8/27/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 27.08.2009

கணினியில் தமிழ்
நான் கோவில்களுக்கு செல்வதற்காக பல ஊர்களுக்கு செல்லும்போதெல்லாம் அதை விருப்பத்துடன் செய்ததில்லை. ஏனெனில் எனது மொழி பெயர்ப்பு வேலை அப்படிப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் அது வரும். ஆகவே வீட்டை விட்டுப் போவது என்றாலே அலர்ஜிதான். மடிக்கணினி/வைர்லஸ் இணைய இணைப்பு வைத்துக் கொள்ளலாம்தான். அதையும் செய்வேன்தான். ஆனால் அது இப்பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்.

கையில் எனது அடையாள அட்டையை எப்போதுமே இருக்குமாறு பார்த்து கொள்வேன். எனது ‘காரில்’ ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் வழிகளில் எங்கேனும் சைபர் மையங்கள் தென்பட்டால் அவற்றை நோட் செய்து வைத்து கொள்வேன். எங்காவது ஊர்களில் தங்க நேர்ந்தால் ஹோட்டலில் ரூம் போட்ட பிறகு அருகில் பார்த்து வைத்துக் கொண்ட சைபர் கஃபேக்கு செல்வேன். போலீஸ் கெடுபிடிகள் காரணமாக அங்கு செல்பவர்கள் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் எனது அடையாள கார்டை வைத்திருப்பேன். அதுவும் இப்பதிவுக்கு அப்பாற்பட்டதுதான். அது பற்றி பிறகு எப்போதாவது பேசுவோம்.

அது என்னவோ தெரியவில்லை, நான் செல்லும் சைபர் கஃபேக்கள், அதுவும் சத்யம் ஐவேயாக இருந்தால், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இயங்கு ஏற்பாடுகள் விண்டோஸ் 98-ஆக இருந்து தொலைக்கும். ஆகவே எனது மொழி பெயர்ப்பு வேலைகளில் தமிழ் தேவையாக இருந்தால் கதை கந்தல்தான். ஆங்கில எழுத்துருக்கள் மட்டுமே இருக்கும். ஏன் எனக் கேட்டால் தமிழ் எழுத்துகளை கேட்பவர் இல்லை என கதை விடுவார் சைபர் கஃபேக்காரர். அதற்காகவெல்லாம் விட்டுவிடுவேனா என்ன? சுரதா எழுதி பெட்டி எதற்கு இருக்கிறது? தமிழ்மணத்தின் பக்கத்தைத் திறந்து (எல்லாமே ஜாங்கிரி ஜாங்கிரியாகத் தென்படும்), பொங்குதமிழ் தளத்தை திறக்க வேண்டியதுதான். என்ன, விடாமல் நகலெடுத்து ஒட்டுதல் நடத்த வேண்டியிருக்கும்.

அது என்ன ஐயா தமிழகத்தில் தமிழ் தட்டச்சு செய்ய இவ்வளவு தடைகள் சைபர் கஃபேக்களில்? விண்டோஸ் எக்ஸ்பி இருந்தால் கூட பரவாயில்லை. தமிழ் படிக்கவாவது செய்யலாம். ஆனால் விண்டோஸ் 98? குஷ்டமடா சாமி என்று கவுண்டமணியின் குரலில் கூவ வேண்டியதுதான் போலிருக்கிறது.

எனது கணினியிலும் கூட Word கோப்புகளில் தமிழில் தட்டச்சு செய்ய சில கட்டுப்பாடுகள் உண்டு. நான் என்.எச்.எம். மென்பொருள் நிறுவியுள்ளேன். ஆல்ட் + 2 போட்டு தமிழ் ஒருங்குறி டைப்பிங் செய்வேன். ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் பரணரில் அடிக்க முடிகிறது. லதா மற்றும் ஏரியல் யூனிகோட் எம் எஸ் என்றால் பார்மாட்டில் போய் ஸ்டைல் எல்லாம் மாற்ற வேண்டியிருக்கிறது. அப்போதும் அது பிரச்சினையை எப்போதுமே சால்வ் செய்வதில்லை. நானும் என் எச் எம் நாகராஜனை படுத்தி பல செய்முறைகள் பாவித்து பார்த்து விட்டேன். அவர் சொன்ன அமைவுகள் மாற்றங்கள் எல்லாமே செய்தும் பல நேரங்களில் பரணர் மட்டும்தான் அடிப்பேன் என கணினி பிடிவாதம் பிடிக்கிறது. அதுவே ஆங்கிலத்திலோ, பிரெஞ்சு, ஜெர்மனிலோ அந்த பிரச்சினைகள் இல்லை. எழுத்துருவை தெரிவு செய்து அடிக்க வேண்டியதுதான். தமிழ் விஷயம் போல பலமுறை செட்டிங்ஸ் மாற்றி ஐயா அப்பா என தாஜா செய்ய வேண்டியதில்லை.

அதே சமயம் எக்ஸல், பவர் பாயிண்ட் ஆகியவற்றில் ஒரு பிரச்சினையும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த Word-க்கு மட்டும் ஏன் இந்தப் பாடுபட வேண்டியிருக்கிறது?

தமிழகத்தில் தமிழ் உடை அநாகரிகமானதாம் - சொல்கிறது ஜிம்கானா கிளப்
அப்புசாமி சீதா பாட்டியை சிருஷ்டித்த ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) பலருக்கும் தெரிந்தவர். கண்டாலே கையெடுத்த் கும்பிடும் கண்ணியமான தோற்றம். எட்டுமுழ வேஷ்டி, ஸ்லாக் சட்டையுடன் ஒரு அங்கத்தினரை பார்க்க ஜிம்கானா கிளப் போயிருக்கிறார். போனவரை ஜிம்கானா கிளப்பில் விரட்டியடித்திருக்கிறார்கள். இது பற்றி அவரது மருமகள் “வேட்டியனே வெளியேறு” என்னும் தலைப்பில் சாவி பத்திரிகையில் எழுதியிருந்தார். ஜிம்கானா பிரகஸ்பதிகளின் கூற்றுப்படி தமிழக உடையான வேட்டி, சட்டை தமிழகத்தில் இருக்கும் ஜிம்கானா கிளப்பால் அநாகரிகமான உடையாகக் கருதப்படுகிறதாம்.

அடி செருப்பாலே. என்ன தைரியம் இருந்தால் இதைக் கூறுவார்கள்? மவுண்ட் ரோட் வட்டாரத்தில் பிரதானமான இடத்தில் நிலத்தை வளைத்து போட்டுக்கொண்டு இந்த வெள்ளைக்காரனின் அல்லக்கைகள் செய்யும் அலம்பல் சகிக்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம். அந்த கிளப் முக்கால்வாசி அந்த இடத்தை அரசிடமிருந்து நீண்ட நாள் லீசுக்குத்தான் எடுத்திருகும், அதுவும் அடிமாட்டு விலையில். தமிழக அரசு அதை கவனித்து ஆவன செய்ய வேண்டும். டிரெஸ் கோட் மாற்றாவிட்டால் அதுகளை அங்கே செயல்பட விடக்கூடாது. அப்படியே சொந்த நிலமாக இருந்தாலும் இந்த மாதிரி தமிழக உடையையே தடை செய்வது திமிரின் உச்சக்கட்டம். வெள்ளைக்காரன் போய் அறுபது ஆண்டுக்கு மேல் ஆகியும் அங்குள்ள அல்லக்கைகளுக்கு அது தெரியவில்லையே.

ஊதற சங்கை ஊதி விட்டேன். பார்க்கலாம். இது சம்பந்தமான தகவலை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு பாக்கியம் ராமசாமி சாரிடம் இன்றுதான் பேசினேன். அவர் சம்பவம் நடந்ததை உறுதி செய்தார். அடையார் போட் கிளப்பிலும் கூட இம்மாதிரி அநாகரிகமான, வெட்ககரமான உடை விதிகள் உண்டு எனக் கூறினார்.

சமீபத்தில் 1995 மே மாதத்தில் நான் ஒரு பிரெஞ்சுக்காரனுக்கு துபாஷியாக இருக்கும்படி அக்ர்வால் என்பவரால் அழைக்கப்பட்டேன். அவர் என்னை அழைத்து கொண்டு அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அந்த படபடக்கிற வெய்யிலில் மனிதர் கோட்டு, சூட்டு, டை எல்லாம் கட்டியிருந்தார். அதை பார்க்கும்போதே எனக்கு வியர்வை வந்து விட்டத்து. கார் ஏசி செய்யப்பட்டிருந்தாலும் காரிலிருந்து இறங்கி நடக்கும்போது அவர் அப்பனா வந்து ஏசி தரப்போகிறான்? பிரெஞ்சுக்காரன் வெளியில் வந்தான், ஒரு பெர்மூடாஸ் மற்றும் டீ ஷர்ட்டுடன். அகர்வாலை பார்த்ததுமே என்னிடம் பிரெஞ்சில் “இந்த லூசு ஏஎன் இம்மாதிரி உடை அணிந்திருக்கிறது? வேணும்னா மாத்திக்க சொல்லு, காத்திருக்கிறேன்” எனக் கூறினான். நானும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு பிரெஞ்சுக்காரன் அகர்வால் விரும்பினால் ஏதேனும் சௌகரியமான உடையை உடுத்திக் கொண்டு வரலாம், தேவையானால் அதற்காக அவர் காத்திருப்பதாக சொல்வதாகக் கூறி ஒப்பேற்ற வேண்டியிருந்தது. பிறகு நடந்தவை இப்பதிவுக்கு தேவையில்லாத விஷயம். நான் சொல்ல வருவது என்னவென்றால், வெள்ளைக்காரனே தேவைப்பட்டால் சௌகரியமான உடை அணிந்தாலும் இந்த அல்லக்கைகள் செய்யாது போலிருக்கிறதே என்றுதான். அவ்வளவு தாழ்வு மனப்பான்மை அதுகளுக்கு.

அதெல்லாம் தாழ்வு மனப்பான்மை கிடையாது என்கிறான். முரளி மனோகர். அவன் என்ன சொல்கிறானென்றால், These whiteman's lackeys do not have any inferiority complex. They are actually inferior. நன்றி முரளி மனோகர்.

ஹோட்டல்கள் தரும் உபத்திரவம்
சமீபத்தில் 1981-ல் தில்லிக்கு மாறும்வரை எல்லாமே தமிழகத்தில் நன்றாகத்தான் இருந்தது. அது என்னமோ தெரியவில்லை நான் 2001-ல் திரும்பி வந்ததும் பார்த்தால் இந்த 20 ஆண்டுகளில் நிலைமை மாறியுள்ளது.

எது மாறியுள்ளது? முன்பெல்லாம் சாப்பாடு ஓட்டல்களில் இரவும் சாப்பாடு கிடைக்கும். இப்போது என்னவென்றால் 90 சதவிகிதத்துக்கும் மேல் ஹோட்டல்களில் இரவுச் சாப்பாடு (அதாவது அரிசி, சாம்பார், ரசம், தயிர், பொறியல்) கிடைக்காது. எல்லாமே டிபன் ஐட்டங்கள்தான். அதுவே பம்பாய் மீல்ஸ், பஞாபி மீல்ஸ், குஜராத்தி மீல்ஸ் எல்லாம் இப்பவும் கிடைக்கின்றன. மதறாஸ் மீல்ஸ் சென்னையில் கிடைக்காது. என்ன பிரச்சினை?

இதில் ஒரு விஷயத்தில் நான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது இதுதான். இரவில் மதறாஸ் மீல்ஸ் கீழ்க்கண்ட ஹோட்டல்களில் இன்னும் கிடைக்கிறது. எழும்பூர் , வடபழனி சரவணா ஹோட்டல்கள், நியூ உட்லேண்ட்ஸ். வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கப்பூ. நன்றியுடன் இருப்பேன். நினைவிருக்கட்டும், சென்னை மீல்ஸ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

யுவகிருஷ்ணா said...

//“வேட்டியனே வெளியேறு”//

தங்கர்பச்சானின் ஒன்பதுரூபாய் நோட்டு திரைப்படம் வெளிவந்தபோது சென்னை ‘ஐனாக்ஸ்’ திரையரங்கம், அப்படத்தை வெளியிட மறுத்தது. காரணம் கேட்ட தங்கர்பச்சானிடம், “உங்க படத்துக்கு வேட்டியெல்லாம் கட்டிக்கிட்டு வருவாங்க. அவங்களையெல்லாம் அலவ் பண்ணமுடியாது” என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். தங்கரே சொன்ன தகவல் இது.

dondu(#11168674346665545885) said...

நன்றி யுவகிருஷ்ணா. தமிழ்ப்படங்களுக்கு தியேட்டர் தராது அழும்பு பண்ணும் சினிமா கொட்டகைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

பெண்களுக்கான ட்ரெஸ் கோட் என்னவா இருக்கும் அதே ஜிம்கானாவில்?

ஒருவேளைத் தமிழக முதல்வர் அங்கே போனாருன்னா.... வேட்டின்னு உள்ளே விடமாட்டாங்களா?

அநியாயமா இருக்கே(-:

அஞ்சு நட்சத்திர ஹொட்டேல்களில் தமிழ் பேசமாட்டாங்க. அதையும் சேர்த்துக்குங்க. ஆங்கிலமும், ஹிந்தியும்தான் செல்லுபடியாகுது.

dondu(#11168674346665545885) said...

@துளசி கோபால்
பெண்களுக்கான உடைகோட் புடவையாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

இரவு ஓட்டல் ஓட்டலா சுத்தியிருப்பிங்க போலயே!

இப்படி ஒரே நாள்ல ரெண்டு பதிவு போட்டா எப்படி ஹிட் அடிக்கிறது!

வருசத்துக்கு ஒரு குழந்தை மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பதிவு போதுமானது!

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான். பதில்கள் பதிவு போன ஞாயிறன்றே போட்டாச்சு. செட்டிங் மட்டும் இன்னைக்கு வர்ற மாதிரி வச்சிருந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
வெள்ளைக்காரன் போய் அறுபது ஆண்டுக்கு மேல் ஆகியும் அங்குள்ள அல்லக்கைகளுக்கு அது தெரியவில்லையே.
//

சென்னை ஜிம்கானா மட்டுமல்ல, இது போல் வெள்ளையன் அமைத்த கிளப்புகளை நடத்தும் இந்தியத் தேங்காய்கள் (வெளியில் பளுப்பு, உள்ளே வெள்ளை) இன்னும் வெள்ளையன் அமைத்த விதிகளை மாற்றாமல் நடத்திக்கொண்டு வருகின்றன.

உதகையில் உள்ள ஊட்டி கிளப் இன்னொரு எடுத்துக்காட்டு.

ஷங்கி said...

இந்த வேட்டி மேட்டரு இதுக்கு முன்னாடியும் நடந்து பத்திரிக்கையில படிச்சதா ஞாபகம்! இன்னும் பல இடங்களிலும் நடக்குதுன்னு நினைக்கிறேன்!

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ஜீவி said...

// 'அது என்னமோ தெரியவில்லை..
அது என்னமோ தெரியவில்லை..'//
என்றால்?...
ஒரு தடவையாவது அது என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சித்திருக்கக் கூடாதா?
அடுத்த, 'அது என்னமோ தெரியவில்லை' போது ஜீவி ஞாபகம் வருமில்லையா?

எனக்கென்னவோ 'சமீபத்தில்' என்று எங்காவது படித்தாலே உங்கள் நினைவு வந்துவிடும்.

இப்படி ஒவ்வொருவருக்கும் பழக்கப் பட்ட வார்த்தையை வைத்தே ஒரு பதிவு போட்டாலும் போட்டுவிடுவீர்கள்..

சுழியம் said...

Dress code is introduced by christian organizations in their institutions that has become the highest standard.

Although a great and famous painter of international reput, M. F. Hussain was sent out of various star hotels for not wearing shoes.

One of the standard for any institute of high quality is that you wear european dress code.

whether it is multi-national companies or pubs or institutes of higher learning you cannot wear ethnic dresses however costly and aesthetic they may be.

Indian dress has got reserved for rituals.

this slave mentality will change only when greatest achievers of the society start wearing ethnic dress on international platforms.

சுழியம் said...

Dear Gnjani,

Appreciate your efforts to bring an alternate wave in Tamilnadu that is of quality and value.

Are the subscribers to your effort have any voice in receiving movies of the genre and storyline of their interest?

For example, among your short films, can I choose those films that have good understanding of Indian ethos?

I am bored with watching movies sponsored and controlled by evangelical and islamic money, and communist agitprop.

வஜ்ரா said...

இதென்ன கூத்து. இவர் தான் உண்மையான ஞாநியா ? இல்லை யாரோ உங்கள் தளத்தை phishing செய்யப்பயன் படுத்துகிறார்களா ?

ஒரே ஒரு பதிவு தான் அவரது வலைத் தளத்தில் உள்ளது. அதுவும் இங்கிலீஸில் உள்ளது.

வன்பாக்கம் விஜயராகவன் said...

>தமிழக உடையான வேட்டி, சட்டை >தமிழகத்தில் இருக்கும் ஜிம்கானா >கிளப்பால் அநாகரிகமான உடையாகக் >கருதப்படுகிறதாம்.

>அடி செருப்பாலே. என்ன தைரியம் >இருந்தால் இதைக் கூறுவார்கள்?

அந்த கிளப் நிர்வாகம் , அன்னாரிடம் மன்னிப்பு வாங்கி, தாங்கள் தங்கள் கொள்கையை மாற்றிட்டோம் என அறிக்கை விடும் வரை, தமிழக அரசு அதன் மேல் ஆக்‌ஷன் எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு கிளப்லேயும் dress code இருப்பது சரிதான், அதே சமயம் அது உள்ளூர் உடைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்.

Anonymous said...

எனக்கு இந்த வேட்டி matter ரொம்ப நாளா உறுத்தல் தான். கிளப்புகளை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. உதாரணத்துக்கு, கொஞ்ச காலம் முன் வரை சினிமாக்களில் பார்த்தீர்களென்றால், நாயகன் full suit போட்டுக் கோண்டிருப்பார் (வீட்டிலிருக்கும் போது கூட) ஆனால் நாயகி தழையத் தழைய புடவை கட்டிக் கொண்டு, நெற்றி நிறைய பொட்டு வைத்துக் கொண்டு தலை நிறைய பூ வைத்துக் கொண்டு வருவார் (duet-ல் கூட). இந்த வகை உடைப் பொருத்தத்தை அன்மையில் ஒரு பிரபலத்திடம் கண்டேன். அது நமது சந்திராயன் விஞ்ஞானி அண்ணாத்துரையின் முதல்வர் சந்திப்பு (அவர் full suit மனைவி இலட்சுமி கடாட்சம்). கொடுமை. இன்றும் நம்ம ஊர் திருமணங்களில் பாருங்கள் வரவேற்புகளில் மணமகனுக்கு suit வாங்கித் தருவது ஒரு கட்டாயச் சம்பிரதாயமாகவே பின்பற்றப் படுகிறது. ஆனால் எந்தத் திருமணத்திலும் எந்த மணமகளையும் bridal gown-ல் நான் பார்த்தது கிடையாது.உடை மட்டுமில்லை; இசை, மொழி, உணவு எல்லாவற்றிலும் மேற்கத்தியர் செய்வதைச் செய்வது அல்லது அவர்கள் பாணியில் செய்வது என்பது தான் நமது தமிழ்(அல்லது பாரதம்) கூறும் நல்லுலகில் பெருமையாகக் கொள்ளப்படுகிறது.

ரவிஷா said...

என்னமோ ஜிம்கானா க்ளப்பில் வேட்டி சட்டைக்கு அலுத்துக்கிறீங்களே? நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு கடைக்கோ அல்லது ஸ்பென்ஸர் ப்ளாசாவில் இருக்கும் ஒரு கடைக்கோ போனீங்கன்னா, தமிழ்ல கூட பேசமாட்டான்! இத்தனைக்கும் வேலை பார்க்கிறவன் தமிழன்! 2003’ல் ஒரு முறை சென்னைக்கு வந்தபோது சட்டை வாங்க ஒரு கடைக்கு போனேன்! அங்கே சேல்ஸ்மேன் தமிழில் தப்பித்தவறி கூட பேசவில்லை! நானும் தமிழில் பேசவைத்துப் பார்த்து வெறுத்துப்போய் அவனிடம் “நீ ஒரு வார்த்தை தமிழ் பேசு! நான் ஒரு சட்டை வாங்குறேன்!” என்றேன்! கடைசிவரைக்கும் அவன் தமிழில் பேசவில்லை! நானும் அவன் கடையில் சட்டை வாங்காமல் வந்துவிட்டேன்! பிறகு கேட்டதற்கு தமிழில் பேச முதலாளி தடை விதித்துருப்பதாகவும் மீறி பேசினால் வேலை போய்விடும் என்றும் சொன்னான்!

இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

dondu(#11168674346665545885) said...

//எனக்கென்னவோ 'சமீபத்தில்' என்று எங்காவது படித்தாலே உங்கள் நினைவு வந்துவிடும்.//
சிலருக்கு ஜாட்டான் என்றாலோ, வேறு சிலருக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்றாலோ கூட டோண்டு ராகவனின் ஞாபகம் வருவதாகக் கூறுகிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

லாஜிக் என்னமோ சரிதான். ஒரு அரசியல் தலைவர் மேடையில் பேசறார . காத்து அடியோ அடி என்று அடிக்குது. வேட்டியை ஒரு கையில் பறக்க விடாமல் பிடித்துக்கொண்டே பேசணும். இது ரோதனைதானே ?



அண்ணா பல்கலையில் ஒரு நாள் மெக்கானிகல் வகுப்பு மக்கள் எல்லாம் வேட்டியில் வந்தார்கள். கல்லூரியை சுத்தி ஒரு parade நடத்தினார்கள். ஒன்றிரண்டு பஞ்ச கச்சம் வேறு. ஆங்கில உடையில் இது போல சாதி வேறுபாடுகள் இல்லை.

Anonymous said...

ஜிம்கானாவை மட்டும் குறை சொல்லி பிரயோசனமில்லை என்று தோன்றுகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த உடை விஷயத்தை தமிழ் பண்பாடு என்கிற ரீதியாக அணுகுவதே ஒரு எமோஷனல் சமாச்சாரமாகவே படுகிறது. கோட் சூட், பேண்ட் சட்டை என்பதெல்லாம் இந்திய உடைகளாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால் இதில் dress code என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்று புரியும். உதாரணமாக பள்ளிக்கூடங்களிலும், பெரும்பாலான அலுவலகங்களிலும் கூட (அரசு அலுவலகங்கள் நீங்கலாக) dress code என்பது பேன்ட் சட்டையாகத்தான் இருக்கிறது. இங்கெல்லாமும் தமிழ் பண்பாட்டின் படி உடை அணிய விட மாட்டேன் என்கிறார்களே என்று (குறை) சொல்வீர்களா?

Slogger said...

இதற்கு மாறாக, அண்ணா பல்கழைகழகத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிய குடாது என சொல்வது சரியா?

சுழியம் said...

//.....ஒன்றிரண்டு பஞ்ச கச்சம் வேறு. ஆங்கில உடையில் இது போல சாதி வேறுபாடுகள் இல்லை...//

Rubbish. பஞ்ச கச்சம் was the dress of all the people of all the castes at one time. Because brahmins still continue to respect the Indian culture does not mean that the culture only belongs to brahmins. It is the right of every one, every one owns the culture.

The most comfortable and climate-suitable dress is பஞ்ச கச்சம். Try it, then you will become addicted to it.

//....உதாரணமாக பள்ளிக்கூடங்களிலும், பெரும்பாலான அலுவலகங்களிலும் கூட (அரசு அலுவலகங்கள் நீங்கலாக) dress code என்பது பேன்ட் சட்டையாகத்தான் இருக்கிறது. இங்கெல்லாமும் தமிழ் பண்பாட்டின் படி உடை அணிய விட மாட்டேன் என்கிறார்களே என்று (குறை) சொல்வீர்களா?...//

Yes. We should. We must. You should also complain.

The schools and government institutes enforce this dress code because these were implemented at the time of evangelical British and French and Portuguese.

As a Hindu, I am not against any dress and demand freedom of my choice. I demand that my intelligence be respected in selecting my dress.

I want freedom to wear coat and suit one day, and பஞ்ச கச்சம் and Hindu shirt the other day, dhoti and shirt the other day.

As long as a dress is hygienic and decent and climate-friendly, what is the problem in wearing that?

The western companies demand european dress code, the arab companies enforce arab dress code, but I have no say in what I wear in India.

Now a days all the Muslims make sure to show their identity despite any enforcement by the institutes they interact with.

For example, even if a Muslim is working for an American software company in Chennai, he or she will wear arab dress.

Moreover, the fatwa is issued 6 years back that demand all the muslims wear arab and islamic identifying dress on Fridays.

So, you can easily identify a muslim on Fridays now a days.

But, we Indians do not respect either ourselves or our culture, and most importantly our freedom of choice that is the basic of hindutva.

We should. We must.

குப்பன்.யாஹூ said...

I do not think that there is noting wrong that these kind of clubs, associations have their own dress code rules.

The idea of Jimkaana or French bar or Irish ball room is that they want to meet, chat with the like minded (like cultured, same taste) people.

When there are 30 people are in French or British dressed, if you or me go in unique dress their attention & mood will be diverted.

The same thing applicable to any Hindu temple or Muslim Masjid. Imagine a guy or girl comes in French dress or burmudas to the aanjaneyar temple inside. our attention will divert from aanjaneyar to that girl's burmudas.
or Imagine in a Hindu brahmin marraige/ seemantham function, if a girl or aged uncle comes in Burmudas or in Jipsy style everyone's attention will go on that girl only.



Thats why in Lot of kerala temples they ask male & females to wear a dhoti while visiting the temple. The reason is your thoughts should not be diverted to the dress designs, styles.

In Lot of Irish bars they do not allow people to come without shoes. The reason is your thought will go on slippers, poor economy,income discrimination. So you will forget the bar jolly week end mood and think again about your work, promotion,salary increase, social inequality etc.


But the organisation should tell this in polite manner with sound reasons.

Sethu Raman said...

ஜிம்கானா கிளப் ஒரு பொது இடமல்ல.. அரசு நிலத்திலிருந்த போதிலும் அது
தனியார்கள் இடம்.. அங்கு அங்கத்தினராக வேண்டுமென்றால், லக்ஷக்கணக்கில்
பணம் செலுத்துவது தவிர, மற்ற கடுமையான நிபந்தனைகளும் உண்டு.
அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் உண்டு, அதில் ஒன்று தான் உடை.--
பாண்ட், காலருடன் சட்டை, ஷூக்கள் அணிவது போன்றவை. அழைக்கப்படும்
விருந்தினர்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் உண்டு - அங்கத்தினர்கள் தங்களது
நண்பர்களுக்கு இது பற்றித் தெரிவிக்க வேண்டியது அவர்கள் கடமை.

சென்னை நகரிலே இன்னம் பல கிளப்புகள் இருக்கின்றன. மற்றும் தமிழ் நாட்டின்
முக்கிய நகரங்களிலும், ஆந்திரா, கர்னாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற
அண்டை மானில நகரங்களிலும், இதே கட்டுப்பாடுகளுடன் கூடிய கிளப்புகள்
உண்டு.

இந்த உடைக் கட்டுப்பாடு, ஒரு இந்தியக் குடிமகனின் உரிமைப் பிரச்சினையே அல்ல. வேண்டுமானால் இன்னொரு கிளப் ஆரம்பித்து, அங்கத்தினர்களும்
விருந்தினர்களும் வேஷ்டி தான் கட்டிக் கொண்டு வரவேண்டும் என்று
சொல்லுங்களேன்.

அரசு நிலத்தில் இருப்பது உங்கள் கண்களை உறுத்தினால், ஜிம்கானாவை
சட்ட பூர்வகமாக நடவடிக்கை எடுத்து அங்கிருந்து வெளியேற்றுங்கள்..
நீங்கள் இருந்த திருவல்லிக்கேணியிலேயே ஒரு கிளப் இருக்கிறதே இம்மாதிரி
கட்டுப் பாடுகளுடன், அதுவும் அரசு நிலம் தானே!!

சுழியம் said...

//When there are 30 people are in French or British dressed, if you or me go in unique dress their attention & mood will be diverted.//

what kind of attention and mood is this that will get diverted because of wearing a different dress?

hope that one of the rule is not about people having same face, wearing same color dress, talking in same voice, and combing hair in the same manner.

Variety is Natural. To be natural is to be free.

People who do not understand freedom will only talk about adhering to rules.

Rubbish rules and foolish reasons.

//...The idea of Jimkaana or French bar or Irish ball room is that they want to meet, chat with the like minded (like cultured, same taste) people....//

Are all the members of the Jimkana club have same cultural and of same taste people?

By same culture and same taste you mean appreciation only to european culture and european taste. Is it not?

Has the club says it openly? If it openly says that the club is only for those who want to show their european taste, then I can accept your argument.

But, they do not say so.

Does the club demand people to speak only in European languages and eat only european food? It does not. Then why in dress code alone?

Because, they treat this dress code as a universal truth applicable to all. That is where the problem starts.

Can the same thing happened to the respected writer Pakkiyam Ramasami happen to P. Chidambaram or karunaanithi or Ramadoss who are atleast Indians in their dress?

These rules are only for the powerless and slaves. And people come in support of such slavery and discriminations.

Is there any honour in making such false pretensions?

//....ஜிம்கானா கிளப் ஒரு பொது இடமல்ல.. அரசு நிலத்திலிருந்த போதிலும் அது
தனியார்கள் இடம்.. அங்கு அங்கத்தினராக வேண்டுமென்றால், லக்ஷக்கணக்கில்
பணம் செலுத்துவது தவிர, மற்ற கடுமையான நிபந்தனைகளும் உண்டு.
அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் உண்டு, அதில் ஒன்று தான் உடை.--
பாண்ட், காலருடன் சட்டை, ஷூக்கள் அணிவது போன்றவை. அழைக்கப்படும்
விருந்தினர்களுக்கும் இக்கட்டுப்பாடுகள் உண்டு - அங்கத்தினர்கள் தங்களது
நண்பர்களுக்கு இது பற்றித் தெரிவிக்க வேண்டியது அவர்கள் கடமை. ...

Jamshetji Nusserwanji Tata started Taj group of hotels because he was not allowed inside the star hotels when British ruled.

Now Indians can enter the hotel, but not with Indian dress. What difference has it made?

Have we lost the self-respect completely?

And when asked for freedom, the advice given is to build our own clubs which refuses freedom to some other dress. So, ultimately the idea is to refuse freedom to people and varieties and multiplicity. Is it not?

The socio-psychological archetype is in the abrahamic mind-set that enforces only one god, only one holy book, and only one way living and dying; one group not allowing other any space for living and making sure that co-existence is not at all possible.

Hindutva stands against all this slavish mentality.

Let us be brave, be men; not slaves.

Let us realize our Vedic culture that argues in support of pluralism.

Be a Hindu; be free.

வன்பாக்கம் விஜயராகவன் said...

>Sethu Raman said...
ஜிம்கானா கிளப் ஒரு பொது இடமல்ல.. அரசு நிலத்திலிருந்த போதிலும் அது
தனியார்கள் இடம்..


தனியார் இடம் என்பதினால், அவர்கள் gross cultural insensitivity காட்டணும் என்பது எந்த சுயமரியாதை உள்ள நாட்டிலும் நடக்காது. வேஷ்டியையும் ஆப்ரூவ்ட் உடையாக்க வேண்டும். முதலைமைச்சர் போடுகிற டிரெசே, ஒரு கிளப்பிற்கு சரி இல்லை என்றால், something wrong with the club and they should be kicked in the butt.

வேஷ்டியும் smart dress ஆக இருக்க வேண்டும் என சொல்லுகிரதில் நியாயம் உள்ளது. உதாரணமாக அழுக்கு வேஷ்டி, லுங்கி, செருப்பு இல்லாதது இவற்றை தடை செய்யலாம். ஆனால் ஒழுங்காக அணியப்பட்ட வேஷ்டியை தடை செய்வது அட்டூழியம் - தமிழ் கலாசாரத்தை இழிமை செய்கிரது. கொஞ்சமாவது சொரணை இருந்தால்.................

சுதாகர் said...

//இதில் ஒரு விஷயத்தில் நான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது இதுதான். இரவில் மதறாஸ் மீல்ஸ் கீழ்க்கண்ட ஹோட்டல்களில் இன்னும் கிடைக்கிறது. எழும்பூர் , வடபழனி சரவணா ஹோட்டல்கள், நியூ உட்லேண்ட்ஸ். வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கப்பூ. நன்றியுடன் இருப்பேன். நினைவிருக்கட்டும், சென்னை மீல்ஸ்.//

பாண்டி பஜார் பாலாஜி பவனில் கிடைப்பதாக நினைவு.

Baski said...

// மதராஸ் சாப்பாடு //

டோண்டு சார்,

மதராஸ் மக்கள் தான் இரவில் புல் மீல்ஸ் சாப்பிடுவார்கள். தெலுகு மக்களின் தாக்கம் என நினைக்கிறன்.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி எங்கேயும் இரவில் சாப்பாடு கிடைக்காது. மற்ற ஊர்களை பற்றி எனக்கு தெரியாது. இரவில் பரோட்டா ரொம்ப விசேசம்.

ஆந்திரா மெஸ்/ஹோட்டல் போனால் நீங்கள் கேட்கும் சாப்பாடு காலையிலிருந்து ராத்திரிவரை கிடைக்கும்.

மற்றபடி சாப்பிடுவது மக்களின் விருப்பம். தேவைகேற்ப ஹோடேல்களில் மெனு மாற்றப்படுகிறது. இதில் ஒன்னும் தவறில்லையே. இதில் கொடி பிடிப்பது தான் தவறு என எண்ணுகிறேன்.

நன்றி,
பாஸ்கி

Beski said...

எழும்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பழைய வசந்தபவனில், இரவும் சாப்பாடு கிடைக்கும்.

Sethu Raman said...

ஜிம்கானாவில் வேஷ்டி 'அநாகரீகம்' என்று நிச்சயம் சொல்லி இருக்க மாட்டார்கள் -
எங்களது விதிகளின் படி, வருபவர்கள் பாண்ட், சட்டை அணிந்திருக்க வேண்டும்
என்று தான் சொல்வார்கள் - இது ஒரு
குமுதக் குசும்பு தான்! விதண்டாவாதம்.

ஒரு சின்ன விருப்பம் - பஸ்களிலோ, புறநகர் ரயில்களிலோ, காரியாலயங்களிலோ எத்தனை
பேர் வேஷ்டி அணிந்து வருகிறார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்களேன் -- அவ்வளவு போவானேன் - வீட்டிலிருந்த படியே உங்கள்
டி.வி.யில், நிகழ்ச்சி டத்துபவர்களும் சரி, பங்கெடுப்பவர்களும் சரி - எவ்வளவு பேர் வேஷ்டியில் வருகிறார்களென்று பாருங்கள்.
சன் டிவி., கலைஞர் டி.வி. எதுவாயினும் சரி!

வேஷ்டியின் ஒரே இடம், இப்போது எனக்குத் தெரிந்தவரை, சட்ட சபை தான்!!

வஜ்ரா said...

//
திருச்சி, மதுரை, திருநெல்வேலி எங்கேயும் இரவில் சாப்பாடு கிடைக்காது.
//

தவறு.

மதுரையில் என்னதான் டிபன் சென்டர்கள், ஈவினிங் மட்டன் ஸ்டால்கள் பரவி பரோட்டா சால்னா கொடுத்தாலும், இரவில் சாப்பாடு கிடைக்கத்தான் செய்கிறது.


மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் காலேஜ் ஹவுஸ், கங்கா கவுரி போன்ற வெஜிடேரியன் ஹோட்டல்களில் இரவு சாப்பாடு கிடைக்கும். அன்பகம், அம்சவல்லி, சாத்தையா மெஸ், பாண்டியன் லாடஜ், போன்ற நான்-வெஜ் ஹோட்டல்களில் இரவு சாப்பாடு உண்டு. இதர வட நாட்டு ஹோட்டல்களில் பாம்பே மீல்ஸ் கட்டாயம் கிடைக்கும்.

நீங்கள் சொல்வது போல் தெலுங்கு மக்கள் தான் இரவு சாப்பாடு (சாதம், பொரியல், ரசம், மோர்) அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Giri said...

These clubs can review their dress codes and include certain ethnic dresses.I was once told(politely of course) in Gymkhana club that collarless t shirts are not permitted! How do you like that? My host felt bad and took me out to some other place.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது