ஒரு முறை துர்வாச முனிவர் கைலாசத்துக்கு சென்றார். வாசலில் இருந்த விநாயக பெருமானை பார்க்காமல் விடுவிடுவென்று சென்றார். அவரை வைத்து தமாஷ் பண்ண எண்ணிய கணபதி தனது துதிக்கையை அவர் முதுகை நோக்கி ஃபூ என ஊத, துர்வாசர் நான்கைந்து குட்டிக்கரணங்கள் அடித்து பதறி விழுந்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த பூத கணங்கள் கலகலவென்று சிரித்தன.
எழுந்து நின்ற துர்வாசர் தனது ஞானதிருஷ்டியை பயன்படுத்தி நடந்ததை அறிந்து கொண்டார். கோபம் கொண்டார். விநாயகரை பார்த்து கண்களில் நெருப்புப் பொறிகள் பறக்க பேசலானார், “நீர் பூலோகத்தில் நாற்சந்திகளிலும், குளத்தங்கரை மரத்தடிகளிலும் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கொண்டு இருப்பீராக. உமக்கு தேங்காய் உடைப்பவர்கள், தோப்புக்கரணம் போடும் பக்தர்கள் ஆகியோர் படிப்படியாக குறைந்து போகக் கடவர்” என்று சபிக்கவும் செய்தார். தம்மைப் பார்த்து சிரித்த அத்தனை பூதகணங்களும் பூலோகத்தில் நாத்திகர்களாக பிறப்பார்கள் என்றும் அவர் கூற, பூதகணங்கள் பதறிப் போயின. அவர் காலில் விழுந்து, “முனிபுவங்கரே, உமக்கு மூக்குக்கு மேலே கோபம் என்பதை அறிந்தும் நாங்கள் சிரித்தது தவறுதான். மன்னித்து எங்களுக்கு சாபவிமோசனம் தர வேண்டும் என வேண்டின.
விநாயகரும் “துர்வாசரே என்னை இப்படி சபித்து விட்டீர்களே. உமக்கு பசி எடுத்து கோபம் அதிகரிக்கும்போது நானல்லவா உம்மை அழைத்து எனக்கு கிடைக்கும் பிரசாதங்களை உண்ணக் கொடுப்பேன். இப்போது எனக்கே பிரசாதம் இல்லையென்றால் உமக்கு எங்கிருந்து உணவு வரும்”? என கேட்டார். துர்வாசரும் தான் அவசரப்பட்டு சபித்ததை உணர்ந்து சுதாரித்து கொண்டார். “நாத்திகர்களாக பிறக்கும் பூத கணங்கள் ஒரு தருணத்தில் மண்ணால் செய்யப்பட்ட உமது சிலைகளை உடைப்பார்கள். அதைப் பார்த்து மனம் கொதிக்கும் ஆத்திகர்கள் எல்லா இடங்களிலும் உங்களுக்காக கோவில் எழுப்புவார்கள். ஆத்திகம் இன்னும் தழைக்கும். அதனால் உங்களுக்கு உடைக்கப்படும் தேங்காய்களும் பிரசாதங்களும் அதிகரிக்கும். அப்போது என்னை மறந்து விடாதீர்கள்” என சாப விமோசனத்தை கூறினார்.
இது உண்மையிலேயே கலியுக விஜய ஆண்டில் வைகாசி மாதம் நடந்தது. (மே 27, 1953)
(நன்றி: பொன்னியின் புதல்வர், பக்கம் 605-606)
பிள்ளையார் பொம்மை உடைப்புகளை செய்யுமாறு தனது தொண்டர்களுக்கு கட்டளையிட்ட பெரியார் அவர்களிடம் சில தொண்டர்கள் வந்து, தங்கள் வீட்டு பூஜையறையிலிருந்த பிள்ளையாரை உடைப்பதற்காக எடுக்க முயன்ற போது தத்தம் வீட்டு பெண்மணிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிப்பதாகக் கூறினர். அவர்களிடம் பெரியார் “உங்களை யார் வீட்டிலிருந்த பிள்ளையார் பொம்மைகளை எடுக்கச் சொன்னது? கடையில் நாலணா கொடுத்தால் பிள்ளையார் பொம்மை கிடைக்கிறது. அதை வாங்கிக் கொண்டு போய் உடையுங்கள்” என்றாராம். மேலும் பெரியார் அவர்களே அவர்கள் குடும்பத்தினர் வணங்கி, நிர்வகித்து வந்த பிள்ளையார் கோவிலின் தருமகர்த்தாவாகவும் இருந்து நல்ல பணி ஆற்றியதாகவும் படித்துள்ளேன்.
கல்கி கிண்டலுக்காக எழுதினாலும் உண்மையில் பெரியாரின் பிள்ளையார் உடைப்பின் எதிர்வினையாய் முக்குக்கு முக்கு பிள்ளையார் கோவில், ராமாயண எதிர்ப்பு பிரசாரத்தால் தெருவுக்கு தெரு ராமாயண பிரவசனங்கள் ஆகியவை நடந்தன.
நாத்திகர்களின் தலைவர் என்னும் முறையிலும், கல்கியின் கதையை வைத்து பார்க்கும் போதும், பெரியார் உண்மையிலேயே பிள்ளையாரின் அருளுக்குரியவர் என்பது வெள்ளிடை மலை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
18 hours ago
19 comments:
\\பெரியார் உண்மையிலேயே பிள்ளையாரின் அருளுக்குரியவர் என்பது வெள்ளிடை மலை//
மேலும் இவர் தன் வீட்டில் வெள்ளைப் பிள்ளையாரை வழிபட்டதாகவும் பேச்சுண்டு. கேடையம் என்ற புரட்சிகர இதழில் சமீபத்தில் 1990 (அ) 91 ல் படித்த ஞாபகம். திரு. வினவு அவர்கள் மேற்கண்ட இதழ்களை ஆராய்ந்து விடையளிக்கக் கோரிக்கை வைக்கிறேன்.
அன்புடன் அனானி.
பெரியார் மீது வேறு குறை சொல்ல முடியாதவர்கள், அவர் பெயரை கெடுக்க செய்த சதிதான் இந்த வெள்ளிப்பிள்ளையார் என்றும் பேச்சுண்டு. மேலும் ராமாயண எதிர்ப்பு பிரச்சாரத்தால் மக்கள் அவரை எதிர்த்தார்கள் என்பதை விட, ராமனை செருப்பால் அடித்த பிறகும் அவரது ஆதரவாளருக்கு வாக்களித்தார்கள்.பெரியார் துவக்கிய எதுவும் தோற்றதில்லை என்பது எனது கருத்து.
பெருமாள் கோவில்களில் பெருமாளை பார்ப்பது போல சிலை வைத்தால் அது ஆள்வார், பெருமாளுக்கு முதுகு காட்டுவது போல இருக்கும் சிலைகள் துவாரபாலகர்கள்னு சொல்வாங்க.
அப்போ ஸ்ரீரங்கத்துல பெரியாரை ஆள்வார் போல நிக்க வச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே. அது உண்மையா?
மணவாள நாயுடு
\\அப்போ ஸ்ரீரங்கத்துல பெரியாரை ஆள்வார் போல நிக்க வச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே. அது உண்மையா?//
இவர் எவ்வளவுக்கெவ்வளவு கடவுளை எதிர்த்தாரோ (பொதுவில் மட்டும்) அதையும் விடப் பல மடங்கு இவரின் சிலைகளை பெரும்பாலும் கோயில் அருகே வைத்து பரிகாரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவரின் சிஷ்யகோடிகள் என்று சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவுக் *ஞ்சுகள். வரும் காலங்களில் மானமிகு ஐயாவின் ஆசைப்படி 108 சிலைகள் வைக்கும் போது அதற்கேற்றார்போல
ஓம் ஸ்ரீ ராமசாமியாய நமஹ
ஓம் ஸ்ரீ நாயக்கராய நமஹ
ஓம் ஸ்ரீ ஈ வெ ராய நமஹ
ஓம் ஸ்ரீ (ஈர) வெங்காய நமஹ
என்று ரூம் போட்டு யோசித்து ஸ்லோகங்களும் எழுதுவார்கள் நம் *ஞ்சுகள்.
அன்புடன் அனானி
:) கும்மிகள் குவியட்டும். ஸ்டார்ட் மியூசிக்.
-வித்யா
//தம்மைப் பார்த்து சிரித்த அத்தனை பூதகணங்களும் பூலோகத்தில் நாத்திகர்களாக பிறப்பார்கள் //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//கல்கி கிண்டலுக்காக எழுதினாலும் உண்மையில் பெரியாரின் பிள்ளையார் உடைப்பின் எதிர்வினையாய் முக்குக்கு முக்கு பிள்ளையார் கோவில், ராமாயண எதிர்ப்பு பிரசாரத்தால் தெருவுக்கு தெரு ராமாயண பிரவசனங்கள் ஆகியவை நடந்தன. //
டோண்டு - போலி டோண்டு கதை கணக்கா இருக்கு
/Blogger Vidhoosh said...
:) கும்மிகள் குவியட்டும். ஸ்டார்ட் மியூசிக்./
சூடான பகோடா ரெடி! பகோடா பார்சல் கட்டப் பேப்பரும் ரெடி!
வாங்க! வாங்க! கும்மியடித்துக் கொண்டே பகோடா சாப்பிடலாம்!
//
பெரியார் துவக்கிய எதுவும் தோற்றதில்லை என்பது எனது கருத்து.
//
சரியான காமடி.
காலங்காத்தாலயே ஆரம்பிச்ச்சிட்டீங்களா ?
//
இந்து மதாசார ஆபாசதர்சினி நூல் - ஈ.வே.ரா, போன்ற பகுத்தறிவாளர்களின் அறிமுக உரையுடன் வெளியிடப் பட்ட நூல்.
800 செய்யுள்களில் அமைந்த இந்நூல்
சமீபத்தில் 127 ஆண்டுகளுக்கு முன்
(1882 ஆம் ஆண்டு)
பதிப்பிக்கப்பட்டது.
//
சுட்டி இங்கே
http://www.tamilcc.org/thamizham/ebooks/5/451/451.pdf
மேலும் பல பழைய பத்திரிகைகளும்
இலவசம்!
ரசித்தேன்! ;)
தந்தை பெரியாரின் செயல்களுக்கு மாசு கற்பிக்கும் பின்னூட்டங்களில் ஆதிக்க சக்திகளின் ஆணவம் தெரிகிறது.
கோட்டை கொத்தளங்கள் இடிந்த பிறகும் மீண்டும் வாலாட்டம் போடும் கூட்டத்துக்கு தகுந்த பாடம் கற்பிக்க புறப்படு இனமான சிங்கங்களே.
கருஞ் சட்டைப் படையே மீண்டும் உனக்கு வேலை வந்து விட்டது
பகுதறிவுப் பிரச்சாரம் தொடங்கு.
மூட நம்பிக்கையின் முகத்திரையை கிழித்து ஏறி.
நடப்பது நம்மவர் ஆட்சி.
சாமான்யனின் கண்ணீர் துடைக்கும் கருணைக்கடல் கலைஞரின் ஆதரவும் கழகத்தின் சேனையும் துணையிருக்கும்.
பாம்பு படமெடுக்க பார்க்குது.
பகுத்தறிவுப் பகலவன் பாம்பு பற்றி அன்று சொன்னதை கனவிலும் மறவதே
that link was --
http://www.tamilcc.org/thamizham/ebooks/5/451/451.pdf
for Menakettu...
பகுத்தறிவுக்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
அவர் சத்தமில்லாமல் மோதிரம் வாங்குவதும், ஜாதகம் பார்பதுமாக தானே இருக்கிறார்!
முதலில் மஞ்சல் துண்டை வீசி எறிந்துவிட்டு பகுத்தறிவு பேச வாருங்கள்!
அப்படியே பேசினாலும் நீங்கள் எந்த காலத்திலும் கடவுளுக்கும், மதத்துக்கும் எதிராக பேசப்போவதில்லை, பார்ப்பானை சொறிந்து விடுவதிலேயே நேரம் சரியாக இருக்கும், இந்த லட்சணத்தில் நாடு எங்க உருப்பட!
\\பார்ப்பானை சொறிந்து விடுவதிலேயே//
வால் பையன் சொல்றதப் பார்த்தா பார்ப்பனர்கள் எல்லோரும் குளிக்காமல் அரிப்பெடுத்து அலைவது போல் இருக்கிறதே? இருக்கும் மூன்று சதவீதத்தை சொறிய ஆரம்பித்தால் விரல்கள் எல்லாம் தேய்ந்து போய் குட்டம் (குஷ்டம்) வந்தது போல் ஆகிவிடும், ஜாக்கிரதை!
அன்புடன் அனானி
அன்புடன் அனானி!
இது கொஞ்சம் வித்தியாசமான கேஸ்!
தனக்கு அரிக்கும்போது மற்றவர்களுக்கு சொறிந்து விடுவது மாதிரி, இதே வியாதி சில பார்பனர்களுக்கும் உண்டு!,
அவர்களுக்கு அரிக்கும் போது பெரியாரையும் அவரது செயலையும் சொறிவார்கள்,
பெரியார் தொண்டர்கள் திரும்ப சொறிவார்கள் இப்படி மாத்தி மாத்தி!
\அவர்களுக்கு அரிக்கும் போது பெரியாரையும் அவரது செயலையும் சொறிவார்கள்,
பெரியார் தொண்டர்கள் திரும்ப சொறிவார்கள் இப்படி மாத்தி மாத்தி!//
வால் பையன் சார்!
விட்டா சொறிஞ்சு விடுறதுக்குன்னே தனி அமைச்சகம் வந்துரும் போல இருக்கே. இப்படி மாத்தி மாத்தி சொறிஞ்சு விட்டுட்டே இருந்தா தமிழ் நாட்டோட தலைவிதிய நினைச்சுப் பாருங்க. விவசாயிக்கு எலிக்கறி கூடக் கிடைக்காது. ஆளாளுக்கு மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு திருட்டு ரயில் ஏற ஆரம்பித்து விடுவார்கள். மஞ்சள் பைக்கு டிமாண்ட் வரும்; ரயில் கட்டணம் அதிகமாகும். இதெல்லாம் தேவையா?
அன்புடன் அனானி
பிள்ளையாரையும் துருவாசரையும் வைத்து ஈ.வெ.ரா வை குறிவைத்து சொன்ன கதையை உல்டா பண்ணி திலகருக்கு சாத்தியிருக்கிறார் கோவி. கண்ணன் என்ற பெருமகனார். அந்தக் கருமத்தைப் படித்துத் தொலைத்தீர்களா ?
சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என்றவர் எங்கே, சுதந்திரத்தை எதிர்த்து வெள்ளையன் ஆட்சியே சிறந்த ஆட்சி என்று சொன்ன மிசனரிக் கைக்கூலி ஈ.வெ.ரா எங்கே.
இப்படி ஞான சூனியமாக இருக்கும் இவருக்கெல்லாம் வலைப்பதிவு ஆரம்பித்து எழுதும் சுதந்திரத்திற்கு தான் திலகர் போரிட்டார். அதை ஈ.வெங்காய. ராமசாமி எதிர்த்தார்.
@வஜ்ரா
:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment