கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. நமது பாரத தேசத்தில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 1000 த்தை தாண்டிவிட்டதா?
பதில்: என்ன, இன்னும் தாண்டவில்லையா? தாண்டிவிட்டது என்றுதானே நினைத்து கொண்டிருக்கிறேன். கட்சிகளின் எண்ணிக்கை ஒரு புறம் இருக்கட்டும், அவற்றில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கை? அதுவும் தமிழக காங்கிரசில்?
2. திராவிடக்கட்சிகளின் கொள்கையான சுமரியாதை திருமணங்களை அவர்களில் எத்தனை விழுக்காடு நபர்கள் கடைபிடிக்கிறார்கள்?
பதில்: அதை மற்றவர்களுக்கு அக்கறையாக போதித்த பெரியாரே அதை கடைபிடிக்கவில்லையே? மணியம்மையாரை அவர் பதிவுத் திருமணம்தானே செய்து கொண்டார்? அதற்கு காரணம் அக்கால கட்டத்தில் சுயமரியாதை திருமணம் சட்ட அங்கீகாரம் இல்லாதது. ஆகவே சொத்தை காப்பாறும் எண்ணத்தில் அவர் செய்ததே பதிவு திருமணம். அதை குற்றம் சொல்ல இயலாதுதான். ஆனால் அதை அதே காலகட்டத்தில் மற்றவர்களுக்கு மட்டும் அவர் போதித்தது யோக்கியமான செய்கை இல்லைதானே. ஏன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொத்து பிரச்சினை வந்தால் இவரா போய் சமாதானம் சொல்லியிருக்க போகிறார்? ஊராருக்கு சொல்லும் போதனை தனக்கு மட்டும் பொருந்தாது என அவர் செயல்பட்டதற்கு இதுவும் ஒரு உதாரணமே. சாஸ்திரீய முறை வேண்டாம், சரி. ஆகவே பதிவு திருமணம் செய்யுங்கள் எனக்கூறும் நேர்மை அவரிடம் இல்லையே?
3. கூட்டணி பற்றி விஜயகாந்த் திடீர் மனமாற்றம் நல்ல பலனை யாருக்கு கொடுக்கப் போகிறது?
பதில்: அவருக்குத்தான். சில்லறை தேராது என பலர் கட்சியை விட்டு விலகுவது ஓரளவுக்கு தடைபடலாம் அல்லவா?
4. பாலகங்காதர திலகர், நீலகண்ட பிரம்மச்சாரி, கோபாலகிருஷ்ண கோகலே, வ.உ.சி. ஆகியோரின் தியாகம் சரியாய் போற்றப்படுகிறதா? நினைக்கப்படுகிறதா?
பதில்: அப்போதைய தேவை தேச சுதந்திரம். அதை பற்றியே கவலைப்படாது தத்தம் வேலைகளை பார்த்தவர்களே அதிகம். என்ன நடந்ததென்றால், சுதந்திரம் வந்ததுமே அம்மாதிரியானவர்கள் அரசியலில் அதிகம் ஈடுபட்டனர். தியாகிகள் ஒதுங்கியது அவர்களுக்கு சௌகரியமாக போயிற்று. ஆகவே சுதந்திரம் வந்து அறுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் தியாகிகள் பற்றி யார் கவலை கொள்ளப் போகிறார்கள்? அவரவர் கவலை அவருக்கு.
5. ஒரு ஒப்பீடு :கல்யாணத்திற்கு முன் காதலர்கள் மன நிலை, கல்யாணத்திற்குப் பின் காதலர்கள் மன நிலை?
பதில்: பொம்மை வேண்டும் என மிக அழுது அடம்பிடித்து அதை வாங்கிக் கொள்ளும் குழந்தை சீக்கிரமே அந்த பொம்மையில் ஆர்வம் இழந்து தூக்கி எறிவதில்லையா? அதைப் போலத்தான் பல காதலர்களின் மனநிலையும் உள்ளது என்பது மறுக்கவியலாத நிஜம்.
6. இந்த வருடம் மருத்துவர் படிப்புத் தேர்வில் முற்பட்ட ஜாதியினர் 50 பேர் மட்டும் தேர்வு எதைக்காட்டுகிறது?
பதில்: மீதிப்பேர் சரியாக படிக்கவில்லை அல்லது தேர்வில் கலந்து கொண்ட முற்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறைவானதாக இருந்திருக்கும். மருத்துவர் ப்ரூனோவுக்கு போக வேண்டிய கேள்வி இது.
7. நினைத்ததற்கெல்லாம் நீதிமன்றம் போய் தடை வாங்குபவர்கள் பற்றி?
பதில்: Frivolous case filing எல்லாம் தண்டிக்கப்படக் கூடியவை. அவ்வாறு செய்தவர்களுக்கு அபராதமும் போடப்பட்டுள்ளது.
8. வாழ்க்கை சிலருக்கு மட்டும் எப்போதும் ஜாலியாய் எப்படி?
பதில்: எல்லா அனுபவத்தையும் ஜாலியாக எடுத்து கொண்டால் போயிற்று. ஆனால் அது பலருக்கு இயலாது. அவ்வாறு செய்ய முடிந்தவர்கள் பாடு ஜாலிதானே.
9. மவுனமாக உள்ள பெண்களை டோண்டு சந்தித்தால்?
பதில்: சம்பந்தப்பட்ட பெண் உதைக்காமல் இருந்தால் “மௌனமே பார்வையாய் ஒரு பாட்டு பாடவேண்டும்/ நாணமே ஜாடையாய் ஒரு வார்த்தை பேச வேண்டும்” என சமீபத்தில் 1966-ல் வெளியான கொடிமலர் படப்பாட்டை பாடலாம். அல்லது சமீபத்தில் 1995-ல் வெளியான கர்ணா படத்தில் அர்ஜுன் பாடிய மலரே மௌனமா என்றும் பாடலாம். எல்லாம் விதிப்படி நடக்கும் (உதை வாங்குவது உட்பட).
10. அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறுகிறார்களே, இதில் அதிக பலன் பெற்றவ்ர் யார்?
பதில்: என்ன குழந்தைத்தனமான கேள்வி! சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள்தான். வேறு யாராக இருக்கவியலும்?
11. ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளில் மிகவும் மக்களை பாதித்தது எது?
பதில்: 1991-96 காலகட்டத்தில் கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் அவரும் அவரது தோழியும் வளைத்து போட முயன்றதில் பலரும் பாதிக்கப்பட்டனர். அதுவே 2001-06 ஆட்சியில் அப்படி ஒன்றும் அதிக சொதப்பல்கள் இல்லை. இருப்பினும் அரசு ஊழியர்கள் பிரச்சினையில் முதலில் நன்றாக செயல்பட்டவர் தனது நடவடிக்கைகளை சோ போன்றவர்கள் சொன்னபோது நிறுத்தி கொள்ள வேண்டிய நேரத்தில் அதைச் செய்யாது அதுவரை கண்ட பலன்களையெல்லாம் தாரை வார்த்தார். அதனால் என்னவாயிற்று என்றால் இப்போது அரசு அதிகாரிகளின் அட்டகாசம் இன்னும் அதிகமாகி விட்டது.
12. இன்றையத் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் அடுத்த துருப்பு சீட்டு எதுவாய் இருக்கும்?
பதில்: கருணாநிதி செய்யக் கூடிய சொதப்பல்கள், அவரது குடும்பத்தில் உருவாகியுள்ள போட்டிகள் பொறாமைகள்.
13. மதுரைப் பகுதியில் வேலும் வாளும் விளையாடும் வீர பூமியில் பெரும் தொண்டர்களுடன் ஜெ.யிடமிருந்து க.விடம் கட்சி மாற இருப்பதாய் கசியும் தகவல்கள் பற்றி?சதுரங்க ஆட்டம் எப்படி?
பதில்: கருணாநிதி மட்டும்தான் சொதப்ப வேண்டுமா, நானும் செய்வேன் என்று போட்டியுடன் செயல்படுகிறார் என்னும் தோற்றம் தருவது ஜெயலலிதா. இம்மாதிரி இரு தலைவர்களும் இருந்தால் தமிழகம் உருப்படுமா?
14. மீண்டும் தி.அரசு ஜெ-யின் தானைத் தளபதியாமே?
பதில்: யார் அவர்?
15. சென்னையில் ஓடும் குளுகுளு வசதிப் பேருந்துகள்-மக்களின் விமர்சனம்?
பதில்: பேருந்துக்குள் நிற்கும் பயணிகளை அனுமதிக்காமல் சென்றால் நல்ல அனுபவமே. டாக்சி ஆட்டோக்களை விட அதிக பாதுகாப்பானது வேறு. காசு விஷயத்திலும் ரொம்ப மலிவே.
16. பொதுவாய் பெண்கள் மிக அதிகம் பேசுவது எப்போது?
பதில்: எல்லோரையும் போலத்தான், அதாவது தங்கள் கட்சி பலவீனமாகும் போது.
17. பொதுவாய் பெண்கள் மிகக் குறைவாய் பேசுவது எப்போது?
பதில்: தூங்கும்போது.
18. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மிகவும் சிறப்பாய் உள்ளது எது?
பதில்: சிறப்பானவை குஜராத்தில் உள்ளன.
19. தந்தை பெரியாரின் கருத்துகளில் தங்களை மிகவும் கவர்ந்தது எது?
பதில்: “நானே சொன்னதாக இருந்தாலும் கேள்வி கேளுங்கள்” எனக் கூறியது எனது மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அதே பெரியார் தனது கட்சியில் இருப்பவர்கள் பகுத்தறிவை மூட்டை கட்டி வைக்க வேண்டும் என்பதும் எனது கவனத்தை ஈர்த்தது. நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை.
20. பெரியாரின் கருத்துகளில் உங்களால் ஜீரணிக்க முடியாதது எது?
பதில்: முந்தைய கேள்வியிலேயே அதற்கான பதில் உள்ளது.
21. பெரியார் -அண்ணா -ஒப்பிடுக?
பதில்: 1967 தேர்தலில் திமுக மேலும் அண்ணா மேலும் கடுமையான விமரிசனங்களை வைத்தவர் பெரியார். தேர்தலில் திமுக ஜெயித்ததும் அண்ணா பெரியாரை கண்டு ஆசிபெற்று, தனக்கு தலைவராக இருந்து வழிக்காட்டச் சொன்னார். அந்த பெருந்தன்மையான செயலை எந்தவித கூச்சமும் இல்லாமல் பெரியார் ஏற்று நடந்தார். இப்போது நீங்களே ஒப்பிட்டு கொள்ளுங்கள்.
22. காமராஜ்-ராஜாஜி -ஒப்பிடுக?
பதில்: இருவருமே மாமனிதர்கள். ராஜாஜி பொது வாழ்வில் நெருப்பாக இருந்தார். அவ்வாறு இல்லாதவர்களை ஆட்சியின் பக்கமே அண்ட விடாதிருந்தார். ஆகவே அவருக்கு உட்கட்சியிலேயே பலத்த எதிர்ப்பு. ஒரு நிலைக்கு மேல் அவர் பதவி துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் காமராஜ் தன்னளவில் நெருப்பாக இருந்தாலும் அவ்வாறு இல்லாதவர்களால் கட்சிக்கு அனுகூலம் ஏற்படும் என்றால் அவர்களை சேர்த்து கொண்டார். அந்தளவில் அணைத்து சென்றதால் அவர் 9 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடிந்தது.
23. கலைஞர்-எம்ஜிஆர் ஒப்பிடுக?
பதில்: எம்ஜிஆர் அவர்களை மிகக் குறைவாக மதிப்பிட்டு அவரை கட்சியிலிருந்து நீக்கிய பலனை முழுக்கவே அனுபவித்தவர் கருணாநிதி அவர்கள். எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை அவர் எதிர்க்கட்சியிலேயே அமர வேண்டியதாயிற்று.
24. அழகிரி-ஸ்டாலின் ஒப்பிடுக?
பதில்: அழகிரி துடிப்பாக செயல்படுபவர். ஸ்டாலின் அடக்கி வாசிப்பவர். கருணாநிதிக்கு பிறகு கட்சி உடையாமல் இருந்தால் அழகிரிதான் முன்னிலைக்கு வருவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
25. தமிழகத்தில் கூட்டணி (1 வ்து, 2 வது, 3 வது, 4 வது) கட்சிகளிடையே உறவு எப்படி உள்ளது?
பதில்: குழப்பமாக உள்ளது.
26. அ.தி.மு.க.வில் அணுகுண்டு அதிரடி மாற்றங்கள் என்னவாய் இருக்கும்?
பதில்: சசிகலா வகையறாக்களின் தாக்கம் இருக்கும்வரை ஒன்றும் கூறிட இயலாது.
27. அன்புமணி முயற்சியால் ராமதாசும், கலைஞரும் மீண்டும் ஒரே அணியில் சாத்யமா?
பதில்: இப்போதைக்கு கருணாநிதியின் கை ஓங்கியுள்ளது. நீங்கள் கூறுவது போல நடக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அதே சமயம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி கூறுகிறாரே, அதையும் யோசிக்க வேண்டியுள்ளது.
28. தமிழர் தலைவரின் மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கை?
பதில்: ஆறின கஞ்சி.
29. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்- உங்கள் அனுபவம் எப்படி?
பதில்: தில்லியில் வாங்கிய வாஷிங் மெஷினை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்து இங்கு வாங்கி கொண்ட மெஷின் நன்றாகவே வேலை செய்கிறது. எது எப்படியானாலும் கிடைத்த விலைக்கு தள்ளி விட்டு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை ஏற்று கொள்வதே நல்லது. பழைய பொருட்களை தனியாக விற்கும் திறமை எனக்கு கிடையாது.
30. அரசியல் உலகில் ஒருவன் எப்போது நல்ல பெயர் வாங்க முடியும்?
பதில்: எதிர்பார்ப்பு ஏதுமின்றி உழைப்பவன் “அவன் ரொம்ப நல்லவன்” என வடிவேலு ரேஞ்சில் அடையாளம் காணப்படுவான்.
31. நண்பர்களாய் இருந்து கொண்டு சமயம் வரும் போது நம்மை பற்றி துஷ்பிரச்சாரம் செய்வோரை?
பதில்: புத்திசாலியாக இருந்தால் அவ்வாறு இருப்போரை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் அடக்கி வாசிப்பதே.
32. பதிவுலகில் உங்களின் நெருங்கிய நண்பர், தங்கள் வழி நடக்கும் சகபதிவர், ஆதர்ச குரு, துரோகி, நிரந்திர பின்னூட்ட ஆதரவாளர், வால் பையன் ஆகியோரை எதிர்பாரதவிதமாய், உங்கள் நங்கநல்லூர் பகுதியில் சந்திக்கும் போது உங்களின் முதல் பேச்சு என்னவாய் இருக்கும்?
பதில்: “என்ன, நலமா”? என்ற கேள்விதான் முதலில் வரும். நீங்கள் கூறும் அனைவரையும் பதிவர் சந்திப்புகளில் எதிர்க்கொள்ளும்போதும் அதுதானே நிலைமை. இதில் நங்கநல்லூர் என்ன ஸ்பெஷல்?
ரமணா
1. அரசே இப்படி அநியாயமாய் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் கூட்டியது பற்றி?
பதில்: முதலில் பெட்ரோலிய பொருட்கள் மேல் இருக்கும் அனியாய வரிவிகிதங்களை குறைக்க வேண்டும். அவ்வாறு வரும் பணத்தை ஆயில் ஃபண்ட் என தனியாக வைத்திருந்ததை தொண்ணூறுகளில் வேறு செலவினங்களுக்கு திசை திருப்பி ரூட் விட்டனர். இதையெல்லாம் செய்யும் அரசு விலை உயர்வு செய்யாமல் மட்டும் இருக்கப் போகிறதா என்ன?
2. பெட்ரோல் நிறுவன் ஊழியர்களின் உயர் சம்பளஙகள், அதிகமான சலுகைகள், நிர்வாக முறைகேடுகள், நிதி நிர்வாகத்தில் சீர்கேடுகள் ஆகியவற்றால் ஏற்படும் நஷ்டம் அப்பாவி பொதுஜனம் மேல்?
பதில்: இது ஒன்றும் புதிது இல்லையே, இதுதானே நடைமுறையே.
3. மந்திரி சபை கூடித்தானே இது மாதிரி கொள்கை முடிவுகளை அறிவிப்பார்கள்?
பதில்: So what?
4. 80 டாலரை தாண்டாதபோதே இப்படி என்றால்?
பதில்: நிலைமை கவலைக்கிடமே.
5. முகமூடி போடாத ஆட்டோக்காரர்களுக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா?
பதில்: ஆட்டோக்களுக்கு பெர்மிட் தருவதில் உள்ள குளறுபடிகள் களையப்பட வேண்டும். போலீசாரே வைத்திருக்கும் பினாமி ஆட்டோக்கள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதெல்லாம் செய்யாத வரை ஆட்டோக்காரர்கள் கொட்டம் தொடரும்.
6. வருமானவரிச் சலுகைகள் எதிர்பார்ப்பு பெய்த்து விட்டதே?
பதில்: வருடா வருடம் நடப்பதுதானே. இப்போது மட்டும் என்ன புதிதாக நடந்து விட்டது? எப்போதுமே மாத சம்பளக்காரர்கள்தான் அதிகம் ஏய்க்கப்படுகிறார்கள்.
7. பொதுத்துறை அளிக்கும் (வீட்டு வசதி)சலுகைகள் வரி நீக்கம் அமைச்சர் சொல்லும் காரணம் சரியா?
பதில்: சுட்டி தாருங்கள் சார். நீங்கள் சொல்வதை முடிந்த வரை தேடிப் பார்த்து விட்டேன். பதிவின் ஆரம்பத்தில் நான் கூறியதை மனதில் வைத்து இம்மாதிரி கேள்விகளுக்கு பின்புலன் தாருங்கள். மந்திரி சொன்ன காரணங்களையாவது கூறியிருக்கலாம். நானே போய் தேடுவது என்பது வைக்கோற்போரில் ஊசி தேடுவது போலத்தான்.
8. பங்கு வாணிபம் மீண்டும் சரிவை நோக்கியா?
பதில்: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
9. பொதுத்துறை பங்குகளை விற்பது விதை நெல்லை விற்பதற்கு சமம் எனும் தொழிற்சங்கங்களின் கருத்தில் உண்மை இருக்கிறதா?(பங்கு விற்பனையில் வரும் பணம் இதர செலவீனங்களுக்காம் (வட்டச்செலவு)
பதில்: பங்குகளை விற்று வரும் லாபம் மட்டுமே கணக்கில் இல்லை. பிறகு இல்லாமல் போகப்போகும் சம்பளம் போடும் செலவுகளையும் நினைத்து பார்க்க வேண்டும். அக்கம்பெனிகளில் வேலை செய்பவர்களும் உண்மையாகவே உழைத்தாக வேண்டும். வெறுமனே ஃபிலிம் எல்லாம் காட்டவியலாது. நல்ல விஷயம்தானே.
10. ஸ்விஸ் பாங்கில் பல வர்த்தக சூதாடிகள் வைத்துள்ள கறுப்பு பணத்தையும், அம்பானி சகோதரர்கள் போலுள்ளோர் செய்துள்ள வருமானவரி வரம்புமீறல்களையும் சரி செய்தாலே மத்திய அரசின் செல்வாக்கு உயருமே?
பதில்: கறுப்புப் பணத்தின் முக்கால்வாசி பங்கே அரசில் இருப்பவர்களதுதானே. அவர்களாவது கறுப்புப் பணத்தை கொண்டு வருவதாவது. அம்பானி சகோதரர்களது கறுப்புப் பண்மாவது அவர்கள் உழைத்து சம்பாதித்தது. ஆனால் இந்த கேடு கெட்ட மந்திரிகள், எம்பிக்கள் என்ன தொழில் செய்தனர், ஊரான் பணத்தை லஞ்சமாக பெற்றதைத் தவிர?
அனானி (03.07.2009 மாலை 06.11-க்கு கேட்டவர்)
1. கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
பதில்: கண்ணுதானே சிறுசு. கவலை வேண்டாம்.
2. பாம்பு கடிச்சி படக்குன்னு போக.
பதில்: எது, பாம்பா?
3. அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்
பதில்: நிலமற்றோருக்கு நிலம் என்னும் வாக்குறுதி பற்றி என்ன கிண்டல் இக்கேள்வியில்?
4. அருக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்.
பதில்: நான்கு அருவாக்களை பிடித்து கொள்வதே கஷ்டம். அதில் 58-ஆ? ரொம்பவுமே பேராசைதான்.
5. மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.
பதில்: மாநில சுயாட்சி பெறும் முயற்சி எப்படியெல்லாம் கேலி செய்யப்படுகிறது?
6. காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.
பதில்: தமிழக காங்கிரசாரை கேலி செய்யவும் ஒரு வரைமுறை இருக்க வேண்டாமா?
7. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்
பதில்: அளந்து கொடுத்ததையெல்லாம் பிற்காலத்தில் முந்தைய தேதியிட்டு அள்ளிக் கொடுத்ததாக மாற்றிக் கொள்வது எந்த ஊர் நியாயம்?
8. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்
பதில்: அப்போது மட்டும் உதை வாங்காமல் தப்பிக்க முடியுமா என்ன?
9. அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
பதில்: இந்திய ஒலிம்பிக் குழுவினருடன் செல்லும் அதிகாரிகள் கூட்டம் செய்யும் பந்தாக்கள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன.
10. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப்பூ சக்கரை.
பதில்: குருடர்கள் ராஜ்ஜியத்தில் ஒற்றைக் கண்ணன்ன் ராஜா என்று ஆங்கிலத்தில் கூறுவது உண்டு. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று எச்.ஜி. வெல்ஸ் இக்கதையில் கூறுகிறாரே.
11. ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
பதில்: மாநில சுயாட்சி என்று சொன்னால் போதாதா? ஏன் பழமொழியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?
12. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
பதில்: ஆகவே தீர்ப்புக்கு முன்னால் அரசனை சரிக்கட்டு.
13. ஆனை படுத்தால் ஆள் மட்டம்
பதில்: ஆனால் ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்தான் எனவும் கூறுகிறார்களே.
14. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
பதில்: எதை இட்டார்? பதிவுகளையா?
15. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை இராச திசையில் கெட்டவனுமில்லை
பதில்: நண்பர் சுப்பையாவுக்கு போக வேண்டிய கேள்வி.
16. இருவர் நட்பு ஒருவர் பொறை.
பதில்: இது நியாயமே இல்லை. டீக்கடையில் ஒருவர் மட்டுமே பொறைக்கு காசு கொடுத்து கொண்டிருப்பது என்பது. இன்று ஒருவ்ர் கொடுத்தால் நாளை இன்னொருவர் தர வேண்டும். அதுதான் நியாயம்.
17. இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்
பதில்: அந்த மணற்கேணியையும் ராட்சச பம்புகள் வைத்து நீர் உறிஞ்சினால் வற்றிப் போகும். அதே போல வரவுக்கு மீறி தானம் செய்பவனும் பெருஞ்செல்வந்தனாக இருந்தாலும் அழிவான்.
18. இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
பதில்: பின்னே என்னோடவா?
19. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
பதில்: பல சினிமா பாட்டுகள் ட்யூனின் சிறப்பால் ஹிட்கள் ஆவதை பார்த்துள்ளோமே.
20. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
பதில்: இன்றைக்கு அவனை பொய் சொல்ல விட்டால் நாளை அவன் கொலையும் செய்வான்.
அனானி (03.07.2009 மாலை 06.36-க்கு கேட்டவர்)
1.பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது. இது நியாயமா? லிட்டருக்கு அரசு கூட்டியது வெறும் நாலு ரூபாய். ஆனால் இவர்கள்?
பதில்: எல்லா விலை உயர்வுகளுக்கும் ஜஸ்டிஃபிகேஷன் தேவை. ஆகவே இந்த 25 சதவிகிதம் எவ்வாறு வருகிறது என்பதை வெளிப்படையாக கூறவைக்கும் கட்டாயம் இருத்தல் அவசியம். ஆனால் அவ்வாறு ஏற்பாடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. சரக்கு லாரிகளை விட சரக்கு ரயில்களின் கட்டணம் ஆதாயத்துடன் இருந்தால் அதற்கு பலர் மாறலாம் அல்லவா? கூடவே உள்ளிட வேண்டிய செலவினங்களையும் பார்த்தல் அவசியம். கண்டிப்பாக இதற்கு மேல் கூற எனக்கு தகுதியும் இல்லைதானே.
2. ஓரினச்சேர்க்கையை வரவேற்கும் நடிகை குஷ்பு மீண்டும் சிக்கலில் மாட்டப் போகிறாரா?
பதில்: கூகளிட்டு தேடினேன். நீங்கள் சொல்வது போல ஒரு சுட்டியும் கிடைக்கவில்லை. நீங்கள் சொல்வதற்கு ஏதேனும் சுட்டி இருந்தால் அதை தரவும்.
3. டி.ஆர் பாலு மற்றும் அழகிரி வெற்றியை எதிர்த்தும் வழக்கு போட்டவரின் மனத்திண்ணம் பற்றி?
பதில்: இதில் என்ன மனத்திண்ணம் இருக்கிறது? தேர்தல் வழக்குகள் சர்வசாதாரணமே.
4. பெருந்தலைவர் காமராஜரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜூலை 15. காங்கிரசாரின் தனி ஆட்சிக் கனவுக்கு கட்டியங்கூறும் நாளாகுமா?
பதில்: நன்றாக சென்று கொண்டிருந்த, கட்சி விவகாரத்தில் மாநில அளவில் சுயாட்சி என்னும் ரேஞ்சில் செயல்பட்ட காமராஜ், நிஜலிங்கப்பா ஆகியோரை வன்மத்துடன் தடுத்த இந்திரா காந்தியின் மனோநிலைதான் சோனியாவுக்கும் இருக்கிறது. அது இருக்கும் வரையில் நீங்கள் கூறுவதெல்லாம் நடக்காது.
5. பெட்ரோல், டீசல் விற்பனையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுதந்திரம் கொடுப்பது மறைமுகமாய், மூடி கிடக்கும் ரிலைன்ஸ் பெட்ரோல் நிலயங்களுக்கு மறு வாழ்வு அளிக்கவா?
பதில்: அரசுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் சப்சிடி ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு கிடையாது என்ற பழைய நிலை ரொம்பவுமே அநீதிதானே. அதனால்தான் ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூட நேர்ந்தது. இப்போது இந்த பாரபட்சமான நடவடிக்கைகள் இல்லை என்னும் நிலையில் ரிலையன்ஸ் மீண்டும் வந்தால் என்ன தவறு? சந்தை பொருளாதாரத்தை செயல்பட விட்டாலே பல குழப்பங்கள் தீருமே.
அனானி (04.07.2009 காலை 06.31-க்கு கேட்டவர்)
1. லாரிவாடகை 25% கூட்டும் போக்கு அதிகமாய் இருக்கிறதே, அரசின் கட்டுப்பாடு வருமா?
பதில்: டீசல் பெட்ரோல் ஆகிய எரி பொருட்களின் விளைவே அரசின் வசம் விலை நிர்ணயிக்கும் உரிமை இருப்பதாலும், அவற்றின் மேல் போடப்பட்டுள்ள அபரிதமான வரிகளாலும்தானே. இதற்கு லாரி போக்குவரத்தை வேறு அரசு ஏற்று நடத்த வேண்டும் என நினைக்கிறீர்களா?
2. ஊழியர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை சம்பளமாய் அள்ளிக் கொடுக்கும் அரசுகள், சலுகைகளையும் தராளமாய் வழங்குவது சாமான்யனுக்கு செய்யும் துரோகம் அல்லவா?
பதில்: எழுபதுகளில் தன்னையும் தன் கட்சியினரையும் சாமான்யன் என்றுதானே கருணாநிதி கூறி வந்தார்? சாமான்யர்களுக்கு அவர் துரோகம் செய்ய மாட்டார்.
3. எல்லாப் பொருளின் விலையும் உச்சத்தில் இனி என்னவாகும்-வால்பையன் சொல்வது போல் அரிசி கிலோ 100 ரூபாய் ஆகிவிடுமா?
பதில்: ஓரிடத்தில் படித்தேன், தங்கம் ஒரு சவரனுக்கு கிடைக்கும் அரிசியின் அளவு மாறாமல் அப்படியே இருக்கிறது என. ஆகவே கிலோ 100 ரூபாய் என அரிசி விற்றாலும் மேலே சொன்னதுபோலத்தான் நிலைமை இருக்கும்.
4. மம்தாவின் மக்கள் நல, வங்களா நல, மகளிர் நல, பணியாளர் நல ரயில்வே வரவு செலவு அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: படித்து பார்த்துத்தான் சொல்ல வேண்டும். அப்படியே படித்தாலும் எல்லாமுமே புரியும் என்று சொல்லும் அளவுக்கு எனக்கு அனாலிசிஸ் திறமை இருப்பதாக சொல்ல முடியாது. பொதுவாக ரயில் சரக்கு கட்டணங்கள் உயரவில்லை என்பது மக்களின் வரவேற்பை பெறும்.
5. பொது வரவு செலவு அறிக்கையில் என்ன என்ன இருந்தால் பாராட்டி மகிழ்வீர்கள்?
பதில்: என்னை மாதிரி நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்ப்பது வருமான வரி சம்பந்தமாகத்தான் இருக்கும். வரிக்குட்படாத வருமானத்தின் லெவலை உயர்த்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். பின்னால் வந்த செய்திகளின்படி எனக்கெல்லாம் வருமானவரி விலக்குக்கான உச்ச வரம்பு பத்தாயிரம் ரூபாய்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
அருண்குமார்
1. ஏன் உங்கள் வாழ்க்கை அனுபவ தொடர்களை தொடராமல் நிறுத்தி விட்டீர்கள்?
பதில்: இல்லையே அவ்வப்போது தினசரி கிடைக்கும் அனுபவங்களை நங்கநல்லூர் பஞ்சாமிர்தமாக அளித்து வருகிறேனே.
2. விடுதலைபுலிகள் இனி இல்லை என்ற இந்த நேரத்தில் நமது நாடு இலங்கை பிரச்சனையில் எப்படி செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: இந்திய அரசு தனது ராஜரீக பலத்தை பிரயோகித்து இலங்கை அரசை ஒரு தீர்வு நோக்கி நகரச் சொல்ல வேண்டும். கச்சத் தீவில் இலங்கை அரசு ஏதேனும் நிறுவ முயன்றால் அது நம்முடன் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு எதிரானது என்பதால் கடுமையான எதிர்வினைகள் தரவேண்டும். செய்ய முடியும், செய்ய வேண்டும்.
3. இஸ்ரேல் மீது உங்கள் பாசம் ஒரு பக்கம் இருக்கட்டும், பாலஸ்தீன பிரச்சனைக்கு எந்த பக்கமும் சாயாமல் உங்கள் தீர்வு என்ன? (நான் தீர்வு சொல்லும் நிலையில் இல்லை என்று ஜல்லி அடிக்க கூடாது)
பதில்: ஆரம்பத்திலிருந்தே இஸ்ரவேலர்களை அழிப்பது என்ற தினசரி ஜபத்திலேயே அரேபியர்கள் இருந்துள்ளனர். இஸ்ரேலுடன் சேர்ந்து பாலஸ்தீன நாடும் ஐ.நா. தீர்மானப்படி உருவாயிற்று. தீர்மான ஷரத்துகளுக்கு ஏற்ப அது நிறைவேறி சரியாக ஒரு வருடம் கழித்து இஸ்ரேல் தனது சுதந்திரத்தை பிரகடனம் செய்து கொண்டு தனது வேலைகளை ஆரம்பிக்க, பாலஸ்தீன தரப்பு இஸ்ரேலை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலர்கள், அதுவும் அப்போதுதான் தங்களில் அறுபது லட்சம் அப்பாவிகளை பலி கொடுத்த யூதர்கள், இந்த பயமுறுத்தல்களை அலட்சியம் செய்ய முடியாத நிலை. நான் அவை பற்றியெல்லாம் வேணது எழுதியாகி விட்டது. இங்கும் அவற்றை மறுபடியும் கூறும் காரணமே பிரச்சினையின் ஆணிவேரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இந்த யூத வெறுப்பு இருக்கும்வரை இஸ்ரேல் தனது பாதுகாப்பை விட்டுக் கொடுக்கவியலாது.
இப்போது நான் கூறும் தீர்வு ரொம்பவுமே எளிமையானது. அரேபிய அரசுகள் தலையீடு ஏதும் இன்றி பாலஸ்தீனர்களும் யூதர்களும் பேசினால் போதும். செய்வார்களா?
சமீபத்தில் 1982-ல் லெபனானிலிருந்து இஸ்ரவேலர்கள் பாலஸ்தீனர்களை நீக்கிய போது நிம்மதி பெருமூச்சு விட்டதில் முக்கியமானவர்கள் லெபனான்காரார்களே. பிறகு அவர்களை எங்கு அழைத்து செல்வது என்னும் கேள்வி எழும்பியபோது எந்த அரபு தேசமும் அவர்களை ஏற்கத் தயராக இல்லை. லெபனானை அவர்கள் அந்த அளவுக்கு ந்நஸ்தி செய்து வைத்திருந்தனர். அப்போது நான் எனது தேசத்தில் ஏற்று கொள்கிறேன் என முன்வந்தது இஸ்ரேலிய பிரதமர் மெனாசெம் பெகின் அவர்களே. என்ன அங்கு வந்து வாலை சுருட்டிக் கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதுதான் அவரது முக்கிய ஷரத்து. இதை பெரிய அவமானமாக கருதியதாலேயே பாலஸ்தீனர்களை ஏற்க சில அரபு நாடுகள் முன்வந்தன. ஆக, நான் கூறுவது ஒன்றும் நடக்கவேயிலலாத விஷயம் அல்ல.
4. இந்த கேள்வியை உங்களை தவிர வேறு யாரிடம் கேட்க முடியாது. தினமும் காலை 4:30 முதல் இரவு 11 30 வரை வேலை செய்கிறீர்கள். இதைப் போல கடின உழைப்பை செய்ய உங்களுக்கு உந்துகோல் எது?
பதில்: என்ன, கடின உழைப்பா? நான் ஜாலியாக அல்லவா பொழுதை போக்குகிறேன். உதாரணத்துக்கு மொழி பெயர்ப்புக்காக ஒரு ஜெர்மானிய கோப்பு வருகிறது. அதை இப்படிச் சேமி என்ற கட்டளை கொடுத்து நகல் எடுக்கிறேன். பிறகு நகலை மேலாகவும் அதன் கீழே அசலையும் ஒன்றன் மேல் இன்னொன்றாக அடுக்கி வைத்து, கீழே உள்ள அசலை படித்து அதன் மொழிபெயர்ப்பை மேலே உள்ள நகலில் மாற்றுகிறேன். கண்ணெதிரிலேயே ஒரு சிருஷ்டி உருவாகுகிறது. அதை செய்பவன் என்னும் முறையில் எனக்குள் மகிழ்ச்சி பொங்குகிறது. கடைசியில் பார்த்தால் மொழியைத் தவிர மீதி எல்லாவிதத்திலும் (எழுத்துரு, ஸ்டைல், தடித்த/சாய்வெழுத்துக்கள், பக்க அமைப்பு முதலியன) ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு கோப்புகள் உள்ளன. ஒவ்வொரு வேலைக்கும் இதே மாதிரி சிருஷ்டிகர்த்தாவின் பெருமித உணர்வு. வேறென்ன வேண்டும்?
கூடவே அவ்வப்போது இடுகைகளுக்கான பின்னூட்டங்கள் கூகள் டாக்கின் மூலம் மேலெழும்பி பார்வைக்கு வர, அவற்றையும் அட்டெண்ட் செய்ய இயலுகிறது. (உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களை உடனேயே அளித்துள்ளதும் அம்மாதிரியான செயல்பாட்டுக்கு ஓர் உதாரணமே). திடீரென வாடிக்கையாளர் மின்னஞ்சல். அதற்கு பதில் சில நொடிகளில். புது வாடிக்கையாளர்கள் இதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆக உங்கள் உந்துதல் என்ன என்னும் உங்கள் கேள்விக்கு ஒரே பதில் மேலே விவரிக்கப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களே என்பதாகும். கூடவே துட்டும் கிடைக்கிறது. வேறென்ன வேண்டும்? வாழ்க்கையே அற்புதமயமானது. பை தி வே, இன்னும் ஒரு உந்துதலை மறந்து விட்டேனே? அதுதான் வாடிக்கையாளரின் டெட்லைன். அதை பாவிக்காவிட்டால் கண்ணை நோண்டி விடுவார்கள்.
5. உங்களின் போடா ஜாட்டான் பிரபலமானது. இப்படி சொல்ல தன்னம்பிக்கை தேவையா அல்லது நிஜமாகவே இருதயத்தில் மஞ்சாசோறு இருக்கணுமா?
பதில்: தான் சொல்வது சரிதான் என்னும் நிச்சயம் இருக்க வேண்டும். அதே சமயம் அது தவறு என்றால் நிலையை மாற்றிக் கொள்ளும் துணிவும் வேண்டும். மற்றப்படி மஞ்சாச்சோறும் அவசியம் தேவைதான். மேலும், நான் சுயதொழில் செய்வதால் என்னை பிளாக்மெயில் செய்யும் வாய்ப்புகள் அந்த அளவுக்கு இல்லாது போயின. நான் கூறுவது உங்களுக்கு நிச்சயம் புரியும்தானே?
அனானி (04.07.2009, மாலை 07.41-க்கு கேட்டவர்)
1. In tamilnadu do parents worry more about their daughters than sons?
பதில்: ஊரான் வீட்டு பெண்களை தான் நன்றாக சைட் அடிக்கலாம், அதே சமயம் தங்கள் வீட்டு பெண்கள் கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் எந்த கலாச்சாரத்திலுமே இந்த மனப்பாங்குதான். இதில் தமிழ்நாடு மட்டும் என்ன ஸ்பெஷல்?
2. Do you believe in Capital punishment?
பதில்: ஆம்.
3. LCD/plasama tv which is better?
பதில்: இது சம்பந்தமான தொழில்நுட்ப அறிவு என்னிடம் லேது.
4. what do you think about Michael Jackson death conspiracy?
பதில்: இதில் என்ன புடலங்காய் சதித்திட்டம்? கண்ட மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றி உட்கொண்டால் இதுதான் கதி.
5. In birth chart -if Lagna is out side then rest of planet in between rahu and ketu then it's Kalsharp or not?
பதில்: பதிவர் சுப்பையா அவர்களுக்கு போக வேண்டிய கேள்வி.
முரளிகிருஷ்ணா
1. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தப்பித்தவர் நீதிபதியை மிரட்டிய பிரச்சனையில்?
பதில்: இதுக்கெல்லாம் அசந்துடுவாரா ராசா?
2. இந்தத் தடவையாவது மன்மோகன்சிங்?
பதில்: இந்தத் தடவையாவது சோனியா? என்றல்லவா கேள்வி இருக்க வேண்டும்?
3. சோனியா அம்மையாரின் கலைஞர் மேல் உள்ள மதிப்பு இன்னும் எத்தனை தர்ம சங்கடங்களுக்கு வானவேடிக்கை காட்டி விளையாடும்?
பதில்: ஊழலின் பலன்களில் கிடைக்க வேண்டிய பங்கு ஒழுங்காக கிடைக்கும் வரை.
4. கலைஞரின் அளவுக்கதிகமான இவர் மேல் கரிசனம் என்ன காரணம்?
பதில்: Mutual benefits.
5. மீண்டும் தயாநிதி வசம் தகவல் துறை கை மாறுமா?
பதில்: கலைஞருக்கு போக வேண்டிய கேள்வி இது.
6. பெட்ரோல் விலை உயர்வு எதிர்ப்பு புஸ்வாணமாய்?
பதில்: மத்தியில் போன முறை போல நிலைமை அவ்வாளவு தொங்கலில் இல்லையே. முக்கியமாக இடதுசாரிகளின் கொட்டம் அடங்கியதல்லவா?
7. மக்களும் வாய் மூடி மெளனமாய்?
பதில்: பொறுமை திலகங்கள்
8. கேஸ்விலையை ஆயில் கம்பெனிகள் தானே உயர்த்திக்கொண்டதை பார்த்தால்?
பதில்: அரசின் ஆதரவு இல்லாமல் அவை ஒன்றுமே செய்திருக்க முடியாது என்பது இந்தியாவில் தற்சமயம் உள்ள நிலை.
9. கனிமொழியின் நடுவண் அமைச்சர் கனவு?
பதில்: வேறு ஏதாவது வாரியத் தலைவர் பதவி கிடைக்காமலா போகப் போகிறது?
10. லாலுவுக்கு தேர்தலில் ஆப்பூ,மாயவதிக்கு சிலை வடிவில் சிக்கல், பாஜகவில் குழப்பமோ குழப்பம், இடது வலது இடையே குடுமிப்பிடி சண்டை வருங்கால இந்தியாவை, பண்டிட் ஜவஹர்லால் போல், எதிர்ப்பே இல்லாமல், ராகுல் வசம் அனைவரும் ஒப்படைப்பார்களா?
பதில்: 1984-ல் ராஜீவிடம் ஒப்படைத்ததை போலவா? ஆனால் அடுத்த தேர்தலிலேயெ எஅவர் மண்ணைக் கவ்வவில்லையா?
என். கண்ணன்
1. கொடநாட்டில் ஜெ. மற்றும் சசியின் நாட்கள் எப்படி இருக்கும்? என்னதான் அலைச்சலுக்குப் பிறகு ஓய்வு என்றாலும் மாதக்கணக்கில் ஒருவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தால் மக்கள் எப்படி நம்பிக்கை கொள்வார்கள்? எப்படி இவரை நம்பி நீங்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டீர்கள்? இல்லை இது கலைஞருக்கும் ஜெ.வுக்கும் உள்ள மறைமுக டீலா?
பதில்: ஓட்டு போட்டதை முதலில் பார்ப்போம். ஜெ கட்சிக்கு எதிராக நிற்பவர் விவேகானந்தர் ராமகிருஷ்ணர் ரேஞ்சுக்கா இருக்கிறார்? குடும்பத்துக்காக நாட்டையே விற்பவரை விட இவர் பரவாயில்லையா, தீவிரவாதத்துக்கு சப்பைகட்டாமல் இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்தேன். மற்றப்படி ஓய்வு எடுக்கிறேன் பேர்வழி என ஜெ செய்வது அவர் கட்சிக்கு நல்லதில்லைதான்.
2. இவ்வாறு ஓய்வுக்குப் போவது பற்றியும், தினசரி அறிக்கை விடுவது பற்றியும் பல்வேறு பத்திரிகைகளில் வெளிப்படையாக எழுதியும், அவரது அட்வைசர்களான சோ போன்றோரும் சொல்லியிருக்கக்கூடும். இன்னமும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் அரசியல் நடத்தும் ஜெ.வின் மனதில் என்னதான் பிளான் இருக்கும் ? ஓடு மீன் ஓட கதை போல் கருணாதியின் மறைவுக்காக காத்திருக்கும் – playing the waiting gameமா?
பதில்: ஏதேனும் சொதப்பல்களை கருணாநிதியும் செய்ய மாட்டாரா என்ன என்பதுதான் ஜெயின் எதிர்பார்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
3. வடிவேலு, விவேக் - இருவருக்கும் (அல்லது அவர்களின் கதை இலாகாவிற்கும்) கற்பனை வறட்சி போல தெரிகிறதே? இவர்களுக்குப் பின் வேறு நல்ல காமெடியன்கள் வரவில்லையே?
பதில்: சாதாரணமாக காமெடி டிராக் என்பது மூலக்கதைக்கு இணையான சம்பவங்களை பகடியாக கூறித்தான் செய்யப்படும். மூலக்கதையே வறட்சியாக இருக்கிறதோ என்னவோ.
4. எல்லோரையும் சும்மா வாயால் ஓட்டிக்கொண்டிருக்கும் (பாடி லாங்வேஜ் துளியும் இல்லாத) சந்தானத்தை எப்படி ரஜினி எந்திரனில் தன் கூட காமெடியனாக சேற்றுக் கொண்டார்?
பதில்: இப்பத்தான் போன பதில்கள் பதிவில் சந்தானத்தை புகழ்ந்து எழுதிய என்னிடமே இந்தக் கேள்வியா?
5. சமீபத்தில் எழுத்தாளர் சத்யராஜ்குமார் எழுதியுள்ள கதையில்
(http://inru.wordpress.com/2009/06/08/twilight/) (தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்) ஒரு வயதான தந்தை 'ஹிண்டு பேப்பர் படிக்கணும்' என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இதை பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஹிண்டு பேப்பரை பலரும் தற்போதெல்லாம் வெறுக்க ஆரம்பித்துவிட்டாலும் (என்.ராமின் கம்யூனிஸ்ட் சார்பு, இலங்கை பற்றிய கண்ணோட்டம், இன்ன பிற காரணங்களுக்காகவும்), மாற்று பேப்பர்களான டைம்ஸ், டெக்கான் கிரோனிக்கிள் வ்ந்திருந்தாலும், அமெரிக்காவிலிருந்தபடியே நெட்டில் ஹிண்டுவை அதே பேப்பர் வடிவத்தில் படிக்க வசதி இருந்தாலும், இப்படி சென்னையில் உட்கார்ந்து ஈசி சேரோ இல்லை காற்றாட ஹிண்டு பேப்பர் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏன் இன்னும் பலருக்கும் உள்ளது ? (முதல்வன் படத்திலும் மணிவண்ணன் பேசுவதாக சுஜாதா வசனம் எழுதியிருப்பார்) - இதன் உளவியல் காரணங்கள் என்னவாக இருக்கும்? யாரும் தினகரனோ, தினமணியோ, தினமலரோ, எக்ஸ்பிரசோ படிக்கவேண்டும் என அங்கலாய்ப்பதில்லை?
பதில்: நீங்கள் சொன்ன கதையை தேடிப் படித்தேன். அப்பாவுக்கு சென்னை பிடிக்கும், மகனுக்கு அது போர். அப்பாவின் அப்பாவுக்கோ கிராமம்தான் பிடிக்கும், அப்பாவுக்கோ அது போர். மகனின் குழந்தைகள் செவ்வாய் கிரகத்தில் செட்டிலானால் அவர்களுக்கு அமெரிக்காவே போர் அடிக்குமாக இருக்கும். ஆக, தலைமுறை இடைவெளி என்பது எப்போதுமே உண்டு. மற்றப்படி தமிழகத்தில் உள்ள வயதான படித்தவர்கள் ஹிந்து பத்திரிகை படித்து வளர்ந்தவர்கள். அதானால் அவர்களுக்கு ஹிந்து. தில்லியில் உள்ள பெரிசுகள் ஹிந்திக் கதைகளில் ஹிந்துஸ்தான் டைம்ஸை சிலாகிப்பவர்களாக இருக்கும். தமிழர்கள் டெக்கான் கிரானிக்களை சிலாகிக்க இன்னும் 20 ஆண்டுகளாவது ஆகும். எல்லாமே பழக்க தோஷம்தான்.
6. மூக்குப் பொடி போடும் பழக்கம் தற்போது மிகவும் குறைந்துவிட்டது போலுள்ளதே? முன்பெல்லாம் பெரிசுகள்தாம் பொடிபோடுவர். தற்போதைய தலைமுறையினர் (பெரிசுகளும்) பான் மசாலா, குட்கா, சிகரெட் என மாறிவிட்டனர் போலுள்ளதே ? பொடி போடுவதில் அப்படி என்ன இன்பம் இருக்க முடியும்?
பதில்: பொடிபோடுபவர்களை கேட்க வேண்டிய கேள்வி. பொடியை மூக்குள் இழுப்பதில் போதை வேகமாக ஏறும் என்பார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் மூக்கெல்லாம் சிந்தி ரொம்பவும் அசிங்கம் பிடித்த் பழக்கம். எல்லோரிடமும் திட்டு வாங்கியே பொடி போடுபவர்கள் போய் சேர்ந்தார்கள என நினைக்கிறேன்.
7. தற்போது சிகரெட் பாக்கெட்டுகளில் வரும் படம் (மே- 31க்குப் பிறகு) எத்தனை பேரை சிகரெட் குடிப்பதை குறைக்கச் செய்யும்? உங்கள் சிகரெட் பிடிக்கும் நண்பர்கள் இந்த படங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
பதில்: அதையெல்லாம் பார்த்து திருந்தி விட்டால் புகையிலை கம்பெனிகள் படுத்து விடுமே என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன்.
8. ஒரு கூட்டத்தில் அல்லது திருமண ஹாலில் 10 - 15 பிராமண இளம்பெண்கள் இருந்தால் அதில் ஐயங்கார் பெண்கள் மாத்திரம் கூடிய அழகுடன் தெரிகிறார்களே? ஏன் அப்படி ? ஐயங்கார் பெண்களிடம் ஏன் அழகு கூடுதலாக இருக்கிறது (பெரும்பாலும்)??
பதில்: இளம் பெண்கள் எல்லோருமே அழகுதான். இதில் சாதி எங்கிருந்து வந்தது?
9. சாலையில் நீங்கள் 'உங்கள்' காரில் (அல்லது இன்னொருவருடன் டூவீலரில்) சென்று கொண்டிருக்கும் போது குறுக்காக அல்லது ராங்காக வரும் ஆட்களை என்ன சொல்லி திட்டுவீர்கள்? உங்களுக்கு வரும் கோபத்தில் வரும் முதல் கெட்ட வார்த்தை எது? (சில சமயம் சொல்லாவிட்டாலும், மனதிற்குள் தோன்றும் கோபமான வார்த்தை எது?)
பதில்: “அடீங்கோத்தா லவ்டேகாபால்” என்னும் வார்த்தைதான் உள்ளிருந்து மேலெழும்பும். ஆனால் வெளியில் வராது பார்த்து கொள்வேன். ஒரு முறை எழுபதுகளில் டூ வீலரில் கேரியரில் அமர்ந்து போனபோது ஒரு பெரிசு அசந்தர்ப்பமாக தெருவை கிராஸ் செய்ய, வண்டியை ஓட்டி வந்த என் நண்பன் வெறும் உதட்டசைவில் “லவ்டேகாபால்” என்று காட்ட, அந்தப் பெரிசு டென்ஷன் ஆனது.
10. ஐடிபிஎல் நினைவுகள் பதிவுகள் குறைந்துவிட்டனவே? உங்களின் பெரும்பாலான வாசகர்களுக்கு அந்தப் பதிவுகள்தான் பல விஷயங்களைச் சொல்கிறது.
பதில்: பல பழைய நினைவுகள் ஹைப்பர் லிங்குகள் மூலமே தூண்டப் பெறுகின்றன. அவை எப்போது வரும் என்பது எனக்கே தெரியாதே.
பார்த்தா
1. What's your opininon on Thuklag Satya.
பதில்: அவரது எழுத்துக்கள எனக்கு பிடிக்கும். சோ அவர்களால் அவர் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளார்.
2. How is the real estate market in Chennai?
பதில்: சற்று டல் என்றுதான் கேள்விப்படுகிறேன். மற்றப்படி இந்த விஷயங்களில் என் மனம் செல்வதில்லை, ஏனெனில் இதன் உள் மற்றும் வெளி விஷயங்கள பற்றி தெளிவான அறிவு லேது.
3. Have u visited Periyar Science and Techonology museum in Chennai?
பதில்: இதுவரை போனதில்லை.
அனானி (07.07.2009 காலை 10.45-க்கு கேட்டவர்)
1) துளிக்கூட புது சரக்கே இல்லாமல் விகடன் கடந்த பல மாதங்களாக "மீள் பதிவு / கட் அண்ட் பேஸ்ட் பதிவு" போல பழைய விகடன்களிருந்து கட்டுரைகளை, கதைகளை, பேட்டிகளை எடுத்துப் போடுவது (விகடன் பொக்கிஷம்) சரியென்றால் பதிவர்கள் செய்வதும் சரிதானே? ஏன் விகடன் இந்த அளவிற்கு தாழ்ந்துவிட்டது? அதன் தற்போதைய உரிமையாளரின் சினிமா ஆர்வத்தாலா? (Actually தற்போது படிக்கும் படி இருப்பது அந்த பொக்கிஷம் பக்கங்கள் மட்டுமே) http://thamizthoughts.blogspot.com/2009/07/blog-post_03.html படியுங்கள்.
பதில்: என்ன சொல்ல, பெருமூச்சுதான் விடமுடியும்.
2) திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூலில் இருந்த தேசிகாச்சாரி என்னும் ஆசிரியர்தான் தனக்கு உந்துதல் என எஸ்.வி.ரங்காராவ் பேட்டியில் வந்துள்ளதே (விகடன் பொக்கிஷம்) - நீங்கள் படிக்கும்போது தேசிகாச்சாரி ஆசிரியராய் இருந்தாரா?
பதில்: எஸ்.வி. ரங்காராவ் அவர்கள் என்னை விட 28 வயது பெரியவர். அவர் காலத்தில் ஆசிரியராக இருந்த தேசிகாச்சாரி கண்டிப்பாக நான் சேரும் முன்னமே ரிடயர் ஆகியிருக்க வேண்டும். ஆகவே நீங்கள் கூறுவது நடந்திருக்கும் சாத்தியக்கூறு குறைவே. மேலும் பல ஆசிரியர்களை நாங்கள் செல்லப்பெயரில்தான் அறிந்திருந்தோம், மசால்வடை, சீட்டா, பஞ்சர், லிங்கன் ஆகிய பெயர்களில். ஆகவே அப்படி கூட அவரை மிஸ் செய்திருக்கலாம்.
3) அவுட்லுக்கில் கருணாநிதி குடும்பம் பற்றிய கவர் ஸ்டோரி படித்தீர்களா?
http://www.outlookindia.com/archivecontents.asp?fnt=20090608
http://www.outlookindia.com/full.asp?fodname=20090608&fname=Cover+Story&sid=2
பதில்: பார்த்தேன் அவற்றில் ஒன்றும் புதிதாக சொல்லவில்லையே!
4) விஜிசேகர் பதிவுகள் படிப்பதுண்டா? எழுதுவது ஆணா? பெண்ணா?
பதில்: படித்ததில்லை. ஆணாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அனானி (07.07.2009 இரவு 08.44-க்கு கேட்டவர்)
1. அரசியல்வாதிகளுக்கு தரும் தேர்தல் நன்கொடைகளுக்கு மட்டும் முழு வரிவிலக்காம்... உங்கள் கருத்து என்ன?
பதில்: ஜனநாயகத்தின் ஒரு அங்கம் தேர்தல். அதற்கு பணம் தருவதற்கு ஏதாவது வரிவிலக்கு தருவது புரிந்து கொள்ளக் கூடியதே.
2. மறைமுக வரி, நேரடிவரி பற்றி விளக்கமாய் சொல்லவும்?
பதில்: வருமான வரி என்பது நேரடி வரிகளில் ஒன்று. நாம் வாங்கும் பொருட்களுக்கு விதிக்கப்படும் விற்பனை வரிகள் முதலியன மறைமுக வரிகளில் வரும் என நினைக்கிறேன்.
3. காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி எதிர்பாரத வெற்றி.பந்து வீச்சாளர் முரளி புண்ணியமா? ஆடுகளமா?
பதில்: After all cricket. இதற்கு என்ன இத்தனை அமர்க்களம்? ஆட்டம் என்றால் வெற்றி தோல்வி சகஜம்தானே.
4. பெண்கள் ஆண்களிடம் விரும்புவது/வெறுப்பது என்ன என்ன?
பதில்: ஆண்கள் தங்களை புரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள். அப்படியே புரிந்து கொண்டு விட்டால் அதை வெறுக்கவும் செய்வார்கள் அதே பெண்கள்.
5. ஆண்கள் பெண்களிடம் விரும்புவது/வெறுப்பது என்ன என்ன?
பதில்: தங்கள் செயல்பாடுகளுக்கு பெண்கள் சுதந்திரம் தர வேண்டும் என விரும்புவார்கள். அதே சமயம் பெண்கள் சுதந்திரமாக தங்கள் செயல்பாட்டை வகுத்து கொள்வதை வெறுப்பார்கள்.
அனானி (08.07.2009 இரவு 10.36-க்கு கேட்டவர்)
1. பகுதிநேர மொழிபெயர்ப்பாளர், முழுநேர மொழிபெயர்ப்பாளர்களில் இன்றைய நிலையில் உங்களுக்கு அடுத்தபடியாக பிரபலமாய் உள்ள தமிழக, அகில இந்திய மொழிபெயர்ப்பாளர் யார் யார்?
பதில்: தெரியாது. மொழிபெயர்ப்பாளர்கள் பலர் தனியாகவே செயல்படுகின்றனர். அவர்களில் நான் ஒருவன். நான் உண்டு என் வேலை உண்டு. என்னால் ஒரு மொழிபெயர்ப்பை ஏற்று கொள்ள முடியாவிட்டால் வாடிக்கையாளரை டாட்டா/கெட் இட் மஞ்சள் பக்கங்களை வேறு மொழிபெயர்ப்பாளர்களுக்காக பார்க்கச் சொல்வேன். அதுவும் மொழி பெயர்ப்பு துறையை பொருத்தவரை இப்போதுள்ள நிலையில் அகில இந்தியாவிலிருந்தும், ஏன் மற்ற நாடுகளிலிருந்தும் கூட மொழி பெயர்ப்பாளர்களை தேட இயலும். அதை வாடிக்கையாளர் பார்த்து கொள்வார்.
2. ஈசா யோக மையம் சார்பில் வருட வருடம் நடைபெறும் மகா சிவராத்திரி விழா சமயம், சத்குருவின் ஆங்கிலப் பேச்சை மிகத்திறமையாய் தமிழில் மொழிபெயர்க்கும் கலைமாமணி மரபின் மைந்தன் உங்களுக்கு அறிமுகம் உண்டா?
பதில்: அறிமுகம் ஏதும் இல்லை.
3. தமிழ் எழுதிகளில் ஈகலப்பையை மிஞ்சி ஏதும் உண்டா?
பதில்: NHM இருக்கிறதே.
4. சுயமுன்னேற்றத் தொடர்கள் எழுதும் எண்ணம் உண்டா?
பதில்: அந்தளவுக்கு ஆற்றல் எனக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை.
5. ஜெயா டீவியில் உங்கள் நேர்முகம் நிகழ்ச்சியை பாராட்டி,விமர்சித்தவர்களில் (தொலை பேசி, மின்னஞ்சல், செல்பேசி, நேரில்)உங்களைக் கவர்ந்தவர் யார்?
பதில்: அவர்களில் என்னைக் கவர்ந்தவர் பதிவே போட்டு விட்டாரே.
6. முதல் நேர்காணலுக்கும் இரண்டாவது நேர்காணலுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: ரொம்ப வித்தியாசம் எல்லாம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
7. எங்கேபிராமணன் பற்றிய தொடரின் தொடர்பினாலா இந்த நேர்முக நிகழ்ச்சி?
பதில்: கண்டிப்பாக இல்லை.
8. சோ அவர்கள் ஏதாவது வகையில் தொடர்பு கொண்டாரா?
பதில்: இல்லை, நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை.
9. இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்களை உங்கள் சென்ன பதிவர் வட்டத்திற்கு தெரிவித்தீர்களா?
பதில்: திங்களன்று பதிவாக போட்டேன். பலருக்கு தொலைபேசி மூலம் தெரியபடுத்தினேன்
10. ஜெயா மாதிரி சன்டீவி, கலைஞர் டீவி அழைப்பு ஏதும் முன்பு வந்ததா?
பதில்: இல்லை
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மெய்யியலின் பகுத்தறிவு
-
நான் தீவிர இலக்கியத்துக்குள் நுழைந்தபோதே ஆன்மிகம் –
இந்தியத்தத்துவத்துக்குள்ளும் நுழைந்துவிட்டேன். என் பெரியப்பாவின் மகன்
முகுந்தன் அண்ணா நீர்ப்பாசனத்துறை ...
9 hours ago
81 comments:
Dondu Sir,
Very good answers and thanks for answering my questions too.
I have a request, can you write about the temples in India like Tirupati, Upilliyappan Temple in Kumbakonam, temple in Mathura (since you've been in Delhi, I am assuming that you've visited Mathura) and their significance. It would be the continuation of the excellent work you did with "Enge Brahamanan".
Regards.
Partha.
மூத்த குடிமக்களுக்கு உச்சவரம்பு ரூபாய் 2,25000 லிருந்து ரூபாய் 2,40000 ஆகியுள்ளது.( சலுகை ரூபாய் 15,000)
New Income Tax slab for A.Y.2010-11, F.Y.2009-10
http://90paisa.blogspot.com/
@பார்த்தா
நல்ல யோசனைதான். ஆனால் மிகவும் வேலை வாங்கும். நான் ஒரு கோவிலுக்கு சென்று அங்கு எனக்கு கிடைக்கும் அனுபவங்களிஅ எழுதுவது என்பது ஒரு விஷயம். ஆனால் அதே கோவிலின் பின்புலன்கள் அடங்கிய விஷயத்தை எழுதுவது என்பது முற்றிலும் வேறு தளத்தில் இருக்கும் விஷயம். அதை செய்ய எனக்கு சக்தி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.வரும் விளம்பரங்களை பார்த்தால்,அதற்கும் சென்சார் தேவை போலுள்ளதே?
2.பள்ளியில் நன்றாய் படிப்பவர்களில் ஒரு பகுதியினர், கல்லூரிக் கல்விக்குப் போனதும், கல்வி ஆர்வம் குறைவது ஏன்?
3. வசூல் தோல்விகண்டு துவளமால் மீண்டும் மீண்டும் திரைக்கதை வசனம் எழுதும் கலைஞரின்........?
4.வைகோவின் இன்றைய பேச்சுக்கள் இனி எடுபடுமா?
5. திடீரென தமிழக டாஸ்மார்க் பார்களில் பெண்களைக் காணும்போது என்ன எண்ணுவீர்கள்?
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4301
what is your comment on this.
கோர்ட்டில் நடந்த வாதம் வருமாறு:
வக்கீல் பீமன்: சினிமா என் பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதனால் தான், அதற் கென்று கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. படம் துவங்குவதற்கு முன், இப்படத்தில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள், கற்பனையானவை என காட்டப்படுகிறது. வக்கீல்களை அவதூறாக சித்தரிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
நீதிபதி ரகுபதி: கேளிக்கைக் காக காட்டப்படுவதற்கும் ஒரு எல்லை கிடையாதா? கற்பனையானது எனக் கூறிக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா?
வக்கீல்: ஆட்சேபனை எழுந்த உடன் அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டோம்.
நீதிபதி: ஒரு படத்தை வெளியிடும் போது விளம்பரத்துக்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள்? ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கிய பின், அதுபற்றி எந்த அளவுக்கு விளம் பரம் செய்தீர்கள்? படம் வெளியிடப்படுவதற்கு முன், இதை சென்சார் போர்டு உறுப்பினர் கள் பார்த்திருப்பர். அவர்கள் எப்படி இதை அனுமதித்தனர்? இந்தப் படத்தை சென்சார் போர் டுக்கு காட்டும்போது, அதில் உறுப்பினர்களாக யார் யாரெல் லாம் இருந்தனர்? அவர்களுக் கும் பொறுப்பு இருக்கிறது அல்லவா? அவர்களது கடமை என்ன?
வக்கீல்: எங்களுக்கு உள் நோக்கம் கிடையாது. உள்நோக் கம் இல்லாதபோது, அவதூறு வழக்கு எப்படி பொருந்தும்? மேலும், தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை.
நீதிபதி: ஒவ்வொரு தொழிலிலும் நல்லவர்கள், கெட்டவர் கள் இருப்பர். நீங்கள் நல்ல விஷயங்களை மறந்துவிட்டு, மோசமான விஷயங்களை மட் டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள். நமது தேசத் தலைவர் களான காந்தி, நேரு, அம்பேத்கர், சட்டம் படித்தவர்கள். வக்கீலாக பணியாற்றியவர்கள். அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பாலோர் சட்டம் படித்தவர்கள். கற்று அறிந்த தொழில் என்பதால் தானே, நீங்கள் கூட இந்த தொழிலை தேர்ந்தெடுத்தீர்கள்?
வக்கீல் எஸ்.பிரபாகரன்: "கவுரவம்' என்கிற படத்தில் வக்கீல் தொழிலை கண்ணியமாக சித்தரித்திருப்பர். "சிவகாசி' படத் தில் ஒரு வக்கீல், ரோட்டில் தூங்குவது போலவும், சட்டப் புத்தகத்தை தலைக்கு கீழ் வைத் துக்கொண்டு படுத்திருப்பது போலவும் காட்சிகள் உள்ளன. நல்ல நோக்கில் இந்தக் காட்சிகள் காட்டப்படவில்லை. படத்தின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செய்தி, நல்லதாக இருக்க வேண்டும். வக்கீல் தொழிலை தரக் குறைவாக சித்தரிக்கும் காட்சிகளுக் கும், படத்தின் கதைக்கும் தொடர்பில்லை. எனவே, நல்ல நோக்கத்துடன் இல்லாமல், தரக் குறைவான முறையில் சித்தரிப்பதாக உள்ளதால், அவதூறு வழக்கு பொருந்தும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. இதையடுத்து, விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிபதி ரகுபதி தள்ளிவைத்தார்.
பதிவு திருமணத்திர்கும், சீர்திருத்த திருமணத்திற்கும் என்ன வித்தியாசம், பெரியார் திருமணத்தை பதிய வேண்டாம் என்று சொன்னாரா!?
பதிவு திருமணத்தின் போது தாலி கட்ட வேண்டிய அவசியமில்லையே!
கையெழுத்திட்டால் போதும் தானே!
சடங்குகள் இல்லாதது சீர்திருத்த கல்யாணம் ஆகாதா!?
//ஒரு ஒப்பீடு :கல்யாணத்திற்கு முன் காதலர்கள் மன நிலை, கல்யாணத்திற்குப் பின் காதலர்கள் மன நிலை?
பதில்: பொம்மை வேண்டும் என மிக அழுது அடம்பிடித்து அதை வாங்கிக் கொள்ளும் குழந்தை சீக்கிரமே அந்த பொம்மையில் ஆர்வம் இழந்து தூக்கி எறிவதில்லையா? அதைப் போலத்தான் பல காதலர்களின் மனநிலையும் உள்ளது என்பது மறுக்கவியலாத நிஜம்.//
இது கூட சில நாள் வைத்து விளையாண்ட பிறகு தான் ஆர்வம் இழந்து தூக்கிப்போடும்! ஆனால் வலுக்கட்டாயமாக துணிக்கப்பட்ட பொம்மையை அந்த குழந்தை என்ன செய்யும்!
காதல் திருமணங்களை பற்றிய உங்கள் கண்ணோட்டங்கள் மாற்றப்பட வேண்டும்! இது 2009,
//பதிவு திருமணத்திர்கும், சீர்திருத்த திருமணத்திற்கும் என்ன வித்தியாசம், பெரியார் திருமணத்தை பதிய வேண்டாம் என்று சொன்னாரா!?//
வேண்டாம் என்று சொல்லவில்லைதான், ஆனால் அதே சமயம் வேண்டும் என்றும் சொன்னதாகத் தெரியவில்லை. அதுவும் அக்கலகட்டத்தில் சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. ஆகவே வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்தி சொல்லியிருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பதிவுலகில் உங்களின் நெருங்கிய நண்பர், தங்கள் வழி நடக்கும் சகபதிவர், ஆதர்ச குரு, துரோகி, நிரந்திர பின்னூட்ட ஆதரவாளர், வால் பையன் ஆகியோரை எதிர்பாரதவிதமாய், உங்கள் நங்கநல்லூர் பகுதியில் சந்திக்கும் போது உங்களின் முதல் பேச்சு என்னவாய் இருக்கும்?//
இதிலென்ன வால்பையன் மட்டும் ஒதுக்கப்படுள்ளான்! நீங்கள் குறிப்பிட்டுள்ள கேட்டகிரியில் நான் வரவில்லையா!
டோண்டு அவர்களை வீட்டில் சந்தித்த மிக குறுகிய வட்ட பதிவர்களில் நானும் ஒருவன்! பார்த்தவுடன் நலம் விசாரிப்பது தானே தமிழர் பண்பாடு!
அதுவே எல்லா இடங்களிலும் தொடருது!
//பங்கு வாணிபம் மீண்டும் சரிவை நோக்கியா?//
நடந்த முடிந்த பட்ஜெட் முதலீட்டாளர்களுக்கு சாதமாக இல்லை! என்பது சரிந்து வரும் சந்தையில் தெரிகிறது!
//கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
பதில்: கண்ணுதானே சிறுசு. கவலை வேண்டாம்.//
கை பெருசா இல்லையா!?
//அருக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்.
பதில்: நான்கு அருவாக்களை பிடித்து கொள்வதே கஷ்டம். அதில் 58-ஆ? ரொம்பவுமே பேராசைதான். //
ஒருசிலர் வயாதான காலத்தில் திருமணம் செய்து கொள்வதை சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன்!
சிலர் ஜோசியம் பார்த்து இம்மாதி செய்வதுண்டு!
//இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
பதில்: எதை இட்டார்? பதிவுகளையா?//
இருக்கலாம்!
பின்னூட்டம் இடாதார் இழிகுலத்தோர் சரியா!?
//ஓரினச்சேர்க்கையை வரவேற்கும் நடிகை குஷ்பு மீண்டும் சிக்கலில் மாட்டப் போகிறாரா?//
மாட்டாமல் இருக்கத்தானே ஆதரிக்கிறார்!
//எல்லாப் பொருளின் விலையும் உச்சத்தில் இனி என்னவாகும்-வால்பையன் சொல்வது போல் அரிசி கிலோ 100 ரூபாய் ஆகிவிடுமா?//
பொருள்களின் விலையுயர்வு சதவிகதம் ஒரே மாதிரி இருப்பதாக தோன்றுகிறது என்று டோண்டு சார் சொல்றார்! பின் ஏன் சில பொருள்களுக்கு மட்டும் வரிச்சலுகை, சில பொருள்களுக்கு வரி அதிகம்!
அத்யாவிசய பொருள்களுக்கும் ,அநாவிசய பொருள்கலூக்கும் வித்தியாசம் இருக்கிறது!
நமது அரசுக்கு லாபமே முக்கியம், மக்களின் வாழ்க்கைதரம் அல்ல!
உங்கள் வலையுலக வாரிசாக வால் பையனை அறிவிக்க போகதாக செய்தி எங்கும் உள்ளதே உண்மையா?
டோண்டு பதில்களை வாரம் இருமுறை ஆக மாற்றலாமே
யூதர்கள் ஆரம்பத்தில் நவீன கிருஸ்துவத்துக்கு எதிராக இருந்ததால் அவர்கள் எதிர்ப்பது நியாயம்!
இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் என்ன பிரச்சனை!?
@வால்பையன்
நான் குறிப்பிட்டது அரிசி விலைக்கு மட்டுமே, அதுவும் ஓரிடத்தில் படித்தது. அதாவது ஒரு சவரன் தங்கத்துக்கு கிடைக்கக் கூடிய அரிசி அப்படியேதான் இருக்கிறது என்பது மட்டுமே.
உதாரணத்துக்கு பல பொருட்கள், உதாரணத்துக்கு கைக்கடிகாரங்கள், கணினிகள், ரேடியோக்கள் ஆகியவை பணவிக்கத்துக்கு ஏற்ப விலை உயரவில்லை. பல தருணங்களில் விலை குறைந்துள்ளதே. இப்போது செல்போன் விலைகளும் அதே டிரெண்டில்தானே உள்ளது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்தத் தடவையாவது மன்மோகன்சிங்?
பதில்: இந்தத் தடவையாவது சோனியா? என்றல்லவா கேள்வி இருக்க வேண்டும்? //
தலையை ஆட்டாமல் நிறுத்துவாரா என்று கேட்க நினைத்திருப்பார்!
//ஒரு கூட்டத்தில் அல்லது திருமண ஹாலில் 10 - 15 பிராமண இளம்பெண்கள் இருந்தால் அதில் ஐயங்கார் பெண்கள் மாத்திரம் கூடிய அழகுடன் தெரிகிறார்களே? ஏன் அப்படி ? ஐயங்கார் பெண்களிடம் ஏன் அழகு கூடுதலாக இருக்கிறது (பெரும்பாலும்)??
பதில்: இளம் பெண்கள் எல்லோருமே அழகுதான். இதில் சாதி எங்கிருந்து வந்தது?//
என்ன கேள்வி!
15 கழுதைகளுக்கு மத்தியில் ஒரு இளம்பெண் அழகாக தோன்றுகிறாரே எப்படி என்று கேட்டிருந்தானால் நன்றாக இருந்திருக்கும்!
சாதி பார்த்து தான் சைட்டே அடிப்பார் போல!
//ஜெயா டீவியில் உங்கள் நேர்முகம் நிகழ்ச்சியை பாராட்டி,விமர்சித்தவர்களில் (தொலை பேசி, மின்னஞ்சல், செல்பேசி, நேரில்)உங்களைக் கவர்ந்தவர் யார்?
பதில்: அவர்களில் என்னைக் கவர்ந்தவர் பதிவே போட்டு விட்டாரே.//
என்னை கவர்ததால் தானே போட்டேன்!
//வரும் விளம்பரங்களை பார்த்தால்,அதற்கும் சென்சார் தேவை போலுள்ளதே?//
ஏற்கனவே உண்டு!
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் உண்டு!
யூடியூப்பில் தேடினால் கிடைக்கும்!
//திடீரென தமிழக டாஸ்மார்க் பார்களில் பெண்களைக் காணும்போது என்ன எண்ணுவீர்கள்?//
சரக்கு விலை ஏறியதற்கு காரணம் இதுதானா என்று தான்!
சும்மா லுலுலாயிக்கு!
பதில் அவரே சொல்லுவார்!
//அக்கலகட்டத்தில் சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. ஆகவே வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்தி சொல்லியிருக்க வேண்டும்.//
ஆம் வலியுறுத்தியிருக்க வேண்டும்!
தோணல போல!
//அதாவது ஒரு சவரன் தங்கத்துக்கு கிடைக்கக் கூடிய அரிசி அப்படியேதான் இருக்கிறது என்பது மட்டுமே.//
அதே தான்!
தங்கமும் அரிசியும் விலையுயர்வில் ஒரே அளவு சதவிகதம் என்பது தானே இதன் பொருள்!
அது தவறு என்கிறேன்!
எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் விலை கூரைந்தது அறிந்ததே!
அவைகள் கண்டுபிடிப்புகள் ஒன்றை கண்டுபிடிக்க அதிக செலவாகிறது, பின் லட்சக்கணக்கில் உற்பத்தி செய்து அதை சரி கட்டியபின் மீண்டும் விலையை கிறைக்க வேண்டியது தான்!
கேமரா, செல்போன், கணிணி போன்ற எலக்ட்ரானிக் சாதனம் தவிர வேரென்ன இதில் சேர்த்தி!?
//உங்கள் வலையுலக வாரிசாக வால் பையனை அறிவிக்க போகதாக செய்தி எங்கும் உள்ளதே உண்மையா? //
சொத்துக்கு வாரிசா அறிவிச்சாலும் சந்தோசப்படலாம்!
:)
//14. மீண்டும் தி.அரசு ஜெ-யின் தானைத் தளபதியாமே?
பதில்: யார் அவர்?//
புதுக்கோட்டை அரசர் திருநாவுக்கரசுதான் கட்சி மாறுவுதாக செய்தி?
//13. மதுரைப் பகுதியில் வேலும் வாளும் விளையாடும் வீர பூமியில் பெரும் தொண்டர்களுடன் ஜெ.யிடமிருந்து க.விடம் கட்சி மாற இருப்பதாய் கசியும் தகவல்கள் பற்றி?சதுரங்க ஆட்டம் எப்படி?
பதில்: கருணாநிதி மட்டும்தான் சொதப்ப வேண்டுமா, நானும் செய்வேன் என்று போட்டியுடன் செயல்படுகிறார் என்னும் தோற்றம் தருவது ஜெயலலிதா. இம்மாதிரி இரு தலைவர்களும் இருந்தால் தமிழகம் உருப்படுமா?//
இப்படி சொல்லியே அவரை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலும்.பன்னீர் பாவம்
//11. ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளில் மிகவும் மக்களை பாதித்தது எது?
பதில்: 1991-96 காலகட்டத்தில் கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் அவரும் அவரது தோழியும் வளைத்து போட முயன்றதில் பலரும் பாதிக்கப்பட்டனர். அதுவே 2001-06 ஆட்சியில் அப்படி ஒன்றும் அதிக சொதப்பல்கள் இல்லை. இருப்பினும் அரசு ஊழியர்கள் பிரச்சினையில் முதலில் நன்றாக செயல்பட்டவர் தனது நடவடிக்கைகளை சோ போன்றவர்கள் சொன்னபோது நிறுத்தி கொள்ள வேண்டிய நேரத்தில் அதைச் செய்யாது அதுவரை கண்ட பலன்களையெல்லாம் தாரை வார்த்தார். அதனால் என்னவாயிற்று என்றால் இப்போது அரசு அதிகாரிகளின் அட்டகாசம் இன்னும் அதிகமாகி விட்டது.//
அரசு ஊழியர்கள் ,ஜெ வை இனி நம்பத் தயாராயில்லை
அரசு ஊழியர்களின் மொத்த ஓட்டும் கலைஞருக்கும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே.ஜெ இனி ஆட்சி பற்றி கன்வு மட்டும் காணலாம்
//6. இந்த வருடம் மருத்துவர் படிப்புத் தேர்வில் முற்பட்ட ஜாதியினர் 50 பேர் மட்டும் தேர்வு எதைக்காட்டுகிறது?
பதில்: மீதிப்பேர் சரியாக படிக்கவில்லை அல்லது தேர்வில் கலந்து கொண்ட முற்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறைவானதாக இருந்திருக்கும். மருத்துவர் ப்ரூனோவுக்கு போக வேண்டிய கேள்வி இது.//
பாராம்பரியத்
தகுதி,திறமை என்னவாயிற்று?
//8. வாழ்க்கை சிலருக்கு மட்டும் எப்போதும் ஜாலியாய் எப்படி?
பதில்: எல்லா அனுபவத்தையும் ஜாலியாக எடுத்து கொண்டால் போயிற்று. ஆனால் அது பலருக்கு இயலாது. அவ்வாறு செய்ய முடிந்தவர்கள் பாடு ஜாலிதானே//
நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர்கள்!
பாக்யசாலிகள்
//24. அழகிரி-ஸ்டாலின் ஒப்பிடுக?
பதில்: அழகிரி துடிப்பாக செயல்படுபவர். ஸ்டாலின் அடக்கி வாசிப்பவர். கருணாநிதிக்கு பிறகு கட்சி உடையாமல் இருந்தால் அழகிரிதான் முன்னிலைக்கு வருவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து.//
அண்ணன் அழகிரி பற்றிய உங்கள் கணிப்பு மிகச் சரியானது.
ஸ்டாலின் அதிரடி அரசியலுக்கு லாயக்கில்லை.
//7. நினைத்ததற்கெல்லாம் நீதிமன்றம் போய் தடை வாங்குபவர்கள் பற்றி?
பதில்: Frivolous case filing எல்லாம் தண்டிக்கப்படக் கூடியவை. அவ்வாறு செய்தவர்களுக்கு அபராதமும் போடப்பட்டுள்ளது//
சொற்ப அபராதத் தொகையை கட்டிவிட்டு மீண்டும் வேதாளங்கள் முருங்கை மரத்தில்
//26. அ.தி.மு.க.வில் அணுகுண்டு அதிரடி மாற்றங்கள் என்னவாய் இருக்கும்?
பதில்: சசிகலா வகையறாக்களின் தாக்கம் இருக்கும்வரை ஒன்றும் கூறிட இயலாது.//
100 % உண்மை
//27. அன்புமணி முயற்சியால் ராமதாசும், கலைஞரும் மீண்டும் ஒரே அணியில் சாத்யமா?
பதில்: இப்போதைக்கு கருணாநிதியின் கை ஓங்கியுள்ளது. நீங்கள் கூறுவது போல நடக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. அதே சமயம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி கூறுகிறாரே, அதையும் யோசிக்க வேண்டியுள்ளது.//
கூட்டணி மாற்றி மாற்றி லாபம் பார்த்த டாக்டருக்கு இந்தத்தடவை
நாமம் போட்டு விட்டனர் வாக்காளர்கள்-அதிமுகவின் மறைமுக துரோகம்-டாடர் -ஜெ சந்திப்பு இதுவரை சாத்யப் படாததைப் பார்க்கும் போது?
//28. தமிழர் தலைவரின் மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கை?
பதில்: ஆறின கஞ்சி.//
ஆறின கஞ்சியையும் கவிதை எழுதி மைக்ரவேவ் முறையில் சூடாக்கிவிடுவதில் வல்லவ்ர் தமிழினத் தலைவர்
//0. அரசியல் உலகில் ஒருவன் எப்போது நல்ல பெயர் வாங்க முடியும்?
பதில்: எதிர்பார்ப்பு ஏதுமின்றி உழைப்பவன் “அவன் ரொம்ப நல்லவன்” என வடிவேலு ரேஞ்சில் அடையாளம் காணப்படுவான்.//
அடிவாங்குவதிலா?
//29. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்- உங்கள் அனுபவம் எப்படி?
பதில்: தில்லியில் வாங்கிய வாஷிங் மெஷினை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்து இங்கு வாங்கி கொண்ட மெஷின் நன்றாகவே வேலை செய்கிறது. எது எப்படியானாலும் கிடைத்த விலைக்கு தள்ளி விட்டு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை ஏற்று கொள்வதே நல்லது. பழைய பொருட்களை தனியாக விற்கும் திறமை எனக்கு கிடையாது.//
இது ஒரு ஏமாற்று செப்படி வித்தை
//2. ஊழியர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை சம்பளமாய் அள்ளிக் கொடுக்கும் அரசுகள், சலுகைகளையும் தராளமாய் வழங்குவது சாமான்யனுக்கு செய்யும் துரோகம் அல்லவா?
பதில்: எழுபதுகளில் தன்னையும் தன் கட்சியினரையும் சாமான்யன் என்றுதானே கருணாநிதி கூறி வந்தார்? சாமான்யர்களுக்கு அவர் துரோகம் செய்ய மாட்டார்.//
சாமான்யனின் சொத்து மதிப்பு பல ஆயிரங்கோடிகள் என்று ஜெயலலிதாவால் கூறப்படும் குற்ற்ச்சாட்டு?
//2. ஊழியர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை சம்பளமாய் அள்ளிக் கொடுக்கும் அரசுகள், சலுகைகளையும் தராளமாய் வழங்குவது சாமான்யனுக்கு செய்யும் துரோகம் அல்லவா?
பதில்: எழுபதுகளில் தன்னையும் தன் கட்சியினரையும் சாமான்யன் என்றுதானே கருணாநிதி கூறி வந்தார்? சாமான்யர்களுக்கு அவர் துரோகம் செய்ய மாட்டார்.//
சாமான்யனின் சொத்து மதிப்பு பல ஆயிரங்கோடிகள் என்று ஜெயலலிதாவால் கூறப்படும் குற்ற்ச்சாட்டு?
//அம்பானி சகோதரர்களது கறுப்புப் பண்மாவது அவர்கள் உழைத்து சம்பாதித்தது. ஆனால் இந்த கேடு கெட்ட மந்திரிகள், எம்பிக்கள் என்ன தொழில் செய்தனர், ஊரான் பணத்தை லஞ்சமாக பெற்றதைத் தவிர?//
.)
//1.பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சரக்கு லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது. இது நியாயமா? லிட்டருக்கு அரசு கூட்டியது வெறும் நாலு ரூபாய். ஆனால் இவர்கள்?
பதில்: எல்லா விலை உயர்வுகளுக்கும் ஜஸ்டிஃபிகேஷன் தேவை. ஆகவே இந்த 25 சதவிகிதம் எவ்வாறு வருகிறது என்பதை வெளிப்படையாக கூறவைக்கும் கட்டாயம் இருத்தல் அவசியம். ஆனால் அவ்வாறு ஏற்பாடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. சரக்கு லாரிகளை விட சரக்கு ரயில்களின் கட்டணம் ஆதாயத்துடன் இருந்தால் அதற்கு பலர் மாறலாம் அல்லவா? கூடவே உள்ளிட வேண்டிய செலவினங்களையும் பார்த்தல் அவசியம். கண்டிப்பாக இதற்கு மேல் கூற எனக்கு தகுதியும் இல்லைதானே.//
போனதடவை அரசு டீசலின் விலையை குறைத்தபோது,வாடகையை குறைக்க மனமில்லாதவர்கள் இப்போது மட்டும்
//4. 80 டாலரை தாண்டாதபோதே இப்படி என்றால்?
பதில்: நிலைமை கவலைக்கிடமே.//
கன்ஸ்யூமர் நிலையைத்தானே சொல்கிறீர்கள்
//. டி.ஆர் பாலு மற்றும் அழகிரி வெற்றியை எதிர்த்தும் வழக்கு போட்டவரின் மனத்திண்ணம் பற்றி?
பதில்: இதில் என்ன மனத்திண்ணம் இருக்கிறது? தேர்தல் வழக்குகள் சர்வசாதாரணமே.//
மற்றவர்களும் இவர்கள் கதையும் ஒன்றா?
//8. பங்கு வாணிபம் மீண்டும் சரிவை நோக்கியா?
பதில்: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.//
சிவகெங்கையாருக்கும் , அவரது செல்வ மகனுக்கே இது வெளிச்சம்
//4. பெருந்தலைவர் காமராஜரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜூலை 15. காங்கிரசாரின் தனி ஆட்சிக் கனவுக்கு கட்டியங்கூறும் நாளாகுமா?
பதில்: நன்றாக சென்று கொண்டிருந்த, கட்சி விவகாரத்தில் மாநில அளவில் சுயாட்சி என்னும் ரேஞ்சில் செயல்பட்ட காமராஜ், நிஜலிங்கப்பா ஆகியோரை வன்மத்துடன் தடுத்த இந்திரா காந்தியின் மனோநிலைதான் சோனியாவுக்கும் இருக்கிறது. அது இருக்கும் வரையில் நீங்கள் கூறுவதெல்லாம் நடக்காது.//
ராகுல் தமிழ்க அரசியல் மீது தன் அருள் பார்வையை செலுத்தினால்?
//4. பெருந்தலைவர் காமராஜரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜூலை 15. காங்கிரசாரின் தனி ஆட்சிக் கனவுக்கு கட்டியங்கூறும் நாளாகுமா?
பதில்: நன்றாக சென்று கொண்டிருந்த, கட்சி விவகாரத்தில் மாநில அளவில் சுயாட்சி என்னும் ரேஞ்சில் செயல்பட்ட காமராஜ், நிஜலிங்கப்பா ஆகியோரை வன்மத்துடன் தடுத்த இந்திரா காந்தியின் மனோநிலைதான் சோனியாவுக்கும் இருக்கிறது. அது இருக்கும் வரையில் நீங்கள் கூறுவதெல்லாம் நடக்காது.//
தவறான வழியில் சேர்த்த செல்வம் தவறாமல் துன்பத்தை கொடுக்கும் என்பது தெய்வ வாக்கு.ஒருவேளை இது நீதி தேவனின் தண்டனையோ?
வால்பையன் said...
//பதிவுலகில் உங்களின் நெருங்கிய நண்பர், தங்கள் வழி நடக்கும் சகபதிவர், ஆதர்ச குரு, துரோகி, நிரந்திர பின்னூட்ட ஆதரவாளர், வால் பையன் ஆகியோரை எதிர்பாரதவிதமாய், உங்கள் நங்கநல்லூர் பகுதியில் சந்திக்கும் போது உங்களின் முதல் பேச்சு என்னவாய் இருக்கும்?//
இதிலென்ன வால்பையன் மட்டும் ஒதுக்கப்படுள்ளான்! நீங்கள் குறிப்பிட்டுள்ள கேட்டகிரியில் நான் வரவில்லையா!
டோண்டு அவர்களை வீட்டில் சந்தித்த மிக குறுகிய வட்ட பதிவர்களில் நானும் ஒருவன்! பார்த்தவுடன் நலம் விசாரிப்பது தானே தமிழர் பண்பாடு!
அதுவே எல்லா இடங்களிலும் தொடருது!//
/
Blogger வால்பையன் said...
//உங்கள் வலையுலக வாரிசாக வால் பையனை அறிவிக்க போகதாக செய்தி எங்கும் உள்ளதே உண்மையா? //
சொத்துக்கு வாரிசா அறிவிச்சாலும் சந்தோசப்படலாம்!//
டோண்டுவின் பதிவுலக வாரிசுக்கு பாராட்டுக்கள்.
அதனால்தான் ஆட்மேன் அவுட்டா?
1.will you buy things based and believing on ads?
2.What is fringe benefit tax and why it is removed now?
3. Not providing services properly under warranty period and the product is not working at all what should be done by the owner?
4. Indians arenot very serious in work -reason?
5. will you just laugh out loud or cry in times of deep stressfull anxieties?
டோண்டு, ஒரு கேள்வி - பதில் பகுதிக்கு 20 கேள்வின்னு (ஏதோ ஒரு நம்பர்) நிர்ணயிங்க. இது ரொம்ப அதிகமா இருக்கு. படிக்க முடியலை.
//
30. அரசியல் உலகில் ஒருவன் எப்போது நல்ல பெயர் வாங்க முடியும்?
//
நீங்கள் சொல்லும் நல்ல பெயர் கிலோ என்ன விலை என்பதை பொருத்தது.
//
20. பெரியாரின் கருத்துகளில் உங்களால் ஜீரணிக்க முடியாதது எது?
பதில்: முந்தைய கேள்வியிலேயே அதற்கான பதில் உள்ளது.
//
பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் காரல் மார்குசு போன்ற கம்யூனிசவாதிகளிடமிருந்து பெறப்பட்டு தின்று பெரியாரே ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கப்பட்டவை.
அந்த வாந்தியைத் தின்று ஜீரணிக்க முடியாமல் இன்று பல பெரியார் தொண்டர்கள் பேதி பிடுங்கிக்கொண்டு அலைகிறார்கள். எதுவுமே உள்ளே போகாத மாதிரி ஒரு மெண்டல் கான்ஸ்டிபேஷன், எப்போதுமே எல்லாமே வெளியில் கொட்டிக்கொண்டிருக்கும் ஓரல் டயரியா இருந்தாலே பெரியார் பாசறை என்று சொல்லிவிடலாம்.
இந்த பழமொழிகளுக்கு ஜெயா டீவி புகழ் டோண்டுவின் புதுமொழி?
1.வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
2.வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
3.வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
4.வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
5.வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
6.வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக
7.விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
8.விதி எப்படியோ மதி அப்படி.
9.விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
10விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது
மணிகண்டன் அவர்கள் சொல்லியதை நானும் ஆமோதிக்கிறேன்.
ஒரு குறிப்பிட்ட அளவு கேள்விகளே ஒரு வாரத்திற்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். பதிவு ரொம்ப நீழமாக இருக்கின்ற காரணத்தால் படிப்பது சிரமமாக இருக்கிறது.
தலைவா, சுருக்கமா ஒரு பத்து கேள்விக்கு சும்மா நச்சுன்னு பதில் சொல்லக்கூடாதா?
முடியல்ல!
நல்ல யோசனைதான். ஆனால் மிகவும் வேலை வாங்கும். நான் ஒரு கோவிலுக்கு சென்று அங்கு எனக்கு கிடைக்கும் அனுபவங்களிஅ எழுதுவது என்பது ஒரு விஷயம். ஆனால் அதே கோவிலின் பின்புலன்கள் அடங்கிய விஷயத்தை எழுதுவது என்பது முற்றிலும் வேறு தளத்தில் இருக்கும் விஷயம். அதை செய்ய எனக்கு சக்தி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
Dondu Sir,
Thanks for the consideration. I definitely understand it's a very tough job.
Keep up your good work. It's always a treat to read your blogs.
Regards.
Partha.
//Anonymous Anonymous said...
தலைவா, சுருக்கமா ஒரு பத்து கேள்விக்கு சும்மா நச்சுன்னு பதில் சொல்லக்கூடாதா?
முடியல்ல!//
this request can be considered after verifying the following
1.no of hits for this posting
2.no of comments for this posting
3.no of repeted people asking questions regularly
4.unwanted questions can be rejected by dondu
5.questions asked with mail.id can be encouraged
6.it seems this type of posting (every thursday at 0500 a.m)
is unique
சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்குவீர்கள்?
சந்திரகுபதர்கால்த்தில் அர்த்த சாஸ்திரம் தந்த சானக்கியர் என்ற கெள்டில்யரின் இந்த வாசகங்களை பார்க்கும் போது இன்றைய காலகட்டத்தில் என்ன சொல்ல தோன்றுகிறது?
1.A person should not be too honest.
Straight trees are cut first
and Honest people are victimised first.
2."Even if a snake is not poisonous, it should pretend to be venomous."
3."The biggest guru-mantra is: Never share your secrets with anybody. ! It will destroy you."
4."There is some self-interest behind every friendship.
There is no Friendship without self-interests.
This is a bitter truth."
5."Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply
and find satisfactory answers to these questions, go ahead."
6.
"As soon as the fear approaches near, attack and destroy it."
7.
"Once you start a working on something,
don't be afraid of failure and
don't abandon it.
People who work sincerely are the happiest
8."The fragrance of flowers spreads
only in the direction of the wind.
But the goodness of a person spreads in all direction."
9."A man is great by deeds, not by birth."
10."Treat your kid like a darling for the first five years.
For the next five years, scold them..
By the time they turn sixteen, treat them like a friend.
Your grown up children are your best friends."
11."Books are as useful to a stupid person
as a mirror is useful to a blind person.
12.
"Education is the best friend.
An educated person is respected everywhere.
Education beats the beauty and the youth..."
//.A person should not be too honest.
Straight trees are cut first
and Honest people are victimised first.//
ரொம்ப நல்லவன் நசுக்கப்படுவான்
//2."Even if a snake is not poisonous, it should pretend to be venomous.//
சீறினாதானே அது பாம்பு இல்லையின்னா?
//3."The biggest guru-mantra is: Never share your secrets with anybody. ! It will destroy you."//
ரகசியத்தை காப்பாற்று
இல்லேன்ன உன்னை கொன்னுடும்
//4."There is some self-interest behind every friendship.
There is no Friendship without self-interests.
This is a bitter truth."//
ஆதயமில்லாம செட்டி ஆத்தோட போவாரா?
//."Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply
and find satisfactory answers to these questions, go ahead."//
ஆழம் பார்த்து காலை விடு
//"As soon as the fear approaches near, attack and destroy it//
பயமெனும் பாம்பை கொன்னுடு
//Once you start a working on something,
don't be afraid of failure and
don't abandon it.
People who work sincerely are the happiest//
எண்ணித் துணிக கருமம்........
//"The fragrance of flowers spreads
only in the direction of the wind.
But the goodness of a person spreads in all direction//
ஊரிலே இருக்கு திராசும் படியும்
நல்லோர் புகழ் நாடெங்கும்
//9."A man is great by deeds, not by birth."
சேற்றிலே செந்தாமரை போல
//Education is the best friend.
An educated person is respected everywhere.
Education beats the beauty and the youth..."//
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
கேள்விகள்:
எம்.கண்ணன்
1. காய்கறிகள், பலசரக்குகள் வாங்குவது - ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற பெருங்கடைகளிலா / அங்காடிகளிலா , பக்கத்து தெருவில் இருக்கும் அண்ணாச்சி கடைகளிலா இல்லை தள்ளுவண்டி, ஸ்டேஷனோரம் கூடையில் விற்கும் தினசரி விற்பனையாளர்களிடமா ? ஏன் ? என்ன விதமான சாதக, பாதகங்களைப் பார்க்கிறீர்கள் ?
2. மீண்டும் ஜெயமோகன், சாரு யுத்தங்கள் துவங்கிவிட்டனவே ? பதிவர்களுக்குக் கொண்டாட்டம் தானே ? அதுவும் ஜெயமோகன் அமெரிக்கா ஐடினரரி எல்லாம் போட்டு தூள் கிளப்புவதில் புகை ஜாஸ்தியாகுமே ?
3. பிளேடு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ? அதற்கு முன்பு வரை அந்தக் காலத்தில் (ராஜா காலங்களில்) எப்படி சவரம் செய்யப்பட்டது ?
4. பெண்கள் ஷேவ் செய்வதற்கென்றே பலப்பல புது ஐட்டங்கள் மார்க்கெட்டில் (பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில்) வந்துவிட்டனவே ? எனினும் நமது தென்னிந்திய நடிகைகள் கையில்லா உடைகள் அணிந்து நடிக்கும்போது அவ்வளவு க்ளீன் ஷேவாக இருப்பதில்லையே ? (ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் ஸ்லீவ்லெஸ் படங்களைப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்).
(எ.கா: சென்ற வார குமுதம் 6ஆம் மற்றும் 49ஆம் பக்க படங்கள்)
5. (துக்ளக் தவிர) தற்போது பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில் பகுதி எந்த பத்திரிக்கையில் நன்றாக வருகிறது ? ஹாய் மதன், அரசு பதில்கள், தராசு பதில்கள் என எல்லாமே செம மொக்கையாக இருக்கிறதே ?
6. பாலகுமாரன் 'குரு' தேவை என்கிறார். (http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_30.html) உங்களுடைய 'குரு' என்று யாரைக் கூறுவீர்கள் ? ஏன் ?
7. கலைஞர் டிவியை இப்போது யார் நடத்திவருகிறார்கள் ? இன்னும் ஏன் தினமும் சன் டிவீக்குப் போட்டியாக படங்களும், பாடல்களும் ?
8. இந்த கேள்வியிக்கு பதில் சொல்லும் நீங்களும், இந்தப் பதிவை படிக்கும் பலரும் நன்கு படித்த நல்ல வேலையில் (இருந்த் அல்லது) இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களாலேயே சில பல லட்சங்கள் தாண்டி தங்கள் வீட்டு மற்றும் சொந்தக் கணக்குகளை சரியாக வைத்துக்கொள்ள தடுமாறும் போது, பெரும்பாலும் அவ்வளவு படிக்காத அரசியல்வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிக்கான பட்ஜெட்டுகள் போடுகிறார்கள் - சமாளிக்கிறார்கள் ? என்னதான் அதிகாரிகள் துணை என்றாலும் இவ்வளவு ஆயிரம் கோடிகளை புரிந்துகொள்ளவும் ஒரு திறமை வேண்டுமே ?
9. சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்கிறீர்கள் (உங்கள் உள்ளம் கவர் கள்வனைக் காணத்தான்!). தனியார் ஆம்னி பஸ் அல்லது அரசு பஸ்ஸில், விஜயின் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்று படங்களையும் தொடர்ச்சியாகப் போடுகிறார்கள். என்ன செய்வீர்கள் ? இது மாதிரியான படம் பார்க்கும் வாய்ப்பினை யாருக்கு அளிக்க விரும்புவீர்கள் :-) ?
10. தனியார் மற்றும் அரசு பஸ்களின் இந்த வீடியோ தொல்லை தாங்க முடிவதில்லையே ? இரவில் தூக்கம் கெடும் அளவிற்கு இந்தப் படங்களை ஓட்டுவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி போல் யாரும் வழக்குப் போடுவதில்லையா ?
//
எம்.கண்ணன்
1. காய்கறிகள், பலசரக்குகள் வாங்குவது - ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற பெருங்கடைகளிலா / அங்காடிகளிலா , பக்கத்து தெருவில் இருக்கும் அண்ணாச்சி கடைகளிலா இல்லை தள்ளுவண்டி, ஸ்டேஷனோரம் கூடையில் விற்கும் தினசரி விற்பனையாளர்களிடமா ? ஏன் ? என்ன விதமான சாதக, பாதகங்களைப் பார்க்கிறீர்கள் ?
2. மீண்டும் ஜெயமோகன், சாரு யுத்தங்கள் துவங்கிவிட்டனவே ? பதிவர்களுக்குக் கொண்டாட்டம் தானே ? அதுவும் ஜெயமோகன் அமெரிக்கா ஐடினரரி எல்லாம் போட்டு தூள் கிளப்புவதில் புகை ஜாஸ்தியாகுமே ?
3. பிளேடு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ? அதற்கு முன்பு வரை அந்தக் காலத்தில் (ராஜா காலங்களில்) எப்படி சவரம் செய்யப்பட்டது ?
4. பெண்கள் ஷேவ் செய்வதற்கென்றே பலப்பல புது ஐட்டங்கள் மார்க்கெட்டில் (பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில்) வந்துவிட்டனவே ? எனினும் நமது தென்னிந்திய நடிகைகள் கையில்லா உடைகள் அணிந்து நடிக்கும்போது அவ்வளவு க்ளீன் ஷேவாக இருப்பதில்லையே ? (ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் ஸ்லீவ்லெஸ் படங்களைப் பார்த்தால் வித்தியாசம் தெரியும்).
(எ.கா: சென்ற வார குமுதம் 6ஆம் மற்றும் 49ஆம் பக்க படங்கள்)
5. (துக்ளக் தவிர) தற்போது பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில் பகுதி எந்த பத்திரிக்கையில் நன்றாக வருகிறது ? ஹாய் மதன், அரசு பதில்கள், தராசு பதில்கள் என எல்லாமே செம மொக்கையாக இருக்கிறதே ?
6. பாலகுமாரன் 'குரு' தேவை என்கிறார். (http://balakumaranpesukirar.blogspot.com/2009/06/blog-post_30.html) உங்களுடைய 'குரு' என்று யாரைக் கூறுவீர்கள் ? ஏன் ?
7. கலைஞர் டிவியை இப்போது யார் நடத்திவருகிறார்கள் ? இன்னும் ஏன் தினமும் சன் டிவீக்குப் போட்டியாக படங்களும், பாடல்களும் ?
8. இந்த கேள்வியிக்கு பதில் சொல்லும் நீங்களும், இந்தப் பதிவை படிக்கும் பலரும் நன்கு படித்த நல்ல வேலையில் (இருந்த் அல்லது) இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களாலேயே சில பல லட்சங்கள் தாண்டி தங்கள் வீட்டு மற்றும் சொந்தக் கணக்குகளை சரியாக வைத்துக்கொள்ள தடுமாறும் போது, பெரும்பாலும் அவ்வளவு படிக்காத அரசியல்வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிக்கான பட்ஜெட்டுகள் போடுகிறார்கள் - சமாளிக்கிறார்கள் ? என்னதான் அதிகாரிகள் துணை என்றாலும் இவ்வளவு ஆயிரம் கோடிகளை புரிந்துகொள்ளவும் ஒரு திறமை வேண்டுமே ?
9. சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்கிறீர்கள் (உங்கள் உள்ளம் கவர் கள்வனைக் காணத்தான்!). தனியார் ஆம்னி பஸ் அல்லது அரசு பஸ்ஸில், விஜயின் அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு மூன்று படங்களையும் தொடர்ச்சியாகப் போடுகிறார்கள். என்ன செய்வீர்கள் ? இது மாதிரியான படம் பார்க்கும் வாய்ப்பினை யாருக்கு அளிக்க விரும்புவீர்கள் :-) ?
10. தனியார் மற்றும் அரசு பஸ்களின் இந்த வீடியோ தொல்லை தாங்க முடிவதில்லையே ? இரவில் தூக்கம் கெடும் அளவிற்கு இந்தப் படங்களை ஓட்டுவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி போல் யாரும் வழக்குப் போடுவதில்லையா ?//
super questions !
//. காய்கறிகள், பலசரக்குகள் வாங்குவது - ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற பெருங்கடைகளிலா / அங்காடிகளிலா , பக்கத்து தெருவில் இருக்கும் அண்ணாச்சி கடைகளிலா இல்லை தள்ளுவண்டி, ஸ்டேஷனோரம் கூடையில் விற்கும் தினசரி விற்பனையாளர்களிடமா ? ஏன் ? என்ன விதமான சாதக, பாதகங்களைப் பார்க்கிறீர்கள் ?//
ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் கோவிந்தோ
அடுத்து ரிலையன்ஸ் ஃபிரஷ்
கோவிந்தோ கோவிந்தோ
//3. பிளேடு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ? அதற்கு முன்பு வரை அந்தக் காலத்தில் (ராஜா காலங்களில்) எப்படி சவரம் செய்யப்பட்டது //
கற்கால மனிதர்கள் கல்லை வைத்தாம்
அரசர்கள் ஒருவேளை கத்தியை வைத்து
இருக்குமோ
//5. (துக்ளக் தவிர) தற்போது பத்திரிக்கைகளில் வரும் கேள்வி பதில் பகுதி எந்த பத்திரிக்கையில் நன்றாக வருகிறது ? ஹாய் மதன், அரசு பதில்கள், தராசு பதில்கள் என எல்லாமே செம மொக்கையாக இருக்கிறதே ?//
டோண்டு கேள்வி பதிலுக்கு அப்புறம்தான் மற்றவை.
//7. கலைஞர் டிவியை இப்போது யார் நடத்திவருகிறார்கள் ? இன்னும் ஏன் தினமும் சன் டிவீக்குப் போட்டியாக படங்களும், பாடல்களும் ?//
கானமயிலாட வான்கோழி கதைதான்
//8. இந்த கேள்வியிக்கு பதில் சொல்லும் நீங்களும், இந்தப் பதிவை படிக்கும் பலரும் நன்கு படித்த நல்ல வேலையில் (இருந்த் அல்லது) இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களாலேயே சில பல லட்சங்கள் தாண்டி தங்கள் வீட்டு மற்றும் சொந்தக் கணக்குகளை சரியாக வைத்துக்கொள்ள தடுமாறும் போது, பெரும்பாலும் அவ்வளவு படிக்காத அரசியல்வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிக்கான பட்ஜெட்டுகள் போடுகிறார்கள் - சமாளிக்கிறார்கள் ? என்னதான் அதிகாரிகள் துணை என்றாலும் இவ்வளவு ஆயிரம் கோடிகளை புரிந்துகொள்ளவும் ஒரு திறமை வேண்டுமே ?//
பீஹார் லல்லுவை சொல்லுங்கள்
ஆனால் சிதம்பரம்,மன்மோஹன்,மம்தா,பிராணாப் போன்றவர்கள் பொருளாதார மேதைகள்
when the link for the video -jeya tv-dondu interview-will be posted?
//Anonymous Anonymous said...
when the link for the video -jeya tv-dondu interview-will be posted?
July 13, 2009 8:58 PM//
thank you .
kalaikkeeteenga.
congrats.
//
//7. கலைஞர் டிவியை இப்போது யார் நடத்திவருகிறார்கள் ? இன்னும் ஏன் தினமும் சன் டிவீக்குப் போட்டியாக படங்களும், பாடல்களும் ?//
கானமயிலாட வான்கோழி கதைதான்
//
சன் டீ வி கானமயிலா ?
அதுவே வான்கோழி தான்.
கலைஞர் டீ வியை வான்கோழியைப்பார்த்து ஆடும் கின்னி கோழி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
//Vajra said...
//
//7. கலைஞர் டிவியை இப்போது யார் நடத்திவருகிறார்கள் ? இன்னும் ஏன் தினமும் சன் டிவீக்குப் போட்டியாக படங்களும், பாடல்களும் ?//
கானமயிலாட வான்கோழி கதைதான்
//
சன் டீ வி கானமயிலா ?
அதுவே வான்கோழி தான்.
கலைஞர் டீ வியை வான்கோழியைப்பார்த்து ஆடும் கின்னி கோழி என்று வேண்டுமானால் சொல்லலாம்.//
.)
Post a Comment