6/14/2009

தமிழ் விக்கிபீடியா பற்றிய கலந்துரையாடல் - 13.06.2009

கிழக்கு பதிப்பகத்து மொட்டை மாடியில் 13.06.2009 மாலை 6.30-லிருந்து 9.00 மணி வரை நடந்தது இக்கலந்துரையாடல். நான் பார்த்த பதிவர்கள் சிமுலேஷன் (long time no see), லக்கிலுக், அக்னி பார்வை. சற்றே லேட்டாக வந்த ப்ரூனோ என்னருகில் வந்து அமர்ந்தார். முதலில் வரவேற்புரை நிகழ்த்தியவர் என்.எச்.எம். எழுத்தியின் சிருஷ்டிகர்தா நாகராஜன். தமிழ் விக்கிபீடியாவில் முனைந்து செயல் புரியும் ரவிசங்கர் அது பற்றி பேச ஆரம்பித்தார்.

அதில் செயலுடன் வேலை செய்பவர்கள் வேறு சிலரும் குறிப்பிடப்பட்டனர் [மயூரநாதன் (சுமார் 800 கட்டுரைகள் எழுதியுள்ளார்), சுந்தர், சிவகுமார்]. மேலும் இருவர் கூட்டத்துக்கே வந்திருந்தனர் [அருநாடன் (புவிவியல் - ஊர்கள், இடங்கள்), செல்வம் (பன்னீர் செல்வம், செல்வம் தமிழ் என்னும் பெயரில் எழுதுபவர், 300 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளார்)]

இந்த விக்கிபீடியா பற்றிப் பார்க்க கூகள் தேடு பெட்டியில் வெறுமனே wikipedia என தட்டச்சு செய்து பார்த்தால் 523,000,000-க்கும் அதிகமாக ஹிட்ஸ் கிடைக்கின்றன. ஆகவே பின்புலன் வேண்டுபவர்கள் அங்கு கிடைக்கும் பல பக்கங்களைப் பார்த்து கொள்ளலாம். நான் இப்பதிவில் குறிப்பிட விரும்புவது தமிழில் விக்கிபீடியாவின் அனுபவம் பற்றி இக்கலந்துரையாடலில் கூறப்பட்டவையே.

நூற்றுக்ககணக்கான மொழிகளில் செயல்படும் இந்த விக்கி தளம் தமிழைப் பொருத்தவரை உருவாக்கம் என்னும் நிலையில் உள்ளது. இதில் பங்களிப்பவர்களில் தமிழகத் தமிழர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். வெளிநாட்டுத் தமிழர்களே அதிகம் உள்ளனர். இந்தக் கலந்துரையாடல் அதிகம் தமிழகத் தமிழர்களை சேர்க்கும் முயற்சியாகவே முன்னிருத்தப்பட்டது.

முதலில் அறிமுக உரையாற்றிய ரவிசங்கர் தமிழ் தளத்தில் செய்யப்படும் முயற்சிகள் பற்றிக் கூறினார். விக்கிபீடியா என்பது பல பொருளடக்கங்களுக்கான கலைக்களஞ்சியங்களை கூட்டு முயற்சியாக தயாரிக்கும் செயல்பாடே. எதைப்பற்றி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு கட்டுரை அச்சானதும் அதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். இம்மாதிரி முயற்சிகளில் ஒரு ஒருங்கிணைப்பு மிக மிக அவசியம். அதை தருவதுதான் நிர்வாகிகளும் அதிகாரிகளும். கட்டுரைகளை தருபவர்கள் பங்களிப்பவர்கள். அவற்றை படித்து பயன் பெறுபவர்கள் பயனர்கள் ஆவர். ஒருவரே பயனராகவும் பங்களிப்பவராகவும் உருவெடுக்கலாம்.

பயனர் கணக்கை உருவாக்கி, கடவுச் சொல்லை உள்ளிட்டு புகுபதிகை (log in) செய்வதன் அவசியத்தை நான் கேட்டேன். எந்தத் திருத்தத்தையும் இதெல்லாம் செய்யாமலும் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்பவர்களது ஐ.பி. முகவரி அழிக்க முடியாத வண்ணம் பதிவாகிவிடும். மாற்றங்கள் பக்கத்தில் அது தேதி மற்றும் நேரத்துடன் உள்ளே உட்கார்ந்து விடும் என ரவிசங்கர் கூறினார். ஆனால் பயனராக கடவுச்சொல் உதவியோடு உள்ளே வந்தால் பயனர் பெயர் மட்டும்தான் தெரியும் என்றார். ஏதேனும் ஒரு மொழிக்கான விக்கிபீடியாவில் இவ்வாறு பதிவு செய்தாலே போதும் அதுவே எல்லா மொழிகளுக்கும் செல்லுபடியாகும் எனவும் அவர் கூறினார். முக்கியமாக பதிவான ஒரு பயனர் சொல்லை இன்னொருவர் தனக்காக உருவாக்கிக் கொள்ள முடியாது என்றும் கூறினார் (ரொம்ப முக்கியமான பாதுகாப்பு - போலி டோண்டு என யாராவது வந்தால் அவன் போலியாகவே அடையாளம் காணப்படுவான்!)

பிறகு ஒரு கட்டுரையை உருவாக்கிக் காட்டினார். அதில் செய்யப்படும் மாற்றங்களையும் காட்டினார். செய்முறைகள் பிளாக்கரில் செய்வது போலத்தான் கிட்டத்தட்ட இருந்தன. என்ன, பிளாக்கரில் அவரவர் வலைப்பூவை வரைவாக வைத்து கொண்டு பிறகு இறுதி வடிவம் தரலாம். இங்கோ இறுதி வடிவம் என ஒன்றும் கிடையாது அவ்வளவே. நீங்கள் போட்டது உடனுக்குடன் வந்து விடும். அடுத்து வேறு யாராவது மாற்றினால் அதுவும் வரும். ஆகவே இதை உருவாக்கியவர் என சட்டென வெளிப்படையாகத் தெரியாது. ஆக வலைப்பூக்களில் தங்கள் படைப்புகளை பார்த்து மகிழ்ந்து பாராட்டுகள் (சமயத்தில் உதைகள் கூடத்தான்) பெறும் அனுபவம் இங்கு கிடையாது. ஆகவே இதுவே இங்கு பலர் உள்ளே வரத் தடையாக இருக்கிறது.

அப்படியென்றால் உள்ளே வருபவர்களுக்கு என்னதான் கிடைக்கிறது? ஒரு புது விஷயத்தை உருவாக்குவதில் உங்கள் பங்களிப்பை அளித்து அதனால் வரும் மனத் திருப்திதான். அதே சமயம் நீங்கள் எவ்வளவு தொகுப்புகள் செய்துள்ளீர்கள், எவ்வளவு கட்டுரைகளில் பங்கு கொண்டுள்ளீர்கள் என்பனவற்றை உங்கள் பயோடேட்டாவில் சேர்த்து கொள்ளலாம்.

பதிவர் குழலி அவர்கள் இது சம்பந்தமாக எழுதிய பதிவைக் குறிப்பிட்டேன். அதற்கு ஒரே மாற்று எல்லோரும் விக்கிபீடியாவில் பயனராக நுழைவதே. வெளியிலேயே நின்று புறக்கணிப்பவர்களுத்தான் இழப்புகள் என கூறப்பட்டது. மருத்துவர் ப்ரூனோவும் இதை வலியுறுத்தினார்.

விக்கிபீடியாவுக்கு வரும் கட்டுரைகளுக்கு காப்புரிமை கிடையாது. அதே சமயம் காப்புரிமைக்குட்பட்ட விஷயங்களை இதனுள் போடுவதும் ஏற்கப்படாது. நான் எனது வலைப்பூ கட்டுரைகளை இதில் போடலாமா என்ற கேள்விக்கு, நான் போட்ட வினாடியிலிருந்து எனது அக்கட்டுரை எல்லோருக்கும் சொந்தமாகி விடுகிறது. ஆகவே யார் வேண்டுமானாலும் அதை எங்கும் எடுத்து கையாளலாம், திருத்தங்கள் செய்யலாம் எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பிலிருந்து இது வரை வெளிப்படையாக உதவிகள் என வரவில்லை. இருப்பினும் மறைமுகமாக சில உதவிகள் கிடைத்தன என ரவிசங்கர் கூறினார். கலைச்சொற்கள் பாவிப்பதில் உள்ள சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டன. ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது போன்ற அளவில் தமிழில் உதவி பக்கங்கள் இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதை ரவிசங்கர் ஒத்து கொண்டார். இது விஷயமாக வேலைகள் நடக்கின்றன என்றும் கூறினார். பதிவர் லக்கிலுக் தான் எழுதிய ஒரு கட்டுரை திடீரெனக் காணாமல் போனதாகக் கூறினார். பல சமயங்களில் சர்ச்சை மிக அதிக அளவில் போகும்போது சில கட்டுரைகள் பூட்டப்படலா என ரவிசங்கர் கூறினார்.

இப்படியே கலந்துரையாடல் நடந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திடீரென மணி பார்த்தால், கிட்டத்தட்ட ஒன்பது மணி ஆகியிருந்தது. விடை பெற்று கொண்டு கீழே வந்து காரில் ஏறிச் சென்றேன்.

ஒரு நல்ல அனுபவமாக இதை நான் பார்க்கிறேன்.

இந்த கூட்டத்தில் நடந்த விவாதங்களை ஒலிவடில் கேட்க, இங்கே செல்லவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

குழலி / Kuzhali said...

//பதிவர் குழலி அவர்கள் இது சம்பந்தமாக எழுதிய பதிவைக் குறிப்பிட்டேன். அதற்கு ஒரே மாற்று எல்லோரும் விக்கிபீடியாவில் பயனராக நுழைவதே. வெளியிலேயே நின்று புறக்கணிப்பவர்களுத்தான் இழப்புகள் என கூறப்பட்டது.
//
நல்லா கூட்டம் சேர்க்குறாங்கய்யா, இவங்க என்னவேணா எழுதுவாங்க கேட்டா வா வந்து சேர்ந்துக்கோ என்பார்கள், என் வலைப்பதிவில் நான் அட்மினாக இருந்து கொண்டு அத்தனை பேரையும் கேவலமாக எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்வோம் அதில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினால் நடைமுறை பிரச்சினைகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வா நீங்களும் என் வலைப்பதிவில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்பது எந்த விதத்தில் நியாயம்?

//வெளியிலேயே நின்று புறக்கணிப்பவர்களுத்தான் இழப்புகள் என கூறப்பட்டது.//
என்ன மாதிரியான இழப்புகள்? இதைத்தான் பச்சையாக சொல்லப்போனால் ரவுடித்தனம் என்பது, அரசாங்கத்தின் சிஸ்டத்தின் குறைகளை சுட்டி காட்டினால் உள்ள வந்துக்கோ இல்லைன்னா உனக்கு தான் இழப்பு என்பது போலவே... விக்கிபீடியா என்பது பலரின் உழைப்பால் உருவாகுவது யாருக்கும் பிச்சை போடுவது அல்ல

Ginger said...

தமிழ் விகியில் ஒரு தலிபான் குழு இயங்குகிறது. அதன் முக்கிய நோக்கம் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை எடுக்க வேண்டும். அதனால் மற்றவர்கள் கட்டுரை எழுத வேண்டும், இவர்கள் சென்று கிரந்த எழுத்துகளை மாற்ற வேண்டும். அது தவிற, சமஸ்கிருத சம்பந்த வார்த்தைகள் இருந்தால், அதை `சுத்த` தமிழில் எழுத வேண்டும். தமிழ்விகியை கண்ட்ரோல் செய்யும் 4/5 நபர்கள் இந்த புல்லுரிவு கொள்கையைத்தான் தீவிரமாக கடைப் பிடிக்கின்றனர். உதாரணமாக `இஸ்லாம்` என கட்டுரை யாராவது எழுதினால், அதை `இசுலாம்` என மாற்றுவர். யாராவது லத்தீன் கவி ஹோரேஸ் என கட்டுரை எழுதினால், அதை ஓராசு என மாற்றுவர்.

மு.க.ஸ்டாலின் பெயரையும், இசுட்டாலின் என மாற்றினர். ஆனால் இதற்கு நீண்ட சர்ச்சைகளுக்கு பின் ஸ்டாலின் என மாற்றப் பட்டது. இந்த தலிபானின் கூற்றுப்படி தமிழ்விக்கி , ஊடகங்கள், தமிழிலக்கியம், சாதாரண தமிழரகளின் தமிழ் எழுத்துகள், இவையெல்லாம் கிரந்த எழுத்துகளால் கெடுக்கப் படுவிட்டன. தமிழ்விகி, புதிய கிரந்தம் தவிற்கும் ஊடகம். அதனால் மற்றவர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்; இந்த தலிபான் குழு அதிலிருந்து கிரந்த எழுத்திகளையும், வட மொழி வார்த்தைகளையும் அகற்ற வேண்டும். இதுவே இவர்களது புல்லுருவி கொள்கை. இந்த intellectual vandalism நிறுத்தாத வரை, மற்றவர்கள் தமிழ்விகியில் போகக் கூடாது.

இந்த தலிபான் குழு இப்படி ஆயிரக்கணக்கான இடங்களில் வேண்டலிசம் செய்துள்ளது.
எது விகிபீடியா இல்லை என்று http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not சொல்கிறது. விக்கி ரூல்களே, இது Wikipedia is not a soapbox, propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. என உறுதியாக உள்ளன. ஆனால் இந்த புல்லுரு்வி தலிபான், தமிழ் விக்கியை கிரந்த ஒழிப்பு மேடையாகத்தான் பயன் படுத்துகிரது.

அதனால் கட்டுரைகள் பொதுவாக `சப்` என்று உள்ளன. அதற்கு மேல் எவ்வளவோ தகவல், இணப்பு, இலக்கண குறைபாடுகள். ஆங்கில விக்கியோட, தமிழ் விக்கியை கம்பேர் செய்தால், தமிழர்களுக்கு தெரிந்த சப்ஜெக்டான ` காமராசர் வாழ்க்கை, அல்லது ராஜாஜி அல்லது அண்ணாதுரை வாழ்க்கை, பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இந்த புல்லுருவி தலிபான்களினால் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சியின்றி , ஒரு dwarf ஆக உள்ளது

Ginger said...

பிராபகரன்/மதிவதனி கடத்தல் கல்யாணம் பற்றி குழலி பொய் என ஒதுக்கி விட்டார். மதிவதனி கடத்தல் நிஜம். ஆனால் அதனால் நேரடியாக கல்யாணம் நடக்கவில்லை. மதிவதனியின் கடத்தல் பிரபாகரன் கல்யாணம் நிமித்தம் இல்லை.

இலங்கை பத்திரிக்கையாளர், தற்போது கனடா வாசி டி.பி.எஸ்.ஜயராஜ் சமீபத்தில் பிரபாகரனின் வாழ்க்கையை பற்றி சுவாரசியமாக எழுதியுள்ளார்.
http://dbsjeyaraj.com/dbsj/archives/650

Cupid or “Manmathan” struck Prabhakaran with his arrows in 1983-84.

Some displaced undergraduates were on a death fast at the Jaffna university premises in 1983 september. When the condition of some girls deteriorated the LTTE broke the fast and abducted those fasting. They were brought to Tamil Nadu.

At one stage four of the abducted girls stayed at the residence of Anton and Adele Balasingham and used to accompany them to the LTTE office in Indranagar. The fairest and prettiest of them all was Madhivadhani Erambu. Her father Erambu was a schoolmaster from Pungudutheevu in Jaffna.

During the Indian “Holi” festival people spray coloured powder and coloured water on each other. Madhivadhani held a bet with her friends and boldly drenched Prabhakaran with turmeric dissolved water. Praba was furious and berated her. Madhi started sobbing.

Hours later when the tiger supremo was leaving the office , he found her in a corner weeping.He went up to her and spoke softly asking her not to cry. Madhivathani looked up at him with tear-filled eyes. Praba’s heart was pierced

Thereafter Prabhakaran began visiting the Balasingham’s frequently. He brought flowers and sweets for Madhi. Prabhakaran had been a shy, introverted person and had never mingled with girls outside his family. This was a new experience. Anton Balasingham encouraged the romance. They married in 1984.

Children

There was a hitch. The LTTE code of conduct tabooed marriage. So the top commanders were summoned to Tamil Nadu and a Central committee meeting convened.

There a new regulation was introduced enabling those with five years experience to marry. The Madhi-Praba marriage took place in a temple with senior tiger commanders including KP in attendance.

They had three children. The eldest was named Charles Anthony born in 1985. He was named after Praba’s best friend and military commander Charles Anthony alias Seelan who died in Meesalai, Chavakachcheri.

The next was Duvaraga the daughter born in 1986. She was named after a favourite bodyguard Mayooran whose real name was Duvaaragan. The third was a son born in 1997. He was named Balachandran after Madhivathani’s own brother who also joined the LTTE and died in combat.

Vajra said...

//
இந்த intellectual vandalism நிறுத்தாத வரை, மற்றவர்கள் தமிழ்விகியில் போகக் கூடாது.
//

On the contrary.

பலர் விக்கியில் நுளைந்து இந்த கிரந்த எழுத்து எதிர்ப்பாளர்கள் செய்யும் குப்பைத்திருந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்டுரைகளை நல்ல தமிழில் அளிப்பதில் தான் இருக்கிறது.

Ginger said...

வஜ்ரா, easier said than done. தமிழ்விகி நிர்வாகத்தினரே இந்த குழு தான். அவர்களை பொருத்த வரை `நல்ல தமிழ்` கிரந்தமற்ற, வடமொழி கலப்பற்ற `தூய தமிழ்` அதனால் அவர்கள் அந்த கொள்கையை மும்மரமாக செய்து கொண்டுள்ளனர். உதாரணமாக, ஜெர்மன் ஒரு பெயரில் கட்டுரை இருதது. ஜெ மேல் வெறுப்பினால், அதை இடாயுச்சு என மாற்றினர். நீங்கள் தமிழ் கூகிளில் போட்டால், ஜெர்மன் என்றுதான் தமிழ்நாட்டில் தெரியும். ஆனால் அந்த குழு மனதில் ஜெ வரக்கூடாது. இதை ஆங்கிலத்தில் `cutting one's own nose to spite somebody' என சொல்வர். அதுதான் தமிழ்விகி. இன்னொரு உதாரணம் எசுப்பானியம். இது என்ன என்று நீங்கள் தலையை குடைந்து கொண்டிருந்தால், இது ஸ்பானிஷ். மறுபடியும், தமிழ் ஊடகங்களிலும், மற்ற தமிழர்களும் ஸ்பானிஷ் என்று தான் சொல்லுவ்வர்கள். ஆனால் `cutting one's own nose to spite somebody' கொள்கை படி, அது எசுப்பானியம் ஆகிவிட்டது. மற்றவர்கள் கட்டுரை எழுதணும், தலிபான் குழு `சலவை` செய்யும்

Anonymous said...

1.இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்று தருவோம், எனும் ப. சிதம்பரம் அவ்ர்களின் கூற்று 2011 தமிழக தேர்தலை மனதில் வைத்தா?
2.தமிழக சிறைகளில் நடநத நிகழ்ச்சிகளை பார்த்தால் சினிமாவையும் மிஞ்சிவிடும் போலுள்ளதே?
3.ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஸ்டாலினின் திறமைக்கு ஒரு அச்சாரமா?
4. பெரும் லாபம் சம்பாதிக்க மாம்பழங்களைப் பழுக்க வைக்கப் கார்பைடு கல்லை பயன்படுத்தும் வியாபாரிகளை?
5.சென்னையில் ஹோட்டல் பண்டங்கள் விலை உச்சத்துக்கு போய் விட்டதே அரசின் கட்டுப்பாடு எங்கே போச்சு( 20 ரூபாய் அள்வு சாப்பாடு உட்பட்)

Vajra said...

ஜிஞ்சர் (சிஞ்சர் :D),

ஒரு நாளைக்கு 10 கட்டுரை வந்தால் திருத்தலாம். 100-200 வந்தால் ?

எக்கச்செக்கக் கட்டுரைகளை உருப்படியான புரியும் தமிழில் கொடுத்தால் இந்த வ.மொ.வெ.குழு அதை திருத்துவதற்கும் தாவு தீர்ந்துவிடும். வேறு வழியில்லாமல் பிழைப்பைப் பார்க்கப்போய்விடுவார்கள்.

க. கா. அ. சங்கம் said...


அரசாங்கத்தின் சிஸ்டத்தின் குறைகளை சுட்டி காட்டினால் உள்ள வந்துக்கோ இல்லைன்னா உனக்கு தான் இழப்பு என்பது போலவே...


அரசாங்கத்தின் குறைகளைத் திருத்தவேண்டும் என்றால் உள்ளே புகுந்து தான் திருத்த முடியும். வெளியிலிருந்து "திருந்து....திருந்து" என்று மந்திரம் ஓதிக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது.

அதுசரி, "செயல்பாட்டாளிகளாக" தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளும் கூட்டத்தினருக்கு இதெல்லாம் விழங்காது.

ரவிசங்கர் said...

கூட்ட நிகழ்வுகள் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி.

வெள்ளை மாதவன் said...

/////நல்லா கூட்டம் சேர்க்குறாங்கய்யா, இவங்க என்னவேணா எழுதுவாங்க கேட்டா வா வந்து சேர்ந்துக்கோ என்பார்கள், என் வலைப்பதிவில் நான் அட்மினாக இருந்து கொண்டு அத்தனை பேரையும் கேவலமாக எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்வோம் அதில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினால் நடைமுறை பிரச்சினைகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வா நீங்களும் என் வலைப்பதிவில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்பது எந்த விதத்தில் நியாயம்?/////

இதைவிட நியாயமான செயல்பாடு என்ன இருக்கமுடியும் என்று புரியவில்லையே?

உங்கள் பிரச்சனைதான் என்ன குழலி?

Simulation said...

விக்கிபீடியா கலந்துரையாடலுக்குப் பின்னர் நாமும் ஏதாவது எழுதலாமே என்றெண்ணி, "செயிண்ட் மேரீஸ் சாலை" பற்றி ஒரு சின்னஞ்சிறு கட்டுரை வரைந்தேன். அதில், இந்தச் சாலையில் வசிக்கும் பிரபலங்களாக முன்னாள் தலைமத் தேர்தல் ஆணையர் சேஷன், மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ், பொள்ளாச்சி சக்தி மகாலிங்கம் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால், யாரோ ஒரு பிரஹஸ்பதி கட்டுரையில் மாற்றம் செய்திருந்தார். அது என்னவென்றால், "சேஷன்" அவர்களது பெயரை "சேசன்" என்று செய்த மாற்றம்தான் அது.

- சிமுலேஷன்

புருனோ Bruno said...

//உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் //

ஐயா புண்ணியவான்களே

இப்படி பதிவு பதிவாக வந்து அழைப்பு வைக்கும் நேரத்தில் உங்கள் தளத்தின் நிரலை சரிபாருங்கள்

Parse error: syntax error, unexpected '?' in /home/tamil100/public_html/submit/faq-en.php on line 2

நாங்கள் வாக்களிக்க நினைத்தாலும் முடியவில்லை

புருனோ Bruno said...

//ஜெ மேல் வெறுப்பினால், அதை இடாயுச்சு என மாற்றினர். //

மிக சிறந்த காமெடி

அப்படி என்றால்,
ஜ னகராஜ்,
ஜா வர் சீதாரமன்
ஜே ம்ஸ் பாண்ட்,
ஜோ திகா,

ஆகியோர் மேலும் விக்கிபிடியர்களுக்கு காண்டா

என்ன கொடுமை சார் இது

Ginger said...

ஜெர்மனி, ஜெர்மன் மொழி என தலைப்புகளை வைத்திருக்குலாம். ஜெ மேது காழ்ப்பால், ஜெர்மனி, யெர்மனி, செர்மனி, என்று பல இடஙக்ளில் மாற்ற்ப்பட்டுள்ளது. ஜெர்மன் மொழியின் கதி, செர்மன் மொழி இல்லை, ஆனால் இடாயுச்சு.

ஆயிரக்கண்க்கான இடங்களில் எழுத்து வேண்டலிசம் நடக்குது. உதாரண்மாக இந்த நாடு பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன

செருமனி
ஐசுலாந்து
சுவீடன்
லீக்டன்ஸ்டைன்


இதெல்லாம் ஒரு மைக்ரோ சாம்பிள். நிர்வாகிகள் ஒரு ”சலவை பட்டாளத்தை” நியமித்துள்ளனர் போலுள்ளது, அதன் முக்கிய வேலை இந்த வேண்டலிசம். இது தமிழ் விகியின் Obsessive-compulsive Disorder. சிலர் திருப்பி திருப்பி கை அலம்புவது போல


ஜிஞ்ஜர்

Vajra said...

உயர் திரு சிமுலே(ச)ஷன்,

சேஷன் பெயரில் கிரந்த எழுத்து வருவதால் அப்படி மாற்றியிருக்கிறார்.

சிமுலேஷன் என்கிற பெயரே முதலில் தமிழ் அல்ல சிமுலேஷன் என்பதை அவர்கள் அவர்கள் பாணியில் தமிழ்படுத்தினால் அனேகமாக "சிலுமிசம்" என்று கூட மாற்றலாம். ஆகவே மிகவும் ஜா(சா)க்கிரதையாக இருக்கவும்.

Simulation said...

when the name of Seshan is changed to Sesan, the name Nagesh from the same article is spared. I dont know why?

:(

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Anonymous said...

simulation,

Don't expect consistancy from Talibans.

அதே சமயம் , தலிபானின் inconsistancy அவர்களுக்கு உபயோகமாகத்தான் இருக்கும். ஏனெனெல், யாராவது கேட்டால், அவரக்ள் நோக்கத்தை கைகழுவுவதற்கு யூஸ்புல் ஆக இருக்கும். மேலும் 100% கன்ஸிஸ்டன்சியாக கிரந்த எழுத்துகளை எடுத்தால் ஒருவரும் அந்த பக்கம் செல்ல மாட்டார்கள். அதனால், ஒரளவு கிரந்தம் மக்களை இழுப்பதற்கு. கிரந்த அழிப்பு தங்கள் தினவுகளை சொறிவதற்கு.

Anonymous said...

குழலி சொல்வது போல் இவர்கள் பிச்சைப்போடுவது போல்தான் அழைக்கிறார்கள் இவர்களின் உழைப்பு மேய்ப்பது தான். விட்டால் இயேசுபிரான் போல மேய்ப்பாளராகிவிடுவார்கள். அதையும் பொருமையாக சொல்லிக்கொள்வார்கள் அதாவது தமிழ் விக்கியில் குப்பைகளை அள்ளுகின்றார்களாம். இந்த பேச்செல்லாம் உண்மையான தமிழறிஞருக்கு கூட வராது. விக்கிப்பட்டறைக்குபின் தெரிவிக்கப்பட்ட கருத்து என்ன தெரியுமா?--" நாம் ஒரு 6 மாதத்திற்கு புதுப்பயனர்களை விட்டு பிடிக்கலாம்". இதுதான் குப்பைகளை அள்ளுவதா? இதுதான் பண்பாடா? இதற்குப் பெயர்தான் நிர்வாகிகளா? யார் யாரை விட்டுப் பிடிப்பது? இப்படியெல்லாம் பேசுகின்றவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இது பொதுதளம் போல, சேவைத்தளம் போல செயல்படுவதில்லை தனியார் நிறுவனம் போலத்தான் செயல்படுகின்றது. நம் உழைப்பை கொடுத்து இவர்களிடம் அடிமைப்பட்டு கிடக்கவா? எமக்கு அடங்கியிருந்தால் இங்கு இரு இல்லாவிட்டால் ஒடு அவ்வளவு கீழாக தமிழன் மாறமாட்டான். அதற்கு வேறு ஏதாவது நாட்டிலிருந்து வேண்டுமானால் தேடலாம், ஆள் சேர்க்கலாம். ஊரை ஏய்த்து யாரும் அதிக நாள் வாழ்ந்ததுமில்லை. அதை எதிர்த்தவர் வீழ்ந்ததும் இல்லை. இதனால் எங்களுக்கு இலாபம் தான், கெட்டது என்று தெரிந்து விட்ட பிறகு அதற்கு ஏன் நாம் துணைபோக வேண்டும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது