காடக முத்தரையன்:
நாடகக் காவலர் மனோகரிடம் ஒரு நல்ல விஷயம் உண்டு. வழக்கமாக மாலை 06.30 மணிக்கு நாடகம் ஆரம்பம் என்றால், முக்கால்வாசி நாடகக் குழுவினர் மாலை 7 மணிக்கு முன்னால் ஆரம்பித்ததில்லை. அது தெரிந்து மக்களும் தெனாவெட்டாக லேட்டாக வந்து, ஏற்கனவே அமர்ந்திருப்பவர் கால்களை மித்தித்து வயிற்றெரிச்சல்களை கொட்டிக் கொண்டு சாபமும் பெறுவார்கள். ஆனால் மனோகர் விஷயத்தில்தான் அது நடக்காது. மாலை 06.30-க்கு நாடகம் என்றால் 06.29-க்கு பெல் அடித்து சரியாக 06.30-க்கு ஆரம்பித்து விடுவார்.
ஆகவே அவர் நாடகங்கள் என்றாலே பார்வையாளர்களுக்கு ஒரு பயங்கலந்த மரியாதை உண்டு. டாண் என்று இரவு 9 மணிக்கெல்லாம் நாடகத்தை முடித்து விடுவார். அவரவர் பஸ்கள் பிடித்து வீட்டுக்கு போக அதிக அளவு பிரச்சினையெல்லாம் இராது. அவர் நாடகத்துக்கு விருந்தாளி என எந்த பெரிய மனிதர் வந்தாலும், சம்பந்தப்பட்டவர் லேட்டாக வந்தால் அவருக்காக காத்திருப்பது எல்லாம் கிடையாது.
ஆனால் முதல் சில நிமிடங்களுக்கு சிறு சிறு காட்சிகளாக காட்டப்பட்டன. நாடகத்தின் சில முக்கிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தவும், அப்படியே பை சான்ஸ் யாராவது லேட்டாக வந்தாலும் அவர்கள் கதையை அதிகம் மிஸ் செய்யாதபடியும் அக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அக்காட்சிகளும் ரொம்ப பாப்புலராகப் போய், அவற்றை மிஸ் செய்யக்கூடாது என்பதற்காகவே எல்லோரும் நாடகத்துக்கு சீக்கிரம் வரவும் செய்தனர்.
சமீபத்தில் 1972-ல் பம்பாய் ஷண்முகாநந்தா ஹாலில் அவரது சில நாடகங்கள் காட்டப்பட்டன. அவற்றில் ஒன்று காடக முத்தரையன். நந்திவர்ம பல்லவன் காலத்தில் அரசுரிமை சம்பந்தமாக குழப்ப நிலை நிலவியது. அதையெல்லாம் சரி செய்தவன் காடக முத்திரையன். மனோகர்தான் அந்த ரோல் ஏற்றார் என்பதையும் கூற வேண்டுமோ? நான் சொன்ன அந்த குறிப்பிட்ட ஆரம்பக் காட்சிகளில் அக்கால அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட எல்லா பாத்திரங்களுமே சிக்கலை பற்றிப் பேச, மனோகர் மட்டும் மிஸ்ஸிங். ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் குழப்பத்தை திறக்கவுதவும் திறவுகோல் காடக முத்திரையனிடம்தான் உள்ளது எனக் கூற, சம்பந்தப்பட்ட சிறு காட்சி ஒரு பாத்திரம் “காடக முத்திரையன்” என அப்பெயரை அழுத்தந்திருத்தமாக உச்சரிப்பதுடம் முடியும். நான்கு காட்சிகள் இவ்வாறே சென்றதும் திடீரென காடக முத்திரையன் அடுத்த காட்சியில் கம்பீரமாக தோன்றுவார்.
பிறகென்ன, காட்சிகள் விறுவிறென செல்லும். இம்மாதிரி சுவாரசியமான காட்சிகள் நிரம்பிய மற்ற நாடகங்களான துரோணர், விஸ்வாமித்திரர், இலங்கேஸ்வரன் ஆகிய நாடகங்கள் அடுத்தடுத்த நாட்களில் காட்டப்பட்டது எங்கள் பாக்கியம். அதுவும் தந்திரக்காட்சிகளில் மனோகரை மிஞ்ச ஆள் கிடையாது என அழுத்தம் திருத்தமாகக் கூறலாம். காடக முத்திரையனில் ஐந்து தலை நாகம் தோன்றும் காட்சி மிக அருமை. அவரது குழுவில் பணியாற்றியவர் ஹெரான் ராமசாமி. துரோணர் நாடகத்தில் துரியோதனனாக வந்து தூள் கிளப்புவார். பிறகு அவரே தனி ட்ரூப் அமைத்து வெற்றி கொண்டார் என்பது பிற்காலக் கதை.
அது சரி இப்போ எதுக்கு ஆர்.எஸ். மனோகரை பாற்றி பேச வேண்டும் என கேள்வி கேட்பது முரளி மனோகர். இன்று வெளியான லேட்டஸ்ட் விகடனில் அவரைப் பற்றிய பழைய கட்டுரை மறுபதிப்பு இடப்பட்டதே அதன் காரணம் எனக் கூறுவது டோண்டு ராகவன்.
அன்னை சரஸ்வதியே இன்று நீ என் குழலை உன் இசையின் ஸ்வரங்களால் நிரப்புவாயாக:
ராமானந்த் சாகரின் கிருஷ்ணாவில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமாக குழல் வாசிக்கும் ஒருவனிடம் குழந்தை கண்ணன் வருகிறான். குழந்தைக்கு தானும் அதே மாதிரி வாசிக்க வேண்டும் என்ற விருப்பம், அதை அது வெளியிட, அன்புடன் குழந்தையை பார்த்து அந்த மனிதன் குழல் வாசிக்க தேவையான நீண்ட பயிற்சிகளை குறிப்பிட, குழந்தைக்கு பொறுமை இல்லை. பிறகு குழலூதுபவன் சொன்னது போல, தன் குழலை கையில் ஏந்தி பிரார்த்திக்கிறது, “அன்னை சரஸ்வதியே வணக்கம்” என்கிறது. மனதில் புல்லரிப்புடன் அன்னை கலைவாணியும் மேலேயிருந்து குழந்தை கண்ணனை நமஸ்கரித்து “என்ன கட்டளை பிரபோ” என்கிறாள். “அன்னை சரஸ்வதியே! இன்று நீ என் குழலை நினது இசையின் ஸ்வரங்களால் நிரப்புவாயாக” என்று. மேலே சரஸ்வதி தேவிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, “தங்கள் சித்தம் என் பாக்கியம் என்கிறாள் கலைவாணி. அவள் தன் கையை மேலே உயர்த்தி அருள் புரிய, கண்ணனின் குழலிலிருந்து மிக இனிமையாக கானம் எழுகிறது. தேவர்கள் மேலிருந்து வணங்குகின்றனர். குழல் கலைஞனோ திகைப்படைந்து கண்ணன் காலில் விழுகிறார். ஒரே ஒரு முறைதான் தொண்ணூறுகளின் துவக்கத்தில் இக்காட்சியைக் கண்டேன். பிறகு பார்க்கக் கிடைக்கவேயில்லை. இன்றுதான் திடீரென நினைவுக்கு வந்தது. யூட்யூப் தளத்தில் தேடியபோது கிடைத்தது. ஆனால் அதன் ஆடியோ சரியாக இல்லை. பிறகு காளிராஜ் புண்ணியத்தால் சரியான சுட்டி கிடைத்தது. அதை கீழே காணலாம்.
bb
அமர்க்களமான பிரிண்ட். காளிராஜுக்கு என் நன்றி. வசனங்கள் ஹிந்தியில் இருந்தாலும் புரிந்து கொள்ளலாம். (ஏதோ ஒரு நாதாரி மேலே உள்ள க்ளிப்பிங்கை எடுக்கச் செய்து விட்டது. இப்போது உள்ள க்ளிப்பிங்கில் பாதி நிகழ்வுதான் வருகிறது, மன்னிக்கவும்).
என்னே கண்ணனின் அருள்! காளிராஜ் என்ற நல்ல மனதுடையவரை எனக்கு பின்னூட்டமிட வைத்து, இக்காட்சிக்கான அருமையான சுட்டியையும் தரச்செய்தான். அவருக்கு எனது கோடி கோடி வந்தனங்கள். சில டயலாக்குகள் சரியாக முதலில் காதில் விழாதததால் ஏற்பட்ட தவறுகளை திருத்தி கொள்ள முடிந்தது. மீண்டும் அவருக்கு நன்றி. பை தி வே இக்காட்சியை இப்போது பல முறை ஓட்டினேன்.
எனக்கு இக்காட்சியில் பிடித்த விஷயங்கள் என்று பார்த்தால், பரம்பொருளே கண்ணனாக அவதரித்தார். இருப்பினும் தனக்கு ஒரு குறிப்பிட்ட கலையில் தேர்ச்சி வேண்டுமென்றால் அவர் பிரார்த்திப்பது அன்னை சரஸ்வதியைத்தான். அன்னைக்கு இது கசக்குமா என்ன? குழந்தை கண்ணனின் குழலில் ஸ்வரங்களாக பிரவாகம் எடுக்கிறாள். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் சில கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை பகவானாகவே இருந்தாலும் மீறக்கூடாது என்பதையே ராமரும் கண்ணனும் காட்டியுள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
6 hours ago
12 comments:
டோண்டு சார்,
இந்த லிங்க்-ஐ பிடியுங்க! உங்கள் குறை நிவர்த்தியடையும். ( ஆடியோ & வீடியோ இரண்டும் அபாரம்.
http://www.youtube.com/watch?v=-gsWeBSVwyc&feature=related
மிக்க நன்றி காளிராஜ் அவர்களே. நீங்கள் சிறப்புடன் நீடூழி வாழ்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பரம்பொருளே கண்ணனாக அவதரித்தார். இருப்பினும் தனக்கு ஒரு குறிப்பிட்ட கலையில் தேர்ச்சி வேண்டுமென்றால் அவர் பிரார்த்திப்பது அன்னை சரஸ்வதியைத்தான்.//
இந்த கூத்தெல்லாம் இந்து மதத்தில் தான் நடக்கும்.
பிள்ளையாரை மும்முதற் கடவுள் என்பதும் பின் சிவனின் மகன் என்பதும்,
நல்ல கேலி கூத்து இந்து மதம்!
அடக்கம் அமரருள் உய்க்கும் என்னும் உய்ர்தர கோட்பாடு புரியாதவர்களுக்கு எல்லாமே கேலிக்கூத்தாகத்தான் தெரியும். அதற்கு என்ன செய்ய இயலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அடக்கம் அமரருள் உய்க்கும் என்னும் உய்ர்தர கோட்பாடு புரியாதவர்களுக்கு எல்லாமே கேலிக்கூத்தாகத்தான் தெரியும்.//
செத்த பிறகு எல்லாத்தையும் அடக்கம் தான் பண்ணுவாங்க! அதுக்கு முன்னாடி பிணத்து முன்னே நல்ல குத்து டான்ஸ் நடக்கும் அந்த (கேலி)கூத்த சொல்றிங்களா?
படித்தேன்... ;)
\\இந்த கூத்தெல்லாம் இந்து மதத்தில் தான் நடக்கும்.
பிள்ளையாரை மும்முதற் கடவுள் என்பதும் பின் சிவனின் மகன் என்பதும்,
நல்ல கேலி கூத்து இந்து மதம்!//
ஏதாவது கூறவேண்டுமென்றால் விஷயத்தோடு கூற வேண்டும். அதை விட்டு தண்ணி போட்டு விட்டு வந்து வாந்தி எடுக்கக்கூடாது, வால்பையன்.
விசாகன்
(சற்றே திருத்தப்பட்டது டோண்டுவால்)
//ஏதாவது கூறவேண்டுமென்றால் விஷயத்தோடு கூற வேண்டும். அதை விட்டு தண்ணி போட்டு விட்டு வந்து வாந்தி எடுக்கக்கூடாது, *ல் பையன். //
சொல்ல ஆசைப்பட்டால் நான் சொன்னதுக்கு மறுப்பு கருத்து சொல்லனும், அதை விட்டு நான் எடுத்த வாந்தியை நக்க கூடாது!
கண்ணனின் லீலையையும் அருமையான குழல் இசையையும் கண்டு, கேட்டு 6 நிமிஷத்திற்கு மெய் மறந்து மிகவும் ரசித்தேன். உங்களுக்கும், திரு காளிராஜுவிற்கும் நன்றிகள் பல.
@வால்பையன்
நீங்கள் சொல்லும் நாத்திகக் கருத்துகளை பல மடங்கு கடுமையாக ஆத்திகத்தை தாக்கி கருத்துகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கூறப்பட்டுள்ளன.
ராமாயணத்தில் வரும் ஜாபாலியை விட, புராண காலத்து சார்வாகனை விடவா அதிகமாக யாராவது சொல்லிட இயலும். உண்மை கூறப்போனால் ஆத்திகமும் நாத்திகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல.
தீவிர நாத்திகராக இருந்து பிறகு மனமுருக கண்ணனை பற்றி பாடியவர் கவியரசு கண்ணதாசன். அதே போல தீவிர ஆத்திகராயிருந்து நாத்திகராக மாறியவர்களும் உண்டு. எல்லாமே அவரவர் அனுபபவங்களை பொருத்தே அமையும்.
இப்போது பதிவுக்கான மேட்டர். பரம்பொருளே கண்ணனாக அவதரித்தார். குழந்தையாக இருந்து பல அற்புதங்கள் நிகழ்த்தினார். நினைத்திருந்தால் குழலை எடுத்த உடனேயே அருமையாக வாசித்திருந்திருக்க இயலும். இருப்பினும் வித்யைக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்கித்தான் அவர் வாசிக்கிறார். அது அக்குழந்தையின் குறும்புகளில் ஒன்று.
“என்ன தவம் செய்தனை யசோதா, பரப்பிரும்மமே உன்னை அம்மா என்றழைத்திட” என்று உருகிப்போய் ஒரு பக்தர் பாடுகிறார்.
இம்மாதிரி மனதை நிறையச் செய்யும் பல விஷயங்கள் இந்து மதத்தில் உண்டு. அவற்றையெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\சொல்ல ஆசைப்பட்டால் நான் சொன்னதுக்கு மறுப்பு கருத்து சொல்லனும், அதை விட்டு நான் எடுத்த வாந்தியை நக்க கூடாது!//
லக்கி, தமிழ் ஓவியா, மைக், மதிமாறன், செந்தழல் ரவி வகையறா நமக்கு பிடிக்காவிட்டாலும் அதெல்லாம் ஒரிஜினல், ஆனால் நேவீர் வடிவேலு பாணி நானும் ரவுடி தான் காமெடி பீஸ்.
ஆங், அப்புறம் விஷயத்துக்கு வருகிறேன். அவரவர் கருத்து அவரவருக்கு. நம் கருத்தை அடுத்தவர் மீது திணிப்பதோ அல்லது அடுத்தவர் நம்பிக்கையை கேவலமாக கமென்ட் அடிப்பதோ அறிவுள்ளவர் செயல் அல்ல.
அதான் நீரே ஒத்துக்கொண்டு விட்டீர், நீர் எடுப்பதெல்லாம் வாந்தி என்று, நன்றி. அடுத்து வாந்தியை நக்குவதேல்லாம் நம்மை போன்ற அபூர்வ பிரவிகல்லுக்கே உரிய குணம் போலுள்ளது. இப்போது தான் கேள்வி படுகிறேன், ச்சீ ச்சீ இந்த கேட்ட பழக்கத்தை விட முயற்சியும் பயிற்சியும் எடுக்கவும்.
Thanks for your updation.
Post a Comment