1/20/2009

ஒரு மாத திருப்பாவை விருந்து பிரமாதம்!!!

நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டபடி மார்கழி மாதம் முழுவதும் தனது வலைப்பூவில் திருப்பாவை பற்றி தினம் ஒரு பதிவாக போட்டுள்ளார். ஒரு மாதம் போனதே தெரியாமல் சென்று விட்டது.

பதிவுகளை ஆரம்பிக்கும் முன்னால் மார்கழி பற்றியும், பாவை நோன்பு குறித்தும் ஒரு சிறிய முன்னுரை கொடுத்தார். பிறகு தான் ஒவ்வொரு பாட்டையும் பற்றி போடும் பதிவுகளின் ஒட்டுமொத்த டெம்ப்ளேட்டையும் கொடுத்தார். என்ன இருந்தாலும் பொறியியல் நிபுணர் அல்லவா?

நான் சாதாரணமாக இம்மாதிரி ரிலிஜியஸ் பதிவுகளிலெல்லாம் ரொம்ப ஆர்வம் காட்டுவதில்லை. திருப்பாவையில் கூட உந்து மதகளிற்றன் என்னும் பாடலில்தான் எனக்கு அதிக ஆர்வம். அதற்கு முக்கிய காரணமே அது ராமானுஜர் சம்பந்தப்பட்டதுதான். அவரது அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:
“நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திருப்பாவை பாடல் இது. எனக்கு பிடித்த இப்பாடலை முதன் முறையாக சமீபத்தில் அறுபதுகளில் ரா. கணபதி கல்கியில் எழுதியிருந்ததை படித்தபோதே அப்பாடல் என் மனதில் நின்று விட்டது. பல ஆண்டுகள் கழித்து தேசிகன் அவர்கள் தனது பதிவில் எழுதியதையும் படித்தேன்.

திருப்பாவையை பாடியபடி திருக்கோட்டியூரில் பிட்சைக்குச் சென்ற ராமானுஜர், "உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்" பாசுரத்தை பாடிய வண்ணம் நடந்தபோது தான் திருக்கோட்டியூரில் இருப்பதை மறந்து, திருவில்லிபுத்தூரிலேயே இருப்பதாக என்ணிக் கொண்டாராம். தன்னையும் திருப்பாவை பாடும் ஆண்டாளின் தோழிகளில் ஒருவராகவே எண்ணிவிட்டாராம் என்று ரா. கணபதி அவர்கள் எழுதியிருந்தார்.

இப்பாடலை நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. இதுவரை யோசிக்காத கோணங்களில் எல்லாம் இதை வர்ணித்து விட்டீர்கள்”.

திருப்பாவை ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் அளிக்கிறது. ஆண்டவன் மற்றுமே ஆண் பக்தர்கள் அனைவரும் பெண்களே என்ற நாயக நாயகி பாவத்தையும் முன்னிருத்துகிறது.

நம்ம பாலா மாதிரியே பதிவர் கேஆர்எஸ்ஸும் திருப்பாவை பதிவுகள் போட்டுள்ளார். அவர் பாலாவின் பதிவுகளுக்கு வந்து இட்ட பின்னூட்டங்கள் சுவாரசியமானவை. உதாரணத்துக்கு மாலே மணிவண்ணா என்னும் துவங்கும் பாசுரம் பற்றிய பாலாவின் பதிவு. திருப்பாவை பற்றி பதிவுகள் போட்ட இருவரும் நடத்திய பின்னூட்ட விவாதத்தை இங்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடுவில் சங்கர் வேறு பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாலா
இதைக் கொஞ்சம் பாருங்கள்! ஒன்றுக்கொன்று முரண்படும் விளக்கமாக உள்ளது!

//சங்கநாதத்தின் முழக்கமானது நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும்//

//சங்கு - பிரணவ நாதம் ஏற்படுத்துவதால் மந்த்ராஸானத்தைக் குறிக்கிறது//

சங்கு - என்றுமே பிரணவ நாதம் தான்! ஆதார ஸ்ருதி என்பார்கள்!
போரில் கூட துவக்கத்தின் அறிகுறி தானே தவிர, பகைவரை ஓடச் செய்யும் அறிகுறி அல்ல! களம் விட்டு ஓட எக்காளம் ஊதப்படும்! சங்கு அல்ல!

ஒரு வேளை, பறை அறைதலை மாற்றிச் சொல்லிவீட்டீர்களோ?

//பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான். மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான். கொடியாக கருடன் வந்தான். விதானமாக ஆதிசேஷன் வந்தான்.//

நயமான விளக்கம்!
10:56 PM, January 12, 2009
ச.சங்கர் said...
பாலாஜி

சங்கின் மகிமை பற்றி எழுதும் போது ஏன் ஆண்டாளே இன்னொரு இடத்தில் குறிப்பிட்டதை இங்கு"ம்" குறிக்க மறந்தாய்? முன்னமே சொன்னது என்று விட்டு விட்டாயா?எந்த இடமா?யோசி...யோசி..யோசி
" வலம்புரி போல் நின்றதிர்ந்து "
அவன் கையில் உள்ள சங்கம் ஊதும் போது நின்று அதிருமாம்? யாருக்கா? " பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல" அப்படீன்னு உங்க ஹீரோ யாரைப் பாத்து சொல்றார்? அவங்களுக்குத்தான்.

போர்களிலும் பகைவர்களின் பெருந்தோல்விகளைப் பறை சாற்றும் விதமாக முழங்கி அவர்களது படைகளை சிதறடிப்பதும் சங்கங்கள்தான். "அஸ்வத்தாமா அதஹ" என்று சொல்லி "குஞ்சரஹ"விற்கு முன்னாலும் "போர் நடுசென்டரில்" முழங்கியது சங்க நாதம்தான்.

