பாஸ்கி:
1. How to post our questions? (:-))
பதில்: கேள்விகளை எனது எந்தப் பதிவிலும் பின்னூட்டமாக போடலாம். எனது ஜிமெயில் இன்பாக்ஸுக்கு அது வந்து விடும். ஏற்றுக் கொள்ளத் தக்க கேள்விகள் எனது அடுத்த வாரபதிவுக்கான வரைவுக்கு கொண்டு செல்லப்படும், இப்போது போல. மட்டுறுத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளவும் படும்.
2. I would like to know what is going on with river linking projects? Is it possible? what are pros&cons? (I feel pros dominates)
பதில்: கூகள் தேடுபெட்டியில் rivers linking project india present status என தட்டச்சு செய்து தேடினால் 769000-க்கும் மேல் ஹிட்ஸ் வந்துள்ளன. அவற்றுள் முதல் இரண்டு உரல்கள் “உங்கள் கணினியை கெடுக்ககூடும்” என்னும் எச்சரிக்கையுடன் வருகின்றன. சுத்தம். ரொம்ப பெரிய பிராஜக்ட். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஒரு ஆங்கிலேயர் இதை செய்ய முயன்றார். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு ரயில்வே கம்பெனி முதலாளிகளின் கைப்பொம்மையாக செயல்பட்டு அதை கிடப்பில் போட்டது. அப்போது செய்திருந்தால் பல பஞ்சங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அப்போது நில ஆர்ஜிதங்களும் பிரச்சினையாக இருந்திராது. ஆனால் இப்போது நாட்டில் பல இடங்களில் கட்டுமான வேலைகள் குவிந்துள்ளன. நதிகளை இணைக்கும் வாய்க்கால்கள் செல்லும் பாதையில் பல இடையூறுகளாக அவை உள்ளன. அவற்றை எல்லாம் நீக்கி செயல்படுவது மிகவும் கடினமே. உள்ளூர்காரர்கள் செய்யும் திசைதிருப்பல்கள் வேறு இருக்கும். எது எப்படி இருப்பினும் நீங்கள் சொல்வது போல இன்னும் பல நல்ல சாதகங்கள் உள்ளன. எப்படி செய்யப் போகிறார்கள் என்பது மலைப்பாகவே உள்ளது.
அனானி (05.06.2009, காலை 07.36-க்கு கேட்டவர்):
1. 60 தடவைகளாக ஒரே பிளேடை பயன்படுத்தினீர்களா? தினமும் ஷேவ் செய்வீர்களா அல்லது எடுத்து பார்த்து விட்டு பத்திரமாக வைத்து விடுவீர்களா? (இதை அடுத்த வாரக் கேள்வியாகவும் வைத்துக் கொள்ளலாம்)
பதில்: ஷேவ் செய்யும் தேதியை இந்த பிளேட் வைக்கும் கவரில் எழுதி வைப்பேன். ஜிய்யெட்டின் கவர் இதற்கு சரிப்பட்டு வராது, ஆகவே ஒரு சாதாரண பிளேட் கவரையே உபயோகித்தேன். ஷேவ் செய்து முடித்ததும் ரேசரிலிருந்து பிளேடை எடுத்து நன்கு கழுவ வேண்டும். பிறகு அதை வெறுமனே கையில் பிடித்து உதறி நீர்த்துளிகளி நீக்க வேண்டும். பிளேடை துணியால் துடைத்தல் என்பது கூடவே கூடாது, ஏனெனில் அதன் மேல் உள்ள ரசாயன ஃபிலிம் பழுது படும். பிறகு பிளேட் சரியாக வெட்டாது. இது பற்றி குமுததில் அக்கால கட்டத்தில் போட்டிருந்ததை படித்ததால் இந்த முன்ஜாக்கிரதை நடவடிக்கை. கவரில் சீரியல் நம்பர் மற்றும் தேதியை எழுதுவேன், அக்கவரில் இடம் இல்லாது போனால் வேறு கவரில் இந்த குறிப்புகளை கேரி ஓவர் செய்வேன். அவ்வாறு செய்ததால்தான் 60 முறை எனக் கூற முடிந்தது. எனது ரூம் மேட்டுகளில் ஒருவரான சர்மாஜியை எனது லேட்டஸ்ட் எண்ணிக்கை சொல்லி வெறுப்பேற்றுவேன். அவர் தினசரி ஷேவ் செய்பவர், சோப் போட மாட்டார். வெறுஇம் தண்ணீரில் முகத்தில் தெளித்து விட்டு பிளேட் போடுவர். ஒரு ஷேவுக்கு ஒரு பிளேட். எனது ஸ்கோர் எண்ணிக்கையை பார்த்து வயிறெரிவார்.
2. 'அக்னி நட்சத்திரம்' எப்படி? என்னத்தை சாப்பிட்டு சூட்டை தணித்தீர்கள்?
பதில்: இந்த முறை ரொம்பவும் படுத்தி விட்டது. இந்த அழகுக்கு நான் வீட்டை விட்டு எங்கும் அதிகமாக வெளியில் போகவில்லை என்று பெயர். சாப்பாடே பிடிக்கவில்லை. உடல் களைப்பாக இருந்தது. இப்பத்தான் சில நாட்களாக நிலைமை பரவாயில்ல என்பது போல ஆகியுள்ளது.
3. கடைசியாக கோலி குண்டு, கிட்டிப்புள் (கில்லி), பம்பரம் எல்லாம் எப்போது விளையாடினீர்கள்?
பதில்: பதினோரு வயதில். எதிலுமே நிபுணத்துவம் என்றெல்லாம் இல்லை. அதுவும் கில்லி என்றாலே பயம்தான்.
4. கும்மி என்ற அழகான தமிழ் வார்த்தையை நீங்கள் KUMMI என்று உச்சரிப்பீர்களா? அல்லது குவிற்கு அழுத்தம் தந்து GUMMI என்று உச்சரிப்பீர்களா? அது என்ன பார்ப்பனர்கள் மட்டும் அதை GUMMI என்று உச்சரிக்கிறீர்கள். வாயில் வசம்பு வைத்து தேய்க்க வேண்டுமோ?
பதில்: GUMMI என்றுதான். அதுதான் சரியான உச்சரிப்பு. அதுவும் GUMM (கும்)மென்றிருக்கும் பெண்கள் GUMMI ஆடினால் பார்க்க மிகவும் விருப்பமே.
5. கிழக்கிலிருந்து புத்தகம் எழுதித் தரச் சொல்லி உங்களிடம் யாரும் கேட்கவில்லையா? அல்லது புத்தகம் அச்சடித்துத் தாருங்கள் என்று நீங்கள் போய் கேட்கவில்லையா?
பதில்: என்னை யாரும் அங்கிருந்து கேட்கவில்லை, நானும் அவர்களைப் போய் கேட்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.
பிரதாப் (மின்னஞ்சல் மூலம் அனுப்பட்ட கேள்விகள்):
1. கெசட்டில் பெயர் மாற்றுவது என்றால் என்ன?
பதில்: பெயர் என்பது நமது அடையாளங்களில் முக முக்கியமானது. அதை வைத்துத்தான் எல்லா சான்றிதழ்களும் (பிறப்பு சான்றிதழ் தவிர) தரப்படுகின்றன. அதை ஜஸ்ட் லைக் தட் ஒரு சட்ட நடவடிக்கையின்றி மாற்றினாலே பல சான்றிதழ்கள் மதிப்பிழந்து போகின்றன. ஆகவேதான் அதை சட்ட ரீதியாக செய்ய வேண்டும், செய்த பிறகு அதை கெசட்டில் பதியச் செய்ய வேண்டும்.
பெயரை மாற்ற பல காரணங்கள் இருக்கலாம். வேடிக்கையான காரணத்துக்கு ஒரு உதாரணத்தை நான் கதை ஒன்றில் படித்தேன். துஷ்யந்தன் நல்லவன், ஆனால் அவனிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம். அதை விளக்க ஒரு சம்பவம் கூறுவேன். அவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பார்வதி என்னும் பெண்மணிக்கு திருமணம் நிச்சயமானது. “மணமகனின் பெயர் என்ன”? என அவளிடம் துஷ்யந்தன் கேட்டான். அவள் முருகன் என பதில் கூற, இது என்ன பொருத்தமில்லாத பெயர் ஜோடி என பேசி அவள் மனதை நோக அடித்தான். இம்மாதிரியே பலரையும் வாரினான். சரி இவன் கல்யாணம் செய்து கொள்ளும்போது கவனிப்போம் என இருந்தவர்கள் எரிச்சல் அடையும் வண்ணம் அவன் சகுந்தலை என்னும் பெண்ணை காதலித்து திருமணமும் நிச்சயம் செய்து விட்டான். இவனும் காலரை தூக்கிக் கொண்டு நடந்தான். திருமண பத்திரிகையின் ப்ரூஃப் பார்க்க பெண்வீட்டார் அழைக்க, இவனும் போனான். என்ன அக்கிரமம்? பெண்ணின் பெயர் முனியம்மா என இருந்தது. அவர்கள் குல தெய்வமாம், அவள் பாட்டி வேண்டிக் கொண்டதாம் என்றெல்லாம் கதை கூறப்பட்டது.
சில வாரங்கள் கழித்து இவன் ஒரு கெஜட் அறிவிப்புடன் அலுவலகத்துக்கு வந்து அதன் காப்பியை நோட்டீஸ் போர்டில் ஒட்டினால். “துஷ்யந்தன் என்னும் பெயரில் அறியப்பட்ட நான், எனது பெயரை முனியாண்டி என மாற்றி கொண்டேன்” என்ற கெஜட் அறிவிப்பு எல்லோரையும் பார்த்து சிரித்தது.
2. அதைச் செய்வது எப்படி?
பதில்: அதை அறிய இங்கு செல்லவும்.
3. அப்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
பதில்: அதை அறிய அதே இடத்துக்கு செல்லவும்.
4. பெயர், தந்தை பெயர் என வழக்கில் இருக்கும் நமக்கு, படிவங்களில் First Name, Middle Name, Last Name, Surname என்றெல்லாம் இருப்பது ஏன்?
பதில்: இந்த தலைவலி தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அதிகப்படியாக உள்ளது. மற்ற மானிலங்களில் எல்லாம் மூன்று பெயர்களும் உண்டு, உதாரணம் லால் கிருஷ்ண அத்வானி, நாராயண் கண்பத் வாக்சோரே இத்யாதி, இத்யாதி. இது பற்றி நான் இட்ட யார் சாதிப்பெயரை யார் எடுப்பது என்னும் பதிவில் இவ்வாறு எழுதியுள்ளேன்.
“தமிழ் நாட்டை விட்டு வெளியில் சென்றாலே surname என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய பெயர் N.ராகவன் என்றால், "N" என்பதை விரிவாக்க சொல்கிறார்கள். நரசிம்மன் என்று கூறினால் நரசிம்மன் ராகவன் என்று எழுதிக் கொள்கிறார்கள். பிறகு அதையே R.நரசிம்மன் என்று கூறிவிடுகிறார்கள். அது என் தந்தையின் பெயர் என்று அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் விளக்க வேண்டியுள்ளது. வெளி நாட்டுக்கு போனாலோ கேட்கவே வேண்டாம். அதுவே நான் ஐயங்கார் என்ற என் சாதிப் பெயரை போட்டுக் கொண்டால் பிரச்சினையே இருந்திருக்காது. N.R. Iyengar என்று நிம்மதியாகப் போட்டுக் கொண்டிருக்கலாம். வருமான வரிப் படிவங்களில் வரும் குழப்பத்தை நாம் எல்லோருமே உணர்ந்துள்ளோம்”.
எம்.கண்ணன்
1. நாற்பதில் (40ல்) நாய்க்குணம் என்கிறார்களே? அதற்கு என்ன விளக்கம்? திருமணமான ஒருவன் தன் மனைவியைத் தவிர பிற பெண்களை நாடும் இச்சையைக் குறிக்கிறதா இது?
பதில்: ஆங்கிலத்தில் இதை seven year itch என அழைப்பார்கள். ஆனால் அது திருமணமான ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும். இங்கு மட்டும் வெளிப்படையாக ஆணுக்கு மட்டுமே இதை பொருத்திக் கூறுகிறார்கள். பல காரணங்கள் உண்டு. சொல்லப் போனால் சர்ச்சை வரும். வேணது வந்தாகி விட்டது.
2. பதிவர்களுக்காக திரையிடப்பட்ட கிம்.டு.கிக் கின் 'ஸ்பிரிங்க் சம்மர்.....' படம் பார்க்கப் போகவில்லையா? ஏன்? அடுத்து 'ஐல்' படம் போட்டால் போவீர்களா? சாரு நிவேதிதா எழுதும் ஒவ்வொரு தலைப்பையும் பதிவர் உலகம் இப்படி பின்பற்றும் அளவிற்கு பதிவர் உலகத்தையே தன் பக்கம் திருப்பியுள்ளாரே? அடுத்து பதிவர்கள் கும்மியடிக்கும் தலைப்பு யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் சித்தாந்தங்களா?
பதில்: படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது. சாரு நிவேதிதா எழுதுவதை நான் படிப்பதில்லை. தேவையில்லாத அலட்டல் செய்கிறார் என்பது எனது கருத்து.
3. பொதிகை டிவியில் காண்பிக்கப்படும் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சிகளை இந்தக் காலத்திலும் பார்த்து பயன் பெறும் மக்கள் இருக்கிறார்களா ? (சென்னை/திருச்சி/மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் விவசாய நிகழ்ச்சிகளைக் கேட்டு பயன் பெற நிறைய பேர் உள்ளார்கள்)
பதில்: கண்டிப்பாகவே இருக்கிறார்கள். அப்படியே குறைந்த எண்ணிக்கையினரே பார்த்தாலும் ஒளி பரப்பவேண்டிய மிக மிக அவசியமான நிகழ்ச்சி.
4. மானாட மயிலாட - MM-4 க்கு மீண்டும் நமீதா வந்துவிட்டாரே? சூப்பர் ? சென்ற வார இறுதியில் கலைவாணர் அரங்கில் நடந்த பிறந்த நாள் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தவர்களின் ஏற்பாடா?
பதில்: கலைஞர் டிவியே பார்ப்பதில்லை, அப்ப்டியே பார்த்தாலும் சினிமா, முதலமைச்சர் உண்ணாவிரதம் ஆகிய காமெடி காட்சிகள்தான்.
5. நாசா விஞ்ஞானி ஹுஸ்டன் டாக்டர் நா.கணேசன் ஓம் தமிழ் எழுத்திற்கு மைக்ரோசாஃப்ட் விண்டோசில் யுனிகோடில் இடம் வாங்கிக் கொடுத்துள்ளாரே? மிகவும் முக்கியமான செயல் அல்லவா? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பார்த்தேன், மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
6. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் என்றாவது பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளனரா? சாப்பிடத்துண்டா?
பதில்: எனக்கு தெரிந்து கொடுத்ததில்லை. ஆனால் நானோ எப்போதாவதுதானே அக்கோவிலுக்கு செல்பவன்? எனக்கு முழு விஷயம் தெரியாது.
7. வைணவ (பெருமாள்) கோயில் புளியோதரை பிரசாதத்தில் மட்டும் என்ன ஸ்பெஷல்? ஏன் டேஸ்ட் மிகவும் சூப்பராக உள்ளது ? அந்த டேஸ்ட் மற்ற கோயில்கள் பிரசாதத்திலோ வீட்டில் செய்தாலோ புளியோதரை மிக்ஸ் வாங்கி செய்தாலோ இருப்பதில்லை? உங்கள் வீட்டுப் புளியோதரையில் கோயில் டேஸ்ட் வருமா? செய்முறை விளக்கம் அளிக்க முடியுமா?
பதில்: என் வீட்டம்மா ஐயங்கார் புளியோதரை செய்வதில் நிபுணியாக்கும். பெருமாள் கோவில் பிரசாதங்களில் மிளகாய்க்கு பதில் மிளகு போடுவார்கள். எள்ளுப்பொடியும் போடுவார்கள். நல்லெண்ணெய் தாராளமாக விடுவார்கள். மற்றப்படி விவரமான செய்முறை விளக்கங்கள் எனக்கு தெரியாது. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அதை தந்துள்ளார். அதற்கான சுட்டி கொடுத்த ஸ்வாமிக்கு நன்றி.
8. வடகலை - தென்கலை இரு பிரிவினருமே சரணாகதி தத்துவத்தையே பின்பற்றுகின்றனர் (சிறு வித்தியாசத்தில்) என்கிறபோது ஏன் தனித்தனி நாமங்கள்? ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? சச்சரவுகள்? யார் உசத்தி என்கிற வாதங்கள்? வடகலை - தென்கலை பெண்ணெடுக்கும் முறை உண்டா? இல்லை அது மிக தீவிரமாக எதிர்க்கப்படுமா?
பதில்: பெண் கொடுத்து பெண் எடுக்கும் முறை தாராளமாக உண்டு. மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மனமில்லை. மனம் கனமாகிறது, தேவையற்ற வேறுபாடுகளால்.
9. மற்ற மாநிலங்களை விட (கேரளா, ஆந்திரா, பிற இந்திய மாநிலங்கள்..) தமிழ் நாட்டில் மட்டுமே ஏன் குடிகாரர்கள் அலம்பல் - அலப்பரை எல்லாம் பண்ணுகிறார்கள் (டாஸ்மாக் வாசலில் அல்லது அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழிகளில்)? மற்ற மாநிலங்களில் எல்லாம் போனாமா, சரக்கை அடிச்சோமா, வீட்டுக்கோ வேலைக்கோ போனோமா என நடக்கிறது. குடித்துவிட்டு கலாட்டா பண்ணும் கலாச்சாரம் பெரும்பாலும் தமிழனுக்கு மட்டுமே உண்டான பழக்கமா?
பதில்: எனக்கு தெரிந்து தமிழகத்தில்தான் குடி குடியை கெடுக்கும் என்ற வாசகத்துடன் மது விற்பனை செய்கின்றனர். மற்றப்படி நீங்கள் சொல்வது ஒரு மாதிரி மல்டிபில்ள் பெர்சனாலிட்டி விவகாரமாகத்தான் படுகிறது.
10. எல்லா டிவி சேனல்களிலும் (எஃப்.எம் ரேடியோவிலும்) தமிழ் சினிமா, பாடல்கள், சீரியல்கள் 3 மாதம் இல்லாமல் இருந்தால் உற்பத்தித் திறனும் (productivity) குடும்ப உறவுகளிலும் முன்னேற்றம் வருமா?
பதில்: பூனைக்கு யார் மணி கட்டுவது?
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
11 hours ago
32 comments:
தொடர்ந்து டோண்டு அண்ணாவின் கேள்வி பதில் பகுதியை சிறப்பிக்கும் எம்.கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நம்பிக்கை கொண்டவர்கு ஆண்டவனெ காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
எழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கய்யில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியே பதிலாக க்ண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாய கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குறுடர்களை காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளை பேச வைக்கும்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்
சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
எழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கருணை என்னும் கண் திறந்து பார்க்க வேண்டும்
காவல் என்னும் கை நீட்டி காக்க வேண்டும்
கனிமழலை குரல் கொடுத்து பாடவேண்டும்
கண்மறாந்த தாயும் அதை கேட்க வேண்டும்
கவலகளை உன்னிடதில் தந்தேன் கண்ணா
கருணயே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
--------------------------------
தொடரும் அவர்தம் சேவைக்கு
பாரட்டுக்கள்.
நகைச்சுவையான கேள்விகளுக்கு அதே நகைச்சுவையுடன் விடையும்... மிகவும் இரசித்தேன்!
//6. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் என்றாவது பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளனரா? சாப்பிடத்துண்டா?
பதில்: எனக்கு தெரிந்து கொடுத்ததில்லை. ஆனால் நானோ எப்போதாவதுதானே அக்கோவிலுக்கு செல்பவன்? எனக்கு முழு விஷயம் தெரியாது. //
இது போன்ற கறிக்கு உதவாத கேள்விகளுக்கு பதிலளிப்பதை விடுத்து,உங்கள் தகுதிக்கும்,அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் பதிவுகளை இடலாமே !!!பயனுள்ள உங்களின் பதிவுகளுக்காக தான் இத்தனை நாள் பின்னூட்டமிடாமல் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
குவாலிட்டி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?? ( இதையும் ஒரு கேள்வியாக பாவித்து அடுத்த பதிவுக்கான வரைவுக்கு ஆட்டய போடாதீர்கள் )
வாருங்கள் பழமைபேசி. பை தி வே, உங்களது இந்தப் பதிவுக்காகவே நான் உங்களை எனது பிளாக் ரோலில் போட்டேன், http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_16.html
பேச்சியின் விஷமங்கள் எனது பெரியப்பா வீட்டில் எனது அண்ணனின் செல்லமாக வளர்ந்த ப்ரௌனியின் நினைவை கொண்டு வந்து விட்டன.
மேலும் சில பதிவுகள் அம்மாதிரி ஏன் போடக் கூடாது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதையும் ஒரு கேள்வியாக பாவித்து அடுத்த பதிவுக்கான வரைவுக்கு ஆட்டய போடாதீர்கள்//
பலரை எனது இந்த நடவடிக்கை ரொம்பவுமே பாதித்துள்ளது என உணருகிறேன்.
நான் ஏற்கனவேயே ஒரு முறை கூறியுள்ளேன், http://dondu.blogspot.com/2008/11/blog-post_2909.html
சுட்டிய பதிவிலிருந்து சில வரிகள்:
//நான் வாயை அண்ணாந்து வைத்து கொள்ள வேறு யாரேனும் வாயில் சொம்பிலிருந்து ஊற்றினால் அதை அப்படியே கடக் கடக் என நிறுத்தாமல் குடித்து விடுவேன். சாதாரணமாக தாங்களே எடுத்துக் குடிப்பவர்கள் கூட அவ்வாறு ஒரே வீச்சில் குடிக்க மாட்டார்கள். எங்கள் வீட்டில் இது ஒரு விளையாட்டாகவே போனது. நான் அவ்வாறு குடிப்பதை பார்ப்பதற்காகவே குடும்பத்தினர் சூழ்ந்து பார்ப்பார்கள். என் அப்பா மட்டும் அதைப் பார்த்து சத்தம் போடுவார். அவருக்கு பயம், எனக்கு எங்காவது மூச்சு திணறப்போகிறதே என்று.
அதெல்லாம் பழைய கதை. பல ஆண்டுகளாக அதை நான் செய்து பார்த்ததில்லை. சரி, ஆனால் அது இப்போது ஏன் நினைவுக்கு வரவேண்டும்? சொல்கிறேன்.
எனது சட்டம் ஒரு கழுதை பதிவில் அனானி ஒருவரின் கமெண்ட் ஒன்று வந்துள்ளது. அதில், “ஒரு சில பதிவுலக நண்பர்கள் தற்சமயம் கேள்வி பதில் சுவை குன்றியிருப்பதாகவும் கேள்விகள் வரத்து குறைவாய் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை சுவை உடையதாய் மாற்ற ஒரு எளிய வழி. வெள்ளிக்கிழமை தொடங்கி-வியாழன் இரவு வரை நடக்கும் அரசியல், சமுக, கலையுலக நிகழ்வுகளை வைத்து தாங்களே ஒரு கேள்வி பதில் நிகழ்வினை நடத்தினால் அது நிச்சய்ம் அனைவரையும் விரும்பி படிக்க வைக்கும்”.
அவருக்கு பதில் கூறவே இப்பதிவு.
நன்றி அனானி. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. நானே எனக்கு நானே கேள்வி கேட்பது எனக்கு நானே தண்ணீர் வாயில் ஊற்றிக் குடிப்பதற்கு சமம். அதுவே மற்றவர்கள் ஊற்றும்போது அந்த ஸ்பீட் என் கண்ட்ரோலில் இல்லை, இருப்பினும் அதை சமாளிப்பதுதான் சாதனை. மற்றவர்கள் எந்த கேள்வி கேட்டாலும் நான் பதிலளிக்க முயலுகிறேன்.
அனானிக்கு இன்னொரு தகவல். இந்த நிமிடம் வரை வரும் வெள்ளியன்று வர வேண்டிய பதில்கள் பதிவுக்கான கேள்வி ஒன்று கூட வரவில்லைதான். வந்தால் அப்பதிவு வரும், இல்லாவிட்டால் பதிவு இல்லை அவ்வளவுதான். இதில் என்ன பிரச்சினை?
எனது துபாஷி வேலையும் கிட்டத்தட்ட அம்மாதிரிதான். விசிட்டரோ உள்ளூர் வாடிக்கையாளரோ என்ன பேசுவார்கள் என்று அறிய இயலாது. ஒரு சமயம் டி.சி. மோட்டார் ஸ்பீட் கண்ட்ரோல் பேசலாம், அடுத்த நிமிடம் காபரே பற்றிப் பேசலாம். விருந்தாளி மனைவியை அழைத்து வராததாதால் வரும் பிரச்சினைக்கு அவர் அதை கையில் எடுத்து கொண்டால் சரியாகி விடும் என்று கூறியதை முன்னாலேவா ரிகர்ஸ் செய்து கொள்ள முடியும்?
“டோண்டு, இப்படித்தான் நூறாண்டுகளுக்கு முன்னால் சில தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் பலான தேதிக்கு பலான வீட்டில் கொள்ளையடிக்கப் போவதாக முன்கூட்டியே தகவல் அளித்து போலீஸ் காவல்களையும் மீறி கொள்ளை அடிப்பார்கள். அது ஒரு ஹைப்பர்லிங்காக எனக்கு தோன்றுகிறது” என்னும் முரளி மனோஹருக்கு ஒரு வார்த்தை. “ரொம்ப நன்றி ந்ண்பா, உன்னை மாதிரி போட்டு கொடுக்கும் தோழர் இருக்கும்போது எனிமிக்கு என்ன தேவை எனக்கு? நல்லா இருங்கடே”//.
அன்புடன்,
டோண்டு ராகவன்
In jayshree's post she has given the menu to prepare various food items .. including Iyengar puliyodharai and parthasarathi temple puliyodharai.. here is the link :
http://mykitchenpitch.wordpress.com/2007/02/19/puliyotharai-thiruvallikkeni-paarththasaarathi-koyil/
பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி.
//நாற்பதில் (40ல்) நாய்க்குணம் என்கிறார்களே?//
//GUMM (கும்)மென்றிருக்கும் பெண்கள் GUMMI ஆடினால் பார்க்க மிகவும் விருப்பமே//
//வெளிப்படையாக ஆணுக்கு மட்டுமே இதை பொருத்திக் கூறுகிறார்கள்//
ஆண்கள் மட்டும் வெளிப்படையாக இருக்கிறார்கள் எனவும் வைத்துக்கொள்ளலாமா?
கேள்வி
-------
பல நாடுகளில், அந்த நாடு முழுவதும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்.... எனுமாறு இருக்கிறது. ஆனால் நமது இந்தியாவைப் பார்த்து மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இத்தனை வேறுபட்ட மக்கள் இருந்தும் ஓரே நாடாக இருப்பது அரிது அல்லவா?
இதே போல பல மொழி, பல கலாச்சாரம் உள்ள நாடுகள் ஏதும் உள்ளனவா?
மயிறு என்பது கெட்ட வார்த்தையா? சினிமாக்களில் எல்லாம் இந்த வார்த்தை வரும்போது சென்சார் செய்யப்படுகிறதே?!
//ஆண்கள் மட்டும் வெளிப்படையாக இருக்கிறார்கள் எனவும் வைத்துக் கொள்ளலாமா?//
அதுதான் ஆண்பெண் கற்புநிலைகளில் நமக்கு இருக்கும் இரட்டை அளவுகோல் முறையை எடுத்து காட்டுகிறது.
ஆண் என்றாலே இப்படி அப்படித்தான் இருப்பான் என கோவலத்தனமாக இருப்பவர்கள்தான் தத்தம் மனைவியர் கற்பிற்சிறந்த கண்ணகிகளாக இருஜ்க்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தொடர்ந்து டோண்டு அண்ணாவின் கேள்வி பதில் பகுதியை சிறப்பிக்கும் எம்.கண்ணன்//
யாருங்க அவரு ? அனானியா இல்லை டோண்டுவின் உறவினரா ?
அப்புறம்...
good touch bad touch லேயே கேக்கனும்னு நெனச்சேன்.
15, 17 வயதுகளிலேயே உணர்ச்சிகள் வந்துவிடுகின்றன... அப்புறம் 28, 30 களில் தான் கல்யாணம் ஆகிறது. (பெண்களுக்கு இதை விட சீக்கிரம்).
இந்த இடைப்பட்ட காலங்களில் எப்படி அடக்கிக்கிட்டு சும்மா இருப்பது (கிட்டத்தட்ட 10 வருடங்கள்). விபச்சாரமும் அனுமதி இல்லை. வேறு வழிதான் என்ன?
சமீபத்திலே நாற்பதுகளிலே,ஹோன் ஸ்டோன் என்றொரு, கண்ணாடியிலே ஆக்கப்பட்ட ஒரு குழிக்கல் இருந்தது - உபயோகிக்கப்பட்ட ப்ளேடுகளை இந்தக் கல்லில் ஒரு பத்து
நிமிஷம் தேய்த்த பிறகு, அதன் முனை நல்ல கூராகி விடும்.. இம்மாதிரி தேய்த்தும் ஒரு
ப்ளேடு முப்பது தடவை போலத்தான்
உபயோகிக்க முடிந்தது!!
Very nice answers Sir.
How do we change the place of birth in the passport? ( I need to get a certified birth certificate for a work visa in Europe )
Reason - While in 10th, by mistake I had filled Dindigul as place of birth, while actually it was Coimbatore, my mom's place!
@சேதுராமன்
நீங்கள் குறியது போன்ற ஒரு விஷயம் அமெரிக்க எழுத்தாளர் ஆர்தர் ஹயிலீ எழுதிய வீல்ஸ் புத்தகத்தில் வருகிறது.
எண்ணற்ற முறையில் உபயோகிக்கக் கூடிய பிளேடின் பாடண்ட் பிளேட் உற்பத்தி செய்யும் கம்பெனிகளால் ஒடுக்கப்பட்டது என்ற செய்தியைத்தான் குறிப்பிடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் என்றாவது பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளனரா? சாப்பிடத்துண்டா?
பதில்: எனக்கு தெரிந்து கொடுத்ததில்லை. ஆனால் நானோ எப்போதாவதுதானே அக்கோவிலுக்கு செல்பவன்? எனக்கு முழு விஷயம் தெரியாது.//
எனக்குத் தெரிந்து ‘காட்’டான மிளகுப் பொங்கல் அல்லது ஸ்வீட்டான சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை இந்த மூன்றையும் தான் மாறி மாறி வழங்குகிறார்கள்.
சேவிங் பண்றதுல கூட save பண்ணியிருக்கிங்களே!
பெரிய ஆளு நீங்க!
//கலைஞர் டிவியே பார்ப்பதில்லை, அப்ப்டியே பார்த்தாலும் சினிமா, முதலமைச்சர் உண்ணாவிரதம் ஆகிய காமெடி காட்சிகள்தான்.//
இன்னோரு காமெடி,
இரண்டுமே மூன்று மணி நேரம் தான்!
வரும் வாரத்துக்கான கேள்விகள்!
1.குமுதத்தில் பிராமணர்களை பற்றி எழுதிவிட்டார்களா!
2.அப்படி எழுதினால் யாரை பாராட்டி எழுதுவார்கள்!
3. மற்ற சாதியினர் சமூகத்துக்காக பாடுபடும் போது ஏன் பிராமனர்கள் அவர்களது சாதிக்கு மட்டும் பாடுபடுகிறார்கள்!
4.பிறக்கும் போதே பார்பனன் புத்திசாலி என்ற எண்ணம் உங்களுக்கு உண்டா?
5.கடவுளுக்கு சேவை செய்வதும், பிட்சை எடுத்து வாழ்வதும் ஒன்றா! சிலர் அந்த பேரில் இதை செய்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்!
6.திராவிட சொம்பு தூக்கிகள் ஒரு சில பார்பனரை தாக்குவது போல் மொத்த பார்பனரையும் தாக்கும் போது என்ன தோன்றும்!
7.இந்து மதம் பஆரியர்கள் கொண்டு வந்தது என ஒப்பு கொள்கிறீகளா?
8.கடவுளின் பிரதிநிதியாக பார்பனனும், சமஸ்கிருதமும் இருப்பது ஏன்?
9.கடவுள் நம்பிக்கை இல்லாதவனை விட, கடவுள் நம்பிகையாளர்கள் நாகரிகமற்று நடந்து கொள்கிறார்களே! இது தான் மதம் கற்று கொடுத்ததா?
10.இதுவரை கடவுள் என்ற சொல்லால் ஏமாற்றுகாரர்களை தவிர யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை ஒப்புகொள்கிறீர்களா?
டோண்டு சார்,
வாராவாரம் எனது கேள்விகளுக்குப் பதில்கள் சொல்வதற்கு நன்றி.
//நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் என்றாவது பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளனரா? சாப்பிடத்துண்டா?
பதில்: எனக்கு தெரிந்து கொடுத்ததில்லை. ஆனால் நானோ எப்போதாவதுதானே அக்கோவிலுக்கு செல்பவன்? எனக்கு முழு விஷயம் தெரியாது.//
நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் என பதிவுகள் வருகிறது. (கூட்டாஞ்சோறு, விடுபட்டவை, கலவை என்பது போல) - அதான் நங்கநல்லூருக்கும் பஞ்சாமிர்தத்துக்கும் சம்பந்தம் உண்டா என்கிற தொனியில் கேட்டேன்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நான் ஒரு முறை தான் சென்றுள்ளேன் - பல வருடங்களுக்கு முன்பு. தற்போது என்னென்ன பிரசாதங்கள் கொடுக்கிறார்கள் என தெரியாததாலும் இந்த கேள்வி.
எம்.கண்ணன்
//டோண்டு சார்,
வாராவாரம் எனது கேள்விகளுக்குப் பதில்கள் சொல்வதற்கு நன்றி.//
எம்.கண்ணன்
// Anonymous said...
//தொடர்ந்து டோண்டு அண்ணாவின் கேள்வி பதில் பகுதியை சிறப்பிக்கும் எம்.கண்ணன்//
யாருங்க அவரு ? அனானியா இல்லை டோண்டுவின் உறவினரா ?//
தசாவதாரமா?
1. //மற்ற சாதியினர் சமூகத்துக்காக பாடுபடும் போது//
இது உங்களுக்கே ஓவரா தெரியல?
2. //கடவுள் நம்பிக்கை இல்லாதவனை விட, கடவுள் நம்பிகையாளர்கள் நாகரிகமற்று நடந்து கொள்கிறார்களே//
இதுவும் சரியில்ல...
இந்த விசயங்களில் மனுசன் மனுசந்தான்.
1. எல்லாரும் சுயனலமாத்தான் இருக்கங்க...
2. அவனவனுக்குனு ஒரு குணம் உண்டு.
தமிழில் அனைத்து எழுத்துக்களும் வருவது போல் ஒரு சிறு பத்தி (paragraph) இருக்கிறதா ?
டோண்டு பதில்கள் பகுதிக்கு:
இது ஒரு கேள்வி பதில் தொடர். (யாரோ விளையாட்டாக ஆரம்பித்து வைத்துள்ளார்கள். பலர் தங்கள் பதிவுகளில் பதில் அளித்துவிட்டு அடுத்த பதிவரை அழைக்கிறார்கள்).
உங்கள் கேள்வி பதில் பகுதியில் (இந்த செட் கேள்விகள் இல்லை அதனால் இதில் நீங்கள் இன்னும் பங்கு பெறவில்லை என்று நினைத்து )உங்களை இந்த ரெடிமேட் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
எனது கேள்வி பதில் சுட்டி.
http://tamilpadhivu.blogspot.com/2009/06/blog-post.html
மற்ற பதிவர்கள் கேள்வி பதில் சுட்டி
(அதே கேள்விகளுக்கு!)
http://nchokkan.wordpress.com/2009/06/08/qa/
http://www.sanakannan.com/qa.html
http://ungalrasigan.blogspot.com/2009/06/blog-post_825.html
..
..
கேள்விகள் இங்கே:
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
2) கடைசியா அழுதது எப்போது?
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
4) பிடித்த மதிய உணவு?
5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
14) பிடித்த மணம்?
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
17) பிடித்த விளையாட்டு?
18) கண்ணாடி அணிபவரா?
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
20) கடைசியாகப் பார்த்த படம்?
21) பிடித்த பருவ காலம் எது?
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
@மெனக்கெட்டு
எனக்கு வரும் கேள்விகளே போதும். இந்த 32 கேள்விகள் ஒரு தொடர் சங்கிலி போல வருகின்றன. அதில் பங்கெடுக்க மனமில்லை, மன்னிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எனக்கு வரும் கேள்விகளே போதும். இந்த 32 கேள்விகள் ஒரு தொடர் சங்கிலி போல வருகின்றன. அதில் பங்கெடுக்க மனமில்லை, மன்னிக்கவும்.//
டோன்டு சார்,
அழகான பதில். நாகரீகமான மறுதலிப்பு.
//
@மெனக்கெட்டு
எனக்கு வரும் கேள்விகளே போதும். இந்த 32 கேள்விகள் ஒரு தொடர் சங்கிலி போல வருகின்றன. அதில் பங்கெடுக்க மனமில்லை, மன்னிக்கவும்.
//
டோண்டு சார் 'பன்ச் பதில்'!
நானே நினைத்தேன். பல கேள்விகள் பர்சனலாக (+மொக்கையாக) இருக்கிறதே என்று.
அடுத்த முறை வேறு கேள்விகள் கேட்கிறேன்.
நன்றி.
this is for Sri Raju:
if you want to change the date or place of birth in your passport, you may have to get a judicial directive addressed to the Passport Office and for this you will have to seek a judicial redressal by filing bonafide documents to prove the place of your birth, may be a birth certificate issued by the Corporation or other concerned authorities - this is the practice that prevailed some years back and I do not think it has changed. Please check with a good travel agent dealing in passports!!
நன்றிங்க ஐயா, விரைவில் சுவடுகளை இடுகைகளாக்க முயற்சிக்கிறேன்!
பதிவர் குழலி அவர்கள் என்னைப் பற்றி அவதூறாக கூறியதற்கு எதிர்வினையாக நான் அவரது சம்பந்தப்பட்ட பதிவில் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.
//டோண்டு போன்றவர்கள் வலைப்பதிவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மதிவதினையை கடத்தி திருமணம் செய்துகொண்டாரா என்று தானே கேள்வி தானே பதில் போன்ற தம் வலைப்பதிவில் எழுதினால் யாருக்கும் பிரசிச்னையில்லை ஏனெனில் டோண்டு போன்றோரின் பக்க சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் நன்றாகவே வாசகர்களுக்கு தெரியும்.//
மிகமிகத் தவறான, அவதூறான புரிதல். முதற்கண் நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி எனக்கு வரும் கேள்விகள் மற்றவர்களிடமிருந்து வருபவையே. ஒரு குறிப்பிட்ட வாரம் கேள்விகள் எதுவும் வராததால் அப்பதிவே வரவில்லை.
நீங்கள் குறிப்பிடும் கேள்வியை நான் தேடி எனது 28.10.2008 தேதியிட்ட பதிவிலிருந்து கண்டெடுத்தேன், http://dondu.blogspot.com/2008/10/blog-post_28.html
இரணியன் என்னும் பெயரில் கேட்ட அந்த ஐந்தாவது கேள்வியையும் பதிலையும் இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன்:
5. புலிகள் தலைவர் பிரபாகரன் தன் மனைவியை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்தாரா?
பதில்: அவர் திருமணம் நடந்து பல ஆண்டுகள் கடந்து, அவருக்கு வளர்ந்த பிள்ளைகளும் இருக்கும்போது இக்கேள்வியே தேவையற்றது.
ஆக, நான் ஒருவரது பெர்சனல் வாழ்க்கை சம்பந்தமாக எதுவும் எழுதுவதில்லை. சோ அவர்கள்தான் எனக்கு இதில் ரோல் மாடல்.
பார்க்க: http://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.தலைக்கணம் பிடித்து அலைபவர்களின்
இறுதி முடிவு?
2.கிராமத்து மக்களின் நல்ல ஆரோக்கியம் தொடர்கிறதா?
3.இக்கால அரசியலில் அதிகமாய் பொறுமை காக்கும் அரசியல்வாதி யார்?
4.சிலருக்கு( எந்த தகுதியும் இல்லாமல்) மட்டும் தொடர் வெற்றி எப்படி சாத்யமாகிறது?
5.கடைசியில் கோவை ஈசா யோக மைய நிறுவனரும் (ஜக்கி வாசுதேவ்) அரசியல் பிரவேசம்?
Post a Comment