6/05/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 86 & 87

பகுதி - 86 (04.06.2009)
வடமொழி தேவர்களுக்குரிய மொழி என அசோக் கூற, அது என்ன சார் தேவர்கள் மொழி வடமொழின்னு சொல்லறாங்களே. அது என்ன வடமொழி என சோவின் நண்பர் கேட்கிறார். சோ பதிலளிக்கிறார். தேவர்கள் பேசும் மொழி வடமொழி. அது ஒரு முழுமையான மொழி. மந்திரங்களில் த்வனி என்பது முக்கிய பங்கை வகிக்கிறது. வடமொழியிலே ஒவ்வொரு எழுத்துக்கும் தனி உச்சரிப்பு உண்டு. ஆகவே அதில் எழுதியிருப்பதை அப்படியே படித்தால் போதும், தவறின்றி பேசலாம். தமிழில் ka, kha, ga, gha ஆகிய சப்தங்களை தனியே பேதம் கண்டு படிக்கவியலாது.

தமிழும் வடமொழியும் இரு கண்கள். தமிழை நன்கு அறிந்தவரால் வடமொழியின் மகத்துவத்தை அறியாமல் இருக்க இயலாது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என தமிழின் உயர்வு பற்றி பேசிய பாரதியார் தமிழ்தாயே கூறுவது போல ஒரு பாடல் இயற்றியுள்ளார். அது:

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”

அதாவது வடமொழிக்கு நிகராக தானும் இருப்பதாக தமிழ்த்தாயே கூறுவது போல அப்பாடல் அமைந்துள்ளது. ஆக, இரண்டுமே உயர்ந்த மொழிகள்தான் என முத்தாய்ப்பாக முடிக்கிறார் சோ அவர்கள்.

அசோக்கும் சோபனாவும் பேசிக் கொண்டிருக்கும்போது வேதபாடசாலைக்கு தான் வந்த வேலை முடிந்த நிலையில் சாரியார் அங்கு வருகிறார். வீட்டுக்கு போகலாம அஎன அவர் கேட்க, வேதஃபாடசாலையை சுற்றிப் பார்க்கும் ஆவலை வெளிப்படுத்துகிறான் அசோக். அவனை தானே பாடசாலையை சுற்றிப் பார்க்க அழைத்து செல்கிறார் சாரியார் அவர்கள். நூலகத்துள் செல்கின்றனர். “கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பதை இங்குள்ள புத்தகங்களை பார்க்கும் போது நமக்கு நன்கு புலப்படும் எனக் கூறும் சாரியார், சில புத்தகங்களை எடுத்து காண்பிக்கிறார். சமணமதம், புத்தமதம் ஆகியவை பற்றியும் புத்தகங்கள் உள்ளன.

கீழே மாணவர்கள் வேதகோஷத்தில் ஈடுபட்டுள்ளனர். கம்பீரமான அந்த மந்திரங்கள் அசோக்கை என்னமோ செய்கின்றன. அச்சமயம் ஓதப்பட்டது என்ன மந்திரம் என சோவின் நண்பர் கேட்க, தைத்திரிய உபநிஷத்தின் தொடக்க வரிகள் என சோ தெளிவுபடுத்துகிறார். எல்லோரும் ஷேமமாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அவை ஓதப்படுகின்றன. அவற்றின் பொழிப்புரையையும் கூறுகிறார், அந்த உபநிஷத்தின் வேவேறு பகுதிகளையும் குறிப்பிடுகிறார். அவற்றை சொல்ல என் வசம் போதுமான சொற்கள் இல்லையாதலால் வீடியோ சுட்டியில் போய் பார்க்கவும்.

இப்போது சாரியார் வீட்டுக்கு போகலாமா என கேட்க, தான் இன்னும் சில நேரம் அங்கேயே இருக்க விரும்புவதாக அசோக் கூற, சாரியார் அப்படியே ஆகட்டும், என்ன இருந்தாலும் வேதம் சிறந்திருந்த தமிழ்நாடு அல்லவா எனக் கூறிவிட்டு விடைபெற்று செல்கிறார்.

“அதென்ன, தமிழகத்தில் வேதத்துக்கு மதிப்பிருந்ததா” என ஆச்சரியத்துடன் சோவின் நண்பர் கேட்க, சோ வழக்கம்போல இங்கும் மகாப்பெரியவரை கோட் செய்து பேசுகிறார். பல கல்வெட்டுகள் மூலம் அக்காலத் தமிழகத்தில் வேதத்துக்கு இருந்த பெருமையை பட்டியலிடுகிறார். வேதத்துக்குரிய ஆறு அங்கங்களை சடங்கங்கள் என்பார்கள். அதிலிருந்துதான் சடங்கு என்னும் சொல் வந்தது என்பது போகிறபோக்கில் அவர் தரும் தகவல்.

அசோக் ஒரு தனியிடம் பார்த்து தியானத்தில் அமர்கிறான்.

நடேச முதலியார் வீட்டில் ஒரு மினி மீட்டிங். அவருக்கு தன் பெண் சோபனாவின் காதல் விவகாரம், தெரிந்து விட்டது. வையாபுரியின் பிள்ளை பெருமாள் தனக்கு மாப்பிள்ளையாக வரவியலாது என்று அவர் சூளுரைக்கிறார்.

பகுதி - 87 (04.06.2009)
நாதன் வீட்டில் அசோக் வேதபாடசாலையில் தான் நண்பனாகப் பெற்ற சங்கரனுடன் பேசிக் கொண்டிருக்கிறான். நல்ல கட்டுக் குடுமியுடன் அந்த பிள்ளை படிப்புக்களை முகத்தில் வீச அமைதியாக அமர்ந்திருக்கிறான். நாதனும் வசுமதியும் உள்ளே வருகின்றனர். சங்கரனை பார்த்து அவன் யார் என அசோக்கை கேட்க, அவன் தான் சங்கர வேதபாடசாலைக்கு சென்றிருந்ததாகவும், அங்கு அவனுடன் சினேகம் ஏற்பட்டதாகவும் ஆகவே அவனை வீட்டுக்கு அழைத்து வந்ததாகக் கூறுகிறான். “உன் பெயர் என்னப்பா”? என அவர் யதார்த்தமாகக் கேட்க, அவனோ பிராமணர் சம்பிரதாயப்படி “அபிவாதயே ..” என்று ஆரம்பித்து தனது அறிமுகத்தை வடமொழியில் கூறுகிறார். நாதன் திடுக்கிட்டு பார்க்கிறார்.

பிறகு அவன் எந்த ஊர் எனக்கேட்க, பையன் தான் மாயவரத்தை சேர்ந்தவன் எனக் கூறுகிறான். அவன் அப்பா எந்த கோவிலில் குருக்களாக இருக்கிறார் என வசுமதி கேட்க, வைதீகக் குடும்பமா என நாதன் கேட்க, பையன் ஒன்றும் பதில் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான். அநாதையா என அடுத்த கேள்வியை வசுமதி போட, தன் தகப்பனார் பெயர் ரகுபதி, அவர் அரசு உத்தியோகத்தில் இருக்கிறார் என பையன் பதிலளிக்கிறான். அது என்ன பெரிய உத்தியோகம் என அசிரத்தையாக வசுமதி கேட்க, பையன் கணீரென்று “அவர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர்” என மண்டையில் அடித்தது போல கூற, நாதனுக்கும் வசுமதிக்கும் மூச்சே நின்றது போலாயிற்று. பையன் புளுகிறானோ என வசுமதி ஐயப்பட, “அவர் வேதபாடசாலையில் படிப்பவர், அவர் வாயிலிருந்து பொய்யே வராது” என அசோக் தன் பங்குக்கு கூறுகிறான்.

நாதன் தனக்கு ரகுபதியை தனிப்பட்ட முறையில் தெரியுமே எனக் கூறி அவருக்கு போன் போட்டு பேச, ரகுபதி தன் பையன் சொன்னது அனைத்தையும் ஊர்ஜிதம் செய்கிறார். நாதன் முகத்தில் ஈயாடவில்லை. “போயும் போயும் ஒரு கலெக்டர் போய் தன் பையனை வேதபாடசாலைக்கு அனுப்புகிறாரே” என்று அப்போதும் தன் நிலைஅயை விடாது வசுமதி முணுமுணுக்கிறாள். நாதனும் அதை ஆமோதிக்கிறார். பிறகு தான் சங்கரை அவனது பாடசாலைக்கு காரில் கொண்டு விடுகிறேன் எனக்கூற அவன் வினயத்துடன் மறுத்து விடுகிறான். அசோக் ஆசையுடன் அவனை வேதமந்திரம் ஓதக்கூற, அலட்டிக் கொள்ளாமல் அவன் மந்திரம் ஓதுகிறான்.

இரண்டு நாளைக்கு அலுவலக வேலையாக இந்தியா வரவிருக்கும் உமாவின் வருங்காலக் கணவன் ரமேஷின் கோரிக்கை ஒன்றை அவன் அன்னை எடுத்து வருகிறாள். அதை கேட்டு திகைக்கின்றனர் நீலகண்டனும் பர்வதமும். சட்டென பதில் கூற இயலாது எனவும், ஒரு நாள் அவகாசம் தேவை எனவும் அவர்கள் கூறிவிடுகின்றனர். நீலகண்டன் இதே விஷயத்தை ஃபோன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் ரமேஷிடமும் ஊர்ஜிதப்படுத்துகிறார். இந்த விஷயமாக தனது உறவினர் நாதனையும் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

வேத பாடசாலைக்கு சோபனா தனது சித்தப்பா சிகாமணி முதலியாரையும் தனது காதலன் பெருமாளையும் வரவழைத்து மேற்கொண்டு ஆகவேண்டிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கிறாள். அதற்குள் சாரியாரும் சோபனாவின் தந்தை நடேஅ முதலியாரும் வேறு வேலையாக அங்கே வந்துவிட அவள் அவர்களை அவசர அவசரமாக அனுப்புகிறாள். சோபனாவுடன் சாரியார் பேசுகிறார், ஆனால் நடேச முதலியார் தனது மகளுடன் பேச மறுக்கிறார்.

நாதன் வீட்டுக்கு வரும் நீலகண்டன் ரமேஷ் தன்னிடம் வைத்த கோரிக்கை பற்றி கூறுகிறார். அதாவது ஓராண்டுக்கு பிறகு நடக்க வேண்டிய வைதீக முறைப்படியான திருமணத்துக்கு பின்னால் உமாவுக்கு விசா பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக தான் இந்தியா வரும் தினமே அவளுடன் ரிஜிஸ்டர் திருமணம் செய்து விடலாம் என்பதுதான் யோசனை. பிறகு அமெரிக்க விசாவுக்கு உடனேயே முறைப்படி விண்ணப்பிக்க இயலும். அதன் ஃபார்மலிட்டீஸ் பூர்த்தியடைவதற்கும் வைதீக திருமணம் நடப்பதற்கும் சரியாகவே இருக்கும். இவ்வாறு செய்யலாமா என்பதுதன் நீலக்ண்டனின் கேள்வி. கண்டிப்பாக செய்யலாம் எலாமே நல்லபடி நடக்கும் என்பது நாதனின் பதில்.

“என்ன சார் இதில் பல அபாயங்கள் ஒளிந்திருப்பது நாதனுக்கு தெரியாதா” என சோவின் நண்பர் கூறுகிறார். அப்படியில்லை என்றும் நல்ல காரியங்கள் பற்றி பேசும்போது அசுபமான விஷயங்கள எதையும் பேசக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். நமக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்கும் பல தேவதைகள் அசுபமான விஷயங்களை கேட்ட உடனேயே ததாஸ்து எனக் கூறிவிடும் என்பதுதான் இது சம்பந்தமாக பலரது நம்பிக்கை. அதற்கு ஆதாரமாக ஏழிசைச் செல்வர் கே.ஆர். ராமஸ்வாமி, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரது வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் அவர் பட்டியலிடுகிறார். ஆக நாதன் செய்தது சரியே எனவும் அவர் கூறுகிறார்.


எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

ஈஸ்வரன். said...

வர வர எல்லா டிவி சீரியலையும்போல இதுவும் இழுத்துக்கொண்டு போகிறது. இது போதாதென்று சோவின் male chavinism வேற நடுவே. ரொம்ப போர்.

M Arunachalam said...

I thought Cho talked about K.A.Thangavelu & NSK and not K.R.Ramasamy.

dondu(#11168674346665545885) said...

@அருணாசலம்
இரண்டும் வெவேறு நிகழ்ச்சிகள், இரண்டையும் சோ கூறினார்.

1. ஏழிசைச் செல்வர் ராமசாமி “பாடமாட்டேன் இனி நான் பாட மாட்டேன்” என்று ஆரம்பிக்கும் பல்லவியில் பாடியதாகவும், அவ்வரிகள் அசுபம் என பலர் கருதி அவர் அதை பாடலாகாது என வேண்டுகோள் விடுத்ததாகவும், அவர் அதை கேட்காமல் பாடியதாகவும், அதன் பிறகு அவர் பாடவே இல்லை என்றும் சோ கூறினார்.

2. இன்னொரு விஷயம்தான் கே.ஏ. தங்கவேலு மற்றும் என்.எஸ். கே சம்பவம். தங்கவேலு அவரை சிறிது பணம் கடனாகக் கேட்க, என்.எஸ்.கே தனது பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து அவரிடம் கொடுக்கையில் கூறினாராம் “என் லட்சுமியையே உனக்குத் தந்தேன்” என. அன்றிலிருந்து என்.எஸ்.கேக்கு இறங்கு முகமாம், தங்கவேலுக்கு ஏறுமுகமாம்.

இந்த இரண்டுமெ எனது மனதை பாதித்த விஷயங்கள். ஆகவேதான் வெறுமனே கோடி காட்டியிருந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@ஈஸ்வரன்
சோவின் ஆணாதிக்கம் என எதைக் கூறுகிறீர்கள்? அவர் மேற்கோள் காட்டுவது புராணங்களிலிருந்து. அதுவும் கதையில் வரும் சம்பவங்களுக்கு ஏற்ப வரும் கேள்விகளுக்கு பதிலாகவே அவை வருகின்றன.

அப்படிப் பார்த்தால் புராணங்களே ஆணாதிக்கத்தை பல இடங்களில் முன் நிறுத்துகின்றன. அதற்கு என்ன செய்ய இயலும்.

மெகா சீரியல் என்றால் சம்பவங்கள் வந்தால்தான் சாத்தியப்படும். இந்த சீரியலின் அடிநாதமே வசிஷ்டரின் தேடல்தான். புத்தகம் வந்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அதுவும் ஒரு கேள்வியுடனேயே நிறுத்தப்பட்டு விட்டது. கதையில் அசோக் உண்மையான பிராமணனை கண்டுபிடிக்கவேயில்லை.

அதன் பிறகு சோ அவர்கள் இந்த விஷயங்களில் இன்னும் ஆராய்ச்சி செய்துள்ளார். அதையேல்லாம் இப்போது கதையில் கொண்டுவர எண்ணுகிறார். அதை இழுவை என ஏன் கூற வேண்டும்? நான் பார்த்தவரை புத்தகத்திலிருந்து சீரியல் வெகுதூரம் விலகி விட்டது. ஆனால் சுவாரசியமான முறையிலேயே இந்த மாறுதல்கள் வந்துள்ளன.

இன்னும் அது எப்படி செல்லப் போகிறது என்பதை அறிய மிக ஆவலுடன் உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

What Dondu sir, Cho is justifying that women are weak minded, greedy that too Bishma said, confirming that in such a way he created the characters in this drama also. But men are so strong minded means why Arjun went for so many wives was that not greediness

dondu(#11168674346665545885) said...

//Cho is justifying that women are weak minded, greedy that too Bishma said, confirming that in such a way he created the characters in this drama also.//
இல்லை நீங்கள் கூறுவது போல இல்லை. உமா அசோக்கை உயர்த்தி பேசுகிறாள். அப்போது அவள் அவன்மீது காதலில் இருந்தாள். அச்சமயத்தில் அசோக் இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் அவன் தன்னை தவறாக பயன்படுத்தியிருப்பான் எனவும், ஆனால் தனது பலவீனமான நிலையில் அவன் அவ்வாறு செய்யவில்லை எனவும் கூறுகிறாள். அதிலிருந்துதான் தேவசர்மாவின் மனைவி ருசி மற்றும் சிஷ்யர் விபுலனின் கதையும் வருகிறது (எனது அடுத்தபதிவில் அதை பார்க்கலாம்).

ஆண்கள் எல்லோருமே மனப்பலம் பொருந்தியவர்கள் என்றும் அவர் கூறவில்லை. கேவலமான ஆணுக்கு இந்திரனையே உதாரணமாகக் காட்டுகிறார். இந்த சீரியலிலேயே மிக மைனர் பாத்திரமான சமையற்கார மாமி கோமதி தன் கணவர் ஆடிட்டரை விட பலமடங்கு உயர்த்தியே காட்டப்படுகிறாள். நீலகண்டன் அராத்தாக செய்யும் நாத்திக வாதங்களை அவர் மனைவி பர்வதம் அழகாகவே சமாளிப்பதாகக் காட்டுகிறார்.

கிருபாவை விட அவன் மனைவி பிரியாவை பல இடங்களில் உயர்த்தியுள்ளார். இப்படியெல்லாம் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் இதுவே போதும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//Cho is justifying that women are weak minded, greedy ..//

"Parents may not want to believe this. But school children in Delhi seem to be experimenting with sex much more than they can imagine."

"A study conducted by a counselling agency revealed 95 per cent of adolescent abortion seekers in the city are in the age group of 17 to 19 years."
http://timesofindia.indiatimes.com/articleshow/387811.cms

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது