ராமசந்திரன் உஷா அவர்கள் எழுதிய கதை தன் கதைக்கருவை தழுவி எழுதப்பட்டது என்றும், அதன் மூலம் ராமச்சந்திரன் உஷா சில நூறு ரூபாய்கள் சம்பாதித்துள்ளார் போகட்டும் என பெரியதனமாக அக்கதாசிரியருடன் பேசிக் கொண்ட சேட்டை அடிப்படையாக வைத்து ஒரு பெண்மணி பதிவிட்டிருந்தார். அதைக்கண்டு திகைப்படைந்த உஷா அவர்கள் ஒரு பதிவு போட்டார்.
சம்பந்தப்பட்ட இருகதைகளையும் நான் பார்த்தேன். துளிக்கூட ஒற்றுமை கிடையாது. இது என்ன கூத்து எனக் கேட்டால் இரு கதைகளுமே சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவரின் கதை என்று காமெடி செய்கிறார். என்னவோ அந்த கதைக்கரு இவரது ஏகபோக அகில உலக காப்புரிமை பெற்றது போல. அதை வைத்து கொண்டு எப்படி ராமச்சந்திரன் உஷா கதையை காப்பி அடித்து சில நூறு ரூபாய்கள் பெற்று கொண்டார் என்று கூறலாம் என்பதற்கு இடிபோன்ற மௌனமே பதில். உஷாவின் சிறுகதை பதிவில் அப்போதே தான் பின்னூட்டம் இட்டதாகவும் அதை உஷா மறந்ததால்தான் இத்தனை கலாட்டா என்று வேறு பழியை அவர்மீதே திருப்புகிறார். அதற்காகத்தான் இத்தலைப்பு.
பிறகு மன்னிப்பு பதிவுகள் என்னும் கூத்து ஆரம்பம். Adding insult to injury என்று ஆங்கிலத்தில் கூறியதற்கு சம்பந்தப்பட்ட இரு பதிவர்களுமே ராமசந்திரன் உஷா விஷயத்தில் அடித்த கூத்து சரியான உதாரணம். இந்த அழகில் தான் ஆங்கிலத்தில் கூறியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை என மிழற்றுகிறார் ஒருவர். இனிமேலும் யாராவது அவர் பதிவில் கமெண்ட் இட்டால்: Official warning - I would consider anyone posting comments again on this topic, a closed matter now, as trespassing under US law.
ஆங்கிலம்தான் தகராறு என நினைத்தேன், சைபர் சட்டம் கூடவா? அது என்ன கமெண்ட் போட்டாலே சைபர் சட்டம் பாய்ந்துவிடுமாமா?
சரி, முயற்சி செய்யுங்கள். ஆல் தி பெஸ்ட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
22 hours ago
10 comments:
//என்று கூறலாம் என்பதற்கு இடிபோன்ற மௌனமே பதில்//
"இடிபோன்ற மௌனம்". இடி அப்படினாலே தடார் மடார்னு sound வரும் எனக்கு இந்த சொற்றொடர் புரியல அதனால விளக்கம் கொடுங்க
டோண்டு சார், மிக முக்கியமான விஷயம், கதை ஆகஸ்டிலேயே செலக்டானதாய் எனக்கு
கடிதம் வந்துவிட்டது. பத்திரிக்கையிலும் அறிவிப்பு வந்தது. இதை பல முறை சொல்லியும்,
செளகரியமாய் மறந்துப் போகிறது.
அதை ஆங்கிலத்தில் mixed metaphor என்று கூறுவார்கள். ஒன்றுக்கொன்று முரண்பட்ட இருவிஷயங்களை போடுவதும் ஒரு வித மொழிவிளையாட்டே.
இப்படி பார்க்கலாம். இடி எல்லோர் கவனத்தையும் கவர்வது போலவே இந்த மௌனமும் கவர்ந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதில் உடனே கொடுத்தால்
வாழ்த்துவோம் உங்களை!
1.திருமங்கலத் தேர்தல் முடிவு எதைக்காட்டுகிறது?
2.அடுத்தும் திமுக ஆட்சிதானா?
3.கலைஞரின் குடும்ப ஒற்றுமைக்கு கிடத்த வெற்றியா?
4.ஒன்றுபட்டால் உண்டு இடைத் தேர்தலில் வெற்றி,அதுவும் யாரும் எதிர்பார்க்காத வெற்றி?
5. மதுரை அஞ்சாநெஞ்சன் அழகிரி சொல்லி அடித்தாரே? அது எப்படி?
6.மீண்டும் அழகிரி-ஸ்டாலின் பலப்பரிட்சைக்கு வாய்ப்பு உருவாகுமா?
7.சன்டீவி-கலைஞர் டீவி கூட்டணியின் முன்னால் ஜெயாடீவியின் ஜம்பம் இனி பலிக்குமா?
8.மருத்துவர் ஐயா மீண்டும் வந்தால் கலைஞர் என்ன செய்வார்?
9.விஜய்காந்தும்,சரத்தும் அதிமுக ஓட்டைத்தான் பிரித்துள்ளார்களா?
10.மதிமுக ஒட்டும் கோபத்தில் திமுகவுக்கு விழுந்தது போல் உள்ளதே?
11.சரத்துக்கு இது தேவையா?
12.அரசாண்ட தேவரின மக்கள் மீண்டும் கலைஞரின் பின்னாலா?
13.ஜெ இனி என்ன செய்வர்?
14.கம்யுனிஸ்டுக்கள் இனி எங்கே போவார்கள்?
15.இலவசங்களின் வெற்றியா?
16.இது நல்லதிற்கா?
17.திமுக,அதிமுக இரண்டு பேரும் கொடுத்ததை ,மக்கள் வாங்கிக் கொண்டார்களே?
18.ஓட்டு சதவிகிதம் இவ்வளவு(88 %) எப்படி ?அதுவும் ஒரு இடைத்தேர்தலில்?
19.தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் இந்தத் தடவை அதிகமில்லையா?
20.திமுக செலவழித்த தொகை கோடியில்?(பிள்ளை பிறந்ததற்கு இனாமாய் கொடுத்தார்களே பணம் -கறியும் சோறும் -விருந்து செலவு)
21.அதிமுகவின் துட்டும் போச்சே?
22.எல்லோர் கண்ணிலும் மண்ணைத்துவுவதில் வெற்றி பெற்றது யார்?
23. அடுத்து காங்கிரஸ் என்ன செய்யும்( சத்யமூர்த்திபவன் தாக்குதல் சம்பந்தமாக)?
24. இனி இலங்கை தமிழர் பிரச்சனை?
25.திருமங்கலத் இடைத் தேர்தல் இன உணர்வுப் பாசத்தோடு, அவசர அவசரமாய் ஜெயலலிதாவுக்கு சலுகை செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷால் திணிக்கப் பட்டது எனும் திராவிடக் கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றிய உங்களின் பதில்
டோண்டு சார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அண்மையில் ஐம்பதுகளில் நான் கூட
'ஒரு ரூபாய்' என்ற தலைப்பில் ஒரு
கதை எழுதி அது 'கல்கண்டு' பத்திரிகை யில் பிரசுரம் ஆனது! என் தலைப்பைக் காபி பண்ணி விட்டார்கள் என்று நான்
கூற முடியுமா?
டோண்டு சாருக்கும் மற்ற எல்லா
வலை நண்பர்களுக்கும் பொங்கல்//
புதுத் தமிழ்ப் புத்தாண்டு (மு.க.)
வாழ்த்துக்கள்!!!
//I would consider anyone posting comments again on this topic, a closed matter now, as trespassing under US law.//
இதுக்கு என்ன அர்த்தம்,
அமெரிக்காவுல பின்னூட்டம் போடக்கூடாதுன்னு சட்டம் இருக்குதா?
மனிதர்கள் தானே முழி பறிப்பார்கள், இபோ குதிரை கூட குழி பறிக்குதா?
அமெரிக்கா என்ற இங்கிலிஸ் வெள்ளைக் குதிரை உலக பொருளாதாரத்தை கீழே தள்ளி குழியும் பறிக்குதே?
ஒரேடியாய் உலகநாடுகளுக்கு சமாதியா?
may the sun radiate peace ,prosperity and happiness in your life ... on PONGAL and always
ராகவன் சார்,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!
அன்புடன்,
விஜய்
Post a Comment