1/18/2009

நம்பிக்கை இன்றி கேள்வி கேட்டவர்களே, நீங்களே பார்த்து கொள்ளுங்கள்!

சோ அவர்கள் தனது எம்.பி. நிதியிலிருந்து மேற்கொண்ட ஆக்கப் பணிகள் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் துக்ளக்கில் படங்களுடன் விவரங்கள் வந்தன. அது பற்றி சிறிதளவு சந்தேகத்துடன் சில பின்னூட்டங்கள் வந்தன. நானே துக்ளக் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து சோ அவர்களது பாராளுமன்ற எம்.பி. செயல்பாடு பற்றி கட்டுரைகள் 2003-04 காலக் கட்டங்களில் துக்ளக்கில் வந்துள்ளன என்பதை அறிந்து எழுதினேன்.

இப்போது பதிவர் நவீன பாரதி மெனக்கெட்டு தன் கலெக்‌ஷனிலிருந்து தேடி சில ஆதாரங்களை கண்டு பிடித்து பதிவு போட்டுள்ளார். அவருக்கு என் நன்றி.

அங்கு போய் ஸ்கேன் செய்து போட்டதை பார்த்து கொள்ளவும்.

மீண்டும் நன்றி நவீன பாரதி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
2005-லேயே பதிவர் அருண்வைத்யநாதன் இந்த விவரங்களுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார், அதில் நானும் பின்னூட்டமிட்டுள்ளேன். அதை இப்போது சுட்டிக் காட்டிய அனானிக்கு நன்றி.

21 comments:

Anonymous said...

a_Pen

முதற்பக்கம்


அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
எங்கள் தேசம்
டெலோ நியூஸ்
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலக்கியா இன்பொ இலங்கைநெற் மீன்மகள்
கிழக்கு


Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr


a_Thenee_head02



18.01.2009 Vol.8 Issue: 318


காகிதப் புலிகளின் புதிய ஒப்பாரி.

- யஹியா வாஸித்

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள காஸாவின் ஓலம் கேட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு 100 மைல்களுக்கப்பால் உள்ள வன்னித்தமிழனின் ஓலம் கேட்கவில்லை. !! – நிதர்சனம்.கொம் 16.1.2009

ஆமை சுடுவது மல்லாத்தி.அதை நாம சொன்னாப் பொல்லாப்பு. என்று எங்கட உம்மம்மா ஓரு கதை சொல்லுவா.அப்படி இருக்கிறது சாணக்கியர்களின் ஓலம்.

ஆம். 3500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் காஸாவுக்காக கூக்குரல் இடுகின்றீர்களே ! 100மைல்களுக்கப்பால் இருக்கும்; எங்களுக்காகவும் கொஞ்சம் அழுவுங்களேன் ! ? என்கின்றனர் எமது ஜாம்பவான்கள்.

என்னத்தை சொல்வது.
எப்படி சொல்வது.
எங்கிருந்து ஆரம்பிப்பது.
எப்படி ஆரம்பிப்பது.
அழுதழுது எழுதுவதா ?
வெம்பி வெடித்து எழுதுவதா ?

1991இல் மன்னார் முருங்கன் பள்ளிவாசலில் இறந்த முஸ்லீம்களின்; உறவினர்களும், எரிக்கப்பட்ட கடைகளின் சொந்தக்காறர்களும் இன்னும் அக்குறணை, மாத்தளை, மடவளையில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைச் சொல்வதா ? அல்லது அப்போது சிறிலங்காவின் முதலாவது முஸ்லீம் உதவி அரசாங்க அதிபராக இருந்த “மகுறுப்”; உங்களால் சுட்டுக் கொல்லப்பட்டும் இதுவரை விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதா ?

காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்தவர்களைச் சுட்டுக்கொன்று சப்பாத்துக்கால்களால் குரான்களை எட்டி உதைத்து எள்ளி நகையாடியதைச் சொல்வதா ? அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைந்து அப்பாவி முஸ்லீம்களைக் கொன்று வீதியில் சென்று கொண்டிருந்த 16 முஸ்லீம்களை கைகளை கட்டி சுட்டும் , பசியடங்காமல் வெட்டியும் கொன்றஅந்த சூரசம்ஹாரத்தைச் சொல்வதா ??

பொத்துவில் பாணமை முதல் மூதுர்,கிண்ணியா,தோப்புர் வரை உள்ள முஸ்லீம்களை அவர்களது வயல்நிலங்களைவிட்டு விரட்டியடித்து அவர்களை சோத்துக்கு வழியில்லாதவர்களா க்கி வெறும் வயிற்றுக்காறர்களாக்கிய அந்த சோகத்தைச் சொல்வதா ?

கடந்த 15 வருடங்களாக உங்களிடம் வயல்நிலங்களை இழந்த அந்த ஏழை முஸ்லீம் விவசாயிகள் வயிற்றுப்பசியைப் போக்குவதற்காக வளைகுடா நாடுகளில் “அரபிக்களின் கக்கூசுகளைக்” கழுவிக்கொண்டிருக்கும் அகோரத்தைச் சொல்வதா ?

யாழ் மாவட்டத்தில் இருந்த 91ஆயிரம் முஸ்லீம் குடும்பங்களை உடுத்த துணியுடன் வெளியேற்றி அந்த அப்பாவி மக்களை புத்தளம் முதல் கொழும்பு ,வேருவளை வரை பிச்சை எடுக்க வைத்து சிறிலங்கா வாழ் மொத்த சோனியையும் பைத்தியக்காறர்களாக்கிய அந்ததான்தோன்றித்தனத்தைச் சொல்வதா ?

எதைச் சொல்வது ! எதை விடுவது !!

“அயல்வீட்டாரையும் உன்குடும்பத்தார் போல் நேசி” என்று சொல்கின்ற மதம் இஸ்லாம்.அடுத்த வீட்டுக்காறன் பசித்திருக்கும் போது நீ உன்னிடம் உள்ள உணவில் ஒரு பகுதியை அடுத்த வீட்டுக்காறனுக்கு கொடு என அறுதியிட்டு சொன்ன மதம் இஸ்லாம்.

நீ எந்த அரசின் கீழ் வாழ்கின்றாயோ, அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நட என உறுதிபட சொன்ன மதம் இஸ்லாம்.அதற்காக கொத்தடிமையாக வாழச்சொல்லவில்லை. உனது தொழில்,உனது மார்க்கக் கடமையைச் செய்ய ஒரு இடம் (பள்ளிவாசல் ) இருந்தால் போதும் என்று உறுதிபடவும் சொன்ன மதம் இஸ்லாம்.

அந்த புண்ணிய மதத்தை தழுவிய முஸ்லீம்கள்தான் சிறிலங்காவில் வாழ்கின்றனர். நாம் சிறிலங்காவில் எந்தப்பகுதியில் வாழ்கின்றோமோ அந்தப் பகுதி மக்களுடன் கைகோர்த்து சகஜமாகத்தான் வாழ்கின்றோம்.வாழ்ந்தோம்.

காலியில் உள்ள முஸ்லீம்கள் சிங்கள “பெரஹர” காலத்தில் எப்படி சிங்கள மக்களுடன் சேர்ந்து பெரஹர கொண்டாடினார்களோ அதே போல்தான் வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் பொங்கல்,தீபாவழி,சித்திரை காலங்களில் தமிழ் மக்களுடன் சேர்ந்து மோதகம்,அவல்,சக்கரைப்பொங்கல் என உண்டு,உறங்கி வாழ்ந்தோம்.இப்போதும் வாழ்கின்றோம்.

அதுமட்டுமா ?தமிழ் இளைஞர் பேரவை காலத்திலிருந்தே வடகிழக்கில் உள்ள முஸ்லீம்கள் இலைமறை காய்களாக இளைஞர்களும், வியாபாரிகளும் சகல விடுதலை அமைப்புக்களுக்கும் உதவி செய்தார்கள்,

அப்போது நீங்கள் ஆயுதங்கள் வாங்க அல்லாடிய போதும், இந்தியாவுக்கு உங்களை பைபர்கிளாஸ் போட்டுகளில் ஏற்றி இறக்கவும், உங்கள் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தவும் ,உங்கள் உறுப்பினர்கள் பிடிபட்டால் பாதுகாப்பு படையினரிடம் பேரம் பேசி அவர்களை மீட்கவும் உதவினார்கள்.

இப்போது கொழும்புக்கு தமிழர்கள் வர பாஸ் வேண்டும் என அரசு அறிவித்த போதும் கூட வவுனியாவில் உள்ள இராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பாஸ_ம் எடுத்து கருவாடு, புகையிலை லொறிகளில் கூட்டி வருபவர்களும் அதே முஸ்லீம்கள்தான்.

ஐரோப்பிய, அவுஸ்திரேலிய,அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள 99வீதமான தமிழ் பெண்கள் முஸ்லீம்களின் பாரம்பரிய உடையான பர்தா அணிந்து , முஸ்லீம்களின் துணையுடன்தான் கவுரவமாக வந்து சேர்ந்தனர். வந்துகொண்டும் இருக்கின்றனர்.

இப்போது புதுசாக நாம் வன்னித்தமிழர்களுக்கு குரல்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. அந்த அப்பாவி மக்களுக்கு தெரியும் எம்மைப்பற்றி.சிறிலங்காவில் ஒவ்வொரு கிராமத்திலும் சுருட்டுக்கடை, புகையிலைக்கடை ,சில்லறைக்கடை வைத்திருந்த அந்த மக்களுக்கும், எங்களுக்கு எழுத்தறிவித்த அந்த வடமாகாண ஆசிரியர்களுக்கும், கதிர்காமத்திற்கு நடை பயணம் போகும் போது முஸ்லீம் கிராமங்களில் தங்கி நின்று, ஒரு கவளம் தண்ணீர் குடித்துப்போன அந்த வன்னித்தமிழனுக்கும் தெரியும் சிறிலங்கா சோனியின் அன்பும, அரவணைப்பும்.

ஆசிரியர்களாக , பொலீஸ் அதிகாரிகளாக , தபாலதிபர்களாக ,நீதிமான்களாக எங்கள் ஊர்களில் கடமையாற்றி , எங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து ஓய்வு நேரங்களில் எங்களுக்கு ஆங்கிலமும் , பஞ்சதந்திரக் கதைகளும் சொல்லித்தந்த அந்த மாமனிதர்களுக்கு தெரியும் சிறிலங்கா முஸ்லீம்களின் மதமும் , மந்திரமும்.

படித்த பட்டதாரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு சென்றாராம். கிராமத்தில் ஒரு குடிசைக்கு முன்னால் ஒரு மாடு சூடு மிதித்துக்கொண்டிருந்ததாம். மாட்டிற்குப்பக்கத்தில் யாருமே இல்லையாம். இவர் மாட்டிற்குப்பக்கத்தில் போய் பார்திதிருக்கின்றார்.யாருமே இல்லை. இவர் உடனே குடிசைக்குப்பக்கத்தில் போய் எட்டிப் பார்த்திருக்கின்றார்.அங்கே கிராமத்தான் சாக்குக் கட்டிலில் படுத்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்திருக்கின்றான். இவர் உடனே அவனை தட்டி கூப்பிட்டு நீ இங்கே படுத்துக்கொண்டிருக்கின்றாயே ! மாடு தனியே சுற்றிக் கொண்டிருக்கிறதே ! அது சுற்றாமல் நின்று விட்டால் வேலை நடக்காதே ! என்றிருக்கிறார்.அதற்கு கிராமத்தான் அதற்காகத்தான் அதன் கழுத்தில் மணிகட்டியுள்ளேன். அது சுற்றாமல் நின்றால் மணிச்சத்தமும் நின்று விடும். நான் எழும்பிப்போய் மாட்டை மீண்டும் சுற்றவிடுவேன் என்றானாம். மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு கழுத்தை ஆட்டினாலும் மணிச்சத்தம் கேட்குமே அப்போது என்ன செய்வாய் என படித்தவர் கேட்டுள்ளார். ஐயா அதை நான் அந்த அளவுக்கு படிக்க வைக்கவில்லை.அதற்கு கள்ளம் கபடம் தெரியாது என்றானாம்.

அது போல் அந்த மக்களுக்குத் தெரியும் பாதை திறந்தவுடன் வரும் முதல் வாகனம் முஸ்லீம் களுடையதாகத்தான் இருக்கும் என்று.

மொனறாகலை, பிபிலை ,பதியத்தலாவ,பதுளையிலிருந்து சுருட்டு,புகையிலை,சின்ன வெங்காயம் ,உறுண்டைகிழங்கு வாங்கவும் கண்டி, கொழும்பு, கேகல்லவிலிருந்து வாகனங்கள் வாங்கிவிற்கவும் நீர்கொழும்பு, புத்தளம் ,அனுராதபுரத்திலிருந்து கடலட்டை, நண்டு ,கணவாய் என்பன வாங்கவும் துள்ளித் தெறித்து வந்து அந்த வன்னிமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகின்றவர்கள் இந்த முஸ்லீம்கள்தான் என்று அந்த வன்னி மக்களுக்குத் தெரியும்.

மீண்டும் அந்த மக்களின் காலைவாரி, வடிவேல் பாணியில் உசுப்பேத்தி, உசுப்பேத்தி அந்த மனிதப்புனிதர்களை கொன்றுவிடாதீர்கள்.

வெள்ளந்திரியான அந்த அப்பாவி வன்னி மக்களை , வேட்டை நாய்களாகப் பாவித்து , வேள்வித் தீ நடத்தி ,இன்று வெட்கித்தலை குனியும் படியாக நாளுக்கு 20,30 என அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு கண்ணீரும் கம்பலையுமாகவரும் அந்த வன்னிமக்களுக்கு நாம் எப்போதும் துணைநிற்போம்.

ஆனால் அனைத்தையும் , அனைத்தையும் இழந்த அந்த யாழ்மாவட்ட முஸ்லீம்களுக்காக எப்போதாவது எந்த சந்தர்ப்பத்திலாவது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் அல்லது ஒரு உறுப்பினர்.அல்லது ஒரு நாய்.அல்லது ஒரு காக்காய்.அல்லது ஒரு குருவியாவது குரல் கொடுத்ததா ?



முன்னைய பதிவுகள் 01-04 / 05-10

011208


புலிகளும் அழிந்து போனால்”

அரசாங்கம் வன்னியில் உடனடியாக செய்யவேண்டியத ு!

இலங்கையில் காணப்படுவது வெறுமனே ஒரு இன முரண்பாடா?

பழைய குருடி கதவைத் திறக்கிறாளா?

தமிழ்ஈழ விடுதலைப் புலிகளின் அழிவிற்கு புலிகளே காரணம்

அரசியல் தீர்வை முன்வைப்பதற்கா ன தருணம் வந்துள்ளது

கிளிநொச்சியில் புலிகளின் தோல்வி அரசியல் தீர்வுக்கு வழிதிறக்கும்

கனவில் இருந்த பானையையும் உடைத்த புலிகள்

”கனவு மெய்ப்படல் வேண்டும்; (கிளிநொச்சி )கைவசமாவது விரைவில் வேண்டும்.”

Anonymous said...

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் போதுமான உணவோ மருத்துவ வசதிகளோ இன்றித் தவிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநா மனித உரிமை விவகாரத்திற்கான இணை பொதுச்செயலர் ஜான் ஹோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் நடைபெறும் வவுனியாவின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருப்பது கவலையளிக்கிறது. இலங்கை அரசுடன் இணைந்து ஐநா அமைப்பு வழங்கிய உதவிப் பொருட்களின் இருப்பு குறைந்துவரும் நிலையில் காடுகளில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உணவு, குடிநீர், தங்குவதற்கு இடம் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களை சர்வதேச மனிதநேய சட்டத்தின்படி, பாதுகாப்பான இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு வரும் இடம்பெயரும் மக்களுக்கு சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் உதவ வேண்டும். இந்த சண்டையிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பன்.யாஹூ said...

டோண்டு சார் உங்க பதிவை சோ படித்து இருப்பார் போல, எனக்கு தொலை பேசி வந்தது என் பின்னோட்டம் பார்த்து.

தொலை பேசியில் இந்த பள்ளிகூட நிதி உதவி குறித்து கூறினார்கள் (அனேகமாக சோ உதவியாளர் என நினைக்கிறேன்).

ஆனால் நான் என் கருத்தில் உறுதியாக இருந்தேன் (இருக்கிறேன்) , மாநிலங்கள் அவையில் அவர் மக்கள் பிரச்சனை, தமிழக பிரச்சனை குறித்து பேசியது மிக மிக குறைவு.

அவர்கள் அதற்கும் எனக்கு மெயில் அனுப்புகிறேன் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் ஒரு கிராமத்தில் பிறந்து மாநிலங்கள் அவை உறுபினராக இருந்த வைகோவின் மாநிலங்கள் அவை பேச்சு வேணுமா நான் புத்தகமாகவே அனுப்புகிறேன் என்றேன். பதில் இல்லை.

(என்னை மன்னித்தருள்க, வைகோவை சோ வுடன் ஒப்பீடு செய்வதற்கு.)

குப்பன்_யாஹூ

dondu(#11168674346665545885) said...

@குப்பன் யாஹூ
1. வைக்கோ அவர்கள் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்த ஒரு கட்சியின் தலைவர். கண்டிப்பாக அவருக்கு பேச அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும்.

2. சோ அவர்கள் அம்மாதிரி பொசிஷன்கள் இல்லாதவர். மேலும் சோ வைக்கோ மாதிரி முழு நேர அரசியல்வாதி அல்ல.

3. அப்படி அவர் பேசிய பேச்சுகள் பாராட்டப் பெற்றன. மற்றப்படி சோ அவர்கள் அகில இந்திய கண்ணோட்டத்துடன் பேசியுள்ளார். ஆகவே நீங்கள் எதிர்பார்ப்பது போல தமிழர்கள் பிரச்சினை மட்டும் அதில் இருக்காது, மற்றவையுடன் சேர்ந்து அகில இந்திய அளவில் அவையும் இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சோவின் பேச்சில்,இலங்கை தமிழர் நலம் காக்க, கடந்த நான்கு நாட்களாய் உண்ணா நோன்பு இருந்த தலைவர் திருமால்வளவனின் தியாகத்தை பகடி செய்தது கண்டிக்கத்தக்கது.

dondu(#11168674346665545885) said...

@அனானி
சோ அவர்கள் கேலி செய்தது காலை டிபனை மொக்கிவிட்டு மாலை டிபன் வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கும் கேலிக் கூத்தைத்தான் எனபதை புரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நவீன பாரதி(15170314148190159683) said...

மிக்க நன்றி டோண்டு சார்! தாங்கள் கூறியபடி துக்ளக் இதழின் விவரமும் வெளியிட்டுள்ளேன். இதற்கு முந்தைய நான்கு இதழ்களில் (5-11-03 முதல் 26-11-03 வரை) முதல் 74 பணிகளின் முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Anonymous said...

சோவின் துக்ளக் ஆண்டுவிழாப் பேச்சை கேட்டு வெகுண்டு,அலுவலகத்தில் ஒரு திமுக அனுதாபி,உடன் பிறப்பு கோபத்தில் சொன்ன வார்த்தைகள்.

சோ

ஒரு
ஒடாத திரைப் படம்
விற்காத பத்திரிக்கை
வணங்காத ஆலயம்
ஆதரவில்லாக் கட்சி
ஒட்டைப் படகு
கிழிந்த ஆடை
சிறகொடிந்த பறவை
தப்பிய தாளம்
நீரில்லா ஓடை
ஒளியில்லா இருட்டு
அர்த்தமில்லா அலட்டல்
வாலிழந்த நரி
ஆப்பை பிடுங்கிய குரங்கு
சுவையில்லா உணவு
உணர்வில்லா உதார்

Anonymous said...

டோண்டு சார், 2005 லேயே அருண் வைத்தியநாதன் இதுகுறித்து பதிவில் படம் இணைத்திருக்கிறார். நீங்களும் மறுமொழியிட்டிருக்கிறீர்கள். மறந்திருக்கலாம்.

http://arunhere.com/pathivu/?p=127

வால்பையன் said...

கேள்வி கேட்டவங்களுக்கு தானே!
அப்ப அது நானில்லை!

Anonymous said...

தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமா கூடாதா, என்ற மசோதா இராஜ்ய சபாவில வாக்கெடுப்புக்கு வந்த போது, எல்லா வாக்குகளும் ஆதரவாக விழுந்தன.

ஆனால், ஒரேவொரு வாக்கு மட்டுமே எதிராக விழுந்தது.

அது, சோ அவர்களுடையதுதான். இதைப் பலமுறை அவரே சொல்லியிருக்கிறார். இது அவர் பாராளுமன்ற சாதனைகளுள் ஒன்று.

தன் சுயசிந்தனையும் சுதந்திரத்தையும் என்றுமே அடகுவக்காத மாபெரும் மனிதர் அவர்.

Anonymous said...

// வைக்கோ அவர்கள் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்த ஒரு கட்சியின் தலைவர். கண்டிப்பாக அவருக்கு பேச அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கும்.

2. சோ அவர்கள் அம்மாதிரி பொசிஷன்கள் இல்லாதவர். மேலும் சோ வைக்கோ மாதிரி முழு நேர அரசியல்வாதி அல்ல.

3. அப்படி அவர் பேசிய பேச்சுகள் பாராட்டப் பெற்றன. மற்றப்படி சோ அவர்கள் அகில இந்திய கண்ணோட்டத்துடன் பேசியுள்ளார். ஆகவே நீங்கள் எதிர்பார்ப்பது போல தமிழர்கள் பிரச்சினை மட்டும் அதில் இருக்காது, மற்றவையுடன் சேர்ந்து அகில இந்திய அளவில் அவையும் இருக்கும்.//


Dear Ragahavan!

All of us have limited knowledge of things, even in areas where we specialise. Because there is always someone who knows better than us. Therefore, we shouldnot defend everything in our favor as if we have the authority on our hands.

Your comparision between Vaiko and Cho is odd. Because, you say only people with party affiliation gets more chances to speak.

When a bill is discussed, anyone can speak - either with prior permission or suo motu.

Why didnt cho get such prior permission? It is quite possible for anyone.

Cho could have spoken on many issues concerning TN; but he is not interested. He went to Rajya Sabha and he spoke as a nationalist. and that is ok. But had not anything that concerns TN that made him turn?

You say, he had done a lot of speeches praise worthy. All his speeches are recorded, like any other MP. He had a poor track record. His speeches raised the hackles of the members only because of his political satire. MPs laughed and forgotten him.

He made no ripples. His contribution in RS debates are insignificant.

You may prove that I am wrong only by putting all his speeches online and give the link here. Let all of us know how your idol used his tenure as an MP.

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்.

1. கடந்த 2- 3 வருடங்களாக இந்திப் படங்களின் வெளியீடுகள் மிகவும் அலப்பரையாக இருக்கிறதே ? ஓவ்வொரு படம் ரிலீசாவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே ஒரேயடியாக ஆங்கில / இந்தி டிவி சேனல்களில் ஓவர் கவரேஜ் செய்கிறார்களே ?

2. ஒரு சில படங்கள் தவிர இந்திப் படங்கள் எல்லாமே மேல்தட்டு மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸை வைத்தே எடுக்கப் படுகிறது போலுள்ளதே ? உ.பி, பீகார், ம.பி,ராஜஸ்தான், போன்ற பீமாரு பிரதேச இந்திக்காரர்களின் கதைக்களத்தில் எந்தப் படமும் வருவது போல் தெரியலையே ?

3. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லாத நிலையில் அத்வானி ஏன் இன்னும் கூட்டணி உருவாக்குவதில் வேகம் காட்டவில்லை ? கூட்டணி வைத்தால் தான் வெற்றி என்ற நிலை நாடு முழுவதும் வந்து விட்ட இந்தக் காலத்தில் ?

4. அனில் அம்பானியும், சுனில் மிட்டலும், ரத்தன் டாட்டாவும் மோடி பிரதமராக வந்தால் நல்லது என விளம்பி இருக்கின்றனரே ?

5. வலைப்பதிவு உலக கிசுகிசு ஒன்று சொல்லுங்களேன் ?

6. உங்களின் அன்றாட உணவு வகைகள், நேரங்கள் என்னென்ன ? நடைபயிற்சி தவிர உணவுக்கட்டுப்பாடும் உண்டா ?

7. டாக்டர். பிரகாஷ் விவகாரத்தில் ஒரு பிரபலத்தின் மகளும் சிக்கிக் கொண்டதால் தான் அவருக்கு அவரச அவசரமாய் திருமணம் நடத்தப்பட்டதாமே ?

8. டி.எம்.எஸ் பாடிய பாடல்களில் பிடித்த 5 பாடல்கள் எது ? ஏன் ?

9. ஜப்பான் சென்றுள்ள லாலு பிரசாத் புல்லட் ரயிலில் சென்று வந்துள்ளாரே ? இந்தியாவிலும் புல்லட் ரயில் விடப்போகிறாராமே ? நிஜமாகவே நடக்குமா ?

10. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள நம் தமிழக அரசியல்வாதிகள் - அதை எவ்வாறு ஆப்பரேட் செய்கின்றனர் ? பணத்தேவை ஏற்படும் போது எந்த ரூட்டில் அந்தப் பணம் இங்கு வருகிறது ? டெபாசிட் செய்யும் போது எப்படி ஸ்விஸ்க்கு செல்கிறது ?

Anonymous said...

சிங்கை பதிவர் கோ.வி அவர்களின் அருமையான கருத்து.

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

dondu(#11168674346665545885) said...

//சிங்கை பதிவர் கோ.வி அவர்களின் அருமையான கருத்து.//
நல்ல கருத்துதான். ஆனால் இங்கு பின்னூட்டமாக இடும் காரணம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாரத முனி said...

//தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமா கூடாதா, என்ற மசோதா இராஜ்ய சபாவில வாக்கெடுப்புக்கு வந்த போது, எல்லா வாக்குகளும் ஆதரவாக விழுந்தன.

ஆனால், ஒரேவொரு வாக்கு மட்டுமே எதிராக விழுந்தது.

அது, சோ அவர்களுடையதுதான். இதைப் பலமுறை அவரே சொல்லியிருக்கிறார். இது அவர் பாராளுமன்ற சாதனைகளுள் ஒன்று.

தன் சுயசிந்தனையும் சுதந்திரத்தையும் என்றுமே அடகுவக்காத மாபெரும் மனிதர் அவர்.//


சோ நியமன எம் பி தானே???
எமக்கு ஒரு சிறு சந்தேகம் - நியமன எம் பிக்கள் மசோதா வாக்கெடுப்புகளில் வாக்களிக்க இயலுமா?

Anonymous said...

//எமக்கு ஒரு சிறு சந்தேகம் - நியமன எம் பிக்கள் மசோதா வாக்கெடுப்புகளில் வாக்களிக்க இயலுமா?//

Yes, they can.

குப்பன்.யாஹூ said...

Dondu sir, I too disagree with your answer. Vaiko was in opposition party (DMK) MP for a decade.

His speeches were more against Indira, Rajiv.

Cutting across party lines, all MP's appreciated Vaiko as best parlimentrian.

Veterans like Vaajpayee, renuka chowdry, eraa naidu, VP singh, Paswan, Baadhal, Indrajit Guptha, somnatha chattarjee, Uma barathi, Upendra, Jaipal reddy all appreciarted Vaiko's speech.



Similary Viduthalai virumbi , peter alphonse, PH Paandiyan too spoke in parliment.

But cho might have spoken only a day or tow I guess.

my point is Cho is good in finding faults but not fit to give solutons. he is not a good parlimentarian at all.

kuppan_yahoo

Anonymous said...

இனி துக்ளக் ஆசிரியர் ஜெய டீவியில் கலக்கப் போகிறார் என்ற அறிவிப்பு
கண்டு கழகக் கூடாரம் கலகலத்து போய் உள்ளது.

dondu(#11168674346665545885) said...

@குப்பன் யாஹூ
மறுபடியும் கூறுவேன். சோ எந்த குறிப்பிட்ட பிளாக்கயியும் சேர்ந்தவரலா. அவர் பிஜேபியின் நியமனம் பெற்றபோதே அதை அவர்களுக்கு தெளிவாகக் கூறி அவர்கள் ஒப்புதல் பெற்றுத்தான் பாராளுமன்றம் சென்றார். வைக்கோவோ திமுகவில் ஒரு தலைவர். ஆளும் கட்சியினராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியினராக இருந்தாலும் சரி அவர்களுக்கு பேச அதிக வாய்ப்புகள் டீஃபால்ட்டாக கிடைக்கும். சோ தான் பலமுறை பேச வின்ணப்பித்து ரிசல்ட் கூட பெறாத சூழ்நிலைகள் பற்றி துக்ளக்கில் தெளிவாக கூறியுள்ளார். நீங்கள் துக்ளக் படிப்பதை நிறுத்தி விட்டதால் உங்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம்.

எப்படியும் சோ வைக்கோ ஒப்பீடு சரியாகாது. வைக்கோ பக்கா அரசியல்வாதி. அதுதான் முழுநேர வேலை. சோ அப்படியில்லை. இதனால் நான் வைக்கோவை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். நான் சோ அவர்கள் பற்றி பேசுகிறேன். வைக்கோ பற்றி அதிகம் தெரியாது, நான் மேலே சொன்னதைத் தவிர.

அது சரி, சோ அவர்கள் தனது நிதிகளை செலவழித்த மாதிரி வைக்கோவும் செய்திருப்பார்தானே. அவற்றில் சிலவற்றை இங்கே எடுத்து விடுங்களேன். கேட்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dear Mr.Raghavan,
Regarding Cho's speaking in Parliament /debates, he himself had explained in Thuklak the procedures and how difficult it is for nominated MPS to get opportunities to speak.
They have to give prior request and Nominated MPs get the least priority in allocation of time.For example, even if a nominated MP gives a request in advance, an elected MP supercedes him/her in getting the opportunity.Several times , he had not got the opportunity to speak because of such procedure.
He had also explained that some times ,when the debate on the particular matter gets extended ,due to his preoccupations, he could not stay back and wait for his chance.
He had expressed that actually he got frustrated by not being able to participate in the debates because of such system.
He wrote these points in Thuklak soon after he became MP/started attending parliament.

K.G.Subbramanian

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது