கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
கிருஷ்ணகுமார் (போன வாரத்துக்கான கேள்விகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன):
1. it is told that inflation has come down but cost of most of the essential commodities increased, why?
பதில்: அதுதான் எனக்கும் புரியவில்லை. போன வாரம் இதே விஷயத்தை பற்றி கேட்ட கேள்விக்கு அளித்த பதிலேதான் இங்கும்.
2. please tell, is everything decided by the destiny?
பதில்: விதி, சுய விருப்பம் ஆகியவற்றை ஒரு உதாரணத்தால் விளக்கலாம். ஒரு புல் வெளியில் மாட்டை கட்டிப் போட்டுள்ளார்கள். கயிற்றின் நீளம் 100 அடி. அந்த மாடு 100 ஆடி ஆரத்தில் உள்ள ஒரு வட்டமான பிரதேசத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அது சுய விருப்பம். ஆனால் 100 அடியை தாண்ட இயலாது. அது விதி. அந்த விதி நல்லதா, கெட்டதா? அதுவும் தெரியாது. ஒரு வேளை மாடு கயிற்றை அறுத்து கொண்டு ஓடுகிறது என வைத்து கொள்வோம். அது ஹைவேக்குக் கூட செல்லலாம். அங்கு முதல்வரின் காருடன் வரும் ஆயிரம் கார்களில் ஏதேனும் ஒன்றில் அடிபடலாம். அல்லது இன்னொரு பெரிய புல்வளிக்கும் செல்லலாம். இதில் விதி மற்றும் சுயவிருப்பம் இரண்டுமே கலவையாக உள்ளன.
3. Tell the the secret to a long lasting, healthy and fulfilling relationship?
பதில்: ஒவ்வொரு உறவுக்கும் தனித்தனியாக ரகசியம் உண்டு. ஆனால் ஒன்று நிச்சயம். அந்த குறிப்பிட்ட ரகசியத்தை உறவை பாவிக்கும் எல்லோருமே உணர்ந்து அதற்கேற்ப நடக்க வேண்டும். ஒரு கை ஓசை பலன் இல்லை.
4. computer-Desktop or Laptop, which will exit in future?
பதில்: எனது தெரிவு மடிக்கணினியே. அதைக்கூட நோட்புக் துரத்தலாம்.
5. From whom you have impressed so far?
பதில்: எந்தையும் தாயும்.
6. tell about your first experience in this years monsoon rain?
பதில்: முதலில் மனதில் தோன்றிய உணர்ச்சி நிம்மதியே. ஏனெனில் இம்முறை தென்மேற்கு பருவமழை சொதப்பி விட்டது. நிலத்தடி நீர் கிடுகிடுவென இறங்கி விட்டது. இது வரை வந்த மழை போதாது. முக்கியமாக எனக்கு இந்த அனுபவம் இம்முறை இன்னும் கிட்டவில்லை. பதிவர் சந்திப்புகள் இப்போதெல்லாம் மெரினா கடற்கரையில் நடப்பதில்லையாதலால் கொட்டும் மழையில் கடலலையில் குடை இல்லாமல் நின்று கால் நனைக்கும் இன்பமும் லேது.
7. ways to make a relationship complete?
பதில்: மூன்றாம் கேள்வியிலேயே பதில் தந்து விட்டேன்.
8. your best companian when you are alone or you want to be alone?
பதில்: படிப்பதற்கான விஷயங்கள்/சாதனங்கள்
9. How necessory is computer in your day to day life? If there is no computer for one day then what will happen to you?
பதில்: எனது மொழிபெயர்ப்பு வேலைக்கு அதுவும், அகலப்பட்டை இணைப்பும் இன்றியமையானவை. ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கும் மேல் அவை செயலில் இருக்கும். அப்படியே ஒரு நாள் இல்லாமல் போனால்? திவ்ய தேசங்களுக்கு செல்லும்போது பல முறை அது நிகழ்ந்துள்ளது. அதனால் என்ன தலையா போய்விடும் என்ற மனோபாவம் அப்போது மனதில் உருவாகிவிடும்/உருவாக்கிவிடுவேன்.
10. tell ways to keep ego aside and move on in life
பதில்: என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை, எனது மனதில் இருந்த ஆரவாரப் பேய்கள் ஓடிப்போன நிலை ஆகிய நிகழ்வுகளிலிருந்து நான் கற்றேன்.
அனானி (29.07.2009 காலை 10.55-க்கு கேட்டவர்):
பழமொழிகளுக்கு டோண்டுவின் புது மொழிகள்?
1. வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
பதில்: மோசக்காரனுக்கும் மோசக்காரன் உண்டு
2. வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
பதில்: வாஸ்துக்காக துட்டு அழாத வீடே எல்லாவற்றிலும் நன்று
3. வடக்கே கருத்தால் மழை வரும்.
பதில்: சம்மரில் தெற்கே கருத்தாலும் மழைதான்.
4. வட்டி ஆசை முதலுக்கு கேடு.
பதில்: வட்டிப் பேராசை பனகல் பார்க் மீட்டிங்கில்தான் முடியும்
5. வணங்கின முள் பிழைக்கும்.
பதில்: வணங்கினால் போதாது, காலில் விழவும் தெரிய வேண்டும்
6. வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
பதில்: அல்லது செலவுக்கேற்றப்டி வரவைப் பெருக்கு
7. வருந்தினால் வாராதது இல்லை.
பதில்: முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்தான். ஆனால் அதுக்காக டூத்பேஸ்ட் டியூபுக்குள் பேஸ்டை திரும்ப அனுப்ப முயலலாமா?
8. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
பலன்: கொடாக்கண்டனையும் ஒரு விடாக்கண்டன் வெறுப்பேற்றுவான். ஒவ்வொரு ஜெயலலிதாவுக்கும் ஒரு எஸ்.வி. சேகர் உண்டு.
9. வளவனாயினும் அளவறிந்தளித்துண்
பதில்: சம்பளம் எட்டு மடங்கு ஆனதுக்காக 30 இட்டிலியா சாப்பிட முடியும்?
10. வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
பதில்: அனுகூல சத்ருக்களாக செயல்படும் நண்பர்கள் இருக்கும்வரை பகைவர்களுக்கு என்ன தேவை?
அனானி (29.07.2009 மாலை 06.56-க்கு கேட்டவர்)
1. What is your view on this interview?
பதில்: நேர்காணல் நடந்தது 1986. இப்போது நாம் இருப்பது 2009-ல். நடுவில் கங்கை, காவேரி, கூவம் ஆகிய நதிகளில் நிறைய நீர் பாய்ந்து சென்று விட்டது. இப்போது இது பற்றி கேட்டால் எப்படி?
காளிராஜ்
1. Tube Light - வெளிச்சத்தில் பொருட்களின் நிழல்கள் அவ்வளவு அடர்த்தியாய் இல்லையே? காரணம் கூறமுடியுமா?
பதில்: சாதாரண பல்பை விட டியூப் லைட்டினால் வெளிச்சம் அதிகம் பரவலாக விரிவதே முக்கியக் காரணம் என நான் நினைக்கிறேன்..
2. உலகில் மனிதனின் உயரத்திற்கும் புவி ஈர்ப்பு விசை வேறுபாட்டிற்கும் சம்பந்தம் உண்டா? விளக்கவும்.
பதில்: உண்டு என்று சிலரும் இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். நீங்களே பாருங்களேன்.
3. உதாரணமாக தற்சமயம் சென்னையில் இருக்கும் நமக்கு சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்கு செல்லும் போது வெயில்காலம். அதே சூரியன் கடக ரேகையில் இருந்து திரும்பவும் மகர ரேகைக்கு வரும்போது நியாயப்படி குறுகிய காலத்திலே இரு கோடை காலங்கள் (2- அக்னி நட்சத்திரம் வரவேண்டும்.) ஆனால் தமிழகத்திற்க்கு நேரே ஒருமுறை தான் சூரியன் வருகிறது. (மகர ரேகை to கடக ரேகை)
பதில்: நீங்கள் சொல்லும் இரண்டாம் கோடை அக்டோபர் மாதம் வருகிறது. இதை நான் பம்பாயில் இருந்தபோது அனுபவித்துள்ளேன். ஆனால் சென்னையில் அவ்வளவாக அது உணரப்படாததன் காரணமே வடகிழக்கு பருவமழைதான்.
ரமணா
1. மீண்டும் சிக்கலில் தொலை தொடர்பு அமைச்சர் என்ற இந்த வார ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள புலனாய்வுக் கட்டுரை பற்றி?
பதில்: மறுபடியும் மந்திரியின் மேல் முறையீட்டால் தடை வந்து விட்டது என அறிகிறேனே?
2. இது அவருக்கு மூணாவது கண்டம்?
பதில்: போன ஜன்மத்தில் பூனையாக இருந்திருப்பாரோ? பூனைக்கு ஒன்பது ஆயுள் என ஆங்கிலத்தில் சொலவடை உண்டே.
3. கலைஞரின் அளவுக்கதிகமான கரிசனம் இவர் மேல்; காரணம்?
பதில்: கொடுக்க வேண்டிய பங்கை சரியாக படையலிட்டு விடுவாராயிருக்கும்.
4. பி.எஸ்.என்.எல் மொபையில் டெண்டர் குழப்பம் தீருவது எப்போது?
பதில்: எல்லா டெண்டர்களும் அவார்ட் செய்து முடிந்தவுடன்
5. மீடியா சப்போர்ட்டுட்ன் புதுச் சிக்கல் தயாநிதி மாறனின் கைவரிசையா?
பதில்: உஷ். அரண்மணை ரகசியம்!
அனானி (32 கேள்வி கேட்பவர்)
1. சைஸ் ஜீரோ திகில் பேஷன் பற்றி? (ஒல்லிக் குச்சி உடம்புக்காரிகள்)
பதில்: கட்டி அணைத்தால் மெத்தென்று இருக்க வேண்டும். அதன்றி அணைக்கும்போது உடலில் எலும்பு குத்தினால் எனக்கு பிடிக்காது.
2. சில்மிஷ சேட்டைகள் செய்யும் பாதிரியார்கள் பற்றி?
பதில்: ஏற்றுக் கொண்ட புனித வேலைக்கு சற்றும் தகுதியற்றவர்கள்.
3. இவர்களுக்கும் கபட சாமியார்களுக்கும் என்ன வித்யாசம்?
பதில்: ஒரு இழவு வித்தியாசமும் இல்லை.
4.இதுமாதிரி பாலியியல் பலாத்கார தகவல்கள் இஸ்லாமில்?
பதில்: வக்கிர மனதுடையவர்கள் எல்லா மதங்களிலும் உண்டு.
5. பர்கூரில் நாமினேசனில் கோட்டை விட்ட தேமுதிக?
பதில்: அப்பீல் செய்து வென்று விட்டார்களே.
6. சீன சாக்லேட் மற்றும் மொபைல்களுக்கு இந்தியாவின் தடை சீனாவின் கோபத்தை போராய் மாற்றுமா?
பதில்: மாற்றாது என நம்புவோம்.
7. மாநில ஆளுநராக இருந்தவர்களில் யார் செம்மையானவர்? காரணம்?
பதில்: ஆளுநர் பதவி என்பது சம்பிரதாயப் பதவி. பவர் ஒன்றும் கிடையாது. மத்திய அரசின் ஏஜெண்டாகத்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. இதில் செம்மையானவர் என்பதை எந்த அளவுகோல்களால் கூறவியலும்?
8. மாநில ஆளுநராக இருப்பவர்களில் யார் செம்மையானவர்? காரணம்?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.
9. இரண்டு நிலைகளிலும்(கேள்வி 8,7),பதவிக்காலத்தில் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானவரின் பதவிக்காலம் எது? யார்? எந்த மாநிலம்? உங்கள் விமர்சனம்?
பதில்: எனக்கு தெரிந்து ராம்லால் என்னும் ஆளுநர். ஆந்திராவின் ஆளுநர், 1983-ல். இந்திரா காந்தியின் ஆணையின் பேரில் என்.டி. ராமாராவின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து பாஸ்கரராவுக்கு பதைப் பிரமாணம் செய்து வைத்தார். இந்திராவுக்கும் ராம்லாலுக்கும் மிகவும் கெட்டப் பெயரை வாங்கித் தந்தது அந்த நிகழ்வு. வேறு வழியின்றி கடைசியில் என்.டி.ராமாராவை மீண்டும் முதன் மந்திரியாக ஏற்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக இந்திராவின் கொலைக்கு அப்புறம் நாடு முழுக்க காங்கிரசுக்கு 1984 ஆண்டு மத்திய பொது தேர்தலில் அனுதாப அலையால் சீட்டுகள் குவிய, ஆந்திராவில் மட்டும் நிலைமை தலைகீழாக இருந்தது.
10. அவர்களில் மாவீரன், 100 % நேர்மையாளர் யார்? அவரின் பராக்கிரமம் பற்றி?
பதில்: எனக்கு தெரிந்து ராஜாஜியைத் தவிர (1947, வங்க மாநில கவர்னர்) வேறு யாரும் தேறவில்லை.
11. இந்தியாவின் அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நம் கட்ல் பலத்தை கூட்டியதால் ,இனி சீனாவின் வாலாட்டம் இலங்கை பகுதியில் ஒடுங்குமா?
பதில்: நமது அணுசக்தி நீர்முழுகிக் கப்பல் போர்க்கப்பல் இல்லை போலிருக்கிறதே. அணுசக்தியால் செலுத்தப்படுவதால் தனது ரோந்து பணியை அதிக திறமையோடு நிறைவேற்றும் அவ்வளவே. சீனாவின் வாலாட்டம் வேறு காரணைகளை பொருத்தது.
12. சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை கேட்கும் கருணாநிதியின் கோரிக்கை எடுபடுமா?
பதில்: எடுபட்டால் நல்லதுதானே.
13. இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியைத் தாண்டிவிட்டதே! உணவுக்கு?
பதில்: பிரச்சினைதான். அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
14. அவ்வப்போது எழும் ராட்சத அலைகளால் மும்பை, சென்னை,குமரி என்னவாகும்? இதுவும் குளோபல் வார்மிங்தானா? விளக்கவும்?
பதில்: அப்படியெல்லாம் இல்லை போலிருக்கிறதே.
15. கமல் மகள் ஸ்ருதி நடித்துள்ள இந்தி படம் லக் பார்த்தீர்களா? எப்படி?
பதில்: இல்லை பார்க்கவில்லை? நன்றாக உள்ளதா? பார்த்தவர்கள் பின்னூட்டங்களில் சொல்லுங்கப்பு.
16. முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிறது என்ற செய்தி உணர்த்துவது?
பதில்: வரவேற்க வேண்டிய செய்தி. முதல்வருக்கு பாராட்டு.
17. கலைஞர் காப்பீட்டு திட்டம்-இதுவும் பணம் பண்ணும் கலைஞரின் தந்திரம் எனும் சிலரின் புள்ளி விவரக் குற்றச்சாட்டு பற்றி?
பதில்: எனக்கு இது சம்பந்தமாக முழுவிவரங்கள் தெரியாது. பதிலளிப்பது சரியாக இருக்காது.
18. தமிழ் நாட்டில் எம்.எல்.ஏ.க்களுக்கு இனி ரூ. 50 ஆயிரம் சம்பளம், இலவச வீட்டு மனை அடுத்து? இப்படியே போனால்?
பதில்: சம்பளத்தை விடுங்கள். வீட்டுமனை ரொம்பவுமே தவறான முன்னுதாரணம்.
19. தமிழ்கத்தில் உள்ள கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க இயலுமா?
பதில்: அரசியல் ரீதியான ஆதரவு அவற்றுக்கு இருக்கும் வரை ஒழிக்கவியலாதுதான்.
20. கந்து வ்ட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, தினவட்டி, சினிமாத் துறை வட்டி விரிவாய் விளக்கவும்?
பதில்: விளக்க என்ன இருக்கிறது? எல்லாமே கடன் வாங்குபவனை அதோகதியாகத்தானே ஆக்கும்? விவரிக்கக் கூட மனம் நடுங்குகிறது.
21. அநியாயமாய் இப்படி வட்டி வாங்கி மற்றவரை வாட்டியவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்?
பதில்: அவர்கள் தண்டனை காலங்களுடனும் அதே ஸ்கேலில் வட்டி ரூபத்தில் அதிக காலங்கள் சேர்க்கப்படும்.
22. ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கிய அனுபவம் உண்டா? அப்படி என்ன அங்கே இருக்கு?
பதில்: தங்கியதில்லை, அதிகப்பட்சமாக மூன்று நட்சத்திர ஓட்டலில்தான் ஆள்வார் என்னும் ஊரில் தங்கினேன். ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரியவில்லை. துட்டு மட்டும் அதிகமாக சார்ஜ் செய்கிறார்கள்.
23. ராமாயணத்தை இனியும் விமர்சிப்பேன் -முதல்வர் கருணாநிதி -உங்கள் விமர்சனம்?
பதில்: அது அவர் உரிமை. அதே போல அவர் செயல்களை விமரிசனம் செய்ய மற்றவர்களுக்கும் அதே உரிமை உண்டு எனப்தை அவர் மறக்க மாட்டார் என நம்புகிறேன்.
24. பயிற்சி டாக்டர்கள் உதவித் தொகை உயர்வு-போராட்டம்-முதல்வரின் பிடிவாதம்-கடைசியில் கனிந்தது எப்படி? இதுவும் ஸ்டாலினாலா?
பதில்: மருத்துவர் ப்ரூனோவுக்கு செல்ல வேண்டிய கேள்வி இது.
25. சமச்சீர் கல்வி திட்டம் வரமா? சாபமா?
பதில்: அது திட்டம் அமுலாகும் விதத்தை பொருத்தது.
26. கர்நாடக இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் பற்றி?
பதில்: எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் வரிசையில் இவரும் நினைவு கொள்ளப்பட தகுதியானவர். ஸ்ரீரங்கபுர விஹார என்று துவங்கும் பாடலை அவர் பாடுவதை கேட்காத செவிகள் பாக்கியம் செய்யாதவை. எனக்கு கர்நாடக சங்கீத அறிவு கிட்டத்தட்ட லேது என்று இருந்தாலும் நல்ல இசை இது என கூறும் திறமை எனக்கிருப்பதாக எண்ணுகிறேன். முழு வாழ்க்கையையும் வாழ்ந்து போன அந்த நல்ல ஆத்மா சாந்தியடையட்டும்.
27. தீவிரவாதம்- பயங்கரவாதம்- வித்தியாசம் எதில்-இதில் எது முந்துகிறது? மனித குலத்தை அழிக்க?
பதில்: அவற்றுள் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லையே.
28. பாலாற்றை பாலைவனமாக்க செய்யும் ஆந்திராவின் அணைத்திட்டம்?
பதில்: தமிழக அரசு உஷாராக இருந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
29. ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் பேட்டி-தினமணியில்- ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்-இது எப்படி இருக்கு?
பதில்: அப்பேட்டியை நான் படிக்கவில்லை. ஆகவே கருத்து சொல்ல ஏதுமில்லை.
30. இந்துக் கோயில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க அரசு ஆலோசனை பற்றி?
பதில்: இந்து அறநிலையத் துறை என்பதே பாரபட்சமான நடவடிக்கைதான். மதசார்பற்ற அரசுக்கு இந்து மதம் மட்டும்தான் கண்ணில் பட வேண்டுமா? ஏன் இசுலாமிய, கிறித்துவ அறத்துறை என்றெல்லாம் வைத்து பெண் பாதிரிகள்/காஜிகளை நியமித்துப் பார்ப்பதுதானே?
31. வாக்குப்பதிவு இயந்திரம் மீதான புகாரை மறுக்கும் கமிஷன் பற்றி?
பதில்: தோற்ற வேட்பாளர்கள் பாடும் பாட்டுத்தான் இந்தப் புகார்கள். அவர்கள் கேட்கும் வாக்குச் சீட்டு முறை மட்டும் என்ன வாழ்கிறதாம்? உண்மை கூறப்போனால் அவற்றில்தான் தில்லுமுல்லுகள் அதிகம்.
32. (இது பற்றி முன்பு பதிவு போட்டுள்ளீர்கள்)-இந்திய தண்டனை சட்டம் 498-ல் திருத்தம் செய்ய கோரிக்கை முதல்வருக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடிதம் பற்றி உங்கள் கருத்து?
பதில்: தவறான பிரயோகத்துக்கான தண்டனைகள் சேர்க்கப்பட வேண்டும்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
8 hours ago
38 comments:
@வட்டி ஆசை முதலுக்கு கேடு.
பதில்: வட்டிப் பேராசை பனகல் பார்க் மீட்டிங்கில்தான் முடியும்@
சூப்பர் ..நல்ல டைமிங்க்
இந்த வார பதில்களும் அருமை.
ஒரு ஆள் 2 கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது. ஆங்கிலக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப்படமாட்டாது என்று விதி கொண்டுவாருங்கள்.
//Anonymous said...
ஒரு ஆள் 2 கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது. ஆங்கிலக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப்படமாட்டாது என்று விதி கொண்டுவாருங்கள்.//
சரியான ஆப்பு !
//(இது பற்றி முன்பு பதிவு போட்டுள்ளீர்கள்)-இந்திய தண்டனை சட்டம் 498-ல் திருத்தம் செய்ய கோரிக்கை முதல்வருக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடிதம் பற்றி உங்கள் கருத்து?
பதில்: தவறான பிரயோகத்துக்கான தண்டனைகள் சேர்க்கப்பட வேண்டும். //
மனைவியின் "மனநலத்துக்கு ஆபத்து ஏற்படும் செயல் " என்பது கணவனின் எந்த செய்கையும் வகைபடுத்தலாம்.
ஆகவே கணவன் எது செய்தாலும் குற்றம் . அதையே மனைவி செய்தால் குற்றமல்ல
"' தவறான பிரயோகத்துக்கான தண்டனைகள் சேர்க்கப்பட வேண்டும்"" இது போலி பெண்ணியவாதிகளால் செய்யப்படும் திசை திருப்பும் முயற்சி.
சட்டங்கள் தண்டனை தர மட்டுமே உள்ளது பணம் சம்பாதிக்க அல்ல
http://thatstamil.oneindia.in/news/2009/08/05/india-harassed-husbands-club-to-seek-freedom.html
"நமது சுதந்திர தினம், மனைவியரின் கையில் சிக்கி சித்திரவதைக்குள்ளாகி வரும் கணவர்களுக்கு விடுதலை தரும் தினமாக அமைய வேண்டும்."
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2009/08/06&PageLabel=19&EntityId=Ar01902&ViewMode=HTML&GZ=T
“At present, Indian law considers adultery as a crime when committed by Indian men, but not so when committed by women. This is blatant discrimination against men. Also, Indian law exempts women from punishment for domestic violence. The laws have been pampering women by not according them any duties, while creating obligations for men. By this decidedly anti-male mindset of the law, men in India have started to feel that it’s perhaps a crime to be born a male in India.”
1) குமுதத்தில் ஐயங்கார் பற்றி தொடர் வருகிறதே (நான் தமிழன்) - வலையுலக புகழ் டோண்டுவின் படமும் இடம்பெறுமா ?
2) சமீபத்தில் தான் உங்கள் ஜெயாடிவி காலைமலர் பேட்டி விடியோக்கள் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. தெளிந்த நீரோடை போன்ற பேச்சு. பதிவர் சந்திப்பு போட்டோக்களில் பார்த்ததை விட மிகவும் இளமையாக இருந்ததாகப் பட்டது. வலிய திணித்துக்கொண்ட 'அவா' பாஷை பேசினது போல் படுகிறது. கேள்வி பதில் பதிவுகள் பற்றி எதுவும் சொல்லவில்லை போலிருக்கிறதே ?
(சுரேஷ்)
//“At present, Indian law considers adultery as a crime when committed by Indian men, but not so when committed by women. This is blatant discrimination against men.//
It cuts both ways. A cuckolded husband can sue the cuckolder for the alienation of affection of his wife. But a woman, whose husband has deceived her with another woman cannot sue the other woman. In that way, the wronged woman is discriminated against.
Regards,
Dondu N. Raghavan
//குமுதத்தில் ஐயங்கார் பற்றி தொடர் வருகிறதே (நான் தமிழன்) - வலையுலக புகழ் டோண்டுவின் படமும் இடம்பெறுமா?//
அவன் படம் எல்லாம் இதில் வருவதற்கு வாய்ப்பே இல்லை
ராஜாஜி, சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய மாமனிதர்களுக்கெதிரில் இந்த டோண்டு ராகவன் வெறுமனே ஒரு சுண்டைக்காய்.
//வலிய திணித்துக்கொண்ட 'அவா' பாஷை பேசினது போல் படுகிறது.//
எனது இயல்பு மொழியே அதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//But a woman, whose husband has deceived her with another woman cannot sue the other woman//
இதுவும் தவறு செய்யும் மற்றுமொரு பெண்ணுக்கு அளிக்கப்படும் மற்றுமொரு சலுகை தானே?
நீங்கள் அதை ஏன் நியாயபடுதுகிறீர்கள் ?
Animals 5 senses and humans 6 senses.Fate and Choice fits to us perfectly.
Dondu Pls give a example citing humans for the questions. Can you?
""
2. please tell, is everything decided by the destiny?
பதில்: விதி, சுய விருப்பம் ஆகியவற்றை ஒரு உதாரணத்தால் விளக்கலாம். ஒரு புல் வெளியில் மாட்டை கட்டிப் போட்டுள்ளார்கள். கயிற்றின் நீளம் 100 அடி. அந்த மாடு 100 ஆடி ஆரத்தில் உள்ள ஒரு வட்டமான பிரதேசத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அது சுய விருப்பம். ஆனால் 100 அடியை தாண்ட இயலாது. அது விதி. அந்த விதி நல்லதா, கெட்டதா? அதுவும் தெரியாது. ஒரு வேளை மாடு கயிற்றை அறுத்து கொண்டு ஓடுகிறது என வைத்து கொள்வோம். அது ஹைவேக்குக் கூட செல்லலாம். அங்கு முதல்வரின் காருடன் வரும் ஆயிரம் கார்களில் ஏதேனும் ஒன்றில் அடிபடலாம். அல்லது இன்னொரு பெரிய புல்வளிக்கும் செல்லலாம். இதில் விதி மற்றும் சுயவிருப்பம் இரண்டுமே கலவையாக உள்ளன.
""
//it is told that inflation has come down but cost of most of the essential commodities increased, why?//
இதிலென்ன சந்தேகம்!
கார் விலை 10000 குறைந்தது அதனால் மைனஸில் போச்சு!
பருப்பு விலை 0 தானே உயர்ந்தது அதற்காக 50 பாயிண்டா உயரும்!
நமது நாடு உணவு பொருள்களையும், இயந்திரங்களையும் சரிசமமாக பார்க்கும்!
// please tell, is everything decided by the destiny?//
தலைவர் கொடுத்த மாட்டு உதாரணம் மாட்டுக்கு தான்!
நாமாளும் அதே மாதிரி இருந்திருந்தா குரங்காவே இருந்திருப்போம்!
எண்ணி திணிக கருமம், துணிந்த பின் எண்ணுவது என்பது இலக்கு!
/தமிழகத்திற்க்கு நேரே ஒருமுறை தான் சூரியன் வருகிறது.//
பூமி 23.1/2 டிகிரி சாய்வாக சுற்றுவதை இங்கே நினைவுப்படுத்துகிறேன்!
அதனால் தான் ஒருமுறை கோடைகாலமும் ஒருமுறை குளிர் காலமும் ஏற்ப்படுகிறது!
கோடைகாலத்திலும் மழை உண்டு என்பதால் பருவமழைக்கும் வெப்பத்திற்கும் சம்பந்தமில்லை!
//கட்டி அணைத்தால் மெத்தென்று இருக்க வேண்டும். அதன்றி அணைக்கும்போது உடலில் எலும்பு குத்தினால் எனக்கு பிடிக்காது.//
ரிலைன்சில் தயாரிக்கும் ரெக்ரான் தலையணைகள் நன்றாக இருக்கின்றன, கட்டிபிடிக்க உங்களுக்கு அதை சிபாரிசு செய்கிறேன்!
//சில்மிஷ சேட்டைகள் செய்யும் பாதிரியார்கள் பற்றி?
பதில்: ஏற்றுக் கொண்ட புனித வேலைக்கு சற்றும் தகுதியற்றவர்கள்.//
அப்போ வாத்தியார்கள் செல்மிசம் செய்யலாமா?
வேலையில் என்ன புனிதத்தன்மை! கண்டீர்கள், நாம் அனைவரும் பேச தெரிந்த விலங்குகள் மட்டுமே!
//இவர்களுக்கும் கபட சாமியார்களுக்கும் என்ன வித்யாசம்?//
பாதிரியார், கிருஸ்துவ சாமியார் தான்!
//இதுமாதிரி பாலியியல் பலாத்கார தகவல்கள் இஸ்லாமில்?//
எல்லா மத்ததிலும் உண்டு!
பெரும்பாலும் பெண்கள் மேல் பழிபோடுவதே மதகுருக்களின் வேலை!
//பர்கூரில் நாமினேசனில் கோட்டை விட்ட தேமுதிக?//
இன்னும் அரசியலில் பாலபாடத்தை கூட சரியாக கற்கவில்லை என்று தெரிகிறது!
//சீன சாக்லேட் மற்றும் மொபைல்களுக்கு இந்தியாவின் தடை சீனாவின் கோபத்தை போராய் மாற்றுமா?//
இந்தியா மட்டும் தான் சினாவின் சந்தையா!?
//அவர்களில் மாவீரன், 100 % நேர்மையாளர் யார்? அவரின் பராக்கிரமம் பற்றி?
பதில்: எனக்கு தெரிந்து ராஜாஜியைத் தவிர (1947, வங்க மாநில கவர்னர்) வேறு யாரும் தேறவில்லை.//
நல்லா தேப்பாருங்க, வேறு எங்காவது பிராமண கவர்னர்கள் இருந்திருக்கலாம்!
1.64 ஆவது ஹிரோஷிமா தினம் -இதை காணும்போது உங்கள் என்ன ஓட்டம்?
2.திமுகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுக்கும் விஜயகாந்துக்கு கலைஞரின் பதிலடி எப்படி?
3. விஜயகாந்த் குற்றச்சாட்டுமக்கள் தலையில் தலா ரூ.12 ஆயிரம் கடன் சுமை உண்மையா?
4. போட்டியிடும் ஐந்து தொகுதிகளிலும் தே.மு.தி.க வெற்றி பெற்றால்?ஜெயின் நிலை?
5.மீண்டும் அண்ணா ஆட்சி வருமா?
6.பட்டாசு ஆலை விபத்துகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன?
7.சத்யம் கணினி நிறுவனத்தின் லேட்டஸ்ட் நிலவரம்?
8.ஒருவருக்கு அரசியலில் எடுபட என்ன என்ன தேவை?
9.தமிழக ஊழியர்களுக்கு அறிவிக்க பட்ட 6 வது ஊதியக் குழுவிலும் ஒரு சாரருக்கு திருப்தி இல்லை போலிருக்கு?
10.அமெரிக்காவின் அதிபர் ஒபாமா எப்படியிருக்கிறார்?
11.தமிழ்கத்தில் இன்றைய அரசு அலுவலகங்களின் நிலை?
12.வரும் மழை காலத்தில் ஸ்வைன் ப்ளு( பன்றிக் காய்ச்சல்) ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கு,பண்டைய காலத்து ப்ளேக்,காலரா மாதிரி?
குறிப்பு:
டோண்டு அவர்கள் கேள்விகளுக்கு 60 என் இலக்கு வைத்துவிட்டதால் 32 கேள்விகளுக்கு பதில் இனி 12 கேள்விகள் மட்டும்.
//அவ்வப்போது எழும் ராட்சத அலைகளால் மும்பை, சென்னை,குமரி என்னவாகும்? இதுவும் குளோபல் வார்மிங்தானா? விளக்கவும்?//
நிச்சயமாக இது குளோபல் வார்மிங் தான்!
ஒரு சாரார் அதை மறைத்தாலும் அது அவர்களது பக்க பாதிப்பை வெளி காட்டாது மறைப்பதே!
கடலுக்குள் இருக்கும் எல்நினோ, லாநினோ நன்னீர் ஓட்டம் கடந்த பத்து வருடங்களில் பரவலாக மாற்றம் கண்டுள்ளது, அது பருவநிலைக்கு நல்லதல்ல!
HBO சேனலில் போடும் the 11th hour என்ற படம் பார்க்க உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்!
//முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிறது என்ற செய்தி உணர்த்துவது?//
வீடு ராசியில்லைன்னு ஜோசியக்காரர் சொல்லியிருப்பார்!
//அநியாயமாய் இப்படி வட்டி வாங்கி மற்றவரை வாட்டியவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்?//
ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது!
வாழ்க்கை எல்லோருக்குமானது, அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாதவன் இம்மாதிரி ஆட்களிடம் அடிமையாக வாழ வேண்டியிருக்கு!
உன்னை நம்பு, உழைப்பை நம்பு.
பூமியே சொர்க்கம்!
//ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் பேட்டி-தினமணியில்- ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்-இது எப்படி இருக்கு?//
தைரியத்திற்கு முன்னால் ”குருட்டு” என்ற வார்த்தை சொல்ல மறந்திருப்பார்!
//வால்பையன் said...
//முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிறது என்ற செய்தி உணர்த்துவது?//
வீடு ராசியில்லைன்னு ஜோசியக்காரர் சொல்லியிருப்பார்!//
தலைவரின் எந்த செயலயையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும் எதிர்கட்சிகள் போல், வால் பையன் இப்படி சொல்லலாமா?அடுக்குமா?
பிச்சக் காரர் நல வாழ்வு,தொழு நோயாளி மறு வாழ்வு, அனைவருக்கும் கண்னோளி வழங்குதல் இப்படி புதுப் புது திட்டங்களை தமது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆய்ந்து அறிவித்தும், செயல் படுத்தியும் மகிழும் கலைஞரை இப்படி சொல்லவ்து சரியா? மிஸ்டர் வால்பையன்!
அனானி அண்ணே!
தலைவர் என்னவோ ராக்பெல்லர் எழுதி வச்சா மாதிரி 90% சொத்தை தமிழக மக்களுக்கு எழுதி வச்ச மாதிரி உணர்ச்சிவசப்படுறிங்க!
உங்க்ளை மாதிரி தொண்டர்கள் இருக்குற வரைக்கும் அவுங்க்ளை யாரும் அசைக்கமுடியாது!
இவ்வளவு, எவ்வளவு கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல், கொள்ளளவு நேரம் ஒதுக்கி பதில் சொல்கின்றீர்கள்.... இதன் ரகசியம் என்ன??
Dondu either doesn't have proper understanding of the legal situation with regard to adultery or he tries to support the immoral women as his wont.
The actual position of law regarding adultery is thus:
"WHAT AMOUNTS TO ADULTERY
A person commits adultery, if he:
Has sexual intercourse with a women who is and whom he knows or has reason to believe to be the wife of another man.
Without the consent or connivance of the husband, and
It does not amount to rape.
The inconsistencies of the man are punishable, but not the inconsistencies of the wife. The wife is not punishable as an abettor. It is not committed by a married man who has sexual intercourse with an unmarried woman, or with a widow, or even with a married woman whose husband consents to it.
PUNISHMENT
Whoever commits adultery shall be punished with an imprisonment which may extend to five years, or with fine, or with both. The wife as an abettor shall not be punishable.
------
For instance, if Dondu's or anybody's wife commits adultery, he has to collect evidence and sue the man who is involved with his wife. But if Dondu or any male commits adultery he becomes an accused on a mere complaint by the wife. It is a cognizable offense and he is arrested. Then it becomes a criminal case of the State vs the male.
Without understanding this blatantly biased law, he tries to divert the issue.
I think the world contains some people who will fathom the problems of others only when they themselves undergo the suffering.
@இ.பி.கோ 498A
It is not my habit to hold brief for anybody. I am second to none in condemning the abuse which the Section 498A is subjected to.
I am firm in holding that a person misusing the provisions of this section should be punished.
Regards,
Dondu N. Raghavan
@RAD MADHAV
இதில் ஒரு பிரச்சினையும் இல்லை. கேள்விகள் வரவர அவற்றை அடுத்த பதிவுக்கான வரைவில் ஏற்றி விட்டு அவ்வப்போது பதிலளித்து கொண்டிருந்தால் ஆயிற்று. அதுவும் இப்போது 60 கேள்விகள் என லிமிட் வைப்பதால் கடைசி நேர கேள்விகள் அடுத்த பதிவுக்கு சென்றுவிட, அவற்றின் நெருக்கடி இல்லைதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//I am second to none in condemning the abuse which the Section 498A is subjected to.//
"Section 498A is subjected to.?"
It is the Family system which is subjected to abuse!!
நன்றி டோண்டு அவர்களே. இந்த 498a சட்டம் குடும்ப அமைப்பை தகர்க்கிறது. தகப்பன் அற்ற சமுதயம் ஏற்பட வழி வகை செய்கிறது
இந்த வார கேள்வி பதில்கள் அருமை.
1.For plus two students,are tutions necessary ? why?
2. some people deliberately invite problems, sometimes ? why?
3. in india in mobile sector when a service provider does not give good service, what the customer can do ?
4.Tell whether Salt is good or bad for health?
5.Tell something about brain hacking?
6.The reason for sea water is blue and salty?
7.some people smile,when in anguish ?How?
8.Tell your favorite tv show at the moment?
9.fill the blank
Friendship starts with---------and ends with-------?
10.Tell about Emotional fools ?
Sir,
I am sad to find no answer to the question that I asked in "பெரியார் திடலில் டோண்டு ராகவன்".
Thanks.
@Purasai Manickam
மன்னிக்கவும், விட்டு போய்விட்டது. இப்போது பதிலளித்து விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Donduji,
Sorry to take advantage of commenting in your blog, but I have to say this to இ.பி.கோ 498A.
Dear இ.பி.கோ 498A,
Donduji is making it clear that though there are many misuses of this law to which he is against, there are a few bindings in it that may work against women.
I support Donduji's balanced approach towards family and relationship.
Please control your hatred, which muddies your perception, and makes you write unnecessary and unwanted remarks that will make people stop listening to your otherwise reasonable arguments.
3. உதாரணமாக தற்சமயம் சென்னையில் இருக்கும் நமக்கு சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்கு செல்லும் போது வெயில்காலம். அதே சூரியன் கடக ரேகையில் இருந்து திரும்பவும் மகர ரேகைக்கு வரும்போது நியாயப்படி குறுகிய காலத்திலே இரு கோடை காலங்கள் (2- அக்னி நட்சத்திரம் வரவேண்டும்.) ஆனால் தமிழகத்திற்க்கு நேரே ஒருமுறை தான் சூரியன் வருகிறது. (மகர ரேகை to கடக ரேகை)
பதில்: நீங்கள் சொல்லும் இரண்டாம் கோடை அக்டோபர் மாதம் வருகிறது. இதை நான் பம்பாயில் இருந்தபோது அனுபவித்துள்ளேன். ஆனால் சென்னையில் அவ்வளவாக அது உணரப்படாததன் காரணமே வடகிழக்கு பருவமழைதான்.
http://thatstamil.oneindia.in/news/2009/09/14/tn-severe-heat-wave-condition-in-tamil-nadu.html
2வது கோடை காலமா என்று மக்கள் அஞ்சி நடுங்கும் அளவுக்கு, கிட்டத்தட்ட அக்னி நட்சத்திர காலத்தின்போது அடிக்கும் அளவு மிகக் கொடூரமான வெயில் தமிழக மக்களை மண்டை காய வைத்து வருகிறது.
இப்படி சீசன் அல்லாத சமயத்தில் வெயில் அதிகமாக இருக்கக் காரணம், தரைக்காற்று அதிக அளவில் வீசுவதே காரணம் என்று கூறுகிறது வானிலை ஆய்வு மையம்.
கிட்டத்தட்ட அக்னி நட்சத்திர வெயில் போல உள்ளது தற்போது தமிழகத்தில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயில். காலை 5.30 மணிக்கே பளீரன வெளிச்சம் வந்து விடுகிறது. 7 மணிக்கெல்லாம் சூடான வெயில் தமிழக மக்களை வரவேற்கிறது.
அதன் பிறகு அதிகரிக்கும் வெயில் மாலை 5 மணிக்குத்தான் சற்று ஓய்கிறது. சராசரியாக 100 டிகிரி அளவுக்கு வெயில் உள்ளது.
கோடை காலத்தில்தான் இப்படி வெயில் அடிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில்தான் மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெயில் இருக்கும். ஆனால் இது பருவ மழை காலம். இப்போதும் இந்த அடி அடிக்கிறதே என்று மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
காலை முதல் மாலை மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சும் நிலைமை. இரவாகி விட்டால் புழுக்கன் பின்னிப் பெடலெடுத்து விடுகிறது.
ஏன் இப்படி ஒரு கொடும் வெயில், இந்த பருவ மழைக் காலத்தில் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணனிடம் கேட்டால், தென்மேற்கு பருவமழை பெய்தால், மழை மேகக் கூட்டம் தமிழகத்திற்கு அடிக்கடி வரும்.
அது போன்ற சமயத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறையும். ஆனால் தற்போது பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் கடல் காற்று உள்ளே வரவில்லை. மேலும், தரைக்காற்றும் அதிக அளவில் வீசுகிறது. இதனால் வறண்ட நிலை அதிகரித்து கடும் வெப்பமாக உள்ளது. அதுதான் இப்போது வெயில் சுட்டெரிப்பதற்குக் காரணம் என்கிறார்.
இன்னும் 150 ஆண்டுகளில் வட கிழக்குப் பருவ மழையை இந்தியா மறந்து விட வேண்டி வரும் என ஏற்கனவே நிபுணர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர். ஆனால் இப்போது அடித்துக் கொண்டிருக்கும் வெயிலைப் பார்த்தால் அதற்கு முன்பாகவே நிலைமை அலங்கோலமாகி விடுமோ என்ற பீதிதான் ஏற்படுகிறது.
மழைக்காக குடையைப் பிடித்துக் கொண்ட போக வேண்டிய நேரத்தில், மக்கள் வெயிலிலிருந்து தப்ப குடையுடன் போவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
Good post and this mail helped me alot in my college assignement. Thanks you seeking your information.
Post a Comment