துக்ளக் 29.07.2009 இதழ் கேள்வி பதிலிலிருந்து:
மல்லிகா அன்பழகன், சென்னை-78
கே: ஜெயா டிவியில் நன்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தங்களின் ‘எங்கே பிராமணன்’ - டி.வி. சீரியல், திடீரென முடிக்கப்பட்டது ஏன்? பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள் என்பதால் கேட்கிறேன்.
ப: பலவிதமான பேச்சுக்களை நம்ப வேண்டாம். கதையை முடிக்கிற கட்டம் வந்தது என்று நாங்கள் (நான், டைரக்டர், தயாரிப்பாளர்) நினைத்ததால், முடித்தோம். ஜெயா டிவியினரே, தொடர், விரைவில் முடிவதை விரும்பவில்லை. அதனால்தான், இப்போது, அந்தத் தொடருக்கு ஒரு தொடர்ச்சியை - அல்லது இரண்டாம் பாகத்தை - உருவாக்க முடியுமா என்பது பற்றி நான், டைரக்டர் வெங்கட், தயாரிப்பாளர் சுந்தரம் - ஆகிய மூவரும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தீவட்டிக் கொள்ளைக்காரன் மாதிரி, முன்கூட்டியே எச்சரித்து விட்டேன்; தொடர் மீண்டும் தொடர்கிறதே என்று நீங்கள் புகார் கூறினால், அதில் நியாயம் இருக்காது.
நான் இந்த சீரியலின் கடைசி பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தேன்:
சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.
சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்.
வர்ண ரீதியான பிராமணனை தேட அசோக்கால் முடியாமல் போன நிலையில், அம்மாதிரியான தேடலே அவசியமா என்பதுதான் எனது மனதில் எழுந்துள்ள இப்போதைய கேள்வி.
அதே சமயம், “அசோக் தேடிய ரேஞ்சுக்கு உண்மையான, வர்ணரீதியான பிராமணன் இப்போது இல்லை என்பது நிலைநிறுத்தப்பட்டாலும், அதை அடையும் பாதையில் இருப்பதாக நான் சாரியார், சாம்பு சாஸ்திரிகள், மற்றும் சிகாமணியை அடையாளம் காண்கிறேன்” என்றும் நான் சீரியலின் கடைசி பகுதிக்கான ரிவ்யூவில் எழுதியிருந்தேன். ஒரு வேளை இந்த சீரியலின் இரண்டாம் பகுதியில் இது சம்பந்தமாக ஏதேனும் சொல்லப் போகிறார்களா என்பதை அறிய நானும் ஆவலுடன் இருக்கிறேன்.
அதாவது, வர்ணரீதியான பிராமணன் என்னும் ஆதரிச நிலையை 100% அடைய முடியாவிடினும், அதை அடையும் முயற்சியில் யாராவது இருக்கிறார்களா என்பதையாவது பார்க்கலாம் அல்லவா? புத்தகமும் சரி சீரியலும் சரி நிறுத்தப்பட்ட இடம் முடிவான இடமா அல்லது வெறும் திருப்பு முனையா என்பதையும் இந்த எக்ஸ்டென்ஷன் - அது நிஜமாகவே வரும் பட்சத்தில் - ஆராயுமோ?
அசோக்கின் இந்த முயற்சியில் மாஜி நாத்திகர் நீலகண்டன் ஏதேனும் பங்கு வகிப்பாரா? சாம்பு சாஸ்திரிகள் முயற்சியில் வேத பாடசாலை நன்கு உருவானதா? இம்மாதிரி பல கேள்விகள் எனது மனதில் உள்ளன. மேலும் சாம்பு சாஸ்திரிகள், பிரியா, உமா, பாகவதர், சிகாமணி, சாரியார் ஆகியோரையும் பார்க்க மனம் விழைகிறது.
எது எப்படியாயினும் சோ அவர்கள் நினைப்பதுதான் நடக்கப் போகிறது.
ஏதோ நம்மால் ஆனது மீண்டும் ரிவ்யூக்கள் போடுவதே. அதுவும் முரளி மனோகர் முதல் பகுதிக்கு தான்தான் ரிவ்யூ போட வேண்டும் என அடம் பிடிக்கிறான். இது வால்பையனுக்கு நான் தரும் முன் தகவல் மட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்று இருப்பேன்
-
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்று (5 டிசம்பர் 2024) மாலையில் விஷ்ணுபுரம்
பதிப்பகம் அரங்கில் இருப்பேன். வாசகர்கள் சந்திக்கலாம். சேலம் புத்தகத்
திருவிழா நவம...
29 minutes ago
41 comments:
//பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன்.//
ஆக,
பொதுநலனை பார்பவன் எல்லாம் பிராமணன்(அது யாரா இருந்தாலும்)
போர்வீரனும், போலிஸ்காரனும் சத்ரியன்(அது யாரா இருந்தாலும்)
வணிகம் செய்பவன் வைசியன்(அது யாரா இருந்தாலும்)
சேவை செய்பவன் சூத்திரன்(அது யாரா இருந்தாலும்)
சூத்திரன் சேவை செய்யுறான் மத்தவங்க எல்லாம் என்ன செய்யுறாங்க!?
உட்காந்துகிட்டு நோகாம நோம்பி கொண்டாடுவது பிராமணனா!?
இதையெல்லாம் யார் வகுத்தா?
யார் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தா?
சும்மா எழுதிவச்சதெல்லாம் நம்பிறலாமா?
பாட்டி வடை சுட்ட கதையை விட உங்க கதை பயங்கரமா இருக்கு!
முடியல!
/"வால்பையனை டென்ஷனாக்கக் கூடிய ஒரு சமாசாரம்"/
எங்க வால்பையனாவது டென்ஷன் ஆவுரதாவது?கனவு, கினவு கண்டீங்களா? [அதிகாலைக் கனவு தானே?]
பின்னூட்டங்களைச் சர வெடியாத் தெளிச்சுகிட்டே போறவரு, எது வெடிச்சது, எது வெடிக்கலை, ஏன்னு நின்னு பாக்க நேரமில்லாதவரைப் பத்தியா இப்படிச் சொல்றீங்க?!
சரவெடி இப்ப வரும் பாருங்க:-)
-வால்பையன் ரசிகர் மன்றம்
ஆகா, வடை போச்சே! வடை போச்சே!
நாந்தேன் முதல்லன்னு, பின்னூட்டசுனாமியா வரலாம்னு பாத்தா, பாட்டி வடை சுட்ட கதை முந்திக்கிச்சே!
நீதி: வால்பையனுக்கு வடை பிடிக்கும்!!
//இதையெல்லாம் யார் வகுத்தா?
யார் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தா?//
பல இடங்களில் இது ஆட்டமேட்டிக்காக நிகழும். அவரவர் மனவிருப்பம், செயல் திறன் ஆகியவை இங்கு செயல்படுகின்றன.
எந்தக் குழுவை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அதில் சோம்பேறிகள் உண்டு, நல்ல உழைப்பாளிகள் உண்டு. ஓரிருவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய மேலாண்மையுடன் இருப்பார்கள்.
ஆர்க்கெஸ்ட்ராவில் கண்டக்டர் என்பவர் வெறுமனே தனது குழுவை பார்த்து நின்று கொண்டு கையில் உள்ள குச்சியை சுழற்றுவதாகத்தான் வெளியில் இருந்து பார்க்கும் விஷயம் தெரியாதவர்கள் கூறுவார்கள்.
ஜுபின் மேத்தா மாதிரியான நடத்துனர்கள் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட ஆர்க்கெஸ்ட்ரா குழுவே இல்லை என்பதுதான் நிஜம். அங்கு போய் குழல் ஊதுபவன் மூச்சை பிடித்து ஊதுகிறான், இந்த ஆள் வெறுமனே குச்சியை சுற்றிவிட்டு நோகாமல் நோன்பு காக்கிறான் என நீங்கள் சொல்லிட இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கண்டண்டர் செய்வது நமக்கு புரியாமல் இருக்கலாம்!
அதே போல் நான் செய்வதும் கண்டண்டருக்கு புரியாமல் இருக்கலாம், அதற்காக நானும் கடவுளா!?
வால். நீங்க ஏதோ தொடர்ந்த தேடலில் இருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.ஒருநாள் நீங்கள் தேடுவது கிடைக்கும். டோண்டு-கூட இந்த உலகத்துல எல்லாரையும் விட்டு விட்டு, உங்களைப் பிடிச்சிருக்காரு பாருங்க.
ஏன் தெரியுமா? நீங்கள் விளக்கமா பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை correct-ஆ கேப்பீங்க. அந்த பதிலுக்கும் ஒரு கேள்வி. நீங்க ஒரு சிறந்த பின்னூட்டவாதி. ஏன்னா ஒரு பின்னூட்டம் மீதும் ஒரு பதிவை கொடுக்கும் தொடர் சங்கிலி போல. (பதிவரின் கழுத்தை நெரிக்கும்!!:) Only fun intended)
(வால் அப்பா.உங்கள் பெண்ணின் பிறந்தநாள் கேக்குகாக, கொடுத்த காசுக்கு மேலவே ....தண்ணீர் குடிச்சிட்டு வரேன்.)
மற்றபடி, I am totally in harmony with Dondu's message. நல்ல கருத்துக்கள் சார்.
--vidhya
/கண்டண்டர் செய்வது நமக்கு புரியாமல் இருக்கலாம்!
அதே போல் நான் செய்வதும் கண்டண்டருக்கு புரியாமல் இருக்கலாம், அதற்காக நானும் கடவுளா!?/
ஆகாகா! வாவபையன் கொடுக்குற கவுண்டரே கவுண்டர்!
நான் counter ஐச் சொன்னேன்-gounder ஐ அல்ல!
தெரிந்துகொள்ளச் செய்யும் முயற்சி ஞானத்தைத் தரும். ஞானத்தில் உயர்பவன் பிராம்மணனாகிறான்.
//தெரிந்துகொள்ளச் செய்யும் முயற்சி ஞானத்தைத் தரும். ஞானத்தில் உயர்பவன் பிராம்மணனாகிறான். //
மனிதனாக இருக்க எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டியதில்லை தானே!
நான் மனிதனாகவே இருந்து கொள்கிறேன்
//I am totally in harmony with Dondu's message. நல்ல கருத்துக்கள் சார்.//
டோண்டுவுக்கு சோவை பிடிப்பது போல் உங்களுக்கு டோண்டுவை பிடிப்பது எனக்கு ஆச்சர்யம் ஒன்றும் தரவில்லை!
சோ சப்பை கட்டு கட்டுவதில் வல்லவர்
வால் - இப்போ நம்ம occupation என்ன என்று கேட்டால், பொட்டி தட்டுவது என்று சொல்றோமில்லையா??
அந்தப் பொட்டியிலிருந்து பாட்டு கேட்டுகிட்டே தட்டலாம். அதுக்கு தனித் திறமை ஒன்னும் தேவை இல்லை. இங்க நம்ம உங்காந்து நொந்து கிட்டேதான் நோன்பு கும்படறோம்.
அது போல சில பேரு மேளம், உறுமி மேளம், தாரை, தப்பட்டை போன்ற பல இசைக்கருவிகளை தட்டுகிறார்கள். ஆனால் இதற்கு தனித் திறமை வேண்டும், தாளத்தோடு இசைக்க. ஆனா அவங்க செய்யும் வேலைய (எதா இருந்தாலும்) இரசிச்சிக்கிட்டே செய்யுறாங்க. அதுனால அவங்க நோகாம நோம்பு கும்படறாங்க.
அது ஏன் - சேவை செய்வது எவ்வளோ கஷ்டம் தெரியுமா... (மாவு அரைக்கணும், வேக விடணும், சேவை நாழியில் போட்டு சுட சுட இருக்கும் போதே சேவையாய் பிழியவேண்டும். இந்த சேவை இடியாப்ப சேவை)
இப்போ சீரியஸா ஒரு விஷயம் -
ஒருவர் தினமும் சாப்பிட்டுக்கொண்டே வருகிறார். ஆரோக்கியமாய் இருக்கிறார். நோய் ஏதும் நல்ல வேளை வரவில்லை. ஆரோக்கியமாகதான் இருக்கிறோம் என்று சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?
jokes apart -
நிஜ சமூக சேவை செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். உடல் உழைப்பை விட. சமூகத்தில் ஒருவரை சார்ந்து ஒருவர் இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகள் உண்டாகினார்கள். இப்போ இருக்கும் சாலை விதிகள் மாதிரி, சாலையில் இஷ்டப்படி வண்டி ஓட்டுவேன், என்றால் என்ன நடக்கும்.
அதற்காகவே, முன் நாட்களில், இறை வழிபாடு செய்யவும், புத்தகங்கள் படித்து அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்லவும், ஆன்மீக உணர்வுகளை வளர்க்கவும் வேண்டி அதை விரும்பி ஏற்ற ஒரு "மனிதக்" கும்பலுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்தனர். அந்த அந்த மனிதக் கும்பலுக்கு அவர் விரும்பி ஏற்ற ஒரு தொழிலை பிரித்து, தலை முறை தலை முறையாய் செய்து வர அறிவுறுத்தினர். ஏன் தெரியுமா? ஒரு மூன்றாம் மனிதருக்கு உங்கள் அறிவைக் கொடுப்பதை விட, நீங்களே பெத்த குழந்தைக்கு இன்னும் நேர்மையும், உண்மையுமான அக்கறையோடும் உங்கள் அறிவை பகிர்ந்து கொள்வீர்கள்.
அதனால் உண்டான முறையே குலத் தொழில் முறைகள். இப்போ இஷ்டப்படி நான் என்ன வேணா செய்வேன்னு, வேலை இல்லா வெட்டி ஆபீசர்கள் எத்தனை பேர் (என்னையும் சேர்த்துத்தான்)
அறிவு சார்ந்த விஷயங்களை பொறுப்பாக ஏற்றதால் அந்தக் கும்பலை, மனிதர்களை, ப்ரஹ்ம - ஞானம் என்ற பொருளில் அழைத்தனர். இப்போ நம்ம பொட்டி தட்டி ஆபீசு, முட்டி தட்டி போலீசு, என்றெல்லாம் வகை தொகை இல்லாமல் பெயரிட்டு பீஸ் பீசாக்குவதில்லையா, நம் தொழில் முறை சார்ந்து.
காலப் போக்கில் இவை எல்லாம் மறைந்து, எல்லோரும் அறிவாளியாகி, மனிதர்கள் எல்லோருமே ப்ரஹ்ம நிலை அடைந்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கிறோம்.
தனியாக ஒன்றும் இல்லை.
--வித்யா
விதூஷ்!
ஒரு மனிதன் வாழ கடவுள் எந்த அளவுக்கு முக்கியம்!
அதை முதல்ல சொல்லங்க பின் கடவுள் பாட்டை பாடுபவர்கள் எந்த அளவுக்கு முக்கியம்னு பேசலாம்!
நம்ம பிரச்சனைக்கு எப்போ நாம பொறுப்பேத்துகிறோமோ அன்னைக்கு பிரச்சனை தீர்ந்ததுன்னு அர்த்தம்!
எனக்கு தெரிஞ்சி மனிதர்களுக்கு பழி போட்டு தான் பழக்கம்!
நன்மையோ, தீமையோ நாமே செய்வது அடைவது கடவுள் என்பதால் ஒன்றும் இல்லை!
பின் எதற்கு?
ஒருவர் தினமும் சாப்பிட்டுக்கொண்டே வருகிறார். ஆரோக்கியமாய் இருக்கிறார். நோய் ஏதும் நல்ல வேளை வரவில்லை. ஆரோக்கியமாகதான் இருக்கிறோம் என்று சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?
நாம் நோய் வரும் என்றோ நோய் வராது என்றோ நினைத்து உணவு சாப்பிடுவதில்லை. அந்த தினசரி உணவு போல ஒரு நல்ல நம்பிக்கை மட்டுமே இறைவனும். உடல் நலம் நன்றாக இருக்க நல்ல உணவுகளை சாப்பிடுவது போல, மன நலம் நன்றாக இருக்க, நம்பிக்கை வழிபாடு அவசியம்.
ஆங்கிலத்தில் daily assertions என்று கூறுவோம். அதே போல நம் வழிபாடுகளில் சுலோகமோ எதோ ஒன்று - நல்ல வார்த்தைகளை முறையாக நம்பிக்கையுடன் chanting செய்யும் போது, அதற்கான பலன்கள் நிச்சயம் இருக்கும். அந்த நம்பிக்கையை நாமெல்லாம் குருடர்கள் யானையைப் பார்ப்பது போல, பல உருவம் கொடுத்திருக்கிறோம். ஆனால் அந்த நம்பிக்கை நிச்சயம் நம்மையும் மீறிய ஒரு ஆற்றலால் மட்டுமே இயக்கப்படுகிறது என்பது என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தது.
---வித்யா
வால் பையன்,
யாகம் செய்வது மட்டுமே பிராமணனின் வேலை.
யாகத்தால் மழை பெய்யும். யாகத்தால் பயிர்கள் நன்றாக விளையும்.
யாகத்தால் சுற்றுபுறம் தூய்மையாகும்.
யாகங்களை சிரத்தையாக, சரியாக செய்வதற்கு,
மந்திரங்களை சரியாக உச்சரிப்பதற்கு அவனுக்கு உணவு, மன கட்டுபாடு மிக மிக அவசியம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஒருவனுக்கு சிறு வயதிலேயே இந்த கட்டுப்பாடுகளை புகுத்தினால் தான் அது சாத்தியம்.
எப்படி ஒருவன் வயதில் ராணுவத்தில் சேர முடியாதோ அது போல் தான் இதுவும்.
உங்களது பதிலை எதிர்பார்கிறேன்.
உண்மை விளம்பி
ஆஹா! கச்சேரி இப்பத்தான் களை கட்டுது!
/மனிதனாக இருக்க எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டியதில்லை தானே!
நான் மனிதனாகவே இருந்து கொள்கிறேன்/
எதையும் கஷ்டப்பட்டுத் தெரிஞ்சுக்கப் போறதில்லைன்னு ஒப்புதல் வாக்குமூலம் எப்படி வருது பாருங்க! எதையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது கற்காலத்தில் தான் கொண்டுபோய் விடும், முடியுமா? சாத்தியமா?
மனிதனாக இருப்பதற்கு "அறியாமையே ஆனந்தம்" என்று ஒரு வழி தான் இருக்கிறதா?
@விதூஷ்,
/டோண்டுவுக்கு சோவை பிடிப்பது போல் உங்களுக்கு டோண்டுவை பிடிப்பது/
டோண்டு சாருக்கு சோவையும் பிடிக்கும், வால்பையனையும் பிடிக்கும்!
எனக்கு, வால்பையன், டோண்டு ராகவன்,சோ, மூவரையுமே பிடிக்கும்!
எங்க வால்பையன் என்னமாக் கேள்வி கேக்குறார் பாருங்க!
/ஒரு மனிதன் வாழ கடவுள் எந்த அளவுக்கு முக்கியம்?
அதை முதல்ல சொல்லங்க /
மஞ்சக் கலரு சிங்குச்சாம், பச்சக் கலரு சிங்குச்சாம்னு பாட்டுப் பாடினாத் தானே தெரிஞ்சுடப் போகுது!
வால் பையன்,
நீங்கள் கேட்பது எப்படி இருக்கிறது என்றால்,
நம் உடம்பை நாமே பார்த்து கொள்ளலாமே, மருத்துவர் என்று ஒருவர்
எதற்கு என்று கேட்பது மாதிரி இருக்கிறது?
மருத்துவர் என்று ஒருவர் இருப்பதினால் தான் நமக்கு எது நல்ல உணவு எது கேட்ட உணவு என்று தெரிகிறது.
எப்படி? அறிவு ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கொடுக்கபட்டத்தினால் தான்.
ஒவ்வொரு மனிதனும் நல்லது/கெட்டது எது என்று பகுத்து அறிவதற்கு ஒரு ஆசான் அவனை வழி நடத்த வேண்டும். அந்த கல்வி அவன் மனதில் காமம் புகுவதற்கு முன்பே புகுத்தப்பட பட வேண்டும்.
இதை தான் மதம் செய்கிறது. செய்ய வேண்டும்.
உண்மை விளம்பி
சுருக்கமாக சொல்ல போனால்,
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கிற சக்தியை மனிதருக்கு எப்படி ஊட்டுவது
என்பதை கண்டுபிடித்து தான் இந்து மதம்.
அதற்கு தான் மந்திரங்கள். அதற்கு தான் கோயில்கள், அதற்கு தான் யாகங்கள்,
அதற்கு தான் யோகா பயிற்சி முறைகள்.
இதை எடுப்பதும், விடுப்பதும் அவரவர் விருப்பம்.
ஜாலி எங்கே பிராமனன் போன்ற நிகழ்ச்சியை மீண்டும் பார்க்கலாம்
//
மனிதனாக இருக்க எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டியதில்லை தானே!
நான் மனிதனாகவே இருந்து கொள்கிறேன்
//
எதுவுமே தெரிந்து கொள்ள நினைக்காதவன் மனிதன் அல்ல மக்கு.
உணவு ஒப்பீடில் எனக்கு உடன்பாடில்லை!
எல்லா விலங்குகளும் உணவு உண்கிறது, நாமும் விலங்காக தான் இருந்தோம்! பரிணாம வளர்ச்சியில் அடைந்த அறிவை தவறாக பயன்படித்தி ஒருவன் கொண்டுவந்த கடவுள் இன்று உண்மையென்று நம்ப வைக்கிறது!
// Vajra said...
//
மனிதனாக இருக்க எதுவுமே தெரிந்து கொள்ள வேண்டியதில்லை தானே!
நான் மனிதனாகவே இருந்து கொள்கிறேன்
//
எதுவுமே தெரிந்து கொள்ள நினைக்காதவன் மனிதன் அல்ல மக்கு.//
அதனாலென்ன நான் ”மக்குமனிதனா” இருந்து கொள்கிறேன்!
உண்மை!ன்னு பேர் வச்சிகிட்டு அகண்ட பிரஞ்சத்த பத்தி தெரிஞ்ச மாதிரி பேசுறிங்க!
வேதத்துல அதை பத்தி என்ன சொல்லிருக்குன்னு சொல்லுங்க!
வேதமே படிக்காம நான் உங்களுடன் உரையாட தயார்!
டோண்டு சார் /வித்யா மேடம்
தேடல் என்ற ஒற்றை சொல் தான் அனைவரின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக வைக்கிறது. உலகத்தையே புரிஞ்சது மாதரி பேசுறது எந்தளவு உங்களால நிருபிக்கமுடியும் என்று தெரியல,
நீங்க சொல்லுற அந்த தேடல் தான் என்னை பல காடு மலை கடல் பழமைவாய்ந்த கோவில்கள்(பத்ரிநாத், கேதர்நாத்,வாரணாசி சேத்து) இழுத்துட்டு போனது. அங்க எல்லாம் போன பிறகும் தேடல் இருந்தது... பிறகு தான் தெரிந்தது Internallaa(self,inner) தேடவேன்டியாத, கண்ட இடத்துல போய் தேடிகிட்டு இருக்கேன்..
(meditation is a tool to find out the reality or self)
கடைசில பாத்தா அன்பே சிவம் ன்னு தான் வந்து நிக்கும்,
இந்த வர்ணம், சொர்ணம் எல்லாம் அடுத்தவங்கள அடிமை படுத்த அல்லது அவர்களின் மீது அதிகாரம் செலுத்த பயன்படுத்தும் டூல்... selfish fellows only speak about varnam, True spritual leaders/persons only speaks about uyirgal. not varnam.
//Unmai said...
சுருக்கமாக சொல்ல போனால்,
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கிற சக்தியை மனிதருக்கு எப்படி ஊட்டுவது
என்பதை கண்டுபிடித்து தான் இந்து மதம்.
அதற்கு தான் மந்திரங்கள். அதற்கு தான் கோயில்கள், அதற்கு தான் யாகங்கள்,
அதற்கு தான் யோகா பயிற்சி முறைகள்.
இதை எடுப்பதும், விடுப்பதும் அவரவர் விருப்பம்.
//
இவ்வளவு சொல்லுறவங்க இன்னொனையும் சொல்லவேண்டியது தானே, if your heart is pure and filled with full of love then positive energy உங்கள சுத்தி இருக்கும், அப்படி இருக்குறப்ப கடவுள் நம்பிக்கை இருதாலும் ஒண்ணுதான் இல்லாட்டாலும் ஒண்ணுதான்.
***
"God, Guru and the self are Same"
நான் சொல்லல நம்ம ரமணர் சொன்னது
பித்தன்!
முதல்ல எதை தேடுறிங்கன்னு சொல்லுங்க!
வெளியே தொலைச்சிட்டு உள்ளே தேடமுடியாது, உள்ளே தொலைச்சிட்டு வெளியே தேட முடியாது!
முதல்ல எதை தொலைச்சிங்க தேடுறதுக்கு!
வாழும் போதும் தேடுறேன்னு பிடிக்கிறேன்னு அலைஞ்சிட்டு கடைசியில் வாழ்க்கையை தேட வேண்டியது தான்!
//"God, Guru and the self are Same"//
அவனவன் வாழ்க்கையை வாழ்ந்துட்டு போக வேண்டியது தான்!
ஒருத்தன் சொல்லிதர்றேன்னு கெழம்பும் போதே நாம உசாராகிக்கனும்!
ஏன்னா இங்க மனிதன் மட்டும் தான் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வாழ்றான்!
எந்த விலங்காவது வேட்டையாட கத்துக்குதா! நீச்சல் அடிக்க கத்துக்குதா!?
ஐயா Dondu
//சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன்.//
அப்படினா சூத்திரனை தேடாமல் ஏங்க பிராமணனை தேடுறீங்க?
//அப்படினா சூத்திரனை தேடாமல் ஏங்க பிராமணனை தேடுறீங்க?//
பதிவு எதைப் பற்றியது என்பதை கண்டு கொள்ளாது எழுதுகிறீர்கள். எங்கே பிராமணன் என்னும் சீரியலின் எக்ஸ்டென்ஷன் பற்றிய பதிவு இது. முதலில் அந்த சீரியலை நீங்கள் பார்த்தீர்களா என்பது தெரியவில்லை. இல்லையென்றால் அது பற்றிய எனது ரிவ்யூக்களை பார்க்கவும். தேவையானால் நான் தந்துள்ள வீடியோ சுட்டிகளை சொடுக்கி பார்க்கவும். பிறகு கருத்து கூறவும்.
நான் பிராமணன் யாரையும் தேடவில்லை. அப்படி உங்களுக்கு தேவையானால் நீங்கள் சூத்திரனை தேடுங்களேன். யார் உங்கள் கையை பிடித்து தடுத்தது? முடிந்தேல் அந்த தேடலை வைத்து சுவையான டிவி சீரியல் தயாரிக்கலாமே.
மீண்டும் அந்த சீரியல் வரட்டும். அப்போது முரளி மனோகர் ரிவ்யூவை ஆரம்பிப்பான், பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாதிரீதியாக பிராமணன் யாரும் இல்லை என்று சொல்லும் சோ சாம்பு சாஸ்திரி, சிகாமணி இஸ்திரி என்று ஐயர்வீட்டு ஆட்களைத்தான் பிராமணர்களாகக் காட்டுகிறார்.
ஆகவே, மக்களே இதிலிருந்து தெரிவது என்ன?
@இனமானத் தமிழன்
சிகாமணி முதலியார். சீரியலை சரியாக பார்க்கவில்லை போலும்.
நீங்கள் கூறுவதற்கு பதிலாகத்தான் இரண்டாம் பாகமும் வருகிறதோ என்னவோ என முரளி மனோகர் குறிப்பிடுவதும் சரியாகத்தான் படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வால்பையன் சொன்னது:
/முதல்ல எதை தொலைச்சிங்க தேடுறதுக்கு?/
அது தெரியாமத் தானே தேடிக் கொண்டிருக்கிறோம்?
தேடுவது என்பது இயல்பு, பிழைப்பு அல்ல.
அதைக் கண்டுபிடிப்பதற்கும், நீங்கள் கொஞ்சம் 'நல்ல உணவை' மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும்!
வாளோடு சண்டை போட்டு ஜெயிக்கலாம். வாலோடு பேசி ஜெயிக்கவே முடியாது.
நம்ப டோண்டு பத்த வச்சிட்டு ஓரமா நின்னு வேடிக்கை பார்த்து என்ஜாய் பண்றார் பாருங்க. இந்த உரையாடலை முடிய விடாதீங்க.
///பரிணாம வளர்ச்சியில் அடைந்த அறிவை தவறாக பயன்படித்தி ஒருவன் கொண்டுவந்த கடவுள்///
///தேடல் என்ற ஒற்றை சொல்///
பித்தன் மற்றும் வால்:
பரிணாம வளர்ச்சி அடைந்ததே அந்த தேடலினால்தான். தேடிக் கண்டுபிடித்தவர்கள் எழுதிய சில புத்தகங்கள் தான் நாம் இன்று படித்தறியும் வேதங்களும் புராணங்களும்.
சரியான இடத்தில் கொண்டு சேர்க்க ஒரு map கையில் இருக்கும் போது, நான் அலைந்து திரிந்து கண்டு பிடித்துகொள்வேன் என்று கூறும் போது, தேடும் இயல்பு மறைந்து அதுவே தொழிலாகி விடும்.
அவ்ளோதான்.
இப்போ டோண்டு சார் ஏதாவது சொல்லனும்னு கேட்டுகிறேன்.
வால் பையன்,
பொதுநலனை பார்பவன் எல்லாம் பிராமணன்(அது யாரா இருந்தாலும்)
போர்வீரனும், போலிஸ்காரனும் சத்ரியன்(அது யாரா இருந்தாலும்)
வணிகம் செய்பவன் வைசியன்(அது யாரா இருந்தாலும்)
சேவை செய்பவன் சூத்திரன்(அது யாரா இருந்தாலும்)
இவ்வளவோடு நிறுத்தி இருந்தால், உங்களுக்கு ஒரு வணக்கம். ஏன் என்றால் இந்த Topic அவ்ளோ தான் தாங்கும். இதில் நீங்கள் டென்ஷன் ஆக ஒன்றும் இல்லை. (நீங்கள் ஆகி தான் தீருவேன் என்றால் தடுக்க யார்)
//இதையெல்லாம் யார் வகுத்தா?
யார் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தா?
இருக்கும் மற்ற எல்லா விஷயங்களும், (குடும்ப, சமுதாய, கலை, இலக்கிய..வேற என்னவோ ..) யார் வகுத்து, உரிமை கொடுத்து உருவாக்கியவை. உங்களுக்கு தெரியுமா. அப்படியே உருவாக்கி இருந்தாலும் அவர்கள் அந்த கால கட்டத்துக்கு ஏற்ற, அல்லது அவர்களது அறிவுக்கு எட்டிய வரை வகுத்து உள்ளனர். உங்களை யார் அதை Follow பண்ண சொல்லி கட்டாய படுத்த முடியும்.
நாம் நம்பாமல் யாரோ நம்பினால் நமக்கு என்ன...
நீங்கள் சொல்லி யாரையும் திருத்தவோ, நீங்கள் திருந்தவோ ..ம்ம் ஹ்ம்ம்
விட்டு தள்ளுங்கள் வேறு வேலை இருக்கிறது.வெறும் டைம் பாஸ் என்றால் தொடருங்கள்
வால்,
நேற்று சொன்னதுதான் தான் "இருக்குன்னா இருக்கு இல்லன்னா இல்லா" இருக்குன்னு சொல்லுரதுனால லாபமோ, இல்லைன்னு சொல்லுரதுனால நட்டமோ இல்ல.
வித்யா மேடம்,
என்னோட கருத்து மேல சொல்லிருக்கிறது தான், "உனக்கு மேல ஒருத்தன் இருக்கான் உனக்கு கீழ ஒருத்தன் இருக்கான்னு சொன்னா எத்துக்கமுடியாது. அது மொழியா இருந்தாலும் சரி வேற எதுவா இருந்தாலும் சரி"
அனானி, நீங்க உண்மையைத் தலைகீழாகப் பாக்கறீங்க!
/இதில் நீங்கள் டென்ஷன் ஆக ஒன்றும் இல்லை. (நீங்கள் ஆகி தான் தீருவேன் என்றால் தடுக்க யார்) /
யாருடென்ஷன் ஆவுறது? வால்பையனா? நெவர்:-)
நீங்க மெனெக்கெட்டு இந்தப் பக்கம் வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் எஸ்'சாகி, கோவிக் கண்ணனின் டோண்டு சாரோட இந்தப் பதிவுக்கு எதிர்ப் பதிவில், சரவெடி வெடிக்கப் போயிட்டார்!
வால் பையன்கள் செய்வது சீனிவெடி, சரவெடி, வெடிப்பது மட்டுமே! அதுல வர்ற சத்தத்தை வச்சு வால் பையனே டென்ஷன் ஆயிட்ட மாதிரி நீங்க எழுதும்போது, எனக்கு ரொம்பவே ஃபீலிங்க்ஸ் ஆவுது:-)
//பரிணாம வளர்ச்சி அடைந்ததே அந்த தேடலினால்தான். //
என்ன தேடி என்பது தானே முக்கியம்!
அன்று வாழ தேவையானவைகளை தேடி பரிணாம வளர்ச்சி கண்டான்!
இன்று கற்பனை கடவுளை தேடி வாழ்க்கையை தொலைத்து நிற்கிறான்!
//வால் பையன்கள் செய்வது சீனிவெடி, சரவெடி, வெடிப்பது மட்டுமே! //
:)
என்ன வால்,
இப்போ ஜாதி பார்க்கும் பிராமணர்கள் எங்கேயும் இல்லை. நிறைய பேர் கலப்பு திருமணம் கூட செய்து கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களை சாடிய இந்த கும்பல் சொன்னதற்கு எதிர்மாறாக நடந்துகொண்டு இருக்கிறது.
ஜாதி இப்போ எங்கே கொழுந்து விட்டு எரியுது தெரியுமா?
ஜாதி இல்லை என சொல்லிக்கொள்ளும் கூட்டத்தில் மட்டும் தான்.
எங்கே வாரிசு-வேலை படு அமர்களமாக நடக்கிறது தெரியுமா?
வாரிசு வேலை கூடாது என சொல்லிக்கொண்ட கூட்டத்தில் தான்.
இந்த காலத்தில் கடவுளை மட்டும் துதி பாடி பிழைப்பு நடத்தும் பிராமணர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் நல்ல வேலை தேடி போய் விட்டார்கள். (most of them doesnot have an option)
ஏன் கடவுள்? எனக்குமே இந்த கேள்வி உண்டு.
- கடவுள் தேவையில்லை. இது தனிப்பட்டவர் சம்பந்த பட்டது.
இதற்கு டோண்டு சார் ஒரு புக் எழுதலாம். என்னை பொறுத்த வரை இது சமூக ஒழுக்கம் சம்பந்த பட்டது. யாரோ சாலை விதியுடன் இதை ஒப்பிட்டு அழகாக சொல்லியிருந்தார்கள்.
ஏன் சமூக ஒழுக்கம்?
- இதற்கு வித்யா இன்னொரு புக் எழுதலாம்.
ஏன் வாழ்கை?
- இது கொஞ்சம் சைகோ கேள்வி. எல்லோரும் சாக தானே போகிறோம். அதை இப்போவே செய்து விட்டால் என்ன.
உங்களிடம் அதிகமாகவே கேள்வி இருக்கிறது. இதில் இருந்து அடுத்த கேள்வி வராமல் இருந்தால் தான் ஆச்சரியம். நீங்க ரொம்ப தேட வேண்டிருக்கிறது.
ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ள பொறுமை, ஆர்வம் வேண்டும். (I dont have it)
உங்கள் கருத்துகளை ஒப்புகொள்கிறேன் பாஸ்கி!
////அனானி, நீங்க உண்மையைத் தலைகீழாகப் பாக்கறீங்க!
யாருடென்ஷன் ஆவுறது? வால்பையனா? நெவர்:-)
நீங்க மெனெக்கெட்டு இந்தப் பக்கம் வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் எஸ்'சாகி, கோவிக் கண்ணனின் டோண்டு சாரோட இந்தப் பதிவுக்கு எதிர்ப் பதிவில், சரவெடி வெடிக்கப் போயிட்டார்!\\
கிருஷ் சார் (சாரி, சுருக்கிட்டேன்), நீங்க தனி வழியில் போகிறீர்கள் போல. நான் வால் டென்ஷன் ஆவார் என்று சொல்லவே இல்லை.(தலைப்பு தான் சொல்லுகிறது). அதுக்கு ஏற்றார் போல அவரும் உடனே ஒரு பதில் போட்டு மண்டகப்படி ய தொடங்கிட்டார். நான் அதை தான் சொன்னேன்.
ஆறுதல் வேறு சொல்லுவதா. இந்த Dealing நல்ல இருக்கே. வால் க்கோ இல்லை உங்களுக்கு க்கோ, ஆறுதல் கூறும் அளவுக்கு இன்னும் நான் வளர வில்லை. ;-)ஆனால் நான் சொல்வதை கூட சீரியஸ் ஆ எடுத்து பதில் அடித்ததற்கு நன்றி! ஹீ ஹீ
--அனானி சுவாமி
//அனானி சுவாமி//
நான் ”அனானி சுனாமி”ன்னு படிச்சேன்!
Post a Comment