நேற்று இரவு எனக்கு இன்றைய சந்திரகிரகணம் பற்றிய விளக்கத்துடன் வந்த மின்னஞ்சலை இது பற்றி ஆர்வம் உள்ள ஆத்திகர்களுக்காக தருகிறேன்.
“09-02-2009 அன்று இரவு சநதிர கிரஹணம் நிகழுகிறது, வழக்கமாக நிகழும் கிரஹணம் போல் இது இல்லை , அதாவது சந்திரனை முழுமையாகவோ பகுதியாகவோ இந்த கிரஹணம் மறைக்காது, சந்திரனின் கிரணங்களை மட்டுமே ஓரளவு பாதிக்கும். இதற்கு ஆங்கிலத்தில் பெனம்பரா கிரஹணம் என்று பெயர் (தமிழில் குறைநிலை கிரகணம் என மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன்).
சாஸ்திரப்படி இப்படிப்பட்ட கிரஹணம் அனுஷ்டானத்துக்கு உகந்தது அல்ல, ஆகவே ஆஸ்திகர்கள் வழக்கப்படி கிரஹணத்தில் செய்யும் ஸ்னானம் தானம் பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றையும் பரிஹாரங்களையும் செய்ய வேண்டாம் , மேலும் விபரங்களுக்கு போன் மூலம் கனபாடிகளை தொடர்பு கொள்ளவும்.
வைதிகஸ்ரீ போன் xxx xxxxxxxx” (நம்பர் தேவைப்படுகிறவர்கள் என்னைத் தனியாகத் தொடர்பு கொள்ளவும்)
இந்தப் பதிவைப் போட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்தப் பதிவைப் பார்த்ததும் போடத் தோன்றியது அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பேரவை விழாக்களும் நானும்
-
பேரவை விழாக்களால் மிகவும் பயனடைந்தவன் நான் என்பதில் எப்போதும் எனக்கு ஒரு
பெருமை உண்டு. எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதனை இன்று முன்னிறுத்த
விரும்புகின்...
3 days ago
4 comments:
அதிமுகவில் இருக்காரா?இல்லையா எனும் கேள்விக்கு விடை தெரியாச் சூழலில்,திடிரென பார்ப்பனர்களுக்கு 7 % இட ஒதுக்கீடு கலைஞர் தருவார் என புதுக் கோஷத்துடன் வரும் எஸ்.வி சேகர் திமுக பக்கம் ?
திமுகாவின் இலங்கைத் தமிழர் காப்பு போராட்டம் ஒரு ஏமாற்று வித்தை என்பதை மக்கள் அறிவார்களா?
நெல்லை மாவட்ட ஸ்டாலின் விசுவாசிகள் அழ்கிரியாருக்கு(தென் பகுதி காவலர்) அடிபணிய மறுப்பது சரியா?என்னவாகும்?
மு.க முத்துவின் வாழ்க்கை கதை குமுதத்தில் பார்த்தீர்களா?எப்படி?
அழ்கிரியாரின் ஆடு புலியாட்டம் முன்னால் ஸ்டாலின் பாச்சா பலிக்குமா?
யாருமே கண்டு கொள்ளாத பதிவுக்கு விளம்பரம் தருவது எதனால், அவர்கள் உங்களைத் திட்ட அதில் கொஞ்சம் சத்தம் உண்டாவதைப் பார்த்து ரசிக்கவா அண்ணா.எப்படியோ
போஙே
விநொ.
//வைதிகஸ்ரீ போன் xxx xxxxxxxx” (நம்பர் தேவைப்படுகிறவர்கள் என்னைத் தனியாகத் தொடர்பு கொள்ளவும்)//
எதுக்கு கூப்பிடனும்,
என் போன்லயே அந்த நம்பர் இருக்கே!
ஜீரோவுக்கு இடது பக்கத்துல 7க்கு கீழே பாருங்க ஸ்டார் பட்டன் இருக்கும் பொறுமையா அதை பத்து வாட்டி அமுக்குனா வைஜெயந்திஸ்ரீ கிடைப்பாங்க!
வைதிகஸ்ரீ தனது சர்வதாரி வருஷ
பஞ்சாங்கத்தில் - 9.2.09 - திங்கள்-சந்திர
கிரஹணம் (தர்ப்பணம் இரவு 7.41 முதல்
8.13க்குள்) சொல்லியிருக்கிறது! பாம்பு
பஞ்சாங்கமும் கிரஹணம் பற்றி எழுதி
இருக்கிறது..தர்ப்பணம் வேண்டாம் என்பது
ஸ்பெஷல் டிஸ்பென்சேஷன்!! ஆமாம்
கண்மணிகளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை
கிரஹணத்திலும் அதன் பரிகாரங்களிலும்?
Post a Comment