இந்த சீரியலை பற்றி நான் எழுதிய அறிமுகப் பதிவைப் பார்த்து நண்பர் பினாத்தல் சுரேஷ் திகைப்புடன் என்னுடன் சேட்டில் வந்தார். அவர் கேட்டதின் சாராம்சம் என்னவென்றால், இந்த அறுவை சீரியலுக்கு இவ்வளவு பில்ட் அப் ஏன் என்பதுதான். அதே சமயம் புத்தகத்தை படித்துள்ளதாகவும், அது தனக்கு பிடிக்கும் எனவும் கூறினார்.
சீரியல் வந்து சில நாட்களே ஆன நிலையில் இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருவது சற்றே அவசரமான முடிவு என்பதே என் துணிபு.
என்ன, வெள்ளிக்கிழமை மாலை விளக்கு வைத்தவுடன் வரும் பல சீரியல்களில் “இந்தக் குடும்பத்தை அழிக்காமல் ஓய மாட்டேன்” என கண்ணை உருட்டிக் கொண்டே பேசும் வில்லி நடிகைகள் (புவனேஸ்வரி, வடிவுக்கரசி, நளினி ஆகியோர்) இந்த சீரியலில் இருக்க மாட்டார்கள். மிகைபடுத்த்தப்பட்ட காட்சிகள் இல்லாது போகலாம். தேவையற்ற சோகத்தைப் பிழைந்து படகோட்டியில் எம்ஜிஆர் வாயசைக்கும் கரை மேல் பிறக்க வைத்தான் என்னும் பாடலின் ராகத்தில் பின்னணி வாத்திய இசையெல்லாம் போட மாட்டார்கள் (கஸ்தூரி சீரியல்).
திங்கள் இரவு எபிசோடில் உதார் விடும் ஆட்டோ டிரைவரை பார்த்து அசோக் ஒரு விஷயம் சொன்னதுமே நான் ஆடிப்போய் விட்டேன். அந்த ஆட்டோ டிரைவர் உதார் விட்டு, “நாளைக்கு வாம்மா உன்னைக் கீசுடறேன்” எனக் கூற. அசோக் அவனை பரிதாபத்துடன் பார்த்த வண்ணம் “நாளையை யார் பார்த்துள்ளார்கள்” என்ற டயலாக் வரும்போதே நான் தீர்மானித்து விட்டேன், ஆட்டோ டிரைவர் காலி என்று. நேற்றைய எபிசோடில் அது ஊர்ஜிதமானது.
பூஜ்யர் நிஜாமுத்தீனை தான் தில்லி திரும்பியதும் கொன்று விடப்போவதாக தில்லி சுல்தான் Qutb ud din Mubarak Shah கூறுகிறான். அச்சமயம் தில்லிக்கு வெளியே ஒரு ஊரில் படை இறக்கியிருக்கிறான். அடுத்த நாள் தில்லி பிரவேசம். நிஜாமுத்தீனின் பக்தர் கவி அமீர் குஸ்ரு பூஜ்யரிடம் தப்பித்து ஓடுமாறு மன்றாடுகிறார். சுல்தான் தில்லிக்கு மிக அருகில் வந்து விட்டதாக மற்ற சிஷ்யர்கள் பதறுகின்றனர். நிஜாமுத்தீன் அப்போது பதறாமல் கூறுகிறார், "dilli door asth (தில்லி இன்னும் தூரத்தில்தான் உள்ளது)". அடுத்த நாள் சுல்தானின் மரணச் செய்திதான் வருகிறது. அமீர் குஸ்ரு பற்றிய ஒரு ஹிந்தி சீரியலில் இந்தக் காட்சி வருகிறது.
அப்போது அந்த சீரியலை பார்க்கும் போது இருந்த மனநிலையில்தான் சோ அவர்களது இந்த சீரியலில் இந்த காட்சியை காணும்போது இருந்தேன். அதுவும் அசோக் என்பவர் கதைப்படி வசிஷ்ட முனிவர். அவர் கூறியது பலிக்காமல் போகுமா என்பதும் நிஜம்தானே.
இந்த சீன் முடிந்ததுமே சோ மற்றும் அவரை கேள்வி கேட்கும் நண்பர் திரைக்கு வந்தனர். நண்பர் இந்த அசோக் சொல்வது எல்லாமே பலிக்கும் என சோ சொல்லுகிறாரா என கேட்க, சோ தனக்கே உரித்தான பெரிய விழிப்பார்வையுடன் “அப்படியும் சொல்லலாம்” எனக்கூறிவிட்டு மேலே பேசியது சுவாரசியமாக இருந்தது. அதாவது இதெல்லாம் பலிப்பதற்கு மகானாகவெல்லாம் இருக்கத் தேவையில்லை. ஆகவேதான் பெரியவர்கள் எப்போதுமே கூறுவார்கள், அசுபமாக பேசாதே என. அவ்வாறு பேசும்போது மேலே சஞ்சரித்து கொண்டிருக்கும் துர்தேவதைகள் “அப்படியே ஆகட்டும் (ததாஸ்து)” என்று கூறிவிடுவார்களாம்.
அமரர் டணால் தங்கவேலு அவர்களும் இதையே பலமுறை கூறியுள்ளார். ஒருமுறை என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடம் இவர் கடன் கேட்க, அவரும் தந்தாராம். அப்போது “எனது லட்சுமியையே உனக்கு தருகிறேன்” என்றாராம். அதிலிருந்து அவர் பொருளாதார நிலை மோசமாகி வறுமையில் வாடினார் என தங்கவேலு அடிக்கடி கூறியுள்ளார். “பாட மாட்டேன்” என்னும் பல்லவியில் பாடிய பாடகர் சுந்தரம் (மணமகள் படத்தில் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பாடியவர்) பிறகு தொழிலில் சோபிக்கவில்லை என்பதயும் அவரே கூறியுள்ளார்.
நேற்றைய (10.02.2009) எபிசோடில் நான் ரசித்த காட்சி. அமாவாசை தர்ப்பணம் செய்விக்க செல்ல வேண்டிய சாஸ்திரிகள் (கம்பர் ஜெயராமன்) ஜுரத்தில் படுத்திருக்கிறார். நல்ல வேலையில் இருக்கும் அவர் மகன் (கோல்டன் சுரேஷ்) சாஸ்திரிகளுக்கு இந்த வேலையை ஒதுக்கிய வேணு சாஸ்திரிகளுக்கு ஃபோன் செய்து, தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை, ஆகவே வேறு ஏற்பாடு செய்யுமாறு கேட்க, அவர் அது இயலாது எனக் கூறிவிடுகிறார். கம்பர் ஜெயராமனும் தானே சென்று விடுவதாகக் கூற, மகன் அவரை அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு தானே சாஸ்திரிகளுக்கான உடை அணிந்து சாமக்கிரியைகளுடன் செல்கிறான். அக்காட்சி மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. தாய் தந்தையிடம் ஆசி வாங்கி அவன் புறப்பட, பெற்றோர்களின் முகத்தில் பெருமையை மிக நன்றாகவே காட்டியிருந்தார்கள். அந்த பெருமை நிச்சயமாகவே அவன் பெரிய வேலையில் கைநிறைய சம்பாதிப்பதில் இருக்கும் பெருமையை விட அதிகமே என்றும் எனக்கு உறுதியாகப் பட்டது.
அமாவாசை தர்ப்பணம் பற்றி பிறகு சோ அதே எபிசோடில் விளக்கினார். அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் இல்லாது இறந்தவர்களுக்கும், அவர் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்களுக்கும் பலனளிக்கக் கடவது என்ற செய்தியும் உள்ளது என்பதை அவர் விளக்கினார். அதே போல ஆவணி அவிட்டத்தில் சொல்லும் காயத்ரி மந்திரத்தால் நாட்டுக்கே நன்மை விளையும் என்ற நம்பிக்கை இந்து சமுதாயத்தில் உள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.
இப்பதிவை முடிக்கும் முன்னால், பினாத்தல் சுரேஷ் சேட்டில் கூறிய இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். அதாகப்பட்டது சோ மேல் எனக்கு உள்ள முரட்டு அபிமானமே என்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது என்றார் அவர். உண்மைதான், சோ மேல் எனக்கு முரட்டு அபிமானம் உண்டு என்பது நிஜம்தான்.
சமீபத்தில் 1941-ல் கல்கி அவர்கள் கல்கி பத்திரிகை ஆரம்பித்தபோது தனது ராஜாஜி ஆதரவு நிலையைப் பற்றி எழுதினார். அவர் சொன்னது, “எனக்கு ராஜாஜி அவர்கள் மேல் மிகுந்த அபிமானம் இருப்பதால் அவர் சொல்வதையெல்லாம் நான் ஆமோதிக்கிறேன் என்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்வேன். எனக்கு ராஜாஜி மேல் மிகுந்த அபிமானம் உண்டு என்பது உண்மையே. அதற்காக அவர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் ஆதரிக்கக் கூடாதா என்ன”
நானும் அதைத்தான் கூறுகிறேன். சோ மேல் அபிமானம் எனக்கு இருக்கிறது என்பதற்காக அவர் செய்வதையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்பதா? இதற்கு ஆங்கிலத்தில் bending backwards என கூறுவார்கள். அதாவது உருப்படாத சில இணைய தாசில்தார்களின் சான்றிதழுக்கு ஆசைப்பட்டு சில பார்ப்பனர்களே பார்ப்பனர்களைத் திட்டுவது போல என வைத்து கொள்ளலாம். நான் bending backwards எல்லாம் செய்யும் ஆள் அல்ல.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
7 hours ago
28 comments:
<< அதாவது உருப்படாத சில இணைய தாசில்தார்களின் சான்றிதழுக்கு ஆசைப்பட்டு சில பார்ப்பனர்களே பார்ப்பனர்களைத் திட்டுவது. நான் bending backwards எல்லாம் செய்யும் ஆள் அல்ல >>
Well and truly spoken, Mr. Dondu. I am very glad that people like you are still there to espouse the causes of Brahmins, thank you.
இந்த நெடுங்தொடர் பிராமணர்களுக்கானது அல்ல. பிராமணர்களை சரியாக புரிந்துகொள்ளாத எல்லோருக்காகவும். அதில், பலப்பல பிராமணர்களும் அடக்கம்.
நேர்த்தியான பலப்பல பொருள்கள் இதில் விளக்கப்படுகின்றன. முயற்சி சிறந்தது, ஆதரிக்கப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. டைரக்ஷன் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாகச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இளைய தலைமுறைக்கு பிடிக்காத படி மிகவும் மெதுவாகவும், வசனங்கள் கனமாகவும் இருக்கின்றன. வெங்கட் கவனிக்கவேண்டும். நாதன் நடப்பதும், சிரார்த்தம் செய்வதும் பத்து நிமிடங்கள் காட்டுகிறார்கள். காட்சிகளில் ஒரு கோர்வை இல்லாமல் சில சமயம் சொதப்புகிறது போல தோன்றுகிறது. பஞ்சகச்சத்தை கிரிக்கெட் யூனிபார்ம் என்று விளக்கும் சோ அவர்கள் கொஞ்சம் பத்து காசு செலவழித்து ஒரு சாஸ்திரிகளைகூப்பிட்டு எல்லோருக்கும் நல்ல கச்சமும், மடிசாரும் கட்டிவிடச்சொல்லியிருக்கலாம். உடைகள் எல்லாம் மோசமாக இருக்கிறது. ஒரிஜினாலிடியில் கோட்டை விடுகிறார்கள். ஒருவிதத்தில், இதுவும் பிராமண சமுதாயத்தின் மீதான விமர்சனமே. பழம் பெருமை பேசும் யாருக்கும் அதை தன்னகத்தே ஆக்கிக்கொள்ள மனசில்லை. எல்லாம் லிப் சர்வீஸ்.
அவனே
ஒரு சீரியல விடுவதில்லை போலருக்கு,
சோ சொலவதெல்லாம் உண்மை என்பதால் அவரை ஆதரிகிறிங்களோ!
சோ ஆட்சிக்கு ஒரு மாதிரி பேசுற ஆளாச்சே!
ஒருவர் தோற்றத்தை வச்சு அவரு நல்லவரா, கெட்டவரா என்று எப்படி கணிக்க முடியாதோ!
அதே மாதிரி தான் ஒருவர் விரலை மடக்கி மடக்கி பேசுவதெல்லாம் உண்மையாகாது!
பகுத்தறிவு என்பது
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு
தாய் தந்தையிடம் ஆசி வாங்கி அவன் புறப்பட, பெற்றோர்களின் முகத்தின் பெருமையை மிக நன்றாகவே காட்டியிருந்தார்கள். அந்த பெருமை நிச்சயமாகவே அவன் பெரிய வேலையில் கைநிறைய சம்பாதிப்பதில் இருக்கும் பெருமையை விட அதிகமே என்றும் எனக்கு உறுதியாகப் பட்டது. //
அப்படியே புல்லரிச்சிப் போச்சு டோண்டு சார்! எப்போதோ படிச்ச கதையில மகனுக்கு வெளிநாட்டுல கைநிறைய, பைநிறைய டாலர்ல சம்பளம் கிடைத்தும், அம்மா பெத்தவங்களையும், சொந்த நாட்டையும் விட்டு போக மாட்டேன். குடிசையும், கூழும் போதும் என்று டயலாக் விடுவான். படிக்க
நல்லாத்தான் இருக்கு, ஆனா யதார்த்தம்ன்னு ஒண்ணு இருக்கே, இந்த மாதிரி டைலாக் பேசினா
பைத்தியம் என்பார்கள் அல்லது பெற்றவர்களே நல்ல புத்தி சொல்லி அனுப்பி வைப்பார்கள். அதுப் போல, காட்சியில் பார்த்த பெருமை :-) யதார்த்த வாழ்வில் கோவிலில் பூஜை, நல்லது கெட்டது
செய்பவர்களுக்கு சமூகத்தில் என்ன மரியாதை? நல்லவேலையில் இருப்பவர்கள் தம் பிள்ளைகளை
வேத பாடசாலைக்கு அனுப்புவார்களா? ஏன் இன்று சாஸ்திரிகள்/ குருக்கள் வேலை செய்து, நல்ல நிலைமையில் இருக்கும் யாராவது
தங்கள் பிள்ளைகளை இந்த வேலையில் விட்டு நீங்கள் பார்த்து இருக்கீறீர்களா?ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாதவர்கள், படிப்பு
வராதவர்களுக்குதான் இந்த வேலை. இவர்களுக்கு சுலபமாய் பெண் கொடுப்பார்களா?
நான் பணம் கொழிக்கும் கோவில்களை சொல்லவில்லை. இவை எல்லாம் நான் பார்த்தது, தவறு
என்றால் சொல்லுங்கள். என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
Dondu Sir,
I remember reading this book long back. I have to concede that I wasn't very impressed. Cho has written much better books, IMO.
I am curious about one thing - What is your opinion about dhurthevathai floating in the skies, amavasai tharppanam, gayatri mantra etc.? Do you beleive in them? Or do you disbelieve them?
//பகுத்தறிவு என்பது
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு//
கண்டிப்பாக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//யதார்த்த வாழ்வில் கோவிலில் பூஜை, நல்லது கெட்டது
செய்பவர்களுக்கு சமூகத்தில் என்ன மரியாதை? நல்லவேலையில் இருப்பவர்கள் தம் பிள்ளைகளை
வேத பாடசாலைக்கு அனுப்புவார்களா? ஏன் இன்று சாஸ்திரிகள்/ குருக்கள் வேலை செய்து, நல்ல நிலைமையில் இருக்கும் யாராவது
தங்கள் பிள்ளைகளை இந்த வேலையில் விட்டு நீங்கள் பார்த்து இருக்கீறீர்களா?ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாதவர்கள், படிப்பு
வராதவர்களுக்குதான் இந்த வேலை. இவர்களுக்கு சுலபமாய் பெண் கொடுப்பார்களா?
நான் பணம் கொழிக்கும் கோவில்களை சொல்லவில்லை. இவை எல்லாம் நான் பார்த்தது, தவறு
என்றால் சொல்லுங்கள். என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்//.
நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஆனால் நான் இந்தக் காட்சியை இவ்வாறு பார்க்கிறேன்.
அதாவது ஒரு மகன் தன் தந்தையை விட்டு கொடுக்காது அவர் செய்த காரியத்துக்கு ஒரு பங்கமும் வராது செய்யும் காட்சி மிகவுமே நேர்மறையான காட்சிதான்.
மேலும் பல புரோகிதர்களில் இக்காலக் கட்டத்தில் தமது சுயமரியாதை குறையாது நிமிர்ந்த பார்வையுடன் செயலாற்றுபவர்களும் உண்டு. பலர் செல்பேசியும் கையுமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணமே உள்ளன. கார் எல்லாம்கூட வைத்திருக்கிறார்கள்.
இதில் கஷ்டப்படுபவர்களின் துயரமெல்லாம் சரியான மேலாண்மை இல்லையென்பதால்தான். முக்கியமாக தன்னம்பிக்கை வேண்டும். மார்க்கெட்டிங் வேண்டும்.
//ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாதவர்கள், படிப்பு
வராதவர்களுக்குதான் இந்த வேலை.//
அவ்வாறு வருபவர்களும் உண்டுதான் இல்லையென சொல்லவில்லை. ஆனால் இந்த சீரியலில் வந்தது போல நல்ல வேலையில் இருப்பவர்களில் ரிடையர் ஆனதுக்கு பிறகு புரோகிதம் செய்ய வருபவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் தன்னம்பிக்கைதான் தேவை.
எனது மொழிபெயர்ப்பு துறையையே எடுத்து கொள்ளலாம். இந்த சேவை அளிக்கும் பலர் ரேட் பேசத் தெரியாமல் பேசி அடிமாட்டுப் விலைக்கு ஒத்து கொண்டு அவஸ்தை படுகின்றனர். அதற்கு முக்கியக் காரணமே பயம்தான். எங்கே வேலை ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஐயத்தில் இவ்வாறெல்லாம் ம்நடக்கின்றனர். அதுவே நான் முதலிலேயே வேறு துறையில் அதிகாரியாக இருந்து சைட் பிசினஸாக இதை செய்தபோது எனது தோரணையே தனிதான். கொடுத்தால் கொடு இல்லாவிட்டால் போய்க்கொண்டே இரு என்று அசால்ட்டாக இருப்பதால் எனக்கு வேலை தருபவர்களும் மரியாதையுடனேயே என்னை நடத்துகின்றனர்.
கடைசியில் ஒரு வார்த்தை. சீரியலில் அந்த காட்சியில் வந்த சாஸ்திரிகள் நிஜமாகவே சின்சியர் தனது தொழிலில். ஆகவே தனது மகன் தன்னை விட்டுக் கொடுக்காது தனக்கு பதிலாக சென்ற போது நிஜமாகவே பெருமிதம் அடைந்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்ப்பனராகப் பிறந்தததற்காக தாங்கள் பெருமைப்படுவதாகத் தெரியவில்லை. சோ வும் கூடத்தான். சில ஏழை பிராமணாள் மற்றும் சுத்த சுயம்புவாகவே முன்னேற விதிக்கப்பட்ட சிரார்த்தவாளுக்கு விதி என்ன எழுதியதோ அதுதான். அதுக்காகப் பெருமைப்பட கம்ப்யூட்டர் எல்லாம் கத்துண்ட நீங்கள்ளாம் பேசுறீங்கள். என்னா பண்றது காசு இருந்தா மதிப்பு இல்லாட்டி இழவு காத்த கிளியப் பாத்து நம்மவாள்னு சொல்லி மதிக்கவா போறீங்க... திதி பண்ணப் போற பிராமாணாள நம்மவா மதிக்கிறீங்களா... ஏதோ மனசுல பட்டுச்சு...நானும் படிச்சுட்டேன்...ஆனா படிக்காதவா நெறயப் பேரு உள்ள ஊரு எனக்கு
-ramanujam
Dear Mr.Raghavan,
I am Kaliraj from Doha.(Aayilyan's friend)This message I have received from our Alumini Group.
Our college has decided to celebrate the function of opening the statue of our founder president Mr.K.L.N.krishnan on 16-2-2009 (Monday). Mr.Narendra Modi, (Chief Minister of Gujarat ) has been invited for the function. So the already planned alumni meet has been postponed to 22-3-09 (Sunday).
K.L.N. College of Engg,
Pottapalayam
Madurai.
/// இழவு காத்த கிளியப் பாத்து நம்மவாள்னு ////
ராமானுசத்துக்கு தமிழே தகராறு போல.
அது, இழவு இல்லை, இலவு.
டோண்டு சார்,
எந்த தொழிலும் கேவலமானது இல்லை. பிறரை ஏமாற்றாமல் ஆத்மார்த்தமாய், டிமாண்ட்
செய்யாமல் செய்து வைப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த தொழிலில்தான் கறுப்பு ஆடுகள் இல்லை? அதேப் போல, தன்னமிக்கையுடன், சுய கவுரத்துடன், கறார் ஆசாமிகளையும்
பார்த்திருக்கிறேன். செல் போன், பைக் எல்லாம் போய கார் வாங்குமளவுக்கு சிலருக்கு பணம்
கொழிக்கிறது. ரிடையர் ஆனபிறகும், சுமாரான வேலையை ராஜினாமா செய்துக்கு, அவசர சமஸ்கிருத வகுப்பில் படித்து தொழில் ஆரம்பித்து நாலு காசு பார்ப்பவர்கள் நகரங்களில் உண்டு,
நீங்கள் சொன்ன சீரியல் காட்சியில் அப்பாவின் வேலை, கேவலம் இல்லை என்ற மனோபவத்தை
வெளியிட்டு இருந்தால் நான் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் கம்ப்யூட்டர் இன்ஜினியரை
விட ஒசந்த தொழில் மாதிரி சொன்னீங்க பாருங்க, அங்க தான் ஒதைக்கிது :-)))
இன்றைக்கு நம்பிக்கையிருப்பவர்கள் அழைக்கிறார்கள் என்ற எண்ணமும், தமிழகத்தில் நாத்தீகம்
வழக்கொழிந்தும் போய் கொண்டு இருப்பதால், நல்ல டிமாண்டு இருந்தாலும் தம் பிள்ளைகளை இந்த வழிக்கு கொண்டு வர தற்சமயம் யாருக்கும் விருப்பம் இருக்கிறா மாதிரி
தெரியவில்லை.
@ராமச்சந்திரன் உஷா
நான் ஏற்கனவே கூறியபடி சீரியலில் வரும் கம்பர் ஜயராமன் ஏற்ற பாத்திரம் புரோகிதத் தொழிலை ஒரு வேள்வியாக நடத்தும் பாத்திரம். அவர் அடிமனதில் தனக்கு பிறகு புரோகிதம் பார்க்கும் வாரிசு இல்லை என உறுத்தியிருக்கும் போல. அதே சமயம் அவ்வாறு எதிர்பார்ப்பது யதார்த்தத்துக்கு விரோதம் என்ற உண்மையையும் மறக்க முடியாது இருப்பார் என எனக்கு தோன்றுகிறது.
ஆகவே அச்சமயத்துக்கு அந்தப் பெருமிதம். முக்கியமாக லௌகீக வாழ்க்கையில் ஒரு நல்ல வேலைக்கு செல்பவன் தந்தையை விட்டுக்கொடுக்காமல் வந்ததில் வந்த மனநிறைவு வேறு சேர்ந்து கொள்கிறதாகத்தான் எனக்கு படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
*********** அமாவாசை தர்ப்பணம் பற்றி பிறகு சோ அதே எபிசோடில் விளக்கினார். அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் இல்லாது இறந்தவர்களுக்கும், அவர் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்களுக்கும் பலனளிக்கக் கடவது என்ற செய்தியும் உள்ளது என்பதை அவர் விளக்கினார்
*********
அப்படினா, அப்பா உயிரோட இருக்கறவங்க இந்த அமாவாசை தர்ப்பணம் பண்றாங்களா ?
சோ சொல்லி இருக்க வேண்டியது காண்டரிஷி தர்ப்பணத்தை ! அதுலயும் பித்ருக்களை பத்தி தான் இருக்குமே தவிர. சாதிய பத்தி இல்ல. தாத்தா, கொள்ளு தாத்தா, அவரோட தாத்தா யாராவது வேற்று ஜாதில பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணி இருந்தா இது சரியா இருக்கும்.
குருக்கள் வேல செய்யறதுக்கு வேத பாடசாலை போய் இருக்கனும்ன்னு யாரு சொன்னாங்க உஷா மேடம் ?
வேத பாடசாலைல படிக்கிறது வெறும் basic studies ! கல்யாண மந்திரம், அமாவாசை மந்திரம், அர்ச்சனை இது எல்லாம் எக்ஸ்ட்ரா. ITI ல படிக்கறா மாதிரி. இப்போ டைரக்டா ITI படிக்கறவங்க அதிகம்.
வேத பாடசாலைல ப்ரோகிதம் பண்ண முடியாது. அதே மாதிரி அர்ச்சகராவும் ஆக முடியாது.
QUESTIONS FOR THURSDAY -
1.கிரீன்வேஸ் ரோடின் பெயர் மாற்றம், வரும் லோக்சபா
தேர்தல் சமயம் சிறுபான்மை கட்சி ஓட்டுகளுக்காக செய்யப்படுகிறதா?
2.இன்று ஹிந்து பத்திரிகையில் நாலு பக்கங்களுக்கு மேலாக, மத்திய அரசு விளம்பரங்கள் உள்ளன. இரண்டு
தவிர மற்றவை தமிழ் நாடு சம்பந்தமுள்ளவையல்ல!
ஆனால் சேது மாவீரன் பாலு (2), ஸ்பெக்ட்ரம் ராஜா(2), ரெயில்
வேலு (2) அவர்களுடைய புகைப்படங்களுடன் வெளி
வந்துள்ளன - இவை தேவை தானா?
3. நேற்று ஹிந்துவில் ஒரு முழு பக்க விளம்பரம் பார்த்தீர்
களா? பீஹார் சம்பந்தப்பட்டது - ரெயில் வேலு ஃபோட்டோவுடன்.
லாலுவின் கைங்கர்யம் இது - இந்த விளம்பரத்தில், பீஹாரின்
மாஜி முதல்வர், மாஜி எம்.எல்.ஏக்கள்,அன்னை சோனியா
உள்பட எல்லோரும்காட்சி தந்தனர் - தற்போதைய பீஹாரின்
முதல்வரைத்தவிர! என்ன அரசியல் இது? ரயில்வே லாபத்தில்
நடக்கிறது என்றால் அரசு பணத்தை இவ்வாறு ஊதாரித்தன
மாக செலவு செய்யலாமா?
iam ramanujam
இன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக்கியப் பிழைகளும் உள்ளது உண்மைதான் உணர்ச்சியின் வெளிப்பாட்டால் தவறு நிகழ்ந்து விட்டது. அப்படி பார்த்தால் கீழே உள்ள டோண்டு ஐயாவின் தவறுகளுக்கு என்ன சொல்வது?
1. மிகைபடுத்த்தப்பட்ட
2. இல்லாது போகலாம்
3. பிழைந்து
4. பொருளாதார நிலை மோசமாகி
5. என்பதயும்
6. தர்ப்பணம் செய்விக்க செல்ல வேண்டிய
7. சாமக்கிரியைகளுடன்
8. பெற்றோர்களின் முகத்தின் பெருமையை
9. பித்ருக்களுக்கும் மட்டுமின்றி
.
.
\\அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் இல்லாது இறந்தவர்களுக்கும், அவர் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்களுக்கும் பலனளிக்கக் கடவது என்ற செய்தியும் உள்ளது\\
அந்த மந்திரம்,
”ஞாதா அஞ்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி”
அறிந்தும் அறியாத மக்களின் பித்ருக்களுக்கும் சேர்த்து இந்தத் தர்ப்பணத்தைச் செய்கிறேன் என்று அர்த்தம்.
பிராமணர்களுக்காக வாதிடுபவர்கள் அந்த ஜாதியில் உள்ள எழைகளுக்கு உதவ ஏதாவது செய்வார்களா, இல்லை லிப் அண்ட் டைப் சர்வீஸ் மட்டும் தானா ?
வாலில்லாத தம்பி.
//// அப்படினா, அப்பா உயிரோட இருக்கறவங்க இந்த அமாவாசை தர்ப்பணம் பண்றாங்களா ? ////
மணிகண்டன்,
சரியாக படிக்கவில்லையா?
/// தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி ///
அப்பன், ஆயிக்கு செய்துவிட்டு பிறகு இவர்களுக்கும் உண்டு.
//// iam ramanujam
இன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக்கியப் பிழைகளும் உள்ளது உண்மைதான் உணர்ச்சியின் வெளிப்பாட்டால் தவறு நிகழ்ந்து விட்டது. ///
தவறு நிகழ்வது சகஜம். அது ஒன்றும் பெரிய அபவாதம் இல்லை. ஆனால், பொருள் முற்றிலும் மாறிவிடும்போதும் அறியாதது தங்களின் "உணர்ச்சி வேகத்தை" காட்டுகிறது.
நீங்கள் முயற்சிசெய்து பிராமண மொழி எழுத முயற்சித்தாலும், அது செயற்கையானது என்பது புறிந்ததால் நான் சொன்னேன். ஏமாற்றுவதை விட்டுவிடவும்.
பிராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. அப்படி பெருமைப்பட்டால்தான் அது சாதிவெறி. அது தமிழகத்தில் பலரிடம் - ஆதிக்க சாதி களிடம் அதிகமாய் - மண்டியிருக்கிறது.
பிராமணர்கள் வெறும் வார்த்தை ஜாலம் செய்கிறார்கள், ஏழைகளுக்கு உதவுவதில்லை என்றெல்லாம் கரிசனம் காட்டுபவர்கள் பெரும்பாலும் பிராமணர்களை வெறுப்பதால் எழுதும் மற்ற சாதி ஆட்கள். பிராமணர்கள் மீதுள்ள கரிசனத்தை விட அவர்களை குற்றம் சொல்ல ஒரு காரணம் கிடைக்காதா என்ற நப்பாசைதான் காரணம்.
இவர்களுக்கு ஆத்திகத்தின், சம்பிரதாயங்களின் எல்லா குறைகளும் கேலிக்கூத்து. பிராமணர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தர்ம சிந்தனையுடன் இருக்கிறார்கள், செய்கிறார்கள். சாதிப்பற்று மட்டும் இல்லாமல் எல்லா தேவைப்பட்டவர்களுக்கும் பொதுவாக சமூக சேவை செய்பவர்களே அதிகம். பிராமணன் வாழ்வதே இந்த உலக நன்மைக்காக இருக்கவேண்டும் என்பதே இந்து மத கொள்கை.
அவனே
//Anonymous said...
iam ramanujam
இன்னும் நிறைய சொற்பிழைகளும், வாக்கியப் பிழைகளும் உள்ளது உண்மைதான் உணர்ச்சியின் வெளிப்பாட்டால் தவறு நிகழ்ந்து விட்டது. அப்படி பார்த்தால் கீழே உள்ள டோண்டு ஐயாவின் தவறுகளுக்கு என்ன சொல்வது?
1. மிகைபடுத்த்தப்பட்ட
2. இல்லாது போகலாம்
3. பிழைந்து
4. பொருளாதார நிலை மோசமாகி
5. என்பதயும்
6. தர்ப்பணம் செய்விக்க செல்ல வேண்டிய
7. சாமக்கிரியைகளுடன்
8. பெற்றோர்களின் முகத்தின் பெருமையை
9. பித்ருக்களுக்கும் மட்டுமின்றி//
??????
.
//தவறு நிகழ்வது சகஜம். அது ஒன்றும் பெரிய அபவாதம் இல்லை. ஆனால், பொருள் முற்றிலும் மாறிவிடும்போதும் அறியாதது தங்களின் "உணர்ச்சி வேகத்தை" காட்டுகிறது.
நீங்கள் முயற்சிசெய்து பிராமண மொழி எழுத முயற்சித்தாலும், அது செயற்கையானது என்பது புறிந்ததால் நான் சொன்னேன். ஏமாற்றுவதை விட்டுவிடவும்.//ஏமாற்றுவதா என்ன சொல்ல வருகின்றீர் ஐயா. எழுதுபவர் பிராமாணாள் அல்லாதார் எனவா....நான் பிராமாணாள் என எங்குமே சொல்லவில்லையே....ராமானுஜம் என ஒரு தலித் வைக்க கூடாதா...அல்லது அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் எனக் கருதி வருகின்றீர்களா?
அ
/தராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. அப்படி பெருமைப்பட்டால்தான் அது சாதிவெறி. அது தமிழகத்தில் பலரிடம் - ஆதிக்க சாதி களிடம் அதிகமாய் - மண்டியிருக்கிறது.//
பெருமைப்பட்டால் அவரின் சிறுமைதான் வெளிப்படும். சோ அதனைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன ? ஆனால் நன்றாக வாழ வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்ட சில பிராமணாள் மாத்திரமே இன்னும் தங்களது பிற்ப்பையும் மேன்மைப் படுத்திக் காண்பிக்க இவ்வாறு செய்கின்றனர். ஆதிக்க சாதி என்றால் பிராமாணாளை ஆதிக்கம் செய்வதாக்த் தாங்கள் கருதும் சில சாதிகளையா குறிப்பிடுகின்றீர்கள். எந்த எந்த சாதிகள் எனக் குறிப்பிடலாமே....
// பிராமணர்கள் வெறும் வார்த்தை ஜாலம் செய்கிறார்கள், ஏழைகளுக்கு உதவுவதில்லை என்றெல்லாம் கரிசனம் காட்டுபவர்கள் பெரும்பாலும் பிராமணர்களை வெறுப்பதால் எழுதும் மற்ற சாதி ஆட்கள். பிராமணர்கள் மீதுள்ள கரிசனத்தை விட அவர்களை குற்றம் சொல்ல ஒரு காரணம் கிடைக்காதா என்ற நப்பாசைதான் காரணம். //
ஏன் எனது கேள்வியை நேர் அர்த்தத்தில் புரிஞ்சுக்க மறுக்குறேள். சாதியை மீறி அந்தஸ்து பதவி சம்பளம் இருக்கின்றது என்பதுதான் எனது குற்றச்சாட்டு. அது சரி நான் தலித் என்றால் ஏன் பிராமணாள் என ஒரு சாதியை மாத்திரம் கரிசனத்தோடு பார்க்க வேண்டும். எல்லோரையும் பார்ப்பதுதானே சரி. வயதில் பெரியவரான தாங்கள் இதனை எனக்கு சொல்லியிருக்க வேண்டும்.
// பிராமணன் வாழ்வதே இந்த உலக நன்மைக்காக இருக்கவேண்டும் என்பதே இந்து மத கொள்கை.
//மன்னிக்கவும். இது எந்த வகையில் என நீரோ அல்லது உங்கள் குருநாதர் ஆகவே ராமசாமியோ விளக்குங்கள். என்னைப் பொருத்த வரையில் இது லாஜிக் இல்லாத ஆர்க்யூமெண்ட எனக் கருதுகிறேன்.
அதெல்லாம் சரி....தங்களது மொழியியல் தவறுகளைக் களைந்து கொண்டதாக எழுதி தாங்கள் வயதில் மாத்திரமல்ல பண்பிலும் மூத்தவர் என நிரூபித்திருக்கலாமே
ராமானுசம் ஐயா,
/// அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் எனக் கருதி வருகின்றீர்களா? ///
ஆமாம்.
/// பெருமைப்பட்டால் அவரின் சிறுமைதான் வெளிப்படும். சோ அதனைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன ? ///
சோ சொல்லிக்கொள்ள வில்லை என்று நீங்கள் முதலில் சொன்னீர்கள். இதோ இப்படி...
//// பிராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. ///
இப்போது, சோ தனியாக வேறு சொல்லிக்கொள்ள வேண்டுமா என்கிறீர்கள்? அதாவது, மறைமுகமாக அவர் சொல்லிக்கொண்டார் என்று. அபத்தமாக மாற்றிச்சொல்கிறீர்கள்.
/// ஆதிக்க சாதி என்றால் பிராமாணாளை ஆதிக்கம் செய்வதாக்த் தாங்கள் கருதும் சில சாதிகளையா குறிப்பிடுகின்றீர்கள். ///
பிராமணாளை அல்ல.
// எந்த எந்த சாதிகள் எனக் குறிப்பிடலாமே.... ///
எல்லோருக்கும் தெரியும்.
/// சாதியை மீறி அந்தஸ்து பதவி சம்பளம் இருக்கின்றது என்பதுதான் எனது குற்றச்சாட்டு. ///
சாதிக்கேற்ற அந்தஸ்து என்றும் பணம் என்றும் கிடையாது. அப்படி இருப்பதாக சொல்லும் நீங்கள் ஒரு சாதி வெறியர்.
/// அது சரி நான் தலித் என்றால் ஏன் பிராமணாள் என ஒரு சாதியை மாத்திரம் கரிசனத்தோடு பார்க்க வேண்டும். எல்லோரையும் பார்ப்பதுதானே சரி. ////
குழப்பம். எழுத்தில், மற்றும் தங்கள் வார்த்தைகளில்.
/// வயதில் பெரியவரான தாங்கள் இதனை எனக்கு சொல்லியிருக்க வேண்டும். ///
எனக்கு வயதாகவில்லை. நான் டோண்டு இல்லை.
/// மன்னிக்கவும். இது எந்த வகையில் என நீரோ அல்லது உங்கள் குருநாதர் ஆகவே ராமசாமியோ விளக்குங்கள். ///
சோ எனக்கு குருநாதர் இல்லை. நான் யாரென்றே தெரியாமல் ஏதோ குருட்டாம்போக்கில் .... றுகிறீர்கள்.
/// என்னைப் பொருத்த வரையில் இது லாஜிக் இல்லாத ஆர்க்யூமெண்ட எனக் கருதுகிறேன். ///
ஆமாம். உங்களின் பின்னூட்டத்தைப்பற்றிய தங்கள் கணிப்பு சரியானதே.
/// அதெல்லாம் சரி....தங்களது மொழியியல் தவறுகளைக் களைந்து கொண்டதாக எழுதி தாங்கள் வயதில் மாத்திரமல்ல பண்பிலும் மூத்தவர் என நிரூபித்திருக்கலாமே ///
நான் டோண்டு இல்லை
ஜெயடீவியில் இரவு 0800 மணிக்கு ஓளிபரப்பாகும் இந்த தொடரில் ஒலித் தடை அதிகமாய் இருக்கிறது.இது இயற்கையாய் நடை பெறுகிறதா ? இல்லை ஆதித்யா கடாட்சமா?
மறு ஒளிபரப்பு உண்டா?
இது பற்றிய உங்கள் விமர்சனம் தொடருமா?
//// அவாள், ஆத்து என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் எனக் கருதி வருகின்றீர்களா? ///
ஆமாம்./ மன்னிக்கவும். உங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது எனக் கருதுகிறேன்.
// /// பெருமைப்பட்டால் அவரின் சிறுமைதான் வெளிப்படும். சோ அதனைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன ? ///
சோ சொல்லிக்கொள்ள வில்லை என்று நீங்கள் முதலில் சொன்னீர்கள். இதோ இப்படி...// தொடர் எடுப்பதன் நோக்கம அதுதானே
// //// பிராமணராக பிறப்பதற்கு பெருமைப்பட ஒன்றுமில்லை. அதனால், டோண்டுவோ சோ வோ அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. ///
இப்போது, சோ தனியாக வேறு சொல்லிக்கொள்ள வேண்டுமா என்கிறீர்கள்? அதாவது, மறைமுகமாக அவர் சொல்லிக்கொண்டார் என்று. அபத்தமாக மாற்றிச்சொல்கிறீர்கள்.
// உள்ளே குறிப்பிடுவது நான் எழுதியதா கவனமாகப் படித்து யார் வாய்மொழிக்கோ என்னிடம் விமர்சனம் செய்யும் அறிவை என்ன சொல்வது..
//
/// ஆதிக்க சாதி என்றால் பிராமாணாளை ஆதிக்கம் செய்வதாக்த் தாங்கள் கருதும் சில சாதிகளையா குறிப்பிடுகின்றீர்கள். ///
பிராமணாளை அல்ல.//
பார்ப்பனராகப் பிறந்தாலே அறிவு மட்டுப்படுத்தப்பட்டு விடுமா? கேள்வி புரியவில்லையா ? மீண்டும் கேள்வியை படித்து பதில் எழுதுக.
//
// எந்த எந்த சாதிகள் எனக் குறிப்பிடலாமே.... ///
எல்லோருக்கும் தெரியும்.// இதுவும் தங்களுடைய உணர்ச்சிவயப்பட்ட நிலையையே காட்டுகின்றது. பதில் சொல்லாமல் தப்பிக்க என்னவெல்லாம் வேலை செய்கின்றீர்கள்.
// /// சாதியை மீறி அந்தஸ்து பதவி சம்பளம் இருக்கின்றது என்பதுதான் எனது குற்றச்சாட்டு. ///
சாதிக்கேற்ற அந்தஸ்து என்றும் பணம் என்றும் கிடையாது. அப்படி இருப்பதாக சொல்லும் நீங்கள் ஒரு சாதி வெறியர்.//
தமிழ் படிக்கத் தெரியும்தானே. மீண்டும் உமக்கு புரியும்படி சொல்ல கடமைப்பட்டது என்னவென்றால், சாதி அபிமானத்துடன் ஒன்றிணைவதை பொருளாதார, சமூகப் படிநிலமைகள் மறுக்கின்றன என்பதே...இந்த வாக்கியம் சாதி வெறியர்களை எதிர்க்கின்றது என்பது கூடவா புரியாது.
//
/// அது சரி நான் தலித் என்றால் ஏன் பிராமணாள் என ஒரு சாதியை மாத்திரம் கரிசனத்தோடு பார்க்க வேண்டும். எல்லோரையும் பார்ப்பதுதானே சரி. ////
குழப்பம். எழுத்தில், மற்றும் தங்கள் வார்த்தைகளில்.// "நான் பிராமணன்' என்ற அகந்தையாகிய கண்ணாடியைக் களைந்துவிட்டு மொழியறிவை அதிகரித்து முடியாவிடில் மீண்டும் பயின்று வந்து படிக்கவும்.
// /// வயதில் பெரியவரான தாங்கள் இதனை எனக்கு சொல்லியிருக்க வேண்டும். ///
எனக்கு வயதாகவில்லை. நான் டோண்டு இல்லை.// நான் உங்களை எங்கேயும் டோண்டு எனச் சொல்லவில்லையே... எனக்குத் தெரிந்த பார்ப்பனர்கள் எல்லாம் ஏன் இப்படி லாஜிக் இல்லாமல் பேசுகின்றீர்கள் எனத் தெரியவில்லை.
//
/// மன்னிக்கவும். இது எந்த வகையில் என நீரோ அல்லது உங்கள் குருநாதர் ஆகவே ராமசாமியோ விளக்குங்கள். ///
சோ எனக்கு குருநாதர் இல்லை. நான் யாரென்றே தெரியாமல் ஏதோ குருட்டாம்போக்கில் .... றுகிறீர்கள்.
// தனியாக வேறு சொல்ல வேண்டுமா.. இரண்டு பேருமே லாஜிக் இல்லாமல் பேசுவதும், லாஜிக் ஆகப் பேசுபவர்களைக் கண்டால் திருதிரு என விழிப்பதும் போதுமே ஆதாரத்திற்கு.
// /// என்னைப் பொருத்த வரையில் இது லாஜிக் இல்லாத ஆர்க்யூமெண்ட எனக் கருதுகிறேன். ///
ஆமாம். உங்களின் பின்னூட்டத்தைப்பற்றிய தங்கள் கணிப்பு சரியானதே.
//பிராமணன் வாழ்வதே இந்த உலக நன்மைக்காக இருக்க வேண்டும் என்பதே இந்துமதக் கொள்கை என்றீர்களே ... அது எத்தனை சதவீதம் உண்மை. உடல் உழைப்பு செய்யாமல் உலகம் எப்படி உருப்படும். நிலத்தில் பிராமணன் வேலை செய்வதை இந்துமதம் அங்கீகரிக்கின்றதா? வேறு என்ன அவரால் பயன் ஏற்பட்டது. மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக மக்களது கோபம் மூண்டு ஒரு புதிய சமூகம் பிறப்பதைத் தடை செய்ய மன்னரது அடிப்பொடிகளால் கண்டறியப்பட்ட அன்பெனும் ஆயுதம்தான் மதம் கடவுள் இன்னபிற. அதற்கு கங்காணி வேலை பார்த்தது உயர்ந்ததா அல்லது சமூக மாற்றத்தை தடை செய்த கிரிமினல் குற்றமா.. சோ ராமசாமி கூட இதற்கு ஆண்மை இருப்பின் பதில் சொல்லலாம்.
// /// அதெல்லாம் சரி....தங்களது மொழியியல் தவறுகளைக் களைந்து கொண்டதாக எழுதி தாங்கள் வயதில் மாத்திரமல்ல பண்பிலும் மூத்தவர் என நிரூபித்திருக்கலாமே ///
நான் டோண்டு இல்லை// இது தனியாக டோண்டு சாருக்கு போட நினைத்தது. மறந்து போய் உங்களுக்கு போட்டு விட்டேன்.
நேற்றைய எபிசோடில் ஒலியும் ஒளியும் ஏட்டிக்கு போட்டியாய் இருந்ததே!
//நேற்றைய எபிசோடில் ஒலியும் ஒளியும் ஏட்டிக்கு போட்டியாய் இருந்ததே!//
அந்த வயிற்றேரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? ஆணுக்கு பெண் குரலும் பெண்ணூக்கு ஆண் குரலும் அமர்க்களமாக வந்தன.
முதல் விளம்பர இடைவேளைக்கு அப்புறம் சுதாரித்து கொண்டார்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment