மார்க்கபந்து எப்போது என்ன கூறினாலும் அது அவ்வண்ணமே நடக்கும் என்பதில் அவன் நண்பர்களுக்கு படு டென்ஷன் & பேஜார். அப்படித்தான் பாருங்கள், திடீரென வீட்டுக்கு தேவையான பொருட்களை பாதி விலைக்கு விற்கும் விஷயம் ஊருக்கு வந்தது. எல்லோரும் அதில் போய் விழ இவன் மட்டும் அது நல்ல விஷயம் அல்ல எனக்கூறி, முழுக்கவே ஒதுங்கி இருந்தான். முதலில் சிலருக்கு மட்டும் பொருட்களை தந்து விட்டு ஒரு நல்ல சுபயோக சுபமுகூர்த்தத்தில் அந்த வியாபாரி எல்லோர் பணத்தையும் சுருட்டிக் கொண்டு கடுக்காய் கொடுத்து போனான்.
ஏமாந்த அவன் நண்பர்களுக்கு பணம் போனதை விட இவன் “அப்போதே நான் சொன்னேன், யாருமே கேட்கவில்லை” என்று கூறும் தோரணையில் முகத்தை வைத்து கொண்டதுதான் தாங்கவில்லை. இம்மாதிரியே ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் ஒன்றரைக்கண்ணனுக்கு தனி வழி என்றுதான் இவன் இருந்தான். ஒவ்வொரு முறையும் இவன் சொன்னதுதான் நடந்தது.
அவன் நண்பன் சாம்பமூர்த்திக்கு அது தாங்கவில்லை. “என்னடா இது, ஒவ்வோர் முறையும் நீ சொல்லறபடி நடக்குது? ஒரு முறை கூட நீ தப்பா யோசிச்சதே இல்லையா”? என ஆதங்கத்துடன் கேட்டான் அவன். “ஏன் இல்லை? ஒரு முறை நான் யோசித்தது தப்பா போயிருக்கே” என்றான் மார்க்கபந்து. “அது என்ன சமாச்சாரம்”? என ஆவலுடன் சாம்பமூர்த்தி கேட்டான்.
“அதாகப்பட்டது, போன வருடம் குபேரா கம்பெனி ஷேர்கள் விலை திடீரென விழும்னு நான் சொன்னேனே, ஞாபகமிருக்கா”? என்று அவன் கேட்க, “ஏன் இல்லை? ஆனால் நீ சொன்னபடித்தானே நடந்தது? எனக்குக்கூட அதில் ஒரு லட்சம் பணால் ஆயிற்றே. அதுக்கென்ன இப்போ?” என சாம்பமூர்த்தி வயிற்றெரிச்சலுடன் சொன்னான். “அதுல என்ன விஷயம்னா, நான் கூட ஒரு கட்டத்துலே நான் இந்த ஷேர்கள் பற்றி சொன்னது தவறாக இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அவற்றின் விலை திடீரென விழுந்து அவ்வாறு நான் முதல்லே நினைத்தது தப்புன்னு நினைத்ததுதான் தப்புன்னு நிருப்பிச்சதைத்தான் இப்போ சொன்னேன்” என்றான் மார்க்கபந்து.
ஏனோ தெரியவில்லை, மார்க்கபந்துவை அவன் நண்பர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.
வேறு சில மார்க்கபந்துகள் எப்போதுமே நல்லவர்களாக இருப்பது கூட மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். மகாபாரதத்திலேயே பார்க்கலாம். துரியன் மிகக்கொடியவன். யுதிஷ்டிரன் நல்லவன், தர்மவான். ஆனாலும் பலருக்கு துரியனைத்தான் பிடிக்கும். மனிதர்களின் இயல்பான பலவீனங்கள் அவன் குணத்தில் உண்டு. ஆகவே அவனுள் தங்களைக் காண்பார்கள். ஆனால் யுதிஷ்டிரனை போல இருப்பது மிகக் கடினம். ஆகவே அவ்வாறு இருப்பவர்கள் மீது டீஃபால்டாக ஒரு பொறாமை கலந்த எரிச்சல் ஏற்படுகிறது. எப்படா அவன் சருக்குவான், கைகொட்டி சிரிக்கலாம் என எல்லோரும் காத்திருக்கின்றனர்.
யுதிஷ்டிரனின் உதாரணத்தையே இங்கு பார்ப்போம்.
மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள்.
முதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. கிருஷ்ணரின் திட்டப்படி பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்துவிட யோசித்து கொண்டிருக்கிறார்.
இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.
பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'என்னும் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். ஆனால் இது இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.
இப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.
அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.
அதே போல எப்போதும் தியாகம் செய்து வருபவர்களும் ரொம்பவுமே போர். உதாரணத்துக்கு குடும்பத்துக்கு மூத்த மகன் தன் தம்பி தங்கைகளுக்காக தியாகம் செய்து எல்லோரையும் முன்னேற்றி தான் மட்டும் சந்தியில் நிற்பது பல தமிழ், இந்தி ஆகிய மொழிப்படங்களில் காட்டப்பட்டுள்ளன. படிக்காதவன், ஆறிலிருந்து இருபது வரை, குலவிளக்கு ஆகிய பல படங்கள் வந்து பார்வையாளர்களின் கண்களை குளமாக்கிச் சென்றுள்ளன.
ஆனால் எனக்கு மட்டும் இம்மாதிரி தியாகம் செய்பவர்களைக் கண்டாலே பற்றிக் கொண்டு வரும். அது என்ன இவங்க மட்டும் பெரிய புடுங்கிகள் மாதிரி வளைய வராங்கன்னு என்ணுவேன். சரி, எனக்குத்தான் பிடிக்கவில்லை சம்பந்தப்பட்ட கதைகளில் கூட மற்ற பாத்திரங்கள் அவர்களை விரும்புவதில்லை, ஏன்? இத்தனைக்கும் அவர்கள் இந்த தியாகங்களின் பலன்களை பெற்றவர்களே.
இதில்தான் மனித மனத்தின் ஒரு சூட்சுமம் புலன்படும். தாங்கள் ஒரு முயற்சியும் செய்யாது மற்றவர்கள் செய்யும் தியாகத்தின் பலனை மட்டும் அனுபவிப்பவர்கள் மிகுந்த தாழ்வுணர்ச்சியை அடைகின்றனர். அவர்களது நன்றிக்கடன் அளவுக்கு மீறி போகிறது, ஒரு நிலைக்கு அப்புறம் அவர்களது மனது கடுமையாகிறது. என்ன பெரிசா செஞ்சு கிழிச்சான் இவன். செய்ய வேண்டிய கடமை அதனால்தானே செஞ்சான் என்றெல்லாம் விட்டேற்றியாக யோசித்து பிறகு ஒரு புள்ளியில் வெளிப்படையாக சொல்லவும் சொல்கின்றனர்.
தேவையான அளவுக்கு மட்டுமே உதவி, பிறகு அவரவர் தத்தம் பலத்தால் தங்களை பார்த்து கொள்ள செய்வதுதான் மிகச்சரியான அணுகுமுறை. அதை விடுத்து, “அவனுக்கு என்ன தெரியும் அவன் குழந்தைதானே” என்று சம்பந்தப்பட்ட குழந்தையே 30 வயது தாண்டிய பிறகும் தியாகம் செய்யும் அண்ணாவோ அக்காவோ கூறினால் குழந்தைக்கு என்ன போச்சு? எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு தியாகம் செய்பவரை அம்போ என விடுவதுதான் நடக்கிறது.
இங்கு அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். அவர்களை மன நோயாளிகளாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு பதிவில் கூட பார்த்தேன், “கோலங்கள் சீரியலில் அபி மனநோயாளியா, தொல்காப்பியன் மன நோயாளியா” என்று கேட்டிருந்தார்கள். இருவருக்குமே இதில் சம அளவு போட்டிதான். இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசி அரை எபிசோடில் ஆதி திருந்தி, “அக்கா என்னை மன்னிச்சுடுன்னு” சொல்ல அபியும் மன்னிச்சு தொலைப்பாள். நேயர்கள் வாயில் விரலை வச்சுண்டு பாத்திண்டிருப்பாங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
8 hours ago
38 comments:
மிகவும் இரசித்தேன் இந்தப் பதிவை.:)
-வித்யா
வணக்கம் டொண்டு சார்
\\அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். அவர்களை மன நோயாளிகளாகத்தான் நான் பார்க்கிறேன். \\
ம்ம்ம்ம் சரிதான் நானும் இப்படித்தான் தியாகமும் அளவோடுதான் இருக்கனும்.
இராஜராஜன்
/
தேவையான அளவுக்கு மட்டுமே உதவி, பிறகு அவரவர் தத்தம் பலத்தால் தங்களை பார்த்து கொள்ள செய்வதுதான் மிகச்சரியான அணுகுமுறை
/
well said!
Dondu Sir
I think Yudishtra did not do any sacrifice.He always upheld Dharma.This is not equal to sacrifice.
I think it was Karnan who did sacrifice.First he said he will use Naga astram only once to Kunti.Then, he gave away all his dharma as charity
for thursday:
1. Will Jinnah issue divide the B.J.P. now?
2. With the Vasundhara and Jaswanth epidemic, will the BJP survive, or will be a 'gone case'?
3. Instead of hisusual shouting from the rooftop that DMK's achievements alone are the cause for the victory, why did MK pull the Centre also into the picture?
4. With so many raids in Tamilnadu by the CBI (original and the duplicate) and arrests, can you please tell how many of the arrested are from the Brahmin community?
5. Is there any connection between Anita Radhakrishnan joining the DMK, and withdrawal of cases against him, within three days?
6. Did you read Kumudham this week, will there be a split in the ADMK now?
டோண்டு ஐயா,
கடைசி எபிசோடில் மஞ்ச துண்டு,கோலங்கள் ஆதியைப் போல் "மன்னிச்சுடுங்க செல்வி ஜெயலலிதா அவ்ர்களே" என்று சொல்லி விட்டால் புரட்சி தலைவி அம்மா மன்னித்து விடுவார்களா?
@அனானி
யுதிஷ்டிரன் தியாகம் செய்தான் எனக்கூறவில்லை. இப்பதிவில் இருவகை மனிதர்கள் வருகின்றனர். ஒருவர் எப்போதுமே உண்மை பேசுதல், நல்ல லட்சியங்களை வைத்திருத்தால் என்றெல்லாம் இருப்பதால் மற்றவர்களது எரிச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களில்தான் யுதிஷ்டிரர் வருகிறார்.
இன்னொரு வகையினர் தியாகம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள். அபி, தொல்காப்பியன், மேகலா மாதிரி.
கர்ணன் ஒரு தனி கேஸ். அவனைப் பற்றி வேறு ஒரு பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/06/1.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
தர்மனை ஏன் பலருக்கும் பிடிக்கவில்லை? ஏன் துரியோதனனைப் பலருக்கும் பிடித்திருந்தது, அவனுக்காகத் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள்?
சில கேள்விகள் மேலோட்டமாக எளிது.
மட்டம், கதை நன்றாக இல்லை,கோலங்கள் ஏன் வர வரக் கிறுக்கல் ஆகிக் கொண்டிருக்கிறது இந்த மாதிரிக் கேள்விகளுக்கு விடை தேடுவதை விட, அந்த மகர நெடும் குழைக்காதனை நேரில்தரிசிப்பது மிகவும் எளிது!
@கிருஷ்ணமூர்த்தி
கோலங்கள் பற்றிய ரெஃபரென்ஸ் இப்பதிவில் குறிப்பிட்ட எரிச்சலூட்டும் சில மனித இயற்கைகளை விளக்கும் பொருட்டே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
தாங்கள் ஒரு முயற்சியும் செய்யாது மற்றவர்கள் செய்யும் தியாகத்தின் பலனை மட்டும் அனுபவிப்பவர்கள் மிகுந்த தாழ்வுணர்ச்சியை அடைகின்றனர். அவர்களது நன்றிக்கடன் அளவுக்கு மீறி போகிறது, ஒரு நிலைக்கு அப்புறம் அவர்களது மனது கடுமையாகிறது. என்ன பெரிசா செஞ்சு கிழிச்சான் இவன். செய்ய வேண்டிய கடமை அதனால்தானே செஞ்சான் என்றெல்லாம் விட்டேற்றியாக யோசித்து பிறகு ஒரு புள்ளியில் வெளிப்படையாக சொல்லவும் சொல்கின்றனர்.
//
அப்பட்டமான உண்மை!
(தலைப்பைப் பார்த்து அறுவையாக இருக்குமோ என்று நினத்தேன்)
நல்ல பதிவு
//இங்கு அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். அவர்களை மன நோயாளிகளாகத்தான் நான் பார்க்கிறேன். //
சந்தேகமேயில்லாமல் முழுக்க முழுக்க உண்மை தான்!
ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன...?
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?
வீடுவரை......
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!
வீடுவரை......
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!
வீடுவரை......
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
1.எல்லாத் தந்தையர்களும் அனாதி காலம் தொட்டு தனது வாரிசுகள் , தான் வாழ்வில் அனுபவித்த துன்பங்களின் நிழல் கூட பட்டுவிடக் கூடாது என முடிவு செய்து தன் சக்திக்குமீறி கடனை உடனை வாங்கி , ஆங்கில வழிக் கல்வியும்,பின்னர் சிறப்பான பொறியியல் கல்வியும் அளித்து அதன் பலனாய் கைநிறைய சம்பளம் வாங்கவது காரணமாய் அமைவது. நிதர்சனம்.
ஆனால் இந்தப் பிள்ளைகள் ( பொதுவாய்_ பார்ப்பணர் சமூகத்தை தவிர_வால்பையன் சண்டைக்கு வரப் போகிறார்_டோன்டுவிடமே விளக்கம் உண்டு)தன் நலம் கருதாது, தியாகம் செய்து தன் வாழ்வின் நிலை உயர்த்திய தாய் தந்தையரை வயதான காலத்தில் சிறிதும் கவனிக்காமல் இருப்பதை என்ன நோய் என சொல்லலாம்?
2.குடும்பத்தில் ஆண்கள் (அண்ணன்கள்) தங்கைகளின் திருமணத்திற்கு குடுபத்து சொத்தினை விற்றும்,கடன்கள் வாங்கியும் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்த பிறகும், அரசின், பெண்கள் சொத்து உரிமை சட்டப்படி ,மீதம் உள்ள குடும்ப பூர்வீக வீட்டில் தனக்கு பங்கு கேட்டு படிக்கட்டுகளில் ஏறுவோருக்கு( பெண்கள்) என்ன நோய்?
3. வீடு வாடகைக்கு வரும் போது நல்லவர்கள் போல் நடித்து பின்னர் ஒரு சில ஆண்டுக்குப் பிறகு வீடு எனக்குத்தான் சொந்தம் என சொல்லும் மனிதர்களுக்கு என்ன நோய்?
1.பொய்புரட்டு பேசி தன்னை நம்பும் சாமனியர்களை ஏமாற்றி கோடி கோடியாய் தந்து குடுபத்து அனைத்து அங்கத்தினர்களுக்கும் பெரும் சொத்து சேர்த்து வைத்துள்ளதாய் வெளிப்படையாய் தெரியவரும் தமிழக அரசியல் பெரும் புள்ளிக்கு நரகத்தில் என்ன தண்டனை( நரகம் இருப்பதாய் நம்பும் முகமாக)?
2.தனது தோழிடயின் சொல்கேட்டு ரத்தம் சிந்தி வளர்த்த கட்சியை ஒரு சுயநலக் குடுபத்திடம் அடகு வைத்ததாய் அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்படுபவருக்கு என்ன தண்டனை( அன்னியன் படத்தில் சொன்ன கருத்துகளின் அடிப்படையில்)?
3.கறுப்பு பணத்தை கணக்காய் வாங்கி கல்லுரி கட்டி,கறாராய் பணம் வாங்கியும்,அரசின் இடங்களையும் தனிஸ்த்துக்கு ,வழக்குகள் வந்தாலும் கலங்காது மாய்மலாம் தொடந்து செய்யயும் இந்த போலி நடிக வள்ளலுக்கு என்ன தண்டனை( ரமணா பாணியில்)
4.தண்ணீர்விட்டா வளர்த்தோம் சர்வேசா கண்ணிர் விட்டல்லவா வளர்த்தோம் எனும் கொள்கைப்படி கட்சி உள்ளதாய் சொல்லும் நபர்களின் பெரும் பகுதியினர் சுயநலக் குமபல்களாய் மாறி,மக்களை வதம் செய்வோருக்கு படை பலமாய் உள்ளதை நாடறியும் .இவர்களுக்கு என்ன தண்டனை ( அந்தமான் தீவுச் சிறை பானியில்)
மேலே வந்த கேள்விகளுடன் 03.09.2009க்கான பதில்கள் பதிவின் வரைவு 60 கேள்விகளை தாண்டி ஃபுல் ஆகிவிட்டது.
இனிமேல் வரும் கேள்விகள் 10.09.2009 பதிவுக்கான வரைவுக்கு செல்லும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//மற்றவர்கள் செய்யும் தியாகத்தின் பலனை மட்டும் அனுபவிப்பவர்கள் மிகுந்த தாழ்வுணர்ச்சியை அடைகின்றனர். அவர்களது நன்றிக்கடன் அளவுக்கு மீறி போகிறது, ஒரு நிலைக்கு அப்புறம் அவர்களது மனது கடுமையாகிறது.//
நல்ல விளக்கம் ஐயா, எனக்கு பல காலமாக புரியாத ஒரு கோணம் இது. நன்றி மறப்பது என்பது எப்படி ஒரே சூழலில் வளர்ந்த சிலருக்கு மட்டும் அமைகிறது என்பதை மிக அழகாக விளக்கிஉள்ளீர்கள். நன்றி
ஆத்தில போனாலும் அளந்து போடுங்கிறதை எளிமையான உதாரணங்களோட நல்லா சுவாரசியமாக எழுதியிருக்கீங்க! நன்று. ஆனால் சிலருடைய குணநலம் முக்கியமாக மூத்த பிள்ளைகள் அப்படி ஆவதற்குக் காரணம் சிறு பிள்ளையிலிருந்தே அப்படிச் சொல்லி வளர்க்கப்படுவதாலிருக்கலாம். மனநோயாளி என்று எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அப்படி ஆக்கப்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. பின்னர் அவர், அவர் பார்த்துக் கொள்பவர்களை மனநோயாளி ஆக்குகிறார்.
@சங்கா
எல்லா மூத்த பிள்ளைகளுமே அப்படி இல்லை. சுய நலம் என்பது சிலருக்கு ரத்தத்திலேயே ஊறிவருகிறது.
இதைத்தான் வள்ளுவர் கூறுகிறார்,
“அன்பிலார் எல்லம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் இந்தப் பிள்ளைகள் ( பொதுவாய்_ பார்ப்பணர் சமூகத்தை தவிர_வால்பையன் சண்டைக்கு வரப் போகிறார்_//
வால்பையன் என்ன சண்டைக்கு வருவது? நானே அதை ஒத்து கொள்ளவில்லையே. சுயநலமாக இருப்பவர்கள் எல்லா சமூகங்களிலும் உள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லா கீது! இதுல இன்னும் ரெண்டு ஆங்கிள் சேத்துக்கலாம்னு தோணுது. ஓண்ணு இந்த தியாகம் செய்பவர்கள் மூச்சுக்கு மூணு தபா "நான் உங்களை முன்னுக்கு கொண்டு வர எப்டியெல்லாம் கஷ்டப்பட்டேன்..."னு சொல்லியே பேஜார் பண்றது. இது நாளாக நாளாக ஒரு நெகடிவ் எஃபெக்ட் கண்டிப்பா கொணாந்துடும்! தியாகம் பண்றவுங்க ஒரு ஸ்ட்ராங்கான மன நெலையில இருந்து பண்ணாத்தான் தியாகத்துக்கே மதிப்பா கீது! ரெண்டாவது SENSE OF PROPORTION! இது இல்லாம எது பண்ணாலும் பேஜாராதான் முடியும். தியாகமும் விதிவிலக்கில்லை அப்டீன்றது ஒரு வருத்தமான் மேட்டர்தான் வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
அட, அனானிகளாக வருபவர்களுக்குக் கூட ஞானம் வந்து விடுகிறதே!
/பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!/
நம்ப ஜாம்பஜார் கரீட்டாத்தான் கணிச்சிருக்காரு!
ஒருவிதத்தில்,நன்றியை எதிர்பார்ப்பதே ஒரு பலவீனத்தின் அடையாளம் தான்!
@கிருஷ்ணமூர்த்தி
அனானியாக இருந்தால் என்ன? சமீபத்தில் 1961-ல் வந்த பாத காணிக்கை படத்தில் வந்த கண்ணதாசன் பாடலான “வீடுவரை உறவு” பாட்டின் அடிகளை காப்பி செய்ய முடியாதா என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கடைசி அரை எபிசோடில் ஆதி திருந்தி, “அக்கா என்னை மன்னிச்சுடுன்னு” சொல்ல அபியும் மன்னிச்சு தொலைப்பாள். நேயர்கள் வாயில் விரலை வச்சுண்டு பாத்திண்டிருப்பாங்க.//
ஹ..ஹ...ஹா..ஹா.. என்று சிரிக்கலாம் தான்.. ஆனால் இப்படிப் பட்ட முடிவு மாறப் போவதாகக் கேள்வி.
1.தென்னக நதிகள் இணையும் திட்டம் எந்த நிலையில்?நெல்லையில் தொடங்கும் என்றார்களே?
2. மனசாட்சிக்கும் தன் மனதுக்கு விரோதமாக நடக்கும் மனிதர்கள்?
3.கர்நாடக இசைக்கச்சேரிகளில் உங்களை கவர்ந்தவர் யார்? என்ன ராகம் பிடிக்கும்?
4.செக்ஸ் கல்வி பள்ளிகளில் என்ற திட்டம் எந்த நிலையில்? ஆதரிக்கிறீர்களா?
5.தமிழக அரசியல் வாதிகள்/ஆந்திர அரசியல் வாதிகள்/கேரள அரசியல் வாதிகள்/ஆந்திர அரசியல் வாதிகள் ஒப்பிடுக?
6. அரசின் செயல்களால் விலைவாசி எதுவும் குறைய வாய்ப்புண்டா?
7. தமிழ் நாட்டில் இன்று ஒரு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
8.அஞ்சல்துறையில் நல்ல மாற்றம் தெரிகிறதே?
9. சினிமா கவிஞர்கள் இப்போது அரசியலுக்குள் பிரவேசம் ?
10.அ.தி.மு.க.வின் பலமும் பலவீனமும்?
11.தா.பாண்டியன் தேர்தல் முடிவுக்கு பிறகு?
12.சினிமா, அரசியல் ஒற்றுமை/வேற்றுமை
//1.தென்னக நதிகள் இணையும் திட்டம் எந்த நிலையில்? நெல்லையில் தொடங்கும் என்றார்களே?//
இக்கேள்வியும் அடுத்த 11 கேள்விகளும் 10.09.2009-க்கான டோண்டு பதில்கள் வரைவுக்கு முதல் 12 கேள்விகளாக சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சமீபத்தில் 1961-ல் வந்த பாத காணிக்கை படத்தில் வந்த கண்ணதாசன் பாடலான “வீடுவரை உறவு” பாட்டின் அடிகளை காப்பி செய்ய முடியாதா என்ன?//
சமீபத்தில் 1962-இல் வெளிவந்த திரைப்படம் `பாத காணிக்கை'.
அப்போது பார்த்த படம்; படத்தின் கதையைப் பெரும்பாலும் மறந்துவிட்டாலும் பாடல்களை இன்னும் மறக்க முடியவில்லை; என்றும் மறக்க இயலாது.
வட இந்தியாவில் வெகுவிமரிசையாய் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அதன் தொடர்ச்சியாய் விநாயகர் ஊர்வலம் ,பின் கடலில் சிலை கரைப்பு வைபோவங்கள் இப்போது தமிழ் நட்டிலும் சில வருடங்களாய் அமைதியாய் நடை பெற்று வரும் சமயத்தில் இந்தத் தடவை ஒரு சில அதிகாரிகள் அனுமதி மறுத்து சண்டித்தனம் செய்வதாயும் , முதல்வர் ,துணை முதல்வர் தலையீட்டு கைகொடுக்க வேண்டும் எனும் ராம. கோபாலன் கோரிக்கை நிறைவேறுமா?கலைஞர் வீட்டுப் பெண்கள் சமீபகலாமாய் பூஜை புனஸ்காரம் என தூள் கிளப்புவதாய் வரும் செய்திகளை பார்த்த பிறகு என்ன சொல்லத் (அரசின் கொள்கை)தோணுகிறது? சாதி நல்லிணக்கம் ஏற்படுத்தும் இந்த விழாவுக்கு துணை போகாமல் இடையூறு செய்வோரை அரசு கண்டிக்குமா? கடலில் சிலை கரைப்பதால் சுற்றுச் சூழல் பாதிப்பு எனும் பெரியார் பக்தர்களின் குற்றச்சாட்டு எடுபடுகிறதா? முன்பு பிள்ளையார் சிலை உடைப்பு நடத்திய பகுத்தறிவுச் சிங்கங்கள், இன்று பிரணவ மந்திரத்தின் அம்சமாய் விளங்கும் ஆதிமுல கனபதியின் சீர்மிகு விழா கண்டு என்ன சொல்வார்கள்/செய்வார்கள்?
...கந்தசாமி
1. Difference between Motivation. Habit?
2.Name the Indian chief minister served for the longest tenure? reason for that?
3.Will Jaswant Singh form a new party ?
4. Tell whether bluetooth option in cars is a dangerous idea?
5.Tell ways to overcome shyness and have good conversational skills to the younger generation ?
6.Methods to gauge a person's Intelligence quotient?
7. News T.V. Channels. will do away the News Papers from elite public in the coming days ?
8. Say something remarkable form your oldest memory?
9.The actors in comedy serials are becoming more vulgar in their acts.why?
10. what is your comfortable grade with strangers ?
That's been a problem for us :)
டோண்டுவின் புதுமொழிகள்?
1.எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
2.பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
3.ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
4 உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்
5. ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
6. அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே
7.விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.
8.ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
9.ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
10.உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு
1.சேமிப்புக் குணம்; சிக்கனம் , மனநிறைவு ஆகியவை பற்றி உங்கள் கருத்து என்ன?
2. அலுவலகத்தில் பிறரின் தவறுகளுக்காய் கண்டிப்பு காட்டும் போது எதிர் விளைவுகள் ஏற்படமால் தடுப்பது எப்படி?
3. நண்பர்கள் சந்திப்பின் போது பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் வறுமை சுட்டிக்காட்டப்பட்டு கேலி பேசும் போக்கு சரியா?
4.இந்தப் பணியை முடித்து தருகிறேன் என வாக்கு அளித்துவிட்டு பின்னாளில் நம் முகம் பார்த்து பேச அஞ்சும் மனிதர்கள் பற்றி என்ன சொல்வது?
5. சமீபகாலமாய் ஆன்மிக நெறியைப் போற்றுகிறவர்கள், ஆன்மிகத்தைப் பின்பற்றுகிறவர்கள் எண்ணிக்கையில் கூடுவதை பார்க்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது.
//இங்கு அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். அவர்களை மன நோயாளிகளாகத்தான் நான் பார்க்கிறேன்.//
வாழ்க்கை என்பது நாம் வாழ்வதற்காகவும் தானே... மற்றவர்களுக்காக அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்கள் மனறோயாளிகள் தான். சரியாகச் சொன்னீர்கள்...
Dondu sir,
In most of the comment sections on any of your post, we see questions for your weekly Q&A posted. They are totally unrelated to the topic, and is a hinderance in following up any valid discussions on the post.
If you can provide a constant post for poeple to post their questions then, then comments on other posts would be more meaningful?
This is my small opinion.
Magesh
1.மகாகவி பாரதிக்கும் இன்றைய கவிஞர்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
2. மன அமைதி தரும் தியானம் செய்யும் பழக்கம் உண்டா?
3.மன நிம்மதியுடன் வாழ வழிகள் உண்டா?
4.மனிதன் பந்தத்திற்கு ஆளாகுவது ஏன்?
5.ஒரு சிலர் அகங்காரத்துடன் இருப்பது ஏன்?
6.நாகாக்க என்ற வள்ளுவரின் கருத்துக்கு விளக்கம் சொல்லவும்?
7.இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி கூடுகிறதா இல்லை குறைகிறதா?
8.இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேற வழி?
9.மனசாட்சி பற்றி கூறவும்?
10.ஆன்மீகத்திற்கும் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கும் என்ன தொடர்பு?
11.ஆதம சுத்தியுடன் எழுதும் எழுத்தாளர் யாரேனும் உளரோ?
12.பக்திக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு?
13.கல்விக்கும் நல்ல ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பு?
14.பிறவிகளிலிருந்து விடுபட பக்திதான் சரியான வழியா?
15.உலகப்பற்று இல்லாமல் வாழ்வதற்கு என்ன வழி?
16.சுவாமி விவேகானந்தர் அருளிய செய்திகளில் முதன்மையானது எது?
ஸ்வாமிநாதன்
@மகேஷ்
கேள்விகள் எப்பதிவில் வந்தால் என்ன, என்னைப் பொருத்தவரை அவை கூகள் டாக் மூலமாகத்தான் மேலே வருகின்றன.
மற்றப்படி கேள்விகள் கேட்க வேண்டிய பதிவுகளை எக்ஸ்க்ளூசிவாக வைப்பது என்பது பிராக்டிகல் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ஸ்வாமிநாதன்
உங்களது 16 கேள்விகளுடன் செப்டம்பர் பத்துக்கான வரைவு நிரம்பி விட்டது. இனிமேல் வரும் கேள்விகள் செப்டம்பர் 17-க்கான வரைவுக்கு போகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
@ஸ்வாமிநாதன்
உங்களது 16 கேள்விகளுடன் செப்டம்பர் பத்துக்கான வரைவு நிரம்பி விட்டது. இனிமேல் வரும் கேள்விகள் செப்டம்பர் 17-க்கான வரைவுக்கு போகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
kelvi pathil advance booking le poikittrukku pole
Post a Comment