தோ அஞ்சானே:
எனக்கு கேட்கப்பட்ட 32 கேள்விகளில் நான் கடைசியாக அழுதது எப்போது என்ற கேள்விக்கு கீழ்க்கண்ட பதிலை அளித்தேன்.
“என் தந்தை சமீபத்தில் 09.09.1979 அன்று இறந்தபோது எனக்காக அழுதேன். அதற்கு முன்னாலும் பின்னாலும் சினிமா/நாடகங்கள்/நாவல்கள் ஆகியவற்றில் வரும் பல சோகக் காட்சிகளில் அழுதிருக்கிறேன்”.
அம்மாதிரி என்னை அழச்செய்த ஒரு காட்சி பற்றி இங்கே கூறுவேன். என்ன, அது என்னை மகிழ்ச்சியில் அழச்செய்தது. சமீபத்தில் 1977-ல் வந்த ஹிந்தி படம் தோ அஞ்சானே. நடிப்பு அமிதாப் பச்சன் மற்றும் ரேகா. சண்டைக் காட்சிகளே இல்லாத அமிதாப்பின் படம். அமிதாப்பும் ரேகாவும் தம்பதியர்கள். கல்கத்தாவில் வாழ்கின்றனர். ரேகாவுக்கு சினிமாவில் நடித்து புகழ் பெற ஆசை. அவர்களுக்கு ஒரே மகன், பிட்டு, சுமார் இரண்டு வயது இருக்கும். மகன் மேல் அமிதாப்புக்கு உயிர், மகனுக்கும் அவ்வாறே. முதலில் அவர்கள் சந்தோஷமாகப் பாடும் பாடலை கீழே பார்த்து விடுங்கள். அப்போதுதான் நான் சொல்ல வருவதை இன்னும் நன்றாக உணர இயலும்.
அமிதாப்பின் நண்பன் பிரேம் சோப்ரா அவர்கள் வாழ்வில் குறுக்கிடுகிறார். ரேகாவின் சினிமா ஆசைக்கு தூபம் போட்டு, அமிதாப்பை ஓடும் ரயிலிருந்து தள்ளிவிடுகிறார். தெய்வாதீனமாக பிழைத்த அமிதாப் ஒரு பணக்கார தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டு அவர்கள் மகனாக பம்பாயில் இருக்கிறார். ஆனால் அவருக்கு தான் யார் என்பது மறந்து விட்டது. திடீரென சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அவருக்கு தன் பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வருகின்றன.
தன் வளர்ப்பு தந்தையிடம் கூறிவிட்டு அவர் பம்பாய் செல்கிறார். அலெக்ஸாண்டெர் ட்யூமாவின் மோந்த் க்றிஸ்தோ பிரபு ரேஞ்சில் ரேகாவையும் பிரேம் சோப்ராவையும் பழி வாங்க ஆரம்பிக்கிறார். அது தனி சேனலில் போகிறது.
அதே சமயம் தனது மகன் பிட்டு படிக்கும் ரெசிடென்ஷியல் பள்ளிக்கு (டேராடூனில் இருக்கிறது) அவனைப் பார்க்க செல்கிறார். அவர் தன் மகனை காணும் காட்சி, மகன் அவரை எங்கேயோ பார்த்திருக்கும் முகபாவத்தில் தன் நினைவுகளுடன் தடுமாறுவது எல்லாவற்றையும் படத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். அதில் வரும் மனதை உருக்கும் இப்பாடலையும் கீழே பார்க்கலாம்.
ஆவின் நிறுவனம் செய்யும் குளறுபடிகள்
ஆவின் பொருட்களில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் நீல லேபல் அரை லிட்டர் பாக்கெட்டுகள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 9 ரூபாய்க்கு மேல் அதிக விலையிலேயே விற்கப்படுகின்றன. கொழுப்பு நீக்கப்பட்ட இந்த toned பால் திருமலா மேக்கில் 11 ரூபாய் ஆகிறது. இந்த கணிசமான விலை வேறுபாட்டினால் ஆவின் பால் 9.50 அல்லது 10.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அதிக விலை நாணயமற்ற இடை தரகர்களுக்கு போகிறது. ஆவின் அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் கவனிக்கப் படுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது. சில நாட்களுக்கு முன்னால் ஆவின் தரப்பிலிருந்து இந்த அதிகாரமற்ற விலை உயர்வு மறுக்கப்பட்டு விளம்பரங்கள் வந்தன. அதிக விலை தர வேண்டாம் என பொது மக்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். சில நாட்களுக்கு அடாவடிக்காரர்கள் அடக்கி வாசித்தனர். ஆனால் இது நேற்றிலிருந்து மீண்டும் நடக்கிறது.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த விலை குறைவு சப்சிடி ஆக இருந்தால், அதை விலக்குவதே முறை. ஆவின் பால் வாங்குபவர்கள் அப்படியெல்லாம் ஏழைகள் அல்ல. இதனால் இடை தரகர்கள்தான் பலன் அடைகிறார்கள். சப்சிடி என்ற விஷயமே ரொம்ப அபாயகரமானதே.
சாத்திரம் சொன்னதில்லை
சோவின் இந்த நாடகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக எல்லா பாத்திரங்களுமே அவரது “எங்கே பிராமணன்” சீரியலில் புகுத்தப்பட்டதாக எனக்கு ஓரிரு முறைகள் பின்னூட்டங்கள் வாயிலாக கூறப்பட்டது. கடந்த சனியன்றுதான் நான் அப்புத்தகத்தை கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகத்தில்ருந்து எடுத்து வந்து வாசித்தேன்.
பின்னூட்டங்களில் கூறப்பட்டது உண்மையே. ஆனால் இந்த பாத்திர சேர்ப்பு நான் இதுவரை பார்த்தவரை எங்கே பிராமணன் சீரியலில் அற்புதமான முறையில் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் வரும் எபிசோடுகளில் பார்க்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
13 hours ago
9 comments:
1.மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா செய்யும் முயற்சியா?
2.கச்சத் தீவு பிரச்னையைத் தீர்ப்பதில் அக்கறை யாருக்கும் இல்லையா?ந்மது கடற் பரப்பின் பாதுகாப்பு கேள்விக்குறியா?
3.மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை எழுப்ப நினக்கும் லாலுவின் உண்மையான நோக்கம் என்ன?
4.தனியார் துறையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசின் நோக்கம்?
5.மாதச் சம்பளக்காரர் வீட்டுக்கு எடுத்துச் செல்வது 40% மட்டுமே என்ற ஆய்வு இந்தியாவும் அமெரிக்காவின் பாணியிலா?
ஆவின் பால் கிரீன் மேஜிக்(பச்சை நிறப் பொதியில்)
'நிலைபடுத்தப்படட் பால்' என்று போட்டுருக்காங்க.
கொஞ்சம் ஸ்பெல்லிங் செக் பண்ணி இருக்கக்கூடாதா சம்பந்தப்பட்டவர்கள்?
தமிழக அரசு தமிழை வளர்ப்பது இப்படித்தானா?
”அன்புடன்,
எங்கே பிராமணன்”
என்று போட்டிருக்கிறீர்களே....
@அனானி
நன்றி. இதுவரை நான் கவனிக்கவேயில்லை. இப்போது பிழை திருத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. In your opinion, what is the best way to tackle communist terrorism?
2. Communisa teeverivadam Tamilnattil nulaya vayppu ullada? (They are having base in Andhra)
3. Why no political parties raised their voice on issue mentioned by Dinamani in their editorial வாளாவிருக்கிறோமே ஏன்?
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=75040&SectionID=132&MainSectionID=0&SEO=&Title=தலையங்கம்:+வாளாவிருக்கிறோமே,+ஏன்?
கேள்வி நேரம்:
கேள்வி 1: ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு வார்த்தை E யில் ஆரம்பித்து E இல் முடியும்! பல சமயம் அதில் ஒரே ஒரு லெட்டர்தான் இருக்கும்! அது என்ன?
கேள்வி 2: ஒரு பணக்காரருக்கு இரண்டு மகன்கள்! ஒரு நாள் அவர் சாகக் கிடக்கிறார்! அப்போது அவர் இருவரையும் கூப்பிட்டு “நான் ஊரில் நடுவில் உள்ள ஒரு இடத்தில்
ஒரு புதையலை வைத்துள்ளேன்! நீங்கள் இருவரும் தனித்தனி குதிரையில் சவாரி செய்து அந்த இடத்தை கண்டுபிடிக்கவேண்டும்! யார் குதிரை கடைசியாக அங்கே போய்
சேருகிறதோ அவருக்கே அந்த புதையல்” என்று சொல்லிவிட்டு செத்துவிடுகிறார்! அவருடைய எண்ணம் என்னவென்றால் புதையல் மெதுவாக கிடைக்கட்டுமே என்று!
அதனால் இருவரும் தனித்தனி குதிரையில் ம்ம்ம்ம்ம்மெதுவாக அடிமேல் அடிவைத்து செல்கிறார்கள்! இருவரையும் கண்ட ஒரு முனிவர் என்ன விஷயம் என்று கேட்க
அவர்கள் விஷயத்தை சொல்ல, அவர் இருவர் காதிலேயும் ஒன்றை சொல்கிறார்! பிறகு நடந்தது என்னவென்றால், இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு
குதிரையில் பறக்கிறார்கள் அந்த புதையலை தேட! அந்த முனிவர் என்ன சொன்னார்? அதற்குப் பின் நடந்தது என்ன? அவர்கள் ஏன் அப்படி வேகமாக போகிறார்கள்?
//கடந்த சனியன்றுதான் நான் அப்புத்தகத்தை (சாத்திரம் சொன்னதில்லை) கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகத்தில்ருந்து எடுத்து வந்து வாசித்தேன்.//
மறுபடியும் சொல்கிறேன். அந்த நாடகத்தை டிவிடியில் ஒருமுறை பார்த்துவிடுங்கள். சோவின் நடிப்பு அதி அற்புதம்!!! மற்றபடி "பாத்திர சேர்ப்பு நான் இதுவரை பார்த்தவரை எங்கே பிராமணன் சீரியலில் அற்புதமான முறையில் செய்யப்பட்டுள்ளது" என்பது உண்மைதான்.
இன்று வடகலை தென்கலை எல்லாம் அமர்க்களப் பட்டதாமே? சந்தோஷம் தானே? :-))
108 எபிசோடுகளுடன் முடிந்து விடுமோ?
ரவிஷா இதோ பிடியுங்கள்:
கேள்வி1: ENVELOPE
கேள்வி : குதிரைகளை மாற்றிக்கொண்டார்கள்!
//108 எபிசோடுகளுடன் முடிந்து விடுமோ?//
முடிந்தே விட்டது!!!!!
Post a Comment