மனசு அவர்கள் இட்ட இப்பதிவு நான் பலநாட்களாக சொல்ல நினைத்ததைக் கூறும் தூண்டுதலாகி விட்டது.
மும்முரமாக காலத்துடன் போட்டியிட்டுக் கொண்டு மொழிபெயர்ப்புகளை கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் "அதோ அந்த பறவை போல வாழவேண்டும்" என்னும் பாடலின் டியூன் என் செல்பேசியில் ஒலிக்க ஆரம்பிக்கும். கணினியில் தட்டச்சு செய்து கொண்டே செல் பேசியை எடுத்து ஆன் செய்து "ராகவன்" என்று குரல் கொடுத்ததுமே "குட் மார்ணிங் சார்" என்று வரும். உடனே உஷாராகி விடுவேன். என்ன என்று உறைபனியில் தோய்த்த குரலில் கேட்க, பதிலுக்கு "நாங்கள் ஐசிஐசிஐ பேங்கிலிருந்து பேசுகிறோம், கடன் சம்பந்தமான சில திட்டங்கள்.." என்ற புராணம் ஆரம்பிக்கும். "Sorry, not interested" என்று செல்பேசியை ஆஃப் செய்து விடுவேன்.
"இவர்களுக்கு வேறு வேலை கிடையாது போலிருக்கிறது. இது என்ன எப்போது பார்த்தாலும் கடன் தருகிறேன் என்ற துணப்பல்" என்றெல்லாம் எரிச்சல் கொள்வேன். அதில் வேறு சூட்சுமம் இருக்கிறது என்பது சற்றுப் பிறகு புரிந்தது. அதாவது, இவ்வளவு ஒரு மாத அளவில் ரூபாய்கள் கடன் தர வேண்டும் என்றெல்லாம் கோட்டா இருக்கிறதாம் (அடக் கஷ்ட காலமே!). முதலில் கடன் தருகிறோம் என்று மாலை போட்டு (பலி ஆட்டிற்குப் போடுவதை போல), பிறகு தண்ணீர் தெளித்து, சுற்றி கும்மியடித்து பிறகு தலையை வெட்டுவது போல இருக்குமாம். கந்து வட்டிக்காரனே நாணப்படும் அளவுக்கு வட்டி வேறு. அருமை நண்பர் ஜோசஃப் அதை பற்றி என்னிடம் ஒரு முறை கூறியிருக்கிறார்.
கடன் மட்டுமல்ல, கிரெடிட் கார்டு வாங்கிக் கொள் என்று வேறு தொல்லை. அவ்வாறு கூறுபவர்களிடம் நான் கூறுவது, "மன்னிக்கவும் நான் கிரெடிட் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை, வைத்துக் கொள்வதாகவும் இல்லை" என்பதே.
கார் லோன் வாங்கிக் கொள்ளும்படி ஒரு பார்ட்டி (ஃபிகர்) கேட்க அவரே பீதியடையும் அளவுக்கு நான் கார் தேவையில்லாததை பற்றி இப்பதிவில் போட்டதை அடுத்த கால் மணிக்கு போட்டு அறுஅறு என அறுத்துத் தள்ள, அவர் நன்றி சார் என பேச்சை முடித்துக் கொண்டார். (அவர் குரலில் ஒரு விம்மல் கேட்டது எனது கற்பனையாக இருக்கலாம், அப்படியெல்லாம் அழும் அளவுக்கா நான் போர் அடிக்கிறேன்?).
சம்பளத்துக்குள் வாழப் பழக வேண்டும். செலவு செய்ய வேண்டுமானால் முதலில் சம்பாத்தியத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொல்லைதான். அதற்காக கருமித்தனமாக எல்லாம் இருக்கக் கூடாது. என்ன குழம்புகிறதா? கூட்டிக் கழித்து பாருங்கள் எல்லாம் சரியாகத்தான் வரும் (நன்றி அண்ணாமலை).
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று நான் பார்த்த அறிவிழி அவர்களின் ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா? என்னும் தலைப்பில் வந்த பதிவே என்னை எனது இந்தப்பதிவை மறுபடி பப்ளிஷ் செய்யத் தூண்டியது என்றால் மிகையாகாது.
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
6 hours ago
43 comments:
//விம்மல்....அந்த அளவுக்கா...?//
இருக்காது....சான்ஸே இல்லை...விம்மல் சத்தமே கேட்டிருக்காது....அதர்க்கு சான்ஸே இல்லை....அவர்தான் முன்னாடியே மயக்கம் போட்டு விழுந்திருப்பாரே....
நீங்கள் கூறுவது சரிதான் தினகர் அவர்களே. பொருளாதாரத்தில் நான் பழமை கொள்கைகளை கடைபிடிப்பவன்.
சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியையாக இருக்கும் எனது தங்கை (சித்தப்பா பெண்) என்னிடம் ஒரு முறை பேசும்போது, என்னை மாதிரி பொருளாதார லாஜிக்கை மீறும் சில நபர்களால் பல பொருளாதார தியரிகள் விதிவிலக்குகளை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
மற்றப்படி கிரெடிட் கார்டுகளை நல்ல முறையில் கையாண்டால் லாபம் பெறலாம் என்பதை நானும் அறிவேன். ஆனால் அதெல்லாம் செய்யும் பொறுமை எனக்கில்லை. ஒரு விஷயம் தெரியுமா? இம்மாதிரி லாபம் பார்க்கும் சில இந்தியர்களைக் கண்டு அமெரிக்க கிரெடிட் கார்டு சேவை அளிப்பாளர்கள் நறநறவென்று பல்லைக் கடிக்கிறார்கள் என்பதையும் படித்தேன். எவ்வளவு நாட்கள் வட்டியிலிருந்து தப்பிக்க இயலுமோ அவ்வாறு இருந்து விட்டு அக்காலக் கட்டம் முடிவடையும் முந்தைய தினத்தன்று பணத்தைக் கட்டி விடுகிறார்கள் என்று அவர் புலம்புகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"//விம்மல்....அந்த அளவுக்கா...?//
இருக்காது....சான்ஸே இல்லை...விம்மல் சத்தமே கேட்டிருக்காது....அதற்கு சான்ஸே இல்லை....அவர்தான் முன்னாடியே மயக்கம் போட்டு விழுந்திருப்பாரே...."
ஹா ஹா ஹா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"நான் 3,4 வங்கிகளிடமிருந்து கடனட்டை வாங்கி பணத்தை ரோலிங் விட்டு அழகாக சமாளித்தேன்.ஒரு பைசா வட்டி எங்கேயும் கட்டவில்லை."
கத்தி மேல் நடக்கிறீர்கள். ஜாக்கிரதை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார்,
இன்னொன்றும் கவனித்திருப்பீர்கள்.
இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்.
இருந்தாலும் அந்த போன் பார்ட்டியிடம் நீங்கள் இந்த அளவுக்கு பிளேடு போட்டிருக்கக் கூடாது, அந்த பிகர் விம்மியது என்பதை கேட்டு என் நெஞ்சமும் விம்முகிறது :-))
***
கிரெடிட் கார்டு, வைத்துக் கொள்வது நல்லதுதான்.. நான் அலுவல் காரணமாக வெளிநாடு சென்று வந்த போது, ஹோட்டல் பில்லை கிரெடிட் கார்டு மூலம் கட்டி விட்டு, இங்கு திரும்பி வந்ததும், கம்பெனி கொடுத்த பணத்தை அதில் கட்டினேன்..
***
ஆனால், நம் மனதில் செல்ப் கண்ட்ரோல் இருக்கவேண்டும்.. தாம்தூம் என்று கார்டை வைத்து செலவு செய்யக்கூடாது...
//கத்தி மேல் நடக்கிறீர்கள். ஜாக்கிரதை.//
இதை தான் நானும் எண்ணினேன்
ஏன் ஸார்,
ஏதோ 10 வருஷம் கழித்து கடைகள் எல்லாம் இருக்காது என்ற்று ஒரு கூத்து நடக்கிறதே? கொஞ்சம் அதை பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்.
@இருந்தாலும் அந்த போன் பார்ட்டியிடம் நீங்கள் இந்த அளவுக்கு பிளேடு போட்டிருக்கக் கூடாது, அந்த பிகர் விம்மியது என்பதை கேட்டு என் நெஞ்சமும் விம்முகிறது :-))"
:-)))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஏதோ 10 வருஷம் கழித்து கடைகள் எல்லாம் இருக்காது என்ற்று ஒரு கூத்து நடக்கிறதே? கொஞ்சம் அதை பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்."
இது நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்."
மனம் கனக்கும் கசப்பான உண்மை.
:-((
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சம்பளத்துக்குள் வாழப் பழக வேண்டும். செலவு செய்ய வேண்டுமானால் முதலில் சம்பாத்தியத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். //
இந்த மாதிரி வரிகளுக்காத்தானை டோண்டு சார் பதிவு படிக்கணும்கிறது....
நன்றி பாலசந்தர் அவர்களே.
சம்பாத்தியத்தை அதிகரித்துக் கொள்வதில் ஒரு அனுகூலம். பணம் செலவு செய்வதற்காக உங்களுக்குக் கிடைக்கும் நேரம் குறையும். அதே சமயம் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை தேவையின்றி செலவழிப்பதா என்ற எண்ணமும் வரும்.
ஆனால் கிரெடிட் கார்ட் விஷயம் அப்படியல்ல. செலவு செய்யும்போது ஈசியாக இருக்கும். ஆனால் கடனை வட்டியோடு செலுத்தும்போது முழி பிதுங்கும்.
எல்லாம் சம்பந்தப்பட்டவர் சாய்ஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கார் லோன் வாங்கிக் கொள்ளும்படி ஒரு பார்ட்டி (ஃபிகர்) கேட்க அவரே பீதியடையும் அளவுக்கு நான் கார் தேவையில்லாததை பற்றி இப்பதிவில் போட்டதை அடுத்த கால் மணிக்கு போட்டு அறுஅறு என அறுத்துத் தள்ள, அவர் நன்றி சார் என பேச்சை முடித்துக் கொண்டார். (அவர் குரலில் ஒரு விம்மல் கேட்டது எனது கற்பனையாக இருக்கலாம், அப்படியெல்லாம் அழும் அளவுக்கா நான் போர் அடிக்கிறேன்?).
- This sounds good...Can I use that story when some telemarketing guy or gal trying to murder me? :)
தாராளமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் ராஜ் சந்திரா அவர்களே. என் இப்பதிவில் சுட்டியிருந்தப் பதிவை விட, என்னுடைய இப்பதிவை, அதாவது, http://dondu.blogspot.com/2005/11/blog-post.html
உபயோகப்படுத்தவும். என்னுடைய வாதங்களுக்கு மசாலா சேர்க்கவும். டெலிமார்க்கெட்டிங் ஆணையோ பெண்ணையோ பேச விடவே கூடாது. இருபது நிமிடமாவது பேசவும்.
அதே போல வேறு ஏதாவது பெர்சனல் லோன் வாங்கிக் கொள்ளச் சொன்னால் லோன் என்றால் என்ன, அது வாங்குவதால் வரும் தீமை, கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் பாடல் ஆகியவற்றையெல்லாம் கூறி அறுத்து விடுங்கள்.
உங்கள் நம்பரை சக தொழிலாளர்களிடம் கொடுத்து உங்களுக்கு ஃபோன் செய்வதைத் தவிர்க்கச் செய்யும் அளவுக்கு அவர்கள் வெறுத்து விட வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://aalamaram.blogspot.com/2006/08/blog-post_18.html
"இப்படிப்பட்ட வேலைகளை வரைமுறைப்படுத்த எந்தவித சட்டங்களும், நடைமுறைகளும் இல்லாத அரசுகளும், அதை உருவாக்குகிற நாமும்தான் வெட்கப் பட வேண்டும்."
இதைத்தான், இந்த மொத்த சிஸ்டத்தைத்தான் ஒரு வித விபசாரம் என்று ம்யூஸும் சொன்னார், நானும் வழிமொழிந்தேன்.
"இதே டோண்டு தான் பெண்ணியம் பேசுவது போன்ற சில மாயை தோற்றத்தை பதிவுகளில் ஏற்படுத்தி, பிற்போக்குத்தன அடிமைக்கருத்துக்களை புகுத்தியிருந்தார்."
விளக்கம் தரவும். எதேச்சையாக நானும் பெரியார் அவர்களும் ஒரே கருத்தைக் கூறியுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவும்.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய டெலிமார்க்கெட்டிங் பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/blog-post_11.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
///"Sorry, not interested" என்று செல்பேசியை ஆஃப் செய்து விடுவேன்.///
ஏன் போனையே ஆப் செய்யுறீங்க...லைனை கட் பன்னிடலாம் இல்லையா..
///இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்.///
என்ன ஒரு அநியாயமான கருத்து..அதுக்கு நீங்க வேற ஒத்துப்போறீங்களே...
ஏதாவது ஒரு பணியில் சேர்ந்து கண்ணியமாக சம்பளம் பெறும் ஆயிரம் ஆயிரம் சகோதரிகளை விபச்சாரிகள் என்று மியூஸ் கூறுவது நியாயம் அல்ல...
ஸத்தியமா மியூஸுக்கு கால் செண்டர்ல வேலை செய்யும் பெண்கள் பற்றி தவறான கருத்துதான் இருக்கு...
"ஏன் போனையே ஆப் செய்யுறீங்க...லைனை கட் பண்ணிடலாம் இல்லையா.."
அதைத்தான் கூற நினைத்தேன். வார்த்தை மாறி விழுந்து விட்டது. நன்றி.
ம்யூஸ் சொன்னது வேறு அர்த்தத்தில். அவர் சொன்னது இந்த சிஸ்டத்தைத்தான். பெண்கள் இனிமையான குரலில் பேசும்போது, அவர்களிடம் எரிந்து விழத் தோணாதுதான். அதுவே ஆண் பேசியிருந்தால், வேண்டாம் விடுங்கள்.
அதையும் மனத்தில் வைத்து பெண்களை டெலிமார்க்கெட்டிங்கிற்கு நியமிப்பது அதிக அளவில் நடக்கிறது. இப்போது இப்பின்னூட்டம் போடும் சில நிமிடங்களில் இரண்டு டெலிமார்க்கெட்டிங் கால்ஸ் வந்து விட்டன. இரண்டுமே பெண்கள்தான்.
அவர்களை நானோ ம்யூஸோ தவறாக நினைக்கவில்லை. சொல்லப் போனால் எனக்கு சில சமயம் பரிதாபமாகக் கூட இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திருவின் பதிவில் நானிட்ட பின்னூட்டத்தை இங்கேயும் இடுகிறேன்:
http://aalamaram.blogspot.com/2006/08/blog-post_18.html
திருவாளர் திரு அவர்களே,
திருவாளர் டோண்டு அவர்களே, ம்யூஸ் எழுதிய பின்னூட்டத்தை மீண்டும் படித்துப்பாருங்கள். நிறுவன நடைமுறையை தானா ம்யூஸ் குறிப்பிட்டுள்ளார்? உங்களது புரிதலுக்கும்(!) அவர் சொல்லிய பொருளுக்கும் வேறுபாடு உள்ளதா இல்லையா?
இல்லை. மதிப்பிற்குரிய டோண்டு சரியாகவே புரிந்துகொண்டு கேள்வியைக் கேட்டுள்ளார். நான் எனது பின்னூட்டம் மூலம் எந்த இடத்திற்கு விவாதத்தை கொண்டு செல்ல விரும்புகிறேனோ அதை மிக அழகாக முன்னமேயே எட்டிவிட்டார்.
ம்யூஸ், விபச்சாரிகள் (விபச்சாரம்) என்ற அடைமொழி போட்டு அழைப்பது கல்லெறிவது இல்லையா?
கல்லெறிவதற்கும், கல்லெறிதல் நடைபெறுகிறது என்பதற்கும் வித்யாஸம் இருக்கிறது திரு. விபச்சாரம் என்பது நான் கண்டுபிடித்த வார்த்தை இல்லை. அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கீழானவர்கள் என்றும் நான் சொல்லவில்லை. நான் சொல்லுவதெல்லாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை (விபச்சாரத்தை) கீழானது என்று ஆக்கிவிட்டு, அந்த கீழான விஷயத்தில் பெண்கள் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று சமுதாயம் வற்புறுத்துவதைத்தான் குறிப்பிடுகிறேன்.
மனிதானாக பிறந்து சமூகத்தின் அங்கமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் பாலியல் தொழிலாளர் நிலைக்கு வேதனைப் பட வேண்டும்.
கண்டிப்பாக. ஏனென்றால், இந்த நிலைக்கும் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணங்கள் ஆகிறோம். அத்தோடு தங்கள் போன்றவர்கள் ஆக்கப்பூர்வமாக செய்யும் பணிகள் அவர்களுக்கு மரியாதையை சமூகத்தில் பெற்றுத் தருமானால் அது உண்மையில் மிகப்பெரிய சேவை.
அந்த நிலமையை உருவாக்குவது சமூகம் தானே தவிர தனி நபர்கள் மட்டுமல்ல.
சமூகம் என்பது பலமுள்ள தனி நபர்கள் திரு. இந்த பலமுள்ள தனி நபர்களின் கருத்திற்குத்தான் மற்ற பலமில்லாத தனி நபர்கள் அஞ்சுகிறார்கள். எனவே இந்த பலமுள்ள தனிநபர்களாக மனித நேயம் உள்ளவர்கள் வருவார்களேயானால் மனிதர்களை இழிவு செய்யும் போக்கு மறையும்.
பெண்ணாக இருப்பதில் ஏன் தவறு? அதில் என்ன குறை காண்கிறீர்கள்? பெண் வேலை செய்வது முன்னேற்றமில்லையா?
நான் தவறு என்று கூறவேயில்லை நண்பரே. பெண்கள் வேலை செய்யக்கூடாது என்று கூறவுமில்லை. என் கேள்வி வேறு. ஏன் ஒரு குறிப்பிட்ட தொழிலானது ஆணிற்கு மட்டும் அல்லது பெண்ணிற்கு மட்டும் என்று இருக்க வேண்டும்? சில தொழில்களில் ஒரு குறிப்பிட்ட பாலினர் செய்வது ஏற்கக்கூடியதே. உதாரணமாக ஒரு கைனகாலஜிஸ்ட்டாக ஒரு பெண் இருப்பது ஏற்கக்கூடியது. அது ஆண்களுக்குப் பொருத்தமானது இல்லை. அல்லது நர்ஸரி பள்ளிகளில் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு பெண்களின் இயற்கையான தாய்மை உணர்வு உதவி செய்யும். அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அதே நேரத்தில் மற்ற எந்த வேலைகளிலும் பெண்ணுக்கு ஆண் சமம்தானே. இங்கே பெங்களூரில் பெண்கள் கண்டக்டராக வேலை பார்க்கிறார்கள் தெரியுமா? இந்த கூட்டத்தில் நுழைந்து, பிதுங்கி, சத்தம் போட்டு, சண்டையிட்டு, அன்பாய் பேசி, உதவி செய்து - ஒரு ஆண் கண்டக்டருக்கு இணையாக பணி செய்கிறார்கள். இது போன்ற ஒரு நிலை தமிழ்நாட்டில் எப்போது வரும் என்பது என் ஏக்கம். என் உடன் வேலை பார்க்கும் பெண்கள் பலர் தொழிலை மிக அருமையாக செய்கிறார்கள்.
ஆனால், டெலி மார்கெட்டிங்க் என்பது பெண்கள் மட்டுமே அதிகம் வேலை பார்ப்பதற்கான காரணம் என்ன? பெண்கள் பொறுப்பானவர்களாய் இருப்பதாக தாங்கள் கூறுகிறீர்கள். ஏன் தாங்கள் கூறுகின்ற அத்தனை விஷயங்களும் ஆண்களுக்கும் பொருத்தம் இல்லையா? உதாரணத்திற்கு தாங்கள் பொறுப்பில்லாமல் வேலை செய்பவரா? இல்லை நண்பரே. உண்மை வேறு.
நான் டெலிமார்க்கெட்டிங்கில் பெண்கள் வேலை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. ஏன் பெண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்றுதான் கேட்டேன். இதே கேள்வியை நான் வேறு வகையில் கேட்கிறேனே. குடும்ப பத்திரிக்கைகளின் அட்டைப்படங்கள் முதல், விளம்பரங்களின் காமம் தூண்டும் பெண்கள் வரை ஏன் நமது சமுதாயம் பெண்களை ஒரு காமப்பொருளாகப் பார்க்கிறது? உபயோகிக்கிறது?
குறைந்த ஊதியம், வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் வேலையை ஆண்களைவிட நேர்த்தியாக செய்வது, உரிமைக்காக குரல் கொடுக்க பெண்களுக்கு தொழிற்சங்கங்களில் அதிக வாய்ப்புகள் இல்லாமை என நிறுவனங்களுக்கு சாதகமான பல காரணங்கள் உண்டு.
இந்த விஷயங்கள் எல்லாம் டெலிமார்க்கெட்டிங்கிற்குப் பொருந்தாது. எந்தவிதமான மல்ட்டி நேஷனல் கம்பனிகளுக்கும் பொருந்தாது. இந்திய முதலாளிகளால் நடத்தப்படும் இந்திய தனியார் கம்பனிகளுக்குப் பொருந்தலாம். உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட பணிகளுக்குப் பொருந்தலாம்.
திரு, தங்களுக்காக மீண்டும் என்னுடைய கேள்விகளை கேட்கிறேன்:
1. ஏன் டெலிமார்க்கெட்டிங்க் துறையில் பெரும்பாலும் பெண்களே வேலை செய்கிறார்கள்?
2. குடும்ப பத்திரிக்கைகளின் அட்டைப்படங்கள் முதல், விளம்பரங்களின் காமம் தூண்டும் பெண்கள் வரை ஏன் நமது சமுதாயம் பெண்களை ஒரு காமப்பொருளாகப் பார்க்கிறது? உபயோகிக்கிறது?
/////1. ஏன் டெலிமார்க்கெட்டிங்க் துறையில் பெரும்பாலும் பெண்களே வேலை செய்கிறார்கள்?//////
ஏன் ராணுவத்திலும் மற்ற உடல் உழைப்பு அதிகமாகத் தேவைப்படும் துறைகளிலும் ஆண்களே வேலை செய்கிறார்கள்?
/////2. குடும்ப பத்திரிக்கைகளின் அட்டைப்படங்கள் முதல், விளம்பரங்களின் காமம் தூண்டும் பெண்கள் வரை ஏன் நமது சமுதாயம் பெண்களை ஒரு காமப்பொருளாகப் பார்க்கிறது? உபயோகிக்கிறது?/////
பெண்களை காமப்பொருளாக சமுதாயம் பார்க்கிறது... உபயோகிக்கிறது என்று சொல்லுவதற்கு நீங்கள் யார்? சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா நீங்கள்? நீங்கள் அதுபோல பார்ப்பதாகச் சொல்லி விட்டுப் போங்கள்.... உங்கள் பார்வைக் கோளாறுக்கெல்லாம் சமுதாயம் பொறுப்பேற்காது.....
"திருவின் பதிவில் நானிட்ட பின்னூட்டத்தை இங்கேயும் இடுகிறேன்:"
இன்னும் அந்தப் பதிவில் இப்பின்னூட்டம் வரவில்லையே? எங்காவது வேலயில் பிஸியாக இருக்கிறார் போலும். சீக்கிரம் போட்டு விடுவார்.
இருக்கும் நிலைமையை எடுத்துச் சொன்னால் பலருக்கு ஏன் எரிகிறது என்று தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"பெண்களை காமப்பொருளாக சமுதாயம் பார்க்கிறது... உபயோகிக்கிறது என்று சொல்லுவதற்கு நீங்கள் யார்? சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா நீங்கள்?"
அப்படி சமுதாயம் பார்க்கவேயில்லை என்பதா உங்கள் கட்சி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
/////அப்படி சமுதாயம் பார்க்கவேயில்லை என்பதா உங்கள் கட்சி?//////
ஆமாம்.... சமுதாயம் என்பது நல்லவன், கெட்டவன் இரண்டு பேரும் சேர்ந்தது தான்.... கெட்டவன் செய்யும் செயலுக்கெல்லாம் கூட நல்லவன் பொறுப்பேற்க வேண்டும் என அவசியமில்லை....
கொஞ்சம் விட்டால் பத்திரிகைகளின் அட்டைப்படத்தில் வரும் பெண்கள் எல்லாரும் கூட விபச்சாரிகள் என்பார்கள் போல இருக்கிறதே....
லக்கிலுக்,
ஏன் ராணுவத்திலும் மற்ற உடல் உழைப்பு அதிகமாகத் தேவைப்படும் துறைகளிலும் ஆண்களே வேலை செய்கிறார்கள்?
தவறான தகவல் லக்கிலுக். ராணுவத்திலும், பெரும்பாலான உடல் உழைப்பு அதிகமாகத் தேவைப்படும் துறைகளிலும் பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல, பெண்களின் வேலை குடும்பத்தை கவனித்துக்கொள்வது மட்டுமே என்று கருதுகின்ற நாடுகளிலும் ராணுவத்தில் பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.
பெண்களை காமப்பொருளாக சமுதாயம் பார்க்கிறது... உபயோகிக்கிறது என்று சொல்லுவதற்கு நீங்கள் யார்? சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா நீங்கள்?"
இல்லை. எந்த சமுதாயத்திற்காகவும் குரல்கொடுக்க முடியாத வெறும் தனி மனிதன்தான் நான். ராஜா ஆடையில்லாமல் ஊர்வலத்தில் வருகிறார் என்று சொல்லிய குழந்தைபோல (அந்த கதை தெரியுமில்லையா?) சில சமயங்களில் கேட்டுவிடுகிறேன். அப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்பது புரிந்த பெரியவர் தாங்கள்.
மியூஸ்...திருவுக்கு தான் உங்கள் கேள்வியா - அல்லது நாங்களும் பதில் கொடுக்கலாமா ?
சரி கொடுக்கிறேன்...
///1. ஏன் டெலிமார்க்கெட்டிங்க் துறையில் பெரும்பாலும் பெண்களே வேலை செய்கிறார்கள்?///
விபச்சாரம் செய்ய...
///2. குடும்ப பத்திரிக்கைகளின் அட்டைப்படங்கள் முதல், விளம்பரங்களின் காமம் தூண்டும் பெண்கள் வரை ஏன் நமது சமுதாயம் பெண்களை ஒரு காமப்பொருளாகப் பார்க்கிறது? உபயோகிக்கிறது?///
அஜால் குஜாலாக இருக்க....
சந்தோஷமா இருக்கா இப்போ மியூஸ்...
உண்மையை சொன்னால்:
டெலிமார்க்கெட்டிங் ஆர்டர் பிடிக்க பெண்கள், கையெழுத்து வாங்க ஆண்கள் என்று இருக்கிறார்கள்..ஆனால் இதில் எங்கே விபச்சாரம் வந்தது ?
"ராஜா ஆடையில்லாமல் ஊர்வலத்தில் வருகிறார் என்று சொல்லிய குழந்தைபோல (அந்த கதை தெரியுமில்லையா?) சில சமயங்களில் கேட்டுவிடுகிறேன். அப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்பது புரிந்த பெரியவர் தாங்கள்."
:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"டெலிமார்க்கெட்டிங் ஆர்டர் பிடிக்க பெண்கள், கையெழுத்து வாங்க ஆண்கள் என்று இருக்கிறார்கள்..ஆனால் இதில் எங்கே விபச்சாரம் வந்தது?"
டெலிமார்க்கெட்டிங்கில் வரும் விரோதமான பதில்களையெல்லாம் பெண்கள் அனுபவிக்கட்டும், அவர்கள் கஷ்டப்பட்டு ஆர்டர் பிடிப்பதை ஆண்கள் பூர்த்தி செய்யட்டும் என்று இருப்பாது பேடித்தனமாக அல்லவா உள்ளது? அவ்வாறு கஷ்டமான வேலைகளை பெண்கள் செய்யட்டும் என்று விடுவது ஏன்?
அதை என்னவென்று கூறுவீர்கள்?
முக்கியமாக இப்பதிவுக்கு வாருங்கள். லோன் எடுக்காதவனை எல்லாம் தொல்லை செய்து திரும்பத் திரும்ப தொந்திரவு ஏன் செய்ய வேண்டும்? கடைசியில் அவன் ஒரு பலவீன தருணத்தில் லோன் எடுத்தப் பிறகு அவனை கந்து வட்டி ரேஞ்சிற்கு கொடுமை செய்வதுதானே நடக்கிறது?
அது பற்றி மற்றவர்களை உஷார்படுத்துவதுதானே இப்பதிவு? வேண்டாம் என்றால் விடுவதில்லையே. தொந்திரவுதானே அதிகம்? அதைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///தவறான தகவல் லக்கிலுக். ராணுவத்திலும், பெரும்பாலான உடல் உழைப்பு அதிகமாகத் தேவைப்படும் துறைகளிலும் பெண்கள் வேலை பார்க்கிறார்கள். /////
குறைவாக வேலை பார்க்கிறார்கள்... "பெரும்பாலும்" என்ற வார்த்தை மிஸ்ஸிங்....
நீங்களும் கால் சென்டர்களில் பெரும்பாலும் பெண்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறீர்கள்....
டோண்டு சார் "சமுதாயம்" குறித்த என் பின்னூட்டம் ஒன்று உங்கள் மட்டுறுத்தலுக்காக காத்து நிற்கிறது என நினைக்கிறேன்....
"டோண்டு சார் "சமுதாயம்" குறித்த என் பின்னூட்டம் ஒன்று உங்கள் மட்டுறுத்தலுக்காக காத்து நிற்கிறது என நினைக்கிறேன்...."
போட்டு விட்டேன். அப்பின்னூட்டம் ஜி மெயிலில் வராது பிளாக்கரிலேயே இருந்தது. அங்கு சென்று மட்டுறுத்தி விட்டேன். ஆனாலும் இங்கு வருவதாகத் தெரியவில்லை. இப்பின்னூட்டன் இட்டதும் இற்றைப்படுத்திப் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
செந்தழல் ரவி,
டெலிமார்க்கெட்டிங் ஆர்டர் பிடிக்க பெண்கள், கையெழுத்து வாங்க ஆண்கள் என்று இருக்கிறார்கள்..ஆனால் இதில் எங்கே விபச்சாரம் வந்தது ?
கேள்விக்கு நன்றிகள்.
டெலிமார்க்கெட்டிங்கில் பெண்களை வேலை அமர்த்துபவர்களின் நோக்கத்தைத்தான் நான் விபச்சார புத்தி என்று கூறியிருந்தேன். ஏனெனில், பெரும்பாலும் ஆண்களை நுகர்வோராகக்கொண்டுள்ள ஒரு துறையில் அவர்களை பெண்களின்மூலமாக அணுகுவது என்பது ஆண்கள் பெண்களிடம் மயங்குவார்கள் என்கிற எண்ணத்தில் ஏற்பட்டது. இதே விஷயம்தான் பத்திரிக்கை அட்டைப்படங்களிலும், தினந்தந்தியின் ஞாயிற்றுக்கிழமை கவர்ச்சிப்படத்திலும், ஆனந்த விகடன் கல்லூரி இளைஞிகளை பேட்டியெடுப்பதும், விளம்பரங்களில் குறிப்பிட்ட ப்ராண்ட் செல்ஃபோனை வைத்திருக்கும், மோட்டார் பைக் உபயோகிக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதுபோல காண்பிப்பதும்,.... சொல்லிக்கொண்டே போகலாம்.
இதை விளக்கி திருவின் பதிவில் நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். அதே பின்னூட்டத்தை இதே பதிவிலும் இட்டுள்ளேன். அதை படித்தீர்களா?
"ஆமாம்.... சமுதாயம் என்பது நல்லவன், கெட்டவன் இரண்டு பேரும் சேர்ந்தது தான்.... கெட்டவன் செய்யும் செயலுக்கெல்லாம் கூட நல்லவன் பொறுப்பேற்க வேண்டும் என அவசியமில்லை...."
இப்பின்னூட்டத்தைதானே குறிப்பிட்டீர்கள்?
சமுதாயம் செய்கிறது என்று சொல்வது பொதுவாகப் பார்ப்பதைத்தான். யாரும் யாருக்காகவும் பொறுப்பேற்கத் தேவையில்லை, அவரவர் காரியத்துக்கு பொறுப்பேற்றால் போதும்.
இப்போதாவது இப்பதிவின் முக்கிய இழைக்கு வாருங்கள். டெலிமார்க்கெட்டிங் வரவேற்கத்தக்கதா? அதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
லக்கிலுக்,
குறைவாக வேலை பார்க்கிறார்கள்... "பெரும்பாலும்" என்ற வார்த்தை மிஸ்ஸிங்....
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை எனக்கு.
ராணுவத்தில் பெண்கள் குறைவாக வேலை பார்க்கிறார்கள் என்கிறீர்களா? அந்த குறைவு அவர்களது எண்ணிக்கையை குறிக்கிறதா அல்லது செய்ய வேண்டிய வேலைகளை குறைவாக செய்கிறார்கள் என்கிறதா?
ஒருவேளை ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதே தாங்கள் கூற வந்தது என்றால் அதற்கும் தற்போதைய கருத்துப்பரிமாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை சற்று விளக்கவும்.
நீங்களும் கால் சென்டர்களில் பெரும்பாலும் பெண்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறீர்கள்....
முதலில் முழுவதும் என்றுதான் கூறிக்கொண்டிருந்தேன். ஏனென்றால் எனக்கும், என் உடன்வேலை பார்ப்பவர்களுக்கும் இதுவரை தொலைபேசிவருபவர்கள் பெண்கள்தான். இதற்கிடையில் பொன்ஸ், திருவின் பதிவில் அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆண்களும் தொலைபேசியிருக்கிறார்கள் என்று கூறியதால் பெரும்பாலும் என்ற வார்த்தையை உபயோகித்தேன்.
டோண்டு ஸார்,
தாங்கள் இந்தப்பதிவின்மூலம் கூறவந்தது வேறு. கடன் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்தது என்பதையும், அதை எங்கனம் சாதிப்பது என்பதையும் தாங்கள் கூற வந்தீர்கள். அந்த கருத்திலிருந்து சற்று தொடர்பற்ற கருத்தை நான் பின்னூட்டமிட சிலர் தாங்கள் கூறவந்ததன் கருத்தை விட்டுவிட்டு என்னுடைய பின்னூட்டத்தை பிடித்துக்கொண்டுவிட்டார்கள். இதனால், தங்களது பதிவின் நோக்கம் தடைபடுவது எனக்கு வருத்தம்தான். இதற்கு என்னை மன்னிக்கவும்.
அதே சமயத்தில் தங்களின் பதிவுகளில் ஏதேனும் குற்றம் கண்டுபிடித்தே தீரவேண்டும் என்று இருப்பவர்கள் இருக்கும்போது, என்னுடைய பின்னூட்டம் இடம்பெறாவிட்டாலும் வேறேதேனும் காரணத்தைவைத்துக்கொண்டு கேள்விகள் எழுப்ப ஆட்கள் உண்டு என்பதையும் நானறிவேன். பழமுள்ள மரம் கல்லடிபடுகிறது.
டெலி மார்க்கெட்டிங் என்பது வளர்ந்து வரும் மார்க்கெட் டெக்னிக்குகளில் ஒன்று...
உங்களுக்கு அவர்களது மார்க்கெட்டிங் டெக்னிக் பிடிக்கவில்லையென்றால் Sorry, I am not interested என்ற ஒரே வார்த்தையோடு முடித்துக் கொள்ளலாம்.... யாரும் உங்கள் கையைப் பிடித்து இழுக்கப் போவதில்லை....
அப்படியும் இதுபோல தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்தால் உங்களது Telephone Service Providerஇடம் புகார் செய்யலாம்... ஏனென்றால் உங்களைப் பற்றிய Dataக்களை விற்பவர்களே அவர்கள் தான்....
அதை விடுத்து "விபச்சாரம்" என்றெல்லாம் சொல்லுவது ரொம்ப ஓவர்.... கொஞ்சம் விட்டால் Insurance Agentகளைக் கூட விபச்சாரிகள் என்று ம்யூஸ் விமர்சிப்பார் போல.....
"இதனால், தங்களது பதிவின் நோக்கம் தடைபடுவது எனக்கு வருத்தம்தான். இதற்கு என்னை மன்னிக்கவும்."
பரவாயில்லை விடுங்கள்.
"அதே சமயத்தில் தங்களின் பதிவுகளில் ஏதேனும் குற்றம் கண்டுபிடித்தே தீரவேண்டும் என்று இருப்பவர்கள் இருக்கும்போது, என்னுடைய பின்னூட்டம் இடம்பெறாவிட்டாலும் வேறேதேனும் காரணத்தைவைத்துக்கொண்டு கேள்விகள் எழுப்ப ஆட்கள் உண்டு என்பதையும் நானறிவேன்."
அதே அதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்./////
இந்தக் கருத்தை டோண்டு சாரும் வழிமொழிந்திருப்பது எனக்குச் சற்று வருத்தமே.... மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் எல்லோருக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்....
/////பழமுள்ள மரம் கல்லடிபடுகிறது./////
பழமுள்ள மரம் என்று தான் நினைக்கிறோம்... ஆனால் ம்யூஸின் "விபச்சாரம்" கமெண்டை வழிமொழிந்ததால் தெரியாத்தனமாக அழுகின்ப்போன பழத்துக்கு கல் விட்டு விட்டோமே என்று வருத்தப் படுகிறோம்....
(இது தனிமனித தாக்குதல் அல்ல.... சும்மா வார்த்தை விளையாட்டு)
"இது தனிமனித தாக்குதல் அல்ல.... சும்மா வார்த்தை விளையாட்டு"
அப்படியே இருந்தால்தான் என்ன, இது ஒன்றும் புதிதல்லவே? எல்லாம் பட்டு உடல் உரம் ஏறிவிட்டதை.
எது எப்படியானாலும் கல்லடிக்கும் திருட்டு கும்பலுக்கு நன்றாக வேண்டும். இதுவும் சொல் விளையாட்டுத்தான். தனிமனிதத் தாக்குதல் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//////எது எப்படியானாலும் கல்லடிக்கும் திருட்டு கும்பலுக்கு நன்றாக வேண்டும். இதுவும் சொல் விளையாட்டுத்தான். //////
திருட்டு மாங்காய் ருசி உங்களுக்குத் தெரியாததா டோண்டு சார்.... :-)
(குறிப்பு : நான் மாங்காய் திருடன் அல்ல)
எது எப்படியானாலும் கல்லடிக்கும் திருட்டு கும்பலுக்கு நன்றாக வேண்டும். இதுவும் சொல் விளையாட்டுத்தான். தனிமனிதத் தாக்குதல் இல்லை.
:-))))))))))))))))
லக்கிலுக்,
உங்களுக்கு அவர்களது மார்க்கெட்டிங் டெக்னிக் பிடிக்கவில்லையென்றால்
லக்கிலுக் ஐயா, நான் டெலிமார்கெட்டிங்க் பிடிக்கவில்லையென்றோ, டெலிமார்க்கெட்டிங்கிற்காக தொலைபேசும் பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்றோ கூறவில்லை. நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை படித்து, பின் படித்ததை புரிந்துகொண்டு கேள்வி கேளுங்களேன். ப்ளீஸ்.
ம்யூஸ் சார்!
/////////இங்கனம் கடனையும், க்ரெடிட் கார்டையும் வாங்க தொ(ல்)லை பேசுவது பெண்களே. பெண்கள் மட்டுமே. இது ஒருவகை விபச்சாரம்தான்.///.....
எதைச் சொல்லும்போதும் ஒரு முறைக்கு இரண்டு முறை இனியாவது யோசிச்சு சொல்லுங்கள்.... நீங்கள் சொல்லுவது உங்களுக்கு மட்டுமே புரிந்துப் பயனில்லை.... மற்றவர்களும் அதை நல்லபடியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.....
லக்கிலுக்,
நீங்கள் சொல்லுவது உங்களுக்கு மட்டுமே புரிந்துப் பயனில்லை.... மற்றவர்களும் அதை நல்லபடியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.....
ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்தைத்தான் கூறியுள்ளீர்கள் லக்கிலுக். நாம் எழுதுவது ஒரு குழந்தைக்கும் புரியுமானால் அதுவே அந்த எழுத்தின் வெற்றிக்கு அடையாளம்.
வலைப்பதிவுலகத்தில் சற்று வளர்ந்தவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டுவிட்டது என் தவறுதான். திருத்திக்கொள்கிறேன்.
டோண்டு சார், பேசாம ஒரு கிரெடிட் கார்ட் வாங்கி போடுங்கோ.
மிச்சத்த எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.
இது மீழ்பதிவா,
ஆனா எல்லா காலத்துக்கும் பொருந்துதே!
Post a Comment