இப்படிப்பட்ட பெருமை
வாய்ந்த சங்கத்தை ஆண்டாள் தனது நோம்பிற்காய் எவ்வளவு அழகாய்க் கேட்கிறாள்.சூப்பர்.
7:52 PM, January 15, 2009
enRenRum-anbudan.BALA said...
சங்கர்,

மாற்றாருக்கு அச்சத்தைத் தரும் சங்கநாதம் என்பதற்கு இப்படி ஒரு விளக்கமா ? நல்லா இருக்கு :)

திருப்பாவையில் எத்தனை இடங்களில் சங்கம் வருகிறது என்று தெரியும்! அதென்ன "யோசி யோசி யோசி" ;-)

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ*

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

அத்துடன், பரமனது இருவகைப்பட்ட குணநலன்(அடிய்வரை ஆட்கொள்ளுதல், மாற்றாரின் மாற்றழித்தல்) போலவே, அவனது சங்கமும் இரு வேறு தன்மைகள் கொண்டுள்ளது போலும்!

ஆண்டாள் பரமனின் த்வயத் தன்மையை சுட்டிக் காட்டியிருக்கிறாள்.

நந்தகோபன் குமரன் - அடக்க ஒடுக்கமானவன்
யசோதை இளஞ்சிங்கம் - குறும்புகள் நிறைந்தவன்!

கதிர்-மதியம் போல் முகத்தான்

திங்களும் ஆதித்தனும் எழுந்தாற்போல்
**************

குருகையூர் கோன் பாடியதையும் நினைவு கூர வேண்டும்.

உளன் என அலன் என இவை குணமுடைமையில் உளன் அவன் இரு தகைமையொடும் ஒழிவிலன் பரந்தே !

எ.அ.பாலா
10:16 PM, January 15, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//போர்களிலும் பகைவர்களின் பெருந்தோல்விகளைப் பறை சாற்றும் விதமாக முழங்கி அவர்களது படைகளை சிதறடிப்பதும் சங்கங்கள்தான்//

போரில் தம் "வெற்றியைக்" குறிக்கத் தான் சங்கம் முழங்குவார்களே அன்றி, எதிர்ப் படைகளை "ஓட வைக்கவோ, சிதறடிக்கவோ" சங்கம் முழங்க மாட்டார்கள்!

//"அஸ்வத்தாமா அதஹ" என்று சொல்லி "குஞ்சரஹ"விற்கு முன்னாலும் "போர் நடுசென்டரில்" முழங்கியது சங்க நாதம்தான்//

"போர் நடுசென்டரில்" எல்லாம் முழங்கலீங்க திரு. ச.சங்கர்!

அன்றைய போர் "முடிந்து" அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் போது, வெற்றி முழக்கமாக அது முழங்கப்பட்டது! எதிர்ப் படைகளை ஓட வைக்கவோ, துரோணரைச் சிதறடிக்கவோ சங்கம் முழங்கவில்லை!

அந்தச் சங்க நாதத்தைக் கேட்டதால் ஆச்சாரியர் துரோணரும் பயந்து போய் சிதறி எல்லாம் ஓட வில்லை! மனம் ஒருமைத் தான் பட்டார்!

//"பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல"//

அதற்குப் பயன்படுவது சங்கு அல்ல! "அதிர வைக்க" சங்கைப் பயன்படுத்த மாட்டார்கள்! பறை கொட்டுவார்கள்! எக்காளம் ஊதுவார்கள்! வெட்சி-கரந்தை, வஞ்சி-காஞ்சி, உழிஞை-நொச்சி என்ற திணைகளையும் பாருங்கள்! பகைவர் சிதறுதலைக் காட்டும்!

பெருமாளின் சங்கம் = பிரணவ நாதம்!
பிரணவம் எதிரிக்கு ஆகட்டும், உற்றார்க்கு ஆகட்டும், நாதமே காட்டும்! மிரட்டாது! ஓட்டாது! ஓட வைக்காது!

"சும்மா அதுருதுல்ல" என்ற வீண் தம்பட்டங்களுக்கு, சுய தம்பட்டங்களுக்கு எல்லாம் பிரணவம் பயன்படுவது கிடையாது!

ஜெய முழக்கம் கேட்டு, தம் வீண் தம்பட்டங்கள் இனி செல்லாது என்று பகைவர்கள், தானாக ஓடினால் தான் உண்டு! :)

அதான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுச் சொன்னேன்
போரில் கூட சங்கநாதம் துவக்கத்தின்/முடிவின்/வெற்றியின் அறிகுறி தானே தவிர, பகைவரை ஓடச் செய்யும் அறிகுறி அல்ல!
9:18 PM, January 16, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திருப்பாவையில் எத்தனை இடங்களில் சங்கம் வருகிறது என்று தெரியும்!//

"எதற்காக வருகிறது" என்றும் தெரிய வேண்டும் அல்லவா? :)
எண்ணிக்கை முக்கியமல்ல!
எண்ணிக்-கை பற்றல் தான் முக்கியம்!

1. வலம்புரி போல் நின்று அதிர்ந்து = மழைக்காக முழக்கம்! வாழ உலகில்-அதற்காக முழக்கம்!

//சங்கம் ஊதும் போது நின்று அதிருமாம்? யாருக்கா? "பேரக் கேட்டாலே சும்மா அதுருதுல்ல// போன்ற தம்பட்ட முழக்கம் எல்லாம் பெருமாளுக்கு அல்ல! வெறும் ஆளுக்குத் தான்! :)

2. புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ = யாரையும் களத்தில் இருந்து ஓட்டிட முழங்கலை! கோயிலில் பிரணவமாய் முழங்குகிறார்கள்!

3. தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் = யாரையும் களத்தில் இருந்து ஓட்டிட முழங்கலை! கோயிலில் பிரணவமாய் முழங்குகிறார்கள்!

4. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன, பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் = நடுங்க+முரல்வன என்று சேர்த்துச் சொல்கிறாள்!

முரல்தல் வண்டுகளின் சப்தம்! வண்டினம் முரலும் சோலை என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்!
சங்க நாதம் அப்படித் தான் இருக்காம்! பூம்ம்ம்ம்ம் என்று ஓம்ம்ம்ம்ம் போல் ஒலிக்குது!

நடுங்க+முரல்வன என்பதில் நடுக்கம், ஒடுங்கத் தான்! "விலகி ஓடச்" செய்ய அல்ல! அதான் "நடுங்கி ஓட" என்னாது "நடுங்கி முரல்வன" என்கிறாள்! வண்டுகளின் ஹூங்கார ஓங்கார சப்தம்!

5. நாச்சியார் திருமொழியில் சொல்லாழி வெண்சங்கே என்ற பத்து பாசுரமும் இதே அடிப்படை தான்!

//சங்கநாதத்தின் முழக்கமானது நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி "விலகி ஓடச் செய்யும்"//

சங்கத் த்வனியின் பிரணவ நாதம் மாற்றார்க்கு நடுக்கம் கொடுக்கும்! அந்த நடுக்கமானது ஒடுக்கம் கொடுக்கும்!

அதனால் தான், "விலகி ஓடச் செய்யும்" என்பதை மட்டும் சுட்டிக் காட்டினேன்! "விலகி ஓடச்" செய்யாது! "விலக்குதல்" பிரணவ மேன்மை ஆகாது!

//ஆண்டாள் பரமனின் த்வயத் தன்மையை சுட்டிக் காட்டியிருக்கிறாள்//

துவய மந்திரத்தில் பிரணவம் இருக்காது! இதே தான் காரணம்! "விலகி ஓடச்" செய்யாது!
"விலக்குதல்" பிரணவ மேன்மை ஆகாது!

அதை மட்டுமே அடியேன் சுட்டிக் காட்டினேன்!
9:52 PM, January 16, 2009
ச.சங்கர் said...
பாலாஜி

நேற்றுப் பின்னூட்டம் இட்டதின் தொடர்ச்சியாக மேலும் சில பாசுரங்கள் "சங்கத்தின்" சார்பாக

பந்தார் விரளாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப்,
பாரதத்து
கந்தார் களிற்றுக் கழன் மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
.............................................................................................
..............................................................................................


என்றும்

கயம் கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல்

கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
வந்திலன், மறிகடல் நீர்
............................................................................................
.............................................................................................

என்றும்

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் போற்றியிருக்கிறார்

மேலும் பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியிலே

மயங்க வலம்புரி வாய்வைத்து வானத்
தியங்கும் எரிமதிரோன் றன்னை முயங்கமருள்
தேராழி யால் மறைத்த தென்நீ திருமாலே
போராழிக் கையால் பொருது ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என்றும் போர்க்களத்திலே எதிரிகளை மயங்கவும் , கலங்கடிக்கவும்வும் அடிக்க சங்க நாதம் செய்ததை அழகுற சொல்லியிருக்கிறார்கள்.


சங்க நாதம் "ப்ரணவ நாதம்" என்று பூர்வாச்சாரியர்கள் சொல்லியிருக்கின்றனர் என்பதை நானும் படித்திருக்கிறேன். ஆனால் மற்ற தாத்பரியங்கள் இல்லை என்று எங்கும் நான் படித்த நினைவில்லை .எனவே நீ குறிப்பிட்டது போல் எதிரிகளை பயந்து, கலங்கி , அதிரடிக்கும் சங்கு என்று நேரடி அர்த்ததில் கூறப்பட்டிருப்பது நானறிந்த வரையில் சரியாகத்தான் இருக்கிறது.
11:02 PM, January 16, 2009
enRenRum-anbudan.BALA said...
//"எதற்காக வருகிறது" என்றும் தெரிய வேண்டும் அல்லவா? :)
எண்ணிக்கை முக்கியமல்ல!
எண்ணிக்-கை பற்றல் தான் முக்கியம்!
//
சங்கர் கேட்டதற்காக இத்தனை இடங்களில் வருகிறது என்று குறிப்பிட்டதற்கு, **'எதற்காக வருகிறது?' 'என்றும்' தெரிந்து கொள்ளுங்கள்** என்றால், நான் சொல்ல எதுவுமில்லை!

சங்கம் பிரணவத்தைக் குறிப்பதால், அதன் முழக்கத்திற்கு எதிர்மறையான விளைவு இல்லை என்று அர்த்தமாகாது! முன்பே சொன்னது போல, ஓரு பாசுரத்திற்கு பன்முனை விளக்கம் என்பதை அதைச் சுவைப்பதற்கான அனுபவமாகக் கொள்ளல் வேண்டும்.

மேலும், நான் "த்வயத் தன்மை" என்று சொன்னபோது, த்வயம் = இரண்டு என்ற அர்த்தத்தில் சொன்னேன். த்வய மந்திரத்தைப் பற்றி எதுவும் சொல்ல வரவில்லை! அதனால், தான் நம்மாழ்வார் பாசுரத்தைச் சுட்டினேன், பரமனின் இருவகைப்பட்ட நிலைகளைக் குறிக்க மட்டுமே.

நன்றி.
11:37 PM, January 16, 2009
ச.சங்கர் said...
அன்புள்ள பாலா

வியாச பாரதத்தில் துரோண பர்வத்தில் வரும் சில சங்கு முழக்கங்களையும் சுட்டியுள்ளேன்.சம்ஸ்க்ருதம் எனக்கு தெரியாதாகையால் G M கங்குலி என்பவரால் மொழி பெயர்க்கப் பட்ட புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டியுள்ளேன்.

1)அபிமன்யு இறந்த அன்று இரவு அர்ஜுனன் மறுநாள் சூரிய மறைவுக்குள் ஜயத்ரதனை வதைப்பதாக சபதம் எடுக்கிறான். அப்படி சபதம் எடுத்ததும் அர்சுனனும் ,கிருஷ்ணனும் தத்தனது சங்கங்களான தேவதத்தத்தையும், பாஞஜன்யத்தையும் எடுத்து ஊதுகிறார்கள். அது போரின் தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல, வெற்றியைக் குறித்த முழக்கமும் அல்ல. அந்த சங்கங்களின் முழக்கம் பற்றிய மொழி பெயர்ப்பை கங்குலியின் வார்த்தைகளில் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்

"After Arjuna had taken that oath, Janarddana, filled with wrath, blew his conch, Panchajanya. And Phalguna blew Devadatta. The great conch Panchajanya, well filled with the wind from Krishna's mouth, produced a loud blare. And that blare made the regents of the cardinal and the subsidiary points, the nether regions, and the whole universe, to shake, as it happens at the end of the Yuga. Indeed after the high-souled Arjuna had taken the oath, the sound of thousands of musical instruments and loud leonine roars arose from the Pandava camp."

வியாசர் அந்த சங்க நாதம் உலகத்தையே உலுக்கியது என்று எழுதியிருப்பதாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2) மறுநாள் போரில் ஜயத்ரதனை காப்பதற்காக நிறைய மஹாரதர்கள் குவிந்து அர்சுனன் ரதத்தை சூழ்ந்து தாக்கும் போது கிருஷ்ணன் அர்ஜுனனை காண்டீவத்தை "டங்காரம்" செய்யச் சொல்லி கூடவே தன் சங்கமான பாஞ்ச ஜன்யத்தையும் ஊதுகிராராம்.

"Beholding that great bowman afflicted with the shafts of Dhananjaya and fallen into great distress, many warriors rushed to the spot, desirous of rescuing him. These, with many thousands of cars, well-equipped elephants and horses, as also with large bodies of foot-soldiers, excited with wrath, encompassed by large bodies of men, neither that car of theirs nor of Arjuna and Govinda could any longer be seen. Then Arjuna, by the might of his weapons, began to slaughter that host. And car-warriors and elephants, by hundreds, deprived of limbs, fell fast on the field. Slain, or in the act of being slain, those failed to reach the excellent car. Indeed, the car on which Arjuna rode, stood motionless full two miles from the besieging force on every side. Then the Vrishni hero (Krishna), without taking any time, said unto Arjuna these words: Draw thy bow quickly and with great force, for I will blow my conch.' Thus addressed, Arjuna drawing his bow Gandiva with great force, began to slaughter the foe, shooting dense showers of shafts and making a loud noise by stretching the bowstring with his fingers. Kesava meanwhile forcibly and very loudly blew his conch Panchajanya, his face covered with dust. In consequence of the blare of that conch and of the twang of Gandiva, the Kuru warriors, strong or weak, all fell down on the ground. The car of Arjuna then freed from that press, looked resplendent like a cloud driven by the wind. (Beholding Arjuna) the protectors of Jayadratha, with their followers, became filled with rage. Indeed, those mighty bowmen, the protectors of the ruler of Sindhus, suddenly beholding Partha, uttered loud shouts, filling the earth with that noise. The whiz of their arrows were mingled with other fierce noises and the loud blare of their conchs. Those high-souled warriors uttered leonine shouts. Hearing that awful uproar raised by thy troops, Vasudeva and Dhananjaya blew their conchs. With their loud blare (of their conchs), the whole earth, with her mountains and seas and islands and the nether regions, O monarch, seemed to be filled. Indeed, that blare, O best of Bharatas, filled all the points of the compass, and was echoed back by both the armies. Then thy car-warriors, beholding Krishna and Dhananjaya, became very much frightened."

இது நடந்தது போரின் அன்றைய தினத்தின் "நடு சென்டரில்தான்". இங்கு பாஞ்சஜன்யத்தை எடுத்தூதியது வெற்றியைக் குறிக்கவும் அல்ல.அந்த நாதத்தை கேட்ட பகை கெளரவ வீரர்கள் சிதறி விழுந்தனராம்.அப்படி விழுந்ததும் அர்சுனனுடைய ரதம் அந்தப் பகைவர் கூட்டத்தின் மத்தியிலிருந்து விடுபட்டதாம், வியாசர் சொன்னதாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளதைக் காணலாம். அதன் பின் மற்றும் போரின் "நடு சென்டரில்" ஒரு முறை இருவரும் எழுப்பும் சங்க நாதத்திற்கு பகைவர் பயந்தனர்(அ)நடுங்கினர் என்று கூறியிருப்பதையும் காணமுடியும்.

3,பின்னும் பகைவர்களை மிரட்டும் வண்ணம் எதிரெதிர் அணியிலுல்ளவர்கள் (கிருஷ்ணன், அர்ஜுனன் உட்பட) எப்படி சங்கம் ஊதினார்கள் என பின் வரும் விளக்கத்தில் சொல்கிறார்

"Those foremost of men, taking up their conchs blew them, filling O king, the welkin and the earth with her seas (with that blare). Then those foremost ones among the gods, viz., Vasudeva and Dhananjaya, also blew their foremost of conchs on earth. The son of Kunti blew Devadatta, and Kesava blew Panchajanya. The loud blast of Devadatta, sent forth by Dhananjaya, filled the earth, the welkin, and ten points of the compass. And so Panchajanya also blown by Vasudeva, surpassing all sounds, filled the sky and the earth. And while that awful and fierce noise continued, a noise that inspired the timid with fear and the brave with cheers, and while drums and Jharjharas, and cymbals and Mridangas, O great king, were beat by thousands, great car-warriors invited to the Kuru side and solicitous of Dhananjaya's welfare, those great bowmen, filled with rage and unable to bear the loud blast of Arjuna's and Krishna's conchs, those kings from diverse realms supported by their respective troops, in rage blew their great conchs, desiring to answer with their own blasts the blasts of Kesava and Arjuna. The Kuru army then, urged forward by that blare of conchs, had its car-warriors, elephants, and steeds filled with anxiety and fear. Indeed, O lord, that host looked as if they that comprised it were ill. The agitated Kuru host, echoing with that blare of conchs blown by brave warriors, seemed to be like the welkin resounding with the noise of thunder and fallen down (through some convulsion of nature). 1 That loud uproar, O monarch, resounded through the ten points and frightened that host like critical incidents at the end of the Yuga frightening all living creatures. Then, Duryodhana and those eight great car-warriors appointed for the protection of Jayadratha all surrounded the son of Pandu."

இதற்கு மூல சமஸ்க்ருத ஸ்லோகங்கள் வேண்டுமாயினும் அறிந்தவர்களிடம் கேட்டுத் தருவது ஒன்றும் பெரிய காரியமன்று.அதே நேரத்தில் "அஸ்வத்தாமா அதஹ"விற்க்குப் பிறகு "குஞ்சரஹவிற்கு" முன் சங்கம் முழங்கியதாக S M கங்குலியின் ட்ரன்ஸ்லேஷனில் குறிப்பில்லை,ராஜாஜி பாரத மொழிபெயர்ப்பிலும் கூட குறிப்பில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.(அது உபன்யாச வழியாகக் கேட்டதுதான்)

பாஞ்ச ஜன்யத்தின் சங்கநாதம் அதிர வைக்கும், நடுங்க வைக்கும். சிதற வைக்கும், எதிரிகளை ஓட வைக்கும் என்று வியாசரும் சொல்லியிருக்கிறாராம்.

இதுவரை தொகுத்த தகவல்களை வைத்து நீ ஏன் "சங்கத்தின்" சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி தனிப் பதிவு போடக் கூடாது ??
3:08 AM, January 17, 2009
enRenRum-anbudan.BALA said...
சங்கர்,

சங்கநாதம் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி உள்ளது தங்கள் பின்னூட்டம் :) பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன், நன்றி !

இப்படியெல்லாம் எழுதுவதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பந்தம் தான் காரணம் போல் தெரிகிறது :) கோதை நாச்சியாருக்கும் நன்றி!

அபிமன்யு கொல்லப்பட்ட அன்று பார்த்தனுக்கு தேரோட்டிய் சாரதி கடுங்கோபத்தில் தன் பாஞ்சஜன்னியத்தை ஊதியதாக ராஜாஜியும் எழுதியதாகத் தான் ஞாபகம், அர்ஜுனன் சங்கெடுத்து ஊதியது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை.

எ.அ.பாலா
2:25 PM, January 17, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
திரு.ச.சங்கர் அவர்கள் தன் கருத்துக்களைத் தானே மறுத்து உரைக்கிறார்! :)

"கலங்கச்" சங்கம் வாய்வைத்தான்
"மயங்க" வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
"மயங்க" வலம்புரி வாய்வைத்து

என்று எம்பெருமானிடத்தில் மாற்றார், "கலங்கவும்","மயங்கவும்" தான் சங்க நாதம்! "விலகி ஓடச்" செய்ய அல்ல!

அதான் "விலகி ஓடச் செய்ய" என்று குறிக்க வேண்டாம் பாலா, என்று அடியேன் கேட்டுக் கொண்டேன்!
முந்தைய பின்னூட்டதில் நடுங்க+முரல்வன என்றும் எடுத்துக் காட்டினேன்!
உங்களின் மற்ற நய விளக்கங்களைப் பாராட்டவும் பாராட்டினேன்!

ஆனால் வழக்கம் போல் புரிந்து கொள்ளாமல்,
வெறுமனே திரட்டும் பொருட்டு,
திருச்சங்கம் வருகின்ற எத்துனை பாசுரங்களை இங்கே நீங்கள் எடுத்து ஆண்டாலும்......
அவற்றில் ஒன்றில் கூட "விலகி ஓடச் செய்யும் படி" இருக்காது! :)))

//சங்கம் பிரணவத்தைக் குறிப்பதால், அதன் முழக்கத்திற்கு எதிர்மறையான விளைவு இல்லை என்று அர்த்தமாகாது!//

அடியேனும் அப்படிச் சொல்லவில்லை! ஆயுதங்களுக்கு அனுக்ரஹ/நிக்ரஹ அம்சங்கள் உண்டு! ஆனால் தாமரை, சங்கம் இரண்டையும் கூட "ஆயுதம்" என்று சொல்வானேன்? என்பது தான் சூட்சுமம்! அவை எம்பெருமானிடத்து இருந்து "விலகி ஓடச் செய்யும் படி" இருக்காது என்று தான் குறிப்பிட்டேன்! "ஒடுங்குதலுக்கும்", "விலகி ஓடுதலுக்கும்" நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதைச் சற்று நிதானித்தால், உங்களுக்கே புரியும்!

//முன்பே சொன்னது போல, ஓரு பாசுரத்திற்கு பன்முனை விளக்கம் என்பதை அதைச் சுவைப்பதற்கான அனுபவமாகக் கொள்ளல் வேண்டும்//

அது தங்களுக்கும் பொருந்தும் அல்லவா? :)
பன்முனை, பல்தர விளக்கங்கள் அதைச் சுவைப்பதற்கான "அனுபவமாகக்" நீங்களும் கொள்ளல் வேண்டும்! :)

குறிப்பு:
இங்கே அடியேன் அடியேன் என்றது "மிகையான போலியான தன்னடக்கத்துக்கு" அல்ல! :)
அது வைணவ பரிபாஷை! பரிபக்குவம் புரிந்தால் பரிபாஷையும் புரியும்! :)

அது தான் நம்மாழ்வார் காட்டும், "மிகையான போலியான தன்னடக்கம்"! :)
அடியார், அடியார், தம் அடியார், அடியார் தமக்கு,
அடியார், அடியார், தம் அடியார், அடி யோங்களே!
9:11 PM, January 17, 2009
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சபதம் எடுத்ததும் அர்சுனனும் ,கிருஷ்ணனும் தத்தனது சங்கங்களான தேவதத்தத்தையும், பாஞஜன்யத்தையும் எடுத்து ஊதுகிறார்கள், அது போரின் தொடக்கமும் அல்ல,//

ஹா ஹா ஹா
ஆனால் சபதத்தின் தொடக்கம் அல்லவா? :)
அன்றைய போரின், அன்றைய காரியத்தின் தொடக்கம் அல்லவா?

//கிருஷ்ணன் அர்ஜுனனை காண்டீவத்தை "டங்காரம்" செய்யச் சொல்லி கூடவே தன் சங்கமான பாஞ்ச ஜன்யத்தையும் ஊதுகிராராம்//

அப்படி டங்காரமும், ஹூங்காரமும் செய்த பின்னர், "விலகி ஓட வில்லையே"?
ஜயத்ரதனைச் சூழ்ந்து காப்பாற்றத் தானே முனைந்தார்கள்? :)
கடைசியில் சக்கரத்தால் மறைத்து, பொழுது சாய்ந்தது போல், சாய்ந்த பின்னர் தானே, அவனை விட்டு விலகினார்கள்?

சங்கை ஊதியது "விலகி ஓடச் செய்ய" அல்ல!
சங்க நாதம் என்பது பிரதிக்ஞையின் அடையாளம், ஒடுக்கத்தின் அடையாளம், பிரணவத்தின் அடையாளம்!

ஓடுக்கம் என்பது வேறு! நீங்கள் சொன்ன "விலகி ஓடச் செய்யும்" என்பது வேறு!

இங்கே பேசு பொருள் நீங்கள் சொன்ன //நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும்// என்பது!
பகையை விரட்டவா ஆண்டாள் சங்கைக் கேட்டாள்? - இதுவே கேள்வி!

ஆம் எனில்,
1. யார் நோன்பின் பகைவர்?
2. இணங்காதாரையும் வீடு வீடாகச் சென்று அழைக்கும் கோதையின் கருணையுள்ளம், விரட்டவா சங்கைக் கேட்கும்? "விலகி ஓடச் செய்யவா" சங்கைக் கேட்கும்?
9:29 PM, January 17, 2009
enRenRum-anbudan.BALA said...
//"ஒடுங்குதலுக்கும்", "விலகி ஓடுதலுக்கும்" நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதைச் சற்று நிதானித்தால், உங்களுக்கே புரியும்!
//
சங்கு ஊதியபோது, பகைவர்கள் நடுங்கி ஒடுங்கினார்கள் என்பதிலோ, விலகி/சிதறி ஓடினார்கள் என்பதிலோ நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக நீங்கள் கருதுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. மேலும், இந்த வார்த்தை விளையாட்டை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை!

முதலில் "போரில் கூட துவக்கத்தின் அறிகுறி தானே தவிர," என்று கூறினீர்கள். அடுத்தபடியாக "துவக்கத்தின்/முடிவின்/வெற்றியின் அறிகுறி தானே தவிர" என்று சேர்த்துக் கொண்டீர்கள். அப்புறம் சற்று யோசித்து, "சபதத்தின் தொடக்கத்தையும்" சேர்த்துக் கொண்டீர்கள்! ஏன் என்று கேட்டு அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!

//அது தங்களுக்கும் பொருந்தும் அல்லவா? :)
பன்முனை, பல்தர விளக்கங்கள் அதைச் சுவைப்பதற்கான "அனுபவமாகக்" நீங்களும் கொள்ளல் வேண்டும்! :)
//
சுவைப்பதற்கான அனுபவமாக இருந்தால் கண்டிப்பாகச் சுவைக்கலாம்! நீங்கள் உள் உறைப் பொருளையும், நேரான பொருளையும் ஒப்பிட்டுப் பேசியதால் இப்படி சொல்ல வேண்டியதாயிற்று. முன்னமே "புள்ளும் சிலம்பின காண்" பாசுர பின்னூட்டத்திலும், பெரியாழ்வார் எப்படி ஆண்டாளுக்கு "பிள்ளாய்" ஆவார் என்றபோது, இதையே தான் சொன்னேன்.

//அது வைணவ பரிபாஷை! பரிபக்குவம் புரிந்தால் பரிபாஷையும் புரியும்! :)//
உங்கள் அளவு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு எனக்கும் பரிபக்குவமும், பரிபாஷையும் புரியும் என்றே நினைக்கிறேன்! மற்றபடி, பகவத் சங்கல்பம் தான்!

//அது தான் நம்மாழ்வார் காட்டும், "மிகையான போலியான தன்னடக்கம்"! :)
அடியார், அடியார், தம் அடியார், அடியார் தமக்கு,
அடியார், அடியார், தம் அடியார், அடி யோங்களே!
//
இது போன்ற, "ஆழ்வார் குறித்த நகைச்சுவை" தயவு செய்து இங்கு வேண்டாமே :-(

//2. இணங்காதாரையும் வீடு வீடாகச் சென்று அழைக்கும் கோதையின் கருணையுள்ளம், விரட்டவா சங்கைக் கேட்கும்? "விலகி ஓடச் செய்யவா" சங்கைக் கேட்கும்?
//
ஆய்ப்பாடியில் (அல்லது கோபியரில்) "இணங்காதார்" யாரும் கிடையாது! ஆண்டாள், உறக்கத்தில் சுகம் காண்பவர்களை, துயிலெழுப்புகிறாள். நோன்பிருந்து, அவர்களும் கண்ணபிரான் அருளுக்கு பாத்திரமாக விழைகிறாள், 'ததீயரோடு சரணாகதி' என்ற வைணவக் கோட்பாட்டின் படி. அவர்கள் அனைவரும் அடியவரே, "இணங்காதார்" இல்லை!

"அவரவர் தமதமது அறிவறி வ்கைவகை" கருத்துக்களை சொல்லியாகி விட்டது. போதும் என்று நினைக்கிறேன். நன்றி.
எ.அ.பாலா


நான் இந்த விவாத மழையை பார்த்து ரசித்ததோடு நின்று கொண்டதற்கு முக்கியக் காரணமே என்னிடம் அதை செய்வதற்கான சரக்கு லேது என்பதனாலேயே.

திருப்பாவையின் விசேஷம் என்றுதான் கூறவேண்டும். நாத்திகர் என தன்னை கூறிக்கொள்ளும் கோவி. கண்ணனே பதிவு போட்டுவிட்டார்ல!!. அவர் சுட்டியவை கேஆரெஸ்ஸின் பதிவுகளை. மிகவும் பாராட்டியுள்ளார். பேஷ், பேஷ், மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

கோவி.கண்ணன் said...

//நாத்திகர் என தன்னை கூறிக்கொள்ளும் கோவி. கண்ணனே பதிவு போட்டுவிட்டார்ல!!. அவர் சுட்டியவை கேஆரெஸ்ஸின் பதிவுகளை. மிகவும் பாராட்டியுள்ளார். பேஷ், பேஷ், மிக்க மகிழ்ச்சி.
//

டோண்டு சார்,

நான் என்னை நாத்திகன் என்றோ ஆத்திகன் என்றோ எங்கும் கூறிக் கொள்ளவில்லை. எந்த ஒரு கொள்கை சார்ந்திருந்தாலும் அதில் உள்ள தீமைகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத மரபு. எனவே கொள்கை சார் கட்டமைப்பில் நான் சிக்கிக் கொள்ள விரும்புவதே இல்லை.

நீங்கள் இந்த பதிவு போட்டதற்கு நான் தான் காரணமா ?

மகிழ்ச்சி !

dondu(#11168674346665545885) said...

என்றென்றும் பாலா அவர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க எனக்கு மின்னஞ்சலில் வந்த அவரது பின்னூட்டத்தை இங்கு பதிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

*****************************
ராகவன் சார்,

நன்றி.

ஆண்டாளுக்கே விளம்பரம் தருகிறீர்கள்(?) உங்களுக்குப் புண்ணியம் தான் :)

//நீங்கள் இந்த பதிவு போட்டதற்கு நான் தான் காரணமா ?
//
இதென்ன கலாட்டா ? தயவு செய்து பதிவின் உண்மையான நோக்கத்தை விளக்கி விடவும் ப்ளீஸ் :-)

தங்களின் "உந்து மதகளிற்றன்" பிரேமை நான் அறிந்தது தான்!

//
நான் இந்த விவாத மழையை பார்த்து ரசித்ததோடு நின்று கொண்டதற்கு முக்கியக் காரணமே என்னிடம் அதை செய்வதற்கான சரக்கு லேது என்பதனாலேயே.
//
நல்ல முடிவு தான்! விவாதம் "ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கமுதைத்த சரமழை போல" நடந்தது. பல தகவலகள் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.

எ.அ.பாலா

பி.கு: கமெண்டை உங்கள் பதிவில் இட முடியவில்லை. பிளாகர் சொதப்புகிறது. மெயிலில் அனுப்புகிறேன். பிரசுரிக்கவும்.
****************************

Anonymous said...

சிங்கைப் பெரியாரையும் திருப்பாவை வாசிக்க வைத்த கேஆரெசுக்கு வாழ்த்துகள் :-)

dondu(#11168674346665545885) said...

//நல்ல முடிவு தான்!//
நிஜமே. இல்லாவிட்டால் கிரிக்கெட் மேட்சில் டெண்டுல்கர் பத்து கோல் போட்டு இந்தியாவை காப்பாறுவார் என்ற ரேஞ்சில் அப்போது நான் எழுதியதை போல இப்போதும் எழுத முடியுமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

திருப்பாவை பதிவும், பின்னூட்டங்களும் மிகவும் சுவையாக இருந்தன. நன்றி. திருப்பாவை படிக்க, கேட்க என்றுமே அலுக்காது, சுவை குறையாது. சென்ற இரண்டு ஆண்டுகளாக தினமும் காலை 4-30க்கு எழுந்து, திருப்பாவை படித்து வருகிறேன்.

வால்பையன் said...

புரியாத சப்ஜெக்டு
இதை முழுவதும் படிப்பார்கள் என நம்புரிங்களா!

நீங்க ரொம்ப நல்லவரு!

Vijay said...

[வெள்ளிக் கிழமை கேள்வி]
ஒபாமாவின் பதவியேற்பைப் பார்த்தீங்களா?

[வெள்ளிக் கிழமை கேள்வி]
பதவியேற்பு உரை பிடித்ததா?

[வெள்ளிக் கிழமை கேள்வி]
என்றைக்கு நம் நாட்டு பிரதமரும் இப்படிப் உணற்சி பூர்வமாகப் பேசும் (யாரோ எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் படிக்காமல்) தருணம் வரும்?

[வெள்ளிக் கிழமை கேள்வி]
நம் நாட்டு தொல்லைக் காட்சி சானல்கள் அனைத்தும் கறுப்பு அதிபர் கறுப்பு அதிபர் என்று ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்? ஆனால் CNNஓ, BBC'ஓ அப்படிச் சொல்ல வில்லையே?

[வெள்ளிக் கிழமை கேள்வி]
இன்னமும் ஒபாமா மீதான காண்டு தீரவில்லையா?

[வெள்ளிக் கிழமை கேள்வி]
பதவியேற்கும் போது முதல் இரண்டு வார்த்தைகள் ஒழுங்காக வராமல் தடுமாறினாரே கவனித்தீர்களா?

Anonymous said...

1.மகா கவி பாரதியார் பக்திநெறி லிருந்து சித்தர் நெறிக்கு உயர்ந்தார்.பின் அவரால் முக்திநெறிக்குள் செல்லவிடமால் தடுத்தது எது?
2.பாரதியார் பணியாற்றிய மதுரை உயர்நிலைப்பள்ளியை மத்திய அரசு நினைவுச் சின்னமாய் மாற்றும் செயலுக்கு மாநில அரசின் பராமுகம் ஏன்?
3.நாட்டுடைமை ஆக்கப் பட்ட பாரதியாரின் கவிதை தொகுப்பில், அவரால் எழுதப் படாத சில பிற சேர்க்கைகள் சேர்ககப்பட்டுள்ளன என்ற பாரதியாரின் பேத்தி விஜயபாரதியின் குற்றச்சாட்டு பற்றி?
4.நெருங்கிய நண்பர்களாய் இருந்த வ.உ.சி,சிவா ஆகிய இருவரிடம் கடைசி காலத்தில் பாரதியாரின் நட்பின் நெருக்கம் குறைந்து காணப் பட்டதற்கு காரணம்?
5.பாரதியாரின் புரட்சிக் கருத்துக்களில் ஈர்க்கபட்டு தன் பெயரை பாரதிதாசன் என வைத்துக் கொண்டார் பகுத்தறிவு வாதி புரட்சிக் கவிஞர்.தற்கால பகுத்தறிவுத் தலைவர்கள் பாரதியை பாரட்டும் விகிதம் சற்று குறைவாயிருப்பதன் காரணம்?

Anonymous said...

6.அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபோவம் எப்படி?
7. முன்னாள் அதிபர் புஷ்ஷின் நிர்வாகத்தை விட நல்ல நிர்வாகம் கொடுப்பரா?
8.அமெரிக்கா பொருளாதாரச் சரிவிலிருந்து மீடகப்படுமா, ஓபாமாவால்?
9. அவரது கொள்கையால் இந்தியாவுக்கு நன்மை அதிகமா?தீமை அதிகமா?
10.அமெரிக்காவை ஆளும் கட்சிகளின் பற்றிய உங்கள் மனநிலையில் மாற்றம் வருமா,ஒரு வேளை ஓபாமா நல்ல நிர்வாகம் செய்தால்?

Anonymous said...

11.தமிழக அரசியல் கட்சிகளில் உறுப்பினர் எண்ணிக்கையில்( ஒரு கோடி) திமுக முன்னணி உண்மையா?
12.சென்னையில் படித்தவர்கள்,பாமரர்கள்,நடுத்திர வர்க்கம் இவர்கள் மத்தியில் தொடர்ந்து திமுகவுக்கு ஜே ஜே .உங்கள் கருத்து?
13.அரசு ஊழியர்கள தான் தேர்தலில் முக்கிய துருப்புச் சீட்டு என்று அடிப்படையான உண்மை கூட புரிந்து கொள்ளாத கான்வெண்ட் ஜெயலலிதாவிட,சாமானிய கலைஞர் சமார்த்தியசாலிதானே?
14.காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் தீய நோக்கோடு ஜெயலலிதா தெரிந்தே இலங்கை தமிழர்
பிரச்சனையில் எதிர் கருத்து தெரிவிக்கிறார் என்ற வீரமணியின் குற்றச்சாட்டு?
15.காங்கிரஸ்,திமுக,விஜயகாந்த் கூட்டனி ( பேச்சுவார்த்தை நடைபெறுகிறது-கலைஞரின் சம்மதமும் ரெடியாம்))அமைக்கும் சமயத்தில்,ஜெயலலிதா மற்ற எல்லாக் கட்சிகளின் துணையோடும்( பாஜகவுடன் மட்டும் ரகசிய உடன்பாடு),ரஜினியின் ஆதரவோடும் நாடளுமன்ற தேர்தலைச் சந்தித்தால்? முடிவு என்னவாகும்?

Anonymous said...

16.கிராமங்களில் இருந்து நகருக்கு வந்து செல்வந்தராய் மாறியுள்ளவர்களில் தனது கிராமத்தை மறக்கமால் அதன் முன்னேற்றதிற்காக பாடுபடுவோரில் தங்களை மிகவும் கவர்ந்தவர் யார்? விளக்குக?
17.சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால் அதிகம் பயன் பெரும் கிராம(ரியல் எஸ்டேட் விலையேற்றம்) மக்கள் அதனை எதிர்ப்பது ஏன்?
18.சென்னை புற நகர் விரிவாக்கம் நான்கு திசைகளில் எந்த,எந்த ஊர்வரை சென்றுள்ளது?
19.செங்கல்பட்டும் சென்னையும் ஒன்றாய்விடும் போலுள்லதே?
20.மென்பொருள் வணிகத்தில் உருவாகிவரும் தேக்க நிலை,சென்னை அடுத்து உள்ள கிராமங்களில் விஷம் போல் ஏறிய காலிமனை விலையை கட்டுக்குள் கொண்டு வரத்தொடங்கிவிட்டதா?

Anonymous said...

21.போலி டோண்டு காலங்கள் போல் இப்போது ஹேக்கர்ஸ் காலம் போலுள்ளதே?
22.கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா/
என்பது போல் உள்ளதே பதிவுலகில் நடக்கும் சமாச்சாரங்கள்?
23.பதிவுலகம் டல்லடிப்பதாய் எழும் கருத்து உண்மையா?
24.தமிழ்மணம்,தமிழிஸ் ஒப்பிடுக?
25.உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தைத்தவிர வேறு எந்த தமிழ் திரட்டிகளில் இணைப்பு கொடுத்துள்ளீர்கள் ?

Anonymous said...

\\வால்பையன் said...
புரியாத சப்ஜெக்டு
இதை முழுவதும் படிப்பார்கள் என நம்புரிங்களா!

நீங்க ரொம்ப நல்லவரு!\\


.)

Anonymous said...

நான் இந்த விவாத மழையை பார்த்து ரசித்ததோடு நின்று கொண்டதற்கு முக்கியக் காரணமே என்னிடம் அதை செய்வதற்கான சரக்கு லேது என்பதனாலேயே.
---------------------------------

This is Dondu Sir Punch !!!!!!!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது