காமராஜ் அரங்கத்தை நான் அடைந்தபோது மாலை 4.30. என்ன ஆச்சரியம் அரங்கத்தினுள் புகமுடிந்தது, நாற்காலியும் ஒன்று கிடைத்தது. ப்ளசண்ட் சர்ப்ரைஸ்தான். என்ன, 2 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கையில் ஒரு ஆங்கில புத்தகத்தை இந்த காத்திருப்புக்காகவே எடுத்து சென்றதும் நல்லதாயிற்று. மீட்டிங் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கையில் ஒரே பரபரப்பு. கேட்டால் ரஜினி வந்தார் என்றார்கள்.
சரியாக மாலை 06.30-க்கு திரை உயர்ந்து சோ அவர்கள் மேடையில் தோன்றியதும் பயங்கர கரகோஷம். கணீரென குரலில் எல்லோருக்கும் வணக்கம் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் என சோ அவர்கள் கூற, பார்வையாளர்கள் பகுதியிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற குரல் கேட்டது. தன்னைப் பொருத்தவரை இது பொங்கல் மட்டுமேயென சோ கூறிவிட்டார். பிறந்த நாளையெல்லாம் அரசியல்வாதிகள் ஏன் ஆங்கில காலெண்டர்படி கொண்டாட வேண்டும் என்னும் கேள்வியை சோ அவர்கள் எழுப்ப ஒரே சிரிப்பு. இந்தப் பைத்தியக்காரத்தனம் எல்லாம் தான் செய்வதிற்கில்லை எனக்கூறிவிட்டு சோ அவர்கள் விறுவிறு என்று தனது பத்திரிகை சகாக்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.
அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் ரங்காச்சாரி, உதய சங்கர், சுந்தரம், மதலை, ஸ்வாமிநாதன், சத்யா, ராமச்சந்திரன், பர்கத் அலி, ரமேஷ், எஸ்.ஜே. இதயா, ஷண்முகம், ராமமூர்த்தி, வசந்தன் பெருமாள், விஜய கோபால், ஸ்ரீகாந்த், ராமு, ராஜு, குமார், கரிகாலன், குருமூர்த்தி, முருகன் ஐ.ஏ.எஸ்., சுமதி மற்றும் சத்தியராஜ். சத்யா மற்றும் குருமூர்த்தி ஆகியோரது பெயரை கூறும்போது கரகோஷம் பலமாக இருந்தது. வசந்தன் பெருமாள் அத்வானி அவர்களின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.ராமச்சந்திரன் என்பவர் துர்வாசர், சந்திரன் மற்றும் வண்ண நிலவன் என்னும் பெயர்களில் எழுதுபவர்.
பிறகு தெரிவு செய்யப்பட்ட வாசகர்கள் கேள்வி கேட்க அழைக்கப்பட்டனர். முதலில் அழைக்கப்பட்டவர் பாலமுருகன், வேதாரண்யம், முதலியார் தோப்பிலிருந்து. சோ அவர்கள் முதலியார் தோப்பு என சாதிப்பெயருடன் எவ்வாறு கூறலாம், தோப்பு என்று மட்டும்தான் பெயர் இருந்திருக்க வேண்டும் எனக் கூறி அரங்கில் கலகலப்பை உருவாக்கினார்.
பாலமுருகன் இஸ்ரேல் காஸா பகுதியில் தாக்குதல் நடத்துவது, அமெரிக்கப் பொருளாதாரம், சத்யம் ஆகியவை பற்றி கேள்வி கேட்டார். சத்யம் விஷயத்துக்கு கடைசியாக வருவதாக கூறினார் சோ. காஸாவில் இஸ்ரேல் செய்த நடவடிக்கைகள் போல இந்தியா செய்யும் என்னும் நம்பிக்கை தனக்கு இல்லை என அவர் ஆரம்பித்தார். இதில் சில விஷயங்கள் மறக்கப்படுகின்றன என்று கூறிய அவர், காஸா பகுதியின் சரித்திரம் பற்றி கூறினார். 1967-ல் இஸ்ரேல் அப்பகுதியை பிடித்தது. 2005-ல் அதுவே அதை காலி செய்து சென்றது. அங்கிருந்த்தான் ஹமாஸ் கோஷ்டியினர் ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலிய குடியிருப்புகளில் வீசினர். முதலில் பொறுமை காத்த இஸ்ரேல் இப்போது த்வம்சம் செய்கிறது என்றார். “தனது இஸ்ரேலிய ஆதரவை அவர் வெளிச்சம் போட்டு காட்டியது உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமே” என முரளி மனோஹர் என்னிடம் கூறுவதை இங்கு மனப்பூர்வமாகவே ஏற்று கொள்கிறேன். சோ மேலும் பேசுகையில் நம்மவர்கள் வெறுமனே உதார் பேச்சுடன் சரி என சாடினார். இஸ்ரேலின் வழிதான் நாமும் மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். உலக அபிப்பிராயம் எப்போதுமே ஜெயித்தவன் பக்கம்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அடுத்து அழைக்கப்பட்டவர் எஸ். ஜேம்ஸ் மதுரையிலிருந்து. திருமங்கலம் தேர்தலின் ரிசல்ட் விஜயகாந்தை எவ்வாறு பாதிக்கும், இது அவருக்கு வீழ்ச்சியாகுமா என்று கேட்டார். சோ தனது பதிலில் இது அவரை சிந்திக்க வைத்தால் நல்லது என அபிப்பிராய்ப்பட்டார். இது போலவே அவர் தனித்து போட்டியிடுகிறேன் பேர்வழி என்று இருந்தால் சீக்கிரமே இர்ரெலெவண்ட் ஆகிவிடுவார். இப்போதைக்கு அவர் வெறுமனே திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பது மட்டுமே செய்து வருகிறார். அதைத்தான் செய்ய வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்திருந்தால் ஓக்கே. இல்லாவிடில் அவர் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அடுத்து பேசியவர் கும்பகோணத்திலிருந்து வந்த அயூப்கான். இவர் கேட்ட கேள்விகள் எனக்கு சரியாக காதில் விழவில்லை. ஆகவே சோவின் பதில்களிலிருந்து அவர் என்ன கூற வந்தார் என்பதை ஊகிக்க முயலலாம். சோ அவர்கள் தன் பதிலில் கூறியதன் சாராம்சம்: கனிமொழி விவகாரம் ஞாபகமில்லை. மற்றப்படி வெறுமனே இந்துக்களை மட்டுமே கேள்வி கேட்பது ஆஷாடபூதித்தனம், இசுலாமியர் மற்றும் கிறித்துவர்களை கேட்கத் துணியாதவர்கள் இந்துக்களை மட்டும் ஏன் கேள்வி கேட்க வேண்டும்? மற்ற மதத்தினரை கேள்வி கேட்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. விபூதி அணிவது பகுத்தறிவற்றத்தனம், தீமிதித்தல் காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் மத நம்பிக்கையை கிண்டல் செய்பவர்கள் தொப்பி அணிவது, சிலுவை அணிவது பற்றியும் கூற வேண்டியதுதானே. இசுலாமியர்களை நாங்களும் மிகவும் மதிக்கிறோம். எங்கள் அலுவலகதில் பரக்கத் அலி ஐந்து முறை நமாஸ் செய்கிறார். அவருக்கு அதற்கான வசதிகளை தருகிறோம். சிதம்பர விஷயத்தில் தீட்சிதர்களே தேவாரமும் ஓதுகிறார்கள். அவர்கள் கோவிலில் அதற்கென இருக்கும் சட்டதிட்டங்களில் அரசு ஏன் நுழைய வேண்டும்? நாத்திகர் என ஆகிவிட்டீர்கள். ஒதுங்குங்கள். ஆத்திகத்துக்கு ஏன் ஆர்டர் போடுகிறீர்கள்? மசூதிகளில் தொழுகை தமிழில்தான் இருக்க வேண்டும் என ஆர்டர் போடுவீர்களா?
அடுத்து பேசியவர் ஜெயசங்கர் என்பவர். அவர் கேட்டது: திமுகவின் திருமங்கலத்தில் வெற்றிக்கு பிறகு பாமக யாரை ஆதரிக்கும்? அத்வானிக்கு பாஜகவில் ஏன் எதிர்ப்பு? இதற்கு சோவின் பதில்கள்: ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே தெரியாது. கலைஞருக்கும் இதில் குழப்பமே. பாமகவுக்கு எந்த கூட்டணி ஜெயிக்கும் என்பது இன்னும் பிடிபடவில்லை. அன்புமணியின் மந்திரிப் பதவியை வேறு கவனிக்க வேண்டும். அதவானியை பாஜகவில் எல்லோருமே ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். ஷெகாவத் விவகாரம் சிற்றலையாக வந்து முடிவடைந்தது. இத்தருணத்தில் அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி பேச வேண்டும். ஒரு கட்சிக்கு சரியோ தவறோ அம்மாதிரி ஒரு தலைமை மட்டும் இருப்பது கட்சிக்கு நல்லதே. கட்சிக்குள் என்னதான் பேசி விவாதித்தாலும் வெளியில் வரும்போது ஒரே குரலில் பேசுவது நலம். திடீரென சோ அவர்கள் இந்த மீட்டிங்கின் விஷயத்துக்கே வந்தார். ஆறரை மணிக்கு வெகு நேரம் முன்னாலேயே எல்லோரும் வந்து விட்டனர். நாமும் வந்துள்ளோம். பேசாமல் முன்கூட்டீயே மீட்டிங்கை ஆரம்பித்து விடலாமா என்று கூட சிறு ஆலோசனை இருந்தது. ஹாலில் உள்ளே இருப்பவர்களிடம் கருத்து கேட்டிருந்தால் உடனேயே சரி என சொல்லியிருப்பார்கள். ஆனால் வெளியிலும் பலர் இருந்தனர். இன்னும் லாபியில் செட்டிலாகவில்லை. மேலும் பலரும் உள்ளே வந்த வண்ணமே இருந்தனர். ஆகவே அவர்களை கேட்டிருந்தால் இன்னும் பொறுங்கள் என்றுதான் கூறியிருந்திருப்பார்கள். ஆகவே வழமையான ஆறரை மணிக்குத்தான் மீட்டிங் ஆரம்பம் என முடிவு எடுக்கப்பட்டது, என அவர் கூறினார். (இத்தருணத்தில் சற்றே அட்வான்ஸ் செய்து மீட்டிங் முடியும் நேரத்துக்கு செல்கிறேன். திடீரென கதவுகள் வெளியிலிருந்து தட்டப்பட்டன. ஆடியோ வெளியில் கேட்கவில்லை என குரல்கள் வெளியிலிருந்து கேட்டன. நாங்களும் இதை சோவுக்கு கன்வே செய்தோம். சற்று நேரம் சில செயல்பாட்டுக்கு பின்னால் வெளியே ஆடியோ சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. நிஜமாகவே சரியாயிற்றா என்பதை இப்பதிவின் வாசகர்கள் பின்னூட்டம் மூலம் உறுதி செய்தால் நான் நன்றியுடன் இருப்பேன்). ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூடாது என நினைக்கிறார்கள். உள்ஜனநாயகம் உள்ள கட்சியில் இது ஒரு கஷ்டம். அதே சமயம் இரண்டாம் நிலை தலைவர்களும் இதனால் உருவாகலாம். பாஜக-வில் அவ்வகையில் பல ஆல்டெர்னேடிவ்கள் உள்ளன. அத்வானி, மோடி, ஜஸ்வந்த்சிங் என பல பேர். ஆனால் இங்கும் உமாபாரதி கலாட்டா இருப்பது வேறு விஷயம். காங்கிரசிலோ சோனியா காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ராகுல் காந்தி இருப்பார். அதாவது நேரு குடும்பத்தினர் மட்டுமே.
அடுத்து வந்தவர் ஜயா சுவாமிநாதன் என்பவர். அவர் கேட்ட கேள்விகள் திருமங்கலத்தின் ரிசல்ட் பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்குமா, இத்தருணத்தில் பிஜேபிக்கு யாருடன் கூட்டு. திமுகவுடன் காங்கிரஸ் இருப்பதால் பாஜக அதிமுகவுடன் கூட்டு வைக்குமா, அதுவோ கம்யூனிஸ்டுகளுடன் சேரும் போலிருக்கிறதே. சோ பதிலளிக்க ஆரம்பிக்கும் முன்னால் நிஜமாகவே துக்ளக்குக்கு பெண்வாசகியர் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். பெண் பெயராக இருந்தாலும் சில ஆண்களும் பெண் பெயரில் வளைய வருவதால் அந்த சந்தேகம் ஏற்பட்டது என்றும் இப்போது தீர்ந்தது என்றும் கூறினார். பிறகு பாஜக பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். தமிழகத்திலும் சரி மற்ற சில மாநிலங்களும் பல கட்சிகள் தங்களுக்கு மைனாரிட்டி வோட் இருப்பதாகவும் பாஜகவுடன் சேர்ந்தால் அந்த மைனாரிட்டி ஓட் போய்விடும் என்ற பயமும் அவற்றுக்கு இருப்பதாகவும் கூறவும். உண்மை கூறப்போனால் நிஜமாகவே தத்தம் வோட் மைனாரிட்டியிலேயே இருந்தாலும் மைனாரிட்டி ஓட்டைப் பற்றி அவர்கள் கனவு காண்கின்றனர் என்பதையும் நகைச்சுவையாகக் கூறினார். பிறகு வேண்டுமானால் மத்தியில் பிஜேபி ஆட்சி வந்தால் பார்த்து கொள்ளலாம் என்றும் சில கட்சிகள் நினைப்பதையும் அவர் கூறினார். (இது சம்பந்தமாக அவர் முன்னொரு தருணம் அதிமுகவுக்கும் இந்த கணிப்பு உண்டு என கூறியது அப்போது என் நினைவுக்கு வந்தது). மேலும் பிஜேபி இம்மாதிரி கூட்டு சேர முயற்சிப்பதை விட தமிழகத்தில் எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அங்கு மட்டுமே வேட்பாளர்களை நிறுத்துவது புத்திசாலித்தனம் என்றார். இது சம்பந்தமாக எல். கணேசன் என்ன நினைக்கிறாரோ அது தனக்கு தெரியாது என்றும் கூறினார். பிறகு குஜராத்தில் மோடிக்கு இசுலாமியரே ஓட்டு போட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். எப்படியும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலைமை சரியாகும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார். திருமங்கலம் பற்றி பேசும்போது அதே அடிப்படையில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என வைத்து கொண்டாலும் 2000 முதல் 3000 கோடி ரூபாய்கள் அல்லவா தேவைப்படும் திமுகாவுக்கு என்றார் அவர். அரங்கில் கரகோஷம். ஸ்பெக்ட்ரம் ரேஞ்சில் செயல்பட்ட திமுகவுக்கு பணம் பிரச்சினை இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினால். ஆக, திருமங்கலம் போல செயல்பட சூழ்நிலை ஒத்துழைத்தால் திமுக அவ்வாறு செயலும் பட்டால் வெற்றி நிச்சயம். இல்லாவிடில் நிலைமை நேர் எதிராகப் போகும் வாய்ப்பும் உண்டு என்றார் அவர்.
பதிவு மிகவும் பெரியதாக போவதால் இப்போதைக்கு முதல் பகுதியை முடிக்கிறேன். இரண்டாம் பகுதி பிற்பகலில் வரும். ஒரு அவசர ஃபிரென்சு --> ஆங்கில மொழிபெயர்ப்பு வேலை மின்னஞ்சல் இன்பாக்ஸில் வந்து உட்கார்ந்து விட்டது. அதை முதலில் கவனிக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
22 hours ago
24 comments:
Thank you very much.
God Bless you.
Regards,
Srinivasan
இதுக்கு தானே போன வருடம் மோடி வந்திருந்தார்,
அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா?
//என்ன ஆச்சரியம் அரங்கத்தினுள் புகமுடிந்தது,//
எல்லாரும் உங்களைப் போலவே வேலையில்லாமல் இருப்பாங்களா
(சும்மா தமாசுக்கு)
@வால்பையன்
ஏன் சொல்ல மாட்டீங்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக தரையில் உட்கார்ந்து கால் மரத்துப் போய் அப்படியும் நோட்ஸ் எடுக்க நேர்ந்த எனக்கு இந்த மாதிரி நாற்காலி கிடைத்தது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்?
அதுக்குள்ளே ஓராண்டு ஆகிவிட்டதான்னு தோணுதில்லையா. இதையே எக்ஸ்டண்ட் செய்துதான் நான் சமீபத்தில் 1952-ல் என்னும் ரேஞ்சில் எழுதுகிறேனாக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சோ அவர்கள் முதலியார் தோப்பு என சாதிப்பெயருடன் எவ்வாறு கூறலாம், தோப்பு என்று மட்டும்தான் பெயர் இருந்திருக்க வேண்டும் எனக் கூறி அரங்கில் கலகலப்பை உருவாக்கினார்.//
எங்க போனாலும் உங்க சாதி பற்றை காட்டுவிங்களா?
எதுக்கு முதலியார் தோப்புன்னு பெயர்?
அந்த முதலியாருக்கு பெயர் இல்லையா?
ராமசாமி தோப்பு, கந்தசாமி தோப்புன்னு சொல்லலாமே!
Excellent coverage. Thanks for the post. Waiting for the remaining parts...
Did superstar rajinikanth come to the meet?
//எதுக்கு முதலியார் தோப்புன்னு பெயர்?
அந்த முதலியாருக்கு பெயர் இல்லையா?
ராமசாமி தோப்பு, கந்தசாமி தோப்புன்னு சொல்லலாமே!//
நல்ல இருக்கு வால்பையன்! தனி நபருக்கு சொந்தமா இருந்தாதான் அப்படி சொல்ல முடியும் ....... தி.மு.க.வை கருணாநிதி கழகம்ன்னு சொல்லமுடியுமா என்ன? ;-)
//தி.மு.க.வை கருணாநிதி கழகம்ன்னு சொல்லமுடியுமா என்ன? ;-)//
திரு.மு.கருணாநிதி ஃபேம்லி அண்ட் கோ என்பது தான் தி.மு.க.
நல்லாஇருக்கு வர்ணனை, மீதமும் எழுதுங்க.
//எப்படியும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலைமை சரியாகும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.//
யார் நிலைமை சரியாகும்!
5:30 மணிக்கு காமராஜர் அரங்கத்தை அடைந்து படிகளின் அருகில் உட்கார்ந்திருந்தோம். மீட்டிங் தொடங்கியது முதலே வெளியே ஆடியோ சரியில்லை. உள்ளே தகவல் சொல்லியிருக்கிறோம் என்று வாசலில் இருந்த காவல் துறையினர் தெரிவித்தனர். சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு ஒன்றும் சரியாகக் கேட்காததால் “நாளைக்கு உங்கள் பதிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று 7:15 க்கு கிளம்பி விட்டோம்.
//ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என வைத்து கொண்டாலும் 2000 முதல் 3000 கோடி ரூபாய்கள் அல்லவா தேவைப்படும் திமுகாவுக்கு என்றார்//
எந்த அரசியல்கட்சியும் எல்லோருக்கும் பணம் கொடுப்பதில்லை,
விளிம்புநிலை மனிதர்களாஇ தேர்ந்தேடுத்து தான் பணம் கொடுக்கிறார்கள்,
மகளிர் குழுக்களில் பணம் பட்டவாடா நடந்திருக்கிறது.
எம்பட தோஸ்த் அங்க தான் இருக்காரு
நல்ல கட்டுரை.நானும் உங்களை போல சோ அவர்களின் அபிமானி.
Good coverage Mr. Raghavan. Waiting for 2nd part. Please post the links to the video if you get it like last year.
பதிவு நன்றாக இருந்தது சார்
//ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூடாது என நினைக்கிறார்கள். உள்ஜனநாயகம் உள்ள கட்சியில் இது ஒரு கஷ்டம். அதே சமயம் இரண்டாம் நிலை தலைவர்களும் இதனால் உருவாகலாம். பாஜக-வில் அவ்வகையில் பல ஆல்டெர்னேடிவ்கள் உள்ளன. அத்வானி, மோடி, ஜஸ்வந்த்சிங் என பல பேர். ஆனால் இங்கும் உமாபாரதி கலாட்டா இருப்பது வேறு விஷயம். காங்கிரசிலோ சோனியா காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ராகுல் காந்தி இருப்பார். அதாவது நேரு குடும்பத்தினர் மட்டுமே.
//
காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் உட்கட்சிப் பூசல்களைக் கிண்டல் செய்து கார்ட்டூன், கேள்வி-பதில், கட்டுரை என்று துக்ளக்கில் சோவிலிருந்து பலர் எழுதியது எத்தனை முறை என்று அவர்களுக்கே தெரியாது.அப்போதெல்லாம் அக்கட்சிகளில் ஒழுங்கில்லை, சண்டை, என்று அவர்களைக் கீழ்நோக்கிப் பார்க்கும் பார்வையே தெரிந்தது. இப்போது பா.ஜ.க.வில் உட்கட்சி சண்டை என்றால், உள்ஜனநாயகம் இருப்பதால் இப்படி என்று ஒரு பாஸிட்டிவ் ஸ்பின் தர சோ மாதிரியானவர்களாலேயே முடியும். இவரைப் போன்ற அறிவுஜீவிகள் இருக்கும்வரை பா.ஜ.க. செய்கிற எதுவுமே புனிதப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. பா.ஜ.க.வை அவர் கண்டிக்கலாம் வேறு விஷயங்களுக்கு. அது தாய் குழந்தையைக் கண்டிப்பதற்கு ஒத்தது, அந்தக் கண்டிப்பிலும் அவர் பாசம் தெரியவே செய்யும். ஆதலால், அவர் பா.ஜ.க.வைக் கண்டித்த தருணங்களைப் பட்டியலிட்டு நேரம் வீணாக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாசப்பிணைப்புகளாலேயே சோ சொல்கிற ஒத்துப் போகிற மாதிரியான கருத்துகளின் நம்பகத்தன்மை மீதும் கேள்விக்குறி எழுகிறது. இந்த ஆபத்தை சோ உணர்ந்தமாதிரியோ உணர்ந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படுகிற மாதிரியோ தெரியவில்லை. தன் தோள்மீது அமர்ந்திருக்கும் தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு என்ற சுமையை கீழிறக்கி வைத்துவிட்டு, எழுதவோ வாழ்வோ யாராலும் இயலாது. ஆனால், முடிந்த அளவுக்குப் பிரக்ஞை பூர்வமாக அந்தச் சுமையைவிட்டு விலகிச் சிந்திக்கவும் எழுதவும் முயற்சிக்கவாவது வேண்டும்.அப்படிப்பட்ட பத்திரிகையாளர்களின் நம்பகத்தன்மையே பாராட்டப்படும். சோவின் மிகப்பெரிய பலவீனம், தன் தோள்மீது அழுத்தும் சுமையை அவர் தன் கிரீடமாகக் கருதுவதே.
அன்புடன், பி.கே. சிவகுமார்
பதிவு மிக அருமை, நல்ல கவரேஜ்
ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு சோ மீது மிகுந்த வருத்தம் உண்டு. ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருந்து அவர் பாராளுமன்றத்தில் பேசியது மிக மிக குறைவு. அதுவும் மக்கள் பிரச்சனை, சமூக பிரச்னை குறித்து பேசியது மிக மிக குறைவு.
சோ மாநிலங்கள் அவை உறுப்பினரா ஆகும் வரை துக்ளக் படித்து வந்தேன். அவர் பாராளுமன்றம் சென்றதில் இருந்து படிப்பதை நிறுத்தி விட்டேன்.
அடுத்தவர்களை குறை கூறி எழுதுவது, பேசுவது மிக எளிது.
அந்த வகையில் வைகோ, திருச்சி சிவா, டி ராசா , விடுதலை விரும்பி, பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் பாராளுமன்றத்தில் அதிகம் மக்கள் பிரச்னை குறித்து பேசி இருக்கிறார்கள்.
எனவே சோ பேச்சு கருத்து இப்போது என்னை ஈர்ப்பதில்லை.
குருமூர்த்தி பேச்சு குறித்து விரிவாக எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
குருமூர்த்தியும் அடுத்தவர் மீது குறை கூறுவதில் வல்லவர். ஆனால் பீ ஜே பி ஆட்சியில் பொருளாதார ரீதியாக குருமூர்த்தியின் பங்கு மிக குறைவு.
குப்பன்_யாஹூ
@குப்பன் யாஹூ:
உங்களுக்கு முழு விஷயம் தெரியாது. சோ ராஜ்யசபையில் தனது நடவடிக்கைகளை பற்றி விரிவாகவே துக்ளக்கில் எழுதியுள்ளார். நீங்கள் துக்ளக் படிப்பதை நிறுத்தியதால் உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சோ அவர்கள் எந்த குரூப்பையும் சேர்ந்தவரல்ல. பாஜக அவரை நியமித்தாலும் அதன் உறுப்பினர் போல அவர் பாராளுமன்றத்தில் செயல்பட மாட்டேன் என கண்டிஷன் போட்டுத்தான் பதவி ஏற்றுள்ளார். பேசுவதற்காக பல முறை அவர் விண்ணப்பம் தந்தாலும் அவரது முறை வருவதற்கு காலம் பிடித்தது. அதையும் சோ புரிதலுடனேயே பார்த்தார் என்பதுதான் நிஜம்.
அவர் ரிசர்வேஷனுக்கு எதிராக பேசியது பாராளுமன்றத்தில் பல உறுப்பினர்களின் கவனத்தை கவர்ந்தது. பிற கட்சி எம்பிக்கள் தாங்கள் அவர் கூறியதை புரிந்து கொண்டு, தங்கள் கட்சிக்கட்டுப்பாடு தங்களை அவரைப் போல வெளிப்படையாக பேச அனுமதிக்கவில்லை என கூறினர்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீட்டை அவர் சரியாக உபயோகித்து பல ஆக்கபூர்வ பணிகள் செய்வித்தார். காலணா அவர் அதில் கமிஷன் பெற்றார் என ஒரு பயலும் நாக்கின்மேல் பல்லைப் போட்டு பேச முடியவில்லை என்பதுதான் நிஜம்.
//இப்படிப்பட்ட பாசப்பிணைப்புகளாலேயே சோ சொல்கிற ஒத்துப் போகிற மாதிரியான கருத்துகளின் நம்பகத்தன்மை மீதும் கேள்விக்குறி எழுகிறது.//
எப்படி, எல்லா வன்கொடுமைக்கும் பார்ப்பனரே காரணம் என்ற ரேஞ்சில் குற்றம் கூறுவதை போலவா அவர் நடந்து கொண்டார்? அப்படி பேசும் பெரியாரையே நம்புபவர்கள் இருக்கும்போது சோ சொல்வதை நான் ஏன் நம்பக் கூடாது? அவர் அளவுக்கு பத்திரிகையில் தனிமனித அவதூறுகளை தவிர்த்த பத்திரிகையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// //ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூடாது என நினைக்கிறார்கள். உள்ஜனநாயகம் உள்ள கட்சியில் இது ஒரு கஷ்டம். அதே சமயம் இரண்டாம் நிலை தலைவர்களும் இதனால் உருவாகலாம். பாஜக-வில் அவ்வகையில் பல ஆல்டெர்னேடிவ்கள் உள்ளன. அத்வானி, மோடி, ஜஸ்வந்த்சிங் என பல பேர். //
Dondu sir,
Substitute Tamil Nadu congress for BJP in the above quote. Except for the democracy statement, everything applies.(I doubt whether BJP has "internal democracy") Would Cho make similar comments about TNCC? All of us know the answer to that question. :-)
Cho tries to whitewash BJP's faults - and they have several. He (honestly) believes that BJP in center and Jayalalitha in TN is a good thing. His desire to see them in power skews his judgments, though he makes half hearted attempts to criticize them now and then.
@ஆர்வி:
அதே சமயம் அவர் காங்கிரஸ் பலவீனமாவதையும் விரும்பவில்லை. அமெரிக்க மாடலில் இரு பெரிய கட்சிகள் இருப்பது முக்கியம். ஆங்கிலத்தில் TINA (there is no alternative) factor என்பார்கள். சமீபத்தில் 1971-ல் வந்த முகம்மது துக்ளக் படத்தின் கடைசியிலும் துக்ளக் பதவியில் ஒட்டியிருப்பதற்கு அதுவே TINA காரணம் என்பதை படத்தைப் பார்த்தவர்கள் ஒத்து கொள்வார்கள். அதை சோ விரும்பவில்லை. ஆகவே ஒரு மாற்றாவது வேண்டும் என்கிறார்.
மற்றப்படி அவர் பிஜேபி சார்புடையவர் என்பது லோகத்துக்கே தெரியும். அப்படி இருந்தாலும் அவர் பிஜேபியை விமரிசனம் செய்யும் அளவுக்கு மற்ற கட்சி சார்புடைய பத்திரிகைகள் செய்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். இப்போது திமுக அரசு போவது மிக முக்கியம். அதே போல மத்தியில் காங்கிரஸ் அரசு போவதும். சோ அவர்கள் இதே மீட்டிங்கில் சொன்னபோது ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் அப்போதைய நிலையைத்தான் பார்க்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீட்டை அவர் சரியாக உபயோகித்து பல ஆக்கபூர்வ பணிகள் செய்வித்தார்///
ஆக்கப்பூர்வ பனிகள் எதுவென்று சொன்னால் நன்றாக இருக்கும். சோவின் அதி தீவிர பக்தர் என்ற முறையில் நீங்கள் நிச்சயம் இதை தெரிந்துவைத்திருப்பீர் என்ற நம்பிக்கை இருக்கிறது
@முத்து
இது பற்றி அவர் துக்ளக்கில் ஒரு பெரிய கட்டுரையே எழுதியுள்ளார். ஒன்று செய்யுங்கள், அவருக்கே எழுதி கேளுங்கள். இல்லாவிட்டால் பழைய துக்ளக்குகளில் தேடி படியுங்கள். ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
இது பற்றி துக்ளக் அலுவலகத்துக்கு போன் போட்டு கேட்டபோது இது சம்பந்தமான விவரமான கட்டுரைகள் 2003-2004 காலக்கட்டங்களில் துக்ளக்கில் வந்துள்ளன என கூறினார்கள். நான் படித்துள்ளேன் என மறுபடியும் உறுதி செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நானும் சோவின் எம்.பி.நிதி எவ்வாறு
செலவழிக்கப்பட்டது என்ற விவரங்களை--
ஃபோட்டோக்களுடன் கூடிய கட்டுரைகளில்
படித்திருக்கிறேன்.. இரண்டு மூன்று துக்ளக்
இதழ்களில் வெளி வந்துள்ளன! எனக்குத்
தெரிந்து வேறு எந்த எம்.பி.யும் இம்மாதிரி
விவரங்கள் வெளியிடவில்லை!!
Cho is educated wasting his brain and knowledge and spoining others.
Post a Comment