அடாடா என்ன கரிசனம், உடலே அரிக்குதய்யா!!!!!!!
உலகளாவிய மொழிபெயர்ப்பாளர் தலை வாசல் ப்ரோஸ்.காம்-ல் வரும் சில வேலை சம்பந்தமான விளம்பரங்களை பார்த்தால் ஒரு பக்கம் இகழ்ச்சி கலந்த சிரிப்பு மறுபக்கம் கண்மண் தெரியாத கோபம் ஆகிய உணர்வுகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. உதாரணத்துக்கு இன்று ஒரு விளம்பரத்தின் ஒரு பகுதி உதாரணம் அளிக்க:
We are a large poker school that continuously produces a large quantity of strategy articles, video scripts, presentations and news pieces which need to be translated from German to English. We are therefore looking to extend our translation team.
Due to the educational nature of the content it is not only important to have excellent English but also that you are also able to convey the material in a didactically well presented fashion.
Initial payment is 0,04 USD per word and work is done via an easy to use CMS system
Translation quantity can range from 10,000 to 100,000+ words a months depending on your own capacities. We are looking for long term translators.
மேலே செல்வதற்கு முன்னால் உலக மொழிபெயர்ப்பு உலகின் சில யதார்த்தங்களை கூற வேண்டும். சாதாரணமாக மேலே உள்ள தேவைகளுக்கான மொழிபெயர்ப்பின் விலை ஒரு வார்த்தைக்கு 0.15 டாலர்களுக்கு குறையாது. இந்த ஏஜென்சி வாங்கும் ரேட் சற்றே அதிகமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் தர முன்வரும் 4 செண்டுகள் என்பது அடிமாட்டு விலைக்கும் கீழானது. We are looking for long term translators என்று கூறுவது இன்னொரு மோசடி. நீண்டகால கொத்தடிமைகள்தான் அவர்களுக்கு உண்மையில் தேவை!
இவர்களாவது பரவாயில்லை. இன்னும் வேறு சில ஏஜென்சிகள் கணினி உதவியுடன் மொழிபெயர்ப்பு (Computer Aided Translation --> CAT) பாவிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். அதுவும் ட்ரடோஸ் என்னும் மென்பொருளைத்தான் அதிகம் வற்புறுத்துவார்கள். அதன் விலை இப்போதைக்கு 10000 ரூபாய்களுக்கும் மேல். அதை வாங்கி போட்டு கொள்கிறோம் என வைத்து கொள்ளுங்கள். உடனே அடுத்தபடியாக degrees of matches என்னும் கோட்பாட்டுக்கு வருவார்கள். அதாவது சில வரிகள் சற்றே சிறிய மாற்றங்களுடன் திரும்ப திரும்ப வருமாம். ஒரு தடவை மொழிபெயர்த்த பிறகு அதை மறுபடியும் செய்வது சுலபமாம், ஆகவே அவற்றுக்கான விலையை குறைக்க வேண்டுமாம். அதாவது 10000 ரூபாய்களுக்கு மேல் கொடுத்து ஒரு மென்பொருளை நிறுவுவதற்கு பிரதிபலன் நீங்கள் ஈட்டப் போகும் தொகையில் வெட்டு.
குதிரை கீழே தள்ளியதுடன் குழியையும் பறித்த கதைதான். இதில் எனக்கு எரிச்சல் தருவது, “இது உங்களுக்கு சுலபம் ஆகவே விலையை குறைக்க வேண்டும்” என்னும் வாதம்தான். இப்படித்தான் ஒரு வாடிக்கையாளர் “சார் பல வாக்கியங்கள் ரிபீட் ஆவதால், அவற்றுக்கு ஒரு முறைக்கு மேல் நீங்கள் சார்ஜ் செய்யக் கூடாது” என்றார். அவர் தனது வேலையை எங்கு சொருகிக் கொண்டு செல்லலாம் என்பதை நாகரீகமாக கூறினேன். என்னுடைய நிலைப்பாடு ரொம்ப சிம்பிள். ரிபீட் ஆவது ஒரிஜினலை எழுதியவர் முடிவு செய்வது. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. மேலும் எனக்கு எது சுலபம் என தேவையின்றி வாடிக்கையாளர் தன் மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம். அவருக்கு வேண்டியது நல்ல மொழிபெயர்ப்பு, அது கிடைக்கிறதா என்பதை பார்த்தால் போதும். என்னை பொருத்தவரை நான் அலாவுதீனின் விளக்கை தேய்த்து பூதத்தை வரவழைத்து மொழிபெயர்ப்பு செய்தாலும் அது வாடிக்கையாளருடன் எவ்வித சம்பந்தமும் இல்லாதது.
காரியத்துக்கு சிறிதும் உதவாத தெனாவெட்டு மனப்பான்மை:
தில்லியில் ஒரு வாடிக்கையாளர் என்னுடன் டிஸ்கஸ் செய்யும்போது “இத்தனை நாட்களாக அவரது செக்ரட்டரி தனக்கு ஜெர்மன் தெரிந்திருந்ததால் இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை அவளே பார்த்து கொண்டாள், தனக்கு காலணா அதிக செலவில்லை” எனக்கூற, “இப்போதும் அதே செக்ரட்டரியிடம் வேலை வாங்கிக் கொள்வதுதானே” என நான் கேட்க, அந்த நன்றி கெட்ட செக்ரட்டரி அவரது போட்டியாளர் ஆஃபர் செய்த அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு அங்கு சென்று விட்டாள்” என கோபத்துடன் கூறினார். “நீங்கள் அவள் தனது வேலைக்கு சம்பந்தமில்லாத மொழிபெயர்ப்பு வேலைக்கு ஏதும் கூடுதல் அலவன்ஸ் தந்தீர்களா” எனக் கேட்டதற்கு அவள் முழுநேர எம்ப்ளாயி, ஆகவே அதெல்லாம் தருவதற்கில்லை” எனக் கூறினார். அவள் இத்தனை நாள் அவருடன் இருந்ததே ஆச்சரியம் தரும் விஷயமே என நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். சில கஞ்சப் பிசுனாறி முதலாளிகளிடம் வேலை செய்யும்போது தன்னிடம் உள்ள அதிக திறமைகள் வெளியில் தெரியாது பார்த்து கொள்ள வேண்டும். அதை செய்ய மேலே குறிப்பிட்ட செக்ரடரி செய்யாததால் கொஞ்ச நாளைக்கு கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனால் கடைசியில் வேறு நல்ல வேலைக்கு செல்ல முடிந்தது என பார்த்தால் வேறுவிதமாகவும் எண்ணத் தோன்றுகிறது. குறைந்த பட்சம் இந்த கஞ்சப் பிசுனாறி முதலாளி சற்றும் எதிர்பாராத தருணத்தில் திராட்டில் விட்டு சென்றாள் என்பது நிச்சயமாக இருந்தால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரித்திருக்கும்.
ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம், இன்னொரு பக்கமோ நல்ல வேலை செய்பவர்கள் கிடைக்காத, மற்றும் அவ்வாறு வேலை செய்பவர்களை தன்னிடமே நிறுத்திக் கொள்ள செய்ய வேண்டிய காரியங்கள் என உள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட, தங்களை திருத்திக் கொள்ளாத முதலாளிகள் பாடு திண்டாட்டம்தான்.
ஐடி வேலையாளர்களுக்கு போறாத காலம்
விப்ரோவில் வேலை செய்பவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் சம்பள உயர்வு கிடையாதாம். அதன் பிறகாவது கிடைக்குமா என்பதும் சொல்வதற்கில்லையாம். வேலை நிலைத்து இருப்பதே நாங்கள் உங்களுக்கு போடும் பிச்சை என்பது போல கம்பெனி நடந்து கொள்கிறதாம். இதே நிலை மற்ற ஐடி கம்பெனிகளிலும் எனக் கேள்விப்பட்டேன். நீண்ட, இருண்ட சுரங்கப் பாதையில் செல்கிறார்கள். அடுத்த முனையின் வெளிச்சம் இன்னும் தெரியவில்லை.
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமைங்க ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்பது போல ஐடி காரர்களை பார்த்து வயிறெரிந்தவர்கள் பேசும் கேலி வேறு. பாவம் ஐடி-காரங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூழாங்கல்லில் இருந்து மலைகளை உருவாக்க நான்கு வழிகள்
-
பயணங்கள் வழியாக இயற்கையை விரித்துக்கொள்ளும் கனவு இன்று நம்மில் சிலருக்கு
உண்டு. ஆனால் அப்பயணத்தை எப்படி நடத்துவதென்று தெரிவதில்லை. பெரும்பாலும்
தவறான சுற்ற...
16 hours ago
8 comments:
டோண்டு சார்,
நன்றாகச்சொன்னீர்கள். நம் சமுதாயத்தில் உடல் உழைப்புக்கே மரியாதையும், விலையும் கிடையாது. மூளை வேலைக்கா மதிப்பு இருக்கும்? என்னமோ தயவு செய்வதுபோல்தான் பலர் நடந்துகொள்கிறார்கள். திருட்டு சாப்ட்வேர் பாவித்து கம்பனிகள் நடத்தும் இவர்களுக்கு ஒரு திறமையின் விலை பற்றி தெரியாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை!
பிடிஉஷா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கோட்டை விட்டு, ஆசியாட் டில் வென்றபோது கேரள அரசு அவருக்கு வீடும், காரும் இன்ன பிறவும் அளித்தது. அவர் இருந்த ஒரு பகுதிக்கு அவர் பெயரும் வைக்கப்பட்டது. அதை குறைசொல்லி பலரும் எழுதியபோது, சுனில் கவாஸ்கர் எழுதிய ஒரு கட்டுரை எனக்கு நினைவுக்கு வருகிறது. (அப்போது இந்தியா அதிகம் பணப்புழக்கம்
இல்லாத இந்தியாவாய் இருந்தது.)
பிடிஉஷாவிற்கு கிடைத்த பரிசுகளைப் பார்க்கும் மனிதர்களுக்கு அவர் அனுபவித்த வேதனைகளும், உழைப்பும் புரியுமா என்று எழுதினார்.
அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. வார்த்தைக்கு வார்த்தை பழைய பேப்பர் போல எடைக்கு வாங்குவதற்கு மொழிபெயர்ப்பாளர் எதற்கு, ஒரு அகராதி போதுமே!!
சொல்மண்டி
பஞ்சாமிர்தம் nice !
தொழிலாளியின் கஷ்டத்தை புரியாதவன்
எப்படி முதலாளி ஆகமுடியும்....
ரொம்ப இனிப்பு
"If you pay peanuts, you get monkeys"
That's what I remembered when I saw your post. Hope these people realize this soon.
Regards.
Partha
first one was good one to know!
அதெல்லாம் நிறைய முதலாளிங்க இருக்குறாங்க,
ஓசியிலேயே மங்களம் பாடுறதுக்கு!
sir
you wrote the things whatever i have in my mind, i am also a IT employee , The all things you told are happen in every IT company, every one who teasing and jealous about IT person should understood this things. we are like a person who caught the tile of tiger....
Its all so sad to discuss
Post a Comment