10/19/2006

தாம்புக்கயிறுகள் எதற்கு?

சென்னை மாநகராட்சித் தேர்தல் நடந்த பிறகுதான் நான் வசிக்கும் நங்கனல்லூரில் ஆலந்தூர் முனிசிபாலிட்டி தேர்தல் நடந்தது. காலை 6.50 மணியளவிலேயே போலீஸார் சுறுசுறுப்பாக வலம் வந்து எந்தக் கட்சிக்காரரும் (ஆளும் கட்சியினர் உட்பட) undue advantage எடுத்துக் கொள்ளவிடாமல் பார்த்துக் கொண்டனர். மரியாதையாக அதே சமயம் கறாராகச் செயல்பட்டனர்.

பூத்துகளிலும் படு அமைதி. எல்லா கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் காணப்பட்டனர். ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொண்டனர். ஓட்டளிப்பும் தள்ளுமுள்ளு இல்லாமல் நடந்தது.

ஆக, ஒன்று தெளிவாகிறது. இப்போது கூட மனதிருந்தால் தேர்தலை ஒழுங்காக நடத்த முடியும். நான் ஏற்கனவே இந்தப் பதிவில் கூறியபடி, ஆளும் கட்சிக் கூட்டணி இப்போதும் சரி, 2001-லும் சரி, நல்ல நிலைமையாலே இருந்தாலும் தேவையின்றி பிரம்மாஸ்திரத்தைத் தாம்புக் கயிறு போட்டு மேலும் இறுக்கியதுதான் நடந்தது.

2001-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் செய்த ரகளைகளைப் பற்றிய செய்திக் குறிப்புகளை அக்காலத்திலேயே சுடச்சுட படித்தவன் நான். மேயர் தேர்தல் நேரடியாக நடந்த நிலையில், ஒட்டு எண்ணிக்கையைக் கூட அதிமுகவினர் விட்டு வைக்கவில்லை. எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்குப் போய் ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த சீட்டுக்களில் அதிக முத்திரைகள் குத்தி அவற்றைச் செல்லாத சீட்டுகளாக மாற்ற முயற்சி செய்தனர். இருந்தாலும் ஸ்டாலின்தான் ஜெயித்தார்.

இப்போது? அதே மாதிரியானத் தவற்றை தி.மு.க. கூட்டணியினர் செய்கின்றனர். இந்த இடுகை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையுமே குறை கூறுகிறது.

தாம்புக் கயிறுகள் எதற்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவதும் உண்மைதான் பிரகாஷ் அவர்களே. ஆனால், இப்போது உங்கள் பின்னூட்டம் மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சி என்றத் தொடரை நான் வெளியிடுவதற்கான தூண்டுதலாக அமைந்து விட்டது.

ஏற்கனவே படுத்தும் டோண்டு ராகவனை மேலும் தூண்டியதற்காகப் பலர் உங்களை நொந்து கூறப்போவதை தாங்கிக் கொள்ளத் தயாராகவும். :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"டோண்டு ஐயா, தாம்பு கயிறு போடவில்லை என்றால் ஐந்து வருடம் பண்ம் பார்க்க முடியாதே."

அப்படியில்லை 2001-லும் சரி 2006-லும் சரி, கண்டிப்பாக ஆளும் கட்சிக் கூட்டணிகள் ஜெயித்திருக்க முடியும். ஆகவேதான் இப்பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

இதற்கெல்லாம் போய் பிரகாஷை நொந்துக் கொள்வோமா. சீக்கிரம் மஹாபாரதக் காட்சிகள் பற்றியப் பதிவுகள் போடவும், டோண்டு சார்.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

"Some of the articles are a bit old but the ideas are not."
அந்த எண்ணங்கள் நிசாயமாக பழமையானவை அல்ல. எக்காலத்துக்கும் பொருந்துபவை. மாறா இளமையுடையவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

ஏதேச்சையாய் இந்தப் பதிவை படிக்க நேர்ந்தது. உடனே இன்றைய தேர்தலுக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தேர்தலுக்கும் உள்ள வித்யாசத்தை எண்ணிப் பார்த்து மலைத்துப் போனேன். என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.

dondu(#11168674346665545885) said...

முக்கியமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியைத் தூக்க வேண்டும். செய்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது