8/10/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.08.2009

திருவள்ளுவர் சிலை பெங்களூரில்
அங்கு திருவள்ளுவர் சிலை. இங்கு தமிழகத்தில் கன்னட அறிஞர் சர்வக்ஞரின் சிலை. ஆக கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள எல்லா பிரச்சினைகளும் தீர்ந்தன. ஹோகநேக்கலா? அது எங்கே இருக்கிறது? காவேரியில்தான் நீர் வெள்ளம் சமயங்களில் திறந்து விடுகிறார்களே, அது போதாதா?

இப்போ உண்மையா நடக்கப் போவது என்ன? இரு மாநிலங்களுக்குமிடையே பிரச்சினை என இனிமேல் வந்தால், அங்குள்ள திருவள்ளூவர் சிலை தாக்கப்படும், இங்குள்ள சர்வக்ஞர் சிலையும் அவ்வாறே. அதை தடுக்க போலீஸ்படை வேறு வெட்டியாக காவலுக்கு நிறுத்தப்பட வேண்டும்? இது என்ன அவஸ்தை, பெண் கொடுத்து பெண் எடுப்பது போல?

கல்கியும் போலி கல்கியும்
சுந்தா அவர்கள் எழுதிய கல்கியின் வாழ்க்கை சரிதம் “பொன்னியின் புதல்வர்” இப்போது படித்து கொண்டிருக்கிறேன்.

அதில் ஒரு நிகழ்ச்சி. நாற்பதுகளின் துவக்கத்தில் கல்கி அவர்கள் விகடனை விட்டு நீங்கினார். சத்தியாக்கிரக போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். அவர் சிறை சென்றது குறித்து தமிழ்த் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். ஒரு நாள் அவர் தனது வீட்டில் பிற்பகல் தூக்கத்தில் இருந்தார். அச்சமயம் பார்த்து அவர் வீட்டுக்கு கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகன்னாதன் அவர்கல் கல்கியுடன் சென்றார். கல்கியை பார்த்ததுமே, உ.வே.சா. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவரை வேகமாக கட்டி அணைத்து “ஐயா, ஐயா, நீங்கள் இவ்வாறு செய்யலாமா? ஜெயிலுக்கு போய் விட்டீர்களாமே? போகிறவர்கள் போகட்டும். நீங்கள் உங்கள் எழுத்துத் தொழிலை செய்தால் போதாதா”? என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்.

கி.வா.ஜ. அவர்கள் மெதுவாக இது கல்கி இல்லை என அவரிடம் கூறியுள்ளார். சட்டென சுதாரித்து கொண்டு உ.வே.சா பார்த்துவிட்டு அது கல்கியில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டார். “யார் இவர், கல்கி மாதிரியே இருக்கிறாரே”? என கேட்க, வந்தவர் பரிதிமாற்கலைஞர் என அறியப்படும் சூரியநாராயண சாஸ்திரியாரின் மகள் வயிற்று பேரன், வி.ஜி. சீனிவாசன், மதுரை சேதுபதி பள்ளீயில் ஆசிரியராக இருக்கிறார் என்பதை விளக்கியிருக்கிறார். சீனிவாசனும் தான் அவரை சந்திக்க விரும்பியதாக கூறியதும், குரல் கூட கல்கியுடையது போலவே இருந்ததை கண்டு வியப்படைந்தார். இதை சிறையிலிருந்து வந்த கல்கியிடம் கூற, அவர் தன்மேல் தமிழ்த் தாத்தாவுக்கு இருந்த அன்பை நினைத்து உருகியிருக்கிறார்.

