கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அனானி (32 கேள்விக்காரர்)
1. தாய், தாரம் இவர்களில் யாருடைய அன்பு நமக்கு அதிகம்?
பதில்: ஒரு ராஜ்கிரண் படத்தில் அவர் சொல்லும் டயலாக், “ஒரு மனுஷனுக்கு தாய் ரொம்ப முக்கியம். ஆனால் அவர் எப்போதுமே அவனுடன் இருக்க முடியாது என்பதலேயே அவனுக்கு தாரம் வருகிறாள்”.
2. இக்காலத்தில் பெண்களுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா?
பதில்: பெண்களுக்கு அதிக செல்லம் கொடுத்தால் மனைவியே கோபிக்கிறாளே. என்ன செய்வது? இங்கு நான் பெண்கள் எனக் குறிப்பிடுவது மகள்களைத்தான். நீங்கள் என்னவென்று நினைத்தீர்கள்?
3. மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
பதில்: மனிதனிடம் மட்டும் உள்ள ஆறாவது அறிவு.
4. மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை?
பதில்: மீதி ஐந்து அறிவுகள்.
5. முழுநேரச் செய்திப் பிரிவு டீவிகளில் எது பெஸ்ட்?
பதில்: எனக்கு தெரிந்து பி.பி.சி. ஐ மிஞ்சக் கூடிய நியூஸ் சேனல் இல்லை.
6. முழுநேரச் செய்திப் பிரிவு டீவிகளில் எது ஒர்ஸ்ட்?
பதில்: அப்படி என்று சொல்ல இயலாது.
7. துன்பத்தில் பெரிய துன்பம்?
பதில்: ஒருவன் படும் துன்பத்தை ஒருத்தரும் கண்டுகொள்ளாமல் போவதுதான்.
8. இன்பத்தில் பெரிய இன்பம்?
பதில்: இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி, வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
9. பேரின்பம் எது?
பதில்: சிற்றின்பம் என்பது நிஜமாகவே சிறிய இன்பம்தான் என உணரமுடியும் நிலை.
10. தாய், தாரம் இவர்களில் யாருடைய அன்பு நமக்கு அதிகம்?
பதில்: அந்தந்த காலத்தை பொருத்தது. ராஜ் கிரணே மேலே சொன்னதுபோலத்தான்.
11. நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணுபவர்கள் பற்றி?
பதில்: அவர்களை வெல்தல் யார்க்கும் அரிதாம்.
12. தியாகராஜ பாகவதர், என்.எஸ் கிருஷ்ணன, இவர்களின் வீழ்ச்சி யாரால், எதனால் ஏற்பட்டது? உண்மை என்ன?
பதில்: ஒரு இன்ஸ்பெக்டருக்கு அவர்கள் சம்திங் தர மறுத்ததில் அவர் கேசில் இவர்களை இழுத்து விட்டதாக நான் படித்துள்ளேன். பிரீவி கவுன்சிலில் இந்த இருவருக்கும் எதிரான கேசில் சரியான ஆதாரங்கள் இல்லாதது குறித்து அவர்கள் வியப்பும் தெரிவித்ததாகக் கேள்விப்பட்டேன். இங்கு அவர்கள் முதலில் குற்றவாளி கூண்டில் நின்றபோது பொதுமக்களின் பிரதிநிதிகளை கொண்ட ஜூரி சிஸ்டம் அமுலில் இருந்தது.
13. மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை?
பதில்: ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது.
14. உலகில் நிம்மதியாக இருப்பவர்களில் யாராவது குறிப்பிடுங்களேன்?
பதில்: தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குத்தான் அதிக பாதுகாப்பு. மேலும் அதற்கென்று பயங்கள் இன்னும் டெவலப் ஆகவில்லை. ஆகவே அக்குழந்தைகள்தான் அதிக நிம்மதியானவர்கள்.
15. கோயிலே கதியென்று இருக்கும் பெண்களைப் பற்றி உங்கள் விமர்சனம்?
பதில்: அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல என்பார்கள். குழந்தை கொடுக்க வேண்டிய கணவனை சார்ந்திராது வெறும் அரச மரத்தை சுற்றினால் குழந்தை வந்து விடுமா என்றும் அதற்கு பொருள் உண்டு என ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது.
16. கம்யூனிஸ்டுகள் அணுஒப்பந்தத்தில் இப்போதைய நிலை?
பதில்: அவர்கள் தற்சமயம் இந்திய அரசியலில் முந்தைய செல்வாக்கோடு இல்லைதானே.
17. சென்னையில் குடியிருப்பு என்றாலே அது குப்பைக்கூளங்களின் மேடு என்றாகி வருவது பற்றி?
பதில்: தத்தம் வீடுகள் மட்டும் சுத்தமாக இருக்க வேண்டும், ரோடுகள் நாசமாகப் போகட்டும் என்ற அசட்டை இருக்கும் எந்த நகரத்தையும் காப்பாற்ற இயலாது.
18. பொதுவாய் இன்று காதலர்கள் பெருகிவிட்டார்களே?
பதில்: ஜனத்தொகை பெருக்கத்தில் தவிர்க்க முடியாத பக்க விளைவுதான் அது.
19. நிறைவேறாத சின்ன ஆசை ஏதும்?
பதில்: எனது நிறைவேறாத ஒரு ஆசை சக்கரம் ஓட்டுவது. பழைய சைக்கிள் சக்கரத்தின் ரிம்மை வைத்து என் நண்பர்கள் அலட்டுவார்கள். அந்த ரிம் க்ரூவில் ஒரு குச்சியை கொடுத்து தெருத் தெருவாக ஓடும் ஒரு சிறுவனின் மகிழ்ச்சியை முன்னால் நம்ம தல அஜீத் கூட ரேஸ் காரில் பெற முடியாது என்பது என் உறுதியான எண்ணம். இது எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. என் அப்பாவிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இப்போது ரிம் கிடைக்கும், ஆனால் அதை வைத்துக் கொண்டு ஓடினால் பக்கத்து, எதிர் வீட்டு மாமாக்கள் "என்ன ராகவையங்கார் ஸ்வாமி, இளமை திரும்புகிறதா" என்று கோட்டா பண்ணுவார்களே!
என்னை மாதிரி பலருக்கும் இம்மாதிரி அல்ப ஆசைகள் உண்டு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சருக்கு மரத்தில் விளையாட ஆசைப்படாதவரும் உண்டோ? ஆனால், வருந்த வேண்டாம். நம்மைப் போன்றவர்களுக்குத்தான் கணினி விளையாட்டுகள் வந்துள்ளனவே.
20. மனைவியை இழந்த ஆண்களைவிடக் கணவனை இழந்த பெண்கள் மனநிம்மதியோடு இருக்கிறார்கள் என்கிற சமீபத்திய ஆய்வு பற்றி?
பதில்: உண்மைதான். ஆணை விட பெண்ணுக்கு மனோபலம் அதிகம்.
21. வைகோ எப்படியிருக்கிறார்?
பதில்: யாருக்கு தெரியும். அவர் இர்ரெலெவண்ட் ஆகி வருகிறார்.
22. ராமதாஸின் அடுத்த மூவ்?
பதில்: 2011-க்கு இன்னும் காலம் இருக்கிறதே. அதற்கான திட்டம் வகுத்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
23. ஒகேனக்கல் திட்டம் என்னாச்சு?
பதில்: கிணற்றில் இட்ட கல் போல இருக்கிறது.
24. விஷமாய் விலைவாசி உயர்வுகளைப் பற்றி?
பதில்: அதுதான் புரியவில்லை. என்னவோ பணவீக்கம் மைனசுக்கு போய் விட்டது என ஒருவர் கூறுகிறார். அது ரொம்ப தப்பாச்சேன்னு இன்னொருத்தர் சொல்லறார். ஆனால் துவரம் பருப்பு விலை திடீரென கிலோ 100 ரூபாய் என்ற கணக்கில் சென்றது என்ன காந்தி கணக்கோ தெரியவில்லை.
விலைவாசி உயர்வு என்பது எப்போதுமே இருந்து வருவதுதான். ஆனால் சமீபத்தில் 1974-ல் சில மாதங்கள் gallopping inflation என்று கூறும் அளவுக்கு விலைகள் உயர்ந்தன. அதே போல இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்ததும் விலைகள் கண்மூடித்தனமாக உயர்ந்தன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், இது ஒன்றும் தட்டையாகப் பார்க்கக் கூடிய விஷயம் இல்லை. அதற்கு மேல் கூற எனக்கு பொருளாதார அறிவு லேது.
25. அடுத்து அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவது சாத்தியமா?
பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
26. இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை ஆரம்பித்தால்?
பதில்: பயங்கரமான அளவில் போட்டிகள் நிறைந்தது பத்திரிகைத் தொழில். அவற்றை ஜெயிக்க முடிந்தால் தொடங்குங்கள் பத்திரிகை.
27. கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் கவாந்த பேச்சு?
பதில்: அவரது அலட்டல் தமிழ் எனக்கு எப்போதுமே பிடிக்காது.
28. கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் வெறுப்பேற்றிய பேச்சு?
பதில்: சில நிமிடங்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு ஈழத்தில் அமைதி திரும்ப எல்லாம் செய்து விட்ட தோரணையில் பேசியது.
29. மணல் வியாபாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி?
பதில்: திமுக அதிமுக இரண்டுமே மணல் கொள்ளை அடிப்பவை. ஆளும் கட்சியில் இருந்தால் கொள்ளையை ஆதரிப்பது, எதிர்க்கட்சியில் இருந்தால் குய்யோ முறையோ என கதறுவது. சில மணல் கொள்ளையர்கள் வீட்டில் இரண்டு கட்சிகளிலும் உறுப்பினர்கள் இருப்பார்கள். அக்குடும்பத்தினர் நிரந்தர கொள்ளையர்கள்.
30. நடுத்தரவாசிகள் நிறைய செலவு செய்வதாய் வரும் செய்திகள் பற்றி?
பதில்: இரண்டாம் நம்பர் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருக்கும்.
31. பெட்ரோல் விலை குறைக்கப்படுமா?
பதில்: இப்போதைக்கு படாது. அடுத்த மத்திய தேர்தல் வர இன்னும் சமயம் உள்ளது.
32. திருவள்ளுவர் சிலை திறப்பு கர்நாடகத்தில் வெற்றி யாருக்கு?
பதில்: வெற்றி யாருக்கென தெரியாது. ஆனால் இழப்பு திருவள்ளுவருக்கும் சர்வக்ஞருக்கும். கர்நாடகா மற்றும் த்மிழ்நாட்டுக்கிடையே பிரச்சினை வந்தால் இவர்கள் சிலைகள்தான் அவமதிப்பு பெறும். தேவையா இதெல்லாம்?
அனானி (25.07.2009 இரவு 08.35-க்கு கேட்டவர்)(இவரும் 32 கேள்விகள் கேட்டுள்ளார்!)
1. மண்ணாசை பிடித்தவனின் முடிவு?
பதில்: ஆறடி மண்.
2. பெண்ணாசை பிடித்தவனின் முடிவு?
பதில்: ராவணனுடைய முடிவு.
3. பொன்னாசை பிடித்தவரின் (பெண்) முடிவு?
பதில்: பாப்பரின் மனைவியாவது.
4. சுப்பிரமணிய சுவாமியின் லேட்டஸ்ட் மூவ் என்ன?
பதில்: அது அவருக்கே தெரியாது? நான் மட்டும் எப்படி அதை அறியவியலும்?
5. இதில் எது சூப்பர் 20-20 ஓவர் போட்டி- ஒரு நாள் போட்டி
பதில்: இப்பல்லாம் ரெண்டுமே பிடிக்கவில்லை. ஐபிஎல்லில் நடனம் ஆடும் பெண்களை பார்த்த பிறகு அது இன்றி வெறுமனே விளையாட்டை பார்ப்பதில் என்ன மஜா இருக்கிறது?
6. தி.மு.க. ஆட்சி -உங்கள் விமர்சனம்?
பதில்: குடும்பக் கொள்ளை
7. ஸ்டாலின் சட்டமன்ற செயல்பாடு பற்றி?
பதில்: திருப்தியாகவே உள்ளது
8. சேமிப்பதில் அக்கறை இல்லாதவ்ர் நிலை?
பதில்: கஷ்ட காலங்களில் நண்பர்கள் அவரைக் கண்டாலே ஓடுவார்கள். கடன் கேட்டு தொல்லை செய்வாரே.
9. உங்கள் நிலையில் -மனைவி, அம்மா இவர்களில் யாருக்கு அதிகமாகப் பயப்பட வேண்டும்?
பதில்: ஏன் பயப்பட வேண்டும்? இருவருமே உங்கள நலனுக்காகத்தானே செயல்படுகின்றனர்?
10. தமிழக அமைச்சர்களுக்குப் பிடிக்காத அரசு ஊழியர்கள்?
பதில்: தேர்தல் டியூட்டி சமயங்களில் நேர்மையாக நடந்து கொள்பவர்கள். இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசுகளுக்கும் பொருந்தும்.
11. டி.ஆர்.பாலு?
பதில்: தற்காலிக வனவாசம்.
12. எல்.ஜி.கணேசன்? 13. செஞ்சியார்?
பதில்: இருவருமே தாய் கழகத்துடன் இணைந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.
14. கண்ணப்பனுக்கு மட்டும் ஸ்பெசல் மரியாதை?
பதில்: அவரால் ஏதேனும் ஆதாயம் என்றிருந்தால் மரியாதை தானே வருகிறது.
15. கொ.மு.கழகம் தொண்டமுத்தூரில் வெற்றி பெற்றால்?
பதில்: அவர்களுக்கு ஒரு எம்.எல்.ஏ. கிடைப்பார். வரும் அசெம்பிளி தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைக்க இரு முகாம்களிலிருந்தும் போட்டி இருக்கும்.
16. வி.காந்த் 2-3 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு?
பதில்: பிரகாசமாகவே இருக்கும், அதிமுக தனது முடிவிலிருந்து மாறாமல் இருந்தால்.
17. கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம் இடைதேர்தலில்?
பதில்: இரட்டை வேடம் போடுவது அவர்கள் மட்டுமில்லையே.
18. திரை நட்சத்திரங்களின் அரசியலில் திடீர் பிரவேசம்?
பதில்: தாங்களும் ஒரு எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., விஜயகாந்த ஆகலாமோ என்ற நப்பாசை. சிவஜி, அமிதாப் பச்சன், பாக்கியராஜ், சரத்குமார் ஆகியோரின் கதி நேராமலிருந்தால் சரி.
19. கனிமொழிக்கு மத்திய அமைச்சர் ஆகும் யோகம் அடிக்குமா?
பதில்: இப்போதைக்கு அவ்வாறு நடக்கும் எனத் தோன்றவில்லை.
20. தற்சமயம் அமெரிக்காவில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி?
பதில்: ஒரு நாட்டில் பொருளாதார நிலை மோசமானால் அங்குள்ள வெளிநாட்டவருக்குத்தான் முதலில் சங்கு ஊதப்படும். ஆகவே அமெரிக்காவின் பொருளாதார நிலை நல்லபடியாக வேண்டும் என்பதே அங்கு வாழும் இந்தியரது பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.
21. அகில இந்திய அரசியல் - தமிழக அரசியல் ஒரு ஒப்பீடு?
பதில்: முக்கிய வேற்றுமை மாற்று கட்சியினரை பார்க்கும்போது முகம் மலர பேசுவதுதான். அந்த விஷயத்தில் தமிழக அரசியலில் நாகரிகம் சுத்தமாகவே கிடையாது.
22. சோனியா-கலைஞர் நட்பால் மிகுதியாய் சிரமப்படும் நபர் யார்?
பதில்: தமிழக காங்கிரசார்.
23. ஆண்/பெண் இவர்களின் குரலை வைத்து என்ன சொல்ல முடியும்?
பதில்: அந்தந்த பாலினருக்கு அந்தந்த குரல் என இருப்பதே கேட்க நன்றாக இருக்கும். மாறி இருந்தால் காமெடிதான்.
24. பொதுவாய் நேர்மை, நாணயம்-இருக்கிறதா?
பதில்: இருக்கிறது. ஏமாற்று பேர்வழிகள் தமது செயல்பாடுகளை மற்றவர் நேர்மை மற்றும் நாணயத்தை நம்பித்தான் வைத்து கொள்கின்றனர் என்பதை நான் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
25.அரிசி/பருப்பு விலை?
பதில்: சமாளிக்க முடியாமல் உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் உணவுப் பொருட்களுக்கு கூடாது என்ற கோரிக்கை எழுகிறது. அது சரியா தவறா என்று கூற எனக்கு அறிவு போதாது. எனக்கு தோன்றியவரை சப்ளை டிமாண்ட் நிலைதான் முக்கியம்.
26. வர்த்தக சூதாடிகளின் கைவரிசையினால் இனி என்னவாகும்?
பதில்: ஏற்கனவே சப்ளை டிமாண்ட் நிலையில் தெளிவு இல்லாதிருந்தால் சூதாடிகளின் செயல்பாட்டால் தீமைதான் விளையும்.
27. உலகின் மிகப் பெரிய பணக்காரர் இப்போது யார்?-உங்கள் விமர்சனம்?
பதில்: எனக்கு தெரிந்து பில்கேட்ஸ். அவர் அந்த நிலைக்கு வந்தது தனது சொந்த முயற்சியால்தான். அப்பன் சேர்த்து வச்ச சொத்து மூலம் அல்ல. இது மன நிறைவை அளிக்கிறது.
28. வரும் கொலை, கொள்ளைச் செய்திகளை பார்த்தால்?
பதில்: எப்போதும் போலத்தான் கொலை, கொள்ளை நடக்கின்றன. அவை உடனுக்குடன் செய்திகளில் வருவதாலேயே நமக்கு அவை அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் வருகிறது.
29. வரதட்சணை ஒழிப்பின் தற்போதைய நிலை என்ன?
பதில்: பிரான்சில் வரதட்சிணை என்பது சட்டபூர்வமாகவே அங்கீகரிக்கப்பட்ட காலம் இருந்தது. அதற்காக பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் ஒப்பந்தமே போடுவார்கள். பெண்களுக்கு சொத்துரிமை இல்லாதபோது வேண்டுமானால் இது சரிப்பட்டிருக்கலாம். முள்ளின் மேல் துணியை போட்ட நிலையில் 498ஏ செக்ஷன்கள் முரட்டுத்தனமாக அப்ளை செய்யப்பட்டு பல குடும்பங்கள் நாசமாகின்றன. வச்சா குடுமி செரச்சா மொட்டை என்ற நிலையிலிருந்து அரசு மாற வேண்டும்.
30. எய்ட்ஸ் பற்றிய பிரச்சாரம்?
பதில்: இந்த உரலுக்கு சென்று பார்க்கவும்.
31. சாலை விபத்துகள் அதிகமாவது பற்றி?
பதில்: ஒவ்வோர் ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்காகிறது. சாலைகள் அதே அளவில் இருக்கின்றன. வேறென்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
32. கடவுள் (தென்திருப்பேரை பெருமாள்) உங்கள் முன் தோன்றினால்?
பதில்: அப்பய்ய தீட்சிதர் பற்றி ஒரு நிகழ்வை கூறுவார்கள்.
ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.
அந்த மகோன்னத பக்தருக்கு கிடைத்த அருளில் கோடியில் ஒரு பங்காவது எனக்கு அருளுமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை கேட்டு கொள்வேன்.
எம். கண்ணன்
1. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடும் ஆட்டோக்கள் பஜாஜ் கம்பெனியுடையதுதானாமே ? ஏன் வேறு எந்த கம்பெனியும் இந்த ஆட்டோ மார்க்கெட்டில் புகவில்லை அல்லது புகமுடியவில்லை?
பதில்: அப்படியெல்லாம் இல்லையே. மூன்று கம்பெனிகள் களத்தில் உள்ளன. அவை பஜாஜ், மஹீந்திரா & மஹீந்திரா மற்றும் இத்தாலியின் பியாஜ்ஜோ. என்ன, பஜாஜின் மார்க்கெட் ஷேர் அதிகம்.
2. ஹமாரா பஜாஜ் என இந்தியா முழுவதும் பிரபலமான பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வின் ஓர் அங்கம். ஆனால் தற்போது சேடக் ஸ்கூட்டர்கள் நிறுத்தப்பட்டுவிட்டன போலுள்ளதே? எல்லோரும் 100சிசி பைக்குகள் (மைலேஜ் மற்றும் ஸ்டைல்) வாங்க ஆரம்பித்து விட்டதாலா?
பதில்: அதெல்லாம் பஜாஜின் மார்க்கெடிங் யுக்தியில் வருகிறது. இப்போதைய மாடல் Bajaj Kristal DTSi என அறிகிறேன். பை தி வே எனக்கும் டூவீலர்களுக்கும் ரொம்ப தூரம் (சைக்கிளை டூ வீலர் என ஒத்து கொள்ள மாட்டார்கள்தானே)
3. டாடா நாநோ ஹிட் ஆகிவிட்டால், பஜாஜ் ஆட்டோவும் மறைந்துவிடுமா?
பதில்: எதுவும் எதையும் மறையச் செய்யாது. மக்களுக்கு தேவையானது நிற்கும், மற்றவை நிற்காது. ஆனால் உற்பத்தியாளரே உற்பத்தியை நிறுத்தினால் அது வேறு விஷயம்.
4. பாலகுமாரன் 'உடையார்' நாவலில் ராஜராஜ 'தேவர்' என்கிறாரே ? 'தேவர்' என்பது ராஜராஜனின் ஜாதியா இல்லை படித்து வாங்கின பட்டமா? (இல்லை தஞ்சை மாவட்டதில் அதிகமுள்ள 'கள்ளர்' 'அகமுடையர்' போன்ற (உபிச குடும்பத்து தேவர் ஜாதி) தேவர் ஜாதியைச் சேர்ந்தவரா?
பதில்: ராஜராஜ சோழன் எந்த ஜாதியாக இருந்தால் என்ன? அவன் சிறந்த மன்னன் என்பது நிஜம்தானே. மேலும் இப்போது அதை அழுத்தந்திருத்தமாக கூறுதல் கடினமே. அமைதிப்படை சத்தியராஜ் மாதிரி இத்தனை ஆண்டுகளுக்கு பின்னே ஆட்சியில் அமர்ந்த சோழகுலத்தை சார்ந்த நாகராஜ சோழன் என்று வேண்டுமானால் யாராவது கூறிக் கொள்வார்கள். யார் கண்டார்கள்.
5. நமீதாவின் 'இந்திர விழா' பார்த்துவிட்டீரா? இல்லை வேலு பிரபாகரனின் காதல் கதை? எது சூப்பர்? இல்லை ரெண்டுமே மொக்கையா?
பதில்: இரண்டையுமே பார்த்ததில்லைதான். ஆனால் நமீதாதான் பார்க்க சூப்பர். ஆனால் வேலு பிரபாகரனை அவ்வாறு யாராவது கூறவியலுமா?
6. கம்பராமாயணத்தில் உங்களுக்குப் பிடித்த பகுதிகள் எது? ஏன்? சில பாடல்களுடன் எடுத்துக் காட்டினால் நன்று.
பதில்: இதானே வாணாங்கறது. மு.மு. இஸ்மாயிலுக்கு போக வேண்டிய கேள்விகளை அவர் இல்லை எனபதால் எனக்கு அனுப்பலாமா?
7. நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண பேச்சுரை கேட்டதுண்டா (ஆடியோவில்)?
பதில்: கேட்டதில்லை.ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். தூள் என்று கூறினார்கள்.
8. குறுவை சாகுபடி செய்ய இந்த முறை பருவ மழை கைகொடுக்கவில்லையே? வெறும் சம்பா சாகுபடி மட்டும் தானா? அதுவும் வடகிழக்குப் பருவமழையில் மூழ்காமல் இருக்கவேண்டுமே? தமிழக அரசும் மத்திய உர அமைச்சரும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாக தெரியவில்லையே ? பருப்பு கிலோ ரூ.100 போல அரிசியும் ரூ.100 ஆகிவிடுமா?
பதில்: நமக்கே இது தெரிகிறபோது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? அவர்களும் கவலைப்ப்டுவார்களாக இருக்கும். ஏதாவது நல்லது செய்வார்களா என பார்க்க வேண்டியதுதான்.
9. ஈரானில் நடந்த தேர்தலில் அஹ்மதிநெஜாத் (உச்சரிப்பு சரியா?) வென்றதற்கும் திருமங்கலம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் வெற்றிகளுக்கும் வித்தியாசம் இல்லைதானே?
பதில்: பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. நம்மூரில் தேர்தல் தில்லுமுல்லு பற்றி எழுதலாம், பேசலாம். அதனால் எல்லாம் அவ்வாறு எழுதுபவர்களுக்கு பாதிப்பில்லை. ஆனால் இரானில் அவ்வாறு செய்தால், எழுதியவர் தலை தப்பிக்காது. அவ்வளவே.
10. தினமும் இரவில் என்டிடிவி, ஐபிஎன், டைம்ஸ்நவ் என ஓபி வேன்கள் மாறி மாறி பேட்டி எடுப்பதில் எந்த சானலில் யாரிடம் பேசுகிறோம் என்பதில் குழப்பத்தில் பிரணாய் ராயை அர்நாப் கோஸ்வாமி என்று பாஜகவின் ரவிஷங்கர் பிரசாத் அழைத்தாலும் பிரணாய் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொண்டுள்ளாரே?
பதில்: பலருக்கு பல முறை அம்மாதிரி அமைந்து விடுகிறது. ராஜீவ் காந்தி அவர்களே 1985 ஜனவரி 26 அன்று பேசும்போது ஒருமுறை வாய் தவறி அதை சுதந்திர தினம் என குறிப்பிட்டார். எகிப்து அதிபர் நாசர் ஒரு நாட்டிற்கு சென்ற போது (நாட்டின் பெயர் மறந்து விட்டது) எகிப்து தேசீய கீதம் ஒலிக்கப்பட்டது. எல்லாம் சரிதான், ஆனால் அந்த தேசீய கீதம் எகிப்து மன்னர் ஃபரூக் காலத்தை சேர்ந்தது. ஃபரூக் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் அந்த தேசீய கீதமும் ஒழிந்தது. அந்த தேசிய கீதத்தைத்தான் வாசித்தனர் அந்த நாட்டின் பேண்ட் குழுவினர். நாசர் வெறுமனே புன்முறுவல் பூத்தார். அவ்வளவே. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக்கூடாது.
ஒரு முக்கிய அறிவிப்பு. சாதாரணமாக கையிருப்பில் ஒரு கேள்வியையும் மிச்சம் வைக்காமல் பதிலளித்து விடுவதுதான் வழக்கம். இதை zero budgetting என்பதோடு சற்றே ஒப்பிட்டு கொள்ளலாம். அதாவது கேள்விகள் வந்தால்தான் பதிவு என்ற நிலை. கேள்விகளே வராவிட்டால் அந்த வாரத்துக்கான பதில்கள் பதிவு கிடையாது. ஒரே ஒரு முறை அம்மாதிரியும் ஆகிவிட்டிருக்கிறது. சில முறைகள் நான்கைந்து கேள்விகளே இருந்தன.
ஆனால் கடந்த சில பதிவுகளில் அவற்றின் நீளம் மிக அதிகமாக போயிற்று. சில கேள்விகள் செட் புதன் இரவுக்கெல்லாம் வர ஆரம்பித்தன. ஆகவே இம்முறை கேள்விகளை சுமார் 60-70-க்கு கட்டுப்படுத்தினேன். அடுத்த கேள்விகள் அடுத்த வாரத்தின் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன. இப்போது அங்கு 24 கேள்விகள் உள்ளன. இது உங்கள் தகவலுக்கு மட்டுமே.
ஆகவே பிழைத்து கிடந்தால் நிச்சயம் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
1 hour ago
31 comments:
//24. பொதுவாய் நேர்மை, நாணயம்-இருக்கிறதா?
பதில்: இருக்கிறது. ஏமாற்று பேர்வழிகள் தமது செயல்பாடுகளை மற்றவர் நேர்மை மற்றும் நாணயத்தை நம்பித்தான் வைத்து கொள்கின்றனர் என்பதை நான் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.//
இந்த பதில் அனுபவபூர்வமானது.
வழக்கம் போல இந்த வாரமும் கேள்வி பதில் சூப்பர்
உண்மையாக பேசுகிறீர்கள் ராகவன் ....இறைவன் உங்களை கைவிட மாட்டான்....வணக்கம்
டெம்பிளேட்டை மாத்துங்க சார்! போரடிக்குது...
அண்மையில் தொலைக்காட்சியில் பாடகர் மாணிக்க விநாயகத்தின் கலந்துரையாடல் காண நேர்ந்தது.
அவரது உருவம், குரல் எல்லாமே உங்களை ஜெயா டீவீயில் பார்த்ததை நினைவு படுத்துகிறது. அவர் உங்கள் உறவினரா ????
@Rad Madav
இல்லை. மற்றப்படி கைப்பிள்ளையின் இப்பதிவில் அவர் போட்டோ உள்ளது. http://kaipullai.blogspot.com/2009/06/blog-post_17.html
அது என்னைப் போலவா இருக்கிறது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களிடம் கேட்க கேள்வி உள்ளது , எப்படி கேட்பது? Mail id please
@பிரகாஷ்
மின்னஞ்சல் இதற்கு தேவையில்லை. எனது ஏதாவதொரு இடுகைக்கு பின்னூட்டமாக கேள்விகளை இடலாம். அவற்றை கேள்வி பதில் பகுதிக்காக எனக் குறிப்பிடவும். அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
பதில்: மனிதனிடம் மட்டும் உள்ள ஆறாவது அறிவு.//
அப்படின்னு சொல்லிகிறாங்க!
//மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை?
பதில்: மீதி ஐந்து அறிவுகள்.//
பார்த்தல்
கேட்டல்
தொடு உணர்வு
நுகர்தல்
நகருதல்
ஐந்தறிவு ஆனால் கண்ணிருந்தும் குருடனாய்,
காதிருந்தும் செவிடனாய்
சுட்டாலும் சுரணை இல்லாதவனாய்
மூக்கு செத்து போனவனாய்
எழு, நடக்க இயலாத சோம்பேறியாய் இருப்பவர்களை தயவுசெய்து இருக்கும் அறிவை ஒழுங்காக பயன்படுத்தும் மிருங்களுடன் ஒப்பிடாதீர்கள்!
நிறைய பதில்களை ரசித்தேன்.
குறிப்பாக சேமிக்காதவரின் நிலை,சிற்றின்பம்..
//இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி, வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்//
சேடிஸ்டுக்கும், மாசோயிஸ்டுக்கும் இது மாறுபடுமே!
அதை ஏன் இறைவன் அப்படி வகுத்தார்!
கணக்கு சரியா தெரியலையோ!
//குழந்தை கொடுக்க வேண்டிய கணவனை சார்ந்திராது வெறும் அரச மரத்தை சுற்றினால் குழந்தை வந்து விடுமா என்றும் அதற்கு பொருள் உண்டு என ஒரு கோஷ்டி சொல்லித் திரிகிறது.//
அதென்ன கோஷ்டி சொல்லித்திரிகிறது!
அப்ப அது உண்மையில்லையா!?
உண்மையிலே அப்போ பெண்கள் புருசனை விட்டு அரசனை தேடி சென்றார்களா?
//அதை ஏன் இறைவன் அப்படி வகுத்தார்!
கணக்கு சரியா தெரியலையோ!//
கடவுள் படைத்து விட்டு மற்றதை சுய விருப்பத்துக்கு விட்டு விடுகிறார் என்று கூறுபவர்களௌம் உண்டு. எல்லாவற்றிலும் எப்போதுமே மூக்கை நுழைப்பது அவர் வேலை இல்லை என்றும் அவர்கள் கூறுவார்கள். எனக்கு அவர்கள் சொல்வது நம்பத் தகுந்ததாகப் படுகிறது.
அவரவரே பட்டு தெளிந்தால்தான் சரியாக செயலாற்றவியலும். ஆகவேதான் தான் செய்த தவற்றை தன் பிள்ளைகளும் செய்யக் கூடாது என டென்ஷன் ஆவது பல சமயங்களில் வீண் முயற்சியாகி விடுகிறது.
ஆகவே, ஆறு மனமே ஆறு, இந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்கிறார் கவியரசு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கம்யூனிஸ்டுகள் அணுஒப்பந்தத்தில் இப்போதைய நிலை?//
முதலில் அரசு அணு ஒப்பந்தத்தின் இப்போதைய நிலையை சொல்லுதா பார்ப்போம்!
//பொதுவாய் இன்று காதலர்கள் பெருகிவிட்டார்களே?
பதில்: ஜனத்தொகை பெருக்கத்தில் தவிர்க்க முடியாத பக்க விளைவுதான் அது.//
கேள்வியை கொஞ்சம் மாத்தி கேட்டுருக்கனும்!
18 டிலிருந்து 28 வயது காதலர்கள் பெரிய விசயமில்லை!
திருமணமான பெண்கள் 40 வயதுக்கு மேல் காதல் பண்ணுவது அதுவும் இப்போ அதிகமாக அதனால் கொலைகள் நடப்பது ஏன்?ன்னு கேள்வி இருக்கனும்!
//தி.மு.க. ஆட்சி -உங்கள் விமர்சனம்?
பதில்: குடும்பக் கொள்ளை//
//ஸ்டாலின் சட்டமன்ற செயல்பாடு பற்றி?
பதில்: திருப்தியாகவே உள்ளது//
ஏன் இந்த முரணான பதிகள்!
//ஏன் இந்த முரணான பதில்கள்!//
அதுவாவது திருப்தியாக இருக்கிறது என்று சொல்ல முடிகிறதே என்ற அல்ப திருப்திதான் காரணம். மேலும் ஸ்டாலின் தன்னளவிலேயே அப்பதவியை பெறத் தகுதியானவர்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அரிசி/பருப்பு விலை?//
விவசாயம் பண்ணாதிங்க!
இருக்கும் விளை நிலங்களையும் அழிச்சிருங்க!
விலை மட்டும் அப்படியே இருக்கனும்!
ஆண்டுகணக்கில் இருக்கும் வர்த்தகம் மட்டும் கண்ணை உறுத்திகொண்டே இருக்கும்!
என்ன லாஜிகப்பா இது!
//வர்த்தக சூதாடிகளின் கைவரிசையினால் இனி என்னவாகும்?//
சூதாட்டம் என்றும் சூதாடுபவனுக்கு நட்டத்தை தான் தரும்!
ஏனய்யா நீங்கள் பணத்தை வங்கியில் சேமிக்கிறிர்கள்!
அது பணப்பதுக்கல் என்று உங்களை குற்றமா சாட்டினார்களா!?
தேவைக்கு உற்பத்தி செய்யாமல் சப்பை கட்டு கட்டுவதை என்று தான் நிறுத்துவார்களோ!
அரிசி பருப்பு விலை சம்பந்தமான பதிலில் நான் கூறியதைத்தான் நீங்களும் கூறுகிறீர்கள். நான் கூறியது, “எனக்கு தோன்றியவரை சப்ளை டிமாண்ட் நிலைதான் முக்கியம்”.
நீங்கள் கூறுவது, “விவசாயம் பண்ணாதிங்க!
இருக்கும் விளை நிலங்களையும் அழிச்சிருங்க!
விலை மட்டும் அப்படியே இருக்கணும்”!
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கடவுள் (தென்திருப்பேரை பெருமாள்) உங்கள் முன் தோன்றினால்? //
அதற்கு டோண்டுவுக்கு பைத்தியம் பிடிக்க வேண்டும்!
குறைந்த பட்சம் ஷீசோபெரினியா!
கடவுள் என்ன செத்து போன காந்தி கூட நேரில் தெரிவார்!
//ராஜராஜ சோழன் எந்த ஜாதியாக இருந்தால் என்ன? அவன் சிறந்த மன்னன் என்பது நிஜம்தானே. //
எத்தனை பேர் இப்படி எடுத்து கொள்கிறார்கள்!
கட்டபொம்மன், தீரன் சின்னமலை போன்ற மன்னர்கள் மட்டுமில்லாமல் தற்போதைய காமராஜர் வரை சாதி முத்திரை குத்தி பிரிவினையை ஏற்படுத்தும் மக்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது!
//எல்லாவற்றிலும் எப்போதுமே மூக்கை நுழைப்பது அவர் வேலை இல்லை//
அப்போ விதி என்பது கட்டுகதையா!?
எல்லாம் விதிபடி தான் நடக்கனும் என்றால் விதி என்பது ஏற்கனவே வகுத்து வைக்கப்பட்ட ஒன்று தானே!
One of my friend knows Japanese Language Translation (mostly English). Due to medical reason, he is not able to go to office. Interested in doing job from home,
Can you guide / send info. to help him get his jobs for his earning to his family?
சஹ்ரிதயன்
very nice!
/
ஆகவே பிழைத்து கிடந்தால் நிச்சயம் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?//
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க..
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க... நீ வாழ்க..
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாடுங்கள்
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்குமபோது இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போது இன்பம்
பேராசையால் வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம் மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நதியை போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலை போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
1.மீண்டும் சிக்கலில் தொலை தொடர்பு அமைச்சர் என்ற இந்த வார ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரை பற்றி?
2.இது அவருக்கு மூணாவது கண்டம்?
3.கலைஞரின் அளவுக்கதிகமான கரிசனம் இவர் மேல் , காரணம்?
4. பி.எஸ்.என்.எல் மொபையில் டெண்டர் குழ்ப்பம் தீருவது எப்போது?
5. மீடியா சப்போர்ட்டுட்ன் புதுச் சிக்கல் தயாநிதி மாறனின் கைவரிசையா?
//நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற//
.)
//நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க//
ithu double o.k
pathivulakab pithaamagar vaazhga palaandu
Post a Comment