நாமக்கல் சிபி:
1. ஆமாம் அல்லது இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லக் கூடிய கேள்விகள் உங்களுக்குப் பிடிக்காதுதானே?
பதில்: சில கேள்விகளுக்கு அம்மாதிரி கூறவும் இயலாதுதானே. உதாரணத்துக்கு வக்கீல் ஒருவர் ஒரு சாட்சியை குறுக்கு விசாரணை செய்யும்போது “உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா, ஆமாம்/இல்லை என்ற பதில் சொல்லவும்” எனக் கேட்டால், எதை சொன்னாலும் சாட்சி மாட்டிக் கொள்வார். தமிழ் சினிமாக்களில் சில சமயம் இம்மாதிரி சீன் வரும். ஆனால் சாட்சி இதற்கு பதில் சொல்ல மறுக்கலாம், நீதிபதியும் கேள்வியை தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்ட வக்கீலையும் எச்சரிப்பார். விஷயம் என்னவென்றால் சில கேள்விகளுக்கு ஆமாம் அல்லது இல்லை என விடையளிக்க இயலாது. ஆமாம் மற்றும் இல்லை என்று கூட பதில் வர சான்ஸ் உண்டு. உதாரணத்துக்கு ஒரு படத்தில் வடிவேலுவோ விவேக்கோ (என நினைக்கிறேன்), டூரிஸ்ட் டாக்சி ஓட்டுநர் என்னத்த கன்னையாவைப் பார்த்து டாக்சி வருமா என கேட்பார். கன்னையாவோ “வரும் ஆனாக்க வராது” என்று சொல்லியே வெறுப்பேற்றுவார். யாராவது என்ன படம்னு பின்னூட்டத்திலே சொல்லுங்கப்பு.
எவனோ ஒருவன்:
1. ’வரதட்சணை வாங்குவது சரியில்லைதான், கேக்கலைனா மாப்பிள்ளைக்கு குறை இருக்குனு நெனப்பாங்க’ - இதைப் பற்றி தங்களின் கருத்து என்ன?
பதில்: அது மனித இயற்கையே. பல நேரங்களில் கல்யாணப் பெண்ணே அவளது சகோதரிகளின் கணவர்களுக்கு தரப்படும் சீர் செனத்திகளைப் பார்த்து பொறாமைப்படுவதும் உண்டு. இதிலெல்லாம் தட்டையா யோசிக்க முடியாது.
2. இமெயிலை ஓபனாக காட்டுவதால் என்னென்ன தொல்லைகள் வரலாம்?
பதில்: பல எரிதங்கள் வரலாம். உங்கள் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு எழுத்தை நீக்கியோ சேர்த்தோ இன்னொரு அடையாளம் உருவாக்கி உங்களைப் போலவே டிஸ்ப்ளே பெயர் எல்லாம் வைத்து நடிக்கலாம், பல ரகசியங்களை உங்கள் நண்பர்களிடமிருந்து பெறலாம். இதெல்லாம் கற்பனையில்லை நடந்துள்ள விஷயங்கள். இதற்கு மேல் விடை தந்தால் - வேண்டாம், நான் கோடு போட்டேன், நீங்கள் ரோடு போட்டு பார்த்து கொள்ளுங்கள்.
3. 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ - இன்னும் அப்படியே இருக்கிறது என நினைக்கிறீர்களா?
பதில்: வந்தாரை நாம் தொந்திரவு செய்யும் நிலையிலா இருக்கிறோம்? நம்மவர்கள் எவ்வளவு பேர் தமிழகத்துக்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அங்கெல்லாம் அவர்கள் வந்தவர்கள்தானே? அதுவும் ஓகோ என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாமும் வந்தாரை வாழவைப்பதே புத்திசாலித்தனம்.
4. பாடிகாட் முனீஸ்வரன் என்கிறார்களே... பாடிகாட் என்றால் என்ன? இதற்கும் Bodyguard க்கும் சம்பந்தம் உண்டா?
பதில்: என்னைப் பொருத்தவரையில் ஒரு ஐயமும் இல்லை. முனீஸ்வரன் நமக்கு bodyguard ஆக செயல்படுகிறார். நான் என்ன மேலும் சொல்லுவேன் என்றால் உடல் மட்டுமல்ல மனத்துக்கும் அவரே bodyguard.
அனானி (18.06.2009 மாலை 07.10-க்கு கேட்டவர்)
1. Who will be next super star in tamil cinema field (1. MGR 2. Rajani 3. ?)
பதில்: யார் என்ற கேள்வி too early. முதலில் பழைய சூப்பர் ஸ்டார் முழுதுமாக சீனில் இருந்து மறைய வேண்டும்.
2. Who will be the next prime minister after manmohan?
பதில்: இப்போதைக்கு என் கண்ணீல் படுவது ராகுல் காந்தி. அவர் சுலபமாக வர வேண்டும் என்பதற்காகவே இப்போதைய பொம்மை பிரதமரையே இன்னும் வைத்திருக்கிறார்கள்.
3. Who will be the successor to karunanithi (chanakkiya arasiyal)?
பதில்: கருணாநிதிக்கு அப்புறம் கட்சியே முழுசாக நிற்குமா என பார்க்க வேண்டியதுள்ளது. பிறகுதான் யார் கருணாநிதிக்கு வாரிசு என்றெல்லாம் பேசுவதில் பொருள் இருக்கும்.
4. Will it be possible to see honest leaders like kamaraj/rajaji/anna in the coming days?
பதில்: முதலில் நாம் அவர்களையெல்லாம் வர விடுவோம்னு நினைக்கிறீங்க? ஆனால் குஜராத்தியர்கள் நம்மை விட புத்திசாலிகள்.
5. What will be the next reaction by t.r balu?
பதில்: ஏம்பா இது நியாயமா? என்னைப் போயா இந்தக் கேள்வி கேட்பது? இதற்கான விடை பாலுவுக்கே தெரியாம பேய்முழி முழிக்கிறார். நானும் வேண்டுமானால் அவருக்கு துணையாக உட்கார்ந்து முழிக்கட்டுமா?
வஜ்ரா:
1. தமிழில் அனைத்து எழுத்துக்களும் வரும் விதத்தில் ஒரு சிறு பத்தி இருக்குமா?
பதில்: தெரியவில்லை. இக்கேள்விக்காக நான் யோசித்து பார்த்ததில் ஆத்திச்சூடிதான் கண் முன்னே வருகிறது.
ரமணா:
கலைஞரின் லட்சியக் கனவாம் கழக வாரீசு அறிவிப்புடன் ,ஸ்டாலினுக்கு முடிசூட்டி (துணைமுதல்வர் கிரீடம் சூட்டுதல்)அழகு பார்த்ததை, அம்மா ஜெ. வுக்கு பயப்படமால் மனம் திறந்து , சட்ட மன்றத்தில் பாராட்டிய மயிலை எஸ்.வி.சேகரின் நல்லெணத்தை பாராட்டி,அவர் ஆரம்பித்துள்ள பிராமணர் நலம் காக்கும் கட்சியின் அடிப்படை கோரிக்கையை (7 % job reservation to brahmins in tamilnadu, based on the numerical strength,considering the poor economical condition (social condition to some extent), தமிழக முதல்வர் ஏற்று, தமிழகத்தில் வாழும் அனத்து பிராமணர்களுக்கும்(without any restriction) கல்வி,வேலைவாய்ப்பு,வீட்டுவசதிவாரிய வீடு (பெரியார் சமத்துவபுரங்களில் உள்ளது போல்) ஒதுக்கீடு -ஆகியவைகளில் 7 விழுக்காடு ஒதுக்கீடும் அதில் ஐயங்கார்களுக்கு உள் 2.5 விழுக்காடும் வழங்கி அரசாணை பிறப்பித்தால் இவர்களின் கருத்து/விமர்சனம் என்னவாயிருக்கும்? 1. காஞ்சி பெரியவாள் 2. துக்ளக் ஆசிரியர் சோ 3. அதிமுக தலைவி ஜெ
4. தி.க தலைவர் வீரமணி 5. தமிழக பாஜக கட்சி 6. தயாநிதி மாறன் 7. ஹிண்டு ராம் 8. தினமணி வைத்தியநாதன் 9. சாதீய உணர்வுகளை நாளும் சாடும் ஈரோட்டு தங்கம் வால் பையன் 10. டோண்டு ராகவன்
அனானியால் சேர்க்கப்பட்டது: இவர்களையும் சேர்த்துக் கொள்ளவும் 11. அண்ணல் காந்தியின் ஆத்மா 12. சட்டமேதை அம்பேத்காரின் ஆத்மா 13. மூதறிஞர் ராஜாஜியின் ஆத்மா 14. பெரியவர் காமராஜின் ஆத்மா 15. தந்தை பெரியாரின் ஆத்மா 16. அறிஞர் அண்ணாவின் ஆத்மா 17. திரு மண்டலின் ஆத்மா 18. மண்டல் வீரர் விபிசிங்கின் ஆத்மா 19. இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரித்தும்,எதிர்த்தும் உயிரைத் துறந்த வட இந்திய, தென் இந்திய மனிதர்களின் ஆத்மாக்கள்.
பதில்: அப்பாடா, மூச்சு விட்டுக்கறேன். ஏன் சார் இப்படித்தான் இகலப்பை போன்ற மென்பொருள் கையில இருக்கும் தைரியத்துல சகட்டுமேனிக்கு பெயர்களை போட்டு விடுவதா?
