ஒரே மெட்டில் பல பாடல்கள்
இந்த இருவர் படப்பாடலை பார்த்து ரசியுங்கள். இனிமையான பாடல் இல்லை? கேட்டு ரசித்தீர்களா?
சரி, இப்போது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் இப்பாடலை கேளுங்கள்.
இரண்டும் ஒன்றுபோலவே இல்லை? அல்லது இது என் பிரமைதானா? சிமுலேஷன், லலிதாராம் போன்ற இசை வல்லுனர்கள் என்ன ராகம் என்றெல்லாம் கண்டு ஒற்றுமைகளை கண்டு பிடிக்கலாம். ஆனால் அம்மாதிரி ராகஞானம் என்று எதுவுமே அடியோடு இல்லாத டோண்டு ராகவன் தன் காதுகளைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. யாராவது நான் சொல்வது சரிதானா என்பதை சொல்லுங்கப்பு.
வருமானவரி எரிச்சல்கள்
எரிச்சல்கள் பற்றி பேசும் முன்னால் சில நல்ல விஷயங்களை கூறிவிடுகிறேன். ஒவ்வொரு முறையும் ரிடர்ன்ஸ் ஒப்படைக்கும்போது பல சேர்ப்புகள் இருக்கும். எல்லாவற்றையும் வலிமையான நூலில் கோர்த்து ரிடர்ன்ஸ் படிவத்துடன் இணைக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் நூல் அறுந்தால் கதை கந்தல்தான். கடைசி மூன்று முறையாக அதெல்லாம் தேவை இல்லை என ஏற்பாடு செய்துள்ளார்கள். முன்னமே கட்டிய வரி சலான் விவரங்கள், வருமானத்துக்கு முன்னமேயே பிடித்து கொண்ட வரி விவரங்கள் ஆகியவற்றை படிவங்கள்-16, 16ஏ ஆகியவற்றில் உள்ள விவரங்களை மட்டும் ரிடர்ன்ஸ் படிவத்தில் அதற்கான இடங்களில் தேவையான முறையில் நிரப்பினால் போதும் என்றெல்லாம் கூறியது பெரிய ஆறுதலே.
ஆனால் எரிச்சல்கள் சில இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் படிவம் 16 ஏ. அதை சம்பந்தப்பட்டவரிடமிருந்து வாங்குவதற்குள் பலமுறை அலைய வேண்டியிருக்கிறது. அவற்றைத் தர அவர்களுக்கு கடைசி தேதி ஜூலை 31 என்றால் நாம் ரிடர்ன்ஸ் கொடுக்க வேண்டிய கடைசி தேதியும் அதுவேதான். ஆகவே ஐயா அப்பா என சம்பந்தப்பட்டவர்களை தாஜா செய்ய வேண்டியுள்ளது. ஆகவே அவர்களது கடைசி தேதி ஜூன் 30 ஆகவும் நாங்கள் ரிடர்ன்ஸ் தரவேண்டியது ஜூலை 31 ஆகவும் இருத்தல் நலம். அவர்கள் அப்படி கடைசிவரை தராவிட்டால் அதனால் அவதிப்படப்போவது நாங்கள்தான். ஆகவே இதிலும் அரசு மாற்றங்கள் செய்ய வேண்டும். எங்களுக்கு செக் அனுப்பும்போதே வாடிக்கையாளர் தனது வரிபிடித்தத்துக்கான எண்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு எங்களுக்கு இண்டிமேஷன் தந்தால் நாங்கள் பாட்டுக்கு அதை தந்து விட்டு போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த கடைசி நிமிட அலம்பல்கள் சகிக்கவில்லை.
சேர்ப்புகள் தேவையில்லை என்பதே பலருக்கு தெரிவதில்லை. இதை அரசு பல இடங்களில் அறிவிப்பது நலம். நான் ரிடர்ன்ஸ் கொடுக்க சென்றபோது பலர் இணைப்புகளை நூல் வைத்து தைத்து வந்தனர். அதுவும் படிவம் 16ஏ ஒரிஜினலுடன். அவை தொலைந்தால் கஷ்டம் அவர்களுக்குத்தானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
8 comments:
நீங்கள் கூட ஐ.டி. ஆன் லைன் முறைக்கு இன்னும் மாறலையா? ஆன் லைன் முறை மிக சுலபம். எங்கும் அலைய வேண்டாம். இரண்டு வருடங்களாக ஆன் லைனிலேயே தாக்கல் செய்கிறேன். அதுவும் இந்த ஆண்டு அதில் உருவாகும் அக்னாலட்ஜ்மன்ட் - ஐக்கூட கையெழுத்திட்ட பின் தபாலில் அனுப்பச் சொல்லிவிட்டார்கள். எனவே நேரில் செல்லும் தேவை அறவே இல்லை!
இசை பற்றி நமக்கு அந்த அளவு ஞானம் கிடையாது. அது பற்றிக் கூற ஒன்றுமில்லை.
---
வர வர பஞ்சாமிர்தம் நல்லாவே இல்லை. பஞ்சாமிர்தம் என்றால் பல பொருட்களைப் போட்டு பிசைந்திருக்க வேண்டுமல்லவா? இப்படி 2 ஐட்டம் மட்டுமே போட்டால் எப்படி?
www.itwofs.com
will show you some seriously inspired film songs from hindi, tamil, telugu, kannada movies. Old and new.
//
இப்படி 2 ஐட்டம் மட்டுமே போட்டால் எப்படி?
//
பஞ்சாமிர்தம் என்றால் குறைந்தது ஐந்து பொருட்களாவது இருக்கவேண்டும்.
வெறும் இரண்டு விஷயமே இருப்பதால் தலைப்பை "நங்கநல்லூர் சட்னி" என்றுவேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
சட்னியும் போய் வெறும் தயிர் சாதம் மாவடு ரேஞ்சுக்கு ஆகாமல் இருந்தால் சரி.
//ஒரே மெட்டில் பல பாடல்கள்
இந்த இருவர் படப்பாடலை பார்த்து ரசியுங்கள். இனிமையான பாடல் இல்லை? கேட்டு ரசித்தீர்களா?
சரி, இப்போது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வரும் இப்பாடலை கேளுங்கள்.
இரண்டும் ஒன்றுபோலவே இல்லை? //
*************
டோண்டு சார்....
இதைவிட அட்டகாசமான ஒற்றுமையுடன் இருக்கும் இரண்டு பாடலை பற்றிய பதிவு பாருங்கள் இங்கே.....
என்ன பொருத்தம், ஆஹா என்ன பொருத்தம்
http://edakumadaku.blogspot.com/2009/03/blog-post_18.html
//சேர்ப்புகள் தேவையில்லை என்பதே பலருக்கு தெரிவதில்லை. இதை அரசு பல இடங்களில் அறிவிப்பது நலம். நான் ரிடர்ன்ஸ் கொடுக்க சென்றபோது பலர் இணைப்புகளை நூல் வைத்து தைத்து வந்தனர். அதுவும் படிவம் 16ஏ ஒரிஜினலுடன். அவை தொலைந்தால் கஷ்டம் அவர்களுக்குத்தானே?//
Form 16 need not be enclosed with i.t return.
krishnakumar
இருவர் படப் பாடல் “நாட்டை” ராகத்தில் வருகிறது! சிந்து பைரவி படத்தில் “மஹா கணபதிம்” கீர்த்தனை நாட்டை ராகம்! அதுபோல, மகாநதி படத்தில் வரும் “பேய்களை நம்பாதே!” பாட்டும் நாட்டை ராகம்!
து.ம.து. பாட்டு நாட்டை ராகத்தில் வரவில்லை!
கீழ்க்கண்ட சுட்டிகளை தட்டுங்கள்! து.ம.து. பாட்டின் ராகம் போலவே இருக்கும்!
http://www.youtube.com/watch?v=UsW_1Sj-P24
http://www.youtube.com/watch?v=DCWNFY9vudg&feature=related
Post a Comment