இது மறு பதிவு செய்யப்பட்டது.
அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.
அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவுக் கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.
அறுபது லட்சம் பேரைக் கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதைச் செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.
வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மனிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் கேட்க, பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.
அது பற்றி ஏற்கனவே கூறி விட்டேன். ஐஷ்மன் விஷயத்துக்கு வருவோம். அவன் குற்றவாளி என்றுத் தீர்ப்பளிக்கப் பட்டது. எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மே 31 1962-ல் அவன் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிட இரண்டு சக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டன. அவற்றை இருவர் ஒரே நேரத்தில் செயலாக்கினர். ஆகவே யார் அவனைத் தூக்கில் ஏற்றியது என்பது ரகசியமாக வைக்கப்பட்டது. பிணத்தை எரித்து சாம்பலை மத்தியதரைக் கடலில் தூவினர் இஸ்ரவேலர்கள். ஐஷ்மன் சகாப்தம் முடிவடைந்தது.
நாஜிகள் பலர் வேடையாடிக் கொல்லப்பட்டனர். தப்பியவர்கள் தங்கள் வாழ்நாள் கடைசி வரை நிம்மதியாக வாழ இயலவில்லை. இத்தனை ஆண்டுகள் யூதர்களைக் கிள்ளுக்கீரையாக மதித்தவர்கள் இப்போது இஸ்ரவேலர்களைக் கண்டு பயந்தனர்.
வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.
கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.
ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
19 hours ago
10 comments:
ஜான் கிறிஸ்டோபர் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://christopher_john.blogspot.com/2005/09/86.html#comments
"தோதாக அன்றையதினம், முஹம்மத் அல் துரா என்கிற பன்னிரண்டே வயதான சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சிறு துப்பாக்கிச் சண்டையின் குறுக்கே போய் மாட்டிக்கொண்டுவிட, சிறுவன் பலியாகிப் போனான்.
இதுவும், முஸ்லிம்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும், வெகுண்டெழச் செய்த சம்பவம் அது.
இதன் தொடர்ச்சியாகத்தான், சாதாரண கண்டனப் பேரணியாகத் தொடங்கிய அந்த "அல் அக்ஸா இண்டிஃபதா", ஒரு மாபெரும் கலவர ரகளையின் தொடக்கப்புள்ளி ஆனது."
மேலே குறிப்பிடப்பட்ட அந்த நிகழ்ச்சியே ஒரு பித்தலாட்டம் என்பது இப்போது வெளியாகியுள்ளது. பார்க்க:
http://jewishworldreview.com/david/gelernter091205.php3
"When pictures lie
By David Gelernter
A TV report that helped fuel the deadly Palestinian intifada appears to be false. So how is truth supposed to compete with a video fraud?
http://www.JewishWorldReview.com |
A 55-SECOND video report, produced in 2000 by a French TV station and distributed free of charge around the world, has caused untold injury and grief to Israeli civilians. This month, the French author Nidra Poller analyzes the evidence in Commentary magazine and shows that the video is a fraud — "an almost perfect media crime," the retired French journalist Luc Rosenzweig calls it. That Poller's piece is conclusive is merely my own judgment, of course. But we are all required to make such judgments, in the light of such reports.
There is a wider story here also. We are vulnerable to video lies. Against purposeful lies, truth has never been so helpless, so weakly defended.
More than 500 Israeli civilians have been killed in the intifada, the Palestinian uprising that began five years ago. They were ordinary people chatting on a bus, eating ice cream in a restaurant; suddenly, a bright flash. The next moment the walls are spattered with blood and the bomb's hellish odor fills the air. Some people are blinded, others are cut to pieces. Parents living the worst seconds of their lives cast about wildly for their children in the screaming, smoky chaos.
What explains such bestial crimes? The reported death of a Palestinian child, Mohammed Dura, in Gaza did as much as anything else to ignite the current uprising. In the short video segment produced on Sept. 30, 2000, and distributed immediately, a state-owned French television station called France 2 accused the Israeli army of deliberately shooting and killing the 12-year-old.
You may remember the footage: A man and boy crouch in fear. Shots hit a wall far from the pair; a final round of gunfire kicks up a dust cloud that hides father and son, who are "targets of gunfire from Israeli positions," says the voice-over. When the dust clears, the boy is stretched at the man's feet. The voice says that he is dead.
This version of the story was retold around the world — and it has figured in countless wall posters, an Al Qaeda recruiting video, an epic poem. Last June an aspiring suicide bomber was arrested on her way to a hospital — to kill Israeli children, she said, in memory of Mohammed Dura.
But, according to the Commentary article, the video is a fraud. The footage itself is ambiguous, the alleged main event hidden by dust. The voice-over is what makes us understand what we are seeing. It comes from Charles Enderlin, a correspondent at France 2 (and a French Jew who became an Israeli citizen 20 years ago). Enderlin has never claimed to have been anywhere near the scene of the alleged shooting. His Palestinian cameraman told him the story.
Lots of supporting evidence was supposed to back up the cameraman's story — more footage of the supposed father and son pinned by Israeli fire, footage showing the child's death throes. France 2 has since admitted, according to Poller, that no such footage exists.
The voice-over reports that the child is dead, yet the rest of the segment — which wasn't aired but survives — shows the child propping himself on an elbow, shading his eyes with his hands. Poller saw the tape.
A boy named Mohammed Dura did die in a Gaza hospital that fateful Sept. 30. His face doesn't match the face in the video. Presented with these facts, France 2 officials said that "they would look into the matter."
In early 2005, Enderlin published an article in the French newspaper Le Figaro. His report "may have been hasty," he wrote, but was justified because "so many children were being killed." (But the intifada had barely started; "so many children" were not being killed — not yet.)
What did happen? Chances are we will never know for sure. But Poller reports that outtakes she saw show phony battle scenes staged by Palestinians. Painstaking analysis done by students at the Israeli Military Academy found the same actors playing multiple roles: "The injured and dead jump up, dust themselves off, play at offensive combat."
Poller's article raises far more doubts about the report's authenticity than I can list here. But disproving a video report is much harder than getting people to believe it. You must convince people that their own eyes and ears have deceived them. They must follow the twists and turns of your logical argument, do their own thinking, reach their own conclusions. Give people an opportunity to switch off their brains and they will grab it.
How can cautious, painstaking truth compete with brazen video lies? If the report turns out to be just what it looks like, a despicable fake, who will produce another 55-second video telling the truth? Which TV stations will broadcast it? Where does Israel go to get its reputation back? What will it all matter to grief-stricken Israelis whose children, husbands, mothers and fathers have died in acts sparked by the Dura story?
The rational response is to insist fiercely on the transcendent importance of truth. Yet today we often hear that there is no truth. There are only competing narratives, we are told, all equally true or false.
Yet the truth of what happened on Sept. 30, 2000, is critical to the way the world works, the way people behave. The pictures we were shown and the story we were told is true or false, not both. Enderlin, France 2 and the larger media establishment have an obligation to tell us which it is. Because lies can kill. Lies do kill."
அன்புடன்,
டோண்டு ராகவன்
testing with the new word verification feature.
அழகப்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://etheytho.blogspot.com/2006/03/blog-post_24.html
நீங்கள் கூறுவது போல சமுத்ரா அவர்கள் இளம் பாலகனே. கார்கில் போருக்கும் என்னுடைய இஸ்ரேல் ஆதரவு நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான்.
என்னுடைய இஸ்ரேலிய ஆதரவு தமிழ்மண வலை உலகமே அறிந்ததுதானே. உதாரணத்துக்கு என்னுடைய http://dondu.blogspot.com/2005/09/5.html
பதிவில் நான் எழுதியது இதோ:
"வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.
கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.
ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே."
இன்னொரு பதிவில் நான் எழுதியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/4.html
"இஸ்ரேல் என்றப் பெயரைக் கேட்டவுடன் பலருக்கு இங்கு ரத்தக் கொதிப்பே வந்து விட்டது. அதில் ஒரு புது மாப்பிள்ளையும் அடக்கம். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. எனக்கோ இஸ்ரேல் என்றப் பெயர் ஒரு புத்துணர்சியைக் கொடுக்கிறது."
மொத்தம் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய இஸ்ரேல் பதிவு எண் 5-ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/5.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது பின்னூட்டத்தை உங்களது முந்தய பதிவில் அனுமதித்ததற்கு நன்றி.
இப்பொழுது இருக்கும் இந்திய அரசு, பாலஸ்தீன தீவிரவாத ஹமாஸ் அரசை ஆதரிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கும் என்று நம்புகிறீர்களா? (போகிற போக்கைப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரயில், india should not recognize hamas) இஸ்ரஏலுக்கும் பாலஸ்தீனத்திர்க்கும் நடந்து வரும் நிலச் சச்சரவு, இது பற்றி எல்லம் குறித்து நீங்கள் ஒரு பதிவு போடலாமே. பல பொய்களைச் சொல்லி நாட்டில் பல பேரை இருட்டிலே வைத்திருக்கும் இந்திய "தேசிய" நாளிதள்களினால் (இன்னும் பல பேர், இஸ்ரஏல் தலை நகரம் Tel Aviv என்று நம்பி வருகின்றனர் தெரியுமா?) ஒன்றும் நடக்கது.
ஷங்கர்.
இதற்குள் எல்லா ஐந்து பதிவுகளையும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இஸ்ரேலில் உங்களது தினசரி அனுபவத்தைப் பற்றி அறிய ஆவல். நீங்கள்தான் போடுங்களேன்.
நான் போடுவது இருக்கவே இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
உங்கள் இஸ்ரேலிய ஆதரவுக்கு வந்த எதிர்பெல்லாம் முதல் இரண்டு பதிவோட முடிந்து விட்டதே!! 3,4, 5 அவது பதிவில் எதிர்பே காணமே!! அதுவும் இந்தியா வின் அன்றய இஸ்ரேல் நிலை பற்றி சொன்னவுடன் எல்லாம் "கப், சிப்" ஆகிவிட்டார்கள்!! நான் பாலஸ்தீன ஆதரவாளன் என்ற ரோசாவசந்த் காணாமல் போய் விட்டார்!!
உங்கள் இஸ்ரேல் பற்றிய பதிவை, பல முறை படித்து விட்டேன். சரித்திரக் கண்ணோட்டதிலும், தற்கால அரசியல் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டியது, இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை. அதை யாரும் செய்வதில்லை.
ஒரு பிரச்சனை,
நீங்கள், உங்கள் இந்த கட்டுரைகளை, தமிழ்மணத்திற்கு அளிக்கவில்லையா?
ஏன் என்றால் இந்த கட்டுறைகளை நான் பார்க்கும்பொழுது, நீங்கள் மட்டுமே பார்க்க கூடிய "பதிவர் கருவிப்பட்டையய்" என்னால் பார்க்க முடிகிறது. படிப்பவர்கள் "வாசகர் கருவிப்பட்டையை" மட்டும் தானே பார்கவேண்டும்.?
ஷங்கர்.
வாருங்கள் சங்கர நாராயணன் அவர்களே, நீங்கள் கேட்டக் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாய் பதிலளிக்கிறேன்,
1. எதிர்ப்பு இல்லாமல் இல்லை. அதே நேரம் இந்திய நலன் இஸ்ரேலை ஆதரிப்பதில்தான் உள்ளது என்று நான் கொடுத்த பாயிண்டுகளுக்கு நேரடி பதிலை கொடுக்க மனமில்லை அல்லது நேரமில்லை என்றுதான் கொள்கிறேன்.
இப்படியும் இருக்கலாம், டோண்டு ராகவன் ஒரேயடியாக இஸ்ரேல் பக்கம் இருப்பவன் அவனுடன் என்ன பேசியும் பிரயோசனமும் இல்லை என்றும் நினைத்திருக்கலாம். ரோசாவசந்த் அவர்களை இந்தப் பிரிவில் வைக்க வேண்டும்.
2. ஒரு குறிப்பிட்டக் காலக் கட்டத்துக்கு மேல் முந்தையப் பதிவுகளை வகைபடுத்த முடியவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமானால் மீள்பதிவுதான் செய்ய வேண்டியிருக்கிறது. அதைத்தான் நான் மெதுவாக செய்து வருகிறேன். வாடிக்கையாளர்களை அணுகும் முறை பற்றி நான் எழுதிய பத்தாம் பதிவை அவ்வாறுதான் செய்தேன். பத்தாம் பகுதியில் முதல் ஒன்பது பதிவுகளுக்கான விரிவான சுட்டி கொடுக்கப்பட்டது.
3. இப்போது முதல் தடவையாக ஒன்று செய்யப் போகிறேன். ஐந்து பதிவுகளையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மீள் பதிவு செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாருங்கள், நாட்டாமை அவர்களே. கண்டிப்பாக என்னுடையது நடுநிலைமை அல்ல என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய இஸ்ரேல் பாசம் அப்படிப்பட்டது.
இரண்டாயிரம் வருடங்கள் கஷ்டப்பட்டு, தலைமுறை தலைமுறையாக நம்பிக்கையே அற்ற சூழ்நிலையிலும் தாங்கள் இஸ்ரேலுக்கு திரும்பப் போவதை உறுதி செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். விடை பெறும்போது அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டது "அடுத்த வருடம் ஜெரூசலத்தில் சந்திப்போம்" என்பதேயாகும்.
அதை வேள்வியாகவே இத்தனை தலைமுறைகள் செய்து வந்து, தியோடர் ஹெர்சல் போன்ற மாமனிதர் வந்து "யூத நாடு" என்ற சிறு புத்தகம் வெளியிட்டு, எல்லோரும் சேர்ந்து யூத ஃபண்ட் நிறுவி, பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி, தங்கள் நடத்தையால் உலக நாடுகள் பலவற்றின் ஆதரவு பெற்று ஐநா சபையில் மூன்றில் இரண்டு வாக்கு பெற்று இஸ்ரேல் ஸ்தாபிக்கப் பட்டது. அதன் பிறகு ஐந்து யுத்தங்களைச் சந்தித்துள்ளது. நடுவில், இறந்த மொழியாகக் கருதப்பட்ட ஹீப்ரூ மொழியை பேச்சு மொழியாகச் செய்தது இதுவரை உலகிலேயே நடக்காத விஷயம்தானே. பாலைவனத்தை வேறு சோலை வனமாக்கினார்கள். இத்தனையும் யாராவது கதையாக எழுதியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்தானே. இருந்தாலும் இதெல்லாம் நிஜமாக நடந்ததுதானே. இப்படிப்பட்டவர்கள் மகோன்னதமானவர்கள்தானே. அவர்களது நட்பைப் பெற்று நாமும் முன்னேறலாமே.
இப்போது பாலஸ்தீனியரிடம் வருவோம். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பில்லியன் ரேஞ்சில் டாலர்களில் பெரும் பகுதி தலைவர்களால் திசை திருப்பப்பட்டு சந்தி சிரித்ததே. இப்போது கூட அராஃபாத்தின் மனைவியிடம் கணிசமான தொகை சிக்கியிருப்பதாகக் கேள்வி. தங்களுக்களிக்கப்பட்ட நிலங்களில் அரசு அமைக்காமல் ஜோர்டனிடமும் எகிப்திடமும் பறி கொடுத்து இன்னும் ரெஃப்யூஜி கேம்புகளில்தானே இருக்கிறார்கள்? சில நாட்கள் முன்வரை இஸ்ரேலை அழிப்பதுதான் தங்கள் லட்சியம் என்றுதானே கூறி வந்திருக்கிறார்கள்? அவர்களுடன் நட்பால் இந்தியாவுக்கு என்ன பலன்? நாம் என்னதான் நட்பாக இருந்தாலும் அவர்கள் ஆதரிப்பது என்னமோ பாகிஸ்தானைத்தானே. இப்போது கூட காஷ்மீரில் தாலிபானால் அனுப்பப்பட்ட தீவிரவாதிகளில் சில பாலஸ்தீனியரும் உண்டு என்றுதானே படித்திருக்கிறேன்.
1948-லேயே நாம் இஸ்ரேலுடம் முழு ராஜரீக உறவு கொண்டிருந்திருக்க வேண்டும். வெறும் கான்ஸலேட் மட்டுமே அனுமதித்தோம். அவ்வளவு தயக்கம் நம்மிடம், அரேபியர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று. கடைசியில் எகிப்தே இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டது. அதன் பிறகுதான் நாமும் செய்தோம். என்ன வெட்கக்கேடு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லடியார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://athusari.blogspot.com/2006/06/blog-post.html
"சிலவருடங்கள் வரை உலக நாடுகளின் குறிப்பாக இந்தியத் திருநாட்டின் அங்கீகாரத்தைப் பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பலமுறை கண்டனத்திற்காளான இஸ்ரேலைப் புகழ்ந்து சிலர் எழுதி வருகின்றனர்."
தவறு. இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இஸ்ரேலிய கான்ஸ்லேட் முதலிலிருந்தே செயல்பட்டு வந்திருக்கிறது. என்ன, நேரு அப்புறம் முஸ்லிம் ஓட்டுக்காக ஜகா வாங்கினார், ஆயினும் அங்கீகாரத்தை வாபஸ் பெறவில்லை.
இடதுசாரி கட்சிகளால் ஆராதிக்கப்பட்ட சோவியத் யூனியன் முதல் முதலாக சட்ட அங்கீகாரத்தை கொடுத்தது (de jure recognition). அமெரிக்காவே de facto அங்கீகாரம்தான் கொடுத்தது.
பாலஸ்தீனத்தை இரண்டாக்கிய தீர்மானம் முறைப்படி ஐ.நா.வில் மூன்றிற்கு இரண்டு கணக்கில் நிறைவேற்றப்பட்டது. தனக்கு கொடுத்த நாட்டை வைத்துக் கொண்டு இஸ்ரேல் முதல் நாளிலிருந்தே செயல்பட ஆரம்பிக்க, அரபு தேசங்களால் திசை திருப்பப்பட்ட பாலஸ்தீனியர் இஸ்ரேலை ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டனர். யூதப் பகுதியில் வசிக்கும் யூதரல்லாதவர்களுக்கு பென் குரியன் அங்கேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்ததை நீங்கள் அறிவீர்களா? ஆனால் சுற்றியுள்ள் அரபு தேசங்கள் அவர்களுக்குத் தவறான வழி காட்டின. ஹிட்லர் செய்யத் தவறியதைத் தாங்கள் செய்து விடப் போவதாக ஆசை காட்டின. அவர்களும் அரபு படைகளுக்கு வழி விட்டு அகதிகள் முகாமுக்குச் சென்றனர். 1948 யுத்தம் இஸ்ரேலியர் வெற்றியுடன் முடிவடைந்தது. அகதிகள் முகாம்களில் மாட்டிக் கொண்டனர். மேற்குக் கரை பகுதி மற்றும் யூதரல்லதவர்காக ஒதுக்கியப் பகுதியில் அவர்களைக் குடியேற்றி ஒரு தனி நாட்டை அமைப்பதில் அரபு தேசங்கள் ஒரு அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் குறி இஸ்ரேலே. எல்லா யூதர்களையும் கொன்று விடுவதே அவர்கள் திரும்பத் திரும்பச் செய்த கோஷம்.
நிலைமை இவ்வாறிருக்க இஸ்ரேல் அகதிகளைத் திரும்ப உள்ளே விடும் என்று எவ்வாறு எதிர்ப்பார்க்கலாம்? அறுபது லட்சம் மரணங்கள் போதாதா?
ஒரு சிறு டைவர்ஷன். ஜூலை 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மாதிரி கொடுமைகளை தாங்கிக் கொண்ட யூதர்கள் இம்முறை எதிர்த்தனர், வெற்றி பெற்றனர்.
பாலஸ்தீனியருக்கு கொடுத்த நாட்டை கபளீகரம் செய்தன ஜோர்டான் மற்றும் எகிப்து. சரித்திரத்தை சரியாகப் பார்த்து விட்டு பேசுங்கள்.
இப்போது அங்கு நடப்பது தினசரி யுத்தம். நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு சுட்டிக்கும் என்னால் பத்து சுட்டிகளைக் காண்பிக்க இயலும். போட்டோக்களுக்கும் பஞ்சமில்லை.
குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்துள்ளதால் இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய இஸ்ரேல் பற்றியப் பதிவு ஒன்றிலும் போட்டு வைக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/5.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
dear sir,
pl. write abt CUBA also.
that 'll enhance our self confidence.
dev/ch
Post a Comment