சரி முயற்சி செய்கிறேன். காஞ்சி பெரியவர் இதை வேண்டாத வேலை என்பார். சோ அவர்கள் என்ன கூறுவார் என்பது பல முறை அவருக்கே அவர் கூறும்வரை முன்கூட்டி சொல்வது கடினம், இருப்பினும் அவரும் இதை எதிர்ப்பார் தனக்கே உரித்தான முறையில் எனவே நம்புகிறேன். டோண்டு ராகவனாகிய நான் முழுமூச்சுடன் எதிர்ப்பேன். அதாவது பொருளாதார நிலையின் பின்னிலையில் இருப்பவர்களுக்கு தரலாம், அதில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என தனி கன்சிடெரேஷன் கூடாது. ஜெயலலிதாவோ இது கருணாநிதியால் கொண்டுவரப்படுகிறது என்பதற்காகவே எதிர்ப்பார்; வீரமணி வயிறெரிவார், வாஞ்சிநாதனின் விதவைக்கு பென்ஷன் கொடுக்கும் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போல. பாஜக கட்சி ஐயோ பாவம் நிலையில் உள்ளது, அதைப்போய் இங்கு தொந்திரவு செய்ய வேண்டாமே. ஹிந்து ராம், தினமணி வைத்தியநாதன் என்ன கூறுவார்கள் என்பது தெரியாது. தயாநிதி மாறன் நடுநிலைமை வகிப்பார் என நினைக்கிறேன். வால்பையன் சாதிகளையே ஒட்டு மொத்தமாக எதிர்ப்பவர், அவரும் இதை எதிர்ப்பார் என்றுதான் நினைக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் ஆத்மாக்களில் ராஜாஜி, காமராஜ் (எதிர்ப்பு), காந்தி, அம்பேத்கர் (சலிப்பு), பெரியார் (பயங்கர எதிர்ப்பு), அறிஞர் அண்ணா கலைஞரின் கனவில் நிஜமாகவே வந்து கன்னாபின்னாவென்று சண்டை போடுவார், மண்டல், வி.பி.சிங் (தீவிர எதிர்ப்பு), மற்ற வட இந்திய தென்னிந்திய ஆத்மாக்கள் தத்தம் நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஆதரவு/எதிர்ப்பு.
அனானி (20.06.2009 காலை 09.18-க்கு கேட்டவர்):
1. கலைஞரின் கச்சுத்தீவு மீட்புப் போராட்டம் , ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரசாரை மிரட்டவா? கடைசி துருப்பு சீட்டா? சும்மா பாவ்லா காட்டவா? குடும்ப சண்டையை திசை திருப்பவா? இடைத்தேர்தல் ஸ்டண்டா?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட எல்லாமேதான் காரணிகள்
2. இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்மீது உண்மை நிலைதான் என்ன? அத்துமீறுவது யார்? விடுதலைபுலிகளின் வீழ்ச்சிதான் இதுக்கு காரணமா? மத்திய அரசு என்ன செய்ய் வேண்டும்? நம்து கடற்படையின் ரோந்துக் கப்பல்கள் என்ன செய்கின்றன தமிழக மீனவ்ர்களை காக்கும் விசயத்தில்?
பதில்: செத்தும் கெடுத்தது போல பிரபாகரன் உயிருடனேயே இருக்கிறார், புலிகளின் போராட்டங்கள் தொடரும் என்றெல்லாம் எழும் பேச்சுக்களும் குழப்பத்தை அதிகரிக்கின்றன. ஸ்ரீலங்காவின் கடற்படை இதை சாக்காக வைத்து கெடுபிடி செய்ய அவையே துணைபோகின்றன. மேலும் இடையில் உள்ள கடற்பகுதி மிக குறுகியதால், சிறிது ஏமாந்தாலும் இலங்கை தரப்பு கடலுக்கு படகுகள் வழிதவறி நடக்கும் அபாயம் வேறு இருக்கிறது. சிலசமயம் அப்பகுதியில்தான் கொழுத்த மீன்வேட்டெஐ இருப்பதால் நமது மீனவர்களும் தெரிந்தே சிலசமயம் ரிஸ்க் எடுக்கின்றன. இரு நாட்டு கடற்படைகளுக் கூட்டாக ரோந்து செய்தால் பல தவறுகளை தவிர்க்க இயலும்.
3. இலங்கையின் இந்திய கடல் எல்லைகளில் அத்து மீறல்கள் , சீனாவின் இராணுவத் துணை இருக்கும் அசட்டு தைரியத்திலா? இலங்கையின் இந்த வாலாட்டத்தை தடுக்க வேண்டமா? இலங்கையில் சீனாவின் கடல் ஆதிக்கம் டேஞ்சர் அல்லவா? பாகிஸ்தானும் தன் பங்குக்கு மூட்டிவிடுகிறதா? இலங்கைக்கு சரியான பாடம் புகட்டுமா மன்மோகனின் வலிமையான அரசு?
பதில்: நீங்கள் சொல்வதில் பல உண்மைகள் உள்ளன. இருப்பினும் பூகோள ரீதியில் சீனாவால் அவ்வளவு தூரம் வந்து வாலாட்டுவது என்பதை long standing ஆக செய்வது கடினம். மற்றும் இந்திஒயாவும் அவ்வளவு பலகீனமான சக்தி எல்லாம் இல்லை. நல்லதே நடக்கும் என நினைப்போம்.
4. சீனாவின் நில ஆக்கிரமிப்பு வாலாட்டம் மீண்டும் இந்தியாவிடம் எடுபடுமா? ராணுவ பலத்தில் தற்சமயம் சீனாவின் கை ஒங்கியுள்ளது போன்ற தோற்றம் உண்மையா? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது பொறமைப்படும் சீனாவின் தகிடுதத்தங்கள் விலை போகுமா? பாகிஸ்தானும் சீனாவும் இணந்து போர் நெருக்கடி கொடுத்தால் நம்மளால் சமாளிக்க முடியுமா? அமெரிக்கா நம் பக்கம் பகவான் கிருஷ்ணர் போல் இருந்து நம்மை காக்க அணு ஆயுத ஒப்பந்தத்தில் (மற்றும் 123 ஒப்பந்தம்) ஏதேனும் ஷரத்து இருக்க்கிறதா?
பதில்: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மந்திரிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய ரகசிய தகவல்கள் டோண்டு ராகவனுக்கு கிடைப்பதாக உங்களுக்கு யாரோ அவதூறாக தகவல்கள் சொல்லியுள்ளனர்.
5. சீனாவின் போலிமருந்து தயாரிப்பு மற்றும் மேலை நாடுகளில் விற்பனை, இந்தியாவின் பெயரால் இதை எப்படி மன்மோகன் அரசின் ரசாயனம் மற்றும் மருந்துகள் நடுவண் அமைச்சர் அண்ணன் அழகிரி சமாளிப்பார்? சீனாவின் இந்த நம்பிக்கை துரோகத்தை தடுக்க, சீனாவின் பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்கலாமே? இதுவும் சீனாவின் மறைமுகப் போரா பாரதத்தின் மீது? மீண்டும் கெளரவ-பாண்டவ யுத்தம் ஆசியக் கண்டத்திலா? அமெரிக்காவின் பெரியண்னன் (world police) பதவியை கபளிகரம் செய்ய் முயலும் சீனாவின் செப்படி வித்தைகள் வெல்லுமா?
பதில்: இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் செய்யப்பட்டதாக லேபல் ஒட்டி சீன போலி மருந்துகள் விற்கப்படுவதை இந்தியா முதலிலிருந்தே எதிர்த்து எல்லோருக்கும் தனது தரப்பு வாதங்களை அனுப்பவேண்டும். அதையும் விடாது செய்ய வேண்டும். பிரச்சினை என்ன என்பதை தமிழ்மணி அவர்களது இப்பதிவில் பார்க்கலாம். நீங்கள் சொல்வதுபோல இதுவும் ஒருவகை போர்தான். சீனாவின் பொருட்களுக்கு தடைவிதிப்பது ப்ராக்டிகலாக இருக்காது, ஏனெனில் இருநாடுகளுமே Gatt உறுப்பினர்கள். பிரச்சினையை நாசுக்காக கையாள வேண்டும். சீனா ஒரு சர்வதேச போலி டோண்டு.
ரமணா:
1. 19-06-2009 அன்று ராகுல் காந்தியின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்த வசந்த் டீவி , ராகுலின் பதவி ஆசை இல்லாத சிறப்புத் தன்மையை புகழும் வகையில், எல்லோரையும் விமர்சிக்கும் துக்ளக் ஆசிரியர் சோ கூட,ராகுலின் இந்தத் தியாக உணர்வினை வித்தியசமாய் இருக்கிறது என பாராட்டியுள்ளதாகவும்.ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்கமுடியாது எனக் கருத்து சொன்னதாய் சொன்னது (ஒளி பரப்பியது) உண்மையா? விளக்கவும்?
பதில்: சோ பலமுறை இம்மாதிரி விஷயங்களில் அனுபவப்பட்டவர். யாரையாவது புகழ்வார், பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே அவ்வாறு புகழப்பட்டவர் ஏதேனும் சொதப்பலாக காரியம் செய்வார். இது பற்றி நான் விளக்கமாக எனது டோண்டு ராகவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்னும் பதிவில் எழுதியுள்ளேன். ஆகவே இப்போதும் சோ அவர்கள அடக்கி வாசிக்க முயலுகிறார். இதுவரை ராகுலின் செயல்பாடு திருப்திகரமாகவேதான் உள்ளது என அவர் நினைப்பதைத்தான் அவர் கூறுகிறார்.
அனானி (20.06.2009 மாலை 06.07-க்கு கேட்டவர்)
1. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றிய அரசின் பிரச்சாரத்தின் இப்போதைய நிலை?
பதில்: இந்த உரலில் உங்களுக்கு தேவையான லேட்டஸ்ட் விவரங்கள் உள்ளன.
2. இலஞ்சம் வாங்கிய குற்றத்தை பெண் ஊழியர்களும் செய்ய் ஆரம்பித்துள்ளது பற்றி?
பதில்: லஞ்சம் வாங்குவதில் ஆண் என்ன பெண் என்ன? என்ன, பெண் அதிகாரிகள் எண்ணிக்கை முன்பெல்லாம் குறைவு, இப்போது அதிகரித்து கொண்டே போகிறது. ஆகவே விஷயம் அதிகம் லீக் ஆகிறது, அவ்வளவே.
3. தொடரும் மின் தட்டுப்பாடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் தொடர்ந்து வழங்கல், இது எதில் சேர்த்தி?
பதில்: மின்சார வினியோகத்தை மேம்படுத்த ஒரு மண்ணாங்கட்டி திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே வேலைகள் மட்டும் செய்ய பணம் கஜானாவிலிருந்து திசை திருப்படுகிறது. ஓட்டுகளை விற்கும் வாக்காளர்களை முதலில் சொல்ல வேண்டும்.
4. சோனியா காந்தி தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் தலைவியாக பணியாற்றியுள்ளார்கள்?
பதில்: பத்து ஆண்டுகளுக்கு மேல்.
5. பெரிய நிறுவனங்கள் சிறுவியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என்கிற தடை கொண்டுவரப்பட வேண்டும் எனும் வாதம் என்ன்னாச்சு?
பதில்: ஏன் தடை வரவேண்டும்? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கல் காய்கறி, பழம் வியாபாரம் செய்வதால் நுகர்வோருக்கும் நல்ல தரமான பொருள் கிடைக்கும், அதே சமயம் விவசாயிக்கும் நல்ல விலை கிடைக்கும். என்ன பிரச்சினை?
அனானி (20.06.2009 காலை 07.50-க்கு கேட்டவர்)
1. இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது?
பதில்: 1300 வழக்குகள் என இங்கே கூறுகிறார்கள். இது ஓராண்டுக்கு முந்தைய நிலை. இப்போது கண்டிப்பாக அதிகரித்திருக்கும்.
2. இந்திய ஆக்கி அணியின் நிலை இப்போது என்ன?
பதில்: ரொம்பவுமே பாவம் எனக் கூறும் நிலையில் உள்ளது. 1980-ல் பலநாடுகள் பங்கேற்காத மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் பெற்ற தங்க பதக்கத்துக்கு பிறகு அடுத்த ஒலிம்புக்களில் ஒரு பதக்கமும் இல்லை. அதிலும் 2008 ஒலிம்பிக்கில் உள்ளேயே வரவிடவில்லை.
3. தி.மு.க.வின் ராஜ்யசபை உறுப்பினர்களில் பெஸ்ட் யார்?
பதில்: இருக்கும் 4 உறுப்பினர்களில் கனிமொழிதான் தெரியும். அவர் எப்படி செயல்படுகிறார் என தெரியவில்லையே.
4. இப்போது அரசு அலுவலகங்களில் ஊழல்கள் உச்சத்திலா?
பதில்: விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் இருக்கும் நிலையில் உச்சம் என எந்த நிலையை சொல்வது?
5. உங்களின் ஆலோசகராய் யாரை கருதுகிறிர்கள்?
பதில்: என் வீட்டம்மாதான். அதனால்தான் பெண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்னு சொல்றேன். அதிலும் 2001-ல் தில்லியில் ஏழாவது முறையாக வீடு மாற்றவேண்டியிருக்கிறதே என்று ஆயாசமாக இருந்தது. அப்போதுதான் என் வீட்டம்மா கூறினார், பேசாமல் சென்னைக்கே திரும்பலாம் என. நான் தயங்கினேன், மொழிபெயர்ப்பு வேலைகள் என்னாகும் என்று. அதற்கும் அவர் பதில் வைத்திருந்தார். வீட்டு வாடகை தர வேண்டியிராது, ஆகவே மாதம் 5000 ரூபாய் இருந்தால் போதும் என்று உறுதியாகக் கூறினார். நானும் கணக்கு பார்த்தேன். தில்லியில் சேமித்த தொகைகளை அவ்வப்போது யூ.டி.ஐ. மாதவட்டி திட்டத்தில் போட்டு சுமார் 6000 ரூபாய் மாதவருமானம் வரும் நிலையிருந்தது. அப்போதைக்கு அது போதும் என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும் என்னால் சும்மா இருக்க முடியாது என்றும், ஏதாவது செய்து மொழிபெயர்ப்பு வேலையை சென்னையிலும் வெற்றிகரமாக முடிப்பேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். என்னை சமீபத்தில் 1953-லிருந்து பார்த்து வருபவர் என்பதால் என்னைப் பற்றி நான் அறிந்ததைவிட அவர் அதிகமாகவே அறிந்திருந்தார் என்றுதான் கூறவேண்டும்.
6. பா.ம.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: கட்சி கட்டுக்கோப்பு குலையாமல் இருப்பது பிடித்திருக்கிறது. அன்புமணி, வேலு, மூர்த்தி ஆகியோர் மந்திரிகளாக நன்றாகவே செயல்பட்டனர். பிடிக்காதது சந்தர்ப்பவாத அரசியல்.
7. ம.தி.முக., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான்.
8. விஜய்காந்த்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான்.
9. சமத., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: சிரிப்பு மூட்டாதீர்கள்.
10. வலது.கம்யூனிஸ்ட்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான். மேலும் தேசபக்தி இல்லாத கட்சி.
11. இடது.கம்யூனிஸ்ட்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான். மேலும் தேசபக்தி இல்லாத கட்சி.
12. தமிழக.காங்கிரஸ்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: ஐயோ பாவம்னு இருக்கற கட்சி. பிடிக்காதது சுயமரியாதை இல்லாத தன்மை.
13. அதி.மு.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது வலிமையான தலைமை. பிடிக்காதது மனம் போன போக்கில் செயல்படுவது.
14. திமு.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது முன்னால் இருந்த உட்கட்சி ஜனநாயகம். பிடிக்காதது அது இப்போது மறைந்தது.
15. மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து?
பதில்: தேவையற்றது. சோ அவர்கள் இது விஷயமாக கூறுவதை முற்றிலும் ஒத்து கொள்கிறேன்.
16. மதவெறியர்களும், தீவிரவாதிகளும் அடங்கவே மாட்டார்களா?
பதில்: மக்கள் விழிப்புணர்வுடன் இல்லையே. அது வந்தால் இவர்களது ஆட்டம் சீக்கிரமே க்ளோஸ் ஆகும்.
17. டண்டணக்க அடுக்கு மொழி ஸ்பெஷலிஸ்டு டி.ராஜேந்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
பதில்: ரொம்ப முக்கியம்! அவர் என்ன செய்தால் என்ன?
18. 2 ஜி செல் பேசியின் வரவால் சிட்டுக் குருவிகளை காணோம் பார்த்தீர்களா?
பதில்: ரொம்பவும் cryptic ஆக இருக்கிறது. கேள்வி புரியவில்லை. இம்மாதிரி கேள்விகளுக்கு ஏதேனும் சுட்டி தந்தால் பார்க்க சௌகரியமாக இருக்கும், நன்றி.
19. 3 ஜி வந்தால்?
பதில்: மேம்பட்ட சேவைகள் தர இயலும், ஆனால் அதற்கேற்ப infrastructures களும் தேவைப்படும்.
20. விஜயகாந்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது?
பதில்: நான் என்ன அவரது நிதிநிலை ஆலோசகரா?
21. நேற்று காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
பதில்: ஒருவரை ஒருவர் தவிர்க்க இயலாது, அதே சமயம் ஒருவருக்கொருவர் தண்டனை.
22. இன்று காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
பதில்: அதேதான், அதாவது ஒருவரை ஒருவர் தவிர்க்க இயலாது, அதே சமயம் ஒருவருக்கொருவர் தண்டனை.
23. நாளை காங்கிரஸ் - தி.மு.க. உறவு?
பதில்: அ.இ.அ.தி.மு.க. தன்னை மாற்றி கொள்வதை பொருத்திருக்கிறது.
24. இந்தத் தடவை மன்மோகன்சிங்கின் அரசு எப்படியிருக்ககும்?
பதில்: இடதுசாரிகளின் படுத்தல்கள் இல்லை. திமுகவும் சற்றே அடக்கி வாசிக்க வேண்டிய நிலைமை. ஆகவே மன்மோகன் சிங் தனது முழு திறமையையும் பயன்படுத்த இயலும் என்றுதான் தோன்றுகிறது.
25. பங்கு மார்க்கெட் ஏன் உயர்கிறது/சரிகிறது?
பதில்: வால்பையன், தமிழ்சசி ஆகிய்யொரை கேட்க வேண்டிய கேள்விகளை எனக்கு அனுப்பலாமா?
26. பங்கு மார்க்கெட் -குதிரைப் பந்தயம்-சீட்டு விளையாட்டு (தாலியைக் கூட அடமானம் வைக்கும் நபர்கள்)-லாட்டரி சீட்டு (பெரும் கடன் வாங்கி மூட்டை மூட்டையாய் வாங்கும் நபர்கள்) ஒப்பிடவும்?
பதில்: இதில் என்ன ஒப்பிடல் வேண்டியிருக்கிறது? எல்லோருமே நாசத்துக்கு வழிகாட்டிகள்.
27. கிரிக்கெட் வீரர்கள் ஏலம் போவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அதை அவர்களே தங்கள் சுயலாபத்துக்கு விரும்பி ஏற்கின்றனர். இதில் நினைக்க என்ன இருக்கிறது? ஆனால் ஒன்று, இம்மாதிரி இருப்பதால் எந்த குழுவுமே எனக்கு பாந்தமாக இல்லை. இந்த மேட்சுகளில் பவுண்டரி, சிக்ஸர், விக்கெட் எடுத்தல் ஆகிய நிகழ்வுகள் சமயம் cheerleaders ஆடுவது மட்டும் பிடித்துள்ளது.
28. சென்னையில் ரோந்து போலீசாரின் நடவடிக்கைகள் எப்படி உள்ளது? பலன் எப்படி?
பதில்: Hyundai கார்கள் கொடுத்துள்ளனர் போலிருக்கிறது. பலன் இருப்பது போலத்தான் தோன்றுகிறது. என்ன, ரோந்து போலிசாரை உபயோகமற்ற அரசியல்வியாதிகளின் பந்தோபஸ்துக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்.
29. இரயில்வே//பொது பட்ஜெட்டால் அதிகம் பலனடையப் போகிறவர் யார்?
பதில்: அது யாருக்கெல்லாம் சலுகைகள் தரப்போகிறார்கள் என்பதை பொருத்தது. பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பார்ப்போம்.
30. எல்லா அரசியல்வாதிகளுமே ........?
பதில்: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என சொல்ல வருகிறீர்களா?
31. இந்த பழமொழி இப்போது சாத்தியமா-செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருப்போன் என்பதெல்லாம்?
பதில்: சாத்தியமே இல்லைதான்.
32. மேற்கு வங்கத்தில் இடதுகளின் பிடி/செல்வாக்கு இனி அவ்வளவுதானா?
பதில்: மம்தா பானர்ஜி எப்படி காய்களை நகர்த்துகிறார் என்பதை பார்க்க வேண்டும்.
பார்த்தா
1. Do you know what was the problem between Cho and writer Sujatha?
பதில்: எனக்கு தெரிந்து அவர்களுக்குள் ஒரு பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. உண்மை கூறப்போனால் பல விஷயங்களை தொட்ட அவ்விருவருமே ஒருவரை ஒருவர் தம் எழுத்துக்களில் ரெஃபர் கூட செய்ததாக நினைவில்லை.
2. US keeps ignoring India after the democrats came to power. Should India register it's concern regarding this?
பதில்: நான் ஏற்கனவேயே இப்பதிவில் ஒரு பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டது போல, டெமாக்ரடிக் ஜனாதிபதிகளால் இந்தியாவுக்கு தொல்லைகள்தான்.
“
3. What should India do to prevent the growing Chinese presence in our neighbouring countries?
பதில்: இந்தியா முதலில் தன்னை பொருளாதாரத்திலும் ராணுவபலத்திலும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். ராஜதம்திர தளத்தில் அயராது பணி புரிய வேண்டும்.
ஸ்ரீராமஜெயம்
1. சுவாமிகளை துதி பாடும் பக்தர்கள் சொல்லும் இந்த ஸ்லோகங்கள்,மந்திரங்கள் சொல்லும் அர்த்தம் என்ன? இவைகளை சொல்வதால் பக்தர்கள் அடையும் பலா பலன்கள் என்ன என்ன?நீங்கள் சொல்லும் ஸ்லோகம்,மந்திரம் எது? 1.ஓம் நமோ நாராயணாய! 2.ஓம் சிவாயா நம ஓம்! 3.ஓம் சக்தி ஒம் சக்தி ஒம் ,பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்த்கி ஓம் 4.அரோகரா அரோகரா
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 5.ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர 6.ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹர ஹரே ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹர ஹரே 7.தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டுக்கும் இறைவா போற்றி
8.அரஹர பார்வதி நமஹ 9.ஓம் நமச்சிவாய 10.ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீராம்.
பதில்: ஓம் என்பது பிரணவ மந்திரம். அத்துடன் சேர்த்து தனத்து இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்வது வழக்கமாக நடப்பது. பிரணவ மந்திரத்துக்கு பொருளைத்தான் முருகன் தனது தந்தை சிவபெருமானுக்கு உபதேசித்ததாக புராணம். பலன் என்று பார்த்தால் அதை சொல்வதனால் கிடைக்கும் மன அமைதிதான். எல்லா இடர்களையும் எதிர்நோக்கும் மனோபலம் ஏற்படும். நான் விளிப்பது தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனையே.
அனானி (22.06.2009, காலை 06.01-க்கு கேட்டவர்):
1. மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா செய்யும் முயற்சியா?
பதில்: சீனா மெனக்கெட்டு இதெல்லாம் செய்ய வேண்டியதில்லை. இந்தியாவில் உள்ள அதன் கம்யூனிஸ்டு ஜால்ராக்கள் அதை பார்த்து கொள்வார்கள்.
2. கச்சத் தீவு பிரச்னையைத் தீர்ப்பதில் அக்கறை யாருக்கும் இல்லையா? நமது கடற்பரப்பின் பாதுகாப்பு கேள்விக்குறியா?
பதில்: கச்சத்தீவு முறையாக ஸ்ரீலங்காவுக்கு இந்தியாவால் ஹேண்ட் ஓவர் செய்யப்பட்ட இடம். அப்போது என்ன நடந்தது என்பதை அறிய தகவல் பெறும் உரிமை சட்டத்தை பிரயோகித்து கேட்டால் ஏதேனும் தெரியலாம். இந்த உரலில் இது பற்றி சற்று அறியலாம்.
3. மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கையை எழுப்ப நினக்கும் லாலுவின் உண்மையான நோக்கம் என்ன?
பதில்: இந்த மகளிர் இட ஒதுக்கீடு என்பதே தேவையற்றது என நான் கருதுகிறேன். இந்த விஷயத்திலும் நான் முழுக்க முழுக்க சோவின் கட்சியே. என்ன, நான் இதை கூற எங்களுக்கு தடை ஏதும் இல்லை. ஆனால் அவ்வாறே நினைக்கும் அனைத்து கட்சியினரும் அவ்வளவு ஓப்பனாக இருக்கவியலாததுதான். அவர்கள் அதை ஆதரிப்பார்கள் என்றால் பேசாமல் தங்கள கட்சி வேட்பாளர்களிலேயே முதற்கண் 33 சதவிகிதம் பேர் பெண்களாக இருக்குமாறு பார்த்து கொள்ளலாமே. ஆனால் செய்ய மாட்டார்கள். இதில் லாலு என்ன, முலாயம் சிங் யாதவ் என்ன, சரத் யாதவ் என்ன எல்லோருமே ஆஷாடபூதிகளே.
4. தனியார் துறையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசின் நோக்கம்?
பதில்: ஓட்டு பொறுக்கும் அரசியல்தான், வேறென்ன. இது நடக்கும் என தோன்றவில்லை. அதை ஆதரிக்கும் ஓட்டு பொறுக்கிகள் தங்கள் கேஸ்களுக்கு வக்கீல்களை நியமிக்கும்போது மட்டும் ரிசர்வேஷன் என்றெல்லாம் மூச்சு கூட விடமாட்டார்கள்.
5. மாதச் சம்பளக்காரர் வீட்டுக்கு எடுத்துச் செல்வது 40% மட்டுமே என்ற ஆய்வு இந்தியாவும் அமெரிக்காவின் பாணியிலா?
பதில்: இந்த 40% எங்கிருந்து பெற்றீர்கள்? எங்காவது இதை பார்த்திருந்தால் அதன் சுட்டியுடன் கேள்வி கேட்பது நலம். மற்றப்படி பொதுவாக சம்பளத்திலிருந்து பிடித்தங்கள் எல்லாம் ஆன பிறகு ஹிந்து ஆஃபீசில் 60 பைசா மட்டும் எடுத்து சென்றவர்கள் பற்றி எனது தந்தை அமரர் நரசிம்மன் கூறியுள்ளார். ஆனால் இப்போதெல்லாம் இம்மாதிரி பிடித்தங்களுக்கும் (முக்கியமாக கடன்களுக்கு) உச்ச வரம்பு உண்டு என்றுதான் கேள்விப்படுகிறேன். அதுதான் லாஜிகலாக இருக்கும்.
அனானி (23.06.2009-இரவு 09.30-க்கு கேட்டவர்):
1. In your opinion, what is the best way to tackle communist terrorism?
பதில்: கம்யூனிசமோ வேறு என்னவோ தீவிரவாதம் என்பது ஒழிக்கப்பட வேண்டியதே. பை தி வே உலகில் எத்தனை கம்யூனிச அரசுகள் மிஞ்சியுள்ளன என நினைக்கிறீர்கள்? மிகவும் ஏழை நாடுகளான கியூபாவும் வட கொரியாவும்தான். சீனா எப்போதோ முதலாளித்துவவாத நாடாகி விட்டது. ஆகவே சென்ற நூற்றாண்டு ஐம்பதுகள் அறுபதுகளில் எதிர்க்கொண்டது போன்ற கம்யூனிச தீவிரவாதம் அதே ரூபத்தில் இப்போது இல்லை.
அவ்வாறு க்ளாசிகல் முறையில் அறிந்த கம்யூனிச தீவிரவாதம் மலேசியாவில் நாற்பதுகளின் இறுதியிலும், இந்தோநேசியாவில் அறுபதுகளின் மத்தியிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. முயன்று செயல்பட்டால் எல்லாமே முடியும்.
2. Communisa teeverivadam Tamilnattil nulaya vayppu ullada? (They are having base in Andhra)
பதில்: ஆந்திரா அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமில்லை என்று கருதுகிறேன்.
3. Why no political parties raised their voice on issue mentioned by Dinamani in their editorial வாளாவிருக்கிறோமே ஏன்?
பதில்: நான் ஏற்கனவேயே மேலே ரமணா அவ்ர்களது ஐந்தாம் கேள்விக்கு விடையாக கூறியது போல சீனா சர்வதேச அளவில் ஒரு போலி டோண்டுவாக செயல்பட்டுள்ளது. இந்தியா இதை சும்மாவிடக்கூடாது. எல்லா மன்றங்களுக்கும் சீனாவின் இந்த கபடநாடகத்தின் செய்தியை எடுத்து செல்ல வேண்டும். இக்னோர் செய்தால் இந்த போலி அடங்குவான் என்று இப்போதாவது யாரும் பிரச்சாரம் செய்யாமலிருப்பது நன்று.
ரவிஷா:
1. ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு வார்த்தை E யில் ஆரம்பித்து E இல் முடியும்! பல சமயம் அதில் ஒரே ஒரு லெட்டர்தான் இருக்கும்! அது என்ன?
பதில்: என்ன கண்ணா இதெல்லாம் ஒரு கேள்வியா?
2. ஒரு பணக்காரருக்கு இரண்டு மகன்கள்! ஒரு நாள் அவர் சாகக் கிடக்கிறார்! அப்போது அவர் இருவரையும் கூப்பிட்டு “நான் ஊரில் நடுவில் உள்ள ஒரு இடத்தில் ஒரு புதையலை வைத்துள்ளேன்! நீங்கள் இருவரும் தனித்தனி குதிரையில் சவாரி செய்து அந்த இடத்தை கண்டுபிடிக்கவேண்டும்! யார் குதிரை கடைசியாக அங்கே போய் சேருகிறதோ அவருக்கே அந்த புதையல்” என்று சொல்லிவிட்டு செத்துவிடுகிறார்! அவருடைய எண்ணம் என்னவென்றால் புதையல் மெதுவாக கிடைக்கட்டுமே என்று!
அதனால் இருவரும் தனித்தனி குதிரையில் ம்ம்ம்ம்ம்மெதுவாக அடிமேல் அடிவைத்து செல்கிறார்கள்! இருவரையும் கண்ட ஒரு முனிவர் என்ன விஷயம் என்று கேட்க
அவர்கள் விஷயத்தை சொல்ல, அவர் இருவர் காதிலேயும் ஒன்றை சொல்கிறார்! பிறகு நடந்தது என்னவென்றால், இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு
குதிரையில் பறக்கிறார்கள் அந்த புதையலை தேட! அந்த முனிவர் என்ன சொன்னார்? அதற்குப் பின் நடந்தது என்ன? அவர்கள் ஏன் அப்படி வேகமாக போகிறார்கள்?
பதில்: மூத்தவன் குதிரை இளையவனுக்கும் இளையவன் குதிரை மூத்தவனுக்கும் மாற்றினார் ஒரேயடியாக ரேஸ்தானே?
அனானி (24.06.2009 காலை 10.38-க்கு கேட்டவர்)
you are given a chance to become the leader/president for one day for the following organisations what will you do ?(one by one)
1.congress(tamil nadu) 2.dmk 3.admk 4.pmk 5.mdmk 6.nadikarkal sangam 7.vivasaiyikal sangam 8.viyaapaarikal sangam 9.vakkeelkal sangam 10.manavarkal sangam
பதில்: நம்மை ஒரு வழியாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே. ஏன் இந்த கொலைவெறி. காங்கிரஸ் தலைவனாக ஒரு நாள் இருந்தாலே ஒவ்வொரு கோஷ்டியும் கியூவில் வந்து ரவுண்ட் கட்டி அடிக்கும். பிறகு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் போக வேண்டும். ஆகவே மற்ற பொறுப்புகளை கற்பனையிலும் ஏற்க இயலாது. ஐயா ஜாலி.
அனானி (23.06.2009 மாலை 07.38-க்கு கேட்டவர்)
1. சின்னத்திரையும், சினிமாவும், செல்பேசியும், இண்டெர்நெட்டும் இளைஞர்களை சீரழிக்கின்றனவா?
பதில்: இவை காலத்தின் கட்டாயங்கள். அவற்றை நாம் ஆளவேண்டுமே தவிர அவை நம்மை ஆளவிடக்கூடாது. ஆகவே உங்கள் குற்றச்சாட்டுகளை ஒத்து கொல்ள இயலாது.
2. உலக, இந்திய, தமிழக அரசியல் இன்று எப்படியிருக்கிறது?
பதில்: எப்போதும் போல காலை வாரும் துரோக கலாசாரங்களுடன் அவை இருந்து வருகின்றன.
3. தமிழகக் காங்கிரசார் இனி என்ன செய்தால் காமராஜ் ஆட்சி மலரும்?
பதில்: காமராஜ் மீண்டும் பிறக்க வேண்டும்.
4. பெண்கள் நகை வாங்குவதால்தான் தங்கத்தின் விலை உச்சத்திலா?
பதில்: தங்கத்தின் விலையேற்றத்துக்கு இந்தியப் பெண்களின் நகைமோகமும் முக்கியக் காரணமே.
5. மூச்சுப்பயிற்சி செய்யும் பழக்கம் பரவலாகிவருவது பற்றி?
பதில்: இதனால் உருப்படியாக ஏதேனும் நடந்தால் சந்தோஷமே.
6. கோ ஆப் டெக்ஸின் பொருளாதார நிலை எப்படி?
பதில்: இதற்காக கூகளிட்டு பார்த்ததில் இந்த பக்கம் கிடைத்தது. நல்லபடியாகத்தான் அது நடக்கிறது எனத் தோன்றுகிறது. உங்களுக்கு வேறு ஏதேனும் விஷயங்கள் தெரியுமா?
7. தமிழக அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்து வரும் இருவர் யார் யார்?
பதில்: என்னைப் பொருத்தவரை அழகிரி மற்றும் ஸ்டாலின்.
8. இந்திய அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்து வரும் இருவர் யார் யார்?
பதில்: மோடி, ராகுல் காந்தி
9. உலக அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்து வரும் இருவர் யார் யார்?
பதில்: என் கண்ணுக்கு ஒருவரும் தென்படவில்லையே.
10. பருவ மழையின் கண்ணாமூச்சி விளையாட்டு?
பதில்: மிகுந்த கவலையளிக்கிறது. நிலத்தடி நீர் வேகமாக இறங்கி வருகிறது. ஏதோ மழைநீர் சேமிப்பு திட்டத்தால் சென்ற ஆண்டு மழை வேஸ்ட் ஆகாததால் நிலைஅமை அவ்வளவு மோசமாக இல்லை.
அனானி (23.06.2009 இரவு 07.52-க்கு கேட்டவர்)
1. வரலாற்றில் மூன்று கிரகணங்கள் தொடர்ந்து வந்தால் பேரழிவுகள் நடந்துள்ளதற்கு சான்றுகள் (இரண்டாம் உலகப் போர்) உள்ளதாயும் இந்த ஆண்டு அதன் தாக்கம் உண்டு என்ற தகவல்?
பதில்: அதை நான் நம்பவேயில்லை. கிரகணம் என்பது பூமியிலிருந்து தெரியும் ஒரு மாயத்தோற்றம். பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருபது என்பதே பூமியிலிருந்து பார்க்கும் பார்வை கோணத்தில்தான். இதற்கென ஸ்பெஷல் விளைவு என்பதையெல்லாம் நம்புவதற்கு நான் ஆள் இல்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
7 hours ago
51 comments:
//அனானி (23.06.2009 இரவு 07.52-க்கு கேட்டவர்)
1. வரலாற்றில் மூன்று கிரகணங்கள் தொடர்ந்து வந்தால் பேரழிவுகள் நடந்துள்ளதற்கு சான்றுகள் (இரண்டாம் உலகப் போர்) உள்ளதாயும் இந்த ஆண்டு அதன் தாக்கம் உண்டு என்ற தகவல்?
பதில்: அதை நான் நம்பவேயில்லை. கிரகணம் என்பது பூமியிலிருந்து தெரியும் ஒரு மாயத்தோற்றம். பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருபது என்பதே பூமியிலிருந்து பார்க்கும் பார்வை கோணத்தில்தான். இதற்கென ஸ்பெஷல் விளைவு என்பதையெல்லாம் நம்புவதற்கு நான் ஆள் இல்லை.//
//ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து சந்திர கிரகணம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று மூன்று கிரகணங்கள் தோன்றுவதால் பூமியில் பேரழிவு ஏற்படுமா என்ற பீதி கிளம்பியுள்ளது.
மூன்று கிரகணங்கள்
வானத்தில் மிகவும் அரிதான காட்சிகள் தோன்றுவது வழக்கம். ஒரே நேர்கோட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் வருவது, பூமிக்கு அருகில் ஏதாவது ஒரு கோள் நெருங்கி வருவது என ஆர்வத்தை தூண்டும் அபூர்வ நிகழ்வுகள் நடைபெற்று இருக்கின்றன.
அதுபோல, மற்றொரு அரிய நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஜுலை) மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெற உள்ளது.
அதாவது, ஜுலை 7-ந் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந் தேதி சூரிய கிரகணமும், ஆகஸ்ட் 6-ந் தேதி மீண்டும் ஒரு சந்திர கிரகணமும் தோன்றுகின்றன.
22-ந் தேதி தோன்றும் சூரிய கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம். அதிகாலை 5.30 மணிக்கு சூரிய கிரகணம் தோன்றும்.
புதிய புத்தகம்
ஒரு மாத காலத்துக்குள் அடுத்தடுத்து `மூன்று கிரகணங்கள்’ தோன்றுவது வானியல் சாஸ்திரத்தில் ஆச்சரியம் அளிக்கும் நிகழ்ச்சி. ஆனால், தொடர்ந்து 3 கிரகணங்கள் தோன்றுவதால் பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என்று பீதியை கிளப்புகின்றனர், பெங்களூரைச் சேர்ந்த ஹரி மற்றும் ஹேமா ஹரி என்ற தம்பதியினர்.
`பாரத் கியான்’ என்ற அமைப்பை நடத்தி வரும் இவர்கள், `வரலாறு திரும்புமா?…’ என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் பல்வேறு வரலாற்று ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றனர். அந்த புத்தகத்தை, `வாழும் கலை அறக்கட்டளை’ வெளியிட்டுள்ளது.
ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் தோன்றிய சமயங்களில் எல்லாம் என்னென்ன பேரழிவுகள் ஏற்பட்டன என்பதை அந்த புத்தகத்தில் தெளிவாக விளக்கி உள்ளனர்.
முந்தைய பேரழிவுகள்
கி.மு.3067-ம் ஆண்டில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் தோன்றிய சமயத்தில் தான், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே குருட்சேத்திர போர் (மகாபாரத யுத்தம்) நடந்தது.
அதுபோல, கிருஷ்ணர் ஆட்சி செய்ததாக கருதப்படும் துவாரகை நகரம் கடலுக்குள் மூழ்கிய கி.மு.3031-ம் ஆண்டிலும் மூன்று கிரகணங்கள் தோன்றியதாம்.
இவை எல்லாம் புராண கால உதாரணங்கள் என்று கூறுபவர்களுக்கு சமீப கால உதாரணங்களையும் அந்த புத்தகம் எடுத்துக் காட்டுகிறது.
கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை பல்வேறு சமயங்களில் மூன்று கிரகணங்கள் அடுத்தடுத்து தோன்றி இருக்கின்றன.
அப்போது தான், முதல் உலகப் போரும் இரண்டாவது உலகப் போரும் நடைபெற்றன. மேலும், ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டன.
இது போன்று ஏராளமான ஆதாரங்கள் என்னும் குண்டுகளை அந்த புத்தகம் அள்ளி வீசி இருக்கிறது,
12 ஆண்டுக்குள் 6 முÛ
தற்போது, அடுத்த மாதம் முதல் 2020-ம் ஆண்டு வரையிலும் 6 முறை அடுத்தடுத்து `மூன்று கிரகணங்கள்’ ஏற்பட உள்ளன.
அதாவது, 12 ஆண்டுகளுக்குள் தொடர்ச்சியாக இது போன்று நிகழ இருப்பதால், மூன்றாவது உலகப்போர் மூளுமா? அல்லது வேறு வகையில் பூமியில் பேரழிவு ஏற்படுமா? என்று அந்த புத்தகம் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
இந்த அளவுக்கு `பகீர்’ தகவல்களை கூறியுள்ள ஹேமா, “வானியல் மாற்றங்களையும் அவற்றை தொடர்ந்து நிகழ்ந்த வரலாற்று ஆதாரங்களை மட்டுமே நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். கோள்கள் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்கவில்லை. இதை எச்சரிக்கையாக கருதாமல், ஒன்றுக்கொன்று இணையான நிகழ்வுகளாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்று அமைதியாக தெரிவிக்கிறார்//
-courtesy-http://www.paristamil.com/tamilnews/?p=17767
//1. Who will be next super star in tamil cinema field (1. MGR 2. Rajani 3. ?)
பதில்: யார் என்ற கேள்வி too early. முதலில் பழைய சூப்பர் ஸ்டார் முழுதுமாக சீனில் இருந்து மறைய வேண்டும்//
இளைய தளபதி விஜய் என்று சொல்ல என்ன தயக்கம்.
தல field லே இல்லயே!
/3. Who will be the successor to karunanithi (chanakkiya arasiyal)?
பதில்: கருணாநிதிக்கு அப்புறம் கட்சியே முழுசாக நிற்குமா என பார்க்க வேண்டியதுள்ளது. பிறகுதான் யார் கருணாநிதிக்கு வாரிசு என்றெல்லாம் பேசுவதில் பொருள் இருக்கும்//
அழகிரிதான் இதிலென்ன சந்தேகம்
//4. Will it be possible to see honest leaders like kamaraj/rajaji/anna in the coming days?
பதில்: முதலில் நாம் அவர்களையெல்லாம் வர விடுவோம்னு நினைக்கிறீங்க? ஆனால் குஜராத்தியர்கள் நம்மை விட புத்திசாலிகள். //
விட்டால் மோடி ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவீர்கள் போலிருக்கு!
பதில்கள் அற்புதம்! வட கொரியா விடும் சவுண்டில் சீனா பேதி கண்டிருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே! இன்னும் கொஞ்ச வருஷங்களுக்கு சீனா தன்னை காப்பாற்றிக்கொள்ளவே சிரமப்படப்போகிறது! அதனால் வாலைச் சுருட்டி வைக்கும் நேரம் அனேகமாக வந்துவிட்டது!
/வரதட்சணை வாங்குவது சரியில்லைதான்,/
வரதட்சணை கொடுப்பது என்பது என் மகளின் உரிமையை திருமணத்தின் போது செய்ய வேண்டிய கடமை அல்லவே?
ஏன் அதை தடுக்க வேண்டும்?
இதனால் பெண்ணின் சொத்துரிமை மறுக்கபடவில்லயா?
அப்பெண்ணை ஏன் கணவன் மட்டுமே காப்பாற்ற வேண்டும்?
பெண் போகம் கொடுப்பதால் அவளுக்கு கணவன் சோறு போட்டு அவள் தேவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமா? இது ஒருமாதிரியான விபச்சாரமா?
பெண்கள் போகம் அனுபவிப்பது இல்லையா? கணவனுக்காக மட்டுமே அவள் போகத்தில் ஈடுபடுகிறாளா?
சார் இந்த வார பதில்கள் சூப்பர். நிறைய கேள்விகளுக்கு பதில் வேற.அட்டகாசம்
@இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மந்திரிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய ரகசிய தகவல்கள் டோண்டு ராகவனுக்கு கிடைப்பதாக உங்களுக்கு யாரோ அவதூறாக தகவல்கள் சொல்லியுள்ளனர்.@
இந்த பதில் ரொம்ப அருமை :)
@இளைய தளபதி விஜய் என்று சொல்ல என்ன தயக்கம்.
தல field லே இல்லயே!@
வேட்டைகாரனும் பணால் ஆணால் இளைய தளபதி field out ஆகி விடுவார். சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினி மட்டும் தான்.
1. சீனாவிற்க்கு செக் வைக்க இந்தியா அல்லது அமெரிக்கா வட கொரியாவை தூண்டி விடுகிறதா?
2. பசங்க படம் பார்த்தீர்களா?
//. நான் விளிப்பது தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனையே.//
என்ன சார், ”என் உள்ளம் கவர் கள்வன், என் அப்பன்” எனும் வரிகளைக் காணோம்
///ரவிஷா:
1. ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு வார்த்தை E யில் ஆரம்பித்து E இல் முடியும்! பல சமயம் அதில் ஒரே ஒரு லெட்டர்தான் இருக்கும்! அது என்ன?
பதில்: என்ன கண்ணா இதெல்லாம் ஒரு கேள்வியா? ///
அது Eye அல்ல envelope - சரியா ரவிஷா?
//Arun Kumar said...
@இளைய தளபதி விஜய் என்று சொல்ல என்ன தயக்கம்.
தல field லே இல்லயே!@
வேட்டைகாரனும் பணால் ஆணால் இளைய தளபதி field out ஆகி விடுவார். சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினி மட்டும் தான்//
.)
எங்கே பிராமணன் தொடரில் சமீபமாக title song “வேத கோஷம் ..” பாட்டு வருவதில்லையே, ஏன்? அதில் நடிக்கும் நடிக, நடிகைகள் பெயர்களும் வருவதில்லையே, ஏன்? ஏதாவது
பிரச்னையா?
ராஜசுப்ரமணியம்
25-06-2009
//என்ன படம்னு பின்னூட்டத்திலே சொல்லுங்கப்பு.//
அந்த படம் இயக்குனர் பி.வாசுவின் மகன் நடித்தது.
வடிவேலு மும்மையில் இருந்து வரும் போது இந்த கூத்து நடக்கும்.
”அரபுநாடே அசந்து நிற்கும் அழகியா” என்ற பாடல் இன்றும் இளைஞர்கள் உதட்டில் நிற்கிறது.
படத்தின் பெயர்
”தொட்டால் பூ மலரும்”
ஆனா பாருங்க நான் அந்த படம் பார்க்கவில்லை!
//வரதட்சணை வாங்குவது சரியில்லைதான், கேக்கலைனா மாப்பிள்ளைக்கு குறை இருக்குனு நெனப்பாங்க’ - இதைப் பற்றி தங்களின் கருத்து என்ன?
பதில்: அது மனித இயற்கையே//
எது இயற்கை
கொடுக்குறதா, இல்ல வாங்குறதா!
எத்தனை பேர் வரதட்சனை கொடுக்கமுடியாமல் முதிர்கன்னிகளாக இருக்கிறார்கள் தெரியுமா?
//ஒரு ஐயமும் இல்லை. முனீஸ்வரன் நமக்கு bodyguard ஆக செயல்படுகிறார்.//
எவ்ளோ சம்பளம் வாங்கிறார்!
அடுத்தவன் அதிகமாக கொடுத்தால் உங்களை போட்டு தள்ள வாய்ப்புண்டா!
//குஜராத்தியர்கள் நம்மை விட புத்திசாலிகள்.//
அங்கே இருந்த ஆப்சனில் மோடி நல்லவராக இருக்கலாம்!
இங்கே இருக்கும் ஆப்சனில் எவன் யோக்கியன் என்று கூறிவிட்டு பிறகு தமிழக மக்களை குறை கூறுங்களேன்!
//தமிழில் அனைத்து எழுத்துக்களும் வரும் விதத்தில் ஒரு சிறு பத்தி இருக்குமா? //
உருவாக்கமுடியும் என்றே தோன்றுகிறது!
ஆனால் கண்டிப்பாக எழுத்துக்கள் ரிப்பீட் ஆகும்!
//வால்பையன் சாதிகளையே ஒட்டு மொத்தமாக எதிர்ப்பவர், அவரும் இதை எதிர்ப்பார் என்றுதான் நினைக்கிறேன். //
என்னை கேட்டால், இரண்டே ஆப்சன் தான் ஒன்று எல்லோரும் உயர்ந்த சாதி என்று அறிவிக்க வேண்டும், அல்லது எல்லோரும் தாழ்ந்த சாதி என அறிவிக்க வேண்டும்.
கல்வியில் அவர்களது பொருளாதார அடிப்படையில் சலுகைகள் தரலாம்!
மற்றவர்களை மரியாதை குறைவாக நடத்துபவர்களை பத்து கிலோ கல்லை கழுத்தோட கட்டி பத்து நாளைக்கு சுமக்க சொல்லலாம்!
மனிதனை அடையாளப்படுத்த பெயர் என்று ஒன்று இருக்கிறது, பிறகு எதற்கு சாதி, புண்ணாக்கு!
//சீனாவால் அவ்வளவு தூரம் வந்து வாலாட்டுவது என்பதை long standing ஆக செய்வது கடினம்//
அமெரிக்கா மட்டும் ஆப்கானிஸ்தான் வரைக்கும் வாலாட்டுது!
அது எப்படி முடியுது!?
//விஜய்காந்த்., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது என ஒன்றும் இல்லை. பிடிக்காதது பாமகவுக்கு சொன்னதை போலவே சந்தர்ப்பவாத அரசியல்தான்.//
விஜயகாந்த் கடைசிவரை தனித்து போட்டியிட்டதை மனதில் கொண்டுதான் சொல்கிறீர்களா?
எனது பதில்
பிடிக்காதது:அரசியல் பண்ண தெரியாதது, நானாக இருந்தால் கூட்டணி சேர்ந்து நாலு சீட்டு வாங்கி ஒரு மந்திரி பதவியும் வாங்கியிருப்பேன்!
//வலது.கம்யூனிஸ்ட்/இடது.கம்யூனிஸ்ட்.
தேசபக்தி இல்லாத கட்சி.//
உங்கள் பார்வையில் தேசபக்தி என்பது நாட்டை மற்றவர்களுக்கு அடகு வைப்பதா?
//அதி.மு.க., கட்சியிடம்/தலைவரிடம்/தொண்டர்களிடம் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது?
பதில்: பிடித்தது வலிமையான தலைமை//
கலிஹுல்லா, ஹிட்லர், முசோலினி, இடி அமின் கூட தான் வலிமையான தலைவர்களாக இருந்தனர்!
//மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து?
பதில்: தேவையற்றது.//
இந்தியாவுக்கு உங்க கருத்து தேவையற்றது! சோவுக்கும் சேர்த்து தான்!
உங்களை திறம்பட நிர்வாகிக்கும் உங்கள் துணைவியார், அதே போல் சிறப்பாக நாட்டை நிர்வாகிக்க முடியாதா!
ஆண்களை விட பெண்கள் தறு செய்ய அஞ்சுபவர்கள் அதற்காகவாவது அவர்களுக்கு முழு வாய்ப்பும் வழங்கலாம்!
//மதவெறியர்களும், தீவிரவாதிகளும் அடங்கவே மாட்டார்களா?
பதில்: மக்கள் விழிப்புணர்வுடன் இல்லையே.//
மக்களுகுள்ளும் மதவெறியர்களும், தீவிரவாதிகளும் இருக்கிறார்களே!
எங்கிருந்து உருப்படுவது!
//டண்டணக்க அடுக்கு மொழி ஸ்பெஷலிஸ்டு டி.ராஜேந்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?//
யாராவது பேட்டி எடுக்க வரமாட்டார்களா என்று வாசலையே பார்த்து கொண்டிருக்கிறார்!
//2 ஜி செல் பேசியின் வரவால் சிட்டுக் குருவிகளை காணோம் பார்த்தீர்களா?//
காரணம் அதுவல்ல,
மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் நகரமயமாகியதே அதற்கு காரணம்!
//3 ஜி வந்தால்?//
செலவு தான்!
//விஜயகாந்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது?//
சம்பாரித்த பணத்தை ரியலெஸ்டேட்டில் நடிகர்கள் முதலீடு செய்கிறார்கள்!,
தேர்தலின் போது பெரிய நிறுவனங்கள் சுண்டைக்க கட்சிக்கும் பணம் கொடுப்பது வழக்கம்!
//மன்மோகன் சிங் தனது முழு திறமையையும் பயன்படுத்த இயலும்/
பகல்கனவு பலிப்பதில்லையே!
//பங்கு மார்க்கெட் ஏன் உயர்கிறது/சரிகிறது?
பதில்: வால்பையன்,//
மன்னிகவும், நான் கமாடிடி ட்ரேடிங்கை சேர்ந்தவன்.
தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணை விலை விபரம் அறிய என்னை தொடர்பு கொள்ளலாம்.
தங்கம், வெள்ளி விலை குறையும் நேரத்தில் ஆல்டர் இன்வெஸ்டாக சேர் மார்கெட் உயரும் அதை பயன்படுத்தி கொள்ளலாம்!
//பங்கு மார்க்கெட் -குதிரைப் பந்தயம்-சீட்டு விளையாட்டு //
மூன்றுமே அடிமைபடுத்தும் விசயங்கள் தான், விட்ட பணத்தை அதிலேயே எடுக்கிறேன் என்று சிலர் செய்யும் கோமாளிதனங்கள் என்னை அதிர்ச்சிகுள்ளாக்கும்!
சென்ற பின்னூட்டத்தின் தொடர்ச்சி:
அதே நேரம் மற்ற சூதாட்டத்துடன் முழுமையாக பங்கு வணிகத்தை ஒப்பொடக்கூடாது.
பங்கு என்பது ஒருவர் நடத்தும் நிறுவனத்தில் நாம் பங்குதாரராக இருப்பது, நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்து நமக்கு லாபம் இருக்கும்.
தினம் தினம் விளையாடுவது அவரவர் வசதியை பொறுத்தது!
//இந்த பழமொழி இப்போது சாத்தியமா-செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருப்போன் என்பதெல்லாம்?
பதில்: சாத்தியமே இல்லைதான்.//
பழமொழியை எளிய தமிழ்படுத்தவும்!
புரியாமல் என்னை படுத்துகிறது!
//பல விஷயங்களை தொட்ட அவ்விருவருமே//
சுஜாதாவுடன் எப்படி இப்படி சோவை கம்பேர் செய்கிறீர்கள்.
சோ பத்திரிக்கையாளராக இருந்தாலும் ஒரு திரை மறைவு அரசியல்வாதி என்பது தமிழ்கத்துக்கே தெரியும்.
தயவுசெய்து சுஜாதாவுடன் இம்மாதிரி ஒப்பீடாதீர்கள்!
//பலன் என்று பார்த்தால் அதை சொல்வதனால் கிடைக்கும் மன அமைதிதான்.//
இடர் வரும் நேரங்களில் ”நமீதா”,”நமீதா” என்று கூட சொல்லிபாருங்கள் அமைதி கிடைக்கும்!
//மிகவும் ஏழை நாடுகளான கியூபாவும் வட கொரியாவும்தான்.//
யாருகிட்ட அவுங்க ரெண்டு பேரும் பிச்சை எடுத்துகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கலாமா!
இல்லை ஜனநாய்க(எழுத்து பிழை இருக்கா?) நாடு பிச்சையே எடுக்காமல் இருக்கா?
//Communisa teeverivadam Tamilnattil nulaya vayppu ullada?//
திராவிட கட்சிகள் அடிப்படையில் கம்யூனிஷத்திலிருந்து வந்தது தான் என பெரியாரே குறிப்பிட்டுள்ளார், கருணாநிதியே ஒருமுறை நானும் ஒரு கம்யூனிஷவாதி என்று சொல்லியுள்ளார்.
தி.மு.க ஆட்சியில் கம்யூனிஷ தீவிரவாதம் வாய்பில்லை, அதிகபட்சமாக இஸ்லாமிய தீவிரவாதமும் அடங்கி இருப்பது கண்கூடு!
//தங்கத்தின் விலையேற்றத்துக்கு இந்தியப் பெண்களின் நகைமோகமும் முக்கியக் காரணமே.//
அதுவும் ஒருகாரணம் என்று தான் சொல்லமுடியும்.
தற்போது தங்கம் முதலீட்டில் முதல் இடத்தில் நிற்கிறது. கிலோ கணக்கில் தங்கத்திற்கு சம்பந்தமில்லாத வியாபாரிகள் ஸ்டாக் வைத்துள்ளதை நான் அறிவேன்!
//தமிழக அரசியலில் இன்று வேகமாக (புகழில்) வளர்ந்து வரும் இருவர் யார் யார்?
பதில்: என்னைப் பொருத்தவரை அழகிரி மற்றும் ஸ்டாலின்.//
ஸ்டாலின் ஏற்கனவே வளர்ந்தவர்,
அழகிரிக்கு பின் கனிமொழியை தான் சொல்லமுடியும்!
உங்கள் கல்யாண நிகழ்வை படம் பிடித்து காட்டவும். ( அருமையா எழுதுறீங்க! )
என்னை மாதிரி பேச்சிலர்களுக்கு உதவும்! :-)
நான் இங்கே கேட்க விரும்புவது - பெண்கள் வீட்டை நடத்தும் விதம். ( உங்கள் பதிலிலிருந்து ஒரு படி மேலே )
one useful information for all
மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மென்பொருள் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தினால் தான் இத்தகைய சேவையை பெறமுடியும் என்ற நிலையில் இங்கு இலவசமாக மொழிமாற்றம் நாமே செய்து கொள்ளலாம்.
ஜேர்மன்-to-தமிழ் அல்லது English-to-Tamil மொழிமாற்றம் சேய்ய ஒரு நல்ல இணைய பக்கம்
இதனை பெற இங்கே சொடுக்கவும்..
http://www.tamildict.com
-courtesy-http://karuthumandram.blogspot.com
ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆளுனரின் பாதுகாப்பு படையில் உள்ள இந்துக்கள் பயன்படுத்திய கோயில் அது
அதே போல் பாடிகார்ட் பள்ளிவாசல் கூட இருக்கிறது
//5. பெரிய நிறுவனங்கள் சிறுவியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என்கிற தடை கொண்டுவரப்பட வேண்டும் எனும் வாதம் என்ன்னாச்சு?
பதில்: ஏன் தடை வரவேண்டும்? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கல் காய்கறி, பழம் வியாபாரம் செய்வதால் நுகர்வோருக்கும் நல்ல தரமான பொருள் கிடைக்கும், அதே சமயம் விவசாயிக்கும் நல்ல விலை கிடைக்கும். என்ன பிரச்சினை?//
விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து அவர்கள் பணத்தைப் பார்த்துவிடக்கூடாது என்று சில பேர் அறிவாள் சுத்தியலுடன் அலைகிறார்கள். அவர்கள் தான் இப்படிப்பட்ட வாதங்கள் புரிகிறார்கள்.
The Government of India has identified Mr.Nikelani to head the authority to give unique ID number to each citizen, and have allotted 100 crores for this purpose. The purpose is of course noble and long awaited too.
But, to issue these citizen identity cards, to start with, on the basis of electoral list only shows that any list can never become perfect, even after 20 to 30 years after starting this work. Every time an election is announced, lakhs of voters are added and lakhs of voters are deleted.
Why not start the work on the basis of merging data already available with banks, commercial tax offices, Income Tax pan cards, Driving licences, and also through death and birth certificates maintained by municipalities and village panchayats etc.
What is your opinion ?
எல்லோரும் மன்னிக்கவும். இன்று முழுக்க மின்சாரம் இல்லை. இப்போதுதான் வந்தது. சுமார் 38 பின்னூட்டங்களை இப்போதுதான் மட்டுறுத்த முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சீன பொம்மை இறக்குமதியை இந்தியா தடைசெய்த பின்னர் சீனா உலக வர்த்தக நிறுவனத்தில்(WTO) புகார் கொடுப்போம் என்று சொன்னது, அப்பொழுது பம்மிக் கொண்டு இந்தியா சீனா பொம்மைகள் மீதான தடையை நீக்கியது. ஆனால் இப்பொழுது மேட் இன் இந்தியா என போலி முத்திரையிடப்பட்ட சீன மருந்துகள், ஸ்பார்க் பிளக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன, சீனாவிற்கான இந்திய தூதுவர் இதை பற்றி அவர்கள் அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் நாமும் உலக வர்த்தக நிறுவனத்திடம் இதை பற்றி புகார் கொடுக்க வேண்டும் ஏனெனில் இது இந்திய தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை குறைத்து இந்திய பொருளாதாரத்தையே பாதிக்கும் ஒரு விஷயம்.
நன்றி,
ராம்குமரன்
Dondu Sir,
Thanks for answering my questions.
I think writer Sujatha used to write in Thuklak (probably in the 70's) if I am not mistaken. I started reading Thuklak from 1987, so I don't have anything to back it up.
One of the quotes I remember very distinctly from Sujatha is this.
"Varusham muyuvadhum tamash seiyum Cho, andu vizhavil serious aka pesuvar, ippothu angeyum thamash". This was in reference to Cho asking Rajini to join politics in a Thuklak Annual day function.
On another note, Enge Brahmanan-isaitamil.net link for 25th June ends abruptly. This link works better.
http://www.techsatish.net/2009/06/25/enge-bramanan-25-06-09/
Regards.
Partha.
1.இந்தியாவில் இனி கூட்டணி ஆட்சிகளின் தயவில்தானா இல்லை நிலமை மாறுமா?
2.இனி ராமதாஸ்,வைகோ,சரத்,லாலு,பாஸ்வன் நிலைமை?
3.பள்ளிகளுக்கான தமிழக அரசின் ‘புத்தகம் பூங்கொத்து’ திட்டம் செயலாக்கம் தற்சமயம் எப்படி உள்ளது?
4.ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்களில் மாவட்ட வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் வாய்ப்பிருக்கா?
5.இன்றைய அதிரடி ( காலை முதல் மாலை வரை) உண்ணாவிரதங்களைப் பார்க்கும்போது?
6.ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மாவட்ட கலைக்டரின் சம்பளம் ஒரு ல்ட்ச்த்திற்கு ச்ற்று குறைவாமே?
7.அமிதாப் சிவசேனை க்ட்சியினர் ராசியாகிவிட்டனரா?
8.புதுக் கதாநாயகர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்?ஏன்?
9.புதுக் கதாநாயகிகளுக்குள் உங்களைக் கவர்ந்தவர் யார்?ஏன்?
10.புதுக் நகச்சுவை நடிகர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்?ஏன்?
11.ஒகேனக்கல் பிரச்னையாக ஆளுக்கு ஆள் வேலை நிறுத்தம், கதவடைப்பு என்று செய்தார்களே இப்போது?
12.சினிமாவில் ‘சென்சார்’ இருக்கா?
13.வேலூர் தங்கக் கோவிலுக்கு போயிருக்கிறிர்களா?என்ன் விசேஷம்?
14.டெல்லி அக்சர்தாம் கோவில் மாதிரியா?
15.இவர்களுக்கு இந்த அளவுக்கு பணம் கொடுப்பது யார்?
16. இந்த ஆடம்பரச் செலவீனங்களுக்கு வருமான வரித்துறையின் அனுமதி வாங்கிக் கொடுக்கும் பெரிய நபர்கள் யார் யார்?
17.அவ்ர்களுக்கு இதில் லாபம் என்ன?
18.10ம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு இனி டாடா இது சரியாய் வருமா?
19.பேருந்துக் கட்டண உயர்வுப் பிரச்னையில் மீண்டும் தலைதூக்குமா?
20.சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அடுத்ததாகப் பெரிய விவசாயிகளுக்கும் கடனைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள் போலுள்ளது?
21.பேசாமல் கடன் கொடுப்பதை இலவசம் என்று சொல்லிவிட்டால்?
22.தமிழ்க அரசியல் கெட்டுப் போனதற்கு முக்கிய காரணம் யார்?
23.இந்திய அரசியல் கெட்டுப் போனது
யாரால்?
24.உலக அரசியல் கெட்டுப் போனது
நார் கலத்தில்?
25.புத்தகப் பதிப்புத் துறைக்கு இப்போது நல்ல காலமா?
26.ப.சிதம்பரம் அவ்ர்களின் வெற்றி ஒருவேளை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டால்,தடை செய்யப் பட்டால் அவர் என்ன் செய்ய் வேண்டும்?
27.கருணாநிதியை நவீன பகீரதன் என்று புகழ்கிறாரே ஸ்டாலின் இது கொஞ்சம் ஓவராய் இல்லை?
28.அழகிரியின் செயல் பாடுகள் கொஞ்சம் வித்தியசமாய்?
29.பிரபாகரன் விசயத்தில் நக்கீரன் ஏன் இப்படி செய்திகளை தருகிறது?
30.அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடி நீர் கட் அரசாணை சரியா?
31.டாடவின் ஒருவிநாடி ஒரு பைசா திட்டம் செல்பெசி த்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துமா?
32.ராமதாஸின் வன்னியர் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை மீண்டும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தவா?
எமர்ஜென்சி காலத்தில் அரசு அலுவகங்களில் பனிகள் வேகமாக நடந்தது என்று சொல்கிறார்களே, உண்மையில் அப்படி தான் நடந்ததா?
/தயாநிதி மாறன் நடுநிலைமை வகிப்பார் என நினைக்கிறேன்/
reason?
Post a Comment