7/20/2009

புதுக்கோட்டுக்கு ஜூட் - 6

புதுக்கோட்டுக்கு ஜூட் - 5
கிரெடிட் கார்டுகளில் எனக்கு எப்போதுமே பிடிப்பு இருந்ததில்லை. ஆகவேதான் கிரெடிட் கார்டு கொடுக்கிறேன் பேர்வழி என வரும் டெலிமார்க்கெடிங் தொலைபேசி அழைப்புகளை நிர்தாட்சண்ய்மாக மறுத்து விடுவேன். ஆகவே தனிப்பட்ட முறையில் எனக்கு பாதிப்பு இல்லையென்றாலும் இப்போது கிரெடிட் கார்ட் சம்பந்தமான கூத்துகளை பார்த்தால் கோபம்தான் வருகிறது.

இன்றைய ஹிந்துவில் (20.07.2009) 17-ஆம் பக்கத்தில் வந்த செய்திதான் எனது இப்பதிவுக்கு காரணம். Credit card users learn tough lessons என்னும் தலைப்பில் அந்த செய்தி வந்துள்ளது. அதிலிருந்து சில பாயிண்டுகளை பார்ப்போம்.

கிரெடிட் கார்ட் உபயோகிப்பவர்களில் பெரும்பாலோருக்கு திடீரென புது சங்கடம் முளைத்துள்ளது. கிரெடிட் கார்ட் அளிக்கும்போது சர்க்கரையாக பேசி குறைந்த பட்சமாக ஒரு தொகை செலுத்தினால் போதும், மற்றவற்றை பிறகு மெதுவாக செலுத்தலாம் என பூசுற்றுவார்கள். இதைத்தான் roll over option என கூறுவார்கள். அதை நம்பி செயல்படும் அசடுகள் பிறகு கந்து வட்டி ரேஞ்சுக்கு கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு கடன் லிமிட்டுகளை சொல்லாமல் கொள்ளாமல் புதுக்கோட்டுக்கு ஜூட் விடும் தோரணையில் குறைத்து விடுவ்து. லிமிட்டுக்கு மேல் கடன் இருந்தல் உபரித் தொகையை உடனே செலுத்த வேண்டுமென்பது விதி. ஆனால் இம்மாதிரி திடீரென இவர்களாக நினைத்து கொண்டு லிமிட்டை குறைத்து விட்டு, திடீரென புது உபரித் தொகையை செலுத்து என்பது அடாவடியோ அடாவடித்தானே?

இதில் என்ன கொடுமை என்றால் இன்னமும் கிரெடிட் கார்டு தருவதற்கு ஆள் பிடிக்கிறார்கள். எல்லோரும் காதில் பெரிய பூ வைத்து கொண்டிருப்பதாக எண்ணம் அவர்களுக்கு.

நான் அறிந்த சில விஷயங்கள். கிரெடிட் கார்ட் தேசீயமயமாக்கப்பட்ட வங்கியுடையதாக இருத்தல் நலம். ஐசிஐசிஐ, எசெஃப்டிசி ஆகிய வங்கிகள் தீய சக்திகள். பின்னவர்கள் நீங்கள் ரொக்கம் தந்தால் வாங்க மாட்டார்கள். செக்காகத்தான் பணம் செலுத்த வேண்டும் என்பார்கள். அந்த செக்கையும் வேண்டுமென்றே தவணை தேதிக்கு அப்புறம் மாற்றி பெனால்டி போடவும் ஏற்பாடு செய்வார்கள்.

முக்கியமாக மறக்கக் கூடாத விஷயம், கிரெடிட் கார்டு என்பது மிகக் கூர்மையான கத்தி. அதை சரியாக உபயோகிக்க வக்கில்லாதவர்கள் அதை எடுக்காமல் இருப்பதே நலம். என்னிடம் கிரெடிட் கார்டும் இல்லை, ஏடிஎம் கார்டும் இல்லை. என்ன குறைந்து விட்டேன்?

இன்னொரு முக்கிய விஷயம், வரவுக்குள் செலவை செய் அல்லது அதிக செலவு வேண்டுமானால் வரவை அதிகமாக்கு. முன்னெல்லாம் செட்டியார் கடைக்கு சென்று கணக்கு எழுதுவார்கள். இப்போது எப்படியோ நிலைமை என்பது தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

Arun Kumar said...

க்ரெடிட் கார்டு வைத்து கொள்வது அப்படி ஒன்றும் அபாயகரமான மேட்டர் இல்லை..

