அனானி (12.11.2008, காலை 6.15-க்கு கேட்டவர்)
1. பொதுவாக தண்ணிர் குடிக்கும் போது அண்ணாந்து குடிக்காமல்(அடுத்த வீட்டிற்குப் போனால் கதை வேறு) "ஸிப்" பன்னிக் குடிப்பதுதான நல்லது என மருத்துவ உலகம் சொல்கிறது. யோகக் கலை குருமார்களும்,இயற்கை மருத்துவர்களும் இதே கருத்தைதான் சொல்கிறார்கள்.அவர்கள் சொல்லும் காரணம் அண்ணாந்து குடிக்கும் போது தண்ணீரோடு காற்றையும் விழுங்கிவிடுவதால் பின்னர் ஜீரண/வாயு கோளாறுகள் துன்பப்படுத்தும்.உங்கள் அனுபவம் எப்படி?
பதில்: ஸிப் பண்ணிக் குடிப்பது பற்றிய இக்கண்ணோட்டதை முதன் முறையாகத்தான் பார்க்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம். நாம் மூக்கால் மூச்சு இழுக்கும்போது போகாத காற்றா அண்ணாந்து தண்ணீர் குடிக்கும் சமயம் சென்று விடப்போகிறது? இன்னொரு விஷயம். இது டம்ளரை எச்சில்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் வந்திருக்க வேண்டும். இப்பழக்கத்தை நான் முக்கியமாக தமிழக பிராம்மணர்கள் வீடுகளில்தான் அதிகமாக இருப்பதாக உணருகிறேன். ஆந்திராவில் பிராம்மணர்களும் ஸிப் செய்துதான் நீர் அருந்துவதைப் பார்த்திருக்கிறேன். இதயம் பேசுகிறது மணியன் ஆப்பிரிக்கப் பயணத்தின்போது போன இடத்தில் தண்ணீரை அண்ணாந்து தூக்கிக் குடிக்க அது ஒரு வாட்டர் மேஜிக் என்று பலரால் குறிப்பிடப்பட்டது என அறிகிறேன். இப்போது கூட நான் தண்ணீரை அவ்வாறுதான் தூக்கிக் குடிக்கிறேன். எனது தொண்டைக்கு அவ்வளவு தண்ணீர் ஃப்ளோ தேவைப்படுகிறது. காப்பி, டீ போன்ற சூடான திரவங்கள் மட்டும் ஸிப் செய்துதான் குடிக்கிறேன். அவற்றை தூக்கிக் குடித்தால் சூடு காரணமாக குறைவான அளவே அதுவும் விட்டு விட்டுத்தான் குடிக்க முடிகிறது. ஸிப் செய்தால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ரெகுலராக தொண்டைக்கு திரவம் செல்கிறது. ஆனால் எங்கள் வீடுகளில் காப்பியைக் கூட தூக்கித்தான் குடிக்க வேண்டும் என்று கூறும் பெரிசுகள் உண்டு. ஆகவே நான் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும்போது காப்பி தந்தால் ஸிப் செய்து குடிக்கலாமா என கேட்டுவிட்டுத்தான் செய்வது. கப் அண்ட் சாஸரில் கொடுத்தால் ஸிப் செய்துதான் குடிக்க வேண்டும். அதே கப்பில் தண்ணீர் இருந்தால் அதையும் தூக்கிக் குடிக்கும் பழக்கம்தான் வருகிறது.
அனானிT (12.11.2008 காலை 07.43-லிருந்து அடுத்த 15 நிமிடங்களுக்கு மூச்சுவிடாமல் கேள்வி கேட்டவர் - உங்கள் பெயர் வால்பையனா)?
1. கருணாநிதியின் 'திட்டம்' பலித்து விட்டதுதானே?
பதில்: என்ன திட்டம்? மின்வெட்டுகள் பற்றிய புகாரிலிருந்து விடுபடுவதா அல்லது அவரது குடும்பத்தினரது தொல்லையிலிருந்து விடுபடுவதா, எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
2. 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது' என்ற பழமொழிக்கு சரியான விளக்கம் என்ன?
பதில்: ராமருக்கு திருமணம் செய்ய தசரதர் உத்தேசித்தபோது ராமர் சிவதனுஷை முறித்து சீதையை மணக்கும் உரிமை பெற்றார் என்பதை அறிந்து பழம் நழுவிப் பாலில் விழுந்த சந்தோஷத்தைப் பெற்றார். கூடவே அவரது மற்ற மகன்களுக்கும் திருமணம் நிச்சயமாக, அது நழுவி அப்படியே வாயில் விழுந்தது போலாயிற்று.
3. செய்து கொடுத்த வேலைக்கு காசு கொடுக்காமல் ஓடிய ஆட்களிடம் ஏமாந்த அனுபவம்?
பதில்: இது வரை அவ்வாறு நடந்ததை கடவுள் கிருபையால் ஒன்றிரண்டுக்கு மேல் இல்லை.
4. 'சிங்கம்' என்ற உடன் சமீப காலமாக உங்களுக்கு நினைவுக்கு வரும் கதை?
பதில்: யாரோ ஒரு பதிவர் தன்னை சிங்கமாக எண்ணி பதிவு போட அவரது எதிர்ப்பாளர்கள் அதே சிங்கத்தை அசிங்கம் எனக் கூறி எதிர்ப்பதிவை போட என்ற கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. பிறகு அசிங்கம் பதிவை - அந்த சிங்கம் கண்ணீர் விட்டு அழுததால் - எதிர்ப்பாளர்கள் அதை எடுத்து விட்டதாகக் கேள்வி.
5. உங்கள் 'போலி' நண்பன் எப்படி இருக்கிறான், எங்கே இருக்கிறான்? சமீபத்தில் *(மீண்டும்) சந்தித்தீர்களா?
பதில்: ஒருவர் கீழே வீழ்ந்த பிறகு அவரை மேலும் தாக்கிக் கூற விரும்பவில்லை. இந்த விஷயத்தில் சோ அவர்கள்தான் எனது ரோல் மாடல்.
6. விரும்பிப் படிக்கும் நாளேடு, அரசியல் பத்திரிகை, வாராந்திரப் பத்திரிகை, வாரமிருமுறை பத்திரிகை, மாதப் பத்திரிகை, பெண்களுக்கான பத்திரிகை, காமிக்ஸ், பலான பத்திரிகை?
பதில்: ஹிந்து, துக்ளக், விகடன், ஜூவி, மங்கையர் மலர், குமுதம் சினேகிதி, ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ் பிரெஞ்சு மூலத்தில், மதுக்குடம் (இப்போது அது வருவதில்லை).
7. தம் அடிப்பீர்களா? என்ன பிராண்ட்? சுருட்டு?
பதில்: வருடத்துக்கு 12 சிகரெட் கோட்டா, மாதத்துக்கு ஒன்று என்னும் அளவில். அதுவும் ஒரு மாதம் அடிக்காவிட்டால் அடுத்த மாதத்துக்கு கேரி ஓவர் கிடையாது. சுருட்டு நோ. சிகரெட் ஏதேனும் ஃபில்டர் பிராண்டாக இருத்தல் நலம். (எதுவானாலும் ஓசிதானே அடிக்கப் போகிறாய் எனக் கூறும் முரளி மனோஹர், உண்மை பேசுவதற்காக டோண்டுடம் உதை வாங்கப் போகிறான்)!!!
8. தண்ணி அடிப்பீர்களா? என்ன பிராண்ட்? சுண்டக் கஞ்சி?
பதில்: அவ்வப்போது. பியர், விஸ்கி, ரம், ஜின் எதுவானாலும் பரவாயில்லை. (முரளி மனோஹரை முதலிலேயே எச்சரித்து விட்டேன். ஏன் நானும் பில் தரமாட்டேனா என்ன)?
9. ஒபாமா வந்தால் அவுட்சோர்ஸிங் காலி என்கிறார்களே? உங்கள் மொழிப் பெயர்ப்பு பணிகளும் சேர்த்துத்தானே?
பதில்: ஒரு விஷயம் தெரியுமா? ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வேலைகள் பல இப்போதுதான் அதிகமாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கனடாவிலும் தேவைப்படுகின்றன. மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் proz.com-ல் தமிழ் < > தமிழ் மொழிபெயர்ப்பாளர்களது வரிசையில் உலக் அளவில் என் பெயர்தான் முதல் இடத்தில் உள்ளது. மேலும் நான் 5 மொழிகளில் தீவிரமாக வேலை செய்வதால், என்னைப் பொருத்தவரை கஷ்டம் இல்லை என நினைக்கிறேன், கடவுள் அருளால்.
10. 'ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம்' என்று பார்த்து நொந்து போன தமிழ்த் திரைப்படம்?
பதில்: அஞ்சல் பெட்டி 520, அத்தை மகள். இரு படங்களும் சமீபத்தில் 1970-ல் வந்தன.
11. தமிழ் பத்திரிகைகளில் யாருடைய கேள்வி பதில் பகுதி உங்களுக்கு பிடிக்கும் (துக்ளக்கை தவிர்த்து)?
பதில்: குமுதத்தின் ஒரிஜினல் அரசு அவர்கள். நான் பதிலளிப்பது அவர் இன்ஸ்பிரேஷனே.
12. 'பரதேசி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? (தமிழ் வார்த்தை)
பதில்: வெளியூர்க்காரன் என ஹிந்தியில் பொருள். ஆனால் தமிழில் பார்த்திபன் வடிவேலுவையும், கவுண்டமணி செந்திலையும் மற்றவர்களையும் குறிக்க உபயோகிக்கும் சொல்.
13. மொழி பெயர்ப்பில் அதிக பட்சமாக எவ்வளவு சம்பாதித்திருக்கிறீர்கள்? (ஒரே வேலையில் ஒரே தடவையில்)
பதில்: பெரிய வேலைகளில் எல்லாவற்றையும் முடித்தபின் பணம் வாங்கும் கொள்கை எனக்கு பிடிக்காது. முதலிலேயே அவ்வப்போது செய்த வேலைகளின் அளவைப் பொருத்து பில் போடும் நிலையை பேசி உறுதி செய்து கொள்வேன். மற்றப்படி எவ்வளவு தொகை என்னும் கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. இளம் பெண்களிடம் அவர்கள் வயது என்ன எனக் கேட்கக்கூடாது, இளைஞர்களிடம் சம்பளம் என்ன எனக்கேட்கக்கூடது என்பார்கள் என இந்த 62-வயது இளைஞன் கேள்விப்பட்டிருக்கிறான்.
14. எந்த நடிகையைப் பார்த்து அதிகமாக ஜொள்ளு விட்டிருக்கிறீர்கள்?
பதில்: பத்மினி, தேவிகா, ஜெயமாலினி, ஷீலா, ஜெயந்தி, நீட்டு சிங், ஜீனத் அமன், நக்மா ஆகியோர். காரணம் என்ன என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.
15. கால இயந்திரம் என்ற வஸ்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா?
பதில்: இப்போதைக்கு இல்லை. பிற்காலத்தில் வரலாம். ஆகாய விமானம் கண்டுபிடிக்கும் முன்னால் மனிதன் பறக்கலாம் என்ற கான்சப்டையே கேலி செய்து, நடக்காது என்று உளறியவர்கள் பலர் உளர்.
16. அதென்ன அமெரிக்காவில் மட்டும் பறக்கும் தட்டுகள் அடிக்கடி தென்படுகின்றன?
பதில்: அபரிதமான பத்திரிகை சுதந்திரம். அதே சமயம் ஆகாய விமானங்கள் அந்த நாட்டில்தான் அதிகம் பறக்கின்றன. ஆகவே பல சமயங்களில் பருவ நிலை மாறுதல்களில் பல விமானங்கள் பறக்கும் தட்டு போன்ற தோற்றத்தைத் தந்துள்ளன.
17. வெளிப்படையாக சொல்லவும். திருநங்கைகளை கண்ட அடுத்த விநாடி உங்கள் மனதுக்கு தோன்றுவது என்ன? பரிதாபமா? அருவெறுப்பா? அவர்கள் (பெரும்பாலோர்) செய்யும் அடாவடித்தனத்தால் வரும் கோபமா?
பதில்: விஷயம் தெரிவதற்கு முன்னால் நீங்கள் சொன்ன எல்லா உணர்ச்சிகளும் வெவ்வேறு தருணங்களில் வந்துள்ளன. ஆனால் சமுத்திரம் அவர்கள் எழுதிய புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்ததும் எனது கண்ணோட்டம் மாறியது. தில்லியில் எங்கள் பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தபோது அவர்கள் ஆசி அளிக்க வந்தனர். அவர்களுடன் சாதாரணமாக பேசினேன். அவர்களில் பலர் படித்துள்ளனர். அவர்களைப் பற்றிய புரிதல் அதிகரித்துள்ளது.
18. திருநங்கைகளை 'அலி' என்றும் '9' என்றும் கூப்பிடுவது எதனால்?
பதில்: இக்கேள்விக்கு பதில் தர விரும்பவில்லை, மன்னிக்கவும்.
அனானிL: (12.11.2008 காலை 08.01-க்கு கேட்டவர்)
1. இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அமாவாசை என்றைக்கு வரும், கிரகணம் எத்தனை மணி, விநாடிகளுக்கு வரும் என்று எல்லாம் பஞ்சாங்கம் மூலம் கண்டுபிடித்து விடுகிறோம். ஆனால் நாளைக்கு பெருநாள் உண்டா இல்லையா என்பதை கூட கடைசி விநாடி வரை தெரிந்து கொள்ளாமால் தவிக்கவிடும் சில மதங்களும் இருக்கின்றன. ஆனால் அறிவியலில் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பீலா விடுகிறார்களே. இதைப் பார்த்தால் உங்களுக்கு சிரிப்பாக இல்லை?
பதில்:சந்திரனின் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து செய்வதால் வரும் குழப்பங்களே நீங்கள் சொல்வதற்கு காரணம்.நம்முடையது சூரியனின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. மற்றப்படி இதற்கும் அறிவியலுக்கும் வேறு என்ன சம்பந்தம்? கிரகணம் என்பதே சந்திரன், பூமி மற்றும் சூரியன் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் ஏற்படுகிறது. இந்த நேர்க்கோடு கூட நாம் பூமியில் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் தோற்றமே. அதே போலத்தான் அமாவாசை மற்றும் பௌர்ணமி. அவை வெறும் தோற்றங்கள் பூமியிலிருந்து.
2. தமிழ் ஈழம் குறித்து இசுலாமியப் பதிவர்கள் எதுவுமே எழுதக் காணோமே, கவனித்தீர்களா?
பதில்: அப்படியா, நான் கவனிக்கவிலையே.
3. உளுந்து அப்பளம் பிடிக்குமா, அரிசி அப்பளம் பிடிக்குமா? உ.அ. என்றால் சுட்டதா, பொறித்ததா?
பதில்: சுட்ட உளுந்து அப்பளம், வெந்தயக் குழம்பு சாதத்துக்கு அமிர்தமாக இருக்கும். வீட்டம்மா சுட்டு வைத்த அப்பளத்தை நான் சுட்டு சாப்பிடுவது பிடிக்கும். இது தெரிந்த அவர் சுட்டு வைத்த அப்பளங்களை அவ்வப்போது எண்ணி சரிபார்ப்பதும் தெரியும்.
4. நீங்கள் சுத்த சைவமா? அல்லது அசைவ பார்ட்டியா
பதில்: பதிலளிக்க வேண்டியது செந்தழல் ரவி, வால் பையன் ஆகியோர்.
அனானிM: (12.11.2008 காலை 8.02-க்கு கேட்டவர்)
1. பிராமணர்களை வந்தேறிகள் என்று சொல்லி பிழைப்பை நடத்துபவர்கள் இசுலாமியரைத் தமிழர்கள் என்று கூறுவது 'சில்லறை' தேத்தத்தானே?
பதில்: பிராமணர்களை வந்தேறிகள் எனச் சொல்வது இசுலாமியர் அல்ல. அதே சமயம் புதுக்கல்லூரி மாணவன் டோண்டு ராகவன் இசுலாமியரை தமிழர்கள் அல்ல என்பதை ஒத்துக் கொள்ள மாட்டான். உமறுப்புலவரின் சீறாப்புராணம் படித்திருக்கிறீர்களா? நீதியரசர் இஸ்மாயில் அவர்கள் கம்பராமாயணம் பற்றி எழுதியதை படித்திருக்கிறீகளா?
2. 'அல்லக்கை' - அருஞ்சொற்பொருள் விளக்கம் தருக.
பதில்: என்னைப் பொருத்தவரை தனது தலைவன் “உளறுவதை”யெல்லாம் கையில் ஏந்தி மகிழ்பவர்கள் அல்லக்கைகள். “உளறுவதை” என்று இங்கு குறிப்பிடுவது வேறு இரு வினைச்சொற்களை.
அனானி பிராக்ஸிM (12.11.2008 காலை 08.03-க்கு கேட்டவர்)
1. திருக்குவளை மு. கருணாநிதி (தி.மு.க) கட்சியில் தலைவர் தேர்தலின் மூலமாகத் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறாராமே?
பதில்: நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை. யார் என்ன கூறினாலும் உட்கட்சி தேர்தல் விடாது நடக்கும் கட்சிகளில் திமுக உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.
அனானிG (12.11.2008 காலை 08.06-க்கு கேட்டவர்)
1. Adsense வருமானம் வருகிறதா?
பதில்: இதுவரை வருமான இதன் மூலமாக வருமானம் லேதுதான்.
திருச்சி வேலுச்சாமி:
1. ராஜீவ் காந்தியை கொன்ற கொலைகார நாய்கள் யார் என்று திட்டவட்டமாக நிருபிக்கப் பட்ட பின்பும் கூட அதை திசை திருப்பும் விதமாக சிலர் சு.சுவாமி போன்றோரை குற்றம் சாட்டுவது குறித்து? இதையெல்லாம் contempt of court என்று கொண்டு போக முடியாதா?
பதில்: கொலைகாரர்களைத்தான் கோர்ட் அடையாளம் காட்டியது. நிரபராதிகளைக் காட்டுவது அதன் வேலை அல்ல. அதற்கு விசாரணை கமிஷன்கள் வேண்டும். ஆகவே நீங்கள் கூறும் நீதிமன்ற அவதூறு சட்டம் இந்த விஷயத்தில் பாயாது. வேண்டுமானால் சு.சுவாமி போன்றோர் அவதூறு வழக்கு தொடுக்கலாம் அவ்வளவே.
கிருஷ்ணன்:
1) What made you support Shri Narendra Modi and countries like Israel ? Any incident or influence?
பதில்: மோடியை நான் ஆதரிக்கும் காரணங்கள் இப்பதிவிலும் இப்பதிவிலும் உள்ளன. இஸ்ரேலவர்களை நான் ஆதரிக்கும் காரணம் பூர்வஜன்ம பந்தம்.
2) Can you tell me your most favorite (top 10) Tamil and English works (can be fiction, short story, nonfiction, essays, poems, etc)?
பதில்: 1-7: 7 ஹாரி பாட்டர் புத்தகங்கள்; 8. பா.ராகவனின் “மெல்லினம்”; 9. அனுராதா ரமணனின் “சிறை”; 10. ரமணி சந்திரனின் “வல்லமை தந்துவிடு”.
3) What is your take on Saravana Bhavan's partner's arrest in recent US visa fraud case?
பதில்: வெளிநாடுகளில் உள்ள இந்திய உணவகங்களில் நம்மூர் சமையற்காரர்கள் தேவை. முக்கியமாக தோசை, பரோட்டா மாஸ்டர்கள். அந்த வேலை செய்ய அவர்களது ஆட்களுக்கு வக்கு இல்லையென்றாலும் வைக்கோல்போர் நாய் கதையாக நம்மூர் சமையற்காரர்களை அங்கு வரவிடாமல் அமெரிக்க அரசு தடுப்பது என்ன நியாயம்? ஏதோ நள தமயந்தி படம் பார்ப்பது போல இருந்தது. எனது அனுதாபம் சரவணபவன் ஹோட்டல்காரருக்குத்தான்.
4) Do you think Congress-I has chances of coming back to power in next Lok Sabha elections?
பதில்: கஷ்டம்தேன். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. சொதப்பாமல் இருக்க வேண்டும் என்பதே என் கவலை.
5) Have you read Indira Parthasarathy's novels ? If so, your comments please.
பதில்: குருதி புனல் படித்து உறைந்து போனேன். அதுவும் கடைசி காட்சி. மற்ற நாவல்கள் தந்திரபூமி, மீண்டும் தந்திர பூமி. பொதிகையில் வந்த ராமானுஜர் சீரியல் கூட அவர் எழுதியதை அடிப்படையாக வைத்துத்தான் என அறிகிறேன்.
அனானி (12.11.2008 மாலை 05.41-க்கு கேட்டவர்):
1. ஒரு சொட்டு விந்து என்பது நூறு சொட்டு ரத்தத்துக்கு சமமாமே? உண்மையா? விளக்கவும்.
பதில்: உண்மையல்ல. காலம் காலமாக நிலவும் எல்லா கற்பனைகளும் அறிவியல் பூர்வமானவை அல்ல. அப்படிப்பட்ட ஒரு முழுக் கற்பனைதான், ரத்தம்தான் விந்துவாக மாறுகிறது என்பதும்! ரத்தம் போன்று உடலுக்கு முக்கியமான இன்னொரு திரவம் விந்து என்பதற்கு மேல் இரண்டுக்கும் பொருத்தமில்லை. உடலில் இருக்கும் சிறுநீரும் முக்கியமான திரவம்தான். ஒழுங்காக சிறுநீர் உற்பத்தியாகி வராவிட்டால், ஜீரண உறுப்புகளும் சிறுநீரகமும் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். சிறுநீரும் விந்துவும் ரத்தமும் முக்கியமானவை. ஆனால், ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்ல.
எனவே, விந்து என்பது ரத்தமும் அல்ல; பல சொட்டு ரத்தம் சேர்ந்து உருவானதும் அல்ல! அது உயிரணுக்கள் அடங்கிய ஒரு திரவம். அதில் இருப்பவை அமினோ ஆசிட்கள், சிட்ரேட், என்சைம்கள், சர்க்கரைப் பொருளான ஃபிரக்டோஸ், புரதங்கள், விட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், பாஸ்பேட்டுகள், துத்தநாகச் சத்து போன்றவைதான்.
உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ வைப் பத்திரமாக வைத்திருப்பது, உயிரணு உறைந்துவிடாமல் அதைப் பெண்ணின் யோனிப் பாதை வழியே கருப்பை வரை எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகப் பயன்படுவது, அப்படிச் செல்லும்போது அதைப் பெண் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் கொன்றுவிடாமல் காப்பாற்ற உதவுவது என விந்துவில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் பயனும் உடைய, நுட்பமான பல அம்சங்கள் உள்ளன.
ஒரு சிறுவனின் விதைப் பைகள் தினமும் உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எத்தனை உயிரணுக்கள் தெரியுமா? பல கோடி உயிரணுக்கள்! தினசரி!
அவற்றுடன் இதர சுரப்புகளும் சேர்ந்து, அவை முதிர்ச்சியடைய சில வாரங்கள் பிடிக்கும். முதிர்ந்த நிலையில், இதர இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவங்கள் சேர்ந்து, விந்து சேகரப்பைக்குச் செல்லும் திரவத்தைதான் ‘செமென்’ எனப்படும் விந்து என்கிறோம்.
ஒரு சிறுவனின் உடலில் தினசரி தயாராகும் உயிரணுக்களும் விந்துவும் என்ன ஆகின்றன? சுய இன்பத்தின் மூலம் விந்து வெளியேறலாம். இரவு படுக்கையில் சுகமான கனவுகளின் விளைவாக வெளியேறலாம். இவை இரண்டுமே இல்லாமல், ஒரு சிறுமியின் உடலில் தயாராகும் சினைமுட்டையும், கருப்பையின் உட்புறப் பூச்சும் மாதாமாதம் வெளியேற்றப்படுவது போல, சிறுவனுக்கு இவை இயல்பாக வெளியேற வழிதான் என்ன?
அப்படி எதுவும் இல்லை. விந்துவில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் உடலுக்குள்ளேயே கரைந்து கலந்துவிடுகின்றன. புதிது புதிதாக உயிரணுக்களை சிறுவனின் விதைப் பைகள் தயாரித்து அனுப்ப அனுப்ப... புதிய விந்துவும் தயாராகிக்கொண்டே இருக்கிறது.
உடலுறவிலோ, சுய இன்பத்திலோ, இரவுக் கனவிலோ வெளியேற்றப்படும் விந்துவில் வெறும் ஒரு சதவிகிதம்தான் உயிரணுக்கள் எனப்படும் ‘ஸ்பெர்ம்’ இருக்கிறது. மீதி திரவம் எல்லாம், துணை செய்ய வந்த சுரப்புகள்தான். நன்றி ஞாநி. இந்த விஷயத்தில் "Everything you wanted to know about sex, but were afraid to ask" என்ற தலைப்பில் சமீபத்தில் 1972-வாக்கில் வந்த புத்தகத்தில் இது சம்பந்தமாக இவ்வாறு கூறியிருப்பார்கள். கைமுட்டி அடிப்பவர்களை உங்கள் கேள்வியில் உள்ளதை கூறி பயமுறுத்துவார்கள். ஆகவே இது சம்பந்தமாக கைமுட்டி அடிப்பவர்கள் பயப்படத் தேவையில்லை. சக்தி எல்லாம் வீணாகாது. என்ன, அடிக்கடி கைமுட்டி அடித்தால் உங்கள் காதுகள் கீழே விழுந்து விடும். கடைசி வரிக்கான அடிக்குறிப்பு இவாறு கூறுகிறது. “பயப்படாதீர்கள் இது சும்மா விளையாட்டுக்கு கூறியது”.
அனானி (12.11.2008 இரவு 07.37-க்கு கேட்டவர்):
1. அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா அமெரிக்காவின் பொருளாதாரச் சீர்கேட்டினை சரி செய்துவிடுவேன் என்ற அவரது தேர்தல் வாக்குறுதியை நம்புகிறிர்களா? நடைமுறை சாத்தியமா?
பதில்: பதில் நான் ஏற்கனவே இட்ட இந்தப் பதிவில் உள்ளது.
2. உடல் உழைப்பு சார்ந்த bpo பணிகளை இனி அமெரிக்காவிலே செய்து கொள்ள முயலுவார்கள் போலுள்ளதே.இதனால் நமது பிபிஒ வருமானங்கள் பாதிக்கப்படுமா?
பதில்: என்னதான் இருந்தாலும் இந்தியர்கள் ஒத்துக் கொள்ளும் சம்பளம் அமெரிக்கர்களை பொருத்தவரை ரொம்பக் குறைவே. மேலும் அவ்ர்களது யூனியன்கள் இதெற்கெல்லாம் ஒத்து கொள்ளாது. இப்போதைய நிலையில் American workers have priced themselves out.
3. மென்பொருள் நிறுவனக்களுக்கான வரியை அதிகமாய் உயர்த்தப் போவதாகவும் (யு.எஸ்,ஏ புதிய அரசு) அதனால் வருமான இழப்பை சந்திக்கப் போகும் கம்பெனியில் பணிபுரியும் உழியர்களின் சம்பளவிகிதங்கள் வெகுவாய் குறையும் என்பதையும் அதனால் இந்தியாவிலும் வீட்டு விலைகள் 40-50% குறையும் என்ற தகவல் நம்பலாமா?
பதில்: குறையும் ஆனால் இந்த அளவுக்கு குறையுமா எனத் தெரியவில்லை. சீட்டுக் கட்டு மாளிகை சரிவதுபோல நிலை இப்போது. எந்த வரிசையில் அது சரிகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
4.பலரின் அமெரிக்க கனவுகளை கானல் நீர் ஆக்கிய பெருமை யாருக்கு?
அ. கடன் அட்டை ஆ. வீட்டுக் கடன் இ. பங்குச் சந்தை ஈ. அதிபர் புஷ் உ. தனியார்மயம்
பதில்: ஆ மற்றும் அ இந்த வரிசையில். கடன் திருப்பித் தர இயலாத கபோதிகளுக்கெல்லாம் (சப் பிரைம்) கடன் தந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். நம்மூர்ரில் ஜனார்த்தன் பூஜாரி என்ற முட்டாள் மந்திரி லோன் மேளா நடத்தினதெல்லாம் இதற்கு முன்னால் ஜுஜுபி. கடன் அட்டை அடுத்த வில்லன். நம்மூரிலும் அது பல குடும்பங்களை நாசப்படுத்தியுள்ளது. பங்குச் சந்தை முந்தைய இரண்டின் விளைவுகளுக்கு முன்னால் ஒன்றுமேயில்லை. புஷ் ஒரு கோமாளி, மேலும் என்ன கூறுவது. தனியார்மயம் இருப்பதால்தான் மீண்டும் மீண்டுவரும் வாய்ப்பே உள்ளது. கம்யூனிசமாக இருந்தால் நாடே உலக வரைப்படத்திலிருந்து காணாமல் போவதுதான் நடக்கும்.
5. இந்தியப் பிரதமரிடம் புதிய அதிபர் தொலைபேசியில் பேசாதது பற்றிய சர்ச்சை தொடங்கி விட்டதே, அணு ஒப்பந்தம் தொடருமா?
பதில்: கண்டிப்பாகத் தொடரும். அதில்தான் அமெரிக்காவின் நலனும் உள்ளது. ஒபாமா முட்டாள் இல்லை என நினைக்கிறேன்.
6. குடியரசுக் கட்சியின் அனுதாபிகள் இந்த ஒபாமாவின் வெற்றியை எப்படி கருதுகிறார்கள்? போட்டியாளரின் தோல்விக்கு முக்கிய காரணம் யார்?
பதில்: மாற்றம் தேவை என அமெரிக்கர்கள் கருதியுள்ளனர். அவ்வளவுதான். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்பு இதுதான்.
7. உங்கள் சீடர் வால்பையன் அயல் நாட்டோரை ஒட ஒட விரட்டவேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளாரே, இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: அயல் நாட்டார் நம் வேலைகளை பறிப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் எந்த அயல் நாட்டினரைப் பற்றி பேசுகிறார் எனத் தெரியவில்லை. இக்கேள்வியை அவருக்கு திருப்பி அனுப்புகிறேன்.
8. உங்கள் நண்பர் பதிவர் அதியமான் அவர்கள் உலகமயமாக்கத்தை பற்றி மிக உயர்வாய் எழுதுவாரே. இப்போதைய அமெரிக்காவின் பரிதாபமான நிலை (வீடுகளை துறந்தும், தொலைத்தும் சாலைகளிலும், கார்களிலும் குடும்பத்தோடு வாழ்வோர் )ரூபாய் 2.75 லட்சம் கோடி, மக்களின் சேமிப்பு பணத்தை வெளிவிட்டும் தள்ளாடும் இந்திய பங்குச் சந்தையின் நிலை - இவைகளை பார்த்தபிறகும் - புலி வால் பிடித்த நாயர் போல - உங்கள் கருத்து?
பதில்: அதியமானை விடுங்கள். நான் என்னைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அவருடையதும் என்னுடையதும் இந்த விஷயத்திலும் இன்னும் பல விஷயங்களும் முற்றும் ஒத்து போகின்றன. அவர் யார் கண்ணிலும் படாமல் இருந்தவரை டோண்டு ராகவ்ன்தான் அதியமான் எனக் கூறினவர்கள் இருந்தனர். அப்படித்தான் தானும் நினைத்ததாக முரளி மனோஹர் கூறுவது இந்த இடத்தில் சம்பந்தமில்லாதது. நிற்க. உலகமயமாக்கல் வந்தாகி விட்டது. ஒருவனும் அதை எதிர்த்து ஒரு மயிரையும் பிடுங்க ஏலாது என்பதுதான் உண்மை. அது வந்ததால்தான் நமது பிளாக், பதிவு எல்லாம் என்பதைக் கூட நினைவில் கொள்ளாது பேசுவது அசட்டுத்தனம்.
9. மதிப்புக்குரிய நிதி அமைச்சர் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள உபரி நிதியை (60 % வரை) பொதுத்துறை வங்கிகளில் சேமிக்க வேண்டும் என்று சொல்லும் போது மற்ற நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களையும் (அரசு ஆதரவு இருந்திருக்குமேயானால் இது நடந்திருக்காது) காப்பாற்றி கரைசேர்க்க நினக்காமல் பங்குகளை விற்க நினைப்பது ஒரு கண்ணில் வெண்னெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போலில்லையா? (வங்கிகள் அமைச்சரின் செல்லக் குழந்தையா?)
பதில்: நட்டமடையும் ஒவ்வொரு அரசு நிறுவனமும் தங்கள் முதலீட்டைப் போல பலமடங்கு பணத்தை ஏப்பம் விட்டுள்ளன. அவற்றை குற்றுயிரும் குலையுயிருமாக வைத்திருப்பதுதான் கொடுமை. கருணைக்கொலைதான் சரியானது.
10. செல்பேசி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு இல்லை என்ற தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜா அவர்களின் விளக்கத்தை நிதி அமைச்சரும் பிரதம அமைச்சரும் ஏற்றுக் கொண்ட பிறகும் இடதுசாரிக் கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயமா?உண்மையில் நடந்தது என்ன? இனி என்ன நடக்கும்?
பதில்: வேலிக்கு ஓணான் சாட்சி என்று இடதுசாரிகள் கூறலாமே. என்ன நடந்தது என்பது விளங்கவில்லை. இன்னும் குழப்பத்தில்தான் இருக்கிறது. எது நடந்திருந்தாலும் அதனால் மக்களுக்கு நஷ்டம் இல்லாதிருந்தால் சரிதான்.
ரமணா:
1. உங்கள் பதிவாளர் நண்பர்களில் உங்களை அதிகமாய் விமர்சனம் செய்யும் பதிவாளார் யார்? உங்கள் கருத்து அவரது செயல்பாடு சார்ந்து?
பதில்: முரளி மனோஹர். :)))))))
2. பதிவுலகத்தில் உங்களை போற்றுபவர்களில் (followers-36) உங்களுக்கு நெருக்கமானவ்ர் யார்? தங்கள் கருத்து அவரது செயல்பாடு சார்ந்து?
பதில்: (followers-36) எல்லோரும் என்னைப் போற்றுபவர்கள் என நான் கூறினால் அப்படியெல்லாம் இல்லையடா டோமரு எனக் கூறும் முரளி மனோஹர்தான் சரி. இந்தப் பெரிசு என்ன எழுதிக் கிழிக்கப் போகிறது என்பதைப் பார்க்கக்கூட அவர்கள் நினைத்திருக்கலாம். பதிவர்களில் நெருக்கமானவர் என நான் கருதுவது பெங்களூர் அருண்குமார், என்றென்றும் அன்புடன் பாலா, அதியமான், ஜெயகமல், சந்திரசேகர், வால்பையன், ம்யூஸ் ஆகியோர்.
3. தி,மு.க தலைவர் புகழ்பாடும் பதிவர்களில் உங்களுக்கு பிடித்த பதிவர் யார்? (லக்கிலுக் தவிர்த்து) அவரது பதிவுகளில் எது சிறந்தது?
பதில்: ஏன் லக்கிலுக்கை விட வேண்டும்? ஏனெனில் அவரளவுக்கு திமுக தலைவரின் புகழ் பாடும் பதிவர்கள் எனக்கு தெரிந்து இல்லை. அவரது பதிவுகளில் நான் ஆவலுடன் படிப்பது காண்டு கஜேந்திரன் பதிவுகளே.
4. அ.தி.முக கொள்கைகள் பரப்பும் பதிவுகளில் தாங்கள் விரும்பிப் பார்த்து பாராட்டும் பதிவாளர் யார்?(மாயவரத்தான் நீங்கலாக)
பதில்: இலைக்காரன். ஆனால் அதுவும் லக்கிலுக்கே எனக் கூறுகிறார்கள்.
5. இன்றய பதிவுலகில் தினம் 10,000 ஹிட்டுகளுடன் இருப்பதாய் சொல்லபடும் சாருநிவேதாவின் பதிவை தினம் பார்ப்பதுண்டா? அவர் தன்னை நோக்கிய விமர்சகர்களை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்கிறார் போலுள்ளதே? அவருக்கு உங்கள் ஆலோசனை?
பதில்: சாருவின் வலைப்பதிவை எப்போதாவதுதான் படிப்பேன். மற்றப்படி அவருக்கு அறிவுரை? ஒரு கல்யாணத் தரகர் பையனின் ஜாதகத்தை பெண்ணின் தந்தையிடம் கொடுத்து விட்டு கூறினாராம், இந்தப் பையனிடம் 64 கல்யாண குணங்களில் இரண்டை தவிர மீதி எல்லா குணங்களும் பரிபூரணமாக இருக்கின்றன என்று. அவை என்னென்ன எனக் கேட்டதற்கு பதிலாக கிடைத்தது “சொன்னாலும் புரியாது, தனக்கானும் தெரியாது”.
புரட்சித் தமிழன்:
1. நேற்று நடந்த சட்டக்கல்லூரி மாணவர்களிடையே மோதலுக்கு காரணம் ஜாதிய ரீதியான இட ஒதுக்கீட்டுக் (மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இல்லாமாலிருப்பது) கொள்கையும் ஒரு காரணமா?
பதில்: நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது ஒரு சாக்கு.
2. கல்லுரிகளில் முற்படுத்தப்பட்ட மாணவர்களின் விகிதாச்சாரம் மிகவும் குறைந்து (less than 10 %) விட்ட நிலயில், இரு பிரிவினருக்குள் மோதல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்திவிடுமே? இது ஏன் புரியவில்லை இவர்களுக்கு?
பதில்: இதில் பிற்படுத்தப்பட்ட முற்படுத்தப்பட்ட என்றெல்லாம் பிரித்து பார்க்க இயலாது. பொதுவாக சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களை இந்திய இறையாண்மைக்கு அப்பாற்பட்டவர்களாக நினைத்து கொள்கிறார்கள் எனப்படுகிறது. இவர்கள்தான் பிற்காலத்தில் வக்கீல்களாக, நீதிபதிகளாக வரப்போகிறார்கள் என்பதை நினைத்தால் கவலையாகவே உள்ளது.
3. இது மாதிரி மோதல்கள் முற்படுத்த மக்களிடம் ஏற்பட்டதாய் தகவல்கள் உண்டா? இல்லை என்றால் அவ்ர்கள் கற்ற கல்விதானே அவர்களை கட்டுப்படுத்துகிறது?
பதில்: மேலே சொன்ன கேள்விக்கான பதில்தான் இங்கும்.
4. இது உண்மையென்றால் கல்லுரியில் பட்டம் பெற்று, பின்னர் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்களுக்கு இந்த நிதர்சனம் ஏன் புரியவில்லை?
பதில்: துரதிர்ஷ்டவசமாக கல்வி பெறுவதற்கும் தனிமனித ஒழுக்கத்துக்கும் சம்பந்தமில்லாமல் போவது ஒரு கசப்பான நிஜமே.
5. இங்கே அடித்து கொள்ளும் (கொல்லும்) சகோதரர்களை நல்வழிப்படுத்துவோர் யார்?
பதில்: தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்க வேண்டும். தமிழக அரசு செய்யும் என்னும் நம்பிக்கை இல்லை. மதுரையில் தினகரன் ஆஃபீசில் நடந்த வன்முறைக்கே இன்னும் சரியான நடவடிக்கை இல்லை. அது பற்றி கேள்வி கேட்ட நிருபரை நீதாண்டா கொலைகாரன் எனத் தமிழ்மானத் தலைவர் பொங்குகிறார். என்ன செய்ய?
சேதுராமன்:
1. What is your view about the cops' (who were keeping a watch at the Law College) statement that they could not intervene in the fight between two factions, as there were no complaints from the College authorities? Is there such a law?
And the cops were happily looking at the fight! And what an ironic coincidence that this happened just when you posted 'Sattam oru Kazhuthai'?
பதில்: முதலில் சட்டென்று தோன்றும் பதில் இதுதான். நான் எப்போது சட்டம் ஒரு கழுதை பற்றி இடுகை இட்டிருந்தாலும் அதே நேரத்தில் ஏதாவது ஓரிடத்தில் - ஏன் பல இடங்களிலும் கூட - இம்மாதிரி காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் இதுதான் டிஃபால்ட்டான பொதுவிதி. ஆகவே இதில் ஐரானிக் தற்செயல் என்று எதுவும் இருக்க முடியாது. நிற்க. கல்லூரி வளாகத்துள் போலீஸ் நிர்வாகம் அழைக்காமல் செல்லக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது என்றுதான் கேள்விப்படுகிறேன். ஆனால் அதே சமயம் கொலை மற்றும் கொலை முயற்சி என்பது நடக்கும்போது அவற்றை போலீசார் யாரும் கூறுவதற்கு காத்திராமல் தடுக்க தாமாகவே முயற்சி செய்திருக்க வேண்டும். They are what we call cognizable offences. அதுவும் சட்டமே. இம்மாதிரி இருசட்டங்கள் மோதும்போது முன்னுரிமை இரண்டாவதாக நான் சொன்னதற்காகத்தான். போலீஸ் நடவடிக்கை எடுத்து பிரின்சிபாலையும் ஸ்டேஷனுக்கு தள்ளிச் சென்று முட்டிக்கு முட்டி தட்டியிருந்தாலும் பரவாயில்லை. முதற்கண் அவர் அப்பதவிக்கு தகுதியற்று போகிறார் என்பதுதான் நிஜம்.
அனானி (13.11.2008 காலை 10.26-க்கு கேட்டவர்):
1. பாதிக்கப்படுவோரை காப்பாற்ற அரசால் இயக்கபட்டுள்ள கீழே சொல்லப்பட்டுள்ள சட்டங்களால் அப்பாவிகள் பாதிக்கப் படுகிறார்கள் என்று வலம் வரும் செய்திகளில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? செயல்கள் மிகைப்படுத்தப்படுகிறதா? விடிவுகாலம் உண்டா?
அ. தீண்டாமை ஒழிப்பு சட்டப் பாதுகாப்பு விதிகள்; ஆ. வரதட்சணை ஒழிப்புச் சட்டப் பாதுகாப்பு விதிகள்; இ. பாலியல் பலாத்கார தடுப்பு விதிகள்; ஈ. வன்கொடுமை பாதுகாப்பு விதிகள்
பதில்: அவற்றை நிறைவேற்ற வேண்டியவர்களே அவற்றுக்கு எதிரான மனோபாவனையில்தான் பல சமயங்களில் உள்ளனர். மதுரா என்ற பெண்ணின் மேல் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்சாதியினர் ஆகவே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை அவர்கள் பாலியல் வன்முறை செய்யவில்லை என திருவாய் மலர்ந்தருளியுள்ளார் ஒரு நீதிபதி. வரதட்சிணை வழக்குகளில் ஆண் இன்ஸ்பெக்டர் பெண் தரப்பினரிடம் புருஷன் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பான் என சப்பைக்கட்டு கட்டுவது ஆகிய விஷயங்களில் ஆணாதிக்க மனோபாவம்தான் மிகுந்து இருக்கிறது. அதே நேரத்தில் இச்சட்டங்களை பொய்க்காரணங்களுக்காக பிரயோகிக்கிறவர்களும் உள்ளனர் என்பதையும் மறக்கவியலாது. எல்லாமே கேஸ் பை கேஸ் பார்க்க வேண்டியுள்ளது.
சுவர்ணலதா விஜய்:
1. ஏன் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அதிகம் விவாகரத்து நடைபெறுகிறது?
பதில்: விவாகரத்து என்பது கேஸ் பை கேஸாகத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் சொல்வதை நான் இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். ஏதேனும் இது சம்பந்தமாக புள்ளி விவரம் படித்திருக்கிறீர்களா?
2. 60 வயதுக்கு மேல் மனைவியை பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?
பதில்: இதில் சொந்த அனுபவத்திலிருந்து கூறுவதானால் மனத்தளவில் இன்னும் 26 வயதே ஆன என் கண்ணுக்கு என் மனைவி அதே 25 வயது பெண்ணாகத்தான் தோன்றுகிறார். எங்கள் திருமணம் சமீபத்தில் 1974-ல் நடந்தது.
3. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் பெரும்பாலும் உறவினர் மற்றும் நண்பர்களாலேயே இந்நிலைக்கு ஆளாகின்றனர். ஏன்?
பதில்: ஏனெனில் வாய்ப்பு என்பது அவர்களுக்குத்தான் அதிகம். அதுவும் அம்மாதிரி உறவுகள் எல்லாமே வன்புணர்வாகாது. சமயங்களில் பெண்ணும் இணங்கியிருப்பாள். (ஆனால், மேஜர் ஆகாத பெண்ணுடன் உறவு அவள் சம்மதத்துடன் நடந்தால் கூட அதையும் சட்டப்படி வன்புணர்வு (statutory rape) என்று கூறுவது வேறு விஷயம்).
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா? முகம்மது இஸ்மாயில் என்பவர் பல கண்டிஷன்களுடன்
18 கேள்விகளைக் கேட்டுள்ளார். அவர் விருப்பத்திற்கு இணங்க அவற்றைத் தனிப்பதிவாக போட்டுள்ளேன். அது இன்றிரவு வெளியாவதற்கு செட்டிங் செய்யப்பட்டுள்ளது. தானே பிளாக்கரால் வெளியிடப்படும். இது தகவலுக்காக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
15 hours ago
55 comments:
//. எந்த நடிகையைப் பார்த்து அதிகமாக ஜொள்ளு விட்டிருக்கிறீர்கள்?
பதில்: பத்மினி, தேவிகா, ஜெயமாலினி, ஷீலா, ஜெயந்தி, நீட்டு சிங், ஜீனத் அமன், நக்மா ஆகியோர். காரணம் என்ன என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள். //
> > > > > > > > > > > >
> > > > > > > > > > > >
ஹா! ஹா!! ஹா !!!
//அனானிT (12.11.2008 காலை 07.43-லிருந்து அடுத்த 15 நிமிடங்களுக்கு மூச்சுவிடாமல் கேள்வி கேட்டவர் - உங்கள் பெயர் வால்பையனா)?//
4. 'சிங்கம்' என்ற உடன் சமீப காலமாக உங்களுக்கு நினைவுக்கு வரும் கதை?
பதில்: யாரோ ஒரு பதிவர் தன்னை சிங்கமாக எண்ணி பதிவு போட அவரது எதிர்ப்பாளர்கள் அதே சிங்கத்தை அசிங்கம் எனக் கூறி எதிர்ப்பதிவை போட என்ற கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. பிறகு அசிங்கம் பதிவை - அந்த சிங்கம் கண்ணீர் விட்டு அழுததால் - எதிர்ப்பாளர்கள் அதை எடுத்து விட்டதாகக் கேள்வி.//
இப்போதுதான் வால்பையனும் சிங்கப் பதிவரும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாய் உள்ளார்கள் என்பது பதிவுலகத் தகவல்.
இந்தக் கேள்விகள் அவர் கேட்டிருக்க முடியாது . மேலும் அவர் இப்படி அனானியாய் வரமாட்டார்? இது அவரே சொல்லியுள்ளார்
>>1. ஒரு சொட்டு விந்து என்பது நூறு சொட்டு ரத்தத்துக்கு சமமாமே? உண்மையா? விளக்கவும்.
பதில்: உண்மையல்ல. காலம் காலமாக நிலவும் எல்லா கற்பனைகளும் அறிவியல் பூர்வமானவை அல்ல. அப்படிப்பட்ட ஒரு முழுக் கற்பனைதான், ரத்தம்தான் விந்துவாக மாறுகிறது என்பதும்! ரத்தம் போன்று உடலுக்கு முக்கியமான இன்னொரு திரவம் விந்து என்பதற்கு மேல் இரண்டுக்கும் பொருத்தமில்லை. உடலில் இருக்கும் சிறுநீரும் முக்கியமான திரவம்தான். ஒழுங்காக சிறுநீர் உற்பத்தியாகி வராவிட்டால், ஜீரண உறுப்புகளும் சிறுநீரகமும் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். சிறுநீரும் விந்துவும் ரத்தமும் முக்கியமானவை. ஆனால், ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்ல.
எனவே, விந்து என்பது ரத்தமும் அல்ல; பல சொட்டு ரத்தம் சேர்ந்து உருவானதும் அல்ல! அது உயிரணுக்கள் அடங்கிய ஒரு திரவம். அதில் இருப்பவை அமினோ ஆசிட்கள், சிட்ரேட், என்சைம்கள், சர்க்கரைப் பொருளான ஃபிரக்டோஸ், புரதங்கள், விட்டமின் சி, சிட்ரிக் ஆசிட், பாஸ்பேட்டுகள், துத்தநாகச் சத்து போன்றவைதான்.
உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ வைப் பத்திரமாக வைத்திருப்பது, உயிரணு உறைந்துவிடாமல் அதைப் பெண்ணின் யோனிப் பாதை வழியே கருப்பை வரை எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகப் பயன்படுவது, அப்படிச் செல்லும்போது அதைப் பெண் உடலில் உள்ள எதிர்ப்பு அணுக்கள் கொன்றுவிடாமல் காப்பாற்ற உதவுவது என விந்துவில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கமும் பயனும் உடைய, நுட்பமான பல அம்சங்கள் உள்ளன.
ஒரு சிறுவனின் விதைப் பைகள் தினமும் உயிரணுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எத்தனை உயிரணுக்கள் தெரியுமா? பல கோடி உயிரணுக்கள்! தினசரி!
அவற்றுடன் இதர சுரப்புகளும் சேர்ந்து, அவை முதிர்ச்சியடைய சில வாரங்கள் பிடிக்கும். முதிர்ந்த நிலையில், இதர இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவங்கள் சேர்ந்து, விந்து சேகரப்பைக்குச் செல்லும் திரவத்தைதான் ‘செமென்’ எனப்படும் விந்து என்கிறோம்.
ஒரு சிறுவனின் உடலில் தினசரி தயாராகும் உயிரணுக்களும் விந்துவும் என்ன ஆகின்றன? சுய இன்பத்தின் மூலம் விந்து வெளியேறலாம். இரவு படுக்கையில் சுகமான கனவுகளின் விளைவாக வெளியேறலாம். இவை இரண்டுமே இல்லாமல், ஒரு சிறுமியின் உடலில் தயாராகும் சினைமுட்டையும், கருப்பையின் உட்புறப் பூச்சும் மாதாமாதம் வெளியேற்றப்படுவது போல, சிறுவனுக்கு இவை இயல்பாக வெளியேற வழிதான் என்ன?
அப்படி எதுவும் இல்லை. விந்துவில் இருக்கும் வெவ்வேறு பொருட்கள் உடலுக்குள்ளேயே கரைந்து கலந்துவிடுகின்றன. புதிது புதிதாக உயிரணுக்களை சிறுவனின் விதைப் பைகள் தயாரித்து அனுப்ப அனுப்ப... புதிய விந்துவும் தயாராகிக்கொண்டே இருக்கிறது.
உடலுறவிலோ, சுய இன்பத்திலோ, இரவுக் கனவிலோ வெளியேற்றப்படும் விந்துவில் வெறும் ஒரு சதவிகிதம்தான் உயிரணுக்கள் எனப்படும் ‘ஸ்பெர்ம்’ இருக்கிறது. மீதி திரவம் எல்லாம், துணை செய்ய வந்த சுரப்புகள்தான். நன்றி ஞாநி. இந்த விஷயத்தில் "Everything you wanted to know about sex, but were afraid to ask" என்ற தலைப்பில் சமீபத்தில் 1972-வாக்கில் வந்த புத்தகத்தில் இது சம்பந்தமாக இவ்வாறு கூறியிருப்பார்கள். கைமுட்டி அடிப்பவர்களை உங்கள் கேள்வியில் உள்ளதை கூறி பயமுறுத்துவார்கள். ஆகவே இது சம்பந்தமாக கைமுட்டி அடிப்பவர்கள் பயப்படத் தேவையில்லை. சக்தி எல்லாம் வீணாகாது. என்ன, அடிக்கடி கைமுட்டி அடித்தால் உங்கள் காதுகள் கீழே விழுந்து விடும். கடைசி வரிக்கான அடிக்குறிப்பு இவாறு கூறுகிறது. “பயப்படாதீர்கள் இது சும்மா விளையாட்டுக்கு கூறியது”. >>
ராகவன் ஐயா,இது தவறான பதில்.
இன்றைய அறிவியல் விளக்க முடியாத சில விஷயங்கள் உலகில் உண்டு.
அறிவியல் ரீதியாக விந்து வீணாவதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்பது இன்றைய அறிவியல் அறிந்த ஒன்று;ஆனால் இன்றைய அறிவியல் இன்னும் அறியாத விதயங்களில் ஒன்றாக இது இருக்கலாம் அல்லவா?
மில்கி வே என அறிவியல் அறிந்த உண்மையை சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க வாசகர் அண்டப் பகுதியின் உண்டப் பெருக்கம்;அளப்பரும் காட்சி எனச் சொல்லிச் சென்றார்.
அது போலவே விந்து சமாச்சாரங்களைப் பற்றியும் திருமந்திரம் பேசுகிறது;100 ரத்தத்துளிகள் சேர்ந்து ஒரு துளி விந்து உருவாகிறது என்பது விந்து வீணாக்கப் படக் கூடாது என்ற கருத்துப் பற்றியே கூறப் பட்டது.
வீணாக்கப் படாத பட்சத்தில் விந்து மீண்டும் உடலில் கலந்து உடலை உரமாக்குகிறது.
விந்து வீணாக்காதவர்களின் உடல் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டு வீரியம் பெற்று விளங்குகிறது;மாறாக கரமைதுனப் பழக்கம் இருப்பவர்களின் உடல் விரைவில் நொந்து வீரியமற்றுக் கெடுகிறது.அவர்களின் குழி விழுந்த கண்களும் பஞ்சடைத்த விழிகளும் டொக்கு விழுந்த உடலும் இதை எளிதாக உணர்த்தும்.
எனவேதான் விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற மொழிவழக்கு வந்தது.
மாறாத பெண்ணுடன் அளவான நீண்ட கால உடலுறவின் மூலம் ஆண் பெண்ணின் சுக்கில சுரோனிதங்கள் ஒத்திசைந்து உடல் ஆக்கம் பெறுகிறது.
(உடலுறவின் போது பெண்ணின் திரவங்கள் சில சிறிய அளவில் ஆணிலும் கலக்கின்றன;எனவேதான் மேற்கூறிய கூற்று ஏற்பட்டது)
தரவுகளுக்கு திருமந்திரம்,சித்தர் பாடல்கள்,சித்பவானந்தரின் எதிர்கால இந்தியா போன்ற புத்தகங்களை நாடலாம்.
ஏற்கனவே பல பிழையான கருத்தாங்கங்களால் நொந்து வரும் இளையர்களை மேலும் நசிய வைக்கும் இது போன்ற கருத்துக்களை அறுபது வயது கடந்த நீங்கள் கூறாமலிருப்பது அனைவருக்கும் ஆரோக்கியமான ஒன்று.
//விந்து வீணாக்காதவர்களின் உடல் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டு வீரியம் பெற்று விளங்குகிறது;மாறாக கரமைதுனப் பழக்கம் இருப்பவர்களின் உடல் விரைவில் நொந்து வீரியமற்றுக் கெடுகிறது.அவர்களின் குழி விழுந்த கண்களும் பஞ்சடைத்த விழிகளும் டொக்கு விழுந்த உடலும் இதை எளிதாக உணர்த்தும்.//
மன்னிக்கவும், நான் இதை ஒத்துக் கொள்ளவில்லை.
எனக்கு அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அனானிT (12.11.2008 காலை 07.43-லிருந்து அடுத்த 15 நிமிடங்களுக்கு மூச்சுவிடாமல் கேள்வி கேட்டவர் - உங்கள் பெயர் வால்பையனா)?//
இடைவிடாமல் சரக்கு வேண்டுமானால் அடிப்பேன். இப்படி மூச்சு விடாமல் எனக்கு கேள்வி கேக்க தெரியாது.
என்னை நீங்கள் இப்படி கேக்கலாமா?
நான் அனானியாக கேள்வி கேட்பவனா?
//பத்மினி, தேவிகா, ஜெயமாலினி, ஷீலா, ஜெயந்தி, நீட்டு சிங், ஜீனத் அமன், நக்மா ஆகியோர். காரணம் என்ன என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.//
மும்தாஜ் விடபட்டுள்ளது
//திருநங்கைகளை 'அலி' என்றும் '9' என்றும் கூப்பிடுவது எதனால்?//
நான் கேள்விபட்டது, உண்மை என்ன என்று எனக்கும் தெரியாது.
அந்த எண், ஒரே நேரத்தில் இரண்டு அர்த்தம் கொடுக்கும், அதாவது தலைகீழாக பார்த்தால் 6 தெரியும். அதனால் அப்படி கூப்பிடுவதாக ரயிலில் பயணம் செய்யும் போது ஒருவர் சொன்னார்.
//நீங்கள் சுத்த சைவமா? அல்லது அசைவ பார்ட்டியா
பதில்: பதிலளிக்க வேண்டியது செந்தழல் ரவி, வால் பையன் ஆகியோர்.//
இவர் சுத்த அசைவ பார்ட்டி
//திருக்குவளை மு. கருணாநிதி (தி.மு.க)//
புதிய செய்தி எனக்கு
ஆனாலும் தேர்தல் சிரிப்பு வருகிறது.
//அடிக்கடி கைமுட்டி அடித்தால் உங்கள் காதுகள் கீழே விழுந்து விடும். //
உலகில் 99% சுய இன்பம் அனுபவிப்பவர்கள்.அனுபவித்தவர்கள்
மீதி 1% சுய இன்பம் அனுபவித்ததில்லை/அனுபவிப்பதில்லை என்று பொய் சொல்பவர்கள்
:)
//உங்கள் சீடர் வால்பையன் அயல் நாட்டோரை ஒட ஒட விரட்டவேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளாரே, இதற்கு உங்கள் பதில் என்ன?//
ஹா ஹா ஹா
//மும்தாஜ் விடபட்டுள்ளது//
அவர் ஆகியோரில் அடக்கம்.
//என்னை நீங்கள் இப்படி கேக்கலாமா?
நான் அனானியாக கேள்வி கேட்பவனா?//
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி படம் ஒன்றில் “பேசுவது கிளியா” என்று ஆரம்பிக்கும் பாடல் வரும். அதில் பாரிவள்ளல் மகனா, சேரனுக்கு உறவா என்றெல்லாம் கேள்விகள் வரும். பொருள் என்ன? இவர்கள் எல்லாம் எம்.ஜி.ரை. ஞாபகப்படுத்துகின்றனர் என்பதே. ஆகவே அவ்வளவு கேள்விகளை ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ஒவ்வொன்றாக சளைக்காமல் கேட்டவர் உங்களை எனக்கு ஞாபகப்படுத்தினார். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்கள் சீடர் வால்பையன்//
//உங்கள் நண்பர் பதிவர் அதியமான்//
டோண்டுவிடம் ஒத்து போனால் நண்பர்.
ஒத்து போக விட்டால் சீடரா?
என்ன கொடுமை சரவணா இது!!
//செல்பேசி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு இல்லை என்ற தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜா அவர்களின் விளக்கத்தை நிதி அமைச்சரும் பிரதம அமைச்சரும் ஏற்றுக் கொண்ட பிறகும் //
நிதி அமைச்சரும், பிரதம அமைச்சரும் ஏற்று கொண்டால் போதுமா?
மக்கள் என்ன சொம்பையா?
என்னிடம் விளக்கம் சொல்ல சொல்லுங்கள்.
ஏன் ஏலம் விடவில்லை என்று
நானும் ஓட்டு போட்டிருக்கிறேன்
//எது நடந்திருந்தாலும் அதனால் மக்களுக்கு நஷ்டம் இல்லாதிருந்தால் சரிதான்.//
நஷ்டம் தான், இப்பொது அதிக விலைக்கு இந்த அலைவரிசையை வாங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனம் குறைந்த விலைக்கா சேவை தருவான்.
அதை குறைந்த விலைக்கு விற்ற காரணம் என்ன எனபது தான் மில்லியன் டாலர் கேள்வி?
//இப்பொது அதிக விலைக்கு இந்த அலைவரிசையை வாங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனம் குறைந்த விலைக்கா சேவை தருவான்.
அதை குறைந்த விலைக்கு விற்ற காரணம் என்ன எனபது தான் மில்லியன் டாலர் கேள்வி?//
இரு வாக்கியங்களும் முரண்படுவது போல உள்ளதே. அதிக விலைக்கு வாங்கினான் ஆனால் குறைந்த விலைக்கு விற்றார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வரதட்சணை ஒழிப்புச் சட்டப் பாதுகாப்பு விதிகள்;//
எனது நண்பனின் மனைவி வேண்டுமென்றே இப்படி ஒரு பொய் கேஷ் போட்டார். நண்பன் போலிஸ் ஸ்டேஷன் போனான். உண்மையை சொல்ல சொல்லுங்கள் மீண்டும் இவளோடு செர்ந்து வாழ்கிறேன் என்றான்.
அவளும் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்க அம்மா தான் இப்படி சொல்ல சொன்னார்கள் என்று சொல்லிவிட்டாள்.
பார்த்தீர்களா, இப்படி அம்மா பேச்சை கேட்டு பொய் சொல்பவள் நாளை நான் கலை செய்ய வந்தேன் என்று கூட பொய் கேஷ் கொடுப்பாள். அதனால் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று விவாகரத்து வாங்கி விட்டான்,
இப்போது நிம்மதியாக இருக்கிறான்.
///இரு வாக்கியங்களும் முரண்படுவது போல உள்ளதே. அதிக விலைக்கு வாங்கினான் ஆனால் குறைந்த விலைக்கு விற்றார்கள்?
//
குறைந்த விலைக்கு அரசிடம் வாங்கிய ஒரு நிறுவனம் அதை வெளிநாட்டு நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்று விட்டது
//குறைந்த விலைக்கு அரசிடம் வாங்கிய ஒரு நிறுவனம் அதை வெளிநாட்டு நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்று விட்டது//
அம்மாதிரி உரிமத்தை மாற்ற இயலுமா? அதை கூட கவனிக்காது செயல்பட்டிருந்தால் அவ்வாறான தவற்றுக்கு பொறுப்பானவர்களை எத்தால் வேண்டுமானாலும் அடிக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உதச்சாலும் திருந்தாத ஜென்மங்கள என்ன பண்ணலாம் சார்?
சரி, அடுத்த வார கேள்விக்கு போவோமா?
கருணாநிதி நிர்வாகத் திறமையானவர் என்று அல்லக்கைகள் தனக்கு தானே பெருமை பீற்றிக் கொள்ளும். ஆனால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் வன்முறைகளும், கரண்ட் கட் போன்ற மக்களை பாதிக்கும் பிரச்னைகளும் அதிகம் என்பது உண்மையா?
உங்களுக்கு பிடித்த சிற்றுண்டி போன்டாவா, பக்கோடாவா? (உங்களை போண்டா என்று சிங்கம் & அல்லக்கைகள் சொல்கிறதே, அவர்களை பக்கோடா (தேங்க்ஸ் : மெட்ராஸ் டு பாண்டிச்சேரி) என்றால் ஒப்புக் கொள்வீர்களா?
மந்த்ராவை (தமிழ் நடிகை) உங்களுக்கு பிடிக்காதா? பரந்த மனம் கொண்டவராமே?
சட்டக்க கல்லூரி பிரச்னை நடந்த அன்று கருணாநிதி சட்டசபை பக்கம் தலைகாட்டாமல் ஓடி விட்டாரே?
""உலகமயமாக்கல் வந்தாகி விட்டது. ஒருவனும் அதை எதிர்த்து ஒரு மயிரையும் பிடுங்க ஏலாது என்பதுதான் உண்மை. அது வந்ததால்தான் நமது பிளாக், பதிவு எல்லாம் என்பதைக் கூட நினைவில் கொள்ளாது பேசுவது அசட்டுத்தன""
இது என்ன பிதற்றல் உலகமயத்துக்கும் இன்டெர்நெட்டுக்கும் என்ன சம்பந்தம்.
உலகமயம் = வர்தகம்
இணையம் = தொழில்நுட்பம்
உலகமயம் எனும் வர்த்தக முறையை கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்தே கம்ப்யூட்டர் மற்றும் தொலை தொடர்பு ஆராய்ச்சி நடைபெருகின்றது. உண்மையைச் சொன்னால் உலகமயம் தான் தொழில்நுட்பத்தின் முதுகிலேரி சவாரி செய்கிறதே ஒழிய நீர் குறிப்பிடுவது போல அல்ல.
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஜெ. தைரியமாக தனிப்பட்ட நபர்களின் பெயரை நீக்கி உத்தரவிட்டது போல அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பஸ்ஸ்டாண்டுகள் போன்றவற்றுக்கு தனிப்பட்ட தலைவர்கள், நபர்களின் பெயரை நீக்கினால் என்ன?:
1+1=3
Is this correct?
கருணாநிதியின் (தெரிந்த) வாரிசுகளில் உங்களை கவர்ந்தவர் யார், ஏன்?
பாத்திமா பாபு என்றவுடன் உடனடியாக உங்கள் நினைவுக்கு வரும் அரசியல் பிரபலம்?
கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பீர்களா? அடிக்கடி வாயில் வந்து விழும் கெ.வா. என்ன?
இத்தனை கேள்விகள் திடீரென வரத் தொடஙும் என்று எதிர்பார்த்தீர்களா? யார் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று மண்டை காய்கிறதா?
வருஷத்துக்கு எவ்வளவு income tax கட்டுறீங்க? எவ்வளவு ஏமாத்துறீங்க?
ஜெ. இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை ஒரு லட்சம் மின் கட்டணம் கட்டுகிறார் என்றால் அதில் என்ன தவறு? கருணாநிதி 15,000 தான் கட்டுகிறார் (ஒரு வீட்டில் மட்டும்) என்றால் அதில் கொக்கி போட்டது போகத் தான் மீதி என்றால் ஒரிஜினல் எவ்வளவு இருக்கும்?
நீங்க எவ்வளவு கரண்ட் சார்ஜ் கட்டுறீங்க?
அடுத்தது கிளிண்டனின் பெண்ணுக்கு தான் வாய்ப்பாமே?
ஏன்டா இந்தியாவில் வந்து பொறாந்தோம் என்று என்றைக்காவது நினைத்ததுண்டா?
வாரத்துக்கு எத்தனை தடவை **** வைத்துக் கொள்வீர்கள்? எத்தனை முறை தன் கையே தனக்குதவி?
உங்கள் வலைப்பூ பின்னூட்டமிடுபவர்களை(யும்) சைபர் போலீஸ் கண்காணித்து வருகிறாதா? (A.சிங்கம் அப்படி சொல்லிக் கொள்கிறாதே?) சைபர் போலீஸ் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார்களா என்ன?
வூட்டுக்காரம்மா தவிர வேறு யாரையாவது 'கண்டுக்கிட்டது' உண்டா? 'துணைவி' எல்லாம் உண்டா?
உங்களுக்கு நெருக்கமான பதிவர்கள் லிஸ்டில் உங்கள் நெருங்கிய நண்பர் மாயாவரத்தான் பெயர் காணோமே? ரெண்டு பேரும் டுக்கா விட்டு விட்டீர்களா?
// வால்பையன் said...
//உங்கள் சீடர் வால்பையன் அயல் நாட்டோரை ஒட ஒட விரட்டவேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளாரே, இதற்கு உங்கள் பதில் என்ன?//
ஹா ஹா ஹா
November 14, 2008 1:37 PM
mr tailboy please read this
// வால்பையன் said...
இதில் எனக்கும் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஏனென்றால் நான் ரொம்ப சின்னபையன்
அமெரிக்கா பற்றி பின்னூட்டமிட்ட நண்பருக்கு மட்டும் சிறு கருத்து பரிமாற்றம்.
அமெரிக்காவின் புதிய பொறுளாதாரக் கொள்கை இந்தியாவில் BPO வேலை செய்பவர்களுக்கு எதிராக அமையலாம் என்பது உண்மை தான்.
ஆனாலும் ஒபாமாவின் இந்த முயற்சி அமெரிக்காவின் நலன் கருதியே என்பது என் கருத்து.
உள்ளூர்காரனுக்கே வேலையில்லை வெளியூர்காரனுக்கு அவன் ஏன் வேலை கொடுக்க வேண்டும்.
தாராளமயமாக்கல் கொள்கையுடய ஒரு நாடு இப்படி திரும்பியிருப்பது ஆச்சரியமான விசயம் தான்.
அதே போல் நாமும் மற்ற நாட்டுகாரர்களை திரும்பி நிற்க வைத்து பெட்டக்ஷிலேயே அடித்து துரத்துவது சாலச் சிறந்தது.
November 11, 2008 8:57 PM
37 Followers of Dondus dos and donts You are following this blog.
வால்பையன் said...
//உங்கள் சீடர் வால்பையன்//
//உங்கள் நண்பர் பதிவர் அதியமான்//
டோண்டுவிடம் ஒத்து போனால் நண்பர்.
ஒத்து போக விட்டால் சீடரா?
என்ன கொடுமை சரவணா இது!!
fol·low·er (fl-r)
n.
1. One who subscribes to the teachings or methods of another; an adherent: a follower of Gandhi.
2. A servant; a subordinate.
3. A fan; an enthusiast.
4. One that imitates or copies another: A successful marketing campaign will have many followers.
5. A machine element moved by another machine element.
அகராதி அப்படித்தான் சொல்லுகிறது !
""பதில்:சந்திரனின் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து செய்வதால் வரும் குழப்பங்களே நீங்கள் சொல்வதற்கு காரணம்.நம்முடையது சூரியனின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது"" இது நீங்கள் ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதில். பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டில் மட்டும் சித்திரை, வைகாசி போன்ற மாதப் பிறப்புகள் போன்றவை மட்டுமே சூர்யனின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. தீபாவளி இன்னும் மற்ற எல்லா பண்டிகைகள், தமிழகத்தைத் தவிர்த்து மற்ற பல இந்திய மாநிலங்களின் மாதப் பிறப்புகள், யாவுமே சந்திரனின் அடிப்படையாக கொண்டவை.
வரும் 2050 ஆண்டு தீபாவளி, கந்த சஷ்டி, விஜய தசமி, திருவண்ணாமலை தீபம் ஆகியவை (ஆங்கில மாதம்)எந்தத் தேதிகளில் வரும் என்று இப்போதே சொல்லட்டுமா?
ராஜ் சுப்ரமணியன்
Respected dondu sir,
I am shocked to read this comment by your good friend .
please read this ( comments) and give a fitting reply.
http://www.luckylookonline.com/2008/11/blog-post_8505.html
Ramakrishanahari.
சொன்னது நான் தான் நண்பரே!
நான் சிரித்தது சீடன் என்று சொன்னதற்க்காக
அந்த ஜோக் நல்லா இருந்தது
அன்புள்ள டோண்டு ராகவன் அய்யா அவர்களுக்கு,
நான் வலையுலகிற்க்கு புதியவன்.... எனக்கு வழி காட்டும்படி தங்களை கேட்டுக்கொள்கிறேன்.... சிறு சிறு அறிவுரைகள், TIPS எனக்கு உதவியாய் இருக்கும்.....
இது என் மின்னஞ்சல் முகவரி
balajigurusamy@gmail.com
Respected dondu sir
Some questions are asked by some friends with provocative intention.
Some of the questions are with insulting remark.Please do something to stop such unwanted questions.
Ramakrishnahari
// வால்பையன் said...
சொன்னது நான் தான் நண்பரே!
நான் சிரித்தது சீடன் என்று சொன்னதற்க்காக
அந்த ஜோக் நல்லா இருந்தது
follower -அர்த்தம் பார்க்கவும் நண்பரே.
நீங்க விளக்கமா சொல்லியிருக்கலாம் நண்பரே!
ஆனா எனக்கு புரியனுமே, எனக்கு தான் பீட்டர் வராதே!
போகஸ் (bogus இல்லை) லைட் என்றால் என்ன? சரியான விளக்கம் தெரியுமா?
//போகஸ் (bogus இல்லை) லைட் என்றால் என்ன? சரியான விளக்கம் தெரியுமா?//
காரியம் நடக்கும் இடம் சரியாகத் தெரிய வேண்டும் என்று விளக்கு பிடிப்பார்கள். அவ்வாறான நோக்கத்துக்கு பயன்படும் விளக்கே ஃபோகஸ் லைட் என்பது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Respected dondu sir
please answer the following questions asked by me for this post(14-11-2008)
ramakrishanhari.
Anonymous said...
1.BJP LEADER ADVANI TODAY MET ACTOR RAJNI AND DISCUSSED FOR 30 MINUTES ABOUT FUTURE COURSE OF ACTION.WILL BJP,RAJINI AND J.LALITHA FORM AN ALLIANCE IN TAMIL NADU?
2.WHAT WILL HAPPEN TO TAMIL NADU GOVT IF SRILANKA REFUSES TO END THE WAR IN SRILANKA( EVEN AFTER THE REQUEST OF CENTRAL GOVT)?
3.IT IS TOLD DMK LEADER IS VERY MUCH WORRIED ABOUT THE ACTION OF SOME OF HIS CLOSE ASSOCIATES IN CONNECTION WITH LIBERATION TIGERS SUPPORT
IS IT TRUE?
4. IT IS LEARNT THAT SOME OF THE CONGRESS LEADRS AND MLAS ARE TRYING FOR AN ALLIANCE WITH ADMK? WILL IT BE POSSIBLE?
5.WHICH IS BETTER ALLAINCE HAVING BRIGHT CHANCE OF WINNING AND FOR THE WELFARE OF TAMIL NADU AT PRESENT
SET1
ADMK+MDMK+PMK
ADMK+BJP+MDMK+RAJINI
ADMK+PMK+CONGRESS
ADMK+CPI+CPIM+MDMK
SET 2
DMK+PMK+CONGRESS
DMK+CONGRESS+VIJAYKANTH
DMK+BJP+RAJIN
DMK+CPI+CPM+BMK+CONGRESS
SET 3
VIJAY KANTH+RAJINI+S.KUMAR+CPI+CPM
SET 4
MDMK+CPI+CPM+PMK+OTHERS
RAMAKRISHANAHARI
November 12, 2008 10:27 PM
//காரியம் நடக்கும் இடம் சரியாகத் தெரிய வேண்டும் என்று விளக்கு பிடிப்பார்கள். அவ்வாறான நோக்கத்துக்கு பயன்படும் விளக்கே ஃபோகஸ் லைட் என்பது.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி டோண்டு ஐயா.
//காரியம் நடக்கும் இடம் சரியாகத் தெரிய வேண்டும் என்று விளக்கு பிடிப்பார்கள். அவ்வாறான நோக்கத்துக்கு பயன்படும் விளக்கே ஃபோகஸ் லைட் என்பது.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
:))))))))))))))
ஜனநாயகத்தில் புரட்சி என்ற கருத்தாக்கம் நிலைக்குமா ?
புரட்சியின் மூலமே ஜனநாயகம் பிறக்கும் என்ற கருத்து பதிலாகாது.
Post a Comment