அனானி (29.01.2009 காலை 06.06-க்கு கேட்டவர்):
1. ராஜாஜி ஆட்சி-காமராஜ் ஆட்சி நிறை குறைகளை பட்டியலிடுக?
பதில்: இரண்டுமே நல்ல ஆட்சிகள்தான். ராஜாஜி காலத்தில் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்பாக கோட்டையில் அனுமதி இல்லை. மனிதர் அதில் கடுமையாகவே இருந்தார். அவர் பதவியிலிருந்த காலக்கட்டமான 1952-54 ஆண்டுகள் சோதனைகள் நிறைந்தவை ராஜாஜி அவர்கள் பல எதிர்ப்புகளை சமாளிக்க நேர்ந்தது. முக்கிய எதிர்ப்பு கட்சிக்குள்ளேயே இருந்தது. அது அவரை முழு அளவுக்கு செயல் படமுடியாது செய்தது. அதை வேண்டுமானால் அவர் ஆட்சியில் உள்ள ஒரு குறையாக அதை பார்க்கலாம். மேலும் அவர் சமரசங்கள் செய்து கொள்ள மறுத்ததையும் இன்னொரு குறையாகச் சொல்லலாம். அவரைப் பொருத்தவரை ஒரு குறுகிய காலத் திட்டமாகவே முதல்வராக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார். வேலை முடிந்ததும் அந்த ராஜரிஷி போய்க்கொண்டே இருந்தார். ராஜாஜி பற்றி நான் எழுதியவற்றை இங்கு பார்க்கலாம்.
ஆனால் காமராஜ் அவர்களை மிஞ்சி தமிழக காங்கிரசில் அவரது தலைமையை அச்சுறுத்த ஆட்கள் இல்லை என்பதால் அந்த அளவுக்கு அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. ராஜாஜியைப் போல இல்லாது அவர் எல்லோரையும் அணைத்து சென்றார். அவரைப் பற்றி நான் எழுதியதைக் காண இங்கு செல்லவும்.
2. பக்தவச்சலம்-அண்ணா ஆட்சி ஒப்பிடுக?
பதில்: இரண்டு ஆட்சிகளுமே குறுகிய காலக் கட்டம்தான் இருந்தன. மேலும், அதிக தவறுகள் செய்யும் முன்னாலேயே இரண்டும் முடிவுக்கு வந்தன.
3. அண்ணா ஆட்சி-கலைஞர் ஆட்சி வித்தியாசங்கள் என்ன?
பதில்: அண்ணா காலத்தில் மேம்போக்காக இருந்த ஊழல் கலைஞர் காலத்தில் முதுகலை பட்டம் பெறும் அளவுக்கு உயர்ந்தது. பக்தவத்சலம் ஆட்சி தேசீய கட்சிகளின் முடிவு காலமாக பார்க்கப்பட வேண்டும். அண்னாவின் ஆட்சியோ திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு ஆரம்ப காலம்.
4. கலைஞர் ஆட்சி-mgr ஆட்சி (first term ) உங்கள் கருத்து?
பதில்: கலைஞர் காலத்தில் ஊழல்தான் ஆட்சி செலுத்தியது என்று பார்க்கும் நேரத்தில் எம்.ஜி.ஆரின் முதல் இன்னிங்ஸில் ஊழல் அறவே இல்லை. அதே சமயம் அவர் சட்டென்று முடிவுகளும் எடுக்கத் தயங்கினார்.
5. கலைஞர் ஆட்சி-mgr ஆட்சி (the second term )உங்கள் கருத்து?
பதில்: கலைஞர் ஊழலில் முதுகலை பட்டம் பெற்றால் எம்.ஜி.ஆர். ஆட்சியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஊழலில் டாக்டரேட்டே பெறப்பட்டது.
6. ஜெயலலிதா - கலைஞர் ஆட்சி -செய்த நல்லவைகள் -தீமைகள் உங்களின் மதிப்பிடு?
பதில்: கலைஞர் சமத்துவபுரம், உழவர் சந்தை. ஜெயலலிதா மழை நீர் சேமிப்பு திட்டம். ஊழலில் இருவரும் டிரா என்றுதான் கூர வேண்டும். தீவிரவாதத்தை ஜெ தீவிரமாக எதிர்க்க, கலைஞர் சொதப்புவது தமிழகத்தின் துர்பாக்கியமே.
இருவரும் செய்த/செய்யும் தீமைகள் அரசியல் நாகரிகம் துளியும் லேது என்பதே. அப்படி வன்மத்துடன் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள். ஒரு கட்சி ஆதரவாளர்கள் வீட்டு திருமணத்துக்கு மற்ற கட்சியின் ஆட்கள் போனால் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்குதான் என்ற அளவில் இருதரப்பினருமே அநாகரீக நடவடிக்கையில் போட்டி வைக்கின்றனர்
7. ஸ்டாலின்- அழகிரி யார் மிகச் சரியான அரசியல் வாரீசு கழகத்துக்கு?
பதில்: திமுகவின் பார்வை கோணத்தில் அழகிரிதான் ஏற்றவர்.
8. தயாநிதி பாய்வதற்கு பதுங்குகிறாரா?
பதில்: பதுங்கும் புலியை பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை. தகுந்த இரை தந்து விட்டால் புலி மைதானத்தை விட்டு விலகும் என்றால் அது புலியாக இருக்குமா என கேள்வி வருவது இயல்புதானே?
9. சன் டீவியில் திறமையான நிர்வாகத்தை பார்க்கும் போது தயாநிதி தமிழக முதல்வராக வந்தால் வரவேற்பீர்களா?
பதில்: வரவேற்கலாம்.
10. கலைஞர் இப்படியெல்லாம் யோசித்து மீண்டும் பேரனை பக்கத்தில் அனுமதித்துள்ளாரா?
பதில்: ஆக, அழகிரிக்கு பேதி கொடுக்க முயல்கிறீர்கள் போலிருக்கிறது?
அனானி (29.01.2009 மாலை 06.39-க்கு கேட்டவர்):
1. பணம் காசு இருப்பவன், இல்லாதவன் இருவர்களுக்கு இடையே என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?
பதில்: ஒற்றுமை பணத்தின் மேல் ஆசை. வேற்றுமை ஒருவரிடம் பணம் உள்ளது. இன்னொருவரிடம் லேது, அவ்வளவே. பணம் உள்ளவனுக்கு தவறு செய்ய நல்ல வாய்ப்புகள் உண்டு. அதே சமயம் பணம் இல்லாதவனுக்கு திருடுவதைத் தவிர வேறு அனேக தீய காரியங்களை செய்ய ஃப்ண்ட்ஸ் இல்லை.
2. வரும் நாடளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்காமல், காசு பணம் ஏதும் கொடுக்காமல், சாதி ஓட்டு பார்க்காமல் இவர்கள் நின்றால்(வெவ்வேறு தொகுதிகளில்) யார் வெற்றிபெறுவார்கள்? காந்தி, நேரு, இ.காந்தி, காமராஜ், அண்ணா, mgr
பதில்: தமிழகத்தில் எம்.ஜி.ஆர். சமீப காலத்தில் அப்படி சாதி பார்க்காது நின்று வெற்றி பெற்றவர் விஜய்காந்த்.
3. அமெரிக்காவில் பொதுவுடைமை கருத்து புத்தகங்களுக்கு கிராக்கியாமே?
பதில்: எத்தைத் தின்னால் பித்தம் தணியும் என்னும் நிலையில் உள்ளனர் அமெரிக்கர்கள். ஆனால் அந்தோ கம்யூனிசம் செய்யக் கூடிய கந்தர கோளங்களை நேரடியாக அனுபவித்ததில்லை.
4. டாலர் எழுச்சி பின் வீழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதி இப்போது நிலைமை என்ன?
பதில்: டாலர் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு வியாபாரம் முதலில் டல்லடித்தாலும் ஏதோ சமாளித்தனர். ஆனால் இப்போது பொருளாதார வீழ்ச்சியில் நிலைமை அதிக மோசம் அடைந்துள்ளதாக நண்பர் அதியமான் தெரிவிக்கிறார்.
5. ஆன்மீகம் இந்தியாவில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
பதில்: அது பணம் பண்ணும் பிசினசாகி ரொம்ப நாளாயிற்றே.
அனானி (01.02.2009 காலை 05.59-க்கு கேட்டவர்):
1. நகைசுவை நடிகர் நாகேசின் படங்களில் தங்கள் மிகவும் ரசித்த படம் எது? காரணம்? பார்த்த ஆண்டு?
பதில்: நெஞ்சில் ஓர் ஆலயத்தில்தான் நான் நாகேஷை முதன் முதலாகப் பார்த்தேன். அப்போதெல்லாம் ரொம்ப இம்ப்ரஸ் செய்யவில்லை. முதலில் பார்த்து பிரமித்தது காதலிக்க நேரமில்லை படத்தில்தான். அதுவும் அழகென்ன முகமென்ன சிரிக்கட்டும் என்ற பாட்டுக்கு சச்சு நடனம் ஆட இவரது ஸ்டெப்ஸ் அபாரம். அதுவும் சார்ளி சாப்ளின் நடை அடடா அற்புதம் ரேஞ்சுதான்.
2. கதாநாயகனாய்,காமெடியனாய்,கழுத்தறுக்கும் வில்லனாய்,கண்ணிர் வரவைக்கும் குணச் சித்திர நடிகராய் இவர் போல் யாரும் வருவரோ இனி?
பதில்: கஷ்டம்தேன்.
3.அவரின் நடிப்பில் வெளிநாடு நகைச்சுவை நடிகரின் சாயல் யாருடைதாவது இருந்ததாக சொல்ல முடியுமா?
பதில்: ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயியை தான் ரோல் மாடலாகக் கொண்டதாக இவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். குமுதத்தில் கூட அவர் ஜெர்ரி லூயியின் பல போஸ்களை காப்பி எடுத்தவற்றை மூலம், காப்பி என்ற ரேஞ்சில் ஸ்டில்களாகக் காட்டினார்கள். சிவந்த மண் படத்தில் கடைசி காட்சியில் நம்பியார் புரட்சிக்காரர்களை ஒவ்வொருவராக கியூவில் வரச்செய்து அடையாளம் காண முயற்சிப்பார். அப்போது நாகேஷ் தொங்கு மீசையை வைத்துக் கொண்டு பயந்த வண்ணம் வருவார். அக்காட்சியில் அவரது தோரணை "Hook line and sinker" என்ற ஜெர்ரி லூயியின் படத்தில் அந்த நடிகர் ஒரு காட்சியில் வரும் தோரணையை நினைவுபடுத்தியது. பை தி வே இந்த ஆங்கிலப் படம் பற்றி இன்னொரு துணுக்கு செய்தி உண்டு. அதை பிறகு கூறுகிறேன்.
4. நகைசுவை நடிகர்கள் பிரபலமாய் இருக்கும் போது தேவை இல்லாத ஏதாவது ஒன்றை செய்து தங்கள் மார்க்கட்டை இழப்பது வாடிக்கையாய் உள்ளதே,ஏன்?விதியா?பணம்,பவுசு தரும் மமதையா?(என்,எஸ் கிருஷ்ணன் தொடங்கி வடிவேலு வரை)
பதில்: நகைச்சுவை நடிகர்களும் மனிதர்கள்தானே. பிறகு என்ன?
5. 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள நாகேசுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ கொடுக்கபடதாதற்கு முக்கிய காரணம் என்ன?( அவருக்கு அரசியல் தொடர்பு ஏது கிடையாதே?)
பதில்: சிவாஜி இருக்க எம்ஜிஆருக்கு சமீபத்தில் 1972-ல் ரிட்சாக்காரன் படத்துக்கு பாரத் அவார்ட் கொடுத்த போதே அவார்டுகளின் மதிப்பு சரிந்து விட்டது. பத்மஸ்ரீ என்பதும் அரசியல் விருதுகள் போல் ஆகிவிட்டது.
6. தீக்குளிப்பு போராட்டங்கள் இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் தொடங்கியதா அல்லது சுதந்திரப் போராட்ட காலத்திலே இது உண்டா?
பதில்: சுதந்திர போராட்ட காலத்தில் தீக்குளிப்பு போராட்டம் நடந்ததாக நான் எங்கும் படிக்கவில்லை. தென் வியத்நாமில் புத்த பிக்குகள் தங்களைத் தாங்களே தீவைத்து எரித்து கொண்ட நிகழ்ச்சிகள் பற்றி படித்துள்ளேன்.
7. மாணவர் போராட்டத்தால் வளர்ந்த திமுகவுக்கு இலங்கை தமிழர் நலம் காக்க நடக்கும் மாணவர் போராட்டம் கண்டு பயம் காரணமாய் கல்லுரிகளுக்கு விடுமுறை என்று வரும் குற்றச்சாட்டு பற்றி?
பதில்: குற்றச்சாட்டை விடுங்கள். மாணவர்கள் தம் படிப்பைத்தான் முக்கியமாக கவனிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்ததை நான் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன்.
8. விடுதலைபுலிகளுக்கு அமெரிக்காவின் ஆயுத உதவி செய்தி உண்மையா?(சைனாவின் ஆதிக்கத்தை ஆசியக் கண்டத்தில் கட்டுபடுத்த)
பதில்: இது என்ன புதுக்கதை? நான் இப்போதுதான் இதை கேள்வியே படுகிறேன்.
9.பெட்ரோல்,டிசல் விலை ஏறும் போதெல்லாம் கட்டணம், வாடகை ஏற்றும் ஆம்னி பஸ், ஆட்டோ உரிமையாளர்களின் காரிய மெளனம். அரசு தலையிடுமா? பகல் கொள்ளைக்கு சாட்சியாய் மாறுமா?
பதில்: தேர்தல் நெருங்கும்போது அரசு ஏதேனும் செய்யும் என எதிர்பார்ப்போம்.
10. இலங்கை பிரச்சனையில் கருணாநிதியின் சுகவீன காரீய மெளனத்தை, தாக்கி நடத்தப் படும் பலமான எதிர் பிரச்சாரம் அவரது நிச்சயிக்கப் பட்ட கூட்டணி தேர்தல் வெற்றியை பாதிக்குமா?
பதில்: தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினை தேர்தல் பிரச்சினையாஅக வரும் என நான் நினைக்கவில்லை.
11. தமிழ் நாட்டில் ஒரு ரூபாய் அரிசித் திட்டம் இருக்கும் போது அரிசியின் விலை ஏற்றம் நியாயமா? அரசும் கண்டு கொள்ளவில்லையே? கட்சியின் எதிர்காலத்திற்கு இது ஆபத்தில்லையா?
பதில்: சலுகை விலையில் பாட்டுக்கு சலுகை விலை. திறந்த சந்தையில் அதிகவிலை. அதுதானே வழக்கம்?
12. கள் இறக்கும் போராட்டம் வெற்றி பெற்ற பின்னாலும் தொடரவில்லையே? ஏன்?(பாஜக இதை சப்போர்ட் செய்தும்)
பதில்: வெற்றி என்று எதை கூறுகிறீர்கள்? கள்ளுக்கடைகள் திறந்தால்தான் போராட்டம் வெற்றி பெற்றதாகக் கருத இயலும். பாஜகவுக்கு இதில் கூட கொள்கை இருக்கிறதா என்ன?
13. கரும்பு விவசாயிகளின் டன்னுக்கு 2000 கோரிக்கை நியாயம்தானே? அரசு தனியாரின் கொள்ளைக்கு துணை போகுவதாய் சொல்லும் செ.நல்லசாமியின்(யாதும் ஊரே யாவரும் கேளிர் -ஆசிரியர்-அரசலூர்-ஈரோடு மாவட்டம்)குற்றச்சாட்டு பற்றி?
பதில்: இதில் உள்ள உள்விவரங்கள பற்றி எனக்கு தெரியாது.
14. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறதே, அடுத்த தலைவலி தமிழக முதல்வருக்கு?
பதில்: ஒரு மழை வந்தால் நன்றாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் முதல்வருக்கு தலைவலி நிச்சயம்.
15. மதுரை இளவரசின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளர்ப்பு மகன்(ஜெ-சசி காலம்) திருமண ஆடம்பரங்களை நினைவுபடுத்துகிறதே? அடுத்து?
பதில்: விநாச காலே விபரீத புத்தி.
16.ஆற்காட்டார் மின்வெட்டுக்கு 100% விடுதலை என்கிறாரே? இது எப்படி சாத்தியமாகியது? தேர்தல் ஏதும் வருதா?
பதில்: பொருளாதர மந்தம் காரணமாக பல துணைத் தொழில்கள் மந்தமாக உள்ளன. ஆகவே மின் தேவை குறைந்துள்ளது. மேலு குளிர்க்காலம் அல்லவா, ஏ.சி. லோடுகள் குறைவுதானே.
17. மதிமுக கொபசெ நாஞ்சில் சம்பத்தின் திருமங்கல தியாகம் (தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்தது) பற்றிய பேச்சை செய்த்தித்தாளில் படித்தீர்களா?
பதில்: இல்லை, பார்க்கவில்லையே. என்ன சொன்னார்?
18. சன் தொலைகாட்சி உருப்படாத திரைப்படங்களைக் கூட கூடுதல் விலைக்கு வாங்கி தனது ஊடக பலத்தாலும் ,குயுக்தி விளம்பரத்தாலும் காசு பார்க்கும் அம்பானியிசம் பற்றி?
பதில்: சாமர்த்தியம் இருக்கிறது செய்கிறார். இதிலென்ன பிரச்சினை?
19.அரசு தொலைக்காட்சிக்கு செலவளித்த அரசின் பணம் அரோகராவா? ஜெயித்தது அழகிரியா?தயாநிதியா? கலைஞரா? குபேர மகாராஜாவா?
பதில்: யார் ஜெயித்தார்கள் என்ற கேள்வியை விட யார் தோற்றார்கள் என்ற கேள்வி சுலபம். தோற்றது மக்கள்.
20.ஸ்பெக்டரம் ஊழல் குற்றச் சாட்டு இன்னுமொரு புஸ்வானமா? இடதுகளின் மெளனம்? காம்பிரமைஸ்?
பதில்: திமுக மட்டும் காசு பார்த்திருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டிருக்கும் அவசியமே வந்திராது. இது இப்போதைக்கு அமுங்கிப் போனது என்பதே எல்லோரும் கூட்டாக சேர்ந்து செயல்பட்டார்கள என சொல்ல வைக்கிறது. இடதுசாரிகளது வாயை அடைக்க நந்திகிராம் விஷயம் போதாதா?
21.அதிமுக தலைவியின் விடுதலைப் புலி மீது தீவிர எதிர்ப்பு வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும், சிக்கலில் இருக்கும் அதிமுகவினர் நிலை?
பதில்: மன்னிக்கவும், தமிழ் ஈழம் தமிழக தேர்தல்களில் ஏதும் இடம் வகிப்பதாகத் தெரியவில்லை, அப்படியிருந்தால் திருமங்கலத்தில் ஒரு கட்சி கூட பிரசாரத்தில் அதை பற்றி பேசவில்லையே என சோ கேட்டிருப்பது பொருளுடையதாகவே தோன்றுகிறது.
22. விஜயகாந்த்தும் இந்த ஒதுங்குவது காங்கிரஸ் கூட்டணிக்காகவா?
பதில்: விஜயகாந்தும் பக்கா அரசியல்வாதியே. ஆனால் தனது சக்திக்கு மீறி ஆசைப்படுகிறார். அவர் இப்போது இருக்கும் நிலையில் திமுகவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் செயல்பாடு திமுகவுக்கே சாதகமாக போகும் அபாயம் உள்ளது.
23.ஒருவேளை கொரில்லாப் போர் முறையில் இலங்கை ராணுவம் தோற்று பிரபாகரன் வென்றால்?
பதில்: இலங்கைக்கு சர்வநாசம் நிச்சயம், ஏனெனில் சிங்கள தீவிரவாத கும்பல்களும் உள்ளன. அவையும் கொரில்லாப் போரில் இறங்கும். யார் யாரை அடிக்கிறார்கள் என்பது கூட தெரியாத வண்ணம் குழப்பம் மிஞ்சும்.
24. பணவீக்கம் குறைந்தும் விலவாசி குறையவில்லையே? இவர்களின் கணக்கு எந்த அடிப்படையில்?
பதில்: சாதாரணமாக விலைவாசி உயர்ந்தது உயர்ந்ததுதான். அது மேலே உயரும் வேகம் பற்றித்தான் இங்கு பேச்சு. உதாரணத்துக்கு அரிசி விலை போன ஆண்டைவிட இந்த ஆண்டு 100 ரூபாயிலிருந்து 10 சதவிகிதம் உயர்ந்து 110 ஆகிறது என வைத்து கொள்வோம். இப்போது விலை 110 ரூபாய். இந்த ஆண்டிலிருந்து இன்னும் ஐந்து சதவிகிதம் உயர்ந்தால் அடுத்த ஆண்டு விலை 116.50 ரூபாய். இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் உயர்வு 10 ரூபாயிலிருந்து ஐந்தரை ரூபாயாக குறைந்தது. ஆனால் அதுவே அரிசி விலை 10 சதவிகிதம் இரண்டாம் ஆண்டில் வீழ்ச்சி பெற்றால், விலை 99 ரூபாயாகும். முதலில் சந்தோஷமாக தோன்றினாலும் விவசாயி வயிற்றில் புளி கரைக்கும். ஓரளவுக்கு பிறகு அவன் இது காரியத்துக்காகாது என எண்ணி வயலை பிளாட் போட்டு விற்று விடுவான். மன்னிக்கவும் இதற்கு மேல் கூறி போர் அடித்தால் முரளி மனோகர் என்னை அடிக்கிறேன் என பயமுறுத்துகிறான்.
25. மென்பொருள் துறையில் பலர் சொல்லுவது போல் உள்ள தேக்க நிலையின் உண்மை நிலையென்ன? பலுனை ஊதி பெரிசாக்கும் நண்பர்களுக்கு கிடைப்பது என்ன?
பதில்: அவர்கள் பாவம்.
எம்.கண்ணன்:
(இந்த முறை கேள்விகள் எல்லாம் ஐயங்கார் / பிராமண சம்பந்தப்பட்டது)
1. 'எங்கே பிராமணன்' - சோவின் கதை ஜெயா டிவியில் திங்கள் முதல் தொடராக (8pm) வருகிறதே. பார்க்கிறீர்களா?
பதில்: நீங்கள் சொல்லித்தான் அதையே நான் அறிந்தேன். உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தக்கூட செய்யாது தொலைகாட்சிப் பெட்டிக்கு ஓடினேன். மணி சரியாக எட்டாயிற்றே. பை தி வே இன்றுதானே (02.02.2009) ஆரம்பம்? உங்களுக்கு முதற்கண் நன்றி.
2. ஞாயிறன்று காட்டப்பட்ட முன்னோட்டம் பார்த்தீர்களா? யாராவது கேஸ் போட்டு தடை வாங்குவார்களா? இல்லை இது பிராமணர்களை கிண்டல் செய்யும் சீரியல் என குளிர் காய்வார்களா?
பதில்: விஷயமே திங்களன்று மாலை 07.55-க்குத்தானே உங்கள் கேள்வி மூலம் அறிந்தேன். ஆகவே ஞாயிறன்று நிகழ்ச்சியை பார்க்கவில்லை. சோ அவர்களின் இக்கதையை நான் ஏற்கனவே சமீபத்தில் எழுபதுகளில் துக்ளக்கில் தொடர்கதையாக படித்துள்ளேன். பார்ப்பனரை கிண்டல் செய்து அதில் ஒன்றும் வரவில்லை. எல்லாமே யதார்த்தமாகாத்தான் எழுதப்பட்டன.
3. பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா?
பதில்: நடிப்புத்தானே இதில் என்ன பிரச்சினை? சோப்ராவின் மகாபாரதத்தில் அர்ஜுனனாக நடித்தது ஒரு இசுலாமியர். அதற்கென்ன இப்போது? பம்பாய் படத்தில் இசுலாமியராக கிட்டியும் இந்துவாக நாசரும் நடித்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?
4. ஸ்ரீரங்கம் ரங்கராஜ ஐயங்கார்களான சுஜாதாவும் வாலியும் ஏன் இன்னோர் ஐயங்காரான ஜெயலலிதாவைவிட கலைஞருக்கு அதிகம் கொடி பிடித்தார்கள்? அதுவும் வாலியின் ஜால்ரா சத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறதே?
பதில்: அவர்களைத்தான் கேட்க வேண்டும்.
5. 'எங்கே (செட்டியார் / பிள்ளைமார் / நாடார் / சைவ வேளாளர் / கவுண்டர் / தேவர்........)' என்றெல்லாம் சீரியல் எடுத்துவிடவோ தமிழ் தொலை காட்சிகளில் ஒளிபரப்பிட முடியுமா?
பதில்: அதாவது எங்கே வன்னியர் என்ற பெயரில் பாமகவின் தொலைகாட்சி சேனலில் வராது என்கிறீர்கள்?
6. மராட்டியரான ரஜினி தனது பெண் (ஐஸ்வர்யா) திருமணத்தின் போது மனைவியின் ஐயங்கார் முறைப்படி (மடியில் அமர்த்தி) கன்னிகாதானம் செய்து தனுஷுக்கு திருமணம் செய்து கொடுத்தார். பரமக்குடி சீனிவாசய்யங்காரின் இளைய புத்திரர் கமல்ஹாசன் அதுபோல் தனது மகள் திருமணத்தை நடத்துவாரா?
பதில்: கமல் ஒரு ஐயங்கார் என மற்றவர்கள்தான் கூறுகிறார்கள். அவர் அவ்வாறு எங்கும் சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லையே.
7. சுஜாதாவின் 'சிங்கமய்யங்கார் பேரன்' நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா? அதில் சுஜாதா எழுப்பிய பல ஆதங்கங்கள் 'எங்கே பிராமணன்' தொடரில் சோ எழுப்பப்போவது ஏதாவது பூகம்பத்தை ஏற்படுத்துமா? (பிராமண சமூகத்தினரிடையே?)
பதில்: சுஜாதாவின் நாடகம் பார்த்ததில்லை. எங்கே பிராமணன் அற்புதமான கதை. திரைக்கதை எழுதுவது வெங்கட். ஆகவே நன்றாகவே இருக்கும்.
8. சோவின் 'எங்கே பிராமணன்' தொடர் எழுப்பும் கேள்விகள் படி - உங்களையோ உங்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் அல்லது நங்கநல்லூர் வாசிகளில் பலரை 'பிராமணர்' என இன்றைக்கு குறிப்பிடமுடியுமா?
பதில்: முடியவே முடியாது. யாருமே இப்போது உண்மையான பிராமணன் இல்லை.
9. ஜெயலலிதாவின் தந்தையார் ஜெயராம் - பற்றி செய்திகள் ஏதும் இல்லையே? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
பதில்: குமுதத்தில் ஜெயலலிதா எழுதிய தொடர்கதை அவரது அம்மா சந்தியாவுடையது. அதன்படி ஜெயராம் என்பவர் சரியான கணவனாக இல்லை. நல்ல தந்தையாகவும்தான் இல்லை என நினைக்கிறேன்.
10. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி ஐயங்காரை ஹிண்டு என்.ராம் ஐயங்கார் இப்படி இக்கட்டில் ஏன் மாட்டிவிட்டார்? மற்ற எந்த தேசிய / பிராந்திய செய்தி ஏடுகளோ / தொலைக்காட்சியோ கவனிக்காத ஒரு விஷயத்தை என்.ராம் இப்போது கிளப்பியிருப்பதும் ஒரு உள்நோக்கத்தோடுதான் என்பது போல தெரிகிறதே?
பதில்: இந்த பிரச்சினை பற்றி கருத்து கூறும் அளவுக்கு அதை நான் அறியேன்.
அனானி (02.02.2009 இரவு 10 மணிக்கு கேட்டவர்):
1. இலங்கைபிரச்சனையில் கருணாநிதியின் கரங்கள் காங்கிரஸால் கட்டப்பட்டுள்ளதைக் கண்டு வெகுண்டு பல பதிவர்கள் அவரை நிந்தித்து தொடர்பதிவுகள் பல வருவது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: கருணாநிதி அவர்களது கரங்கள் காங்கிரசால் கட்டப்பட்டுள்ளன எனக் கூறுவதை விடஅவரது சுயநல விசாரங்களே அவரை கட்டிப் போடுகிறது என்றுதான் கூற வேண்டும்.
2. இந்த விசயத்தில் உங்கள் ஆதரவு யாருக்கு?
பதில்: பரீட்சைக்கு பாதகம் ஏற்படாத வண்ணம் பாடங்களை படிக்க நினைக்கும் மாணவர்களுக்கே எனது ஆதரவு. அதைத்தான் எனது ஒரு பதிவிலேயே கூறி விட்டேனே.
3. மாணவர் போராட்டம் தீவிரமானால் என்னாகும்? (பக்தவச்சலனாருக்கு 1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஜெயலலிதாவுக்கு 2005 ல் அரசு ஊழியர் போராட்டம். கருணாநிதிக்கு 2009 ல் மீண்டும் மாணவர் போராட்டமா)?
பதில்: நான் ஏற்கனவேயே முந்தைய கேள்வியின் பதிலில் சுட்டியுள்ள பதிவில் கூறியது போல இந்த மாணவர் போராட்டம் 1965-ஐ நினைவுபடுத்துகிறது.
4. வைகோவின் புகழ் மீண்டும் கூடுவதாய் தெரிகிறதா?
பதில்: இதற்கு ஒரு அனானி தனது பின்னூட்டமாக ஒரு அவுட்டு சிரிப்பை தந்துள்ளாரே, அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வஜ்ரா:
1. தமிழக அரசு அனைத்துப்பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டுள்ளதே? (முத்துக்குமரன் என்பவர் தீ குளித்து இறந்த விவகாரத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கேள்வி)
பதில்: பதிலையும் நீங்களே கூறிவிட்டீர்களே. ஒன்றாக இருக்கும் மாணவர்கள் கும்பல் தரும் பாதுகாப்பில் உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ செய்து விடக்கூடும். ஆகவே கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து விடுதிகளையும் மூடினால், பலர் சொந்த ஊருக்கு செல்வது தவிர வேறு வழியில்லாமல் போக நேரிடும். அவரவர் குடும்பம் எந்த வித கஷ்டத்துடன் அவர்களை படிக்க வைக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பு வரும். அப்போதாவது தமது முக்கிய வேலை படிப்பது மட்டுமே என மாணவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? ஒரு சிலரே அவ்வாறு செய்யக்கூடும் என்ற நிலையிலும் பரவாயில்லைதானே. அதன்றி அப்படியே விட்டால் அத்தனை பேருமே குட்டிச்சுவராக அல்லவா போவார்கள்?
கிரிதரன், வெ.:
1. இப்பொழுது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள "பிரி பெய்ட்" ஆட்டோகள் பற்றி, ஆட்டோக்களை கடுமையாக சாடிய தங்களின் அபிப்பிராயம் என்ன?
பதில்: அவற்றின் கட்டண விவரங்கள், அவை நிஜமான சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பனவற்றையெல்லாம் வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.
அனானி: (04.02.2009 காலை 5.49-க்கு கேட்டவர்):
இந்தியாவிலிருந்து எங்கும் எந்த மொபைலுக்கும் குறைந்த கட்டணத்தில் பேசும் வசதி கொண்ட தொலைபேசி அழைப்பு அட்டைகளை இந்திய தொலைபேசித் துறை அறிமுகப்படுத்தப் போகிறது.
1.ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இதற்கும் ஏதும் தொடர்பு உண்டா? வளர்ந்த தொலைபேசி நிறுவனங்களை வெர்சூயல்(ஸ்வான் போன்றவை) ஆபரேட்டர்கள் சுவாகா செய்துவிடுவார்களா?
பதில்: எது எப்படியானால் என்ன. பொது மக்களுக்கு போட்டியினால் விலை குறைந்த நிலையில் சேவைகள் கிடைப்பது நல்லதுதானே.
2. எல்லா விலைவாசியும் ஏறும் போது இப்படி போட்டி போட்டு கட்டணக் குறைப்பு கடைசியில் இந்த தொழிலை நசித்துவிடாதா?
பதில்: கட்டணம் குறைந்தாலும் வால்யூம் அதிகரிக்கும் அல்லவா? கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாகத்தான் வரும்.
3. செல்பேசி சேவையில் மேலும் மேலும் ஆட்களை அனுமதிப்பது தொடர்கிறதே? சரியா?
பதில்: போட்டி அதிகரித்தால் தரமும் அதிகரிக்குமே, நல்லதுதானே.
4. தனியார் சேவைதாரர்களும் தங்கள் பங்குக்கு ஒரு கோடி இலவச மொபைல் போன்கள் கொடுத்து கல்க்கப்போறங்க போலுள்ளதே?
பதில்: பேஷ்
5. அரசு நிறுவனத்தின் வருமானத்தை அரசே குறைக்க முயல்வது போலிருக்கிறதே? அது ஒரு தந்தை தன் மகனையே கொல்லும் செயலல்லவா?
பதில்: இத்தனை நாட்களாக அரசு நிறுவனங்களுக்கு செல்லம் கொடுத்தார்கள். இப்போது போட்டியில் விடுகிறார்கள். நடக்கட்டும்.
6. தனியாருக்கு இப்படி மக்கள் செல்வத்தை தாரைவார்ப்பது பேராபத்தல்லவா?
பதில்: ஏன்?
7. அரசு நிறுவனம் இல்லாவிட்டால் இந்த பகாசூரர்கள் கட்டணத்தை அநியாயத்துக்கு ஏற்றிவிடமாட்டார்களா?(ஆம்னி பஸ்கார்ர்களே இதற்கு சாட்சி)
பதில்: ஆம்னிபஸ்கள் அட்டூழியத்துக்கு காரணமே அரசால் போக்குவரத்து வசதிகளை தானும் தர இயலவில்லை, தர நினைப்பவர்களுக்கு லைசன்ஸ் கொடுக்காது இழுத்தடிக்கிறது. நண்பர் அதியமான் இது பற்றி இன்னும் சுவைபட விஷயங்கள் தருவார்.
8. வெளிநாட்டு தொலை தொடர்புச் சேவையில்(ஐஎஸ்டி) அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தில்லயா?
பதில்: எப்படி கூறுகிறீர்கள்? நான் அவ்வாறு நினைக்கவில்லை.
9. பல பயங்கரவாதச் செயல்களுக்கு தனியார் செல்பேசிகள் பயன்பட்டதை பார்த்தபிறகும் இப்படி செய்வதுவிபரீதம் இல்லையா?யானை தன் தலையில் மண்ணை போடப் போகிறதா?
பதில்: பி.எஸ்.என்.எல் செல்பேசிகளையும்தான் இந்த விஷயத்தில் பயன்படுத்தியிருப்பார்களாக இருக்கும்.
வெங்கி என்னும் பாபா:
1. முதலில் ஜெயலலிதாவுடன் நட்பு ரீதியாக சந்திப்பு, பின்பு ஜெயலலிதா ஆதரவு ஆண்டு விழா பேச்சு, அடுத்து 'எங்கே பிராமணன்' தொலைக்காட்சி தொடர் ஜெயா டிவியில். இந்த மூன்றுக்கும் வியாபார ரீதியான யுக்தி இருப்பது போல எனக்கு தெரிகிறது. உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா? (சோ அவர்களைப் பற்றித்தான்)
பதில்: எது எப்படி போனால் என்ன, ஒரு அருமையான சீரியல் கிடைத்தது நமக்கு.
2. சோ அவர்கள் சுயநலமில்லா அப்பழுக்கற்ற தேசியவாதியா?
பதில்: அதிலென்ன சந்தேகம்?
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
3 hours ago
29 comments:
பதில்களுக்கு நன்றி.
21 டூ 25 பதில் ?
21.அதிமுக தலைவியின் விடுதலைப் புலி மீது தீவிர எதிர்ப்பு வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிந்தும், சிக்கலில் இருக்கும் அதிமுகவினர் நிலை?
22.விஜயகாந்த்தும் இந்த ஒதுங்குவது காங்கிரஸ் கூடணிக்காகவா?
23.ஒருவேளை கொரில்லாப் போர் முறையில் இலங்கை ராணுவம் தோற்று பிரபாகரன் வென்றால்?
24.பணவீக்கம் குறைந்தும் விலவாசி குறைய வில்லையே? இவர்களின் கணக்கு எந்த அடிப்படையில்?
25.மென்பொருள் துறையில் பலர் சொல்லுவது போல் உள்ள தேக்க நிலையின் உண்மை நிலையென்ன?
பலுனை ஊதி பெரிசாக்கும் நண்பர்களுக்கு கிடைப்பது என்ன?
இவ்வளவு பெரிய பதிவு போட்ட படிக்க ஆவுறதில்லே
MR. Dondu
kindly request please stop your BIG TIME BS.I am sick and tired of your Q&A
specially you don't have any rights to talk about srilankan tamils. We don't care about your answers. Tamil people are dying eveyrday. So try be a human.
Appreciate your help
Thanks
//21 டூ 25 பதில்?//
மன்னிக்கவும் எப்படியோ விட்டு போயிற்று. இப்போது சரி செய்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//kindly request please stop your BIG TIME BS.I am sick and tired of your Q&A//
அதை நீங்கள் படித்துத்தான் ஆக வேண்டும் என யாரேனும் கட்டாயப்படுத்தினார்களா உங்களை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//MR. Dondu
kindly request please stop your BIG TIME BS.I am sick and tired of your Q&A//
sick ஆன ஆஸ்பத்திரி போய் படுத்துக்கோ. இங்கன ஏன் வந்து புலம்பல்?
//specially you don't have any rights to talk about srilankan tamils. //
யாரு பேசலாம் யாரு பேசகூடாதுன்னு தேசிய தலைவர் பிரபாகரன் ஏதாவது ஆணை பிறப்பித்து இருக்கிறாரா?
//We don't care about your answers.//
அப்புறம் ஏன் வந்து இங்க படிக்கனும்
//Tamil people are dying eveyrday. So try be a human//
நீங்க போய் சண்டையை நிறுத்தி எல்லாரையும் காப்பாத்தலாமே..டோண்டு கேள்வி பதிலை நிறுத்தினால் சண்டை நின்று போய் விடுமா என்ன?
//Appreciate your help//
என்ன கொடுமை சார்
Thanks
முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!
ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...
முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!
அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?
முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...
நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!
பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!
தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!
வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.
//ஸ்டாலின்- அழகிரி யார் மிகச் சரியான அரசியல் வாரீசு கழகத்துக்கு?
பதில்: திமுகவின் பார்வை கோணத்தில் அழகிரிதான் ஏற்றவர்.//
alagiri anjanejan aayitre
thennagame avarallavaa!
//. கலைஞர் ஆட்சி-mgr ஆட்சி (the second term )உங்கள் கருத்து?
பதில்: கலைஞர் ஊழலில் முதுகலை பட்டம் பெற்றால் எம்.ஜி.ஆர். ஆட்சியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஊழலில் டாக்டரேட்டே பெறப்பட்டது.//
ithaiyum sollunga
when mgr was in usa,karunanithi requested people to permit him to rule the tamil nadu.He further promissed to hand over the power to mgr after his return.But it is rejected by the people.
//பக்தவச்சலம்-அண்ணா ஆட்சி ஒப்பிடுக?
பதில்: இரண்டு ஆட்சிகளுமே குறுகிய காலக் கட்டம்தான் இருந்தன. மேலும், அதிக தவறுகள் செய்யும் முன்னாலேயே இரண்டும் முடிவுக்கு வந்தன. //
muthaliyaar patriya aduththa pathiviukku ithu munnottaamaa?
//அண்ணா ஆட்சி-கலைஞர் ஆட்சி வித்தியாசங்கள் என்ன?
பதில்: அண்ணா காலத்தில் மேம்போக்காக இருந்த ஊழல் கலைஞர் காலத்தில் முதுகலை பட்டம் பெறும் அளவுக்கு உயர்ந்தது. பக்தவத்சலம் ஆட்சி தேசீய கட்சிகளின் முடிவு காலமாக பார்க்கப்பட வேண்டும். அண்னாவின் ஆட்சியோ திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு ஆரம்ப காலம். //
anna kaalam was without corruption
//சன் டீவியில் திறமையான நிர்வாகத்தை பார்க்கும் போது தயாநிதி தமிழக முதல்வராக வந்தால் வரவேற்பீர்களா?
பதில்: வரவேற்கலாம்.//
pottiyalarkalai thuvastham pannum thiramaiyaa?
//கலைஞர் இப்படியெல்லாம் யோசித்து மீண்டும் பேரனை பக்கத்தில் அனுமதித்துள்ளாரா?
பதில்: ஆக, அழகிரிக்கு பேதி கொடுக்க முயல்கிறீர்கள் போலிருக்கிறது?//
it is going to happen shortly.
there will be big family war in gopalapuram brfore the end of 2009.
thayanithi will win with colours.
//கலைஞர் இப்படியெல்லாம் யோசித்து மீண்டும் பேரனை பக்கத்தில் அனுமதித்துள்ளாரா?
பதில்: ஆக, அழகிரிக்கு பேதி கொடுக்க முயல்கிறீர்கள் போலிருக்கிறது?
it is expected that a big family war in gopalapuram before the end of 2009.
seyal veerar thayanithi will win in that battle
//பணம் காசு இருப்பவன், இல்லாதவன் இருவர்களுக்கு இடையே என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?
பதில்: ஒற்றுமை பணத்தின் மேல் ஆசை. வேற்றுமை ஒருவரிடம் பணம் உள்ளது. இன்னொருவரிடம் லேது, அவ்வளவே. பணம் உள்ளவனுக்கு தவறு செய்ய நல்ல வாய்ப்புகள் உண்டு. அதே சமயம் பணம் இல்லாதவனுக்கு திருடுவதைத் தவிர வேறு அனேக தீய காரியங்களை செய்ய ஃப்ண்ட்ஸ் இல்லை//
petrol vilai kuraichpuravum vaadaki kuraikka manamilla auto/.calltaxi kollaikaaranaividavaa?
//வரும் நாடளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்காமல், காசு பணம் ஏதும் கொடுக்காமல், சாதி ஓட்டு பார்க்காமல் இவர்கள் நின்றால்(வெவ்வேறு தொகுதிகளில்) யார் வெற்றிபெறுவார்கள்? காந்தி, நேரு, இ.காந்தி, காமராஜ், அண்ணா, mgr
பதில்: தமிழகத்தில் எம்.ஜி.ஆர். சமீப காலத்தில் அப்படி சாதி பார்க்காது நின்று வெற்றி பெற்றவர் விஜய்காந்த்.//
yenga villu vijaythaan aduththa muthalvar
//டாலர் எழுச்சி பின் வீழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதி இப்போது நிலைமை என்ன?
பதில்: டாலர் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு வியாபாரம் முதலில் டல்லடித்தாலும் ஏதோ சமாளித்தனர். ஆனால் இப்போது பொருளாதார வீழ்ச்சியில் நிலைமை அதிக மோசம் அடைந்துள்ளதாக நண்பர் அதியமான் தெரிவிக்கிறார்.//
textile mills are converted house plots and being sold.
textile mills are incuring heavy losses.
//அமெரிக்காவில் பொதுவுடைமை கருத்து புத்தகங்களுக்கு கிராக்கியாமே?
பதில்: எத்தைத் தின்னால் பித்தம் தணியும் என்னும் நிலையில் உள்ளனர் அமெரிக்கர்கள். ஆனால் அந்தோ கம்யூனிசம் செய்யக் கூடிய கந்தர கோளங்களை நேரடியாக அனுபவித்ததில்லை.//
obama oppera maaddaarunnu oru thakaval.avarathu jaathagam sariyillaiyaam.
//ஆன்மீகம் இந்தியாவில் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
பதில்: அது பணம் பண்ணும் பிசினசாகி ரொம்ப நாளாயிற்றே.//
yoga yenum mugamudiyudanaa?
//yenga villu vijaythaan aduththa muthalvar//
யாரங்கே, இங்கே பார். யாரோ வில்லு பாத்து ரொம்பவும் பாதிக்கப்பட்டுட்டார். அவரை ஜாக்கிரதையா சிகிச்சை அளிச்சு குணப்படுத்துங்கப்பு. ஏற்கனவே வில்லு பாத்தவனை கொல்லு என்று கொலைவெறியுடல் லக்கிலுக் வேற அலைஞ்சுட்டிருக்கார். ஜாக்கிரதை, சொல்லிட்டேன், ஆமா.
அன்புடன்,
முரளி மனோகர்
நடுத்தெரு நாராயணன் said...
//MR. Dondu
kindly request please stop your BIG TIME BS.I am sick and tired of your Q&A//
sick ஆன ஆஸ்பத்திரி போய் படுத்துக்கோ. இங்கன ஏன் வந்து புலம்பல்?
//specially you don't have any rights to talk about srilankan tamils. //
யாரு பேசலாம் யாரு பேசகூடாதுன்னு தேசிய தலைவர் பிரபாகரன் ஏதாவது ஆணை பிறப்பித்து இருக்கிறாரா?
//We don't care about your answers.//
அப்புறம் ஏன் வந்து இங்க படிக்கனும்
//Tamil people are dying eveyrday. So try be a human//
நீங்க போய் சண்டையை நிறுத்தி எல்லாரையும் காப்பாத்தலாமே..டோண்டு கேள்வி பதிலை நிறுத்தினால் சண்டை நின்று போய் விடுமா என்ன?
//Appreciate your help//
என்ன கொடுமை சார்-----YES IT IS KOODUMAI SRILANKAN TAMILS ARE DYING
REASOS.
//We don't care about your answers.//
அப்புறம் ஏன் வந்து இங்க படிக்கனும்
lISTEN DID YOU READ MY COMMENT
DON'T CARE MEAN DON'T CARE
//எது எப்படி போனால் என்ன, ஒரு அருமையான சீரியல் கிடைத்தது நமக்கு.
//
அதானே பார்த்தேன் .. டோண்டுவா கொக்கா... !! சில / சிலரை பற்றிய கேள்விக்கு மழுப்பலா பதில் தருவதில் டோண்டு ஒரு பக்கா கலைஞரிஸ்ட்..
இதுவே, சோ - ஜெ - ஜெயா டீவி இல்லாது கருணாநிதி சன் டீவி அழகிரி அப்படி ஏதாச்சும் கேள்வில இருந்திருந்தா.. எது எப்படியோ போனா என்னனு இருப்பாரா என்ன? டோன்டு நோண்டி நொங்கு எடுத்திருப்பார்.. சமீபத்திய 1945 - 2008 வரைக்கும் விரிவா எழுதி..
நல்ல ஆளுய்யா நீர்.. சும்மாவா சொன்னாங்க.. பொழக்க தெரிஞ்சவங்கப்பா அவங்கனு..
மேலும் கேள்வி பதில் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது.. இப்போது சலிக்கிறது.. குறிப்பாக அனானி கேள்விகள் கலைஞர் கேள்விகள் பதில் போல இருக்கிறது..
அதிலும் 10 15 % கேள்விகளுக்கு தான் பதில் தெளிவாக , புது விசயங்களை அறிந்துக்கொள்ளும்படி உள்ளது. பல கேள்விகளுக்கு விளம்பரம் போல் இது பற்றி என் பதிவு என்று ஒரு லிங்க்.. பல கேள்விகளுக்கு "அப்படியா?" , தெரியாதே, கேள்விபடலயே, நீங்கள் சொல்லி தான் தெரிகிறது.எனக்கு அது பற்றி தெளிவில்லை போன்ற பதில்கள் தான் வருகிறது..
இப்படியான பதில் தெரியா கேள்விகள் பதிவின் நீளத்தை கூட்ட மட்டுமே பயன்படுகிறது. தவிர்த்துவிடுங்கள் அந்த கேள்விகளை.
அடுத்தவாரத்திற்கு:
1. மங்களூரில் முதலில் பப் அம்னீசியா மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது. எல்லா செய்தி சேனல்களும், செகுலர் பிளாக்குகளும் ஃபாசிசம் என்றே கத்தினார்கள். இது போல் சென்னையில் 5 நட்சத்திர ஓட்டல்களில் அடிக்கடி ரவுடிகள் புகுந்து தமிழ் பண்பாட்டைக் காப்பாற்றியுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஒரு செய்திச் சேனலும், இப்படி பின்னாடியே போய் லைவ் டெலிகாஸ்ட்செய்வது கிடையாது. ஏன்?
2. பா.ஜ.க ஆட்சி என்றாலே அதை கவுப்பதற்கு ஏன் இவ்வளவு வெறியுடன் திரிகிறார்கள் ? (பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்டை ஒரு பதிப்பக நிருவனருமான பிரபல வலைப்பதிவர் எழுதுகிறார்) பா.ஜ.க மீது ஏன் இந்த கொலை வெறி ?
இவர்களில் யாரையெல்லாம் நீங்கள் கண்டிக்க விரும்புகிறீர்கள்.விளக்கத்துடன்.?
1.தனது வேலைக்கரார்களை இந்த நூற்றான்டிலும் கொத்தடிமை போல் நடத்தும் மூர்க்க முதலாளி.
2.அரசின் சலுகைகளை உரியவர்களுக்கு கிடைக்காமால் த்னதாக்கி கொள்ளும் சுயநலம் மிகுந்தவர்கள்
3.நல்ல மாமியார் மாமனாரை கொடுமை செய்து உணவு கூட கொடுக்காத கொடிய மனதுடன் உலாவரும் மருமகள்கள்.
4.நல்ல மருமகளை மீண்டும் மீண்டும் பனம் கொண்டுவரத்தூண்டும் வ்டிவுக்கரசி/நளினி டைப் மாமியார்கள்
5.கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்ய கையேந்தும் அரசு பணியாளர்கள்.
6.யு.டி சட்டத்தை பிறர் மேல் தவறாய் பயன்படுத்துவோர்.
7.இட ஒதுக்கீட்டு சலுகையால் கிடத்துள்ள அரசு வேலையை சரிவர நிறை வேற்றாதவர்கள்.
8.பொருட்களின் விலை குறையும் போதும் விலையை குறைக்க மனதில்லா பகல் கொள்ளை அடிக்கும் வியாபாரிகள்.
9.சொந்தங்களின் இயலாமையை பயன்படுத்தி பாலியியல் பலாத்காரம் செய்யும் ராவணவம்சம்
10.அப்பாவி மக்களின் உண்ர்ச்சியை தூண்டி குளிர் காய நினைக்கும் அரசியல் வித்தகர்கள்
1.அரசு திட்டங்களில் மொத்தச் செலவில் 50 டு 60 % அரசியல்வாதிகளுக்கும்,அதிகாரிகளுக்கும் கமிஷனாய் போய் விடுவதால்தான் அரசு வேலைகள் தரம் சொல்லிக்கொள்ளும் விதமாய் இல்லமாலிருக்கிறதா??இதற்கு விடிவு உண்டா?
2.திமுக அரசில் இது மாதிரி வேலைகள் கணஜோராய் நடப்பது பற்றி?
3.திட்டங்கள் போடுவது கடன் வாங்கி கமிஷன் அடிக்கவா?
4.எந்த வேலையும் செய்யாமல் கோடீஸ்வர்களாய் சுற்றிவரும் அரசியல் வாதிகளின் மீது வருமானவரித்துறையின் நடவடிக்கை அவ்வளவு சொல்லிக்கொள்வதுமாதிரி இல்லையே?
5.மத்திய மாநில பட்ஜெட்டில் சலுகை மழை கொட்டப்போகிறதா?
6.போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை,வக்கத்தவனுக்கு வாத்யார் வேலை என காமராஜ் ஆட்சியில் சொல்வார்களே இப்போது கலைஞர் ஆட்சியில்?
7.அரசுப் பள்ளியில் வேலைபார்க்கும் செகண்டிகிரேடு ஆசிரியர்கள் கூட,அரசு பள்ளியின் கல்வியை நம்பமால் தன் பிள்ளைகளை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்ப்பது நியாயமா?
8.இன்று கணவன் மனைவி இருவரும் செகண்டிகிரேடு ஆசிரியர்,ஆசிரியை என்றால் அவர்களின் மாத மொத்தவருமானம் பல ஆயிரங்கள் ஆனால் அவர்களின் கற்பிக்கும் திறமை?
9.பல கிராமங்களில் இவர்கள் உபரிப் பனத்தை பிறருக்கு கந்து வட்டிக்கு கொடுப்பது பற்றி?
10.அரிசி விலை ஒரு கிலோ 50 ரூபாய் ஆகப் போவது பற்றி?
11.நதிகள் இணைப்பு திட்டம் எந்த நிலையில் உள்ளது?
12.அரசியல்வாதிகள் இதை நடக்கவிடுவார்களா?
13.விவாசயம் இதனால் பலன் பெறுமா?
14.பசுமைப் புரட்சியால் கிடத்த நன்மைகள்/
15.நெல்லை மாவட்டத்தில் இதற்கு பிள்ளையார் சுழி போடப் போவது உண்மையா?
16.தமிழ்நாட்டில் யாருடைய (அரசியல்,ஜாதி) சிலைகள் அதிகம்?
17.தினம் போற்றி பராமாரிக்கப் படுவது யாருடையது?
18.கவனிப்பு இல்லாமல் இருப்பது யாருடையது/
19.பிற மாநிலங்களில் நிலவரம் எப்படி?
20.வருங்காலத்தில் தமிழகத்தில் யாருடைய சிலைகள் அதிகம் நிறுவப்படலாம்?
21.மேல் மருத்துவத்தூர் பங்காரு அடிகளை நோக்கி இவ்வளவு கூட்டம் ?காரணம்?
22.இன்றைய நிலயில் நிரந்திர அடிமை யார்?
1.விவசாயக் கூலிகள்
2.விவசாயிகள்
3.கிராமக் கைத்தொழில்புரிவோர்
23.கோவை சத்குரு ஜக்கி வாசுதேவ்(ஈசா யோகா மையம்) அவர்களின் மகா சத் சங்கத்தில் கலந்த அனுபவம் உண்டா?
24.அவர் நடத்தும் மகாசிவராத்திரி பற்றி?
25.அவரது பசுமைக்கரங்கள்,மக்கள் உடல் நலத்திட்டம்,படிப்புதவி,கிராம முன்னேற்றம் இதில் எது முழு வெற்றியை நோக்கி?
Post a Comment