வெறும் ஐந்து நிமிடம் நீடித்த புயல்
நேற்று சென்னையிலிருந்து நங்கநல்லூருக்கு எனது காரில் வந்து கொண்டிருந்தேன். பிற்பகல் 4 மணியளவில் பழவந்தாங்கல் சப்வேயில் இறங்கி ஏறும்போது கூட ஒன்றும் அறிகுறிகள் இல்லை. திடீரென மேகங்கள் சேர்ந்து பயங்கரமாக காற்றும் மழையும் காரை நாலாபக்கத்திலும் அலைகழித்தன. வீட்டுக்கு வரும் வழியில் பல மரங்கள் முறிந்து விழுந்தன. நல்ல வேளையாக எல்லாவற்றிலிருந்தும் கார் தப்பியது. காரிலிருந்து இறங்கி கேட்டை திறப்பதற்குள் தொப்பலாக நனைந்தேன்.
உள்ளே பார்த்தால் மின்சாரம் இல்லை. திடீரென வந்தது போலவே காற்றூம் மழையும் கடந்து போயின. பிறகு பார்த்ததும்தான் விபரீத விளைவுகள் புலப்பட்டன. மின்சார கம்பிகள் மீது மரங்கள் உடைந்து விழுந்ததில் அவை அறுந்து தொங்கின. நல்ல வேளையாக காற்று ஆரம்பிக்கும்போதே சப்ளையை கட் செய்திருந்தார்களோ, உயிர்ச்சேதம் இல்லாமல் பிழைத்தோமோ.
சரிதான் குறைந்த பட்சம் ஒரு நாளைக்காவது மின்சாரம் இல்லாமல் காலம் கழிக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. இப்போதுதான் அதிசயமான விஷயம் நடந்தது. எங்கள் கவுன்சிலர் குமார், ஆலந்தூர் நகரசபை தலைவர், ஆலந்தூர் கமிஷனர், உயர் மின்சார அதிகாரிகளின் படையெடுப்பு நடந்தது. போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடந்து இரவு 09.40 மணியளவில் முழு சப்ளை மீண்டும் வழங்கப்பட்டது. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய செயல்.
பாராட்ட வேண்டிய விஷயங்களை பாரட்டாமல் இருக்கக் கூடாதுதானே. கூடவே இப்பதிவையும் பார்த்து விடுங்கள்.
வால்பையனை கோபமூட்டும் செயலைச் செய்யும் குமுதம்
எனது இந்தப் பதிவில் வால்பையன் என்னைக் கேட்ட கேள்விகளும் நான் அவற்றுக்கு அளித்த பதில்களும்:
வால்பையன்:
1. குமுதத்தில் பிராமணர்களை பற்றி எழுதிவிட்டார்களா!
பதில்: இல்லை
2. அப்படி எழுதினால் யாரை பாராட்டி எழுதுவார்கள்!
பதில்: அப்படி எழுத ஆரம்பித்தால் அதற்கெனவே பல பக்கங்கள் போட வேண்டியிருக்கும்.
அப்போது அனுமானத்தில் பதிலளித்தேன். இப்போது நேரடியாகவே பதில் தரலாம். குமுதம் 01.07.2009 தேதியிட்ட இதழில் பார்ப்பனர்கள் பற்றிய கட்டுரை தொடரை நான் தமிழன் என்னும் வரிசையில் மணிகண்டன் ஆரம்பித்துள்ளார். யாரை பற்றி எழுதப் போகிறார்கள் என்ற கேள்விக்கும் அவருக்கு கூடிய சீக்கிரம் பதில்கள் கிடைத்து விடும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இந்தத் தொடர் வரும்.
நமது பாரம்பரியங்களை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். சாதிகளும் அவற்றில் அடங்கும். அந்த விஷயத்தில் மணிகண்டனும் குமுதமும் நல்ல பணியார்றி வருகின்றன. யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சிகள் இந்தத் தொடரை கூர்ந்து கவனிக்கின்றன. எந்த சாதியினர் எங்கு பெரும்பான்மையில் உள்ளனர் என்பதை பார்த்துத்தானே அவர்கள் தமது வேட்பாளர்களையே நிறுத்துகின்றனர். இதை யாரேனும் மறுக்கவியலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
28 comments:
//எந்த சாதியினர் எங்கு பெரும்பான்மையில் உள்ளனர் என்பதை பார்த்துத்தானே அவர்கள் தமது வேட்பாளர்களையே நிறுத்துகின்றனர். இதை யாரேனும் மறுக்கவியலுமா?///
மறுக்க முடியாதுதான்... ஆனால் பிரச்சனையை நீங்கள் வெறும் ஓட்டரசியலாக சுருக்குவதுதான் ”பெரும் பிரச்சனையே”... ஓட்டுக்குப் வெளியே பாராளுமன்றத்துக்கு வெளியேதான் சாதாரண சாமானிய மக்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.. அவரகள் பிரச்சனை என்பது ஓட்டுப் பிரச்சனை இல்லை.. சமூக பொருளாதாரப் பிரச்சனை.. சமூக நீதிப் பிரச்சனை... துரதிருஸ்டவசமாக வெகு குறைவானவர்களே காந்தி, பெரியார் போன்றவர்கள் அந்தத் தளத்தில் இயங்கினார்கள் ... மற்றவர்களுக்கு கலைஞர் முதல் கம்யூனி்ஸடு வரை (பிரனைய் விசயன்) பொருள் சேர்க்கும் இடமாக மாறிப் போனது...
அரங்க கந்தசாமி
நமது பாரம்பரியங்களை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். சாதிகளும் அவற்றில் அடங்கும். அந்த விஷயத்தில் மணிகண்டனும் குமுதமும் நல்ல பணியார்றி வருகின்றன
==
ரைட்டுத்தான்.
இன்றைய தமிழகத்தில் பார்ப்பனர்கள் எழுச்சி அலை தொடங்கியிருக்கிறது. பாரம்பரியம், சாதின்ன நம்மவாக்கு வாழ்க்கைதானே?
தலித்தை விடக்கூடாது. எப்படி இருந்தானோ அப்படித்தான் இருக்கனும்.
மாமா...நான் தப்பாசொல்லியுருன்ந்தேன்னா மனனிசசி விட்டுடுன்கோ
ஆரம்பிச்சிடாங்களா!
திராவிடகுஞ்சுகளின் சத்தம் கேக்கனுமே, ஒன்னையும் காணொம்!
அப்போது அனுமானத்தில் பதிலளித்தேன். இப்போது நேரடியாகவே பதில் தரலாம். குமுதம் 01.07.2009 தேதியிட்ட இதழில் பார்ப்பனர்கள் பற்றிய கட்டுரை தொடரை நான் தமிழன் என்னும் வரிசையில் மணிகண்டன் ஆரம்பித்துள்ளார். யாரை பற்றி எழுதப் போகிறார்கள் என்ற கேள்விக்கும் அவருக்கு கூடிய சீக்கிரம் பதில்கள் கிடைத்து விடும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இந்தத் தொடர் வரும்.
.
நேரு என்ற மாமனிதர்தான் தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமைக்காக சட்டங்கள் பல இயற்றினார்.
அதற்கு முன்னால் காந்தி ,அவர்களை ஹரியின் பிள்ளைகள் என அழைத்து பெருமை செய்தார்
பாரதிகூட அவ்ர்களுக்கு புணுல் அணிவித்து புரட்சி செய்தார்
ஏன் ராமனுஜர் எல்லா மக்களுக்கும் உபதேசம் செய்தார்.
இதை போல் தாழ்த்தப் பட்ட மக்களின் இன்றைய சிறப்பு நிலைக்கு பல வகைகளில் பேருதவி புரிந்த பலர், பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னால் அது மிகை யாகாது.
பல உண்மைகளை வெளிக்கொணரும் குமுதத்தின் தொடரை வரவேற்போம்
ராமன்
தியாக உணர்வுக்கு
ஒரு
வவேசு ஐயர்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
“Brahaminan” is not your birth right Mr. Ragahvan, it comes through your actions. I know your post have good intentions but at the end of the day the Dravidian parties got to you. Everyone has this protectionism, for example if someone points out that your kid is doing wrong, the first thought that comes to our mind is to defend him, not to question ourselves to find out the truth. The same is true with Caste, day in and day out these Dravidian parties are blasting Brahmins, without a clue what a “Brahman” is or means. I feel that you have fallen for that trick. Now, you feel that you are standing up for a community, who are truly God’s messenger. But is that true?
“Me” that’s what our religion wants us to lose, but we don’t right? Now, Karunanidhi uses all his power to make sure HIS sons and daughters to sit in his seat after his death. Are they qualified? He doesn’t care, does he? He wants his family to sit in HIS throne. Now the same is true with Brahmins, Just because you are a Brahmins doesn’t mean you son could be one too? But this truth is lost somewhere, to be a Brahmin you have to go through Brâhmakârin, Grihastha, Vânaprastha, and Yati, so have you followed that path? Probably not!
I don’t think you are a Brahman, heck I don’t even think there is any Brahman left in the society, our religion has put forth rigorous path for every Brahman, the path is not meant for Brahmin sect alone, that’s meant for everyone. In essence I could be Brahman too. Now, I do think you know the history about Alvars and how people from all sort of lifestyle have achieved the pinnacle. Please don’t fall into this Brahmin supremacy syndrome. I do think you have great fan following, so use this to teach people about what Brahmin truly means…
///பாரதிகூட அவ்ர்களுக்கு புணுல் அணிவித்து புரட்சி செய்தார்///
அய்யா.. அவர் பூணுல் அணிவித்தது புரட்சிக்காக அல்ல.. அவர் அந்தக் காலத்தில் எப்படியாவது மானுடத்தை உயர்த்த என்ன வழி என்ற சிந்தையில் குழம்பிப் போய் செய்ததுதான்.. இன்று அதைத் தவறாகப் பார்ப்பவர்களும உண்டு.. ஆனால் உணர்ச்சி வேகத்தில் கவிஞர்கள் செய்வதுதான்... ஜெகத்தை எரித்துவிடு என்கிற ரேஞ்சில் நடந்த ஒரு தவறு... ஆனால் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.. இருப்பவரை பிராமணனாகவோ செட்டியாராகவோ மாற்றத் தேவையில்லை.. மனிதனாக மாற்றுவோம்.. அதுதான் இன்று்ம் அன்றும் என்றும் தேவை...
அரங்க. கந்தசாமி
//நேரு என்ற மாமனிதர்தான் தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமைக்காக சட்டங்கள் பல இயற்றினார்.
அதற்கு முன்னால் காந்தி ,அவர்களை ஹரியின் பிள்ளைகள் என அழைத்து பெருமை செய்தார்
பாரதிகூட அவ்ர்களுக்கு புணுல் அணிவித்து புரட்சி செய்தார்
ஏன் ராமனுஜர் எல்லா மக்களுக்கும் உபதேசம் செய்தார்.
இதை போல் தாழ்த்தப் பட்ட மக்களின் இன்றைய சிறப்பு நிலைக்கு பல வகைகளில் பேருதவி புரிந்த பலர், பிராமண சமுகத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னால் அது மிகை யாகாது.
பல உண்மைகளை வெளிக்கொணரும் குமுதத்தின் தொடரை வரவேற்போம்
ராமன்//
தமிழக மக்கள் தொகையில் 10 % குறைவாக இருந்தும் , தமிழகத்தை பல துறைகளில் இன்றைய லெவலுக்கு முன்னேற்ற பாடு பட்ட அருமை பெருமை பெற்ற பார்ப்பண சாதியின் தங்கத் தலைவர்கள்,அறிஞ ர்கள்,திறமை சாலிகள்,தியாகச் சுடர்கள்,கவிஞர்கள்,கதை ஆசிரியர்கள்,பத்திரிக்கையாளர்கள்,
தொழிலதிபர்கள்,அரசியல்வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சதிரங்கள் பற்றிய குமுததின் தொடர் பலரின் கண்களை திறக்கும்.
1.மூதறிஞர் ராஜாஜி-அரசியல்
2.வ்வேசு ஐயர்-சுதந்திர போரட்டம்-தியாகம்
3.பாரதியார்-கவிஞர்
4.உவேசா ஐயர்-தமிழ் தாத்தா
5.காஞ்சி சங்கராச்சாரியார்-மத நல்லிணக்கம்
6. சோ-பத்திரிக்கை துறை
7.பாலச் சந்தர் -திரை உலகம்
8.ராமமூர்த்தி- நரம்பியல் நிபுணர்
9.டிவிஎஸ்-நல்ல நிர்வாகி
10.டோண்டு-பதிவுலக ஜாம்பவான்
‘கற்பி; ஒன்றுசேர்;போராடு’ என்ற அம்பேத்கரின் வாசகங்களைச் சொன்னதோடு ‘அடங்க மறு ; அத்து மீறு; கலகம் செய்’ என்ற கோஷங்களையும் தீவிரமாக முன் வைத்து போராடும் தலித்களுக்கு அரசியல் ரீதியாக த்டைகள் ஏற்படுத்துவது பிற பிற்பட்ட ஜாதிகள் தான்.
ஆனால் மீண்டும் மீண்டும் திமுக,திக போன்ற கட்சிகள் பிராமணர்களை குறிவைத்து தாக்குவது சரியா?
பிராமணர்களை தாக்கி பேசியும் எழுதியும் வரும் பல அரசியல் தலைவர்கள் ,பிராமணர்களை தனது வாழ்க்கை துணையாக திருமணம் செய்யும் மர்மம் என்ன?
பிராமண வக்கீல் வேண்டும்
பிராமண ஆடிட்டர் வேண்டும்
பிராமண டாக்டர் வேண்டும்
பிராமண இஞ்சினியர் வேண்டும்
பிராமண வாத்தியார் வேண்டும்
ஆனால் ?
//இருப்பவரை பிராமணனாகவோ செட்டியாராகவோ மாற்றத் தேவையில்லை.. மனிதனாக மாற்றுவோம்.. அதுதான் //
இதை நான் வழிமொழிகிறேன்!
//பிராமண வக்கீல் வேண்டும்
பிராமண ஆடிட்டர் வேண்டும்
பிராமண டாக்டர் வேண்டும்
பிராமண இஞ்சினியர் வேண்டும்
பிராமண வாத்தியார் வேண்டும்
ஆனால் ? //
பிராமண பொண்ணாட்டிய விட்டுடிங்களே!
டோண்டு சார், ஒரு quick question! நங்கநல்லூர் கவுன்சிலர் குமார் என்று சொன்னீர்கள்! அந்த குமாரின் அப்பா ஒரு காலத்தில் கவுன்சிலராக இருந்தவரா? ஏனென்றால், நாங்கள் குடியிருந்த தெருவின் கடைசியில் ஒரு குடும்பம் இருந்தது! அதில் வெங்கிடபதி என்ற ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார் (1985)! அவர் அப்போதே முன்னாள் கவுன்சிலர்! அவருடைய ஒரு மகன் எங்களுடன் கிரிக்கெட் ஆடுவார்! அவராக இருக்குமோ என்று சந்தேகம்!
//வால்பையன் said...
//பிராமண வக்கீல் வேண்டும்
பிராமண ஆடிட்டர் வேண்டும்
பிராமண டாக்டர் வேண்டும்
பிராமண இஞ்சினியர் வேண்டும்
பிராமண வாத்தியார் வேண்டும்
ஆனால் ? //
பிராமண பொண்ணாட்டிய விட்டுடிங்களே!
tailboy you too!
@ரவிஷா
கவுன்சிலர் குமார் நீங்கள் சொல்லும் வெங்கிடபதி அவர்களது மாப்பிள்ளை. வெங்கிடபதியின் குமாரர் ஒருவர் பரணி குமார். இப்போது ரோட் காண்ட்ராக்ட் வேலைகள் எடுத்து செய்து வருகிறார். இன்னொரு புதல்வரும் வெங்கிடபதிகு உண்டு என்று எனது வீட்டம்மா கூறினார். ஆனால் அவர் பெயர் தெரியவில்லை.
ரவிஷா என கேட்டால் வெங்கிடபதி வீட்டில் அடையாளம் தெரியுமா? அல்லது உங்களை வேறு பெயரில் அறிவார்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எங்கள் கவுன்சிலர் குமார், ஆலந்தூர் நகரசபை தலைவர், ஆலந்தூர் கமிஷனர், உயர் மின்சார அதிகாரிகளின் படையெடுப்பு நடந்தது. போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடந்து
பரவாயில்லையே! ஆனால் நான் இருக்கும் பகுதியில்(தில்லை கங்கா நகர்) மின் அழுத்தம் எப்போதுமே குறைவாக வருகிறது அதும் ஏர்கான் இரவுகளில் வேலை செய்வதில்லை இதற்காக விடிகாலை 2 மணிக்கு எழுந்து போட வேண்டியுள்ளது.பல புகார்கள் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை.
வீடுகள் Oven மாதிரி இருக்கு.
@vவடுவூர் குமார்
இதென்ன கூத்து. சென்னையிலா இருக்கிறீர்கள்? சிங்கப்பூரில் அல்லவா இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் என்னுடன் தொலைபேசவும். எனது மொபைல் எண் 9884012948.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,இப்ப திரும்ப சிங்கை வந்துவிட்டேன்.திரு.அதியமானை சந்தித்த போது கூட சொன்னார்.
அடுத்த முறை நிச்சயம் வருகிறேன்.
///5.காஞ்சி சங்கராச்சாரியார்-மத நல்லிணக்கம்///
டோண்டுன்னா... என்னத்த சொல்றா பாருங்கோ-...கிக்கீகீ... நேக்கு வயற முட்ற அளவு சிரிப்பு வர்றது... யாரச் சொல்றா... மூததவாளா..? ரெண்டாவதா...?
ரெண்டாவதுண்ணா... அவாளுக்கு நல்லிணக்கம் இல்ல.. இணக்கம் ரொம்ப ஜா்ஸ்தி... ரவி சுப்பரமணியத்தான் கேக்கணும்... பெரியவாளா இருந்தா... தமிழ்ல பேசினா குளிக்கறதா பெரியவர் ராமானுஜதாத்தாரியார் சொல்றார்.. அவரத்தான் கேக்கணும்.. இந்த மனுசன் எந்த இணக்கத்த.. யாரபத்தி சொல்றாருன்னே புரியல போங்கோ....
Onru mattum nichchayam
Long ago, AV, Kalki, Hindu etc. were called mouthpieces of Brahmins.
Periyaar called The Hindu, the Mountraod Mahaavishnu.
That honour will now go to Kumudham
Parppana ezhuchi will come. With it, their isolation will be complete. They cant then say it was periyaar who did it.
Parppaan enrumoo thamizanoodu onnu seeramattaan : this truth will be seen everywhere.
Who is responsbible for polarisation will be really known once this karunanithi dies, and along with him the antibrahmin movement.
ஓ! பரணி குமார்தான் எங்களுடன் கிரிக்கெட் விளையாடுவார்! குமாருடன் அவர் தம்பியும் விளையாடுவார்! நீங்கள் வேண்டுமானால் சிவில் ஏவியேஷன் காலனியில் கோகுலம் வீட்டில் குடியிருந்த ஒரு ஃபேமிலியை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டுப்பாருங்கள்!என்னை எல்லோரும் ரவி என்றுதான் அறிவார்கள்! என் வீட்டில் இருந்துதான் ஸ்டம்ப் மற்றும் பேட் எடுத்துச் செல்வார்கள்! அவர்கள் இன்னும் சிவில் ஏவியேஷன் காலனி கடைசியில்தான் இருக்கிறார்களா என்று தெரியவில்லை! ஆனால், உங்கள் வீடு சிவில் ஏவியேஷன் காலினிக்கு பின்புறம் என்று தெரிகிறது! I think you moved to Nanganallur recently as compared with others! அதனால் உங்களை தெரிய வாய்ப்பில்லை! அந்த பரணி குமாரை பார்த்தால் 1985/86/87 வாக்கில் கிரிக்கெட் விளையாடியது ஞாபகம் இருக்கிறதா என்று கேளுங்கள்! அதே மாதிரி, "புளிப்பு" ஞாபகம் இருக்கிறதா என்றும் கேளுங்கள்! நாங்கள் விளையாடிய இடம் கோகுலம் வீட்டின் பின்புறம் இருந்த காலி கிரவுண்ட்! அதாவது கம்யூனிட்டி ஹாலின் பின்புறம்! சில சமயம் சிவில் ஏவியேஷன் காலனி முடிவில் இருந்த ஒரு பெரிய கிரவுண்டில் விளளயாடுவோம்! இப்போது ஃப்ளாட்டுக்கள் வந்துவிட்டதாக அறிகிறேன்! நன்றி!
தென்னாப்பிரிக்காவில் உள்ள அறிஞர்கள், சாதனையாளர்கள் பற்றி எழுதினால், வெள்ளையர்கள் பற்றிய பகுதியே பிரதானமாக இருக்கும். அதே போலத்தான் இந்தியாவிலும்! ஒரு 50 ஆண்டு காலம் கழித்து சாதிகள் பற்றி எழுதினால், ஒவ்வொரு சாதிக்கும் பல பக்கம் போடலாம். நடிகர் திரு. விவேக் பற்றி திரு. ரஜினிகாந்த் இப்படி சொன்னார் "விவேக்கினுடைய அறிவாற்றலை அவருடன் பேசிய போது அறிய முடிந்தது. எனவே, அவர் ஒரு பிராமின் ஆக இருப்பார் என்றே நினைத்தேன், ஆனால் அவர் வேறு ஜாதி என அறிந்த போது ஆச்சரியப்பட்டேன்! இப்படியான எண்ணம் (attitude) இருப்பவர்களை என்ன செய்ய? ராமன் சார், காந்தியையும் பிராமின் பட்டியல்ல சேர்த்து விட்டீங்களே! நல்ல வேளையாக அம்பேத்கார் தப்பிச்சார்!
// I think you moved to Nanganallur recently as compared with others!//
ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். நான் சமீபத்தில் 1969-ல் தான் நங்கநல்லூரில் குடி புகுந்தேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/04/1969-2008.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ரவிஷா
நீங்கள் கிரிக்கெட் ஆடிய கிரௌண்டில்தான் அபிநயா க்ரியேஷன்ஸ் எடுத்த “காஸ்ட்லி மாப்பிள்ளை” என்னும் சீரியலுக்கான ஒரு ஷூட்டிங் எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த சீரியல் சமீபத்தில் 1985-86-ல் வாரம் ஒரு முறை ஒளிபரப்பப்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் எடுத்த எல்லா சீரியல்களுமே நங்கநல்லூரை மையமாக வைத்துத்தான் எடுக்கப்பட்டன. நான் தில்லியில் இருந்தவாறு அவற்றை பார்த்து பொருமிக் கொண்டிருந்தேன், நான் நங்கநல்லூரில் இல்லையே என. பார்க்க:
http://dondu.blogspot.com/2008/04/1969-2008.html
http://dondu.blogspot.com/2006/02/blog-post_21.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்குத்தெரிந்து கோவை அனுராதா நங்கநல்லூருக்கு வந்தது 80-களின் இறுதியில்தான்! So, 85-86'இல் எடுக்கப்பட்ட சீரியல் நங்கநல்லூரில் எடுத்ததற்கு chances are slim to none! தவிரவும் அபிநயா கிரியேஷன்ஸ் ஷூட்டிங் செய்தது எல்லாம் இரண்டாவது மெயின்ரோட்டில் தான்! ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்கத்தில்?
நான் ஆஞ்சநேயர் கோவில் இருந்த இடத்தில்கூட (ராம் நகர்) கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்! அங்கே சம்மரில் Flood Light மேட்சுகள்கூட நடக்கும்! அங்கே ஒரு ஏரி கூட இருந்தது! மழைக்காலங்களில் வீடுகளை காலிபண்ணிக்கொண்டு போய்விடுவார்கள்! ஏனென்றால் முதல்மாடிவரை தண்ணீர் நிற்கும்!
உங்களுக்குத் தெரியுமோ? ஆஞ்சநேயர் சிலை செய்யவேண்டிய ஒரு பெரிய massive கல் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. ரோட்டில் (பழவந்தாங்கள் கேட் அருகில்) கிட்டத்தட்ட ஆறு மாசம் கிடந்தது! அதை கேட் வழியாக கொண்டுவருவதில் சிரமம்! Window of opportunity for the gate to keep opened for hours கிடைக்கவில்லை! பிறகு எப்படியோ பர்மிஷன் கிடைத்து எடுத்துவந்தார்கள்!
சிலையை வடித்து நிற்கவைத்துவிட்டு சுற்றி எதுவுமே இல்லாமல் கும்பாபிஷேகம் செய்தார்கள்! அப்போது நான் எடுத்த படம் சுமார் 100 காப்பி போட்டு பல பேருக்கு ஃப்ரீயாக கொடுத்தேன்! என் நங்கநல்லூர் வீட்டு பூஜையறையில் ஒரு படம் இருக்கிறது! சொல்லப்போனால் காலேஜ் ரோட்டில் இருக்கும் ஒரு ஸ்டுடியோக்காரர் அவர் எடுத்த படத்தைவிட என் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அவருக்கும் ஒரு காப்பி கொடுத்தேன்!
நாங்கள் 81-இல் நங்கநல்லூருக்கு குடிவந்தபோது 19-வது தெரிவுக்குத்தான் வந்தோம்! பிறகு 83-இல் சிவில் ஏவியேஷன் காலனிக்கு குடிவந்தோம்! பிறகு 92-இல் மங்கையர்கரசி நகர் (ரேஷன் கடைக்கு எதிர் வீடு! இப்போது புறாக்கூண்டு ஃப்ளாட்டுகள் இருக்கும் இடம்)! இப்போது என் அம்மா இருப்பது லக்ஷ்மி நகரில்!
81-இல் குடிவந்தபோது நிறைய காலி கிரவுண்டுகள்! நீங்கள் சொன்னதுபோல கிணறுகளில் 20 அடிகளில் தண்ணீர் கிடைக்கும்! ராட்டினம் போட்டு தாம்புக்கயிறால் பக்கெட்டில் தண்ணீர் பிடிப்போம்! மழைக்காலங்களில் கயிறே இல்லாமல் குனிந்து பக்கெட்டால் தண்ணீர் எடுப்போம்! நீங்கள் சொல்வதுபோல அது ஒரு காலம்! எல்லாம் ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது நங்கநல்லூரில்! 1988 அல்லது 1989-இல் பாலகுமாரன் ஒரு கதையில் நங்கநல்லூரைப்பற்றி சிலாகித்து எழுதினார்! அப்போது பிடித்தது சனியன் நங்கநல்லூருக்கு! இப்போது கிரவுண்டே இல்லையாமே? போன வருடம் வந்தபோது சிக்ஸ்த் மெயின் ரோட்டில் இடமே இல்லாமல் ரோடு போட்டிருந்தார்கள்! ரொம்பவே கஷ்டமாக இருந்தது! 90-களின் ஆரம்பத்திலேயே மார்வாடிகள் வந்து ஊரின் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டை கெடுத்து குட்டிச்சுவர் செய்துவிட்டார்! அந்த நகோடா ஜுவெல்லரி கடைக்காரர் எங்கள் வீட்டின் பக்கத்தில்தான் சைட் போர்ஷனில் குடியிருந்தான்! எப்படித்தான் அவனுக்கு நாலு வருஷத்தில் பணம் வந்ததோ? 40-வது தெருவில் எங்கள் சொந்தக்காரர்களின் இரண்டு வீட்டை வாங்கிவிட்டான்! என் பெரியப்பா 60-களில் 40-வது தெருவின் ஒரு பக்கத்தையே எங்கள் சொந்தக்கார்களுக்காக ரிசர்வ் செய்து நாங்கள் எல்லாரும் ஒரே தெருவில் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர்! ஆனால் என் தந்தையின் கூதல்களினால்...... Well, past is past!
கோகுலம் வீட்டில் இருந்தபோது பல்லாவரம் மலையும் பரங்கிமலையும் கிளியராக தெரியும்! அதுவும் எப்போதாவது லேண்ட் ஆகும் ஜெட்கள் தெள்ளத்தெளிவாகத் தெரியும்! ஒரு முறை (88 அல்லது 89) ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் கான்கார்ட் வந்து பயங்கர சத்தம் போட்டு எல்லாரையும் பயமுறுத்தியது!
//85-86'இல் எடுக்கப்பட்ட சீரியல் நங்கநல்லூரில் எடுத்ததற்கு chances are slim to none!//
சான்ஸ் என்பதெல்லாம் நடந்து முடிந்த விஷயங்களுக்கு வருவதில்லை! :))
1985-ல் அபிநயா க்ரியேஷன்ஸின் முதல் சீரியல் “காஸ்ட்லி மாப்பிள்ளை” வந்தது. கதை நங்கநல்லூரில்தான் நடந்தது. அதில் வரும் கேரக்டர்கள் எல்லோருமே நங்கநல்லூரில் வசித்ததாகத்தான் கதையே சென்றது.
ப்ரொட்யூசர் ராதா கிருஷ்ணஸ்வாமி அவர்கள் வசித்தது கூட நங்கநல்லூரில்தான். கோவை அனுராதா ஆர்டிஸ்ட் மட்டுமே. பிறகு அவர் இடத்துக்கு டில்லி கணேஷ் வந்தது வேறு கதை.
அடுத்த நான்கைந்து சீரியல்கள் எல்லாவற்றுக்குமே நங்கநல்லூர்தான் கதைக்களன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment