அனானி (120 கேள்விகள் கேட்டவர்):31. ஒபாமாவின் அதிரடி ஆட்சிபற்றி ஒரு வரியில் உங்கள் விமர்சனம்?பதில்: இப்போதைக்கு கருத்து சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை.
32. காங்கிரஸ் ஆட்சிபற்றி ஒருவரியில்?பதில்: ஐயோ
33. கலைஞரது ஆட்சிபற்றி ஒர் வார்த்தையில்?பதில்: ஐயையோ.
34. அரசுகள் வழங்கும் பென்சன் செலவு வரும் 10 ஆண்டுகளில் வேலைபார்க்கும் மாதச் சம்பள செலவைவிட கூடும் போது என்னவாகும்?பதில்: பென்சன் உசர உசர சம்பளமும் உசருமே. நீங்க சொல்லும் நிலை எப்படி வருமாம்?
35. ஆளாளுக்கு பூமி வெப்பமேறலை சரி செய்யப் போகிறேன் என மரங்களை நட தடபுடல் பண்ணினார்களே? ரிசல்ட்?பதில்: யாரெல்லாம் பண்ணினார்கள்?
36. தற்போது கொடுத்து சிவந்த கரம் யாருடையது?பதில்: அப்படி யாரும் எனக்கு தெரியவில்லையே.
37. தேன் பானைக்குள் கைவிட்டவன் புறங்கை நக்குவது புதிதல்ல -சொன்னவர் (அரசியல்வாதி)யார்? உண்மையில் நடப்பது என்ன?பதில்: சமீபத்தில் 1984 தேர்தலிலேயே அதை கூறித்தானே கலைஞர் அழுவாச்சி சீன் எல்லாம் போட்டார்!
38. மணல் கொள்ளை, மரக் கொள்ளை, கல்விக் கொள்ளை இதில் எது முந்துகிறது இப்போது? பதில்: சீசனுக்கேற்ற கொள்ளை.
39. இலவச வேட்டி சேலை வழங்குவது மானம் காக்கும் செயலா அல்லது?பதில்: அதில் வந்த ஊழலாம் மானம் போனது மட்டுமே நடந்தது.
40. நல்லாட்சியின் மாண்பு என்ன?பதில்: தேனை மலருக்கு வலிக்காமல் தேனி எடுப்பது போல வரிவிதிப்பு இருக்க வேண்டும் என கௌடில்யர் கூறியுள்ளார்.
41. சுதந்திர இந்தியாவின் நிரந்தரக் குருடன், நிரந்தரச் செவிடன், நிரந்தர முடவன், நிரந்திர ஊமை, நிரந்தர உணர்வற்றவன் யார்?பதில்: எல்லாமே வாக்காளர்தான் என சில அதைரியமாக உணரும் சமயங்களில் தோன்றுகிறது.
42. அரசு/தனியார் வங்கிகளில் போடும் பணம் எந்த இலக்கு வரை (லிமிட்) பாதுகாப்பானது? (வங்கிகளுக்கு அமெரிக்கா நிலை வந்தால்)பதில்: ஒரு வங்கிக் கணக்குக்கு ஒரு லட்சம் ரூபாய் என கேள்விப்படுகிறேன்.
43. வங்கி லாக்கரில் வைத்துள்ள மதிப்பு மிகு பொருட்கள் திருடு போனால்?பதில்: அவற்றை இன்ஷ்யூர் செய்திருந்தால் கிடைக்கும் தொகை மட்டுமே கிடைக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் லாக்கரில் வைத்திருப்பது பற்றி எங்குமே விவரம் கேட்பதுமில்லை கொடுப்பதுமில்லை. பிறகு எந்த அடிப்படையில் நஷ்ட ஈடு தருவதாம்?
44. ஒரு பக்கம் அரசுத்துறை வங்கிகளின் பங்கு விற்பனை மறு பக்கம் அரசின் பங்குத் தொகை கூட்டல் (செண்ட்ரல்,யுகோ,விஜயா வங்கி)இது ஏன்?( இதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் எங்கே வருகிறார்)பதில்: எனக்கும் புரியவில்லையே.
45. தங்கம் எங்கு போய் நிற்கும் ((ஆன்லைன்(வால்பையன்) புண்ணியத்தால்)) பதில்: இது பற்றி எனக்கு அறிவெல்லாம் லேது.
46. கம்பெனிகள் திரட்டும் டெபாசிட்களுக்கு இன்சுரன்ஸ் பாதுகாப்பு உண்டா?(deposit insurance corporation of india)பதில்: These deposits are parri passu with unsecured liablities என்றுதான் அறிகிறேன். கம்பெனி திவாலாகும் பட்சத்தில் டிபாசிட்டுகளை திரும்பத் தருவதற்கான முன்னுரிமை ரொம்பவும் கடைசியில் உள்ளது.
47. 25 % 30% வட்டிக்காக தனது வாழ் நாள் சேமிப்பையெல்லாம் தனியார் நிதி நிறுவனங்களில் போட்டு ஏமாந்தவர் நிலை இன்று?பதில்: ரொம்ப பரிதாபமே. பனகல் பார்க்கில் நடக்கும் பொதுக்கூட்டங்களே கதி.
48. தேக்குமர வளர்ப்புத் திட்டங்களின் இன்றைய நிலை?பதில்: கிணற்றில் போட்ட கல் என்பது பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா, அதுதான் இது.
49. மக்களின் பேராசை குறைந்துள்ளதா?பதில்: நாய் வால் நிமிர்ந்து விட்டதா?
50. உங்களின் நெருங்கிய உறவினர்கள்/நண்பர்கள் இந்த லிஸ்டில் உண்டா?(deposited heavy amount in private companies and lost all)பதில்: ராயப்பேட்டை பெனிஃபிட் ஃபண்ட், கோத்தாரீஸ் ஆகிய கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பலரை நான் அறிவேன்.
51. இப்போ சென்னையில் பெனிபிட் பண்ட் கம்பெனிகள் நடமாட்டம் உண்டா?பதில்: சில இருக்கின்றன.
52. இலவசம்,மான்யம் யாரால் எப்போது தொடங்கி வைக்கப் பட்டது?பதில்: சரித்திரத்தின் இருள் நிறைந்த கடந்த காலத்திற்கு அல்லவா போய் தேட வேண்டியிருக்கும்.
53. இந்த உலகில் அதிசயங்களுக்குள் பேரதிசயமாய் திகழ்வது எது?பதில்:
நச்சுப்பொய்கை யட்சன் இதே கேள்வியை தரும புத்திரனை கேட்க, அவர் பதிலளிக்கிறார், உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.
54. தமிழ்நாட்டுக்கு திருப்பூர் போல் ஆந்திராவுக்கு எது?பதில்: தெரியவில்லையே. நண்பர் அதியமானை கேட்கலாம் என நினைத்து அவருக்கு ஃபோன் போட்டால் அவர் கிட்டவில்லை.
55. இப்போ நம்ம மில்கள் எல்லாம் ஆந்திராவை நோக்கியாமே?பதில்: ஏன், ஏதேனும் மின்சார பிரச்சினையாமா?
56. தாராளமயமாக்கலுக்குப் பின் கிராமங்களின் பொருளாதார வளர்ச்சி, நகரம் போலுள்ளதா?பதில்: தமிழகத்தின் பல பகுதிகளுக்கு காரில் செல்பவன் என்னும் முறையில் பார்த்தேன், கிராமங்களில் தார்ச்சாலைகள் அதிகம் தென்படுகின்றன. ஆட்டோக்கள் புழங்குகின்றன. கண்டிப்பாக தாராளமயமாக்கத்தின் பலன்கள் அங்கும் ஊடுறுவியுள்ளன.
57. பிராமணியத்தை எதிர்ப்பவரின் எண்ணிக்கை கணிசமாய் குறைந்துள்ளதா?பதில்: எல்லாத்துக்கும் பாப்பானை திட்டுபவர்க்ளை பார்ப்பனரல்லாதவர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதை பார்க்கிறேன்.
58. தமிழ் நாட்டில் உடையாத அரசியல் கட்சி ஏது?பதில்: சொல்லிப்போமே காங்கிரஸ் என்று. ஏதோ கற்பனையாச்சும் பண்ணுவோமே.
59. பெரிய பொறுமைசாலி, மிகுந்த சகிப்புத்தன்மை இவைகளுடன் வாழும் அரசியல்வாதி யார்? வாழ்ந்து மறைந்த அரசியல்வாதி யார்? வருங்காலத்தில் இவர்கள இருவரையும் மிஞ்சுபவர் யாரும் உளரோபதில்: நல்ல வேலை தந்தீர்கள். ஒவ்வொருவரையாக நினைத்து பார்த்து ரிஜெக்ட் செய்தே ஓய்ந்து விட்டேன். யாரும் தேறவில்லையே. ஆளை விடுங்கள்.
(மன்னிக்கவும், மீதி கேள்விகள் அடுத்த பதிவுகளுக்கான வரைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன)
அனானி (19.02.2009 பகல் 12.56-க்கு கேட்டவர்):
1. இளங்கோவன், வாசன் போன்ற மத்திய அமைச்சர்கள் இதுவரை தமிழ்நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ என்ன செய்துள்ளனர்? அவர்கள் துறையில் கடந்த 4 ஆண்டுகளில் என்ன நடக்கிறது என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா? இதுபோல தானே ராதிகா செல்வி, ரகுபதி போன்றோரும்? அன்புமணி, வேலு, பாலு, சிதம்பரம், ராசா தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் சும்மாத்தானே?பதில்: செயல்படும் அமைச்சர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதுதானே பொது நிலை. இங்கு மட்டும் ஏதேனும் விதிவிலக்கா என்ன?
2. மாலன், சாரு நிவேதிதா, ஞாநி, இரா.முருகன் போன்ற பலரும் உங்களை விட 5 அல்லது 7 வயதே சிறியவர்கள். இவர்கள் எல்லோரும் இளமையுடன் காட்சியளிக்கின்றனரே? இவர்களிடம் டிப்ஸ் கேட்டதுண்டா?பதில்: ஏன் கேட்க வேண்டும். எனக்கென்ன குறைச்சல், அதே இளமையான எண்ணங்களுடன்தானே இருந்து வருகிறேன்? மேலும் நான் டை (dye) எல்லாம் போட என் வீட்டம்மா என்னை அனுமதிப்பதில்லை.
3. உங்கள் வீட்டில் ஜெயலலிதாவின் சிறந்த திட்டமான - மழைநீர் சேகரிப்புத்தொட்டி கட்டியுள்ளீரா ? அதனால் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதா?பதில்: மிகவும் நல்ல முறையில் அது நங்கநல்லூர் முழுக்க நிறைவேற்றப்பட்டதில் ஓரளவு ஒரே ஒரு முறை நல்ல மழை பெய்தாலும் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் விர்ரென ஏறி விடுகிறதே. தண்ணீர் சுவையும் நன்றாகவே உள்ளது.
4. பேரன் பேத்திகளுடன் விளையாட நேரம் ஒதுக்குவீர்களா? அவர்கள் லெவலுக்கு இறங்கி அவர்களுடன் நேரம் போக்க முடிகிறதா?
பதில்: இல்லை, ஏனெனில் பேரன் பேத்திகள் இல்லை.
5. ஈழத்தமிழர்கள் தத்தளித்துக்கொண்டும், முத்துக்குமார் தியாகம் செய்த போதிலும், தானுண்டு வாராவாரம் ஓசி பாசில் புது படம் பார்த்து ப்ளாகில் விமர்சனம் - யாரு மனசுல யாரு - முதல் காதல் - முதல் முத்தம் என பதிவுகள் போடுவதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் இல்லையா ?பதில்: சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள். அவை உண்மையாகவும் இருக்கலாம்.
6. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஹிண்டுவின் ஸ்போர்ட்ஸ் எடிட்டராக, கிரிக்கெட் எடிட்டராக இருந்த (அசாருதீனின் மேட்ச் ஃபிக்ஸிங் சமயத்தில் ஹிண்டுவை விட்டு வெளியேற்றப்பட்ட) ஆர்.மோகன் தற்போது டெக்கான் க்ரோனிகிளின் சென்னை பதிப்பு ஆசிரியராக ஆகியிருக்கிறாரே? படிக்கிறீரா?பதில்: ஸ்போர்ட்ஸ் செய்திகளெல்லாம் நான் படிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்ட நபரை பற்றி கேள்விப்பட்டதில்லை. எது எப்படியானாலும் டெக்கான் க்ரானிக்கள் எல்லாம் வாங்குவதில்லை.
7. ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார் மகன்கள் திருமணத்தில் ஜெ. வாழ்த்திப்பேசியது சரி. சோ எதற்கு இந்தக் கூட்டத்தில் வாழ்த்திப் பேச போனார்? ஒரு சீரியல் ஸ்லாட்டுக்காக இவ்வளவா?பதில்: அழைப்பு வந்து போயிருக்கலாம் அல்லவா? அதற்கும் சீரியல் ஸ்லாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
8. டெக்கான் கிரோனிக்கிள் தேர்தல் கணிப்பில் அதிமுகவுக்கு 15 சீட்கள் கிடைக்குமாமே ? ஆக அடுத்த மத்திய அரசுக்கு தலைவலிதானே?பதில்: தலைகால் தெரியாமல் ஆடி, எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் தேடித் தருவதில் ஜெயும் சரி, கலைஞரும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
9. காதலர் தினத்தில் மனைவியும் காதலியுமான வாழ்க்கைத் துணைக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள்?பதில்: குமரன் சில்க்ஸில் ஒரு பட்டுப் புடவை, காதலர் தினத்துக்கு முந்தைய நாளன்று அவரது நட்சத்திர பிறந்த நாளுக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தாயார் சன்னிதியில் திருமஞ்சனம், ஆங்கில பிறந்த தேதியன்று திங்களூர், திட்டை, திருமயிச்சை லலிதாம்பிகை கோவில்கள் விஜயம், ஆகியவை. மற்றப்படி
காதலர் தினம் பற்றி நான் எழுதிய இப்பதிவைப் பாருங்களேன்.
சேதுராமன்:1. வைக்கோலுங்க சாரி வக்கீலுங்க செய்யறது சரியா?பதில்: இல்லவே இல்லைதான், ஆனால் என்ன செய்வது?
2. அவங்க சட்டத்துக்கு அப்பாற்பட்டவங்களா?பதில்: கண்டிப்பாக இல்லை. ரிங் லீடர்களது சன்னதை பிடுங்குவதுதான் சரியான தண்டனை.
3. உச்ச நீதிபதி பேச்சிலும் கொஞ்சம் வெண்டைக்காயும் விளக்கெண்ணையும் வாடை அடிக்கிறதே? வ்க்கீல்களை ஆதரித்துத்தான் அவர் பேச வேண்டுமா? மு.க். உண்மையிலேயே உண்ணாவிரதம் தொடங்குவாரா, அல்லது வழக்கம் போலக் கூத்துதானா?உச்ச நீதிபதியை விடுங்கள். கேஸ் அவர் முன்னால் வந்தால் தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூட இப்படி பட்டும் படாமல் பேசியிருக்கலாம். ஆனால் ராமதாஸ் அவர்கள் கருணாநிதி அவர்களது லேட்டஸ்ட் உண்ணாவிரதம் பற்றி பேசியதை பாருங்கள். அது இதோ:
ராமதாஸ் கூறியதாவது: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.
தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.
ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.
இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
நன்றி தினமணி (24.02.2009)
4. முதலமைச்சர் திருவாயைத்திறந்து ஆஸ்கார் அவார்ட் தம்பி மதத்தைப் பற்றித்தான் பேச வேண்டுமா? சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் அவரால் தாக்குப் பிடிக்க முடியாதா?பதில்: ஆஸ்கார் அவார்ட் வந்தது தமிழகத்துக்கே பெருமை. அதில் போய் அனாவசியமாக மதத்தை புகுத்துவது ஒரு வக்கிரமான செயலே.
5. புலிகளின் உண்மை ஸ்வரூபம் இப்போது நன்றாகத் தெரிகிறதே, போர் நிறுத்தம் வேண்டும், ஆனால் நாங்கள் ஆயுதம் கீழே போட மாட்டோம் என்றவுடன்!! புலிச்சார்பு கட்சிகளும் தமிழ் பத்திரிகைகளும் உண்மையிலேயே தமிழர்களின் நலம் கருதுவார்களாயின், புலித் தம்பிகளுக்கு அறிவுரை சொல்லுவார்களா?பதில்: அகதிகளோடு அகதியாக கரும்புலியை அனுப்பி கொல்பவர்கள் இருக்கும்போது எல்லோரையும் சந்தேகத்துடனேயே பார்ப்பதும் தவிர்க்க முடியாதுதானே. எங்கு எதை செய்வது என்ற விவஸ்தை இல்லாது செய்பவருக்கு ஆதரவாக இன்னும் பலர். என்ன செய்வது.
எம். கண்ணன்:1. ஒவ்வொரு விருது வழங்கும் விழாவிலும் (கோல்டன் க்ளோப், பாப்தா, ஆஸ்கர்) ஸ்ரீதேவி மைத்துனர் அனில் கபூரின் மன நிலை எப்படி இருந்திருக்கும் ? எப்படி அவரால் சிரித்துக் கொண்டு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க முடிகிறது ? (ஸ்லம்டாக் மில்லியனரில் அவருடைய பங்களிப்பைப் பற்றி யாருமே எங்குமே பாராட்டாத நிலையில்)பதில்: அனில் கபூர் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? இந்த படத்தில் கெஸ்ட் ரோல் மாதிரித்தான் செய்துள்ளார் என்றாலும் அதற்காக இவரைத் தேர்ந்த்டுத்ததே அவருக்கு ஒரு சிறந்த பாராட்டு. அமிதாப் பச்சனின் ரோலைத்தானே அவர் செய்தார். மேலும் அவரது பல்லாயிரக்கணக்கான விசிறிகளுக்கு அவரைப் பார்ப்பதே போதும். இதை நான் நிச்சயமாகக் கூறுவேன், ஏனெனில் நானும் அந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவனே.
2. தமிழ் பதிவுலக, பத்திரிக்கை, சினிமா மற்றும் இளைஞர்கள் சூழலில் - கவுண்டமணி, வடிவேல், விவேக் பேசிய சில வசனங்களே பெரும்பாலும் உபயோகப்படுத்தப் படுகிறதே ? இந்த அளவிற்கு அந்த வசனங்கள் தாக்கம் ஏற்படுத்தும் என வசனகர்த்தா யோசித்திருப்பாரா? இல்லை இதில் தொலைக் காட்சியின் பங்கு அதிகமா? ரிபீட்டட் டெலிகாஸ்ட்? (பின்னிப் பெடெலெடுப்பது, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, யாருமே இல்லாத டீக்கடையிலே சின்சியரா டீ ஆத்துறது.., பேஸ்மென்ட் வீக்..)பதில்: தமிழ் திரையுலகின் ஸ்ட்ராங் பாயிண்டே காமடிதான். நீங்கள் சொன்ன வசனங்கள் இருக்கட்டும். மீதி உதாரணங்களும் பார்க்கலாமே. மன்னார் அண்ட் கம்பெனி, கேள்வியை நீர் கேட்கிறீரா, இல்லை நானே கேட்கட்டுமா, பாட்டெழுதி பிழைப்பவர்கள் சிலர், அதில் குற்றம் கண்டுபிடித்து வாழ்பவர் பலர், என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாமே. அதிலும் பழைய வசனங்களை இப்போது உள்ளது போல அடிக்கடி கேட்க இயலாது.
3. கலைஞர் டிவி சரத் - தற்போது நலம் அடைந்துவிட்டாரா ? இல்லை மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டாரா ? யாரை நம்பி 'சிரிப்பொலி' போன்ற அலைவரிசையை துவக்கியுள்ளார்கள் ? ஜூ.வி, ரிப்போர்டரில் செய்தி உண்டா?பதில்: தெரியவில்லை. லக்கிலுக், கேபிள் சங்கர் ஆகியோரை கேட்டால் ஆதண்டிக்கான பதில் கிடைக்கும்.
4. தற்போதெல்லாம் ரயில், பஸ் பயணங்களில் - பல இளஞ்சோடிகள், காதலர்கள் - சுற்றி இருப்பவர்கள் பற்றி கவலையில்லாமல் கை போடுவதும், முத்தமிடுவதும் - பார்க்க பலருக்கும் ஒரு மாதிரியாக இருக்கிறதே? பொது இடங்களில் இவ்வாறு செய்வதற்கு தடை கொண்டு வருவது நல்லதல்லவா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பயணம் முழுவதும் இது மாதிரி ஒரு ஜோடி செய்து கொண்டிருந்தால் என்ன தோன்றும்?பதில்: பாவம் வீட்டில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை போலும் என நினைப்பேன். வேறு என்ன செய்வது?
5. குமுதத்தில் படிக்க ஒன்றுமே இல்லையே? 2 பக்கத்திற்கு ஒரு முறை ஏதோ சிகிச்சை பற்றிய விளம்பரங்களும், தமிழர், தமிழ்நாடு மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஏதோ சில படங்களையும் கட்டுரைகளையும் எங்கிருந்தோ எடுத்துப் போட்டு ஒப்பேற்றுகின்றனரே? என் இந்த வறட்சி?பதில்: குமுதம், விகடன் ஆகிய இரு பத்திரிகைகளிலுமே அப்படித்தான். எனக்கு தெரிந்து துக்ளக் மட்டும்தான் அதே நிலையில் நல்ல தரத்தில் உள்ளது.
6. உங்கள் கேள்வி-பதில் பதிவுகளை புத்தகமாக வெளியிட உத்தேசமுண்டா?பதில்: ஏன் இந்த கொலைவெறி?
7. தினமலர் அந்துமணி ரமேஷ் விவகாரம் என்ன ஆனது ? தாத்தாவும் பேரனும் சேர்ந்த பிறகும் தினமலர் இன்னும் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் ஆதரவு தோற்றத்தையே தருகிறதே?பதில்: நான் தினமலர் படிப்பதில்லை.
8. இன்றைய வலைப்பதிவுகளுக்கெல்லாம் முன்னோடி சுஜாதாவின் கணையாழி கடைசி பக்கமும், தினமலர் வாரமலரில் அந்துமணியின் பா.கே.ப.வும் தான் என்கிறான் எனது நண்பன்? எவ்வளவு தூரம் உண்மை?பதில்: இல்லை என்றுதான் தோன்றுகிறது.
9. கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் இன்னும் கதைகள் எழுதுகிறாரா? எந்தப் பத்திரிக்கைகளில்?பதில்: வாராந்தர ராணியில் கேள்வி பதில் எழுதுகிறார். மற்றப்படி மாத நாவல்கள் எழுதுகிறார்.
10. சோவுக்குப் பிறகு துக்ளக்கை இதே மாதிரி கிண்டலுடன் நடத்த யாருக்கு துணிவு இருக்கும்? வழக்குகளையோ ஆட்டோக்களையோ சந்திக்கும் தைரியமும்?பதில்: அதற்கான நேரம் வரும்போது சரியான ஆட்கள் தானே வருவார்கள்.
venki (a) baba: 1) பாஜக தற்பொழுது இலங்கை பிரச்சனைக்கு ஆதரவு (அத்வானி உட்பட) தெரிவிப்பதன் மூலமாக மறைமுகமாக விடுதலைபுலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் இதே நிலயை கடைபிடித்து போரை நிறுத்துவதன் மூலமாக புலிகளுக்கு ஊக்கம் அளித்து தமிழகத்துக்கு தீராத துன்பத்தை தந்து விடுவார்களா?பதில்: பாஜக செய்வது வேண்டாத வேலை. நான் ஆதரிக்கவில்லை.
2) நீங்கள் எந்த பாராளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்? உங்கள் தொகுதியில் பாஜக போட்டியிட்டாலும் அதிமுக- வுக்கு தான் வாக்களிபீர்களா?பதில்: வாக்களிக்கும் நேரத்தில் அதை யோசிப்பேன். இப்போது too early என்றுதான் சொல்ல வேண்டும்.
3) அதிமுக தேர்தலுக்கு பிறகு (பெரும்பான்மை இருந்தால்) பாஜக-வுடன் கூட்டணி சேரும் என்று எந்தளவுக்கு நம்புகிறீர்கள். ஆங்கங்கே regional parties மற்றும் communists அதிக இடங்களை பெரும் பட்சத்தில் ஜெயலிதா மூன்றாம் அணி கூடாரங்களில் சேர்ந்து விட வாய்ப்பு இருக்கிறதல்லவா?பதில்: ஜெயின் பழைய நடவடிக்கைகள் வைத்து பார்க்கும்போது, அவர் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் பாஜக என்றால் அக்கட்சி ரொம்பவுமே பாவம்தான். வேறு என்ன சொல்வது?
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்