பிறகு 1941-ல் தேவக்கோட்டையில் நடந்த தமிழிசை விழாவில் வைத்து அவர் இந்த சீனுவாசனை சந்தித்திருக்கிறார். முகச்சாயல், உயரம், நிறம், குரல் எல்லாவற்றிலும் தன்னைப் போலவே இருந்த சீனிவாசனை பார்த்து கல்கி அவர்கள் “பேஷ், பேஷ். நீங்கள்தான் போலி கல்கியா”? என வியப்புடன் அவரை கேட்டார். மகிழ்ச்சியும் அடைந்தார் (நன்றி: பொன்னியின் புதல்வர், பக்கம் 313).

ஆனால், கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்கு பிறகு வேறு இடத்தில் நிகழ்ந்த இன்னொரு அசல் மற்றும் போலியின் சந்திப்பு அவ்வளவு சந்தோஷமான சூழ்நிலையில் அமையவில்லை என்பதை for the record பதிவு செய்கிறேன்.

பெரியாருடன் எனக்கு என்ன வாய்க்கால் வரப்பு தகராறா?
பெரியார் அவர்களது முக்கால்வாசி கருத்துகளுடன் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆகவே அவற்றை எதிர்க்க நான் எல்லாவித வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்வேன் என்பது நிஜம். ஆனால் அதற்காக அவர் மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. அவரும் யார் அவரை நேரில் சந்திக்க வந்தாலும் மிகவும் மரியாதை கொடுத்தே உரையாற்றுவார் என்பதை காலஞ்சென்ற எனது தந்தை நிருபர் நரசிம்மன் அவர்கள் என்னிடம் பலமுறை கூறியுள்ளார். ஆகவே நானும் அவரை மிகவும் மரியாதையாகவே குறிப்பிடுவேன். அவரை ஒருமையில் குறிப்பிடுமாறு யோசனை சொல்லி வந்த பின்னூட்டங்களை நான் நிராகரிக்கிறேன்.

அவர் சீடர் வீரமணி அவர்களும் நான் அவரை சந்திக்க சென்றபோது மிகவும் பண்புடனேயே பேசினார். அந்த வகையில் அவர் உண்மையாகவே பெரியார் வழியில்தான் நடந்தார். எனக்கு அனுமதி மறுத்ததையும் நாசுக்காகவே செய்தார்.

பின்சேர்க்கை: எஸ்.ஏ. ராஜா அவர்கள் விவகாரம்:
ஆலடி அருணா கொலை வழக்கில் முதலில் விடுதலையான எஸ்.ஏ. ராஜாவுக்கு உயர்நீதி மன்றத்தால் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது தெரிந்ததே. அம்மாதிரி தருணங்களில் உடனே கைது செய்து கோர்ட்டிலிருந்து நேராக புழல் சிறைக்கு கொண்டு செல்வார்கள் என்றுதானே எதிர்பார்த்திருக்க வேண்டும்? அப்படி இல்லையாம். மனிதர் சாவகாசமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா செல்வதற்காக விமான ஏற முயன்றிருக்கிறார். நல்லவேளையாக தடுத்து நிறுத்தினார்கள்.

என்னவென்று பார்த்தால் ஏதோ தீர்ப்பின் நகல் கிடைப்பதில் தாமதமாம் என கதை விடுகிறார்கள். இதுவே உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனையாக கூறியிருந்தாலும் இப்படித்தான் செயல்பட்டிருப்பார்களாமா? என்ன நடக்கிறது நாட்டில்?

சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்வாரிய ஊழியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். அவரை அவரது அதிகாரி கோர்ட்டில் போராடி நிரபராதி என நிரூபித்திருக்கிறார். கோர்ட்டும் அவரை விடுவித்து தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ஆனாலும் தீர்ப்பின் நகல் இல்லாமல் அவரை விடுவிக்க இயலாததால் சம்பந்தப்பட்ட கோர்ட் ஊழியர்களுக்கு வாய்க்கரிசி போட வேண்டியிருந்தது. “ஓவ்வொருத்தனுக்கும் கிலோ கணக்கில் அல்லவா அரிசி தேவை” என அந்த அதிகாரி என்னிடம் நொந்து கொண்டார்.

ஆனால் இம்முறை அதே தாமதம் ஒரு குற்றவாளிக்கு உதவ இருந்தது என்பதுதான் ஒரு பெரிய நகைமுரண்.

தமிழ் ஓவியாவின் பக்கங்களில் மால்வேர் இருப்பதாக செய்தி வருகிறது
webvision.periyar.org.in என்னும் தளத்துடன் அவரது வலைப்பூவுக்கு உள்ள இணைப்பால் அதில் மால்வேர் இருப்பதாக கூகள் குரோம் தெரிவிக்கிறது. பதிவர்கள் சாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ் ஓவியா ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

பார்க்க:
webvision.periyar.org.in
This site may harm your computer.
"AIOBC"விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரை "சமூக நீதி அறக்கட்டளை சார்பில் UPSC - 2008 வெற்றி ...
www.webvision.periyar.org.in/ - Similar

பதிவர் சுப்பையாவின் வலைதளத்தில் இச்செய்தி வருகிறது.
The website at devakottai.blogspot.com contains elements from the site tamileditor.org, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for tamileditor.org.
Learn more about how to protect yourself from harmful software online.


அன்புடன்,
டோண்டு ராகவன்

33 comments:

Jawarlal said...

திரு.ஈ.வெ.ரா. குறித்து நான் உயர்வாக நினைக்கிற விஷயம் தன் தாய் மொழி கன்னடம் என்பதை அவர் மறைத்ததோ மறுத்ததோ இல்லை என்பதே

http://kgjawarlal.wordpress.com

dondu(#11168674346665545885) said...

@ஜர்லால்
இதெல்லாம் மறைக்கக் கூடிய விஷயமா சார்? தனது தாய்மொழி கன்னடம் என்ற விஷயத்தை மட்டுமா மறைக்கவில்லை. தமிழனுக்கு தலைமை வகிக்கும் யோக்கியதை கிடையாது, ஆகவே தன்னை தலைவனாக ஏற்று கொண்டார்கள் என்பதை கூடத்தான் மறைக்கவில்லை.
ஏனெனில் அதையும் இந்த “சுரணைகெட்ட” தமிழர்கள் ஏற்று அவரை பகுத்தறிவு பகலவன் என போற்றுவர் என்பதையுமே கூடத்தான் உணர்ந்திருந்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இப்போ உண்மையா நடக்கப் போவது என்ன? இரு மாநிலங்களுக்குமிடையே பிரச்சினை என இனிமேல் வந்தால், அங்குள்ள திருவள்ளூவர் சிலை தாக்கப்படும், இங்குள்ள சர்வக்ஞர் சிலையும் அவ்வாறே. அதை தடுக்க போலீஸ்படை வேறு வெட்டியாக காவலுக்கு நிறுத்தப்பட வேண்டும்? இது என்ன அவஸ்தை, பெண் கொடுத்து பெண் எடுப்பது போல?//


athuthaane arasiyalvathikku veNum
appththaane avanga vandi Odum

Anonymous said...

//கல்கியும் போலி கல்கியும்
சுந்தா அவர்கள் எழுதிய கல்கியின் வாழ்க்கை சரிதம் “பொன்னியின் புதல்வர்” இப்போது படித்து கொண்டிருக்கிறேன். //


adada angkeyum poliya!

Anonymous said...

//தமிழ் ஓவியாவின் பக்கங்களில் மால்வேர் இருப்பதாக செய்தி வருகிறது
webvision.periyar.org.in என்னும் தளத்துடன் அவரது வலைப்பூவுக்கு உள்ள இணைப்பால் அதில் மால்வேர் இருப்பதாக கூகள் குரோம் தெரிவிக்கிறது. பதிவர்கள் சாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ் ஓவியா ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.//


sariya vassuttaan aappu!

Anonymous said...

//என்னவென்று பார்த்தால் ஏதோ தீர்ப்பின் நகல் கிடைப்பதில் தாமதமாம் என கதை விடுகிறார்கள். இதுவே உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனையாக கூறியிருந்தாலும் இப்படித்தான் செயல்பட்டிருப்பார்களாமா? என்ன நடக்கிறது நாட்டில்?//

yellam panam pannum viththai sami

Anonymous said...

உலக அளவில் நடை பெறும் டென்னீஸ் போட்டிகளில் மகளிர் அடிக்கும் குட் சாட்களின் படங்களை எடுக்கும் புகைப்பட ஆங்கிள் விவகாரமாய் இருப்ப்து பற்றி?
சட்டக் கல்லூரி வளாக மாணவர் மோதல் பிரச்சனையின் செயலுக்கு பிறகு இப்போது அங்கு நிலை சுமுகமா?
சத்துணவு ஊழியர் திடீர் போராட்டம் சென்னையில் ?
உச்சமன்ற போலிஸ்-வக்கீல் மோதல் விவகாரம் வழக்கு எந்த நிலையில்?

பாலிவுட் படங்களின் வசூலை விட கோலிவுட் படங்கள் முந்துவது சரியா?
பெங்களுரில் தியேட்டர்கள் மூடல்-சென்னயில் எதிர்நிலை-இப்படியே போனால்?
கேரளாவிலும் ஏதாவ்து ஒரு சிலை திறந்து விட்டால் ?

dondu(#11168674346665545885) said...

@அனானி
உங்கள் கேள்விகள் 20-ஆம் தேதிக்கான பதிவின் வரைவில் போய் விட்டன. 13-ஆம் தேதிக்கான கேள்விகள் 60 தாண்டிவிட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் ஓவியா said...

//webvision.periyar.org.in என்னும் தளத்துடன் அவரது வலைப்பூவுக்கு உள்ள இணைப்பால் அதில் மால்வேர் இருப்பதாக கூகள் குரோம் தெரிவிக்கிறது. பதிவர்கள் சாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ் ஓவியா ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.//

தகவலுக்கு நன்றி.

தமிழ் ஓவியா said...

//தமிழ் ஓவியாவின் பக்கங்களில் மால்வேர் இருப்பதாக செய்தி வருகிறது
webvision.periyar.org.in என்னும் தளத்துடன் அவரது வலைப்பூவுக்கு உள்ள இணைப்பால் அதில் மால்வேர் இருப்பதாக கூகள் குரோம் தெரிவிக்கிறது.//

சரி செய்யப்பட்டு விட்டது. மீண்டும் இதே போல் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி

dondu(#11168674346665545885) said...

பேஷ், பேஷ் தமிழ் ஓவியா. ரொம்பவும் வேகமாகவே செயல்பட்டீர்களோ பிழைத்தீர்களோ.

இதே போல பலரது வலைப்பூக்களில் எண்டி.டமில் தளத்தால் பாதிப்பு வந்து, அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்காததால் பிளாக்கர் அம்மாதிரி பாதிக்கப்பட்ட எல்லா வலைப்பூக்களையும் மூடியது. அவற்றில் இருந்த எல்லா இடுகைகளும் ஒரேயடியாக தொலைந்து போயின.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@தமிழ் ஓவியா
இன்னும் உங்கள் தளத்தின் பிரச்சினை தீரவில்லை போலிருக்கிறதே. அதற்கு செல்ல முயன்றால் இப்போதும் கிடைக்கும் செய்தி இதோ:

The website at thamizhoviya.blogspot.com contains elements from the site webvision.periyar.org.in, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for webvision.periyar.org.in.
Learn more about how to protect yourself from harmful software online.

பார்த்து நடந்து கொள்ளவும். பிளக்கர் உங்கள் வலைப்பூவை மூடும் அபாயம் இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

சூடான விவாதம் எதுவும் இல்லையா இங்கே!?

தமிழ் ஓவியா said...

//dondu(#11168674346665545885) said...

@தமிழ் ஓவியா
இன்னும் உங்கள் தளத்தின் பிரச்சினை தீரவில்லை போலிருக்கிறதே. அதற்கு செல்ல முயன்றால் இப்போதும் கிடைக்கும் செய்தி இதோ:

The website at thamizhoviya.blogspot.com contains elements from the site webvision.periyar.org.in, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for webvision.periyar.org.in.
Learn more about how to protect yourself from harmful software online.

பார்த்து நடந்து கொள்ளவும். பிளக்கர் உங்கள் வலைப்பூவை மூடும் அபாயம் இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

தாங்கள் மேலே சுட்டியக்காட்டிய குறைகளை சென்னை தோழர் ஒருவர் சரி செய்து கொடுத்துவிட்டார். தமிழ் ஓவியா வலைப்பூ கூகுல் குரோமில் இனி தடங்களின்றி பார்க்கலாம்.

சுட்டிக் காட்டியமைக்கும் மிக்க நன்றி

Anonymous said...

//வால்பையன் said...

சூடான விவாதம் எதுவும் இல்லையா இங்கே!?//

1.கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்-
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்
2.போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே
3.கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்-
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

வால்பையன் போறுமா?

விவாதத்தை தொடங்குங்கள்.

இவை பதிவுலகில் யாரை குறிக்கிறது?

கண்ணன்.ச

Anonymous said...

வால்பையன் பார்வைக்கு

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்

புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்


மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா


அரசியலில் இது யாரை குறிவைக்கிறது?

கண்ணன்.ச

செழியன் said...

காவிரித்தாயின் பிறப்பிடமாம் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் தன்னில் , அய்யன் திருவள்ளுவருக்கு சிலை திறப்பு , அதுவும்,வாழும் ராஜராஜ சோழனால் .
தமிழர் நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது.
கலைஞரின் ராஜ தந்திரத்தின் சாதனையில் இது ஒரு மைல் கல்.அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கக் கல் இனி அங்கே தமிழ் சமுதாயம் நிம்மதியாய் வாழும்.
சகோதரப் பாசத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்த இனம் தமிழினமல்லவா?
தமிழகத்தின் நிரந்திர முதல்வராய் வெற்றிப் பவனி வரும் கலைஞரின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

அவரின் சாதனைகள் தொடர்கின்றன
அவ்ர் வாழும் காலத்தில் வாழும் தமிழர் அனைவரும் பெரும் பேறு பெற்றனர்.

தமிழ்நாடு என்று சொன்னாலே கலைஞரும் அவர் தம் அரும் பணிகளுமே இனி சரித்திரம் சொல்லி மகிழும்.

தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஸ்டாலினையும்
இந்திய மக்களுக்கு சேவை செய்ய
அழகிரியையும்
தமிழன்னைக்கு சேவை செய்திட கனிமொழியையும்
தந்து பெருமையும் பேருதவியும் செய்த கலைஞர் வாழ்க வாழ்கவே

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


கண்ணன் என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணலையே!

Anonymous said...

//தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஸ்டாலினையும்
இந்திய மக்களுக்கு சேவை செய்ய
அழகிரியையும்
தமிழன்னைக்கு சேவை செய்திட கனிமொழியையும்
தந்து பெருமையும் பேருதவியும் செய்த கலைஞர் வாழ்க வாழ்கவே//


kalai sevaikku mu ka muththuvai thanthathai vittu vittaare sezhiyan

நிஜாம் said...

அண்ணாச்சி! இன்னும் கொஞ்ச நாள்ள உங்ககிட்ட கேள்வி கேட்க டோக்கன் வாங்கவேண்டி வருமோ?
சிங்கிள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டீர்களா?

நிஜாம் said...

@டோண்டு அண்ணாச்சி பதில்கள்

1) நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பர் என்பதால் இந்த கேள்வி. சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்மொழி குறித்து "தமிழ்மொழியை முழுமை பெற்ற மொழி என்பவர்கள் தன் கால்களை தானே நக்கிக்கொள்ளும் நாய்களைப் போன்றவர்கள்" என சொல்லியிருந்தார். இது குறித்து உங்களின் கருத்து?

2) ஜெயா டிவி விசுவின் மக்கள் அரங்கம், சன் டிவி விஜய டி ஆரின் அரட்டை அரங்கம் ஒப்பிடுக?

(அப்படியே நம்ம டோக்கன் நம்பரையும் சொல்லிருங்க அண்ணாச்சி)

dondu(#11168674346665545885) said...

@நிஜாம்
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் 20-ஆம் தேதிக்கான பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Slogger said...

காந்தியிடம் ஒரு இஸ்லாமிய பெண், "இந்தியா, பாகிஸ்தான் பிரிவதை ஏன் எதிர்கறிர்? இது அண்ணன்/தம்பி சொத்து பிரிவது மாதிரி ஒரு சாதரண விசியம்" என கூறினால். அதற்கு காந்தி, " சொத்து எனக்குரி என் இந்தியத்தாயின் கர்பபையை வெட்டி எரிய பார்ப்பதை நான் எப்படி ஒத்துகொள்ள முடியும்?"
நீங்களும், பெரியார் கட்சி மக்களும் இடும் இந்த சண்டையில் அழிவது என் இந்து மதமே.
உங்கள் வருத்தம் நியமனதே! பெரியார் இயக்கம் நடத்தும் அரசியல் இந்து மதத்திற்கு பல இன்னல்களை தருகிறது. அந்த இயக்கத்தில் உள்ள எவரும் இந்து மதத்தை புரிந்தவர் அல்ல. அதே சமயத்தில், பெரியார் நமது மக்களுக்கு ஆற்றிய சேவையை நீரகரிப்பது முற்றில்லும் தவறு. அடிமைத்தனத்தை அழிக்க பல வெள்ளை மக்கள் பாடுபட்டார்கள், அனால் மார்ட்டின் லூதர் கிங் என்ற மனிதற்குதான் அந்த பெருமை போய் சேர்ந்தது. ஏன்? கருப்பு இனதவர் அவரை தங்களுள் ஒருவராக சேர்ந்து கொண்டர்கள். பெரியாரும் அப்படிதான். ராஜாஜி, பாரதி போன்ற பெரியவர்கள் ஜாதி மற்றும் அதன் கொடுமையை பற்றி பல செய்திகளை நமது மக்களுக்கு எடுத்து சொல்லி உள்ளார், அனாலும் பெரியார் கொள்கைகள் மக்களுக்கு சென்ற மாதிரி மற்றவரால் முடியவில்லை. ஏன்?
கருணாநிதி, முதலமைச்சர் பதவியை தனது குடும்பத்திற்கு கடத்துவது மாதிரி, பிராமின மக்கள் இந்து மதத்தை தங்கள் குடும்பத்திற்கு கடத்த முயன்றதே இன்று பிரச்சனை. இதை இல்லை என்று சொல்லமுடியாது. நான் முன்பு ஒரு முறை சொன்னதை போல் இந்து மதம் "பிராமிணன்" என யாரை சொல்கிறது? உங்கள் பிறப்பால் ஒருபோதும் நிங்கள் "பிராமிணன்" என சொல்லிகொள்ள முடியாது, உங்கள் செய்யலால்தான்.
பெரியாரும் அதன் மக்களும் இதை புரிந்து கொள்ள சக்தி இல்லை, இன்று அவர்கள் இந்து மதத்தை குறு போட்டுகொண்டு இருகிறார்கள். என்ன பண்றது?
உங்களளுடைய "நான்" என்ற எண்ணம், உங்கள் ஜாதியை மற்ற மக்கள் இகழ்ச்சி
செய்வதை தடுப்பதாக எண்ணி, ஒரு வேண்டாத அத்தியாத்தை புரட்ட செய்கிறது. அது தவறு என்று உங்களுக்கு தெரியும் இருப்பினும், அதை விட்டு வருவது கடினம். பாரதி போன்ற மகான் செய்த்தார், உங்களால் முடியுமா?

என் தமிழ் மிக மோசம், தமிழ் பிழைகள் இருக்கும், மன்னிக்கவும் !

Anonymous said...

கேள்விகள்- 20-ஆம் தேதிக்கான பதிவின் வரைவுக்கு:-

1.கலைஞரின் ஜெ பற்றிய அழைப்பு திருமதி ஜெ.-அவரது வயதுக்கு,அனுபவத்துக்கு ஏற்புடையதா? நாகரீகம் மீறிய செயலாகாதா?
2.பொது உடமை கட்சிகளின் சாயம் 5 தேர்தலில் வெளுத்துவிடும் போலுள்ளதே?

3. சரத் கட்சியும் போட்டியில் இருக்கா?

4.பன்றிக் காய்ச்சல் வேகமாய் பரவி பல உயிர்களை காவு வாங்கிவிடும் போலுள்ள்தே?

5.வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக்கட்டத்திலா?

dondu(#11168674346665545885) said...

//கேள்விகள்- 20-ஆம் தேதிக்கான பதிவின் வரைவுக்கு:-//
சென்றுவிட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நக்கீரன் பாண்டியன் said...

one sms received today:Few things i would like to share with u about swine flu.
please read
symptoms are fever,cough@ cold sometimes accompanied with headache,vomitting and loose motions.In case anybody suffers from the above they need to immediately go to doctor .It takes only 5 days to become fatal.also this virus sustains in humid climate so for the next 10-15 days if(.....)pune.Also small kids feeding mothers and elders specially with diabeties or anyother chronic disease are most prone. please create the awareness take care.


-

கோபால் said...

1. நிகழ்காலத்தில் வாழும் தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
2.காதல் ஜாதியை ஒழிக்குமா?
3.போலியாய் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பற்றி உங்கள் கருத்து?
4.திமுக ஏற்படுத்திய தமிழ் உணர்வு தற்சமயம் எப்படியுள்ளது?
5. வாழ்வு பற்றி உங்கள் கருத்து?
6.சர்தார்ஜிகள் மிகவும் தைரியசாலிகள். நல்ல உழைப்பாளிகள், இருந்த போதிலும் அவர்களை கிண்டல் பண்ணி?
7.பாஜக மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இப்போது?
8.சிக்கலில் மாட்டிய வருண்காந்தியின் நிலை?
9.பொதுவாய் பொருளாதார வளர்ச்சிக்காக நியாய நெறிமுறை மீறல்கள், நுணுக்கங்கள் தந்திரங்கள் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்வுகள்?
10.உங்கள் அனுபவத்தில் தனிமனித பொருளாதர முன்னேற்றத்திற்கு எது தடை?
11. கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் தேவையில்லை என்போர்?
12. வாக்குச்சீட்டுத்தான் வேணும்னு புரட்சித் தலைவி ஜெயலலிதா கோருவதின் நோக்கம்?
13.தமிழகத்தில் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதால் என்ன நடக்கும்?
14. மத்திய அரசால் "பொடா" சட்டம் திரும்ப கொண்டுவந்தால் ?
15.இதிகாசங்கள்,புராணங்கள் சொல்வது போல் உலகை படைத்த ஆண்டவன் ஏ‌ன் பூமிக்கு கலிகாலத்தில் வருவதில்லை?ஏன்?

16. இன்றைய விலைவாசி உயர்வின் முக்கியகாரணம் என்ன என்ன?
17.வங்கியில் பர்சனல் லோன் வாங்கலாமா இல்ல கன்ஸ்யூமர் லோன் வாங்கலாமா, எது நல்லது?
18.மாதா மாதம் சம்பளத்தில் பிடிக்கற வரியைக் குறைக்க ஏதாவது வழி இருக்கா?
19. மனிதர்கள்,எல்லாருக்கும் இன்ஸுரன்ஸ் தேவை தானா? எது பெஸ்ட் தனியார் அல்லது எல் ஐ சி?
20.இந்தியாவில் பரதம், டிஸ்கோ இரண்டையும் நல்லா ஆடுறவங்க யார்?

dondu(#11168674346665545885) said...

@கோபால்
உங்கள் கேள்விகள் 20.08.2009 அன்று வரும் பதிவுக்கான வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//உங்களளுடைய "நான்" என்ற எண்ணம், உங்கள் ஜாதியை மற்ற மக்கள் இகழ்ச்சி
செய்வதை தடுப்பதாக எண்ணி, ஒரு வேண்டாத அத்தியாத்தை புரட்ட செய்கிறது. அது தவறு என்று உங்களுக்கு தெரியும் இருப்பினும், அதை விட்டு வருவது கடினம். //

உண்மைதான் ஒரு சிலரின் ஈகோப்பிரச்சனை அவர்கள் வகுப்பார் அனைவரையும் பாடாய்ப்படுத்துகிறது. இவர்கள் எரிகிற தீயில் எண்ணெயூற்றி மகிழ்கிறார்கள்.

திருவனந்தபுரத்தான்.

dondu(#11168674346665545885) said...

//உண்மைதான் ஒரு சிலரின் ஈகோப்பிரச்சனை அவர்கள் வகுப்பார் அனைவரையும் பாடாய்ப்படுத்துகிறது.//
சிலரது ஈகோ பிரச்சினையை விட அந்த சிலரது விஷயத்தில் மற்றவரது தேவையற்ற தலையிடல் அவர்தம் சுயமரியாதையை சீண்டுவதுதான் நிஜம்.

அத்தருணத்தில் அப்படித்தான் என்னடா ஜாட்டான் என்று அந்த சிலர் கேட்பார்கள். அதையும் முக்காடு எல்லாம் போட்டுக்கொண்டு வந்து கேட்காமல் செய்கிறார்களே, அதை பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// dondu(#11168674346665545885) said...

@கோபால்
உங்கள் கேள்விகள் 20.08.2009 அன்று வரும் பதிவுக்கான வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


டோண்டுவின் கேள்வி பதில் டாடாவின் "நனோ" புக்கிங் மாதிரியா?

dondu(#11168674346665545885) said...

//டோண்டுவின் கேள்வி பதில் டாடாவின் "நனோ" புக்கிங் மாதிரியா?//

ஒரு பதில்கள் பதிவுக்கு சுமார் 60 கேள்விகள் என வரையறை செய்து கொண்டால் இதுதான் அடுத்த லாஜிகல் ஸ்டெப்.

13-ஆம் தேதி பதிவு ரெடியாக உள்ளது. நாளை விடியற்காலை 5 மணிக்கு எந்த ராஜா பட்டணம் போனாலும் தானே பப்ளிஷ் ஆகிவிடும்படி பிளாக்கரில் முன்னைவுகள் தந்துள்ளேன்.

20-ஆம் தேதிக்கான பதிவில் இப்போதே 34 கேள்விகள் உள்ளன. அது 60 தாண்டியவுடன் 27-ஆம் தேதிக்கான வரைவு திறக்கப்படும், and so on.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//
பதில்: இந்த கேள்வியை எந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கேட்கிறீர்கள்?
//

முதலில் நீங்களே கன்னாடியைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நான் பார்த்த மட்டில் நாமம் போட்ட பிராமணர்கள் அஜானுபாகுவாகவும் பட்டை (நெற்றியில்) போடும் பிராமணர்கள் ஒல்லியாகவும் இருக்கின்றனர்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது