8/20/2009

டோண்டு பதில்கள் - 20.08.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அனானி (10.08.2009 காலை 09.49-க்கு கேட்டவர்)
1. உலக அளவில் நடை பெறும் டென்னீஸ் போட்டிகளில் மகளிர் அடிக்கும் குட் சாட்களின் படங்களை எடுக்கும் புகைப்பட ஆங்கிள் விவகாரமாய் இருப்ப்து பற்றி?
பதில்: பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம் - கறந்த இடத்தை நாடுதே கண்! என்று பாடிய பட்டினத்தார் நினைவுக்கு வருகிறார்.

2. சட்டக் கல்லூரி வளாக மாணவர் மோதல் பிரச்சனையின் செயலுக்கு பிறகு இப்போது அங்கு நிலை சுமுகமா?
பதில்: பல மாணவர்களுக்கு ஓராண்டு படிப்பு போனது, அதனால் பிற்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை பற்றியெல்லாம் யார் கவலைப் படுகிறார்கள். மாணவர்கள்தான் சுதாரித்து கொள்ள வேண்டும். தூங்கியது போதும் மாணவர்களே, விழிமின், எழுமின்.

3. சத்துணவு ஊழியர் திடீர் போராட்டம் சென்னையில்?
பதில்: நான் கூகளில் தேடியவரை கிடைத்தது ஒரு மாதத்துக்கு முந்தைய இந்த செய்திதான். வேறு ஏதேனும் புதிய செய்தி? அதில் காட்டப்பட்டுள்ள சம்பள விகிதங்கள்தான் இந்தியாவிலேயே அதிகமாம். நாசமாப் போச்சு. அரசு அலுவலக பியூன் இதை விட அதிக சம்பளம் வாங்குகிறானே ஐயா.

4. உச்சமன்ற போலிஸ்-வக்கீல் மோதல் விவகாரம் வழக்கு எந்த நிலையில்?
பதில்: தெரியவில்லை. இரு தரப்புமே வாய்தா வாங்கி காலம் கழிக்கும் என நினைக்கிறேன். கடந்த மாதம் நான் போலீசார் வக்கீல்கள் பிரச்சினை பற்றி எழுதியதில் மாற்றம் ஏதும் இல்லை. எனது எண்ணங்கள் அப்படியே உள்ளன.

5. பாலிவுட் படங்களின் வசூலை விட கோலிவுட் படங்கள் முந்துவது சரியா?
பதில்: இதில் சரி என்ன தவறு என்ன? எது வலிமையுடன் இருக்கிறதோ அது முந்துகிறது. எனக்கென்னவோ பாலிவுட்டுக்குத்தான் சான்ஸ் அதிகம் என தோன்றுகிறது.

6. பெங்களுரில் தியேட்டர்கள் மூடல்-சென்னயில் எதிர்நிலை-இப்படியே போனால்?
பதில்: இங்கே மட்டும் என்ன வாழுகிறதாம்? இங்கேயும் தியேட்டர்கள் ரொம்ப திறந்து கொண்டா வருகிறார்கள்?

7. கேரளாவிலும் ஏதாவ்து ஒரு சிலை திறந்து விட்டால்?
பதில்: யார் சிலை திறக்கலாம் என நினைக்கிறீர்கள்? அங்கு பாரதியார் இங்கு வள்ளத்தோல்/தகழி/பொற்றேகாட்/வயலார்? அப்பத்தானே யார் சிலை எங்கு உடைக்கப்படும் என அறியலாம்?

நிஜாம்
1) நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதால் இந்த கேள்வி. சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்மொழி குறித்து "தமிழ்மொழியை முழுமை பெற்ற மொழி என்பவர்கள் தன் கால்களை தானே நக்கிக்கொள்ளும் நாய்களைப் போன்றவர்கள்" என சொல்லியிருந்தார். இது குறித்து உங்களின் கருத்து?
பதில்: இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது பற்றித்தானே கேட்கிறீர்கள்? வடமொழியை உயர்த்திப் பேச வந்தவர் தேவையின்றி தமிழை சீண்டியுள்ளார். அவை இரண்டுமே நமது கண்கள்.

2) ஜெயா டிவி விசுவின் மக்கள் அரங்கம், சன் டிவி விஜய டி ஆரின் அரட்டை அரங்கம் ஒப்பிடுக?
பதில்: விசுவின் அரட்டை அரங்கத்தை ஓரளவுக்காவது ரசிக்கலாம். பேசுபவர்கள் காட்டுக் கத்தலாக கத்துவது, சிறுவர்கள்/சிறுமிகள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியில் பேசுவது ஆகிய எரிச்சல்கள் இரண்டு நிகழ்ச்சிகளிலுமே உண்டு என்றாலும், விசு சற்றே கௌரவமாக பேசுவார். ஆனால் இந்த டி.ஆர். என்கிற அராத்து பேர்வழி அடுக்கு மொழி பேசியே கொல்வார். சகிக்காது.

அனானி (11.08.2009 காலை 08.51-க்கு கேட்டவர்)
1. கலைஞரின் ஜெ பற்றிய அழைப்பு திருமதி ஜெ.-அவரது வயதுக்கு,அனுபவத்துக்கு ஏற்புடையதா? நாகரீகம் மீறிய செயலாகாதா?
பதில்: கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு அரசியல்வாதிகளுமே தமிழகத்தின் துர்பாக்கியம். நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பார்கள். ஒருவருக்கு மற்றவர் சரியான தண்டனைதான்.

ஆனால் ஒன்று. மைனாரிட்டி அரசு என்பது அரசியல் உண்மை. ஆனால் தன் பெயருக்கு முன்னால் செல்வி என்றோ திருமதி என்றோ போட்டு கொள்வது ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமை. அதில் கலைஞர் தலையிடுவது சரியில்லை. ஒன்றுக்கு மேல் ஒருவர் மனைவிகளை திருமணம் செய்து கொண்டு எல்லோரையும் தனது மனைவிகளாக அங்கீகாரம் தந்திருக்கிறார் என வைத்து கொள்வோம். ஆனால் ஒருதாரமணச்சட்டப்படி முதல் மனைவிதான் மனைவி. மற்றவர் வைப்பாட்டிகள்தான் என்பது நிலை. அதற்க்காக மற்ற மனைவியரது பெயருக்கு முன்னால் வப்பாட்டி என வைத்து அழைத்து விடுவீர்களா?

2. பொதுவுடமை கட்சிகளின் சாயம் 5 தேர்தலில் வெளுத்துவிடும் போலுள்ளதே?
பதில்: அவர்கள் சாயம் எப்போதோ வெளுத்து விட்டதே. தமிழகத்தைப் பொருத்தவரை அவர்க: ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியைத்தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

3. சரத் கட்சியும் போட்டியில் இருக்கா?
பதில்: தெரியவில்லையே. அது போட்டியில் இருந்தால் தேவலையா இல்லாவிட்டால் தேவலையா?

4. பன்றிக் காய்ச்சல் வேகமாய் பரவி பல உயிர்களை காவு வாங்கிவிடும் போலுள்ளதே?
பதில்: பத்திரிகைகள் செய்யும் ஓவர் பில்ட்அப் சகிக்கவில்லை. விஷயம் என்னவென்றால் பன்றிக் காய்ச்சல் பற்றிய நம்ம்பகத்தன்மை வாய்ந்த புரிதல்கள் குறைவே. அந்த புரியாமையே பயத்தை அதிகப்படுத்துகிறது.

5. வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக்கட்டத்திலா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. வரவர அவர் ஒரு ஜோக்கர் ஆகிகொண்டு வருகிறார்.

கோபால்
1. நிகழ்காலத்தில் வாழும் தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
பதில்: இருவருமே சமய சந்தர்ப்பங்கள், சுய லாபங்கள் ஆகியவற்றை மனதில் இருத்தி பேசுபவர்கள். என்னைப் பொருத்தவரை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

2. காதல் ஜாதியை ஒழிக்குமா?
பதில்: கண்டிப்பாக ஒழிக்காது.

3. போலியாய் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பற்றி உங்கள் கருத்து?
பதில்: நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

4. திமுக ஏற்படுத்திய தமிழ் உணர்வு தற்சமயம் எப்படியுள்ளது?
பதில்: தமிழ் மானத்தலைவரின் பேரன் ஹிந்தி படித்ததாலே மத்திய மந்திரி ஆனார் என பிரஸ்தாபிக்கப்பட்ட தமிழ்மானத்தலைவரே பெருமை அடித்துக் கொள்ளும் நிலையில்தான் தமிழ் உணர்வு உள்ளது.

5. வாழ்வு பற்றி உங்கள் கருத்து?
பதில்: வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா ஜாட்டான்.

6. சர்தார்ஜிகள் மிகவும் தைரியசாலிகள். நல்ல உழைப்பாளிகள், இருந்த போதிலும் அவர்களை கிண்டல் பண்ணி?
பதில்: அவர்கள் மேல் ஏனையோருக்கு இருக்கும் லேசான பொறாமைதான் காரணம். பிச்சைக்காரகளில் நான் சர்தார்ஜிகளை பார்த்ததில்லை. அந்த அளவுக்கு தன்மானம் உடையவர்கள். அவர்களில் பலவீமானவர்களை அந்த சமூகமே தத்தெடுத்துக் கொண்டு குருத்வாராக்களில் அவர்களால் இயலக்கூடிய வேலை வாஙிக்கொண்டு அவர்களுக்கு இருக்க இடம், உடுக்க உடை உணவு எல்லாம் தர ஏற்பாடு அசெய்கிறார்கள். அந்த கட்டுமானம், கட்டுப்பாடு இல்லாதவர்கள் அதனால் பொறாமை கொண்டு அவர்களை மட்டம் தட்டியாவது தங்கள் தளத்துக்கு கொண்டுவரப் பார்க்கிறார்கள். அதுதான் சர்தார்ஜி ஜோக்குகளுக்கு காரணம்.

7. பாஜக மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இப்போது?
பதில்: சிறுபான்மையினரை சாதாரண குடிமகன்களாக நடத்தாமல் தேவையற்ற சலுகைகளை அளித்து அவர்களுக்கு செல்லம் கொடுப்பதை அது ஏற்காத கட்சி. அது மதவாதக் கட்சி அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டம் இயற்றினால் இசுலாமியர் வருந்துவார்கள் என பம்மும் காங்கிரஸ்தான் இசுலாமியர் அனைவருமே தீவிரவாதிகள் எனச்சொல்லாமல் சொல்கிறது. உண்மையில் அதுதான் மதவாதக் கட்சி.

8. சிக்கலில் மாட்டிய வருண்காந்தியின் நிலை?
பதில்: நாகாக்க வேண்டும் என புரிந்து கொண்டால் சரி.

9. பொதுவாய் பொருளாதார வளர்ச்சிக்காக நியாய நெறிமுறை மீறல்கள், நுணுக்கங்கள் தந்திரங்கள் என்ற பெயரில் நடைபெறும் நிகழ்வுகள்?
பதில்: சில சமயங்களில் அவை தவிர்க்க இயலாது போய்விடுகின்றன. அதற்கு பல நேரங்களில் அரசின் யதார்த்தத்துக்கு விரோதமான சட்ட திட்டங்களே.

10. உங்கள் அனுபவத்தில் தனிமனித பொருளாதார முன்னேற்றத்திற்கு எது தடை?
பதில்: ரிஸ்க் எடுக்க பயப்படுவது.

11. கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் தேவையில்லை என்போர்?
பதில்: தலைமுறை தலைமுறைகளாய் வரும் சந்தோஷங்களை இழக்கிறார்கள்.

12. வாக்குச்சீட்டுத்தான் வேணும்னு புரட்சித் தலைவி ஜெயலலிதா கோருவதின் நோக்கம்?
பதில்: எந்த ஏற்பாடுமே 100% ஃபூல் ப்ரூஃப் ஆக இருக்கவியலாது. ஆனால் வாக்களிக்கும் எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய ஒவ்வொரு யந்திரமாக போக வேண்டும். கட்டுக்காவல்கள் அதிகம். தேவையானால் ஓட்டளிப்பு ஆரம்பிக்கும் முன்னால் அவற்றை டெஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வாக்குச்சீட்டு விஷயத்தில் கட்டுக்கட்டாக தில்லுமுல்லு செய்ய இயலும், செய்யவும் செய்தார்கள். வாக்களிக்கும் யந்திரம் பற்றி அதை உருவாக்கியவர் என்னும் முறையில் நம்ம வாத்தியார் சுஜாதா கோர்ட்டுக்கு முன்னாலேயே விளக்கம் எல்லாம் செய்து காட்டியுள்ளார். ஜெ சொல்வது பொறுப்பற்ற குற்றச்சாட்டு.

13. தமிழகத்தில் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதால் என்ன நடக்கும்?
பதில்: அதன் சவப்பெட்டியில் இன்னொரு ஆணி அடிக்கப்படும்.

14. மத்திய அரசு "பொடா" சட்டத்தைத் திரும்ப கொண்டுவந்தால்?
பதில்: காங்கிரஸ் அரசு அதை செய்யும் எனத் தோன்றவில்லை.

15. இதிகாசங்கள்,புராணங்கள் சொல்வது போல் உலகை படைத்த ஆண்டவன் ஏ‌ன் பூமிக்கு கலிகாலத்தில் வருவதில்லை? ஏன்?
பதில்: மக்களின் எதிர்ப்பார்ப்பு இது சம்பந்தமாக அதிகரித்துள்ளது. அம்மாதிரி வருகைக்கான ஸ்பெசிஃபிகேஷன்களும் அதிகரித்துள்ளன. ஆகவே இறைவனே நேரில் வந்தாலும் சட்டென அதை ஒத்துக்கொள்வது இல்லை.

கர்னல் Lionel Blaze 1795-98 காலக்கட்டத்தில் செங்கல்பட்டு கலெக்டராக இருந்தார். அச்சமயம் புயல், மழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கரை உடையும் அபாயம் இருந்தது. கலெக்டர் மனவியாகூலத்தில் ஆழ்ந்தார். கோவிலுக்கும் வருகை தந்தார். தாயார் சன்னிதிக்காக கட்டிடப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டார். பணத்தட்டுப்பாட்டால் வேலை முன்னேறவில்லை என்பதையும் கண்டார். இந்த ஏரியை ராமர் உடைப்பெடுக்காது காத்தார் என்றால் தாயார் சன்னிதியை தானே கட்டித்தருவதாக அவர் கூறிவிட்டு, சுவாமி தரிசனம் கூட செய்யாமல் தன் இருப்பிடத்துக்கு சென்றார். அன்றிரவு அவர் ஏரிக்கரைக்கு சென்றார். ஏரிக்கரையின் மேல் வில்லம்புகளுடன் இருவர் அங்குமிங்கும் நடப்பதை அவர் கண்டார். பிறகு இருப்பிடம் திரும்பி விட்டார். அடுத்த நாள் காலை புயல் மழையும் ஓய்ந்தன. இப்போது மனம் லேசான நிலையில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். சன்னிதியில் தான் முந்தைய தினம் பார்த்த அந்த இருவரின் மூர்த்திகளையும் கண்டார். அவர்கள் ராம லட்சுமணர் என அவரிடம் கூறப்பட்டது. மனம் மகிழ்ந்த அவர் தான் சொன்னபடி தாயார் சன்னிதியை கட்டித் தந்தார். இது ஒரு கல்வெட்டில் அந்த கோயிலுக்கு சென்றால் காணக்கிடைக்கும். எதற்கும் இந்த சுட்டிக்கு செல்லுங்களேன்

இதை என்னவென்று கூறுவீர்கள்? (வால்பையனின் இதற்கான கமெண்ட் இப்போதே எனக்கு தெரிகிறதே - வெள்ளைக்காரர்களிலும் முட்டாள்கள் உண்டு).

16. இன்றைய விலைவாசி உயர்வின் முக்கியகாரணம் என்ன என்ன?
பதில்: The same old law of supply and demand. Too much money chasing too few goods.

17. வங்கியில் பர்சனல் லோன் வாங்கலாமா இல்ல கன்ஸ்யூமர் லோன் வாங்கலாமா, எது நல்லது?
பதில்: பிணை ஏதும் இன்றி கடன் பெறுபவரின் நாணயம் மற்றும் கடனை திருப்பித் தரும் திறன் ஆகியவற்றை வைத்து தரும் கடனைத்தான் பெர்சனல் லோன் என்கிறார்கள் என நான் புரிந்து வைத்துள்ளேன். சில பொருட்களை வாங்க பிணை பெற்று கடன் தருவதுதான் கன்ஸ்யூமர் லோன் என்றும் நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை கடன் வாங்குவதையே தவிர்க்க நினைக்கிறேன். சந்தோஷமா கடன் வாங்குவது பற்றி நண்பர் டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களை கேளுங்களேன்.

18. மாதா மாதம் சம்பளத்தில் பிடிக்கற வரியைக் குறைக்க ஏதாவது வழி இருக்கா?
பதில்: சில வகை சேமிப்புகளுக்கு ரிபேட்டுகள் உண்டு. அவை எல்லாவற்றையும் முதலிலேயே கண்டுணர்ந்து செய்வதும் வரிபிடிப்பை குறைக்க வழி செய்யும். எது எப்படியாயினும் திசம்பர் 31-க்குள் ஒரு தெளிவான நிலைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் முதலில் சொல்லி குறைவாகக் கழிக்கப்பட்ட தொகை ஜனவரி முதல் மார்ச் வரைக்கும் எகிறும் வாய்ப்பு உண்டு.

19. மனிதர்கள், எல்லாருக்கும் இன்ஸுரன்ஸ் தேவை தானா? எது பெஸ்ட் தனியார் அல்லது எல் ஐ சி?
பதில்: எனது இன்ஸூரன்ஸ் நாட்கள் எல்லாமே எல்.ஐ.சி. யின் வசத்தில்தான் கழிந்தன. ஆகவே தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பற்றி அறிவு ஏதும் இல்லை.

மற்றப்படி நான் எடுத்த சில முடிவுகள் என்னையறியாமலேயே நல்லதாக அமைந்து விட்டன. உதாரணத்துக்கு நான் பம்பாயில் இருந்தபோது இரண்டு பாலிசிகள் எடுத்தேன். பிறகு சென்னைக்கு வந்ததும் ஒரு பாலிசி. நான் என்ன செய்தேனென்றால் எந்த அலுவலகத்தில் பாலிசி எடுத்தெனே அங்கேயே என் கணக்கை வைத்துக் கொண்டேன். ஊர் மாற்றும்போதெல்லாம் பாலிசிகளை மாற்றம் செய்யவில்லை. முதலிலிருந்து கடைசி வரை அந்தந்த பாலிசி அந்தந்த அலுவலகத்திலேயே இருந்ததால், மாற்றங்களில் வழக்கமாக நடக்கும் “ஆவணங்கள் தொலைந்துபோவது” எல்லாம் இல்லை.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் எல்.ஐ.சி. பிரீமியம் கட்டுவதற்காக அனுப்பப்படும் செக்குகளுக்கு அவுட்ஸ்டேஷன் கமிஷன் கிடையாது. ஆகவே சென்னையிலிருந்து பம்பாய்க்கும், பிறகு தில்லியிலிருந்து சென்னைக்கும் பம்பாய்க்கும் செக்குகள் அனுப்பித்து வந்தேன். எல்லா பாலிசிகளும் முதிந்து பணமும் கிடைத்தாகி விட்டது.

20. இந்தியாவில் பரதம், டிஸ்கோ இரண்டையும் நல்லா ஆடுறவங்க யார்?
பதில்: தெரிந்த பெயராக வேண்டுமென்றால் கமலஹாசன். மற்றப்படி எல்லா கோலிவுட் டான்ஸ் மாஸ்டர்களுக்கும் இருவகை நாட்டியங்களும் தெரியும், தெரிய வேண்டும்.


அனானி (13.08.2009 காலை 08.47-க்கு கேட்டவர்)
1. சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை?
பதில்: சைவமா, அசைவமா? சைவம் என்றால் கீழே நான்காம் கேள்விக்கான பதிலைப் பார்க்கவும். சமீபத்தில் 1953-ல் படித்து ரசித்த நகைச்சுவை.

2. மனிதர்களுக்கு நெற்றி அகலமாக இருந்தால்?
பதில்: அதிக அறிவு என்பார்கள். என்னைக் கேட்டால் நன்றாக நாமம் போட ஏற்றது என பலரால் உணரப்படும் என்பேன்.

3. கால் பெருவிரலை விட அடுத்த விரல் அதிக நீளமாய் இருந்தால்?
பதில்: அது ஒரு பெண்ணுக்கு இருந்தால் அவள் புருஷன் அவளிடம் படாதபாடு படுவான் எனப் பொருள்படும்படி ஒரு திரைப்பட க்ளிப்பிங் பார்த்த ஞாபகம் இருக்கிறது. யாராவது படத்தின் பெயர் சொல்லுங்கப்பு. (திருடா, திருடி படமோ)?

4. காமராஜின் வெற்றிக்கு காரணம் அவரது நீண்ட கைகள்?
பதில்: அது என்னமோ தெரியாது. ஆனால் இக்கேள்வி விகடனில் சமீபத்தில் 1953-ல் நான் படித்த ஒரு ஜோக்கை நினைவுபடுத்தி விட்டது (காமராஜுக்கும் இந்த ஜோக்குக்கும் சம்பந்தமில்லை).
சிறைச்சாலையில்:
ஏகாம்பரம்: நீ எப்படி பிடிப்பட்டாய்?
மாணிக்கம்: என் கால்கள் குட்டையாக இருந்ததால் என்னால் வேகமாக ஓட இயலவில்லை.
ஏ: அது சரி, ஏன் உன்னைத் துரத்தினார்கள்?
மா: என் கைகள் நீளமாக இருந்ததால்.


5. சாமுத்திரிகா லட்சணத்துக்கும் வாழ்வின் வெற்றிக்கும் தொடர்பு உண்டா?
பதில்: சாமுத்திரிகா லட்சணம் ஒருவருக்கு சரியாக அமைந்து, அது அவருக்கும் புரிந்தால் அவருக்கு ஒரு சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் வரும். அதனால் வாழ்க்கையில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.

6. பரதக் கலையின் இன்றைய நிலை?
பதில்: கொஞ்சம் காஸ்ட்லியான கலை. நன்கு கற்றுக் கொண்டு அரங்கேற்றம் செய்ய பல லகரங்கள் தேவை. எதற்கும் இந்த சுட்டிக்கு போய் பாருங்கள். உங்களுக்கு தேவையான விஷயம் கிடைக்கலாம்.

7. அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்?
பதில்: அது காலத்தின் கட்டாயம். இது சம்பந்தமாக நான் இப்பதிவை எழுதிய பின்னால் எனது கருத்துகளில் மாற்றம் ஏதுமில்லை.

8. அரசியலில் பெண்கள் கொடி பறக்கிறதே?
பதில்: இட ஒதுக்கீடு வேறு வரப்போகிறது. நடக்கட்டும், நடக்கட்டும்.

9. மகளிருக்கு தனி ரயில். அடுத்து?
பதில்: திருமணத்துக்கு பின்னால் மகளிருக்கு மட்டும் தனி தேன்நிலவு என்று இல்லாமல் இருந்தால் சரிதான்.

10. இந்தியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? ஏன்?
பதில்: சஞ்சீவ்குமார். ஏன் என்றால் பதில் கூறுவது கஷ்டம். அவரது அலட்டிக் கொள்ளாத நடிப்பு எனக்கு பிடிக்கும். உதாரணத்துக்கு கணவன், மனைவி மற்றும் சின்னவீடு என்னும் ஹிந்தி படத்தின் இந்த க்ளிப்பிங்கை பாருங்கள்.

11. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியின் மைனஸ் பாயிண்ட்?
பதில்: சரியான எதிர்க்கட்சி அமையாததால் இவர்கள் தலை கால் தெரியாமல் ஆடுகிறார்கள். அது அவர்களுக்கே நல்லதல்ல.

12. தளபதி ஸ்டாலின் மகள் மருமகன் ரகசியமாய் திருவண்ணாமலை கிரிவலம். கலைஞரின் பதில் என்னவாயிருக்கும்?
பதில்: ஏன் ரகசியம் வெளியே தெரியுமாறு விட்டீர்கள் எனக் கேட்டிருப்பாராக இருக்கும்.

எம். கண்ணன்
1. ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' படித்ததுண்டா ? கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்' ? இவையெல்லாம் மாஸ்டர் பீஸ் என சொல்கிறார்களே? அப்படி என்ன சிறப்பு (அல்லது வாசிப்பனுபவம்) இக்கதைகளில் ?
பதில்: படித்ததில்லை, ஆகவே இதற்கான பதில் என்னிடம் இல்லை.

2. தற்கால (பெரும்பாலான) இளைஞர்கள் மொபைல் ஃபோன், சினிமா, இன்டர்நெட், குடி, செக்ஸ் - இந்த விஷயங்களிலேயே முழ்கி இருக்கிறார்களே? உழைப்பில் ஏன் அத்தனை அக்கறை இல்லாமல் எல்லாமே மேற்சொன்ன விஷயங்களைச் சுற்றியே உலாவுகிறார்கள்?
பதில்: மொபைல் ஃபோன், இணையம் ஆகியவற்றை மேற்சொன்ன லிஸ்டுகளில் நான் சேர்க்க மாட்டேன். எனது லேண்ட்லைன் ஃபோனின் இன்கமிங் அழைப்புகள் எனது செல்பேசிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இணையம் இன்றி எனது மொழிபெயர்ப்பு வேலைகள் நடக்காது. மற்றப்படி தற்கால இளைஞர்கள் என்று ஒன்றுமே கிடையாது. அவர்களை பற்றிய புகார்கள் பற்றி நான் இட்ட இப்பதிவைப் பாருங்களேன்.

3. மீண்டும் ஜெ.ஆட்சிக்கு வந்தால் எஸ்.வி.சேகர் மீது கஞ்சா வழக்கு வருமா ? இல்லை ஆடிட்டர் டைப் டிரீட்மெண்டா ? எந்த தைரியத்தில் அவர் கட்சியை முறைத்துக் கொண்டே இந்த நிலைமைக்கு தன்னை கொண்டுவந்துள்ளார்?
பதில்: அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

4. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், எஸ்.ரா.வும் இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறார்களே ? அப்படி என்னதான் இருக்கிறது அக்கதைகளில்? (படிக்காததால் தான் கேட்கிறேன்) - வலைபதிவர்கள் மூலம் தான் இந்த உலக சினிமா, இலக்கியம் எல்லாம் அறிமுகமாகிறது - எனவே அவர்களுக்கு நன்றி)
பதில்: நான் படித்த ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் மட்டுமே. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததில்லை. எனக்கென்னவோ ரஷ்ய நாவல்களில் வரும் பெயர்கள் வாயில் நுழைந்ததில்லை.

5. வாசல் திண்ணை, ரேழி, கேமரா உள், கூடம், முற்றம், ரெண்டாம் கட்டு போன்ற டைப் வீடுகளில் வசித்ததுண்டா ? அந்த அனுபவங்கள் பற்றி எழுதுங்களேன் ? (மும்பாய், டில்லி, சென்னை வீடுகளைப் பற்றியும் வசதிகள், வாடகைகள் பற்றியும் சில பதிவுகள் போடுங்கள்)
பதில்: எனது முதல் 23 ஆண்டுகள் அம்மாதிரி வீடுகளில்தான் கழிந்தன. இப்போது கூட அம்மாதிரி வீடுகளைப் பார்த்தால் பழைய ஞாபகங்கள் வருகின்றன. அவற்றைப் பற்றி நீங்கள் கேட்டு கொண்டது போல பதிவுகள் போட்டால் போயிற்று.

6. பாக்யராஜ் ரோகிணி நடித்த 'பவுனு பவுனுதான்' படத்தில் ஐஸ் புரூட் அய்யர் என ஒரு கதாபாத்திரம் வருமே? ஐஸ்புரூட் என தெருக்காரர்கள் (சிறு பசங்கள் உட்பட) கேலி செய்வார்கள். அது என்ன ஒய் ஐஸ் புரூட்? ( ) கிளுகிளுப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
பதில்: ஓரல் செக்ஸை குறிக்கும் ஒரு அசிங்கமான வர்ணனைப் பெயர் அது.

7. 1990களுக்குப் பிறகு வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் படத்தின் கிரெடிட்ஸ் எனப்படும் பணியாற்றிய அனைவரின் பெயர்களும் படம் ஆரம்பத்தில் வெளியிடாமல் படம் முடிந்தபின் வெளியிடுகின்றனர் - அதுவும் மிகவும் பொடி எழுத்துக்களில்.! ஹாலிவுட்டைப் பார்த்து காப்பியடித்து இந்தப் பழக்கத்தை பெரிது படுத்தியவர்கள் மணிரத்னமும் கமல்ஹாசனும் தான். எத்தனை பேர் படம் முடிந்தவுடன் பணியாற்றவர்களின் பெயரைப் பார்க்கப் போகின்றனர் அல்லது தியேட்டரில் பிரொஜக்டரை கடைசி சீனிலேயே ஆஃப் செய்துவிடுகின்றனர். படத்தின் ஆரம்பத்தில் எல்லோருடைய பெயரும் வந்தால் தானே பணியாற்றியவர்களுக்கும் ஒரு வெளிச்சம் கிடைக்கும் (தொழில்நுட்பக் கலைஞர்கள் / உதவியாளர்கள், பிஆரோ, இசை, காமெரா, ஸ்டுடியோ உதவி என பலர்)
பதில்: படத்தை பொருத்தது அது. அன்பே சிவம் பட விஷயத்தில் ஆடியன்ஸ் ஒரு மாதிரியான டிரான்ஸ் நிலையில் இருந்தனர். அப்போது கிரெடிட்டுகள் கீழிருந்து மேலே சென்றது மனதுக்கு உவந்ததாகவே இருந்தது. 80 நாட்களில் உலகைச் சுற்றி என்னும் ஆங்கிலப் படத்தில் இந்த டைட்டில்ஸ்கள் சிறப்பான முறையில் காட்டப்பட்டன. அதே போல ஜான் போல் பெல்மோண்டோ நடித்த L'héritier என்னும் பிரெஞ்சு படத்தில் கடைசி காட்சியில் கதாநாயகன் சுட்டுக் கொல்லப்படுவார். உடனே படம் முடிந்து டைட்டில்ஸ் ஆரம்பிக்கும். பின்னணியில் அந்த கொலைக் காட்சியை வேவ்வேறு கோணங்களில் காண்பிப்பார்கள். கிட்டத்தட்ட 10 கோணங்கள் என்று எனது ஞாபகம். ஆகவே டைட்டில்ஸை விடாது பார்த்தோம். மற்றப்படி நீங்கள் சொல்வதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

8. வலைப்பதிவுகளில் இவ்வளவு விவரமாக அரட்டை அடிக்க முடிகிறதே - பல்வேறு வயது கொண்டவர்களுடனும், பல்வேறு வித பின்னணி கொண்டவர்களுடனும். இதுமாதிரி அரட்டையை (சண்டையில் முடியாமல்) உங்கள் தெரு பெரிசுகள்/சிரிசுகளுடனோ அல்லது உறவினர்களுடனோ தொடர்ந்து நட்பு பேண முடியுமா? வலைப்பதிவு கொடுத்த பேறு தானே இது?
பதில்: இதில் சந்தேகம் என்ன?

9. சுஜாதாவின் சிங்கமய்யங்கார் பேரன் நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா ? அந்தக் கதை பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் வீட்டில் / குடும்பங்களில் / உறவுகளில் அதுமாதிரி ஒரு நிகழ்வுக்கு ஒப்புக் கொள்வீர்களா? சாதக பாதகம் என்ன?
பதில்: இந்த புத்தகம் பற்றி முன்பே ஒரு கேள்வி வந்தது. ஆனால் நான் இப்புத்தகத்தை படிக்காததால் பதில் கூற இயலவில்லை - அப்போதும், இப்போதும்.

10. பிராமண கதாபாத்திரங்கள் இல்லாத கதை கொண்ட திரைப்படங்களை விட பிராமண கதாபாத்திரங்கள் கொண்ட (அல்லது அவர் ஒரு பிராமண வேடத்திலாவது நடித்த) கமல்ஹாசனின் படங்கள் தான் வெற்றி பெற்றதில் அதிகம். தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார். அப்புறம் ஏன் இந்த பெரியார், கருப்புச் சட்டை போன்ற வேஷம்?
பதில்: கமலஹாசன் அற்புதமான கலைஞர். அவரது படைப்புகளால் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். அவை போதுமே. அவரது நம்பிக்கைகள் அவர் இஷ்டம். நான் ஏன் அது பற்றிக் கருத்து சொல்ல வேண்டும்?


கிருஷ்ணகுமார்
1. Does the Indian govt do enough to stop swine flu?
பதில்: இதற்கு மேல் எப்படி செயல்பட முடியும்?

2. Is there any difference between swine flue and bird flue?
பதில்: கண்டிப்பாக வேற்றுமைகள் உண்டு. மருத்துவர் ப்ரூனோ இன்னும் சரியான பதில் தருவார். இந்தச் சுட்டியில் உங்களுக்கு பதில் கிடைக்கலாம்.

3. What is a true government?
பதில்: மக்களின் தினசரி வாழ்க்கையை அவரவர் திறமைகளுக்கேற்ப வாழ்ந்து வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறத் தெவையான பின்புலனை தருவதே உண்மையான அரசு.

4. Which is your favouite video clipping in youtube?
பதில்: நாஸ்டால்ஜியாவுக்கு பாண்டவர் பூமி பாடல்
2001-ல் நாங்கள் சென்னைக்கு நிரந்தரமாக திரும்பிய அதே சமயத்தில் ராஜ்கிரண் நடித்த 'பாண்டவர் பூமி' படமும் திரைக்கு வந்தது. அப்படத்தின் கதை என் கதை போலவே இருந்தது. அதாவது சொந்த ஊருக்கே, பழைய வீட்டுக்கு குடிவருவது என்ற கதையின் கான்சப்டை மட்டும் கூறுகிறேன். அப்படத்தின் 'அவரவர் வாழ்க்கையில்' என்று தொடங்கும் பாட்டை எதேச்சையாக இன்று ரேடியோவில் கேட்டேன். சட்டென்று எனது ஞாபகம் 2001-க்கு சென்றது. அதன் சுட்டியைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

பக்திக்கு: ஸ்ரீகிருஷ்ணா சீரியலில் இக்காட்சியின் க்ளிப். ராமானந்த் சாகரின் கிருஷ்ணாவில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. அற்புதமாக குழல் வாசிக்கும் ஒருவனிடம் குழந்தை கண்ணன் வருகிறான். குழந்தைக்கு தானும் அதே மாதிரி வாசிக்க வேண்டும் என்ற விருப்பம், அதை அது வெளியிட, அன்புடன் குழந்தையை பார்த்து அந்த மனிதன் குழல் வாசிக்க தேவையான நீண்ட பயிற்சிகளை குறிப்பிட, குழந்தைக்கு பொறுமை இல்லை. பிறகு குழலூதுபவன் சொன்னது போல, தன் குழலை கையில் ஏந்தி பிரார்த்திக்கிறது, “அன்னை சரஸ்வதியே வணக்கம்” என்கிறது. மனதில் புல்லரிப்புடன் அன்னை கலைவாணியும் மேலேயிருந்து குழந்தை கண்ணனை நமஸ்கரித்து “என்ன கட்டளை பிரபோ” என்கிறாள். “அன்னை சரஸ்வதியே! இன்று நீ என் குழலை நினது இசையின் ஸ்வரங்களால் நிரப்புவாயாக” என்று. மேலே சரஸ்வதி தேவிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, “தங்கள் சித்தம் என் பாக்கியம் என்கிறாள் கலைவாணி. அவள் தன் கையை மேலே உயர்த்தி அருள் புரிய, கண்ணனின் குழலிலிருந்து மிக இனிமையாக கானம் எழுகிறது. தேவர்கள் மேலிருந்து வணங்குகின்றனர். குழல் கலைஞனோ திகைப்படைந்து கண்ணன் காலில் விழுகிறார்.

5.who is the best Spiritual Motivatator in india/world?
பதில்: என்னைப் பொருத்தவரை விவேகானந்தர்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

60 comments:

Anonymous said...

1. பாஜக வின் மூத்த தலைவர்களில் சிறந்த அறிவுஜீவி என பல நிலைகளில் நிரூபித்த ஜஸ்வந்த் சிங் ஜின்னாவை பாராட்டி புத்தகம் எழுதியதின் அடிபடை நோக்கம்,அதன் விளவு பற்றி?
2. ஒருவரை ஒருவர் புரிந்து பல வருடங்களாய் காதலித்து காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சோனியா அகர்வாலும், இயக்குனர் செல்வராகவனும் விவாகரத்து செய்ய பரஸ்பர சமரச முயற்சி‍‍ .இது மாதிரி செயல்களுக்கு அடிப்படை காரணம்‍,சந்தேக உணர்வுகளா,தட்டு மீறும் செயல்களா?
3.3.சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட்டு தீட்சதர்கள் ஆதிக்கத்தை அரசின் கட்டுக்குள் கொண்டு வந்ததது சரியா?அரசு இந்து மதத்தில் மட்டும் இப்படி செய்வது மாறும் நாளும் வருமா?தீட்சதர்கள் பார்ப்பனர் என்பதால் கழக அரசின் இந்த தலயீட்டுக்கும் கரணமா? உயர்/உச்ச‌ நீதி மன்றம் ஒருவேளை அரசின் செயல்களுக்கு மாறிய தீர்ப்பை வழங்கினால்?
4.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் கட்டுபடுத்த முடியாது என வீர வசனம் பேசும் பழநெடுமாறனின் இனப்பற்று தூய்மையானதா? இல்லை பிற வாய்ச் சொல்வீரர்கள் மாதிரிதானா?ஒரு சமயம் திமுகவின் பயங்கர தாக்குதலில் இருந்து இந்திரா அம்மையாரை காப்பாற்றிய இந்த காங்கிரஸ்காரார் இப்படி மாறியது எதனால்?யார் காரணம்?உங்கள் விமர்சனம்?
5.இன்றைய தொழில் நுட்ப வசதிகளில் பொறிவைத்து பிடிக்கும் தன்மைகள் தெரிந்த பெங்களூரு இளைஞர் பொறியாளர் இனியன் நடிகை சிநேகாவுக்கு காதல் டார்ச்சர் கொடுத்து மாட்டிக்கொண்டதற்கு காரணம் மன்ப்பிறழ்வு என சட்டத்தில் உள்ள ஓடைகளை காட்டி தப்பிக்கும் வாய்ப்பு உள்ளதே.இது மாதிரி செயல்களை அவர்கள் செய்யத் தூண்டுவது நடிகைகளின் கவர்ச்சி செயல்களா இல்லை அவர்கள் பற்றி வலையுலகில் ஆபாசமாய் கிராபிக்ஸ் முறையில் பரப்பும் படச் செய்திகளா?

சுழியம் said...

//.....ஆனால் ஒருதாரமணச்சட்டப்படி முதல் மனைவிதான் மனைவி. மற்றவர் வைப்பாட்டிகள்தான் என்பது நிலை. ....//

That is only for hindus. For others all women are flesh pleasures.

dondu(#11168674346665545885) said...

@சுழியம்
இல்லை. ஹிந்துக்களுக்கு என்று மட்டும் இல்லை. Monogamy பாவிக்கும் எல்லா சமூகங்களிலும் அதுதான் நிலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

krishanakumar said...

1.Tell the causes for economic slowdown?
2.How do we get rid of our past and guilt of mistakes and still be bold?
3.Diiffernce between phsycologists and pshychiartists ?
4.Narrate one of your embarrassing moments ever?
5.The reasons for the economic weakness of a country like India?
6.Tell the problem of elder brother in life and family?
7.Ways to overcome shyness?
8.The easier steps for becoming mentally rich?
9. The difference between Love and Infatuation?
10.If given a chance , what a normal person will select between life and wife and why ?

dondu(#11168674346665545885) said...

27.08.2009 பதில்கள் பதிவுக்கான கேள்விகள் கிருஷ்ணகுமாரின் 10 கேள்விகளுடன் அறுபதை தாண்டிவிட்டன.

இனிமேல் வரும் கேள்விகள் 03.09.2009 அன்று வரும் பதிவுக்கான வரைவுக்கு கொண்டு செல்லப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

/ dondu(#11168674346665545885) said...

27.08.2009 பதில்கள் பதிவுக்கான கேள்விகள் கிருஷ்ணகுமாரின் 10 கேள்விகளுடன் அறுபதை தாண்டிவிட்டன.

இனிமேல் வரும் கேள்விகள் 03.09.2009 அன்று வரும் பதிவுக்கான வரைவுக்கு கொண்டு செல்லப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


டோண்டு பதில்கள் - 27.08.2009

HOUSE FULL ON THE OPENING DAY
CONGRATS.

வால்பையன் said...

//பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்//

மீண்டும் பிறக்கவா இருக்கும்!

Anonymous said...

என்ன ஆஸ்தான காமாண்டர் வால் பையனைக் காணோம்!!

வால்பையன் said...

//காதல் ஜாதியை ஒழிக்குமா?
பதில்: கண்டிப்பாக ஒழிக்காது.//


ஆனால் சாதி வெறியர்களின் ஆணவத்தை ஒழிக்கும்!

வால்பையன் said...

//பிச்சைக்காரகளில் நான் சர்தார்ஜிகளை பார்த்ததில்லை.//

பொற்கோவிலின் முன்னால் பிட்சைகாரர்கள் இருக்கிறார்களாம்!

வால்பையன் said...

//வெள்ளைக்காரர்களிலும் முட்டாள்கள் உண்டு).//


சந்தேகமில்லாமல்! வெள்ளைகாரர்கள் அனைவரும் புத்திசாலிகளா என்ன!?

ராமரும், லச்சுமனரும் ஏரியை காக்க வந்தார்களா!? அப்போ பரதன் எங்கே போயிருந்தார்!? சீதா ஏன் வரவில்லை!
மேலும் வெறும் வில்லை வைத்து கொண்டு எப்படி ஏரியை உடையாமல் காக்க முடியும்!
வெறும் வில்லாலயே ந்ந்ரியை காக்க முடியுமென்றால் ராவணனை கொல்ல எதற்கு அத்தனை உதவு தேவைப்பட்டது!

dondu(#11168674346665545885) said...

//பொற்கோவிலின் முன்னால் பிட்சைகாரர்கள் இருக்கிறார்களாம்!//
இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சர்தாஜிகளாக இருக்க மாட்டார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்?
பதில்: அது காலத்தின் கட்டாயம்.//

அதே ஒப்பந்தம் அமெரிக்காவை தவிர வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தால்!?

வால்பையன் said...

//அரசியலில் பெண்கள் கொடி பறக்கிறதே?//

கொடி பறப்பதில் தப்பில்லையே!
வேறு ஒன்று தான் பறக்கக்கூடாது!

வால்பையன் said...

//திருமணத்துக்கு பின்னால் மகளிருக்கு மட்டும் தனி தேன்நிலவு என்று இல்லாமல் இருந்தால் சரிதான்.//

கஞ்சபயன் மனைவியை விட்டு தனியாக தேனிலவு போவது மட்டும் சரியா!?

dondu(#11168674346665545885) said...

ஒரு கஞ்சன் தேன் நிலவுக்கு மனைவியை அழைத்து போய் விபத்து மாதிரி செட் அப் செய்து மனைவியை கொன்று விட்டானாம்.

இருந்தாலும் போலீஸ் அவனை பிடித்ததாம்.

ஏனெனில் தேன்நிலவுக்காக டிக்கட் வாங்கும்போது தனக்கு மட்டும் ரிடர்ன் டிக்கெட்டாக வாங்கிக் கொண்டு மனைவிக்கு சிங்கிள் டிக்கெட் மட்டும் வாங்கியிருந்தானாம் அந்த கஞ்சப்பிசுனாறி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//1990களுக்குப் பிறகு வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் படத்தின் கிரெடிட்ஸ் எனப்படும் பணியாற்றிய அனைவரின் பெயர்களும் படம் ஆரம்பத்தில் வெளியிடாமல் படம் முடிந்தபின் வெளியிடுகின்றனர் -//

உங்கள் வருத்தம் புரிகிறது!
ஜாக்கிசான் படங்களில் அம்மாதிரி எழுத்து வந்தாலும் ஆப்புரேட்டர் அதை நிறுத்தினால் அவருக்கு ஆப்பு தான்!
அம்மாதிரி முறைகளை பயன்படுத்துதல் நலம்!
உதாரணம் ”சரோஜா”

வால்பையன் said...

//பிராமண வேடத்திலாவது நடித்த) கமல்ஹாசனின் படங்கள் தான் வெற்றி பெற்றதில் அதிகம். தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார்.//

சயின்ஸ் பிஷன் ஆங்கில படங்கள் பார்த்ததுண்டா! தீடிரென்று நாட்டிலில் ஒரு பிரச்சனை வரும் உடனே ராணுவம் ஒரு லிஸ்ட் தயாரிக்கும் அதில் பலதுறைகளை சார்ந்த வல்லுனர்கள் இருப்பார்கள், ஆனால் பேருக்கு பின்னாடி சாதியோ, மதமோ இருக்காது! அது மாதிரி தான் சினிமா சம்பாரிக்கவும் எடுக்கப்படுகிறது, சம்பாரித்தால் தான் அடுத்த சினிமா!
திறமையை பயன்படுத்துகிறார் கமல்! அவரது படத்தில் பிராமண ஆதிக்கமே இருக்கிறது என்பது காமாலை கண் பிரச்ச்னை என்று நினைக்கிறேன்!

கமல் நாத்திகராக இருந்தாலும் என் அளவுக்கு கூட ஆத்திகர்களை சாடியதில்லை என்பது தனித்தகவல்!

வால்பையன் said...

//மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?//

அதுக்கு முன்னாடி சந்திச்சா பேசமாட்டிங்களா!?

வால்பையன் said...

அந்த வீடியோ கிளிப்பிங்ஸ் பார்த்தேன்!
அதுக்கு பேர் தான் அலட்டிகொள்ளாத நடிபென்றால் உண்மையான நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்!

முடியல! சிவாஜிக்கே அப்பானாட்டம் நடிக்கிறார்!

Anonymous said...

1.ஆண்வர்க்கததை அதிகம் அல்லல்படுத்துவது மதுப் பழக்கமா? மாதுப் பழக்கமா?
2.ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாய் மாறிவரும் தொந்தியைக் குறைக்க உபாயங்கள்?
3.தமிழ்நாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தில் இருப்பது பற்றி?
4.செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவருவது பற்றி?
5.தமிழ்த் திரை உலகில் புதிய இசையமைப்பாளர்களுள் உங்களைக் கவர்ந்தவர்?ஏன்?
6.அரசியல் தலைவர் ஒருவர் அடிக்கடி”இருப்பது ஒரு உயிர். அது போவது ஒரு முறை” என்பது பற்றி?

7.தி.மு.க.வினர் பார்வையில் ராகுலின் தமிழ்க அரசியல் நடவடிக்கைகள்?
8.கலைஞரின் பார்வை பாஜக பக்கம் ,ஜெ-சோனியா-வி.காந்த் கூட்டணிக்கு வழி செய்யுமா?
9. தமிழ் திலையுலகின் போக்கு எத் திசையில் பயணிக்கிறது?

10.அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஆன்மீகப் பணி பற்றி?
11.தூத்துக்குடி ஸ்பிக் மறுவாழ்விற்கு அரசின் உதவி வெற்றிபெறுமா?
12.மதுரை அமெரிக்கன் கல்லுரி போல்,பல கிருத்துவ கல்லுரிகளில்( சபைகள்) பதவிப் போட்டி சொத்துச் சண்டை என உலா வரும் செய்திகள் ஏசுபிரானின் அன்புக் கொள்கைக்கு மீறீய செயலல்லவா?

Anonymous said...

//தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் ஆட்களுக்கு கறியும் சோறு படைத்து, ஓசி கலர்டீவீ பாருண்ணு கவர் செய்து,ஓட்டுக்கு ருபாய் 200 கொடுத்த பிறகும் இடைத் தேர்தலில் அனத்தும் கோவிந்தா வானால்

இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்
1.திருவாரூரார்
2.தளபதியார்
3.அஞ்சாநெஞ்சார்
4.கவிதாயினியார்
5.நகரத்தார்
6.வட புலத்து அம்மையார்
7.வருங்கால பிரதமர்//

அடுத்த டோண்டுவின் பதில்கள் பதிவிற்கு இது சேர்க்க பட்டுள்ளதா?
இல்லை நாளை தேர்தல் முடிவினை பார்த்தபிறகு பதில்தர எண்ணம் உள்ளதா?

ஒரு கிசு கிசு: தொண்டாமுத்துரில் கொங்கு கட்சியும்,ஸ்ரீவைகுண்டத்தில் விஜயகாந்த் கட்சியும் வெற்றிப் பட்டியலிலாம்.

dondu(#11168674346665545885) said...

//அடுத்த டோண்டுவின் பதில்கள் பதிவிற்கு இது சேர்க்கப்பட்டுள்ளதா?//
ஆம், அடுத்த பகுதியின் வரைவுக்கு கொண்டு சென்றாகி விட்டது (27.08.2009)

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரமணா said...

//ondu(#11168674346665545885) said...

//அடுத்த டோண்டுவின் பதில்கள் பதிவிற்கு இது சேர்க்கப்பட்டுள்ளதா?//
ஆம், அடுத்த பகுதியின் வரைவுக்கு கொண்டு சென்றாகி விட்டது (27.08.2009)

அன்புடன்,
டோண்டு ராகவன்//


27-08-2009 வரைவில் எழுதிய பதில்,21-08-2009 அன்று தெரிய வரும் தேர்தல் முடிவுகள் ஒரு வேளை அரசு அலுவலர்களின் செய்நனறிமிகு கவனிப்பால் ( நகரத்து செல்வ மகன் விசயத்தில் நடந்ததுபோல்-தேர்தல் வழக்கு வேறு உள்ளதே இது பற்றி பேசுவதே சட்டப்படி தப்பு)) ஆளும்கட்சிகளுக்கு (திமுக-3, காங்.-2 ,)சாதகமாய் அமைந்து விட்டால் , பதில் எடிட் செய்து மாற்றப்படுமா இல்லை அப்படியே வெளியிடப்படுமா?

dondu(#11168674346665545885) said...

@ரமணா
உண்மை சொல்ல வேண்டுமானால் 27ம் தேதிக்கான பதில்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட கேள்வி அது இர்ரெலெவண்ட் ஆகாத வண்ணம் சற்றே எடிட் செய்யப்படும். எப்படி என்பதை அன்று பார்த்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மங்களூர் சிவா said...

nice!

செழியன் said...

//27-08-2009 வரைவில் எழுதிய பதில்,21-08-2009 அன்று தெரிய வரும் தேர்தல் முடிவுகள் ஒரு வேளை அரசு அலுவலர்களின் செய்நனறிமிகு கவனிப்பால் ( நகரத்து செல்வ மகன் விசயத்தில் நடந்ததுபோல்-தேர்தல் வழக்கு வேறு உள்ளதே இது பற்றி பேசுவதே சட்டப்படி தப்பு)) ஆளும்கட்சிகளுக்கு (திமுக-3, காங்.-2 ,)சாதகமாய் அமைந்து விட்டால் , பதில் எடிட் செய்து மாற்றப்படுமா இல்லை அப்படியே வெளியிடப்படுமா?//

இவர்கள் என்ன சொல்லி பெருமிதம் கொள்வார்கள்.

1.திருவாரூரார்

நடிகர் கட்சியின் நய வஞ்சகத்தின் நச்சுத் தன்மையின் நாசகார எண்ணத்தை நசுக்கி நல்லவர் எல்லாம் நம் பக்கம் என நாட்டுகும் நாடாள பகல் கன்வு காணும் சிறு மதி படைத்தோருக்கு ஓங்கிய குரலில் நிரூபித்த தமிழ் சாதிகளுக்கு ,நன்றி கூறி ,இவர்களுக்கு உழைப்பதற்காகவது இன்னும் 100 ஆண்டுகள் வாழ ,இந்தச் சாமனியனுக்கு ,அந்த இயற்கை அன்னை வழி செய்வாள்.

தந்தை பெரியாரும் நம் அண்ணாவும் இப்போது நம்மிடையே இல்லயே என்ற வருத்தம் எனக்குள் ஒரு நெருடலை தருவது உனக்குத் தெரியும்.

வாழ்க தமிழ்!
வளர்க அவர்தம் ஒற்றுமை!
வெல்க அவர்தம் மேலான புரிதல் !
2.தளபதியார்

மக்களை சந்திக்க பயம் கொண்ட அம்மையாரின் அழுகுனி ஆட்டம் கழகத்தின் பால் பேரன்பு கொண்ட மக்களிடம் எடுபட வில்லை என்பது உலகுக்கே உணர்த்தபட்டுள்ளது.
அர்சு உழியர்களின் உண்மையான காவலன் ,கர்ணமகாப்புரபு,வள்லல் ஆட்சி தொடர உழத்த அனைத்து உழைக்கும் வர்கத்திற்கும் கோடான கோடி நன்றி.
4.கவிதாயினியார்
இனி அப்பா,பெரிய அண்ணன்,சின்ன அண்ணன் இவர்கள் தான் தமிழ்கம்.நன்றி
5.நகரத்தார்
6.வட புலத்து அம்மையார்
7.வருங்கால பிரதமர்//

Anonymous said...

5.நகரத்தார்

இது காங்கிரஸ் அரசின் புதியப் பொருளாதரக் கொள்கைக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்.

6.வட புலத்து அம்மையார்

பெரியவருக்கு நன்றி.

7.வருங்கால பிரதமர்

காலம் பதில் சொல்லும்.

Anonymous said...

//நடிகர் கட்சியின் நய வஞ்சகத்தின் நச்சுத் தன்மையின் நாசகார எண்ணத்தை நசுக்கி நல்லவர் எல்லாம் நம் பக்கம் என நாட்டுகும் நாடாள பகல் கன்வு காணும் சிறு மதி படைத்தோருக்கு ஓங்கிய குரலில் நிரூபித்த தமிழ் சாதிகளுக்கு ,நன்றி கூறி ,இவர்களுக்கு உழைப்பதற்காகவது இன்னும் 100 ஆண்டுகள் வாழ ,இந்தச் சாமனியனுக்கு ,அந்த இயற்கை அன்னை வழி செய்வாள்.//

adraa sakki adraa sakkai

Anonymous said...

Dondu Sir,

please post the translation of

http://indiauncut.com/iublog/article/blogging-tips-from-a-jaded-veteran/

thanks
Suresh

செழியன் said...

09:55 மணி நிலவரம்

திமுக+காங் கூட்டணிக்கு மபெரும் வெற்றி

சரித்திரச் சாதனை

நீதிக்கு வெற்றி
அனைத்து தொகுதிகளிலும் 20,000 வாக்குகளுக்கு அதிகமாய் முன்னனியில்


இறுதியில் தலைவர்,தளபதி,அஞ்சா நெஞ்சன் சூழுரைத்தபடி வாக்கு வித்தியாசம் 50,000 த்தை தாண்டி செல்லும் வாய்ப்பு பிரகாசமாய்

தமிழக மக்கள் அனைவரும் மத,இன கலாச்சார வேறுபாடுகளை தாண்டி
தலைவர் திசை காட்டு திக்கில்


மீண்டும் கழகத்திற்கு 1971 ன் அசைக்க முடியா நிலை

தமிழ்கத்தின் நிரந்திர ஆளும் கட்சி திமுக என்பதை உலகிற்கு உணர்த்திய சுலநலக் கலப்பில்லாத அன்பு உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

வால்பையன் said...

திமுக+காங் கூட்டணிக்கு மபெரும் வெற்றி

சரித்திரச் சாதனை//

இது சரித்திர சோதனையப்பா!?

உங்களுகெல்லாம் அறிவே இல்லையா!?
ஏன் விலைவாசி ஏறுச்சு! இந்த அரசாங்கம் என்ன பண்ணுதுன்னு யோசிக்கவே மாட்டிங்களா?

Anonymous said...

//வால்பையன் said...

திமுக+காங் கூட்டணிக்கு மபெரும் வெற்றி

சரித்திரச் சாதனை//

இது சரித்திர சோதனையப்பா!?

உங்களுகெல்லாம் அறிவே இல்லையா!?
ஏன் விலைவாசி ஏறுச்சு! இந்த அரசாங்கம் என்ன பண்ணுதுன்னு யோசிக்கவே மாட்டிங்களா?//


reasons for the price rise

1.online trading in food commodities( your are also in that field-indirectly)

2.less rain

3.less production


4.population

5.wrong policies of bjp govt.

வால்பையன் said...

//wrong policies of bjp govt. //

உங்கள் அறிவு இங்கே வெளிபட்டது!
இனி நான் சொல்ல என்ன இருக்குது.

Anonymous said...

// வால்பையன் said...

//wrong policies of bjp govt. //

உங்கள் அறிவு இங்கே வெளிபட்டது!
இனி நான் சொல்ல என்ன இருக்குது.//It is normal, for any problem like this ,the ruling govt is in the habit of charging the policies of previous govt

IT SHOULD BE

Wrong agricultural policies of state/central governments

1. No farmer friendly laws
2.Agricultural sector is neglected
3.Middle men and brokers are benefitted
4.Laws are not that much effective to control the hoarders
5.All political parties are getting election fund from big business people,so no control over their "pagal kollai"
6.Proper plans are not projected and implemented to increase the food production by ruling goverenments.
7.All the water storage points are encroached by big people.
8.The canals which bring water during rainy season are not in good condition.
9.The amount alotted for clearing the unwanted things in the waterways are swallowed by the vested interested people.
10.No proper action by govts to recharge the ground water level
11.seeds/fertilizer/water all are contaminated.no preventive action by goverenments

NOW THERE IS A WIDE GAP BETWEEN SUPPLY AND DEMAND FOR FOOD ITEMS

THIS IS THE REASON FOR THE PRESENT PRICE RISE.

is it ok MR.TAILBOY?

வால்பையன் said...

//is it ok MR.TAILBOY? //

திட்டுறதையும் திட்டுபுட்டு ஒகேவான்னு வேற கேக்குறிங்களா?
எதா இருந்தாலும் தமிழ்ல திட்டுங்க ஜி!

Anonymous said...

டோண்டுவின் புதுமொழிகள்?
1.அசைந்து தின்கும் யானை; அசையாமல் தின்கும் வீடு
2.அசல் வீட்டுக்காரனுக்கு ஏண்டுக்கிட்டு அப்பக்காரனை அடிக்கலாமா...?
3.அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பெயல்.
4.அக்கு தொக்கு இல்லாதவனுக்கு தூக்கம் ஏது?
5.அக்கரையில் படர்ந்த பாகற்கொடிக்கு, இக்கரையில் பந்தலிடுவானேன்?

Simulation said...

பேரி திம்மப்ப செட்டி, சுங்கராம செட்டி, பச்சையப்ப முதலி, அழக பிள்ளை, மணலி முத்துக் கிருஷ்ண முதலி, லிங்கிச் செட்டி, டோண்டு ராகவன் - இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்ன?

டோண்டு அவர்களே, இந்தக் கேள்விக்கு இன்னமும் சரியான விடை அளிக்கவில்லை நீங்கள்.

- சிமுலேஷன்

dondu(#11168674346665545885) said...

@அடேடே, ஆமாம். அவர்கள் எல்லோருமே துபாஷிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இளைய கரிகாலன் said...

"கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.”

இதற்கு தங்களின் பதில் என்ன?

இந்த கேள்வி தகவல் அறிய மட்டுமே நிச்சயமாக தர்க்கத்திற்கு அல்ல.

dondu(#11168674346665545885) said...

@இளைய கரிகாலன்
திருதஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோரின் தந்தை வியாசர். அவர் கிருஷ்ணர் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக தெரியவில்லை.

மீதி மூவரும் ஒருவரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நிஜாம் said...

(நாயகன் பாணியில்) வாலண்ணே!

நீங்க ஆத்தீகரா? இல்ல நாத்தீகரா?

(ஏன்னா நம்ம டோண்டு அண்ணாச்சியையும் வாருறீய, நம்ம தமிழ் ஓவியா வந்தாலும் அவரையும் வாருறீயலே அதான்.,,ஹிஹிஹி)

வஜ்ரா said...

//
திருதஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோரின் தந்தை வியாசர். அவர் கிருஷ்ணர் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக தெரியவில்லை.
//

விசித்திரவீரரின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவிகளுக்கு வியாசரின் தவத்தால் பிறப்பவர்கள் தான் திருதஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன்.

கிருஷ்ணர் என்ற பெயர் விசித்திரவீரருக்கும் இருந்ததாக எங்குமே படித்ததில்லை.

Anonymous said...

//வால்பையன் said...

//is it ok MR.TAILBOY? //

திட்டுறதையும் திட்டுபுட்டு ஒகேவான்னு வேற கேக்குறிங்களா?
எதா இருந்தாலும் தமிழ்ல திட்டுங்க ஜி//


tailboy neenga

rompa nallavru

tradingsle vallavaru

dondkku pudiththavaru

kolgai kappavaru

nalla masaukararu

pathivulaka mannaru

puthumkalin puthiyavaru

jathipetham illathavru

vzhga vzhga pallaandu

Anonymous said...

//tailboy neenga

rompa nallavru

tradingsle vallavaru

dondkku pudiththavaru

kolgai kappavaru

nalla masaukararu

pathivulaka mannaru

puthumkalin puthiyavaru

jathipetham illathavru

vzhga vzhga pallaandu//


வால்பையன் கண்ணிலே இது இன்னும் படலியோ!

ரமணா said...

1.சமீபகாலமாய் அடுத்தவர் பிளாக் ஹேக் செய்து முடக்கும் போக்கு அதிகமாகிக் கொண்டே போகிறதே.ஆண்டவன் கொடுத்த மூளையை இப்படி பயன்படுத்தி பாடாய் படுத்துவோரை, போலி டோண்டுவை மடக்கி முடக்கியது மாதிரி, மடக்கி திருத்த வசதிகள் குறைவா? இல்லை அவர்கள்(கயவர்கள்) திறமைசாலிகளா?
2.இந்த தில்லுமுல்லர்கள் ,ரகசிய கோமிரா,ஸ்கேனர் வைத்து வங்கி ஏடிஎம் சென்டர்களில் தில்லுமுல்லு செய்து பலரின் பணத்தை கபளீகரம் செய்வதாய் மின அஞ்சல் வருகிறதே? இப்படியே போனால் ?
3. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த 1000 ரூபாய் மாதிரி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் உள்ளதாயும் மக்கள் ஒரு சில சீரியல்களை தவிர்க்க ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ,என்ன நடக்குது நாட்டிலே?
4.எதிரிக் கட்சிகளின் வோடிங் மெசினில் கயமைத்தனம் டெமான்ஸ்டேரேசன், தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டதே? உண்மையென்ன?
5.இலவசமாய் ஆண்டி மென்பொருள் கொடுத்துவந்த ஆவாஸ்ட் காசு கேக்குதே இனி அது மாதிரி இலவசமாய் நல்ல சாப்ட்வேர் எதும் உண்டா? ஒரு சிலர் சொல்வது போல், மென்பொருள் பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்கும் கம்பெனிகள் முதலில் வைரஸை விட்டு விட்டு பின்னால் ஊசி மருந்து ஸ/வே கொடுப்பதாய் வரும் தகவலில் உண்மையிருக்கா? உங்கள் கணனியை காக்கும் கவசம் எது?

RAMANA said...

ATM FRAUD:
A team of organized criminals are installing equipment on legitimate
bank ATM's in at least 2 regions to steal both the ATM card number and
the PIN. The team sits nearby in a car receiving the information
transmitted wirelessly over weekends and evenings from equipment they
install on the front of the ATM (see photos). If you see an attachment
like this, do not use the ATM and report it immediately to the bank
using the phone on the front of the ATM.

The equipment used to capture your ATM card number and PIN are
cleverly disguised to look like normal ATM equipment. A "skimmer" is
mounted to the front of the normal ATM card slot that reads the ATM
card number and transmits it to the criminals sitting in a nearby car.

At the same time, a wireless camera is disguised to look like a
leaflet holder and is mounted in a position to view ATM PIN entries.

The thieves copy the cards and use the PIN numbers to withdraw
thousands from many accounts in a very short time directly from the
bank ATM.

Equipment being installed on front of existing bank card slot.
The equipment as it appears installed over the normal ATM bank slot.
The PIN reading camera being installed on the ATM is housed in an
innocent looking leaflet enclosure.The camera shown installed and ready to capture PIN's by looking down
on the keypad as you enter your PIN
Pass it on

ரமணா said...

//ATM FRAUD:
A team of organized criminals are installing equipment on legitimate
bank ATM's in at least 2 regions to steal both the ATM card number and
the PIN. The team sits nearby in a car receiving the information
transmitted wirelessly over weekends and evenings from equipment they
install on the front of the ATM (see photos). If you see an attachment
like this, do not use the ATM and report it immediately to the bank
using the phone on the front of the ATM.

The equipment used to capture your ATM card number and PIN are
cleverly disguised to look like normal ATM equipment. A "skimmer" is
mounted to the front of the normal ATM card slot that reads the ATM
card number and transmits it to the criminals sitting in a nearby car.

At the same time, a wireless camera is disguised to look like a
leaflet holder and is mounted in a position to view ATM PIN entries.

The thieves copy the cards and use the PIN numbers to withdraw
thousands from many accounts in a very short time directly from the
bank ATM.

Equipment being installed on front of existing bank card slot.
The equipment as it appears installed over the normal ATM bank slot.
The PIN reading camera being installed on the ATM is housed in an
innocent looking leaflet enclosure.The camera shown installed and ready to capture PIN's by looking down
on the keypad as you enter your PIN
Pass it on//

மக்கள் விழிப்புணர்வு பெரும் வகையில் அடுத்த நங்கநல்லுர் பஞ்சாமிர்தத்தில் இது மாதிரி செய்திகளை சேர்த்தால் நலம்

ரமணா

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இப்படி வளைச்சு வளைச்சு அடிச்சா நான் என்ன பண்றது!

வால்பையன் said...

//(ஏன்னா நம்ம டோண்டு அண்ணாச்சியையும் வாருறீய, நம்ம தமிழ் ஓவியா வந்தாலும் அவரையும் வாருறீயலே அதான்.,,ஹிஹிஹி) //

நான் நாத்திகன்! ஆனால் பெரியார் தொண்டன் அல்ல!

வஜ்ரா said...

//
நான் நாத்திகன்! ஆனால் பெரியார் தொண்டன் அல்ல!
//

பெரியார் பேசிய நாத்திகத்திற்கும் நீங்கள் பேசும் நாத்திகத்திற்கும் என்ன வித்தியாசம் ?

வால்பையன் said...

//பெரியார் பேசிய நாத்திகத்திற்கும் நீங்கள் பேசும் நாத்திகத்திற்கும் என்ன வித்தியாசம் ? //

கடவுளை மற, மனிதனை நினை என்பது என் நாத்தீகம்!

எல்லோரையும் மற பாப்பானை மட்டும் அடி என்பது பெரியார் நாத்தீகம்!

Anonymous said...

//வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

இப்படி வளைச்சு வளைச்சு அடிச்சா நான் என்ன பண்றது!//
kalyanaparisu thangavelu paniyile

vaal payanidamulla thiramaiyai solla vidamaaddankaleppa!

வால்பையன் said...

//vaal payanidamulla thiramaiyai solla vidamaaddankaleppa!//

திரும்பவும் முதல்லயிருந்தா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

Anonymous said...

//வால்பையன் said...

//vaal payanidamulla thiramaiyai solla vidamaaddankaleppa!//

திரும்பவும் முதல்லயிருந்தா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!//


vaal paiyanukku pidikkaatha vaal athu enna?

கோபால் said...

1.கேரளாவில் துஷ்ட தெய்வங்களின் துணை கொண்டு செய்யப்படும் பில்லி சூனியம் உண்மையா?
2.அங்கு பெரிய கோவில்களின் பிரசன்னம் பார்த்து நடந்தவை நடப்பவைகளை துல்லியமாய் சொல்வதாய் பல பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.இது எப்படி சாத்யமாகிறது?
3.கேரள மாந்திரீகர்கள் சிலர் பெரிய கோவிலில் உள்ள தெயவத்தின் அனுக்கிர‌கத்தையே கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மைஉண்டா?
4.தெருக்களில் குறளி வித்தை காட்டுபவன் செயல்களும் இந்த மந்திர வகை சார்ந்ததா?
5. சில மாஜிக் காட்சிகளில் ஆளை ரத்தம் சிந்தாமல் இரண்டாய் வெட்டி பின் ஒட்டுகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது? இதுவும் மந்திரமா ? தந்திரமா?

வால்பையன் said...

//vaal paiyanukku pidikkaatha vaal athu enna? //

கண்டிப்பாக அய்யர்வால் கிடையாது!

Anonymous said...

//வால்பையன் said...

//vaal paiyanukku pidikkaatha vaal athu enna? //

கண்டிப்பாக அய்யர்வால் கிடையாது!//
kaaranam?

வால்பையன் said...

//கண்டிப்பாக அய்யர்வால் கிடையாது!//
kaaranam? //

காரணம்
எனக்கிருக்குற வால் கூட அய்யர்களுக்கு கிடையாது!

தயிர்சாதம் அந்நியன் ஆகுறது சினிமாவுல தான் நடக்கும்!

Anonymous said...

//வால்பையன் said...

//கண்டிப்பாக அய்யர்வால் கிடையாது!//
kaaranam? //

காரணம்
எனக்கிருக்குற வால் கூட அய்யர்களுக்கு கிடையாது!

தயிர்சாதம் அந்நியன் ஆகுறது சினிமாவுல தான் நடக்கும்!//


super anna

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது