தலைப்பை கடைசியில் ஜஸ்டிஃபை செய்கிறேன்.
எனது வறுமையும் புலமையும் பதிவில் சுஜாதா சாரின் உதாரணத்தையும் எடுத்திருந்தேன். அதிலிருந்து சில வரிகள்.
பல எழுத்தாளர்கள் வேறு தொழிலை கையில் வைத்திருக்கிறார்கள். சுஜாதா ஒரு முக்கிய உதாரணம். சோவும் கூட இதற்கு நல்ல உதாரணம். இக்காலத்தில் பல துறைகளில் திறமை வளர்ப்பது ரொம்ப முக்கியமாகி விட்டது. பதிப்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கு ஒரு தெம்பை இது கொடுக்கிறது. படிப்பவர்களின் எண்ணிக்கை கூடுவதும் ஒரு முக்கியக் காரணியாகி விட்டது. சந்தையில் எது விலை விலை போகிறது என்பதைப் பார்ப்பதும் முக்கியம்.
நான் மொழிபெயர்ப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறியதற்கும் என்னிடம் இருந்த முழுநேர வேலைதான் காரணம். மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடம் இருந்த போது கவலையின்றி மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களுடன் பேரம் பேச முடிந்தது அல்லவா. கூடவே இஞ்சினியராக இருந்ததாலும், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இஞ்சினியர் கூட்டு இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அதே சமயம் விரும்பத்தக்கதாக ஆனதாலும் என் முன்னேற்றத்துக்கு தடையே இல்லை.
அதே போல மொழிபெயர்ப்பாளரானதால் ஐ.டி.பி.எல்லில் இஞ்சினியர் க்ளாஸ் 1 அதிகாரியாக முடிந்தது. ஆகவே இரு திறமைகளும் ஒன்றுக்கொன்று உதவி செய்தன.
ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல. நான் இங்கு தொட நினைப்பது இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டு மிக அதிக வெற்றிகளை ஈட்டுபவர்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினையே. அதாவது சக அலுலகர்களது பொறாமை, வயிற்றெரிச்சல், அடாவடி செயல்கள் ஆகியவையே. என்னைப் பொருத்தவரை நான் எனது இப்பதிவில் எழுதியது போல முழுநேர வேலை, பகுதிநேர வேலை ஆகிய இரண்டையுமே தனித்தனியே வைத்திருந்தேன். பலருக்கு விஷயமே தெரியாது. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டு என இருந்தேன். இந்த விஷயம் இருவருக்கே என் கம்பெனியில் தெரியும். ஒருவர் டைப்பிஸ்ட், இன்னொருவர் அந்த டைப்பிஸ்டின் அடுத்த மேல்நிலையில் உள்ள அதிகாரி. அவர்களுக்குக் கூட நான் வெளிவேலை செய்கிறேன் என்பதுதான் தெரியுமே ஒழிய, எங்கிருந்து அவற்றைக் கொண்டு வருகிறேன் என்பது தெரியாது. ஏனெனில் அது அவர்களுக்குத் தேவையற்றத் தகவல்.
டைப்பிஸ்ட் இதில் எங்கு வந்தார்? என் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சு செய்வது அவரே. அவருக்கு ஒரு பக்கத்துக்கு இத்தனை ரூபாய் என்று ஏற்கனவே பேசி வைத்துக் கொண்ட விலையில் எவ்வளவு பக்கங்கள் தட்டச்சு ஆகிறதோ அதற்கான முழுதொகையையும் உடனுக்குடனே செட்டில் செய்துவிடுவேன். ஆகவே அவர் நான் செய்யும் வேலை குறித்து வாய் திறக்கப் போவதில்லை.
அந்த டைப்பிஸ்டின் மேலதிகாரி? இது சுவாரஸ்யமானது. முதலில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அதை விட டைப்பிஸ்டுக்கு வேலை கொடுக்குமுன் அவரிடம் நான் கம்பெனி வேலையில் ஒரு பாக்கியும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டேன். ஒரு தற்பாதுகாப்பு என்று வைத்து கொள்ளுங்களேன். ஆக நடந்தது என்ன? மேலதிகாரி கொடுக்கும் காகிதங்கள் கடகடவென்றுத் தட்டச்சுச் செய்யப்பட்டு, அவர் மேஜைக்குத் திரும்பச் சென்றன. அவருக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. என் வேலையைச் செய்வதால் அவர் வேலை தாமதமின்றி நடந்தது. அவரும் என்னைப் பற்றி ஒன்றும் கூறப் போவதில்லை. உண்மையைக் கூறப்போனால் நான் 10 நாள் விடுமுறைக்குப் பிறகு வேலைக்குச் சென்ற போது என்னை உற்சாகமாக வரவேற்றது அந்த டைப்பிஸ்டும் அவர் மேலதிகாரி மட்டும்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஆனால் எழுத்தாளர்கள் விஷயத்தில் இம்மாதிரி செயல்பட இயலாது. அவர்கள் பெறும் வெற்றிகள் அம்மாதிரி. அதே சமயம் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி அவர்கள் அதிகாரபூர்வமாகவே அனுமதி பெற இயலும். எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சலுகை இது. ஆகவே சட்டப் பிரச்சினைகள் இருக்காது. ஆனால் சக அலுவலகர்களின் தரப்பிலிருந்து பொறாமையால் போடப்படும் முட்டுக் கட்டைகள்? நீலபத்மநாபனின் “உத்யோக பர்வம்” என்னும் சிறுகதை ஒன்றில் இந்த பிரச்சினை நன்கு கோடி காட்டப்பட்டிருந்தது. ஆகவே அம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஊழியர் கம் எழுத்தாளர்கள் என்பது பற்றி நான் மேலும் அறிய விரும்பினேன்.
ஆகவே நம்ம ஜெயமோகனுக்கு இது சம்பந்தமாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் அனுப்பினேன்:
அன்புள்ள ஜெயமோகன்,
நீல பத்மநாபன் என நினைக்கிறேன் (அவர்தானே துணைப்பொறியாளராக பணியாற்றியவர்?), அவரது ஒரு கதையின் கதாநாயகன் அவரைப் போலவே அரசு வாரியத்தில் ஏ.இ. ஆக பணிபுரிந்து கொண்டே, பல புத்தகங்கள் எழுதி அவார்டும் வாங்குகிறார். இது அவரது சக இஞ்சினியர்களை மனம் புழுங்க வைக்கிறது. இவருக்கு இம்மாதிரி எல்லாம் அனுமதி/சலுகைகள் எல்லாம் தந்தால் தாங்கள் எல்லோருமே எழுதத் தொடங்கி ஆஃபீசை சங்கடத்தில் ஆழ்த்துவோம் என அவர்களில் ஒருவர் வெளிப்படையாகப் பொருமும் அளவுக்கு நிலைமை சீர்கெடுகிறது.
ஒரு அலுவலக மீட்டிங்கில் அவரது மேலதிகாரி, “சார் இந்த மீட்டிங்கையே தனது ஏதேனும் ஒரு கதையில் புகுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என வேடிக்கையாகக் கூற, அவரது சக அதிகாரி அதை சீரியசாக எடுத்து கொண்டு, அவ்வாறெல்லாம் இவர் செஞ்சா செருப்பாலே அடிக்கப்போவது என்று கூறுவது உறுதி போன்ற எதிர்வினை தருமளவுக்கு நிலைமை போகிறது.
உங்கள் அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சக ஊழியர்கள் தரப்பிலிருந்து பொறாமையால் விளைந்த தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் எழுதியதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என இருந்து, தவறிப் போய்கூட பதவி உயர்வு ஏதேனும் அதிகாரியாக வந்து விடாமல் பார்த்து கொள்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.
சட்டப்படி அனுமதி வாங்கிக் கொண்டு நீங்கள் பாட்டுக்கு உங்கள் தரப்பிலிருந்து வருமான வரி ரிடர்ன்ஸ் அளித்து வந்தால் அந்த வகையில் பிரச்சினை இருக்காதுதான். ஆனாலும் இந்த பொறாமை என்னும் விஷயம்? அது எந்தெந்த காரணங்களுக்காகவோ வருகிறதே?
இது பற்றி ஏதேனும் பதிவுபோடும் எண்ணம் உண்டா? அல்லது இந்த மின்னஞ்சலுக்காவது தனி பதில் தரவியலுமா?
சங்கடமான கேள்வியாக இருந்து பதிலளி்க்க விரும்பாவிட்டால், அதையும் புரிந்து கொள்வேன்.
எனது விஷயத்தில் நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்து வந்தேன். இது பற்றி நான் ஒரு பதிவும் போட்டுள்ளேன்.
ஆனால் உங்கள் விஷயத்தில் நீங்கள் பெறுகின்ற புகழ் அவ்வாறு தனி சேனலில் இயங்க விடாது என்பதும் தெரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெயமோகன் எனக்கு அனுப்பிய பதில் இதோ:
அன்புள்ள டோண்டு சார்,
வேலையில் இருந்துகொண்டே கலை இலக்கிய விஷயங்களில் ஈடுபடுவது பொதுவாக கடினமானது. ஆனால் அதில் பல வசதிகளும் இருக்கின்றன.
ஒன்று, வேலை நம் ஆற்றலின் பெரும்பகுதியை, நேரத்தின் நல்ல பகுதியை, உறிஞ்சி விடுகிறது. ஒரு கதை எழுத 3 மணி நேரம் போதும். ஆனால் ஒருநாளில் மூன்று மனிநேரம் மட்டும் கிடைத்தால் அதை வைத்துக்கொண்டு நல்ல கதையை எழுதிவிட முடியாது. அதற்குப்பின்னால் உள்வாங்குதல், உள்ளூர பயணம்செய்தல் என பல மனநிலைகள் இருக்கின்றன. அவற்றுக்கான நேரமும் உண்மையில் எழுத்துக்கான நேரமே. வேரு விஷயங்களில் நாளெல்லாம் மூழ்கியபின் கிடைக்கும் மூன்றுமணி நேரம் நேரமே அல்ல.
பெரும்பாலும் அன்றாட லௌகீக விஷயங்கள் நம் கற்பனையை படைப்புத்திறனை உறிஞ்சிக்கொள்வதையே காண்கிறோம். ஆகவே வேலைச்சுமை என்பது எழுத்துக்கு எதிரானதே. எழுத்தே வேலையாக உள்ள எழுத்தாளனுக்கு இருக்கும் வாய்ப்பில் சிறு பகுதியைக்கூட நாம் பகுதிநேர எழுத்தாளர்களிடம் காணமுடியாது. மேலைநாட்டில் எழுத்தாளன் என்பவன் முழுநேர எழுத்தாளனே
ஆனால் அதற்காக எழுத்தை தொழிலாகச் செய்தால் ஏற்படும் இழப்பு இன்னும் அதிகம். வருமானத்துக்காக கட்டாயமாக எழுத நேர்வதும் சரி ஏராளமாக எழுத நேர்வதும் சரி எழுத்தாளனின் கல்லறையை அவனே கட்டிக்கொள்வதுதான். அவன் தான் எழுத வேண்டிய, தன்னுடைய , இலக்கியத்தை எழுதி அதனாலேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவேண்டும்
அப்படி முடியாத பட்சத்தில் அரசு வேலையே சிறந்தது. அதில் உள்ள நிரந்தரத்தன்மை எழுத்தாளனின் அன்றாடப் பதற்றங்களை வெகுவாகக் குறைத்துவிடும். புறவாழ்க்கையை எளிமையாக, சவால்கள் அற்றதாக, சாதாரணமாக அமைத்துக்கொள்வதே எழுத்தாளனுக்கு வசதியானது.
நான் அரசுவேலையில் பதவி உயர்வுகளை மறுத்தேன். சவால்கள் இல்லாத எளிமையான வேலையிலேயே நீடித்தேன். இது எனக்கு அளித்த சுதந்திரமும் உறுதிப்பாடும் எனக்கு மிக மிக உதவியாக இருந்தன.
அத்துடன் நான் என் அலுவலகத்தில் எப்போதுமே அடையாளம் இல்லாதவனாக, சாதாரணமானவனாக, பிரச்சினைகள் இல்லாதவனாக இருந்தேன். அதாவது 'கண்ணுக்குத் தெரியாமல்' நடமாடினேன். அது எனக்கு மிக உதவியாக இருந்தது
ஜெ
எனது அடுத்த மின்னஞ்சலும் அதற்கு அவரது பதிலும்:
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுக்கு எனது மின்னஞ்சலை அனுப்பிய பின்னால் நீலபத்மநாபன் அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. அவரது பள்ளிகொண்டபுரம் நாவலின் தலைப்பை அவர் அனுமதி இல்லாது ஒரு திரைப்படத்துக்கு போட்டதற்கு அவரது எதிர்வினை பற்றி அவரிடம் கேட்டிருந்தேன்.
அச்சமயம் என்னால் உங்களுக்கான மின்னஞ்சலில் சுட்டப்பட்ட அவரது கதை பற்றியும் கேட்டேன். சுவாரசியமான பதில்கள் தந்தார்.
நிற்க. இந்த நமது மின்னஞ்சல் பரிமாற்றத்தை உங்கள் பதிவுகளில் போடும் எண்ணம் உள்ளதா? நான் போட விரும்புகிறேன். உங்கள் பெயரை அதில் உபயோகிக்கலாமா? அவ்வாறு செய்யலாம் என்றால் இரு மின்னஞ்சல்களையும் அப்படியே மாற்றாமல் பெயர்களுடன் குறிப்பிட்டு மேலே சில எண்ணங்களை சேர்ப்பேன். இல்லாவிடில் பொதுவாக ஒரு எழுத்தாளருடன் நான் மின்னஞ்சல் தொடர்பில் பேசிய விஷயங்கள் என்று குறிப்பிட்டு கொள்வேன்.
அவரது பதில்:
i planned to publish it in my site with the link of ur article
j
ஆக, ஜெயமோகன் சார் அப்பிரச்சினைகளை தனது நடவடிக்கைகளால் பெருமளவு தவிர்த்து விட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பதிவுக்காக நான் அவரது அனுமதி கேட்டு அவரும் அன்புடன் தந்தார். ஆகவே நண்பர் ஜெயமோகனுக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
9 comments:
//அத்துடன் நான் என் அலுவலகத்தில் எப்போதுமே அடையாளம் இல்லாதவனாக, சாதாரணமானவனாக, பிரச்சினைகள் இல்லாதவனாக இருந்தேன். அதாவது 'கண்ணுக்குத் தெரியாமல்' நடமாடினேன். அது எனக்கு மிக உதவியாக இருந்தது//
சக ஊழியர்களின் பொறமைத்தீயில் பொசுங்காமல் இருக்க இதை விட வேறு உபாயம் இந்த உலகத்தில் இல்லை.
nice!
A very healthy exchange of words...Nice to read.!!
//டைப்பிஸ்ட் இதில் எங்கு வந்தார்? என் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சு செய்வது அவரே. அவருக்கு ஒரு பக்கத்துக்கு இத்தனை ரூபாய் என்று ஏற்கனவே பேசி வைத்துக் கொண்ட விலையில் எவ்வளவு பக்கங்கள் தட்டச்சு ஆகிறதோ அதற்கான முழுதொகையையும் உடனுக்குடனே செட்டில் செய்துவிடுவேன்//
ஆக,அரசாங்க சொத்தான இயந்திரத்தினை பயன்படுத்தி நீங்களும் அந்த டைப்பிஸ்டும் பணம் சம்பாத்தித்துள்ளனர்.
கடை தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்து,அந்த சாமியையே சாட்சியாக வைத்து, அதில் ஒரு துண்டை அந்த கடைக்காருக்கே போடும் உங்க திறமை யாருக்கு சார் வரும்.
அன்புடன்
அரவிந்தன்
Dondu Sir,
Nice article. Since you have mentioned both Cho and writer Sujatha in this article. I had a question regarding that and few others.
1. Do you know what was the problem between Cho and writer Sujatha?.
2. US keeps ignoring India after the democrats came to power. Should India register it's concern regarding this.
3. What should India do to prevent the growing Chinese presence in our neighbouring countries?.
Regards.
Partha.
தட்டச்சு செய்ய நான் எனது பேப்பர்கள் கொடுப்பேன், ஏனெனில் மொழிபெயர்ப்பு அளிக்கப்படும் பக்கங்களின் அளவுகளுக்கு நிர்ணயங்கள் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுவாமிகளை துதி பாடும் பக்தர்கள் சொல்லும் இந்த ஸ்லோகங்கள்,மந்திரங்கள் சொல்லும் அர்த்தம் என்ன? இவைகளை சொல்வதால் பக்தர்கள் அடையும் பலா பலன்கள் என்ன என்ன?நீங்கள் சொல்லும் ஸ்லோகம்,மந்திரம் எது?
1.ஓம் நமோ நாறாயணயா!
2.ஓம் சிவாயா நம ஓம்!
3.ஓம் சக்தி ஒம் சக்தி ஒம் ,பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்த்கி ஓம்
4.அரோகரா அரோகரா
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
5.ஹர ஹர சங்கர
ஹர ஹர சங்கர
6.ஹரே ராமா ஹரே ராமா
ராமா ராமா ஹர ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹர ஹரே
7.தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டுக்கும் இறைவா போற்றி
8.அரஹர பார்வதி நமஹ
9.ஓம் நமச்சிவாய
10.ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீராம்.
-ஸ்ரீஇராமஜெயம்
//Blogger dondu(#11168674346665545885) said...
தட்டச்சு செய்ய நான் எனது பேப்பர்கள் கொடுப்பேன், ஏனெனில் மொழிபெயர்ப்பு அளிக்கப்படும் பக்கங்களின் அளவுகளுக்கு நிர்ணயங்கள் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
?
ARASAANGATHTHILO ALLATHU ETHO ORU COMPANYYILO VELAI SEITHU AVARKALIDAM KAI NEETTI SAMBALAM VAANGI KONDU UNGAL SONTHA THEVAIKALAI NIRAIVETRI KOLKIREN ENDRU SOLLA UNGALUKKELLAAM MANAM KOOSAVILLAIYAA?
Post a Comment