பேப்பர் கரன்சி என்ற நிலை அழிந்து wired currency என்ற நிலை வர இதை போல credit and debit cardகள் மிக மிக அவசியம்.

கடன் அட்டையால் பாதிப்பு அடைந்தவர்கள் அதை எப்படி உபயோகபடுத்துவது என்று தெரியாமல் பயன்படுத்துவதால் தான்.

மற்றபடி வெளிநாடு உள்நாடு பயணம், இணையதளத்தில் ரெயில் பஸ் டிக்கேட் முன் பதிவு ஏன் சினிமா டிக்கேட் பதிவு கூட இந்த கார்டு கள் இருந்தால் மிக மிக எளிது.

நீங்களே யோசித்து பாருங்கள் wired cardகள் ஏதும் உங்களிடம் இல்லை அதே நேரத்தில் இணைய இணைப்பு இருக்கிறது.

ரயிலில் ஒரு டிக்கேட் முன் பதிவு செய்ய நீங்கள் வெகுதூரம் அவர்கள் அலுவலகம் சென்று முன் பதிவு செய்ய வேண்டும்.

அதற்க்கான நேரம் காலம் செலவு இதேல்லாம் உபரி வேறு..

இணைய இணைப்பு இருந்தும் உங்களால் எளிதாக முன்பதிவு செய்ய இயலாமல் உள்ளது,.

சரவணன் said...

கிரெடிட் கார்டு தேவையில்லை. டெபிட் கார்டு வசதியாக இருப்பதை மறுக்க முடியாது. இதிலும் ஒரு சிக்கல் எனக்கு ஏற்பட்டுள்ளது. ரூ. 495 க்கு ஒரு புத்தகம் வாங்கினேன். டெபிட் கார்டில் பணம் கொடுத்தேன். பாஸ் புக் பதிவில் பார்த்தால் இரண்டு முறை டெபிட் ஆகியுள்ளது! கடையி்ல் கேட்டால் `எங்களுக்கு ஒரு முறைதான் கிரெடிட் ஆகியுள்ளது` என்கிறார்கள்! என்னுடைய வங்கியில் (பாங்க் ஆஃப் இந்தியா) கேட்டதில் ஒரு படிவத்தை நிரப்பி வாங்கிக்கொண்டதோடு சரி. நுகர்வோர் நீதிமன்றம் போகாமல் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆக்ஸிஸ் வங்கியின் ஆன் லைன் சேவையில் இதுவரை எனக்கு எந்தப்பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

dondu(#11168674346665545885) said...

நங்கநல்லூரிலேயே என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் ஏர்டெல்லின் அவுட்லெட் உள்ளது. அங்கு பயண சீட்டுகள் ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. சில நிமிடங்களே எடுக்கும்.

அதே சமயம் நீங்கள் சொல்வதும் சரியான பாயிண்டுதான். அப்படியே நான் கிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ வைத்து கொண்டாலும் ரொம்பவுமே ஸ்பேரிங்காக யூஸ் செய்ய வேண்டியிருக்கும். தவணை தேதிக்குள் முழு தொகையையும் கட்டுதல் நலம். ரோ ஓவர் செய்யவே கூடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாமக்கல் சிபி said...

டெபிட் கார்டு வைத்துக் கொள்ளலாம்! அதில் இருப்புக்கு மேல் செலவு செய்ய வாய்ப்பே இல்லை! அதையும் கடைகளில் கார்டாக கொடுக்காமல் அருகில் ஏ.டி.எம் இருப்பின் பணமாக எடுத்துச் செலுத்திவிடுதல் நலம்!

மற்றபடி கிரடிட் கார்டுகள் என்பதை தொல்லைதான் என்பதை மறுக்க முடியாது!

ஜாம்பஜார் ஜக்கு said...

// எல்லோரும் காதில் பெரிய பூ வைத்து கொண்டிருப்பதாக எண்ணம் அவர்களுக்கு.//

தலீவா, கிரெடிட் கார்ட்-ஐப் பற்றி சுருக்கமாய் சொல்லணும்னா, "சவுகரியத்துக்கு யூஸ் பண்ணு, கடனுக்கு யூஸ் பண்ணாதே". அம்புட்டுதேன்! (Use for convenience not for credit!). சொம்மா லிமிட்டுதான் கீதேன்னு கார்ட வீசினா காதுல பூ தான் !

//என்னிடம் கிரெடிட் கார்டும் இல்லை, ஏடிஎம் கார்டும் இல்லை. என்ன குறைந்து விட்டேன்?//

இதெல்லாம் கொஞ்சம் ஓவர், வாத்யார்! அப்பாலிக்கா செக் புக்கும் இல்ல பர்சும் இல்லேன்னு சொல்லிடுவீங்க போல கீதே! :-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Unknown said...

எந்த விஷயத்திலும் நல்லது கெட்டது உண்டு.நாம் அதை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் விஷயம்.

கிரெடிட கார்டு இப்போது ஒரு necessary evil ஆகி விட்டது. எனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கிறது.ரொம்ப skilled ஆகப் பயன்படுத்துகிறேன்.

பறக்காவெட்டித்தனத்துடன் உபயோகப்படுத்துவதில்லை.

நம்ம ஊரில் அதன் பளபளப்பை பார்த்தவுடன் பறக்காவெட்டித்தனம் வந்து கண்டமேனிக்கு வாங்கிவிட்டு முழிப்பது.

இது மகா தவறு.


//லிமிட்டை குறைத்து விட்டு, திடீரென புது உபரித் தொகையை செலுத்து என்பது அடாவடியோ அடாவடித்தானே?//

ரொம்ப சரி.

//பின்னவர்கள் நீங்கள் ரொக்கம் தந்தால் வாங்க மாட்டார்கள். செக்காகத்தான் பணம் செலுத்த வேண்டும் என்பார்கள்.//

ஏனென்றால் கடைசி தேதியில் பாங்கில் போய் முண்டியடித்துக்
கொண்டு கூட்டமாக நின்று கட்டுகிறார்கள்.பாங்கின் மற்ற கவுண்டர்கள் பாதிக்கப்படுகின்றன.
மார்வாடிகள் கடைசி நாள் வரை பணத்தை ரொட்டோஷனுக்கு விட்டு
கடைசியில் கட்டுவார்கள்.

Private banks want to avoid maximum number of customer footprints in their premises.They are technology driven.
They ought to be!

இதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

sriram said...

ராகவன்ஜி
credit card கண்டிப்பாக தீ போன்றது, வெளிச்சமும் பெறலாம், வீட்டையும் கொளுத்தலாம். நான் 11-12 வருடங்களாக உபயோகித்து வருகிறேன், இதுவரை ஒரு பைசா வட்டி செலுத்தியது இல்லை. revolving credit உபயோகித்தவர்களில் மீண்டவர் ஒரு சிலரே. அது ஒரு சுழல் போன்றது. மாட்டிக்கொண்டால் மீள்வது கடினம். நான் இரண்டு விதிமுறைகள் வைத்துள்ளேன் - இந்த மாதம் வாங்கியவற்றிற்கு அடுத்த மாதம் பணம் கட்டிவிடுவேன் (கட்டக்கூடிய அளவிற்கே வாங்குவேன்) மற்றும் cc லிருந்து பணம் எடுப்பதில்லை (as a matter of fact, I always destroy the PIN comes along with CC to withdraw cash), CC இல் பல நன்மைகள் உள்ளன, 1% - 5% Cash Back கிடைக்கிறது. பணம் எடுத்து செல்லாமல் Risk குறைக்க முடிகிறது, Online Shopping செய்ய முடியும் என்று பல நன்மைகள்.
Prudent spending is the Key, I am sure someone like you can easily handle this Devil - Angel combination. I suggest you try that once and you will agree with me.
Disclaimer : I have friend who got into deep trouble with revolving credit and I saw a TV show on Vijay TV as how people are so foolish in spending and blaming the banks for using all methods to recover THEIR MONEY. So, No need to be afraid of a CC but one needs to be cautious.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

வால்பையன் said...

பிற்காலத்தில் பேப்பர் பணம் மறைந்து பிளாஸ்டிக் அட்டை மட்டும் தான் இருக்கும்!

சில மாற்றங்கள் தவிர்க்க முடியாதது!

Baski said...

Debit Card Romba Avasiyum,Credit Card Avar Avar thevai Poruthu. Alavu therinthu Payan Padithinal kurai ondrum illai.

Online Transaction Pannavuthal Neriaithiyum, Allachialum Tavirkirathu.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒட்டுமொத்தமாக, ஒரு விஷயத்தை அல்லது குறிப்பிட்ட ஒரு வங்கியைத் தீயது என்றோ, நல்லது என்றோ தீர்ப்பெழுதிவிடுவது அவ்வளவு சரியாகப் படவில்லை. கடன் அட்டைகளை உபயோகிக்கும் விதத்தில், நமக்கும் கொஞ்சம் தெளிவு அவசியம். அது இல்லாமல், சிக்கிக் கொண்ட பிறகு குறை சொல்வது அசட்டுத்தனம். ஒரு திட்டமிட்ட rotation இற்கு தயாராக இல்லாதவர்களோ, தங்களுடைய வரவு-செலவைத்திட்டமிட முடியாதவர்களோ, கடன் அட்டையைத் தவிர்த்து விடுவது உத்தமம். துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்த மாதிரி நபர்களே, இதில் சிக்கிக் கொள்கிறார்கள்.

நானும் தனிப்பட்ட முறையில் கடன் அட்டைகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லாதவனாகத் தான் இருந்தேன். எனக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நினைத்து நினைத்து இவ்வளவு கட்டு என்று டிமாண்ட் செய்த ஒரு நெருக்கடியான நிலையில் எப்படி கை கொடுத்தது என்பதை உணர்ந்து கொண்டேன். என்னுடைய பில்லைத் தவணை முறையில் கட்டுவதில்லை. உரிய தேதியில் மொத்ததொகையையும் ஒரே தவணையில் கட்டிவிடுவதால், எந்தப் பிரச்சினையும் இதுவரை வந்ததில்லை.

பிரச்சினையின் ஆணிவேரும், தீர்வும் நம்மிடமே இருக்கிறது!

இராகவன் நைஜிரியா said...

// முக்கியமாக மறக்கக் கூடாத விஷயம், கிரெடிட் கார்டு என்பது மிகக் கூர்மையான கத்தி. அதை சரியாக உபயோகிக்க வக்கில்லாதவர்கள் அதை எடுக்காமல் இருப்பதே நலம். //

சரியாகச் சொன்னீர்கள். சரியாக உபயோகித்தால் மிகச் சௌகர்யமான விஷயம்.

Beski said...

பஸ் டிக்கட், ட்ரெயின் டிக்கட், சினிமா டிக்கட் என பெரும்பாலான டிக்கட்டுகளை ஆன்லைனில்தான் போடுகிறேன். ஒரு சில ஆஃபர் பர்ச்சேசும் செய்வதுண்டு. இங்கெல்லாம் கிரிடிட் கார்டு அவசியமாகிப் போகிறது.

ஐசிஐசிஐ தான் உபயோகிக்கிறேன். இது வரை எந்த பிரச்சனையும் இல்லை. பல தளங்களில் டெபிட் கார்டு மூலம் பேமெண்ட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது, ஆனால் அனைத்து இடங்களிலும் வரவில்லை. அப்படி வந்தால் கிரிடிட் கார்டு உபயோகிப்பதையே நான் நிறுத்திவிடுவேன்.

இவ்வாறு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே உபயோகிப்பது நல்லது.

Vidhoosh said...

எப்படியும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை நாம் மாத செலவுக்கு என்று ஒதுக்கி இருப்போமே? கிரெடிட் கார்ட் மூலம் எல்லாம் வாங்கி விட்டு டியு டேட்டுக்கு ஐந்து-ஆறு நாள் முன்னாடி மொத்த outstanding amount-க்கும் ஒரே செக்காக போட்டு விட்டால், கவலையே இல்லை.

வரை முறை இல்லாமல் செலவழிப்பவர்கள் கஷ்டப்பட கிரெடிட் கார்டு மட்டும் காரணம் இல்லை. அது இல்லாவிட்டாலும், அவர்கள் கடன் வாங்கியாவது செலவழித்துக் கொண்டே இருப்பார்கள்.

ராமகுமரன் said...

கிரெடிட் கார்ட் உபயோகிப்பது சிறிது அபாயம் தான். ஆனால் ஏடிம் கார்ட் வைத்துக்கொள்ளுங்கள். ஆத்திர அவசரதிற்கு பணம் எடுக்க, பிக்பாக்கட் பயமின்றி வெளியில் போக, ஆன்லைன் வர்த்தகம் புரிய உதவியாக இருக்கும்.

நன்றி,
ராம்குமரன்

Baski said...

ஹ்ம்ம், எனக்கும் சில கசப்பான அனுபவங்கள் உண்டு.

நமது இந்திய அரசாங்கம் இதில் நிறைய சட்ட திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

இங்கு (அமெரிக்கா) நாம் ஒரு ட்ரான்ஸ்சாக்சனை (dispute) மறுக்க முடியும்.
வங்கி உங்களுக்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்கும். இதை நீங்களே ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.

ஆனால் இந்தியாவில் இந்த வசதி இல்லை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது