மாமியார் வீடு
சில வட்டங்களில் மாமியார் வீடு என்பது சிறைச்சாலையை குறிக்கும். இது தமிழுக்கே உரித்தான சொலவடை என நினைத்து வந்தேன். எனது நினைப்பு தவறானது என்பது ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப் பெற்ற “காபூலிவாலா” என்னும் சிறுகதையை படிக்கும்போது தெரிய வந்தது.
அக்கதையில் பல பொருட்களை ஓரிடத்தில் இராது அலைந்து திரிந்து விற்பனை செய்யும் காபூலிவாலாவுக்கும் அவன் வழமையாக பொருட்களை விற்கும் ஒரு வீட்டில் உள்ள சிறு பெண்ணுக்கும் இடையில் உருவாகும் நட்பு காவியத்தன்மையுடன் விவரிக்கப்பட்டிருக்கும்.
அக்குழந்தையிடம் அவன் விளையாட்டாக கேட்பான், “பாப்பா நீ எப்போ உன் மாமியார் வீட்டுக்கு போவாய்”? என. அக்குழந்தையும் மழலையுடன் எதிர் கேள்வி போடும், “ஏன் நீ போகவில்லையா”? என. அப்போது கதைசொல்லி காபூலிவாலா புழங்கும் வட்டத்தில் மாமியார் வீடு என்றால் சிறைச்சாலை என்ற அர்த்தம் உண்டு என கூற, அட என நான் வியந்தேன், தமிழிலும் அச்சொல்லுக்கு அப்பொருளும் உண்டென்று.
இதைப் பற்றி இப்போது ஏன் எழுத வேண்டும்? இன்று (28.06.2009) காலை தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் “ரங்கோலி (ஒளியும் ஒலியும்) நிகழ்ச்சியில் காபூலிவாலா என்னும் படத்தின் ஒரு பாடலை போட்டனர். அதைப் பார்த்ததும் அக்கதையை ஆங்கிலத்தில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஆகவே இப்பதிவு.
„Wanderer, kommst du nach Sparta, verkündige dorten, du habest uns hier liegen gesehn, wie das Gesetz es befahl.
கி.மு. 480-ல் தெர்மோபைலே என்னும் இடத்தில் தங்களை விட பலமடங்கு அதிகம்பேரை கொண்ட பாரசீகப் படையினரை 300 பேர்களே இருந்த கிரேக்கப் படை எதிர்த்து போராடி அத்தனை பேரும் அழிந்த இடத்தில் உள்ள நடுகல்லில் மேலே கூறிய ஜெர்மானிய வாசகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. அதன் பொருள் பின்வருமாறு, “இதைப் பார்க்கும் நாடோடிகளே, நீங்கள் எங்கள் ஊரான ஸ்பார்ட்டாவுக்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள எங்களவரிடம் கூறுங்கள், நாங்கள் யாவரும் ஒருவர் விடாமல் எதிரிகளுடன் போராடி எங்களுக்கென விதிக்கப்பட்ட வீர மரணம் அடைந்தோம் என”. உலக சரித்திரத்தில் பல போர்கள் நடந்து விட்டன, நடக்கின்றன, நடக்கவும் இருகின்றன. ஆனால் இந்தப் போரும் அதை போன்ற வெகு சில போர்கள் மட்டும் இன்னமும் மக்களின் நினைவுகளில் பசுமையாக உள்ளன. வெற்றியா தோல்வியா என்பது இரண்டாம் பிரச்சினை. முக்கிய விஷயம் என்னவென்றால், மரணம் நிச்சயம் என அறிந்திருந்தும் கடைசிவரை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்வதே.
அவர்கள் கொல்லப்பட்டாலும் அவர்களது பெயர்கள் மக்கள் மனதில் வைக்கப்பட்டு பாடப்படும். அதே போல இஸ்ரவேலர்களது வரலாற்றில் மஸாடா என்னும் இடத்தில் நடந்த போரை இன்னமும் இஸ்ரவேல குழந்தைகள் போற்றுகின்றனர். அப்போரில் எல்லா யூதர்களும் இறந்தனர். அவ்விடத்தில் இன்னமும் இஸ்ரவேலர்கள் “மஸாடா இனிமேல் விழாது” என்னும் வீரச்சபதம் எடுக்கின்றனர். 1943-ல் போலந்து தலைநகரம் வார்சாவின் யூதக் குடியிருப்பை நாஜிகள் நாசமாக்கிய போது அவர்கள் எதிர்த்து போராடினர். அது April 19, 1943 - May 16, 1943 வரை நீடித்தது. 1939-ல் போலந்தின் அதிகாரபூர்வமான ராணுவம் கூட அவ்வளவு நாள் தாக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க யூத எழுத்தாளர் எழுதிய “மிலா 18” நாவலிலும் அமெரிக்க எழுத்தாளர் எழுதிய “தி வால் (சுவர்)” என்னும் நாவலிலும் இது பற்றி பார்க்கலாம். இங்கும் போராளிகள் கடைசியில் கொல்லப்பட்டாலும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
11 comments:
I saw the movie Kabuliwala only yesterday. The climax scene, though well known and predictable, still brings a lump to your throat. And that kid was really natural. There is a brilliant scene where she runs to her dad and tells him something like "aap ko pattha hai? maa ko shaadhi ho gayi!"
And the Manna Dey song - E Mere Pyare Watan - is just amazing!
//“இதைப் பார்க்கும் நாடோடிகளே, நீங்கள் எங்கள் ஊரான ஸ்பார்ட்டாவுக்கு செல்ல நேரிட்டால் அங்குள்ள எங்களவரிடம் கூறுங்கள், நாங்கள் யாவரும் ஒருவர் விடாமல் எதிரிகளுடன் போராடி எங்களுக்கென விதிக்கப்பட்ட வீர மரணம் அடைந்தோம் என”//
இப்படியான உணர்வு ஈழ்த்தமிழர்களுக்கு வரக்கூடாது என்பதனால் தான், மாவீரர் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியதோ சிங்கள இனவெறி ராணுவம்.
போலந்து தலைநகரம் வார்சாவில் நடந்த யூத குடியிருப்பு அழிப்பை எதிர்த்துப் போரிட்ட கதையை படமாக எடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் 2008ல் தான் அந்தப்படம் வெளிவந்துள்ளது.
The Defiance
நமது ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரைக் தான் ஹீரோ!
அப்போரில் எல்லா யூதர்களும் இறந்தனர். அவ்விடத்தில் இன்னமும் இஸ்ரவேலர்கள் “மஸாடா இனிமேல் விழாது” என்னும் வீரச்சபதம் எடுக்கின்றனர்.
பல கருத்துவேறுபாடுகள் இந்த விசயத்தில் இருந்தாலும், த்ஸ்வா ஹகன்னா ல இஸ்ரேல் (IDF) ல் சேருபவர்கள் முதலில் சென்று சபதம் ஏற்கும் இடம் மஸாதா தான்.
1.கவிஅரசு கண்ணதாசன் பாடல்களில் தங்களை கவர்ந்தது எது?
2 எங்கே பிராமணன் தொடர் போல பல உண்மைகள் பொதிந்த அவரது அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி தொடர் பதிவு எழுதும் எண்ணம் உண்டா?
3.அவர் இலக்கியத்திருட்டு செய்து பாடல்கள் செய்தார் என்ற குற்ற்ச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
4.கடைசிவரை கடனாளியாய் வாழந்ததற்கு முக்கிய காரணம் எது?
5.அவரது நண்பர் செல்வந்தச் சீமான் கலைஞர் கூட உதவி செய்யவில்லையா?
6.அவரது வனவாசம் படித்துள்ளீர்களா?
7.அதில் உங்கள் நெஞ்சை தொட்ட சம்பவம் எது?
8.கடைசியில் எம்ஜிஆரின் உதவி அரசுக் கவிஞராய் கெளரவித்தது -எப்படி யார் தலையீட்டில் நடந்தது
9.கண்ணதாசன் ஒருவேளை திமுகவில் தொடர்ந்திருந்தால்?
10.வைரமுத்துவிற்கு கவிப்பேரரசு பட்டம் -அவர் கவிஅரசு கண்ணதாசனை எதில் விஞ்சியதால் கொடுக்கபட்டது.?
//கி.மு. 480-ல் தெர்மோபைலே என்னும் இடத்தில் தங்களை விட பலமடங்கு அதிகம்பேரை கொண்ட பாரசீகப் படையினரை 300 பேர்களே இருந்த கிரேக்கப் படை எதிர்த்து போராடி அத்தனை பேரும் அழிந்த இடத்தில் உள்ள நடுகல்லில் மேலே கூறிய ஜெர்மானிய வாசகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன.//
300 என்ற பெயரிலேயே இந்த படம் வந்திருந்தது, ஆங்கில படம் போல் அல்லாமல் ஒரு தமிழ் படம் பார்ப்பது போன்ற எளிய வசன நடை. கண்ணை கவரும் கேமரா ஒளிப்பதிவு, மயிர் கூச்செறியும் கிராபிக்ஸ் காட்சிகள்.
பார்க்கவில்லை என்றால் ஒருமுறை பார்த்து விடவும், ஸ்பார்டன்களை நேரில் சந்தித்த அனுபவம் பெறுவீர்கள்!
//போராளிகள் கடைசியில் கொல்லப்பட்டாலும் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ளனர். //
விடுதலைபுலிகளை போராளிகள் என்று ஏற்றுகொள்வீர்களா?
@வால்பையன்
தெர்மோபைலே கிரேக்கர்கள், வார்சா/மசாடா யூத போராளிகளை பார்த்த பிறகு புலிகளை போரளிகள் என எப்படி ஒத்து கொள்வது? பொது மக்களை கேடயமாக உபயோகித்தவர்களெல்லாம் போராளிகளா?
புலிகளின் தலைவர்கள் சரணாகதி அடைந்த மற்ற தமிழ் இயக்கத்தினரை இரக்கமற்ற முறையில் கொன்றனர். அதே கதிதான் கடைசியில் அவர்களுக்கும் ஏற்பட்டது. என்ன செய்வது வினை விதித்தவன் வினை அறுப்பான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
300 என்ற பெயரிலேயே இந்த படம் வந்திருந்தது, ஆங்கில படம் போல் அல்லாமல் ஒரு தமிழ் படம் பார்ப்பது போன்ற எளிய வசன நடை. கண்ணை கவரும் கேமரா ஒளிப்பதிவு, மயிர் கூச்செறியும் கிராபிக்ஸ் காட்சிகள்.
பார்க்கவில்லை என்றால் ஒருமுறை பார்த்து விடவும், ஸ்பார்டன்களை நேரில் சந்தித்த அனுபவம் பெறுவீர்கள்!
//
வா.பை,
அந்தப்படம் ஒரு கற்பனைப்படம். உண்மைச்சம்பவம் அதில் கொஞ்சம் கலந்திருக்கிறார்கள்.
ஃப்ராங் மில்லர் என்பவர் அதே உண்மைச்சம்பவத்தை வைத்து கற்பனை செய்து வடிவமைத்த காமிக் புத்தகம் படு சூப்பராக விற்பனையாகவே, சின் சிட்டி போல் காமிக் புத்தக நடையில் எடுத்திருக்கிறார்கள் (எல்லாமே சர்ரியலிஸம் போல் இருக்கும்!)
வஜ்ரா!
வரலாறு என்பதே புனைவால் புனையப்பட்ட புனைவு தானே!
இது தான் உண்மை என உறுதியாக் நாம் எதை தான் சொல்லமுடியும்!
டோண்டு சார், மஞ்சக்காமாலை வந்தவர்களுக்கு எல்லாம் மஞ்சளா தெரியும். "சமீபத்தில்" 1970களின் பிற்பகுதியிலிருந்து, புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். புலிகளின் ஓயாத அலைகள் நடவடிக்கைகளின் போதோ, அல்லது இலங்கையின் ஜெயசேகுரு நடவடிக்கைகளை எதிர்த்த போதோ புலி வீரர்கள் மட்டுமே போர் புரிந்தனர். இலங்கையின் மிக வலுவான பாதுகாப்பு அரண்களை கொண்டது என்று அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட, ஆனையிரவை 1200 புலி போராளிகளுடன் சென்று பிரிகேடியர் பால்ராஜ் கைபற்றினார் (இது நடந்தது 2000 வது ஆண்டு). இந்த அத்துனை போர்களிளும், புலிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தியதாக எந்த செய்தியும் இல்லை. "மக்களை கேடயமாக" பயன்படுத்தியதாக் இலங்கை அரசு சொல்ல ஆரம்பித்தது 2006 க்குப்பின்னால், கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை இலங்கை ராணுவம் தொடங்கிய பிறகு தான். எனவே உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக, புலிகளின் அனைத்து வீரச்செயல்களையும் கொச்சை செய்வது அநீதி.
Post a Comment