வைத்து கொள்ள இயலாது என்கிறான்.
அன்று வீட்டுக்கு போய் அடுத்த நாள் பார்த்தால் அவனுக்கு வால் முளைத்திருக்கிறது. சில நாள் கூத்துக்கு பிறகு அவன் வாலை அவன் அன்னை இருட்டில் புடலங்காய் என எண்ணி நறுக்கி விடுகிறாள். அவனுக்கு தன் பெண்ணை மணமுடித்து தர மோகன் குமார் சம்மதித்த நிலையில் கதாநாயகனுக்கு கொம்பு முளைப்பதாக கதை வேடிக்கையான சுபமாக முடிகிறது.
வணக்கம், நாடகப்பிரியாவின் “வால்பையன்” என்னும் நாடகத்தின் கதை சுருக்கத்தை மேலே படித்தீர்கள். இதில் கதாநாயகன் சிதம்பரமாக வருவது எஸ்.வி. சேகர், அவன் மாமா கமல் காந்தாக வருவது சுந்தா. இவர்கள் இருவரின் இயக்கத்தில்தான் இந்த நாடகம் பல நூறு முறைகள் அரங்கேறியுள்ளது.
அதிலிருந்து சில டயலாக்குகள்:
சிதம்பரம் தான் ராணுவத்தில் சேர்ந்துவிட்டு திரும்ப வந்ததாக தன் மாமா கமல்காந்திடம் புருடா விடுகிறான்.
சிதம்பரம்: மாமா, அங்கே திருச்சிலேருந்து வந்த முரளிங்கற பையன் ரொம்ப பாவம், அவன் வாயிலேயே குண்டு வெடிச்சுடுத்து.
கமல்காந்த்: எப்படி ஆச்சு அது?
சிதம்பரம்: எறி குண்டு பின்னை வாயில் கடிச்சு எடுத்துட்டு குண்டை வீசி எறியச் சொன்னாங்க. இவன் தவறுதலா குண்டை வாயில் கடிச்சுட்டு பின்னை வீசி எறிஞ்சுட்டான்.
மோகன் குமார் சிதம்பரத்துக்கு வேலை கொடுத்து விட்டு மேலே பேசுகிறார்.
மோகன் குமார்: - தம்பி நீ மத்தியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கெல்லாம் போக வேண்டம்.
சிதம்பரம்: ரொம்ப நன்றி ஐயா.
மோகன் குமார்: இங்கேயும் போட மாட்டாங்க. கையோட சாப்பாட்டை கொண்டு வந்துடுன்னு சொல்ல வந்தேன். இங்கே வேலை அதிகம்.
சிதம்பரத்துக்கு வால் முளைத்ததும் வீட்டோடேயே முடங்கிக் கிடக்கிறான். அவன் மாமா கமல்காந்த் அவனுடன் பேசுகிறார்.
மாமா: சிதம்பரம், மனசை தேத்திக்கோப்பா. இந்தா ராமாயணம், படி.
சிதம்பரம்: மாமா, என்னது இது? எனக்கெல்லாம் போய் “வால்”மீகி ராமாயணம்னு தரீங்க? அதுலே வேற யாரோ வால்மீகியை வால்மீதி-ன்னு திருத்தியிருக்காங்க. வேணும்னுதானே இந்த் புத்தகத்தை தந்தீங்க?
மாமா: அடேய் அது சாதாரண அச்சுப்பிழைடா.
சற்று நேரம் கழித்து ரேடியோவை ஆன் செய்கிறான்.
ரேடியோவில் பாடல், அடைப்பு குறிகளுக்குள் சிதம்பரத்தின் எதிர்வினைகள்.
“தைரியமாகச் சொல் நீ மனிதந்தானா (என்னது?) இல்லை (இல்லியா?) நீதான் (ஊம்?) ஒரு மிருகம் (ஐயையோ), மிருகம், மிருகம், மிருகம் (ரிகார்டில் ஏதோ கோளாறு, அங்கேயே நின்று விடுகிறது).
சிதம்பரம்: டாய், எவண்டா அது கீசுறுவேன்.
சிதம்பரத்தின் காதலி விமலா அங்கு வருகிறாள். சிதம்பரம் ஒரு பெரிய போர்வையை போர்த்திய வண்ணம் அமர்ந்திருக்கிறான்.
விமலா: என்ன சிதம்பரம், உங்களை கொஞ்ச நாளாவே பாக்க முடியல்லே. என்ன இந்த மாதிரி வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்க? முன்னெல்லாம் சுறு சுறுப்பா அங்கேயும் இங்கேயுமா தாவிக்கிட்டிருப்பீங்க? எங்கே போச்சு உங்க வாலு.
சிதம்பரம் (முனகிக் கொண்டே): எங்கேயும் போகல்லே. அப்படியேத்தான் இருக்கு.
இப்ப ஏன் இது ஞாபகத்துக்கு வரணும்? ஏன்னாக்க நேற்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது எஸ்.வி.சேகரின் நாடகங்கள் புத்தக வடிவில் பார்த்தேன். இந்த நாடகம் நினைவுக்கு வந்தது. அங்கு நடந்த மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
6 hours ago
23 comments:
\\இப்ப ஏன் இது ஞாபகத்துக்கு வரணும்? ஏன்னாக்க நேற்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேம்=ன். அப்போது எஸ்.வி.சேகரின் நாடகங்கள் புத்தக வடிவில் பார்த்தேன். இந்த நாடகம் நினைவுக்கு வந்தது. அங்கு நடந்த மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் கூறுவேன்\\
.)
மெல்லிய நகைச்சுவை உணர்விற்கு அனைவரையும் மாற்றும், இது போன்ற நல்ல நகைச்சுவை உணர்வை பரவலாக்கும் பதிவுகள் தொடரட்டுமே!
நகச்சுவை ததும்பும் நாடகங்கள் பல தந்த மெளலி,எஸ்விசேகர்,காத்தாடி ராம மூர்த்தி,கிரேசி மோஹன், சோ நடத்திய நாடகக் குழுக்களின் டிராமாக்கள் தற்சமயம் சென்னையில் போடப் படுகின்றனவா?மக்களின் வரவேற்பு எப்படி?
இவர்களில் தற்சமயம் பிரபலமாய் உள்ளது யார்?
டீவி புகழ் வரதராஜனின் நாடகத்
துறையை காக்கும் முயற்சி வெற்றிப் பாதையிலா?
நாடாக் காவலர் காலஞ்சென்ற மனோகரின் நாடக் குழு இப்பொழுது யாருடைய பராமரிப்பில்?
சமீபத்தில்(2008 ல்) அதிக முறை போடப் பட்ட நகைசுவை நாடகம் எது?யாருடையது?
அது பற்றி சொல்லவும்
இந்த அனானிமஸ் யாரு வல்பையனா....................
எஸ்.வீ.சேகரின் அனைத்து நாடகங்களும் மிகவும் நகைசுவையகதான் இருக்கும்..............
1. Who is your favrt Drama artist and why?
2. Which is ur all-time favrt Drama?
3. Do they have Dramas in this December season like it used to be?
4. do u agree that Chennai sangamam is a move to compete with Margazhi season?
sooper!
Where is our regular valpayan?
\\Anonymous said...
sooper!
Where is our regular valpayan\\
repeattttttttttttttttttttttttttu
ஹிஹி. நம்ம வாலின் கதைன்னு நினைச்சி வந்தேன்....
Dondu Sir
Naan kooda namma VAAL PAIYANin thamaash kadhaiyonnu nenachen.
Padichappuram thaan therinjudhu idhu Senior Vaal Paiyan kadhainnu
டோண்டு சார்,
இந்த வார கேள்விகள்:
1. தில்லியில் இந்தி நாடகங்கள் பார்த்தது உண்டா?
2. உங்களுக்கு பிடித்த நாடகாசிரியர் (தமிழ் தவிர்த்து)?
3. புத்தக விழாவில் என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
4. அத்வானியின் புத்தகம் எப்படி? (முடிந்தால் தனி பதிவு போடவும்)
5. முக்கியமாக தமிழ் ட்ரான்ஸிலேஷன் எப்படி?
நன்றி
for thursday
After Latha Adhiyaman's victory at Tirumangalam this morning, with a large margin of nearly 50%, do you think there will be a rethinking in the AIADMK camp?
On similar lines, will Vijaykanth and Sarathkumar disband their parties and join the mainstreams?
உங்களது இந்த பதிவு பழைய நினைவுகளை ஞாபகத்துக்கு கொண்டு வந்தது. நன்றி.
எஸ்.வி.சேகர் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்திருப்பார். அவரது நாடகங்களில் வரும் வசனங்கள் எல்லாம் உண்மையிலேயே நகைச்சுவை ததும்ப இருக்கும். பல வருடங்களுக்கு முன்பு அவருடைய நாடகம் ஒன்றில் வரும் வசனம் (நாடகத்தின் பெயர் ஞாபகம் இல்லை):
"ஏம்ப்பா, பணம் பணம்னு பேயா அலயுறயே, உனக்கு 'பணப்பேய்'னு பட்டம் குடுத்துடலாமா?"
"ஹி, ஹி. பட்டமெல்லாம் வேண்டாங்க"
"அப்போ..?"
"பணமா குடுத்துடுங்க!"
@வால்பையன்
பல்லியை Palli என்றுதான் கூற வேண்டும், நீங்கள் நினைப்பது போல Balli என்று அல்ல. :))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னமோ எதோன்னு ஓடிவந்தேன்!
எஸ்.வி.சேகரின் நாடகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நேரில் பார்த்ததில்லை, அனைத்துமே ஒலி வடிவம் தான். ஒளி வடிவம் கிடைத்தால் வாங்கி கொடுங்கள்
//பல்லியை Palli என்றுதான் கூற வேண்டும், நீங்கள் நினைப்பது போல Balli என்று அல்ல. :))))))//
ஆம்
பல்லி=palli
பள்ளி=bhalli
சரியா?
வால் சார்,
நீங்க ஏன் பேராசிரியர் நன்னன் எழுதிய "எல்லோருக்கும் தமிழ்" புத்தகம் படிக்கக் கூடாது.அவரும் உங்களை மாதிரி சாதி சமயம் ஒழிய பாடுபடுகிறவர் தான். கூடவே தமிழில் பிழை இல்லாமல் எழுதவும் வரும் அவருக்கு. வாலிழந்த நம்பி.
அவரு பேராசிரியர் நான் ஒன்பதாங்கிளாஸ், அவருக்கு தவறே வராது, எனக்கு எல்லாமே தகராறு!
முயற்சிக்கிறேன்!
எந்த அளவுக்கு எழுதுவதே எனக்கு அதிசயம் தான்! ஆரம்பத்தில் யே,யோ போன்ற எழுத்துகளை கூட எனக்கு சரியாக பயன்படுத்த தெரியாது.
படிக்கும் காலத்தில் நான் கடைசி பெஞ்ச்,
//அனைத்துமே ஒலி வடிவம் தான். ஒளி வடிவம் கிடைத்தால் வாங்கி கொடுங்கள்//
முயற்சி பண்ணினா முடியாதது எதுவுமே இல்ல !! பாத்தீங்களா கொஞ்சம் கொஞ்சமா "ல" உங்களுக்கு சரியா வர ஆரம்பிச்சுடுச்சு ! வெல்டன் "ல" வென்ற வால் அண்ணா.
வாலிழந்த நம்பி
பொங்கல் வாழ்த்துக்கள்.
எம்.கண்ணன்.
கேள்விகள்:
1. 'அயன்' படத்திற்கு எழுத்தாளர்கள் சுபாவும், 'மர்மயோகி'க்கு இரா.முருகனும், 'கனகவேல் காக்க' படத்திற்கு பா.ராவும் பெறும் ஊதியம், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கான Conflict of Interest rules படி சரியா ?
2. புத்தகமோ கதையோ எழுதினால் கிடைக்கும் சன்மானம் - வேலை பார்க்கும் நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளம் ? எப்படி சமாளிக்கிறார்கள் (எழுதுவோர் ?) இதனால்(லும்) தான் சுஜாதா மனைவி பெயரில் எழுதினாரா ?
3. ஸ்ரேயா போல் சமீப வருடங்களில் - இவ்வளவு கட்டான உடல்வாகு கொண்ட நடிகை யாரும் தமிழ் திரையுலகில் வரவில்லைதானே ? வெண்ணெய் போல் வழுக்கும் அந்த இடையும், அழகான வளைவுகள் கொண்ட சரியான அளவில் இரண்டு மார்புகளும் ? ஆனாலும் அவர் சோபிக்காதது ஏன் ?
4. டிரைவ் இன் உட்லண்ட்ஸ் இல்லாத நிலையில் - தற்போது போண்டா சிறப்பாக கிடைக்கும் இடம் எது ?
5. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் என்ன தொழில் புரிகிறார் ? (தந்தை - அமைச்சர் மற்றும் வக்கீல், தாய் வக்கீல், மனைவி அப்பொல்லோவில் டாக்டர்)
6. ராமதாஸ், மாறன், கருணாநிதி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, வைகோ, வீரமணி - இவர்கள் குடும்பத்தின் வாரிசுகள் எந்த ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடத்தினைப் பெற்றார்கள் / பெறுகிறார்கள் ? ஓப்பன் கோட்டாவா ? அவர்கள் சமூக ஒதுக்கீட்டிலா ? RTIயில் யாராவது கேட்டு தெரிந்து கொள்ள முடியுமா ? இல்லை கேட்டால் ஆட்டோ வருமா ?
7. தற்போது சென்னையில் ஒலிபரப்பாகி வரும் பண்பலை வானொலிகளில் எந்த வானொலி கேட்கும் பழக்கம் உண்டு ? எது பெஸ்ட் ?
8. உங்கள் ஏரியா (நங்கநல்லூர்) ரிடையர்ட் ஆசாமிகளுடன் அரட்டை அடிக்கும் பழக்கம் உண்டா (தினமும்) ? பெரும்பாலும் எந்த டாபிக்குகளில் அரட்டை ?
9. வாத்தியார் சுப்பையா சாரிடம் 5 கேள்விகள் கேட்கலாம் என்றால் என்ன கேட்பீர்கள் ?
10. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் யாருக்கு எத்தனை எம்.பி தொகுதிகள் வெற்றி கிடைக்கும் ? உங்கள் ஊகம் என்ன ? (திருமங்கலம் வெற்றிக்குப் பின்) ?
Expatguru
சேகருக்கு இன்னொரு அவதாரமும்
உண்டு! கேள்விபதில் ஆசிரியர்--
திருவண்ணாமலை வெ.சங்கர
நாராயணன் கேள்வி கேட்டு இவர்
அளித்த பதில் தான் 'பட்டமெல்லாம்
வேணாங்க, பணமா தாங்க,
வாங்கிக்கிறேன்' (ஆதாரம் - எஸ்.வி.
சேகர் பதில்கள் - பாகம் 1 - பக். 63)
இந்த மாதிரி வந்த கேள்விகளை
நாடகத்தில் உபயோகிப்பது தான்
சேகருடைய அபார திறமை!!
I am a big fan of S.V. Sekar. I have 10 to 15 cassettes of SV. Most of the time i go to sleep listening to his play.
Post a Comment