கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
எம். கண்ணன்
1. ஆவணி அவிட்டம் வீட்டிலேயாவா? இல்லை உறவினர்கள் / நண்பர்களுடன் கூடி கோவில் அல்லது மண்டபத்திலா?
பதில்: வீட்டில்தான்.
2. காயத்ரீ ஜபத்தினன்று முழுவதுமாக 1008 பண்ணுவீரா இல்லை 108 தானா?
பதில்: 108
3. வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என குழந்தைகளுக்குச் சொல்வார்கள். இது நிஜமா? ஏதேனும் ஆய்வினால் கண்டறியப்பட்டிருக்கிறதா?
பதில்: வெண்டைக்காயில் கீழ்க்கண்டவை உள்ளன என்று இங்கு கூறுகிறார்கள்.
It is low in Sodium, Saturated Fat and Cholesterol, thus, an ideal diet for human consumption. It is high in Dietary Fiber, Vitamin A, Vitamin C, Vitamin K, thiamin, Vitamin B6, Folate, Calcium, Magnesium, Phosphorus, Potassium, Manganese, Protein, Riboflavin, Niacin, Iron, Zinc and Copper.
என் தமக்கைக்கு ஃபோன் செய்து கேட்டேன். அவர் National Institute of Nutritional-ல் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். வெண்டைக்காயில் உள்ள ஃபாஸ்பரஸ் மூளைக்கு நல்லது என அவர் கூறினார். அதை சமைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எல்லா பச்சை காய்கறிகளையும் போலவே இதுவும் அதன் சத்துக்களை தவறான சமையலால் இழக்கும் அபாயம் உண்டு.
4. சன் டிவியின் ஆரம்ப வருடங்களில் ஞாயிறு மாலை 4 அல்லது 4.30 மணிக்கு ஒரு சமையல் நிகழ்ச்சி வருமே? (பெயர் மறந்துவிட்டது) அந்த நிகழ்ச்சியின் சிடி/டிவிடி கிடைக்குமா?
பதில்: சன் டிவியின் ஆரம்பம் எண்பதுகளில் என நினைக்கிறேன். அப்போது தில்லியில் இருந்தோம். கேபிள் சேனல் எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் கிடையாது. ஆகவே நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி பற்றி ஒன்றும் தெரியாது. (பிறகு நன்கு தேடி பார்த்ததில் சன் டி.வி. 1992-ல் தான் வந்தது என அறிந்தேன். தவறை சுட்டிக்காட்டிய அருணாசலம் அவர்களுக்கு நன்றி. எங்கள் வீட்டுக்கு கேபிள் 1994-ல்தான் வந்தது).
5. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை விளம்பரத்தில் ஸ்ரீதேவியின் மூப்படைந்த முகத்தினைப் பார்த்தவுடன் உங்களுக்கு எந்தப் படத்து இளமையான ஸ்ரீதேவி ஞாபகம் வந்து அங்கலாய்க்க வைக்கும்? (யாரிடமோ தேங்க்ஸ் சொல்வது போல முகத்தை ஆட்டுகிறாரே - அதற்கான ஜாலி டயலாக் ஒண்ணு எழுதுங்களேன்)
பதில்: இந்த விளம்பரத்தையா கூறுகிறீர்கள்? ஸ்ரீதேவியை குழந்தை நட்சத்திர காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதுவும் மூக்கு ஆப்பரேஷனுக்கு முந்தைய ஸ்ரீதேவிதான் எனக்கு பிடிக்கும். நீங்கள் சொல்வது போல அவர் யாருக்கும் தாங்ஸ் சொல்வது போல எனக்கு தோன்றவில்லையே. அல்லது வேறு விளம்பரத்தை பார்த்தீர்களா?
6. எந்த ஜோடியின் காதல் காட்சிகள் (திரையில்) டாப்? ஏன்? சிவாஜி - பத்மினி, சிவாஜி - கே.ஆர்.விஜயா, சிவாஜி - ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் - லதா, எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி? எந்தப் படங்களில் இவர்களது காதல் காட்சிகளை மிகவும் ரசித்தீர்கள்?
பதில்: எனக்கு பிடித்த ஒரு முக்கிய ஜோடியை விட்டு விட்டீர்களே. அதுதான் ஜெமினி சாவித்திரி. எம்.ஜி.ஆர். சரோஜாதேவி ஜோடியும் பிடிக்கும். அவர்களது பிடித்த காதல் காட்சிகள் பணக்கார குடும்பம் மற்றும் படகோட்டி.
7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு தென்னாடு என ஏன் சொல்லப்படுகிறது? இதன் விரிவான அர்த்தம் என்ன?
பதில்: தென்னிந்தியாவின் ஃபேவரைட் கடவுள் என்னும் பொருளில்தான் அவ்வாறு கூறுகிறார்கள்.
8. ஹமாம் சோப்பின் 'என் பெண்ணுக்கு தன்னம்பிக்கை போயிடும்' என்கிற அபத்தமான விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அதென்ன நலங்குமாவு சோப்?? நலங்குமாவு என இதற்குமுன் கேள்விப்பட்டதே இல்லையே? சிந்தால், லைஃப்பாய், ஹமாம், ரெக்சோனா, லக்ஸ், சந்தூர், சந்திரிகா, மெடிமிக்ஸ் இவையே அதிகம் விளம்பரம் செய்யப்படும் சோப்புகளா? எது பெட்டர்?
பதில்: ஹமாம் விளம்பரம் பற்றி பதிவே போட்டுள்ளேனே. நலங்குமாவு என்றால் எனக்கும் என்ன என்று தெரியாது. எனக்கு பிடித்த சோப் நீக்கோ சோப்தான். அதனால்தான் எனக்கு டி.வி.செட் பரிசாகக் கிடைத்தது.
9. லக்கிலுக்கின் சைபர் கிரைம் தொடர் குமுதம் ரிப்போர்ட்டரில் படிக்கிறீர்களா? ரிப்போர்ட்டர் சேல்ஸ் அதிகமாமே? விகடனும் போட்டியாக நிருபரின் தொடர் ஒன்று வெளியிடுகிறதே? அடுத்து என்ன 'ஒரு நடிகையின் கதை' மீள் தொடராக வருமா?
பதில்: படிக்கிறேன். நன்றாக உள்ளது. சைபர் கிரைம் என்பது பெரிய சமுத்திரம் மாதிரி. எழுத நிறைய விஷயங்கள் உண்டு. சேல்ஸ் நிச்சயம். நிருபரின் கதை வெறும் கிசுகிசுவாக போய் விடக்கூடாது. அப்படியானால் விகடனின் வீழ்ச்சி தவிர்க்க இயலாது.
10. அதிகம் சர்குலேஷன் உள்ள ஆங்கில பத்திரிக்கைகளே ரூ 3 அல்லது 3.50 ரூ 4 என்றெல்லாம் விற்கையில், தமிழ் தினசரிகள் (தினகரன் ரூ.2 நீங்கலாக) - எப்படி அதிக விலை வைத்து விற்கிறார்கள் ? (எ.கா: தினமலர், தினத்தந்தி) எப்படி ரூ.3 அல்லது 3.50 விலையை குறைக்காமலும் சர்குலேஷனை மெயிண்டெயின் பண்ணுகிறார்கள்?
பதில்: பக்க எண்களையும் விலையையும் வைத்து பார்த்தால் தமிழ் பத்திரிகைகள் காஸ்ட்லிதான். ஆனால் ஆங்கில பத்திரிகையின் வீச்சு படித்தவர்களிடம் அதிகம். ஆகவே அவர்களால் economy of scale-ன் பலனை பெற இயலுகிறது.
செழியன்
1. ஹிந்து ராம், தினமணி வைத்தியநாதன் -பத்திரிக்கையாளர் என்ற பார்வையில் ஒரு ஒப்பீடு?
பதில்: தினமணி எல்லாம் படிப்பதில்லை. ஆகவே உங்களது இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
2. ஜெமினி கனேஷ்,கமல் இவர்கள் பார்வையில் பிராமணீயம், பிராமண தோஷம், ஆவணி அவிட்டம் பூணூல் பற்றிய கண்ணோட்டம், பெரியார் கொள்கை பற்றிய விமர்சனம்?
பதில்: கமல் பூணூலை ஏற்கனவேயே துறந்தவர். ஜெமினி கணேசனின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் என்ன என்பது தெரியாது. ஆனால் பெரியாருக்கு பார்ப்பனரை பிடிக்காது என்பது த்ரியும். ஆகவே பூணூலையும் பிடிக்காது.
3. கலப்பு திருமணங்களில் தலித்தும் பிராமண சமூகம் மட்டும் பெரும் அளவில் என்ன காரணம்?
பதில்: இது பற்றி ஏதேனும் புள்ளிவிவரங்கள் இருப்பதாகத் தெரியவில்லையே.
4. தலித்,பிராமணர் ஒற்றுமை தமிழ் நாட்டில் ஏற்பட வாய்ப்பு உண்டா?
பதில்: வன்கொடுமை செய்வது பார்ப்பனரல்லாத மற்ற உயர் சாதியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவரே என்பதை தலித்துகள் உணரத் தொடங்கி விட்டனர். கீழ்வெண்மணி விவகாரத்தில் பெரியார் அவர்களை கைவிட்டதை யாரால் மறக்கவியலும்? அவர்கள் தங்கள் நலனுக்கு ஏற்ப செயல்படுவது முக்கியம். அதில் இந்த கூட்டு முயற்சி வந்தால் மகிழ்ச்சியே.
5. சைவ உணவு சாப்பிடும் ஐயங்கார் சமுகத்தினர்,ஆண் பெண் இரு பாலரும் அறிவு ஜீவிகளாகவும்,ஆஜானுபாகர்களாகவும், இருப்பதற்கு அடிப்படை காரணம்?
பதில்: இந்த கேள்வியை எந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கேட்கிறீர்கள்?
அனானி (32 கேள்விகள் கேட்பவர் இப்போது எனது 60 கேள்வி வரம்பால் 12 கேள்விகளாக சுருக்கி கொண்டவர். அவருக்கு என் நன்றி)
1. 64 ஆவது ஹிரோஷிமா தினம் -இதை காணும்போது உங்கள் என்ன ஓட்டம்?
பதில்: 1945-ல் ஜப்பான் சரணடைவதற்காக நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு தவறான மொழிபெயர்ப்பால் தப்பபிப்பிராயம் ஏற்பட்டு அமெரிக்கா அணுகுண்டை போட்டது என்பதை நினைக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளன் என்னும் முறையில் எனது வேலையின் பொறுப்பின் கனத்தை உணர்கிறேன்.
2. திமுகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுக்கும் விஜயகாந்துக்கு கலைஞரின் பதிலடி எப்படி?
பதில்: இந்த உரலைக் கூறுகிறீர்களா?
3. விஜயகாந்த் குற்றச்சாட்டு: மக்கள் தலையில் தலா ரூ.12 ஆயிரம் கடன் சுமை உண்மையா?
பதில்: மொத்தக் கடன் சுமையை மக்கள் தொகையால் வகுத்தால் இந்த எண் வரும் என்றால் சரிதான்.
4. போட்டியிடும் ஐந்து தொகுதிகளிலும் தே.மு.தி.க வெற்றி பெற்றால்? ஜெயின் நிலை?
பதில்: ஜெயின் அரசியல் வியூகம் புரியவில்லை. தனது கட்சியின் அழிவுக்குத்தான் அவர் அடிகோலுகிறார். ஐந்து தொகுதிகளிலுமே விஜயகாந்த் வெற்றி பெற்றால் அவரது கட்சியின் இறங்கும் பாதை இன்னும் செங்குத்தாகும்.
5. மீண்டும் அண்ணா ஆட்சி வருமா?
பதில்: யாருடைய அண்ணா ஆட்சி? ஸ்டாலினுடைய அண்ணாவினதா?
6. பட்டாசு ஆலை விபத்துகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன?
பதில்: மனித உயிர்கள் மலிவாகி வருகின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.
7. சத்யம் கணினி நிறுவனத்தின் லேட்டஸ்ட் நிலவரம்?
பதில்: கூகளில் தேடினேன். தலை சுற்றுகிறது. இங்கு போய் பாருங்கள், ஏதேனும் புரிகிறதா என பார்ப்போம்.
8. ஒருவருக்கு அரசியலில் எடுபட என்ன என்ன தேவை?
பதில்: தடித்த தோல்.
9. தமிழக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 6 வது ஊதியக் குழுவிலும் ஒரு சாராருக்கு திருப்தி இல்லை போலிருக்கு?
பதில்: அதிருப்தியாளர்கள் எங்குதான் இல்லை?
10. அமெரிக்காவின் அதிபர் ஒபாமா எப்படியிருக்கிறார்?
பதில்: Beer meeting எல்லாம் நடத்துகிறாரே. ஞானியும் எழுதியிருந்தார் குமுதத்தில்.
11. தமிழ்கத்தில் இன்றைய அரசு அலுவலகங்களின் நிலை?
பதில்: எப்போதும் போலத்தான். ஏன் கேட்கிறீர்கள்?
12. வரும் மழை காலத்தில் ஸ்வைன் ப்ளு(பன்றிக் காய்ச்சல்) ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கு,பண்டைய காலத்து ப்ளேக்,காலரா மாதிரி?
பதில்: இதில் கஷ்டம் என்னவென்றால் இதற்கான தடுப்பூசியை தயாரிப்பது ரொம்ப சிக்கலான விஷயம். மருத்துவர் ப்ரூனோ இன்னும் நன்றாக இக்கேள்விக்கு பதில் சொல்வார்.
கிருஷ்ணகுமார்
1. For plus two students,are tutions necessary? why?
பதில்: அது சம்பந்தப்பட்ட மாணவ மாணவியரை பொருத்தது. இதில் எப்படி பொதுப்படையாக கூறுவது? ஆனால் சாதாரணமாக படிக்கும் குழந்தைகளை அவர்களாகவே படிக்கும்படி ஊக்குவிப்பதே நலம். ஆனால் யார் இதை கேட்பார்கள்?
2. some people deliberately invite problems, sometimes? why?
பதில்: உண்மைதான். சிலர் பிரச்சினைகளை தேடிப் போகிறார்கள். அவர்கள் கண்ணோட்டத்தின் கோளாறே அது.
3. in india in mobile sector when a service provider does not give good service, what the customer can do?
பதில்: இவ்வளவு சேவை அளிப்பார்கள் உள்ளனர். அவர்களிடையே போட்டியும் உள்ளது. ஒருவர் சரியில்லாவிடில் இன்னொருவரிடம் போக வேண்டியதுதானே.
4. Tell whether Salt is good or bad for health?
பதில்: உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அதிக உப்புள்ள பண்டமும் குப்பைக்கு போவதே. இக்கேள்விக்கும் எளிய விடை இல்லை.
5. Tell something about brain hacking?
பதில்: மூளைச்சலவை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் மூளை திருட்டு? கேள்விப்பட்டதில்லையெ.
6. The reason for sea water is blue and salty?
பதில்: நதிகள் உப்பை கொண்டு வந்து சேர்க்கின்றன. சூரிய ஒளியில் நீர் ஆவியாக செல்ல, உப்பு அப்படியே தங்குகிறது. ஆகவே காலம் செல்ல செல்ல கடலின் உப்புத் தன்மை அதிகரிக்கிறது. வானத்தில் நீல நிறம்தான் கடலில் பிரதிபலிக்கிறது என எண்ணுகிறேன். யாராவது பௌதிக அறிவாளியிடம் கேட்கவும்.
7. some people smile,when in anguish? How?
பதில்: யார் துக்கத்தில்? தமது அல்லது மற்றவரது துக்கத்திலா?
8. Tell your favorite tv show at the moment?
பதில்: காமெடி சேனல் காட்சிகள்.
9. fill the blanks: Friendship starts with ---------and ends with-------?
பதில்: Friendship starts with the remark, "You too think so, I thought I was the only one to feel thus. And it ends with remarks such as "You too Brutus"?
10. Tell about Emotional fools?
பதில்: பார்வையாளர்களிடம் சலிப்பை வரவழைப்பவர்கள்.
ரமணா
1. அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கும் மன்னார்குடிதான் காரணாமா?
பதில்: மன்னார்குடிக்கும் ஜெக்கும் இடையில் உள்ள உறவு புரிந்ததேயில்லை. எனக்கு இப்போது என்ன தோன்றுகிறதென்றால் ஜெக்கு கட்சியை பொருத்தவரை ஒரு death wish வந்து விட்டதென்று.
2. ஜெயின் தேர்தல் புறக்கணிப்பு உங்கள் கருத்து?
பதில்: நிச்சயம் அவர் கட்சியின் நலனுக்கு விரோதமானதே.
3. பணிவு புகழ் பன்னீர் செல்வமும் மாறிவிடுவார் போலுள்ளதே, தேவரின ஒட்டு வங்கியும் கை நழுவுகிறதா?
பதில்: புலி சவாரி செய்பவர் நிலையில் உள்ளார் ஜெ. கவனமாக இருக்க வேண்டும்.
4. ஜெ அதிமுகவை ஒரு வழி பண்ணாமல் ஓய மாட்டார் போலுள்ள்தே?
பதில்: அப்படித்தான் எனக்கும் படுகிறது.
5. எம்ஜிஆர் ஆத்மா இதையெல்லாம் பார்த்து?
பதில்: ஆத்மாவிலெல்லாம் நம்பிக்கை உண்டா உங்களுக்கு?
அனானி (08.08.2009 மாலை 04.24-க்கு கேட்டவர்)
பழமொழிகளுக்கு டோண்டுவின் புது மொழிகள்?
1. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
பதில்: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
2. அற்ப அறிவு அல்லற்கு இடம்
பதில்: முழு அறிவுடன் பேசு
3. அறுவடை காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
பதில்: சர்க்கரை இருக்குமிடம்தான் எறும்பிற்கிருப்பிடம்
4. அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
பதில்: புத்தி கேட்கவும் அறிவு வேண்டும்
5. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
பதில்: உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்
6. அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்
பதில்: அர்த்த ராத்திரியில் மழை, வெளியிலும் செல்ல வேண்டும் என்றால் அற்பனல்லாதவனும் குடை பிடிக்கத்தான் வேண்டும்.
7. அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்
பதில்: யோக்கியன் தானும் வாழமாட்டான் பிறரையும் வாழவிடான்
8. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
பதில்: சரி பாய்தான் இல்லை, மெத்தை கொடுத்தால் வேண்டாம் என்போமா?
9. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
பதில்: மின்சாரத்தால் செத்தவனுக்கு AC என்றால் என்ன, DC என்றால் என்ன?
10. அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
பதில்: நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்
அனானி (09.08.2009 மாலை 07.25-க்கு கேட்டவர்)
1. சாண்டோ சின்னப்ப தேவர் சினிமா உலகில் கொடிகட்டி பறந்த நிலை மாறியது யாரால், எப்போது? இப்போது அவரின் தேவர் பிலிம்ஸ்?
பதில்: அவர் இறக்கும் வரை நல்ல நிலைமையில்தானே இருந்தார். தேவர் பிலிம்ஸை அவரது மருமகன் ஏற்று நடத்துகிறார் என நினைக்கிறேன். பதிவர் ராதாகிருஷ்ணன் இன்னும் சரியாக கூறுவார்.
2. சத்யா மூவிஸ் ஆர்.எம் வீரப்பன் எப்படி உள்ளார்? அவரின் தீவிர கலைஞர் எதிர்ப்பு மாறியது எதனால்?
பதில்: எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவராக உள்ளார். ஜெயலலிதாவுடன் விரோதம் என்றால் கலைஞருக்கு நண்பராக மாறுவதுதானே தமிழகத்தில் பரிணாம வளர்ச்சி?
3. திரை உலகை கலக்கிய பாலச்சந்தர் தொடர் வெற்றிகளை சமீபகாலமாய் கொடுக்க இயலவில்லை காரணம்? ரசிப்புத்தன்மையின் மாற்றம் காரணமா?
பதில்: ரசிப்புத்தன்மை என்பது மாறிக்கொண்டுதான் இருக்கும். அதற்கேற்ப படைப்புகளை தரும் வரைக்கும்தான் ஒரு படைப்பளி வெற்றி பெற இயலும். பாலசந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல.
4. பாரதிராஜாவும் தோல்விச் சூழலில் சமீபகாலமாய், என்ன காரணம்? அவரின் தமிழ்ப்பற்று பற்றி?
பதில்: பாரதிராஜா மட்டும் மேலே சொன்னதை தவிர்க்க இயலுமா? அவரது தமிழ்ப்பற்று பற்றி ஏதும் கூற எனக்கு பற்றில்லை.
5. பழைய நடிகைகளை வயதான தோற்றத்தில், சின்னத்திரையில் பார்க்கும் போது?
பதில்: காலம் என்பது இரக்கமற்ற அரக்கன்.
6. பழைய நடிகர்களின் (1980 முன்னால்) திரைப்படங்களில் யாருக்கு இன்னும் மக்களிடம் மெளசு இருக்கு?
பதில்: இன்னமும் எம்.ஜி.ஆரின் படங்கள் திரையிடப்பட்டால் நல்ல வசூல் காட்டுகின்றன.
7. யார் சூப்பர் ஜோடி? காரணம்? அ) எம்ஜிஆர்-ச.தேவி ஆ) சிவாஜி-பத்மினி இ) ஜெமினி-சாவித்ரி
பதில்: எனக்கு மூன்று ஜோடிகளையுமே பிடிக்கும். ஆனால் அக்காலத்தில் ஜெமினி சாவித்திரி ஜோடிதான் எனக்கு அதிக பாந்தமாக பட்டது. வாழ்க்கை வேறு நடிப்புலகம் வேறு என்னும் அறிவு எனக்கு அப்போது கிடையாது என்பதே அதற்கு காரணம்.
8. விஜயின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து தற்சமயம் சூரியா பக்கமா?
பதில்: விஜய், சூர்யா? ஒப்பிடலே சாத்தியம் அல்ல. விஜய் எசுத்த உடனேயே அன்செலக்டட்.
9. தனுஷ்-சிம்பு போட்டியில் இப்போதைய நிலவரம்? பின்தங்கியதற்கு காரணம்?
பதில்: இருவருமே அராத்துகள் என்பது என் கருத்து. அதிலும் சிம்புவை பார்த்தாலே பற்றி கொண்டு வருகிறது.
10. நாடோடி படம் எப்படி?
பதில்: ம.கோ.இரா. அவர்கள் நடித்த இப்படம் இனிமையான பாடல்கள் கொண்டது. சமீபத்தில் 1966-ல் வெளிவந்தது. நாடு, அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு, அன்றொரு நாள் அதே நிலவில் அவரிருந்தார் அருகே போன்ற பாடல்கள் செவிக்குணவாயின. நான் நான்காண்டுகள் சினிமா பார்க்காத விரதத்தில் இருந்ததால் மிஸ் செய்த படம் அது.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
20 comments:
//1945-ல் ஜப்பான் சரணடைவதற்காக நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு தவறான மொழிபெயர்ப்பால் தப்பபிப்பிராயம் ஏற்பட்டு அமெரிக்கா அணுகுண்டை போட்டது என்பதை நினைக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளன் என்னும் முறையில் எனது வேலையின் பொறுப்பின் கனத்தை உணர்கிறேன்.//
இது என்ன புது கதை? விரிவாகச் சொல்லவும் ப்ளீஸ்!
1. சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை?
2.மனிதர்களுக்கு நெற்றி அகலமாக இருந்தால்?
3.கால் பெருவிரலை விட அடுத்த விரல் அதிக நீளமய் இருந்தால்?
4.காமராஜின் வெற்றிக்கு காரணம் அவரது நீண்ட கைகள்?
5. சாமுத்திரீக லட்சனத்துக்கும் வாழ்வின் வெற்றிக்கும் தொடர்பு உண்டா?
6.பரதக் கலையின் இன்றைய நிலை?
7.அணு ஆயுத ஒப்பந்த விவகாரம் ?
8.அரசியலில் பெண்கள் கொடி பறக்கிறதே?
9. மகளிருக்கு தனி ரயில். அடுத்து?
10.இந்தியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? ஏன்?
11.காங்கிரஸ்,தி.மு.க. ஆட்சியின் மைனஸ் பாயிண்ட்?
12.தளபதி
ஸ்டாலின் மகள் மருமகன் ரகசியமாய் திருவண்ணாமலை கிரிவலம்.கலைஞரின் பதில் என்னவாயிருக்கும்?
//மீண்டும் அண்ணா ஆட்சி வருமா?
பதில்: யாருடைய அண்ணா ஆட்சி? ஸ்டாலினுடைய அண்ணாவினதா?//
டோண்டு டச்!
//ஒருவருக்கு அரசியலில் எடுபட என்ன என்ன தேவை?
பதில்: தடித்த தோல்.//
அது எருமை மாட்டிற்கு தானே உண்டு!
கேள்விகள்:
எம்.கண்ணன்
1. ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' படித்ததுண்டா ? கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்' ? இவையெல்லாம் மாஸ்டர் பீஸ் என சொல்கிறார்களே ? அப்படி என்ன சிறப்பு (அல்லது வாசிப்பனுபவம்) இக்கதைகளில் ?
2. தற்கால (பெரும்பாலான) இளைஞர்கள் மொபைல் ஃபோன், சினிமா, இன்டர்நெட், குடி, செக்ஸ் - இந்த விஷயங்களிலேயே முழ்கி இருக்கிறார்களே ? உழைப்பில் ஏன் அத்தனை அக்கறை இல்லாமல் எல்லாமே மேற்சொன்ன விஷயங்களைச் சுற்றியே உலாவுகிறார்கள் ?
3. மீண்டும் ஜெ.ஆட்சிக்கு வந்தால் எஸ்.வி.சேகர் மீது கஞ்சா வழக்கு வருமா ? இல்லை ஆடிட்டர் டைப் டிரீட்மெண்டா ? எந்த தைரியத்தில் அவர் கட்சியை முறைத்துக் கொண்டே இந்த நிலைமைக்கு தன்னை கொண்டுவந்துள்ளார் ?
4. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், எஸ்.ரா.வும் இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறார்களே ? அப்படி என்னதான் இருக்கிறது அக்கதைகளில் ? (படிக்காததால் தான் கேட்கிறேன்) - வலைபதிவுகள் மூலம் தான் இந்த உலக சினிமா, இலக்கியம் எல்லாம் அறிமுகமாகிறது - எனவே அவர்களுக்கு நன்றி)
5. வாசல் திண்ணை, ரேழி, கேமரா உள், கூடம், முற்றம், ரெண்டாம் கட்டு போன்ற டைப் வீடுகளில் வசித்ததுண்டா ? அந்த அனுபவங்கள் பற்றி எழுதுங்களேன் ? (மும்பாய், டில்லி, சென்னை வீடுகளைப் பற்றியும் வசதிகள், வாடகைகள் பற்றியும் சில பதிவுகள் போடுங்கள்)
6. பாக்யராஜ் ரோகிணி நடித்த 'பவுனு பவுனுதான்' படத்தில் ஐஸ் புரூட் அய்யர் என ஒரு கதாபாத்திரம் வருமே ? ஐஸ்புரூட் என தெருக்காரர்கள் (சிறு பசங்கள் உட்பட) கேலி செய்வார்கள். அது என்ன ஒய் ஐஸ் புரூட் ? ( ) கிளுகிளுப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?
7. 1990களுக்குப் பிறகு வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் படத்தின் கிரெடிட்ஸ் எனப்படும் பணியாற்றிய அனைவரின் பெயர்களும் படம் ஆரம்பத்தில் வெளியிடாமல் படம் முடிந்தபின் வெளியிடுகின்றனர் - அதுவும் மிகவும் பொடி எழுத்துக்களில்.! ஹாலிவுட்டைப் பார்த்து காப்பியடித்து இந்தப் பழக்கத்தை பெரிது படுத்தியவர்கள் மணிரத்னமும் கமல்ஹாசனும் தான். எத்தனை பேர் படம் முடிந்தவுடன் பணியாற்றவர்களின் பெயரைப் பார்க்கப் போகின்றனர் அல்லது தியேட்டரில் பிரொஜக்டரை கடைசி சீனிலேயே ஆஃப் செய்துவிடுகின்றனர். படத்தின் ஆரம்பத்தில் எல்லோருடைய பெயரும் வந்தால் தானே பணியாற்றியவர்களுக்கும் ஒரு வெளிச்சம் கிடைக்கும் (தொழில்நுட்பக் கலைஞர்கள் / உதவியாளர்கள், பிஆரோ, இசை, காமெரா, ஸ்டுடியோ உதவி என பலர்)
8. வலைப்பதிவுகளில் இவ்வளவு விவரமாக அரட்டை அடிக்க முடிகிறதே - பல்வேறு வயது கொண்டவர்களுடனும், பல்வேறு வித பின்னணி கொண்டவர்களுடனும். இதுமாதிரி அரட்டையை (சண்டையில் முடியாமல்) உங்கள் தெரு பெரிசுகள்/சிரிசுகளுடனோ அல்லது உறவினர்களுடனோ தொடர்ந்து நட்பு பேண முடியுமா ? வலைப்பதிவு கொடுத்த பேறு தானே இது ?
9. சுஜாதாவின் சிங்கமய்யங்கார் பேரன் நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா ? அந்தக் கதை பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் வீட்டில் / குடும்பங்களில் / உறவுகளில் அதுமாதிரி ஒரு நிகழ்வுக்கு ஒப்புக் கொள்வீர்களா ? சாதக பாதகம் என்ன ?
10. பிராமண கதாபாத்திரங்கள் இல்லாத கதை கொண்ட திரைப்படங்களை விட பிராமண கதாபாத்திரங்கள் கொண்ட (அல்லது அவர் ஒரு பிராமண வேடத்திலாவது நடித்த) கமல்ஹாசனின் படங்கள் தான் வெற்றி பெற்றதில் அதிகம். தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார். அப்புறம் ஏன் இந்த பெரியார், கருப்புச் சட்டை போன்ற வேஷம் ?
//ஞானியும் எழுதியிருந்தார் குமுதத்தில்.//
எப்போதிருந்து குமுதம் படிக்கும் பழக்கம்!
Only after economic liberalisation started in India in 1991, satellite television entered the country. So, Sun TV has NOT started in the 1980s as mentioned by you but only in early 1990s.
//
7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு தென்னாடு என ஏன் சொல்லப்படுகிறது? இதன் விரிவான அர்த்தம் என்ன?
பதில்: தென்னிந்தியாவின் ஃபேவரைட் கடவுள் என்னும் பொருளில்தான் அவ்வாறு கூறுகிறார்கள்.
//
வடநாடுடைய விஷ்னுவே போற்றி என்று யாரும் சொல்வதில்லையே...
//Only after economic liberalisation started in India in 1991, satellite television entered the country.//
உண்மைதான். திருத்திவிட்டேன் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், எஸ்.ரா.வும் இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறார்களே ? அப்படி என்னதான் இருக்கிறது அக்கதைகளில் ? (படிக்காததால் தான் கேட்கிறேன்) - வலைபதிவுகள் மூலம் தான் இந்த உலக சினிமா, இலக்கியம் எல்லாம் அறிமுகமாகிறது - எனவே அவர்களுக்கு நன்றி)
//
முன்னாள் சோவியத் யூனியனே போற்றி போற்றி என்று பாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
சாருவும், எஸ்.ராவும் உங்களைப்போன்ற ஒரு வாசகனை எதிபார்த்துத்தான் அப்படி எழுதுகிறார்கள். நீங்களும் டாஸ்டாவஸ்கி எல்லாம் படித்துவிட்டால் அவர்களெல்லாம் யாருக்காகத் தான் எழுதுவார்கள் ?
//
தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார். அப்புறம் ஏன் இந்த பெரியார், கருப்புச் சட்டை போன்ற வேஷம் ?
//
சாரி, ராங்க் நம்பர்.
இது கமலகாசனிடம் கேட்கவேண்டிய கேள்வி.
தான் பிராமணனாகப் பிறந்துவிட்டதால், பெரியார் பித்தம் தலைக்கேறிய தமிழகத்தில் தன் இருப்பை ஞாயப்படுத்திக்கொள்ளவே கமல் அத்தகய வேலையைச் செய்கிறார்.
கமல் திரையில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் ஒரு நல்ல நடிகர் என்று நினைக்கிறேன்.
//.......7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு தென்னாடு என ஏன் சொல்லப்படுகிறது? இதன் விரிவான அர்த்தம் என்ன?
பதில்: தென்னிந்தியாவின் ஃபேவரைட் கடவுள் என்னும் பொருளில்தான் அவ்வாறு கூறுகிறார்கள். ...//
Correct meaning: Owner of the nation at the southern side of Himalayas.
1) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பினார் என்றிருக்கிறது. அதன் பின் வந்த கிறித்தவ மதம் தென்னிந்தியாவில் பரவலாக இருக்கும்போது, புத்த மதம் பரவாதது ஏன்? இல்லை, அசோகர் தென்னிந்தியாவிற்கு ஆளே அனுப்பவில்லையா?
2) நெய்வேத்தியம் சரியா அல்லது நைவேத்தியமா? விளக்கம் ஏதும் தர முடியுமா?
3) தாவனி, மாராப்பு இதெல்லாம் (தமிழ் நாகரிகத்தில்) பழைய காலத்தில் கிடையாது என்கிறார் என் நண்பர், உண்மையா?
4) SWINE FLU க்கு துளசி சிறந்த மருந்து, ஹோமியோபதியில் INFLUENZNIUM 30, OCCILOTOCCINUM 30 என்பதெல்லாம் மருந்து என SMS கள் வருகின்றன, உண்மையா? (இதற்கு உடனே பதில் சொன்னால் நல்லாயிருக்கும்)
5) பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ் இருந்திருக்குமா? (பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும் எய்ட்சுக்கு ஒரு காரணம்தானே?)
6) சென்னை நகரப் பேருந்துகளில், இடது பக்கம் பெண்கள் எனவும் வலது பக்கம் ஆண்கள் எனவும் இருப்பது ஏன்? (எங்களது பக்கத்தில், முன் பகுதியில் பெண்கள் என்பதும், பின் பகுதிகளில் ஆண்கள் என்பதும் எழுதப்படாத வழக்கம்... பார்க்கப்போனால் இதில்தான் ’இடிபாடு’ கம்மி.)
7) ஹிந்தி வார்த்தைகள் தமிழில் (பேச்சில்) கலந்திருப்பதுபோல (சாவி) தமிழ் வார்த்தைகள் ஏதும் ஹிந்தியில் கலந்திருக்கிறதா?
//4) SWINE FLU க்கு துளசி சிறந்த மருந்து, ஹோமியோபதியில் INFLUENZNIUM 30, OCCILOTOCCINUM 30 என்பதெல்லாம் மருந்து என SMS கள் வருகின்றன, உண்மையா? (இதற்கு உடனே பதில் சொன்னால் நல்லாயிருக்கும்)//
உண்மைதான், அதாவது இம்மாதிரி SMS-கள் வருவது. ஹி ஹி ஹி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. எதுக்கும் 27 வரைக்கும் வயிட் பண்ணிடுங்களேன்.
//
5) பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ் இருந்திருக்குமா? (பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும் எய்ட்சுக்கு ஒரு காரணம்தானே?)
//
வெறும் உடல் உறவு மூலம் மட்டுமே எயிட்ஸ் ஒன்று தோன்றாது.
எய்ட்ஸ் உள்ள ஒரு பெண்ணுடனோ, ஆணுடனோ உடலுறவு வைத்துக்கொள்ளும் போது தான் எய்ட்ஸ் வருகிறது.
எய்ட்ஸ் சமீபத்தில் 1981 ல் தான் முதலில் கண்டறியப்பட்டது.
1960 க்குப் பிறகு தான் விமானம் மூலம் அடிக்கடி வேறு நாடுகளுக்குச் சென்று வருவது அதிகரித்துள்ளது..
அகவே புதுப் புது வியாதிகளும் மனிதர்களுடன் பரவ வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
அதன் முன்பு இருந்த ராஜாக்கள் பல மனைவிகளுடன் ஜாலியாக இருந்தாலும் அவர்களுக்கு எய்ட்ஸ் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், வேறு சில வியாதிகள் வந்திருக்கலாம்.
//பாரதிராஜா தமிழ்ப்பற்று பற்றி?
பதில்: பாரதிராஜா மட்டும் மேலே சொன்னதை தவிர்க்க இயலுமா? அவரது தமிழ்ப்பற்று பற்றி ஏதும் கூற எனக்கு பற்றில்லை.//
அண்ணாச்சி! அவருகிட்ட இல்லாதத பத்தி கேட்டுருக்காக. நீங்களும் பட்டும் படாமலும் சொன்னது தான் இங்கின வக்கிற பஞ்ச் ..,
//
1) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பினார் என்றிருக்கிறது. அதன் பின் வந்த கிறித்தவ மதம் தென்னிந்தியாவில் பரவலாக இருக்கும்போது, புத்த மதம் பரவாதது ஏன்? இல்லை, அசோகர் தென்னிந்தியாவிற்கு ஆளே அனுப்பவில்லையா?
//
இதெல்லாம் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கக்கூடிய கேள்விகள்.
மதன் ஒன்றும் ஒரு தேர்ச்சிபெற்ற சரித்திரவியலாளர் அல்ல.
பௌத்தமும் சமணம் தமிழ் மண்ணில் ஆட்சிசெய்திருக்கின்றன. பின்பு சைவம் மேலோங்கிவிட்டது வரலாறு.
பௌத்தம் அழிந்ததற்கு இஸ்லாமின் வருகை ஒரு முக்கிய காரணம். அதை மதன் சொல்லவே மாட்டார்.
The true meaning of "thennadudaiya"
is
South side is the pithru loga, yama loga and the side of death and shiva is the lord of the south side
//South side is the pithru loga, yama loga and the side of death and shiva is the lord of the south side//
தென்புலத்தார் என்று கூறுவார்கள். நீங்கள் சொல்வதும் ஏற்கத் தக்கதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
. //1992-ல் தான் வந்தது என அறிந்தேன்//
சன் டிவி 1993 வருடம் சித்திரை முதல் நாளன்று துவங்கப்பட்டது.
அன்புடன்
அரவிந்தன்
Post a Comment