1/04/2009

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம் ...

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருக்கலாம், ஒன்று மட்டும் செய்யாதிருந்தால். அது என்ன அந்த ஒன்று? அதற்கு பிறகு வருகிறேன்.

ஜியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படும் தியோடர் ஹெர்ட்ஸல் எழுதிய Der Judenstaat (யூத நாடு) புத்தகத்துக்கு முதலில் யூதர்களிடமே அதிக வரவேற்பு இல்லை. அப்போதைய யூத பொது புத்தி எப்படியிருந்ததென்றால், தத்தம் நாடுகளிலேயே நிலைத்து இருந்து மற்ற மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து நாட்டின் நலத்துக்காக பாடுபடுவது. ஆனால் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் போராடியும் அவர்களுக்கு இந்த ஆதர்சநிலை கிட்டவில்லை என்பது கசப்பான சரித்திர உண்மை.

இப்போது ஜெர்மனிக்கே வருவோம். முதல் உலக மகாயுத்தத்தில் ஜெர்மானிய யூதர்கள் ஜெர்மனிக்காக அபாரமாக பணி புரிந்தனர். பல கண்டுபிடிப்புகள் ஜெர்மனியின் யுத்த முயற்சிக்கு ஆதரவாக இருந்தன. ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் என்னவாயிற்று? யூதர்கள் விரும்பினாலும் அவர்கள் பங்களிப்பை ஏற்கும் மனநிலையில் ஜெர்மனி இல்லை. ஏன், 1939-ல் யுத்தம் ஆரம்பிக்கும் முன்னாலேயே நாஜிகளின் முதல் ஆறாண்டு கால ஆட்சியில் யூதர்கள் பொது வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டு வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இதில் யூதர்கள் இழப்பு மிக அதிகமே என்றாலும், ஒரு மாறுதலுக்கு ஜெர்மனியின் இழப்புகளைப் பார்ப்போம். முதற்கண் யூத விஞ்ஞானிகளின் பங்களிப்பு இல்லை. இரண்டாவதாக யூத தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் இல்லை. யூத மத்திய வர்க்கத்தினர் இல்லை. பல யூத விஞ்ஞானிகள் வெளி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்த நாடுகளின் ஜெர்மனிக்கு விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அழகில் எல்லாமே பற்றாக்குறையாக, முக்கியமாக ரயில் போக்குவரத்து சாதனங்கள், இருந்தபோது, யூதர்களை வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லும் ரயில்வண்டிகளுக்கே முன்னுரிமை கொடுத்ததில் ஜெர்மனியின் சீரழிவு இன்னும் வேகப்படுத்தப்பட்டது. எல்லாமே ஒரு பைத்தியக்கார தலைவனின் ஆசைக்கு உட்பட்டு நடந்தன. கடைசியில் சாகும் தருவாயில் ஹிட்லர் எழுதிய உயிலில் கூட தனது யூத வெறுப்பை கக்கிவிட்டுத்தான் செத்தான்.

யூதர்கள் இம்மாதிரி ஒடுக்கபடாமல் இருந்திருந்தால் ஜெர்மனி இந்த யுத்தத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றிருந்திருக்கும். இஸ்ரேலும் உருவாகியிருக்காது. நரகத்தில் இதற்காகவே எண்ணெய் கொப்பரையில் உட்கார்ந்து கொண்டு ஹிட்லர் மனம் புழுங்கி கொண்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லோரையும் அணைத்து செல்வதே புத்திசாலித்தனம். ஒரு பிரச்சினையை தீர்க்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆதரவு திரட்டுவது புத்திசாலித்தனம். அதன்றி சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அந்த பிரச்சினையை தீர்ப்பதில் உதவக்கூடிய சிலரை தாக்கினால் அவர்களுக்கு என்னவாயிற்று? போடா ஜாட்டான் என போய்விடுவார்கள்.

உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

51 comments:

சீரா said...

இதில் கூறப்பட்டுள்ளவற்றில் மாற்றுக்கருத்து உண்டு என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

யூதர்கள் தங்களது பூர்வீக நாடான இஸ்ரேலுக்கு போகவேண்டும் என்று இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கிறிஸ்துவர்களாலும் முஸ்லீம்களாலும் அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள். இந்தியா தவிர மற்ற எல்லா நாடுகளிலும் அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு கொடுமை செய்யப்பட்டார்கள். அலியா என்னும் இஸ்ரேலுக்கு போகும் நிகழ்ச்சிகள் ஹிட்லர் பிறப்பதற்கு முன்பிருந்தே நடந்து வந்துள்ளன்.

ஹிட்லரால்தான் இஸ்ரேல் உருவானது என்று நினைப்பது சரியல்ல. ஹிட்லர் இருந்தும் இஸ்ரேல் உருவானது என்று கருதுவதே சரி.

1917இலேயே பெல்பாஸ்ட் அறிக்கையில் பாலஸ்தீனத்தில் யூத நாட்டை உருவாக்குவதாக கூறியது.
1922இல் லீக் ஆஃப் நேசன்ஸ் (ஐநாவுக்கு முந்திய அமைப்பு) யூத நாட்டை உருவாக்க உதவுவதாக தெரிவித்திருந்தது. இதனால் ஏராளமான யூதர்கள் ஏற்கெனவே இஸ்ரேலுக்கு சென்றுவிட்டிருந்தார்கள்.
1933இல்தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்.
இவர் யூதர்களது ஜெர்மானிய குடியுரிமையை நீக்கினார். இதனால் யூதர்கள் இஸ்ரேலுக்கு செல்வது அதிகரித்தது. அவ்வளவுதான்.
1936-39இல் இவ்வாறு யூதர்கள் இஸ்ரேலுக்கு வருவதை எதிர்த்து பாலஸ்தீனத்து வந்தேறி அரபுகள் யூதர்கள் மீது தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.

dondu(#11168674346665545885) said...

//
1917இலேயே பெல்பாஸ்ட் அறிக்கையில்//
அதன் பெயர் பால்ஃபர் அறிக்கை.

ஹிட்லருக்கு முன்னாலேயே யூதர்கள் தனி நாட்டுக்கு முயன்று வந்தனர் என்பது நிஜமே. ஆனால் ஹிட்லரின் கொடூரமான இன அழிப்பு உலக மக்கள் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே இஸ்ரேல் உருவாகுவதற்கான நிலைமைக்கு தோதாக உலக் அபிப்பிராயமும் வந்தது. முக்கியமாக ஜியோனிசத்தை எதிர்த்த யூதர்கள் ஒத்து கொண்டனர் அல்லது ஹிட்லரால் கொல்லப்பட்டனர்.

அதைத்தான் நான் என்பதிவில் கூற எண்ணினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Mr.Raghavan
Check out a Sci-Fi book called The man in high castle by Philip K.Dick.It is about what happens to the world after Germany wins the WWII.
regards
krishna

அருண்மொழி said...

//உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்?
//

தன் இனத்தை அழிக்க துடிக்கும் எதிரிக்கு உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவது நீங்க்ள் கூறியதில் வராது என்று நினைக்கிறேன்

Anonymous said...

The International community, especially the then Arab countries wud never have consented to a state of Israel with out Hitler and the Holocaust.

Anonymous said...

"உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்? "


டோண்டு!


ரொம்ப சரியாகவே எழுதியிருக்கின்றீர்கள். துப்பாக்கியால் பிடரியில் அடித்தவனுக்கே அடிவாங்கியவன் பொண்டாடி உதவுவதை எப்படி அழைப்பது? தயவுசெய்து "இன்னா செய்தாரை..." எனத் தொடங்க
வேண்டாம்.


அடித்தவனிடம் காசும் இலங்காரத்னா விருதும் வாங்கும் கையேந்திகளை எப்படி அழைப்பீர்கள்?


புள்ளிராஜா

Unknown said...

பொதுவாக மனிதர்கள் யாவரும் தங்கள் சிறு வயதிலிருந்து நல்ல செய்கைகளின் வெற்றி அது கொடுக்கும் ஆனந்தம்,நிம்மதி,புகழ் ,மன நிறைவு முதலியவற்றையும்,

பிறருக்கு தீங்கு நினைத்து கேடு செய்து அநீதி இழைப்பவர்களுக்கு அவர்களின் வாழ் நாளின் இறுதிகட்டத்தில் கிடைக்கும் மன உழைச்சல்,உடல் துன்பம்,சக மனிதரின் நிந்தனை,தூற்றல்,பாதிக்கப் பட்டவ்ர்கள் கொடுக்கும் சாபம் ஆகியவற்றையும்,

கேட்டும், வாசித்தும், அனுபவ பூர்வமாக தன் முன்னால் நடக்கும் உண்மைச் சம்பவங்களை பார்த்த பின்னரும்,


ஒரு சாதரண வேலை கிடத்தவுடனேயே
கொஞ்சம் பணம் காசு வந்தவுடனேயே
சிறிய லெவலில் புகழ்,பாராட்டு கிடைத்தவுடனேயே

உலகம் தொடங்கிய காலம் தொட்டு உலகமெங்கும் வாழும் மக்களில் ஒரு குறிபிட்ட சதவிகிதத்தினர்
இந்த ஹிட்லர் தனங்களை செய்து வருவதற்கு காரணம்

1. இறவனின் படைப்பு திருவிளையாடலா?

2.மூளைகளின் நுட்பமான 'நுயுரான்கள்' இடையே ஒடும் மின் சுற்றில் ஏற்படும் மின் அழுத்த கோளாறு அல்லது அந்தப் பகுதிகளில் ஏற்படும் short circuit போன்ற ரசாயன மாற்றங்களா?

3.அவர்களின் பிறந்த நேரத்தில் இருந்த நவக்கிரகத்தாரின் பார்வைகளா?
( http://classroom2007.blogspot.com/)

4....................?

நக்கீரன் பாண்டியன்

dondu(#11168674346665545885) said...

@புள்ளிராஜா
//ரொம்ப சரியாகவே எழுதியிருக்கின்றீர்கள். துப்பாக்கியால் பிடரியில் அடித்தவனுக்கே அடிவாங்கியவன் பொண்டாடி உதவுவதை எப்படி அழைப்பது? தயவுசெய்து "இன்னா செய்தாரை..." எனத் தொடங்க
வேண்டாம்.
அடித்தவனிடம் காசும் இலங்காரத்னா விருதும் வாங்கும் கையேந்திகளை எப்படி அழைப்பீர்கள்?//
இப்பதிவு ஒருவர் தன் காரியத்தை எப்படி நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதே. நீங்கள் சொன்ன காரியத்தை செய்தவர்களும் அதை விரும்பாதவர்களிடம் ஏதேனும் காரியத்துக்காக நிற்கும் நிலையில் நீங்கள் சொல்லும் பேச்சுக்களை கேட்க வேண்டியதுதான்.

அதைத்தான் புலிகளும் அதன் ஆதரவாளர்களும் செய்கிறார்கள்.இம்மாதிரி நிலை வரும் என தெரிந்திருந்தால் 1991-ல் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் போலும்.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ரகுவரன் கோடு கிழித்ததை இப்படித்தான் லட்சுமி அடிக்கடி சுட்டிக் காட்டுவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@கிருஷ்ணா
இன்னொரு புத்தகம் நீங்கள் சொன்ன பிளாட்டில் படித்தேன். ஹாரிஸ் என்பவர் எழுதிழ Fatherland என்னும் புத்தகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@நக்கீரன் பாண்டியன்
எல்லாமே பரிணாம வளர்ச்சியில் வருவதுதான். கொல் அல்லது கொல்லப்படு என்னும் சித்தாந்தம்தான்.

இப்பதிவு என்ன சொல்கிறதென்றால் அவரவர் செயல்களுக்கான விளைவுகளை சந்த்தித்துத்தான் ஆக வேண்டும், அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Do u know that hitler is a Jew.

Hitler is a Jewis name.
In his family tree there was a person called soloman(Jew) from this Hitler shares Jewis blood. It hasnt proved 100%. Because It is beleived that Hitler destroyed the related documents utilising his power.


You need to see many things in Eelam arena. You may have to surprise the events. I wish you will have long life to see those things

Anonymous said...

தற்சமயம் யாரவது ஹிட்லர் மனப் பான்மையுடன் அரசியல், ஆன்மிகம், சினிமா, கலைத்துறை, சின்னத்திரை,தகவல் தொலை தொடர்பு வாணிபம்,மதம் ,மொழிப்பற்று,இனப் பற்று,ஜாதிப் பற்று இவற்றில் உள்ளனரா?

Anonymous said...

துப்பாக்கியால் பிடரியில் அடித்தவனுக்கே அடிவாங்கியவன் பொண்டாடி உதவுவதை எப்படி அழைப்பது?;;

புள்ளிராஜா,

அப்போது புலிகளும் இலங்கை அரசும் ஒரே அணியில் இருந்தார்கள். நினைவு இருக்கிறதா? இலங்கை அரசிடம் காசுவாங்கிக்கொண்டு புலிகள் இலங்கை அரசின் கூலிப்படையாக இந்திய ரானூவத்தை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

Anonymous said...

திருமங்கலத் தேர்தல் களத்தில் பணநாயகத்தின் கொடி பறக்குதாமே?

Anonymous said...

இனி இலங்கயில் இனப் பிரச்சனை போக்கு எப்படி இருக்கும்?

Anonymous said...

//அப்போது புலிகளும் இலங்கை அரசும் ஒரே அணியில் இருந்தார்கள். நினைவு இருக்கிறதா? இலங்கை அரசிடம் காசுவாங்கிக்கொண்டு புலிகள் இலங்கை அரசின் கூலிப்படையாக இந்திய ரானூவத்தை அடித்துக்கொண்டிருந்தார்கள்.//


இது உண்மையா? விளக்கம் தரவும்.

சமதானம் பண்ணத்தானே நமது இந்தியப் படை அங்கு சென்றது!

Anonymous said...

ஜெயலலிதாவின் நல்லெண்ணத் தூது தேமுதிக தலைவருக்கு ?

அரசியலில் எதிர்பாராதது கூட நடக்குதே?

காங்கிரஸ்-அதிமுக-தேமுதேக-பாமாக-மதிமுக

ஒர் அணியிலா?

Anonymous said...

இனி முன்றாவது அணி தமிழ் நாட்டில்?

Anonymous said...

சன் டீவி தயாராகும் திரை படங்களை எல்லாம்(40 படங்களாம்) வாங்கி குவிக்கிறதே?

Anonymous said...

சன் சகோதரர்கள் தமிழக அம்பானி சகோதரர்களாக மாறுகிறார்களா?

Anonymous said...

தலைவர் கலைஞரின் நிழல் என்று பாரட்டப்படும் சுருக் எழுத்தாளர் தஞ்சைத் தரணி தந்த தங்கம் ச.சு,தன் மானம் காக்க ,தலைவரிடமே கோபம் கொண்டாரே?

சமாதானம் செய்தது யார்?

நடந்தது என்ன?

Anonymous said...

1.மாறன் சகோதரர்கள் அழகிரி சமாதானம்
2.அழகிரி-ஸ்டாலின் சமரசம்
3.முத்து குடுபத்தாரின் திரும்பிய வருகை
4.உதிவியாளரின் நல்ல மன மாற்றம்
5.திருமங்கலத் தேர்தலில் திமுக வின் நிச்சயிக்கப் பட்ட வெற்றி
6.சோனியா அம்மையாரின் தொடரும் அருள் பார்வை



தலைவர் கலைஞரின் ஜாதகத்தில் இப்போ என்ன திசை, தசா புத்தின்னு

வகுப்பறை வாத்யார் சுப்பையா சாரிடம் தான் கேட்க வேண்டும்?


உங்களுக்குத் தான் சோதிடத்தில் நம்பிக்கை இல்லை யே?


அவரிடம் கேட்டுச் சொல்லுவீகளா?

Anonymous said...

அருண்மொழி said...
//உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்?
//

தன் இனத்தை அழிக்க துடிக்கும் எதிரிக்கு உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவது நீங்க்ள் கூறியதில் வராது என்று நினைக்கிறேன்


அருண்மொழியின் கருத்துக்கு உங்கள் பதில்?

dondu(#11168674346665545885) said...

//அருண்மொழியின் கருத்துக்கு உங்கள் பதில்?//
புள்ளிராஜாவுக்கு சொன்ன பதில்தான் இங்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

இஸ்ரேல் பாலஸ்தீனத்திலிருந்து ஆக்கிரமிக்க பட்ட ஒரு பகுதி என்று சொல்கிறார்களே! உண்மையா?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
ஐ.நா. பொதுச் சபையில் 1947-ல் பாலஸ்தீனத்தை யூதப் பகுதியாகவும், யூதரல்லாதப் பகுதியாகவும் பிரிக்க வந்தத் தீர்மானம் தேவையான 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் சோவியத் யூனியனும் அதன் ஆளுகைக்குட்பட்ட நாடுகள்தான். அறுபதுகளில் சோவியத் யூனியன் அரேபியர்களுக்கு ஆதரவாகப் போட்ட ஆட்டங்களைப் பார்த்தவர்களுக்கு இது நம்ப முடியாததுதான்.

என் நினைவுகளிலிருந்து எழுதுகிறேன். தீர்மானத்தை இந்தியா எதிர்த்தது. பிரிட்டன் நடு நிலைமை வகுத்தது. அமெரிக்கா ஆதரித்தது. சோவியத் யூனியனும் அதன் ஆளுமைக்குட்பட்ட நாடுகளும் ஆதரித்தன. சோவியத் யூனியன் ஏன் அவ்வாறு செய்தது?

எந்த நாடாயினும் சரி, ராஜரீக விஷ்யத்தில் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்தல் அவசியம். "நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர விரோதியும் இல்லை, நிரந்தரம் நம் நாட்டின் நலனே" என்பதே தாரக மந்திரம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தத் தருணம். சோவியத் யூனியனுக்கு மத்தியக் கிழக்கு ஆசியாவில் ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. அது இஸ்ரேலாக இருக்கும் என்று நினைத்தது. ஏனெனில் இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியனும் அவரது கட்சியும் சோஷலிசக் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. இஸ்ரேல் ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்தது. மெதுவாக சோவியத் யூனியன் அரேபியர்கள் பக்கம் சாய ஆரம்பித்தது.

1948-ல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது அமெரிக்கா அதற்கு de facto அங்கீகாரம்தான் கொடுத்தது, சோவியத் யூனியனோ de jure அங்கீகாரமே கொடுத்தது. முன்னதை விடப் பின்னது அதிக சக்தி வாய்ந்தது.

இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டப்போது பென் குரியன் இஸ்ரேலியப் பகுதியில் வாழும் யூதரல்லாதவர்களை அங்கேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எல்லோரும் புது தேசத்தில் சமக் குடியுரிமை பெற்று வாழலாம் என்றுக் கூறினார். ஆனால் சுற்றியிருந்த அரபு தேசங்கள் அவர்களை இடத்தைக் காலி செய்து தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் செல்லப் பணித்தனர். அப்போதுதான் யூதர்களைக் கடலுக்குள் தள்ளி ஒரேயடியாக இஸ்ரேல் இல்லாமல் செய்ய முடியும் என்று ஆசை காட்டினர். அப்போது வெளியேறியவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். 1948 போரில் இஸ்ரேல் எதிர்பாராமல் வெற்றி பெற்று விட்டது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக பாலஸ்தீனியர் அகதி முகாம்களில் மாட்டிக் கொண்டனர். இந்த அழகில் ஜோர்டான் வேறு யூதர் அல்லாதப் பகுதி என்று ஐ.நா. அறிவித்திருந்தப் பகுதியைக் கபளீகரம் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது. அதுதான் மேற்குக் கரைப் பகுதி. 1948 போர் நிறுத்தத்துக்குப் பின்னால் ஜெரூஸலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பெரும் பகுதி ஜோர்டனிடமும், ஒரு சிறு பகுதி இஸ்ரேலியரிடமும் வந்தது. இஸ்ரேலியரால் அழுகைச் சுவர் என்றுப் பெயரிடப்பட்ட பயைய யூதக் கோவிலின் இடிபாடு ஜோர்டான் வசம். 1948-லிருந்து 1967 வரை யூதர்களுக்கு அங்கே அனுமதியில்லை. 1956-ல் சூயஸ் கால்வாயை எகிப்தியர் தேசீயமயமாக்கினர். அப்போதிலிருந்து இஸ்ரேலியக் கப்பல்கள் அதில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இஸ்ரேலை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நசுக்கி அதை ஒன்றுமில்லாமல் செய்வதே அரபு தேசங்களின் நோக்கம்.

ஆனால் என்ன அக்கிரமம்! இஸ்ரேல் அழிய மறுத்தது. அது பாட்டுக்கு உலகெங்கிலிருந்தும் யூதர்களை வந்துக் குடியேறச் செய்துக் கொண்டிருந்தது. எந்த நாட்டிற்கும் இம்மாதிரி சந்தர்பங்களில் முழி பிதுங்கியிருக்கும். ஆனால் இஸ்ரேல் எல்லா சோதனைகளையும் தைரியமாக சமாளித்து வந்தது. இஸ்ரேலின் அந்த நாட்களை வர்ணிக்கும் லியோன் ஊரிஸ் என்னும் எழுத்தாளர் தன் நாவல் "எக்ஸோடஸ்"ல் இவ்வாறு எழுதுகிறார் (நினைவிலிருந்து எழுதுகிறேன், தமிழ் மொழி பெயர்ப்பு என்னுடையது):

"அவர்கள் (யூதர்கள்) எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்"

1956-ல் நடந்தப் போரில் இஸ்ரேல் சினாயை மிகத் துரிதமாகப் பிடித்தது. ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்தலால் அது சினாயைக் காலி செய்தது. அப்போது அமெரிக்கா இஸ்ரேலின் நலனைப் பாதுகாப்பதாக உறுதி கூறியது. இருப்பினும் இஸ்ரேலியக் கப்பல்கள் சூயஸ் கால்வாயில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதிலிருந்து இஸ்ரேல் ஒரு பாடம் கற்றுக் கொண்டது. அதாவது தன் நலனைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். நட்பு நாடுகள் எப்போதும் உதவிக்கு வருவார்கள் என்றுச் சொல்ல முடியாது. இதற்கு முன்னால் இப்படித்தான் 1938-ல் செக்கொஸ்லோவாக்கியா பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் கைவிடப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"இது உண்மையா? விளக்கம் தரவும்.

சமதானம் பண்ணத்தானே நமது இந்தியப் படை அங்கு சென்றது?"


அனானி சார்!!

அமைதிப்படை இலங்கை சென்று 20 ஆண்டுகளாகியும் இப்படியொரு அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டு நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்திவிட்டீர்கள். சார் சிறையில் இருந்தாலும் பத்திரிகை கிடைத்திருக்குமே! ஒரு குட்டித் தகவல்:

12 வயது ஊமைத் தமிழ்ப் பெண்ணை 6 இந்தியச் சிப்பாய்கள் கற்பளித்துக் கொன்றார்கள்.
யாழ் மருத்துவமனைக்குள் 6 மருத்துவர்கள் உட்பட சுமார் 40 நோயாளிகளை கொன்றார்கள்.
பள்ளி மாணவர்கள் வீதிமறியலில் இருந்தபோது டாங்கியால் நசித்துக் கொன்றார்கள்.

ஐயா! காந்தி வளர்த்த தேசம் என்ற தேச பக்தியை ஒதுக்கிவிட்டு பார்த்தால்
அமைதிப்படை என்பது அயோக்கியப் படைதான்.

dondu(#11168674346665545885) said...

பெல்ட் பாம் கட்டி சிறுவர்களை, பெண்களை புலிகள் அனுப்பும்போது இந்திய அமைதிப்படை யாரைத்தான் அப்பாவி பொதுமக்கள் என நினைக்கவியலும்? அத்தருணத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டது புலிகள்தான். எது எப்படியாயினும் இந்தியா அந்த அநுபவத்துக்கு பிறகு இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க யோசிப்பது புரிந்து கொள்ள கூடியதே.

நீயும் வேண்டாம் உன் தலையீடும் வேண்டாம் என ராஜீவை போட்டு தள்ளினார்கள். இன்னும் பிரபாகரன் தேடப்பட்டு வரும், மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை தர வேண்டிய குற்றவாளி. அவரை இன்னும் தலைவராக பாவிக்கும் புலிகள் சங்காத்தம் இந்தியருக்கு எதற்கு?

அவ்வாறு யோசிக்க வழி வகுத்தது பிரபாகரனின் முட்டாள்தனம். இப்போது எதற்கு அழுவாச்சி பேச்சுகள் அவருக்கு? துன்பவியல் சம்பவம் எனக் கூறியதும் நம்மூர் வெண்ணெய் வெட்டி புலிகள் ஆதரவாளர்கள் வேண்டுமானால் புளகாங்கிதம் அடையட்டும். இந்திய அரசு விலகியிருப்பதே சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு!



ஓறிஜினல் காந்தியைப் போட்டுத் த‌ள்ளியவர்களே! கயமை மறந்து நியாயம் கேட்கும் போது இந்திய அரசை புலிகள் கேட்பதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது.


அய்யா இது காஞ்சி மடக் கொலைக் கும்பலுக்கு நியாயம் கேட்டு ஒரு கூட்டம் அலைகின்ற‌ காலத்தில் புலிகளுக்கு என்ன வெட்கம்?


புள்ளிராஜா

Anonymous said...

தன் இனத்தை அழிக்க துடிக்கும் எதிரிக்கு உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு thalliyathu right, but pidipaddathu wrong, and asking help is wrong, but u can"t do business with out our topic know(u mean karunanidi included










'

Anonymous said...

dondu u also accept the killing of rajiv is not a wrong but not a clever dacision, am i right, i accept that

Anonymous said...

germany lost becoz of that they try to capture russia. r u mad study russian's battle field story.american also afraid of them but american have uther sceientist

Anonymous said...

Dear Friends,

Their is NO POINT in debating or discussing about Srilankan Tamil Issue with Dondo sir,
He exhibits his inner-burn on Tamils and of course his age...
Leave him and let him write on other issues like…

"பிகர்களை எப்படி மெயிண்டைன் பண்ணுவது"

Sathappan

dondu(#11168674346665545885) said...

//ஓறிஜினல் காந்தியைப் போட்டுத் த‌ள்ளியவர்களே! கயமை மறந்து நியாயம் கேட்கும் போது இந்திய அரசை புலிகள் கேட்பதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது.
அய்யா இது காஞ்சி மடக் கொலைக் கும்பலுக்கு நியாயம் கேட்டு ஒரு கூட்டம் அலைகின்ற‌ காலத்தில் புலிகளுக்கு என்ன வெட்கம்?//

புலிகளுக்கு வெட்கம் இல்லையென ஒத்துக் கொண்டது குறித்து மகிழ்ச்சி. மற்றப்படி கோட்சே தண்டனை பெற்று தூக்கில் தொங்கியாயிற்று. பிரபாகரனும் தொங்கட்டும், பிறகு பார்க்கலாம்.

சங்கராச்சாரி விஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும். அவ்வளவுதான் விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//germany lost becoz of that they try to capture russia.//
அதுவும் உண்மையே. ஆனால் யூதர்களை அய்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது வடிக்கட்டின முட்டாள்தனமே. அது பற்றித்தான் பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

1. மோடத்தை ஆப் பண்ணி ஆன் பண்ணா தமிழ்மணத்டுல புதுசா ஓட்டு (வாசகர் பரிந்துரை) போட முடியும் என்று சொல்வது எந்த அளவில் உண்மை ?

2. நேதாஜி உண்மையிலேயே விமான விபத்தில் இறந்தாரா ?

Anonymous said...

//உதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் நான் சொன்னதற்கு இன்னொரு உதாரணம். பிறகு எந்த முகத்தை வைத்து கொண்டு அந்த நாட்டினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாம்?
//

உதவுவதற்கு தோதான மனநிலையில் இருந்தால், நீங்கள் சொல்வது சரி. தோதான மனநிலையில் இல்லா விட்டால், போட்டு தள்ளுவது சரியா?:-)

dondu(#11168674346665545885) said...

//உதவுவதற்கு தோதான மனநிலையில் இருந்தால், நீங்கள் சொல்வது சரி. தோதான மனநிலையில் இல்லா விட்டால், போட்டு தள்ளுவது சரியா?:-)//
அது இன்னும் முட்டாள்தனம். எப்படியும் இன்னொருவர் உதவி தேவைப்படுபவர் வாலை சுருட்டி வைத்து கொண்டிருப்பதே நலம். அப்படி உதவும் மனநிலையில் இல்லாதவரை இருப்பவராக மாற்றுவதுதான் சரியான யுத்த தந்திரம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//உதவுவதற்கு தோதான மனநிலையில் இருந்தால், நீங்கள் சொல்வது சரி. தோதான மனநிலையில் இல்லா விட்டால், போட்டு தள்ளுவது சரியா?:-)//
அது இன்னும் முட்டாள்தனம். எப்படியும் இன்னொருவர் உதவி தேவைப்படுபவர் வாலை சுருட்டி வைத்து கொண்டிருப்பதே நலம். அப்படி உதவும் மனநிலையில் இல்லாதவரை இருப்பவராக மாற்றுவதுதான் சரியான யுத்த தந்திரம்.//

அவர் தொடர்ந்து உபத்திரம் கொடுத்துக்கொண்டு இருந்தால்?

dondu(#11168674346665545885) said...

//அவர் தொடர்ந்து உபத்திரம் கொடுத்துக்கொண்டு இருந்தால்?//
அவரைச் சார்ந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது என்ற நிலையில் இதை செய்வதுதான் அடி முட்டாள்தனம். இருந்த சிம்பதியும் போயிந்தி.

பின்னால் அதை வெறும் துன்பியல் சம்பவம் என வர்ணித்து விட்டு ஆதரவு கோரியதில் கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையும் போயே போயிந்தி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1,//அவர் தொடர்ந்து உபத்திரம் கொடுத்துக்கொண்டு இருந்தால்?//
அவரைச் சார்ந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது என்ற நிலையில் இதை செய்வதுதான் அடி முட்டாள்தனம். இருந்த சிம்பதியும் போயிந்தி.

பின்னால் அதை வெறும் துன்பியல் சம்பவம் என வர்ணித்து விட்டு ஆதரவு கோரியதில் கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையும் போயே போயிந்தி.

அன்புடன்,



2;இப்பதிவு என்ன சொல்கிறதென்றால் அவரவர் செயல்களுக்கான விளைவுகளை சந்த்தித்துத்தான் ஆக வேண்டும், அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

அன்புடன்,

1க்கு 2டூ பொருந்தி வருகிறதா?

dondu(#11168674346665545885) said...

//இப்பதிவு என்ன சொல்கிறதென்றால் அவரவர் செயல்களுக்கான விளைவுகளை சந்த்தித்துத்தான் ஆக வேண்டும், அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.//
கண்டிப்பாக. ஆனால் ஒன்று. கொல்லப்பட்டவர் போய் சேர்ந்தாகி விட்டது. பின்னால் அவர் கட்சியும் அனுதாப அலையில் ஜயித்து ஆட்சிக்கும் வர முடிந்தது. ஆனால் கொன்றவர்கள்? தனது செயல்களின் விளைவுகளை யோசிக்காமலா இருந்திருக்க வேண்டும். சரி செய்ததுதான் செய்தீர்கள், அப்புறம் ஏன் கொல்லப்பட்டவரை சார்ந்தவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

தொடக்கி வைத்தவர்களே முடித்து வைக்கவேண்டும் என்பது களவிதி, அம்மா தொடக்கிவைத்ததை மகன் முடித்து வைத்து இருக்கவேண்டும் தவறியதால் அவரைமுடிந்து விட்டார். அவரது மகன் முடித்து வைக்கவேண்டும், அதுதான் விதி.

Anonymous said...

//இப்பதிவு என்ன சொல்கிறதென்றால் அவரவர் செயல்களுக்கான விளைவுகளை சந்த்தித்துத்தான் ஆக வேண்டும், அதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.//
கண்டிப்பாக. ஆனால் ஒன்று. கொல்லப்பட்டவர் போய் சேர்ந்தாகி விட்டது. பின்னால் அவர் கட்சியும் அனுதாப அலையில் ஜயித்து ஆட்சிக்கும் வர முடிந்தது. ஆனால் கொன்றவர்கள்? தனது செயல்களின் விளைவுகளை யோசிக்காமலா இருந்திருக்க வேண்டும். சரி செய்ததுதான் செய்தீர்கள், அப்புறம் ஏன் கொல்லப்பட்டவரை சார்ந்தவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்?

அன்புடன்,

உங்கள் கூற்றுபடி இந்த கொலை நியாயம் என்கிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//உங்கள் கூற்றுபடி இந்த கொலை நியாயம் என்கிறீர்கள்.//
சரி, அதனால் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்குமென்றால் அப்ப்டியே வைத்து கொள்ளுங்கள். ஆனால் கண்டிப்பாக கொலையை செய்வித்தவர் மன ஆறுதல் பெற இயலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இரண்டாம் மகா யுத்தத்தில் ஜெர்மனி ஜெயித்திருந்தால் பிரபாகரன் ராஜீவ்காந்தியை போட்டுத் தள்ளியிருக்கமாட்டானா ?

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். இந்த புலி வாலைப் பிடித்துத் தொங்குபவர்கள் ஏன் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ?

Anonymous said...

//உங்கள் கூற்றுபடி இந்த கொலை நியாயம் என்கிறீர்கள்.//
சரி, அதனால் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்குமென்றால் அப்ப்டியே வைத்து கொள்ளுங்கள். ஆனால் கண்டிப்பாக கொலையை செய்வித்தவர் மன ஆறுதல் பெற இயலாது.

அன்புடன்,

உங்களைப்போண்ற பெரியவர்கள் அதை சரி எனும் போது ஒரு ஆறுதல், தவறு நடக்கவில்லை எனும்போது ஒருஆறுதல் அவ்வளவுதான்.

dondu(#11168674346665545885) said...

//உங்களைப்போண்ற பெரியவர்கள் அதை சரி எனும் போது ஒரு ஆறுதல், தவறு நடக்கவில்லை எனும்போது ஒருஆறுதல் அவ்வளவுதான்.//
அந்த ஆறுதலை வைத்து கொண்டு என்ன செய்வதாம்? நாக்கை வழிக்கக்கூட அது பிரயோசனப்படாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நீருடனும் நெருப்புடனும் விளையாடி நிலைகுலைந்து வரும் புலிகள்!

வன்னியூரான்

பஞ்சபூதங்கள் என வர்ணிக்கப்படும் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு முதலியன இந்தப்பூமியில் மனித இனம் வாழுவதற்கான ஆதார சக்திகள் என்பது பொதுவாக உலகில் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒர் உண்மை. அதிலும் குறிப்பாக தமிழினம் இந்த கருத்தை தனது வாழ்வின் ஆதாரசுருதியாகவே வைத்திருக்கின்றது. எனவே இந்த பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை சிதைக்க முயன்றால், அதுமனித இனத்தினதும் அது வாழும் இந்த பூமியினதும் அழிவுக்கே வழிவகுக்கும் என்பது அப்பட்டமான உண்மை என்பதை தற்போதைய சுற்றுச்சூழல் நிலைமை துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் பஞ்சமா பாதகங்களுக்கு ஒருபோதும் அஞ்சாத புலிகள் இதிலும் தமது கைவரிசையை காட்டத்தவறவில்லை. குறிப்பாக நீருடனும் நெருப்புடனும் அவர்களது விபரீத விளையாட்டு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், (20-07-2006) மூதூர் பிரதேசத்தில் மாவிலாறு அணைக்கட்டை மூடி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தண்ணீர் போகாமல் தடுத்து அவர்களுடைய வாழ்க்கையுடன்விளையாடினர். தண்ணீருடனான அவர்களது விசமத்தனமான இந்த நடவடிக்கை இறுதியில் அவர்களை கிழக்கு மாகாணத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட காரணமாயிற்று. ஐந்து நாட்களின் முன்னர், அதாவது 31-12-2008 முன்னர், இலங்கை இராணுவத்திடம் கிளிநொச்சி நகரை பறிகொடுக்கும் சூழல் உருவானதும், அந்நகரில் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நீர்த்தாங்கியை புலிகள் தகர்த்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நீர்த்தாங்கி காலம்சென்ற செல்லையா குமாரசூரியர், சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் அமைச்சராகவும்,சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளராகவும் இருந்த காலத்தில் (1970 – 1977), அவரது முயற்சியால் கட்டப்பட்டதாகும். நல்ல தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் கிளிநொச்சியில் இந்த நீர்த்தாங்கி கட்டப்பட்டது அங்குள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. இப்பொழுது அதனை எந்தவிதமான முன்யோசனையும், மக்கள் நலனில் அக்கறையுமின்றி புலிகள்தகர்த்துவிட்டு சென்றுள்ளனர். இதேபோலத்தான் 2000ல் இலங்கை அரசபடைகளிடமிருந்து ஆனையிறவை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையின்போது, இயக்கச்சியிலுள்ள சவுக்கு தோட்டத்திலிருந்த வற்றாத கிணற்றின்மூலம் ஆனையிறவு முகாமுக்கு நீர் வழங்கிவந்த தண்ணீர் குழாய்களை புலிகள் சேதமாக்கி, இலங்கை இராணுவத்திறகான நீர் வழங்கலை துண்டித்தனர். அது இன்றுவரை சீர்செய்யப்படவில்லை.

உண்மையில் இந்த நீர்த்திட்டம்பிரிட்டிசார் இலங்கையை அரசாண்டபோது ஆனையிறவில் உருவாக்கப்பட்ட உப்பளத்தில் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு நீர் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். பின்னர் ஆனையிறவு தடைமுகாமில் பெரும் இராணுவமுகாம் அமைந்த போது, அவர்களுக்கும் நீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. நீருடன் மட்டும் புலிகளின் இந்த விபரீத செயல்பாடுகள் முற்றுப்பெறவில்லை, நெருப்புடனும் நடைபெறுகின்றது.

அண்மையில் முறிகண்டியைவிட்டும் கிளிநொச்சியைவிட்டும் புலிகள் ஓடும்போது முடியுமானவரை அங்கிருந்த கட்டிடங்களுக்கு நெருப்பு வைத்துவிட்டும் தகர்த்துவிட்டும் சென்றுள்ளனர். இந்த நெருப்பு பற்றவைக்கும் கைங்கரியத்தை அவர்கள் இதற்கு முன்னரும் பல இடங்களில்செய்துள்ளனர்.

1995ல் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு தப்பியோடியபோது, நாவற்குழி, நீர்வேலி, செம்பியன்பற்று போன்ற இடங்களில், மக்களுக்கு வந்த நிவாரணப்பொருட்களை பறித்து, பதுக்கி வைத்திருந்த தமது உணவு களஞ்சியங்களுக்கு, தீ வைத்துவிட்டே சென்றனர்;. புலிகள் அவ்வாறு நெருப்பு வைத்ததிற்கு காரணம், தாம் உணவுப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை மக்கள் அறியக்கூடாது என்பதும்,எவருமே அவற்றை எடுத்து சாப்பிட்டுவிடக்கூடாது என்பதுமே.

தமிழின் பெயராலும், தமிழனின் பெயராலும் பழம்பெருமைபேசி, ஒருபக்கத்தில் மக்களை ஏமாற்றிக்கொண்டு, மறுபக்கத்தில் இயற்கையின் நியதிகளுக்கு மாறாகவும், தமிழினத்தின் பாரம்பரிய நம்பிக்கைகள், நடைமுறைகளுக்கெதிராகவும் காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் புலிகளுக்கு, மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும் தனது தண்டனையை வழங்கியே தீரும் என்பதையே தற்போதைய புலிகளது அழிவுஎடுத்துக்காட்டி நிற்கிறது!

Anonymous said...

iya dondu y could not give a proper answer to arunmozy bcoz u also know that sentenceஉதவுவதற்கு தோதான மனநிலையில் இருக்கும் நாட்டின் தலைவனை போட்டு தள்ளுவதும் , is totally wrong. rajiv never think to help us. asking help from india is shame but no way, neer ippadi article write panna than layakku"பிகர்களை எப்படி மெயிண்டைன் பண்ணுவது"

where is ur val
's feed back

Anonymous said...

பாஜக புலிகளையும் இலங்கை பிரிவினையும் ஆதரிக்க போவதாக செய்திகள் வருகின்றன. ஒரு பெரிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள் தரத்திற்கு நடந்து கொள்ளலாமா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது