கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பது மிகப் பழைய சொலவடை. இதை அப்ப்டியே நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை நம்புபவர்களும் இருக்கிறார்கள். இது ஒரு நிலை. அடுத்த நிலை என்னவென்றால் தான் நம்புவது மட்டுமே சிறந்தது. அடுத்தவர்கள் நம்புவதோ மிக மோசமானது எனவும் கருத்து கொள்வது.
இதற்கும் அடுத்த நிலை என்னவென்றால் மற்றவர்களது மோசமான நம்பிக்கையிலிருந்து அவர்களைக் காக்கிறேன் பேர்வழி என புறப்பட்டு, யாரை காப்பாற்ற செல்கிறார்களோ, அவர்களையே சில சமயங்களில் கொன்றும் விடுவது. இம்மாதிரி தருணங்களில்தான் பல கொடிய விஷயங்கள் நடக்கின்றன. ஐரோப்பாவின் இருண்ட காலத்தில் Inquisition என்ற ஒரு கொடுமை நடந்தது. ஏசுவை நம்பாதவர்கள், அதுவும் தனது வெர்ஷன் ஏசுவை நம்பாதவர்கள் பாவிகள். அவர்கள் சாத்தானுடன் உறவு கொண்டவர்கள் என்றெல்லாம் அப்போதைய போப்புகள் ரூம் போட்டு யோசித்து மேலே சொன்ன inquisition கொடுமையை நடத்தினார்கள்.
அம்மாதிரி பேர்வழிகள் போப் என்ற பதவிக்கே முற்றிலும் அருகதையற்றவர்கள் என்பதை சரித்திரம் இப்போது கூறுகிறது. ஆனால் அக்காலகட்டத்தில் அது ஒரு பெரிய ரகசியமாகவே காக்கப்பட்டது. போப்பின் அல்லக்கை ஒருவனுக்கு ஒரு குறிப்பிட்ட ஆணையோ பெண்ணையோ பிடிக்கவில்லை என வைத்து கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டவன் சாத்தானை வழிபடுகிறான், அப்பெண் சாத்தானுடன் உடலுறவு கொண்டாள் என கட்டுக்கதை கட்டி விட்டு, அவரது சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்து பிறகு சித்திரவதை செய்வார்கள். அதை தாங்க முடியாமல் அவர் குற்றச்சாட்டுகளை ஒத்து கொள்வார். உடனே அவரை ஒரு கம்பத்தில் கட்டி உயிருடன் எரித்து விடுவார்கள். இதற்கு auto-da-fé என்று பெயர். இந்த ஸ்பானிய வார்த்தைக்கு மத நம்பிக்கை சார்ந்த செயல் என்று பொருள் கொள்ளலாம்.
எல்லா மதம் சார்ந்த சண்டைகளுமே இம்மாதிரி அடுத்தவர் நம்பிக்கைகளை மதிக்காததாலேயே வருகின்றன. ஆகவே அதற்காக ஒரு நம்பிக்கையுமே இயலாது என கூறிட முடியுமா?
ஆத்திகர் கடவுள் இருப்பதை நம்புகிறார். அவரே தனது எல்லா பிரச்சினைகளிலும் தனக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறார். கஷ்டப்படும்போது அதற்கான உடனடி காரணங்கள் தெரியவில்லை அல்லாது காரணம் ஏதுமே இல்லை என்னும் நிலையில் என்ன செய்கிறார்கள்? அப்போது ஹிந்துக்கள் விதிப்பயன், முற்பிறவிப்பயன் என்றெல்லாம் கூறுகிறார்கள். இசுலாமியர்கள், கிறித்துவர்கள், யூதர்கள் ஆகியோர் உலகின் கடைசி தினத்தன்று ஆண்டவன் வந்து எல்லா பாவ புண்ணிய காரியங்களை ஆராய்ந்து தீர்ப்பளிப்பான் என சொல்கிறார்கள். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
நாத்திகர்கள் கடவுளை நம்புவதில்லை. ஆனால் தங்களையே, தங்கள் திறமைகளையே நம்புகிறார்கள். நல்லதோ கெட்டதோ தானே பொறுப்பு எனவும் நம்புகிறார்கள். அதனால் எல்லாம் அவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக் கூறவியலுமா? அவர்களுக்கும் அவ்வப்போது சந்தேகங்கள் வருகின்றன. தாங்க முடியாத துன்பங்கள் வரும்போது எல்லாவற்றையும் முயன்ற நிலையிலும் தீர்வு வராது, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும்போது, யாராவது ஒருவர் பலான கோவிலுக்கு போய் ஒரு மண்டலம் விரதம் இரு எனக் கூற, அதையும் செய்து பார்த்த நிலையில் அவரே எதிர்பாராத வண்ணம் தீர்வு கிடைத்தால் அந்த குறிப்பிட்ட கோவிலில் உள்ள தெய்வத்தை நம்புகிறார். அது பற்றிய பிரசாரத்தை தூள் பறக்க செய்கிறார். அதன் தீவிரம் சாதாரண ஆத்திகரின் நிலையை விட பன்மடங்கு தீவிரமாகிறது. அதே போல கடவுளையே நம்பும் ஆத்திகவாதி திடீரென வாழ்வின் ஒரு திருப்பத்தில் நாத்திகவாதியாவதும் நடந்துள்ளது.
ஆனால் இந்த எல்லா விஷயங்களிலும் நம்பிக்கையே முக்கிய பங்கு வகிக்கிறது. அது மாறவும் செய்யலாம், ஆனால் ஒரு நம்பிக்கை போனால் அந்த இடம் காலியாக இருப்பதில்லை. இன்னொரு நம்பிக்கை வருகிறது.
ரொம்பவும் பொதுவாகவே பேசிவிட்டேனோ? சரி, ஒரு உண்மையான உதாரணம் தருகிறேன். நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றைப் பற்றி பதிவு போட்டேன். அப்பதிவை இங்கு முதலில் பார்ப்போம்.
இன்று மூச்சடைக்கும் அளவுக்கு ஒரு பதிவைப் பார்த்தேன். அதாகப்பட்டது, சமீபத்தில் 1962-ஆம் ஆண்டுவாக்கில் வங்கிகளில் கணினியைப் புகுத்தினார்களாம். வங்கிப் பணிகள் விரைவாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் புகுத்தினார்களாம். அப்பொழுது நம்முடைய பொதுவுடைமைத் தோழர்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள் இவர்களெல்லாம் முதலில் கடுமையாக அதை எதிர்த்தார்களாம்.
கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே என்று சொல்லி எதிர்த்தார்களாம். எப்படி காந்தியார் தொழிற் சாலைகளுக்கு எந்திரம் கூடாதென்றாரோ, அதுபோலவே முற்போக்குச் சிந்தனையாளர்களும் கணினியைக் கடுமையாக எதிர்த்தார்களாம். எங்கே பார்த்தாலும் வேலை நிறுத்தம். தந்தை பெரியார் வீரமணி அவர்களைக் கூப்பிட்டு எதற்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று கேட்டாராம்.
கணினியைப் புகுத்துவதை எதிர்த்து என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். இனி வீரமணி அவர்களின் வார்த்தைகளில்: (எவ்வளவு நேரம்தான் ராம் ராம் என்று எழுதுவதாம்)?
"என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து நாகரிகமுள்ள ஒரு நாட்டைப் போல் முன்னேற விரும்புகிறோம். வெளி நாட்டைப் போல வளர விரும்புகிறோம். எனவே, கணினியை வரவேற்பதுதானே முறை. ஆகவே கணினியை ஆதரித்து எழுதும்படி அய்யா என்னிடம் சொன்னார்.
1962 இல் வெளியான விடுதலைத் தொகுப்பை பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதில் நான் ஒரு தலையங்கம் எழுதினேன். கணினி பரவினால் வேலை வாய்ப்பு குறையாது. மாறாக வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று எழுதினேன்.
நான் எழுதியதை அன்றைக்கு ஏற்றுக் கொள்வதற்குக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் கணினி அறிவுபற்றித்தான் பேச்சு. தெருவுக்குத் தெரு கணினி மையம், கணினிப் பயிற்சியகம் என்று வந்து விட்டது. இன்று யாராவது இவைகளை எதிர்த்துச் சொல்கிறார்களா?
மேலும் புதுப்புது வேலை வாய்ப்புகள்தான் அதில் வர வாய்ப்புள்ளது. இன்று கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது".
(திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் நூல் 2 ஆம் பாகத்திலிருந்து ... ) தகவல்: இரா.கலைச்செல்வன், திருச்சி.
உண்மைதான் வீரமணி அவர்களே. எண்பதுகளில் (அதாவது பெரியார் அவர்கள் இறந்து பத்தாண்டுகள் கழித்து வங்கிகளில் கணினிகள் நிஜமாகவே புகுத்தப்பட்டபோது எதிர்ப்புகள் இருந்தது வாஸ்தவமே. ஆனால் 1962-ல்? இது கொஞ்சம் ஓவர் இல்லையா சார்?
அதாவது பெரியார் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்கிறார் வீரமணி. பகுத்தறிவின்படி அவ்வாறு நடந்திருக்கவியலாது என்றேன் நான். பல பின்னூட்டங்கள் வந்தன. அவற்றில் இரண்டை இங்கு பார்ப்போம்.
1. Thamizhan said...
தமிழ்நாட்டில் வரும் பத்திரிக்கைகளில் ஆதாரத்துடன் எழுதும் பத்திரிக்கை விடுதலை மட்டுந்தான்.எதைச் சொன்னாலும் ஆதாரத்தை,தேதியைச் சொல்லி அப்படி இல்லாவிடில் அதையும் யார் சொன்னார்கள் என்றாவது சொல்லித்தான் எழுதுவார்கள்.
அவ்ரே 1962 வாக்கில் என்று எழுதியுள்ளார்.பெரியார் கேள்வி கேட்டார் என்றும் எழுதியுள்ளார்.
அதற்கு மேலும் நீங்கள் கஷ்டப் பட்டுக் கஷ்டத்தை வீணாக வாங்கிக் கட்டிக் கொள்வதற்குப் பரிதாபப் படுகிறேன்.
அனுதாபங்கள்.
July 01, 2008 4:32 AM
2. tamiloviya said...
டோண்டு ராகவனின் அறியாமையை நினைத்து வருத்தம்தான் பட முடியும்.
பெரியாரின் தொண்டர்கள் ஆதாரத்துடன்தான் எதையும் பேசுவார்கள். ஊரில் பேசிக்கொள்கிறார்கள் என்று எதையும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார்கள். இதை பெரியாரே பலமுறை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என்பதை "டோண்டு" கள் புரிந்து கொள்ளட்டும்.
அரைகுறையாக தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்ததுபோல் நடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
வீரமணி அவர்கள் சொற்பொழிவு ஆற்ற மேடைக்கு செல்லும்போது ஆதாரம் கட்டுவதற்கு பெரிய புத்தக மூட்டையுடன்தான் செல்லுவார். இன்றுவரை அதைக் கடைபிடிக்கும் தலைவர் வீரமணி அவர்கள் மட்டும்தான். இது மிகையில்லை. உண்மை. வேண்டுமானால் வீரமணி அவர்கள் கூட்டத்து டோண்டு சென்று பார்த்துவிட்டு பதில் எழுதலாம்.
July 03, 2008 2:23 PM
மேலே உள்ள இரு பின்னூட்டங்களும் என்ன கூற வருகின்றன? விடுதலை பத்திரிகையிடமிருந்தோ அல்லது வீரமணியிடமிருந்தோ ஆதாரமில்லாமல் எந்த செய்திகளும் வருவதில்லை என்னும் கருத்தில் அவர்களுக்கிருக்கும் அசையாத நம்பிக்கை. மேற்கண்ட பதிவில் நான் சுட்டிய இதுதான் உண்மை பதிவிலும் இம்மாதிரியே பின்னூட்டங்கள் வந்தன. ஆனால் ஒரு முறை கூட 1962-வாக்கில் இந்த குறிப்பிட்ட தேதியில் இச்செய்தி வந்தது என்றோ அல்லது அச்செய்தியின் வாக்கியங்களோ வரவில்லை. இப்போது போய் பார்த்தால் அந்த இதுதான் உண்மை வலைப்பூவே அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டும் என மூடப்பட்டுள்ளது. எனது பதிவிற்கும் மேற்கொண்டு பின்னூட்டங்கள் வரவில்லை. எப்படி வரும் ஐயா? 1962 வாக்கில் கணினி பற்றிய அறிவே நம் அரசிடமோ மக்களிடமோ பரவலாக இல்லையே. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
சரி அவர்கள்தான் தரவில்லை நாமாவது போய் பார்ப்போம் என பெரியார் திடலுக்கு சென்றால் என்னை விடுதலை பத்திரிகை பழைய காப்பிகளை பார்க்க அனுமதி தர மறுத்து விட்டார்கள். 1965 இதழ்களை பார்த்த பிறகு இதையும் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் தேதி தெரியாது. அதனால் என்ன வீரமணி அவர்கள் கூறியிருப்பார் என நம்பலாமே. ஒரு வேளை இந்த நம்பிக்கையும் ஆதாரமற்றதோ?
இம்மாதிரி நான் பார்க்கும் சுவாரசியமான நம்பிக்கைகள்:
1. பெரியார் அவர்கள் உண்மையாகவே தலித்துகளுக்காக எல்லோரிடமும் (பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் உட்பட) சண்டை போட்டவர்.
2. 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்க்காதவர்.
3. தனக்கு ஒரு நியாயம் ஊராருக்கு ஒரு நியாயம் என செயல்படாதவர்.
4. பெரியாரின் கொள்கைகளை வீரமணி அவர்கள் மட்டுமே சரியாக பரப்பவியலும் என தமிழ் ஓவியா போன்றவர்கள் நம்புவது.
மேலும் ஏதேனும் நம்பிக்கைகள் தென்பட்டால் அவற்றை பின்னூட்டங்களில் சொல்லுங்களப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
1 hour ago
37 comments:
//ஒரு நம்பிக்கை போனால் அந்த இடம் காலியாக இருப்பதில்லை. இன்னொரு நம்பிக்கை வருகிறது.//
உண்மை
1904 வருடம் காசியில் நடந்ததன் விளைவாக ஜாதியை அழிப்பேன் என்று சொல்லியிருந்தாலும் -- பார்பனர்களை மட்டும் என்று அடைப்புக் குறிக்குள் கூறி, மற்ற எல்லோரையும் தான் இந்த ஜாதி என்று சான்றோடு கூற வைத்த/கூற வைத்துக் கொண்டிருக்கும் பெருமையும் அவருக்கே போய் சேரும். ஒழிக்க வேண்டிய விஷயத்திற்கு சான்று எதற்கு?
ஹிந்தி எதிர்ப்பின் மூலம், தங்க்ளிஷ் வளர்ந்தது.
நல்லது - நடக்கட்டும்.
-வித்யா
இது எவ்வளவு பெரிய புளுகு என்றால், 1962 ஆம் ஆண்டுகளில் கணினிமயமாக்குவது என்ற பேச்சே இருந்ததில்லை. 1966 இல தான் ரிசர்வ் வங்கியிலேயே கணினி,உள்ளே நுழைகிறது. அதை அடுத்து ஸ்டேட் வங்கியில், போனால் போகிறது என்று reconciliation work இற்காக கணினி வருகிறது. இப்போது வங்கியில் பார்க்கிற கணினிமயமாக்கல் எல்லாம் இருபது ஆண்டுகளுக்குள் வந்தது. Core banking என்பதெல்லாம் இந்தப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் தான்.
1990 களில் வங்கித்துறையில் கணினிமயமாக்கல் வரும் போது பெரியார் உயிரோடு இருந்தாரா?
அல்லது வீரமணிக்கு மட்டும் கேட்கிறமாதிரி ஓய்ஜோ பலகையில் வந்து பேசினாரா?
அப்போது கூட வலதுசாரி கம்யூனிஸ்ட் சார்புச் சங்கம் ஒப்புக்கொண்ட நிலையில், வலது சாரி ஒப்புக்கொண்டது என்ற ஒரே காரணத்திற்காக அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள BEFI மட்டும் தான் என்றாவது தெரியுமா?
இது தான் உண்மை என்று எதையாவது பேசிவிட்டு, கேள்வி வரும் போது தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு நழுவுகிற சாமர்த்தியம் எல்லாம் நம்ம தமிழ் ஓவியாவுக்குக் கிடையாது, அதைக் கவனித்தீர்களா டோண்டு சார்? அவருக்குத் தெரிந்ததெல்லாம், விடுதலை, குடியரசு இப்படி எதிலாவது வெளிவந்த ஏதோ ஒரு பக்கத்தை வெளியிட்டு விட்டு, அதில் எவராவது ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டு விட்டால், அதற்குக் கூட நேரடியாக பதில் சொல்லாமல், குத்துமதிப்பாக, ஏதோ ஒரு அல்லது பல பதிவுகளின் சுட்டியை கொடுத்து, படியுங்கள், உணருங்கள், தெளியுங்கள் என்று சொல்வது தான்.
சமீபத்தில் கோவிக்கண்ணன் இரண்டு பதிவுகள் எழுதினார். ஒன்றில் "பெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள்". இன்னொன்றில், வீரமணி ஐயாவோட பகுத்தறிவு எத்தன்மையது? தமிழ் ஐயா கொஞ்சம் விளக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார் அங்கே எல்லாம் கூட பிட் நோடிஸ் கொடுப்பது போல இந்தச் சுட்டியை பாருங்கள், அந்தச் சுட்டியை பாருங்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார் தவிர, எந்தக் கேள்விக்கும் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.
தன்னுடைய பதிவில் சம்பந்தா சம்பந்தமில்லாமை, நீதிபதி சந்துருவின் தீர்ப்பை வெளியிட்டதற்காக, தினமணி மீது ஒரு பாய்ச்சல், சோவின் சீடர் வைத்திய நாத ஐயர் என்று வழக்கமான பார்ப்பனீய வசவு மழை! ஒதுங்கிப் போகிறவனைக் கண்டால், பகுத்தறிவுவாதிகளுக்குக் கொண்டாட்டம் தான் இல்லையா!
வினவு தளத்தில் இவர் கொடுத்த புள்ளிவிவரத்தையே புள்ளி இல்லாமல் கிழிகிழி என்று கிழித்ததில், அங்கே இந்த பிட் நோடீஸ் ஓட்டுகிற வேலை எடுபடவில்லை என்றவுடன், விவாதத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். பாவம்! ஒருத்தரைப் போட்டு எல்லோரும் இந்த ஓட்டு ஓட்டுகிறார்கள் என்று பார்த்தால், உங்களுடைய முந்தைய பதிவிலும் வந்து பிட் நோடீஸ் ஓட்டுகிற வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டார்.
I want TamilOviya Iyaa to come and cut & paste Periya Iyaa's speech here also. Super Jaali.
Let us enlighten ourselves with Periya Iyya's "refined" speeches.
Dondu, you are hitting sixers and boundaries.
Venkat V
Dear Dondu sir
I have seen that you are resourceful person.
My worry is your time and energy is unnecessarliy waste on this anti periyar, anti dk issues.
we all know about veeramani and his policy stands.
My humble request is you could write on useful things, interesting incidents you have come across (in your IDPL, transalation filed, old chennai life...).
//Dondu, you are hitting sixers and boundaries.//
எனக்கு இது தான் ஞாபகம் வந்திச்சி..
ஆளில்லாத டீ கடையில யாருக்குடா டீ ஆத்துற ..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா :)
இந்தியாவின் கோவாவிலும் இன்குவிசிஷன் நடந்தது.
பெரியார் தனக்கு காசியில் ஏற்பட்ட கசப்பான அனுபவமே பிராமணர் மேலான வெறுப்பாக மாறியதே தவிர அவர் அணைத்து ஜாதி மக்களின் உயர்வுக்காக பாடு பட்டவர் அல்ல.
அவருடைய குறிக்கோள் பிராமணர்களை பழிவாங்குவதே அன்றி பிறிதொன்றுமில்லை.
ஜாதியை ஒழிக்க பாடுபட்ட பெரியார் , இறுதி வரை "ராமசாமி நாயக்கர்" என்றே கையொப்பம் இட்டு வந்தார். இதை மற்றும் கீழ் உள்ள என்னுடைய வினாக்களுக்கு பெரியாரின் சிஸ்ய கோடிகள் விடை பகன்றால் மகிழ்வேன்.
1)தமி்ழ் காட்டுமிராண்டிகளின் மொழி என்று எழுதியும் குறிப்பிட்டும் வந்தார் .
2)தமிழருக்கு சுயஅறிவு இல்லை அதனால் தான், கன்னடராகிய நான் தலைவனாக உள்ளேன்.
3)ஐரோப்பாவின் நிர்வாண சங்கத்தில் சேர்ந்ததின் காரணம்?
4)பாம்பையும் பார்பானையும் ஒன்றாக கண்டால், பாம்பை விடுத்து பார்பானை அடிக்கவும்.
5)குழந்தை பெறுதல் என்னும் காரணத்தை கொண்டே பெண் அடிமை செய்ய படுகிறாள், ஆதலால் பெண்கள் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும்.
6)அணைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.
கடவுள் இல்லை என்பவர் , எதற்கு அர்ச்சகர் ஆக ஆசை படுகிறார் ? அதை நிறைவேற்றி இராமசாமி நாயக்கரின் இதயத்தில் இருந்த முள்ளை அகற்றிய கருணாநிதி ஒரு படி மேல பொய் பெண்களை அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார். பெண் விடுதலை என்பதே இதன் காரணமாக அவர் கூறினாலும் இதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம், இந்து மதத்தின் அடிப்படை விதிகளை உடைத்து அதன் மூலம் தன்னை சிறுபான்மையினர் ஆதரவாளராக காட்டும் முயற்சியே. பெண் விடுதலையே உண்மையான காரணம் எனில், இசுலாமிய சமூக பெண்களின் மசூதி நுழைவுக்கும், கிருஸ்துவ சமூக பெண்களை சபையின் தலைமை பொறுப்புக்கு அமர்த்தும் வகையில் விதி செய்வாரா?
நான் முன்பு பின்னூட்டம் இட்டதுதான் சரி! அவர்கள் ஒரு கொலை வெறியோடுதான் அலைகிறார்கள்! பெரியார் இதைச் சொன்னார் அதைச் சொன்னார் என்று உளறுவதற்கு ஏதுவாக இருக்குமென்றுதான் உரிமை கொண்டாடுகிறார்கள்!
ஒரு பொய்யை பல முறை சொல்லிவிட்டால் உண்மையாகிவிடும் என்று நம்புகிறார்கள்! பாவம்!
I strongly feel that they are losing their social and political grounds and so they are resorting to these type of cheap methods!
//1904 வருடம் காசியில் நடந்ததன் விளைவாக ஜாதியை அழிப்பேன் என்று சொல்லியிருந்தாலும் -- பார்பனர்களை மட்டும் என்று அடைப்புக் குறிக்குள் கூறி, //
The originators and custodian of caste system are brahmins. Among all brahmins, the Tamil brhamins are the most orthodox. They cling to the system, calling themselves brahmins, whereas others stopped calling them kshtariyas, vaishias etc.
Therefore, it is important to attack Tamil brahmins only if you want to attack the caste system.
Periyar had thought correctly. Thanks to him, today, we see the younger generations of TBs not so orthodox. Next genearations will completely give up the holier than thou nonsense passed on to the generations by TBs.
If the nonsese is revived, then another Periyar is a doubless a certainty.
//My worry is your time and energy is unnecessarliy waste on this anti periyar, anti dk issues.//
Thanks for your concern. There is nobody more conscious about one's time and energy than our Dondu sir.
What Dondu sir is doing is very important. These lying black sheeps must be made to face the truth.
இம்மாதிரி நான் பார்க்கும் சுவாரசியமான நம்பிக்கைகள்:
1. பெரியார் அவர்கள் உண்மையாகவே தலித்துகளுக்காக எல்லோரிடமும் (பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் உட்பட) சண்டை போட்டவர்.
2. 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்க்காதவர்.
3. தனக்கு ஒரு நியாயம் ஊராருக்கு ஒரு நியாயம் என செயல்படாதவர்.
4. பெரியாரின் கொள்கைகளை //வீரமணி அவர்கள் மட்டுமே சரியாக பரப்பவியலும் என தமிழ் ஓவியா போன்றவர்கள் நம்புவது.
மேலும் ஏதேனும் நம்பிக்கைகள் தென்பட்டால் அவற்றை பின்னூட்டங்களில் சொல்லுங்களப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
5.அண்ணா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தத்தே தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையின் பால் பாசம்,பக்தி கொண்ட மக்களால்தான்
6.பெரியார் தான் கொண்ட் கொள்கையில் மாறத திண்ணிய மனத்தை உடையவர்.
7.ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இலையடி கண்ணே என கடைசிவரை வாழதவர்.
8.கூட்டங்கள் வாயிலாக பணம் சேர்த்தது தனக்காக இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திகற்காக மட்டும்.
9.தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டு தமிழை உலக செம்மொழி யாக்க வித்திட்டவர்
10.பெரியார் சமத்து புரங்கள் தோண்றக் காரண கர்த்தா.
வெட்டியாக நாத்திகம் பேசுவது தேவையற்றது தான்!
ஆனால் கடவுள் என ஆரம்பித்து மதம், சாதி என பிரிவினையில் நாடு அடித்து கொள்ளும் போது தான் எரிச்சலாக இருக்கிறது!
என்னான்னு தெரியல மூணாவது தடவையா போடுறேன்!
ஏற்கனவே வந்திருந்தா மற்றவற்றை அழித்துவிடவும்!
//அந்தச் சுட்டியை பாருங்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார் தவிர, எந்தக் கேள்விக்கும் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.//
ஏற்கனவே விவாதிக்கப்பட்டவைகளை கேள்வியாக கோவி. கண்ணன் கேட்டிருந்தார். அதற்கு பதிலாக சுட்டியை கொடுத்திருந்தேன். பதில்கள் தெளிவாக சொல்லப்படுள்ளது அந்தச் சுட்டியில் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.கிருஷ்ணமூர்த்தி.
@கிருஷ்ணமூர்த்தி
தமிழ் ஓவியாவுக்கு சொந்த புத்தி கிடையாது. எல்லாவற்றுக்கும் பெரியாரின் கூற்றுகளாகத்தான் போடுவார். அது இன்னும் செல்லுபடியாகிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. ஏனெனில், அவரது நம்பிக்கைகள்:
1. பெரியார் அவர்கள் உண்மையாகவே தலித்துகளுக்காக எல்லோரிடமும் (பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் உட்பட) சண்டை போட்டவர்.
2. 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்க்காதவர்.
3. தனக்கு ஒரு நியாயம் ஊராருக்கு ஒரு நியாயம் என செயல்படாதவர்.
4. பெரியாரின் கொள்கைகளை வீரமணி அவர்கள் மட்டுமே சரியாக பரப்பவியலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// //Dondu, you are hitting sixers and boundaries.//
எனக்கு இது தான் ஞாபகம் வந்திச்சி..
ஆளில்லாத டீ கடையில யாருக்குடா டீ ஆத்துற ..உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா :) ///
Ayya Joe
Superubu. go & check your tea shop firstu. Dondu gets more visits and replies than most of the bloggers.
//தமிழ் ஓவியாவுக்கு சொந்த புத்தி கிடையாது.//
பெரியார் தந்த புத்தி மனித நேயத்தை வலியுறுத்துவதால் சொந்தப் புத்தியை விட பெரியார் தந்த புத்தியைதான் அதிகமாகப் பயன்படுத்துகிறேன்.அதில் பெருமையும் படுகிறேன்.
சொந்தப்புத்தியைப் பயன்படுத்தும் போது ஆசாபாசம் குறுக்கிடும்.ஆனால் பெரியார் தந்த புத்தி நாணயமாக, நேர்மையாகச் செயல் பட வைக்க்கும் .
//1. பெரியார் அவர்கள் உண்மையாகவே தலித்துகளுக்காக எல்லோரிடமும் (பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் உட்பட) சண்டை போட்டவர்.
2. 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்க்காதவர்.
3. தனக்கு ஒரு நியாயம் ஊராருக்கு ஒரு நியாயம் என செயல்படாதவர்.
4. பெரியாரின் கொள்கைகளை வீரமணி அவர்கள் மட்டுமே சரியாக பரப்பவியலும். //
மிகச் சரியாக சுட்டிக்காட்டிய டோண்டுக்கு மிக்க நன்றி
@தமிழ் ஓவியா
இதற்கெல்லாம் எதற்கு நன்றி தமிழ் ஓவியா? தனது தொண்டர்கள் பகுத்தறிவை மூட்டை கட்டி வைக்க வேண்டும் என்ற அவரது கட்டளையை அப்படியே நிறைவேற்றும் நீங்கள்தான் வீரமணியை விட பெரிய தொண்டர்.
பாருங்களேன், வீரமணி ஜெயலைதா என்னும் ஒரு பாப்பாத்தியை பாராட்டினார். நீங்களாக இருந்தால் அவ்வாறு செய்திருப்பீர்களா?
ரொம்பவுமே பெரியாரின் கூற்றுகளை காப்பி பேஸ்ட் செய்து விட்டீர்கள். உங்கள் தட்டச்சு பலகைக்கு ஓய்வு கொடுங்கள், பாவம் அவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ் ஓவியாவின் தட்டச்சுப்பலகையில் உள்ள எழுத்துக்கள் பட்டியல்:
த, மி, ழ், ஓ, வி, யா
control, C, V.
அவ்வளவு தான்.
உலகத்திலேயே சின்ன தட்டச்சுப்பலகை கொண்ட கணினி தமிழ் ஓவியாவினுடையது என்று பெரியார் என் கனவில் தோன்றி விளக்கினார்.
//வீரமணி ஜெயலலிதா என்னும் ஒரு பாப்பாத்தியை பாராட்டினார். நீங்களாக இருந்தால் அவ்வாறு செய்திருப்பீர்களா//
கொள்கை அடிப்படையில் யார் சரியாக செயல்பட்டாலும் பாராட்டுவோம். தவறு செய்ய்யும் போது கண்டிப்போம்.
1952-இல் இராஜாஜி பதிவிக்கு வந்த போது ஒரு சில நல்ல மக்களுக்கு பயன் படும் செயல்களைச் செய்த போது பெரியார் பாராட்டினார்.
இராஜாஜியைப் பாராட்டிய அதே பெரியார் இராஜாஜி குலக்கல்வி முறையைக் கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்து பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும் நான் சொல்லும் போது அக்கிரகாரத்தை கொளுத்துங்கள் என்று முரசு அறிவித்தார் .உடனே இராஜாஜி பதவி விலகினார் என்பது வரலாறு.
உங்களின் சிண்டு முடியும் வேலை எங்களிடம் எடுபடாது.
சரி சரி இதெல்லாம் இருக்கட்டும். என்ன இன்று ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் நிகழ்ச்சிய முடித்து விட்டீர்களா? டோண்டு..
பூணூல் அணிவிப்பது குறித்த காந்தியாரின் கருத்து அதாங்க இராஜாஜி சம்பந்தி என்ன சொன்னார் என்பது பற்றி அறிய சுட்டியை கீழே த்ந்துள்ளேன். படியுங்கள்.
http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6556.html
//பெரியார் என் கனவில் தோன்றி விளக்கினார்.//
உங்க கனவுலே பெரியார் வருகிறாரா?(உங்க வாதப் படி)
அப்ப நீங்க உருப்பட்டுருவீங்க?
//
உங்க கனவுலே பெரியார் வருகிறாரா?(உங்க வாதப் படி)
அப்ப நீங்க உருப்பட்டுருவீங்க?
//
கனவு வரும் அளவுக்கு என்னிடம் மூளை உள்ளது, உங்களிடம் அது இல்லாத காரணதால் அவரால் வர முடியவில்லை போலும்.
Oviya
//ஒரு சில நல்ல மக்களுக்கு பயன் படும் செயல்களைச் செய்த போது //
அட... ராஜாஜி செய்யும்போது - அது "ஒரு சில மக்களுக்குதான்"!!! அட அட அட.. என்ன பெருந்தன்மை.
//இராஜாஜி குலக்கல்வி முறையைக் கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்து பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும் நான் சொல்லும் போது அக்கிரகாரத்தை கொளுத்துங்கள் என்று முரசு அறிவித்தார் .உடனே இராஜாஜி பதவி விலகினார் என்பது வரலாறு.//
Today People want half day of Theory and Half day of Practical Technical education. Bullshit perception by Periyar doomed TN schooling system.
தமிழ் ஓவியா சொன்னதும் , சொல்ல மறந்தது அடைப்புக் குறிக்குள்ளும்:
//கொள்கை அடிப்படையில் யார் சரியாக செயல்பட்டாலும் [இங்கே கொள்கை என்னவென்றால், அதெல்லாம் வெங்காயம், சொன்னவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்]பாராட்டுவோம். [எப்படியென்றால், சமூகநீதி காத்த வீராங்கனை விருது கொடுத்து, அங்கே இருக்கும் ஜால்ராக்களையும் மிஞ்சும் வகையில்]
தவறு செய்ய்யும் போது கண்டிப்போம்.[இங்கே தவறு என்பது ஆட்சி அதிகாரத்தில் இல்லாதது ஒன்று மட்டும் தான்!]//
பெரியாராவது, சொல்லியே தான் செய்தார்! உங்கள் ஆசிரியர் அதை ஒரு கலையாகவே வளர்த்து வைத்திருக்கிறாரே ஐயா!
ஊரைத் திருத்தப் புறப்படுவதற்கு முன்னால், கொஞ்சம் உங்களையும் திருத்திக்கொள்ளப் பழகுங்கள் ஐயா! குறைந்தபட்சம், மனிதனாகவாவது வாழ முடியும்!
//இராஜாஜியைப் பாராட்டிய அதே பெரியார் இராஜாஜி குலக்கல்வி முறையைக் கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்து பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும் நான் சொல்லும் போது அக்கிரகாரத்தை கொளுத்துங்கள் என்று முரசு அறிவித்தார் //
இராஜாஜி குலக்கல்வி முறையைக்கொண்டுவந்தால் அதற்கு அக்கிரகாரத்தை ஏன் கொளுத்தவேண்டும்? இதட்குபெயர்தான் பகுத்தறிவோ?
//கொள்கை அடிப்படையில் யார் சரியாக செயல்பட்டாலும் பாராட்டுவோம். தவறு செய்ய்யும் போது கண்டிப்போம்// ஒரு பாப்பாத்திகிட்டே போய் யாசகம் கேட்டு வாங்கியிருக்காரு! அதைப் போய் கொள்கை, அடிப்படை அப்படீன்னு எப்படிங்க இவரால இப்படி அசிங்கமா சொல்லமுடியுது!
பாப்பாத்தி ஜெயலலிதா தான் பெரியாருக்கு பிறந்த நாள் விழா நடத்தினாங்க அதில் கல்ந்து கொள்ள தி.க. தலைவர் வீரமணி அவர்களையும் அழைத்திருந்தாங்க. வரலாற்றைச் சரியா சொல்லுங்க ரவிஷா
தமிழ் ஓவியா சொன்னது:
/பாப்பாத்தி ஜெயலலிதா தான் பெரியாருக்கு பிறந்த நாள் விழா நடத்தினாங்க/
ரொம்ப சரி. பெரியாருக்குப் பிறந்தநாள் விழா எடுக்கக் கூடப் பாப்பாத்தியோ, பார்ப்பனனோ தான் வர வேண்டியிருக்கிறது!
/ஏற்கனவே விவாதிக்கப்பட்டவைகளை கேள்வியாக கோவி. கண்ணன் கேட்டிருந்தார். அதற்கு பதிலாக சுட்டியை கொடுத்திருந்தேன். பதில்கள் தெளிவாக சொல்லப்படுள்ளது/
தமிழ் ஓவியா ஐயா! நீங்கள் கொடுத்த சுட்டிகள் முழுவதையும் படித்த பிறகு தான் சொல்கிறேன்! நீங்கள் தான் சுவரொட்டி ஒட்டி, பிட் நோடீஸ் கொடுப்பதைத் தவிர
சொல்லப்பட்டிருந்தது என்ன என்றே படிக்காமல் பேசிக் கொண்டிருப்பதை, மறுபடி மறுபடி நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் பேசும் "பகுத்தறிவு, சுயமரியாதை, இனமானம்" இந்த வார்த்தைகள் எல்லாம் அர்த்தமிழந்து கேலிக்குரியதாகி விட்டதை இன்னமும் நீங்கள் உணரவில்லையென்றால், அது உங்கள் தலையெழுத்து!
//பெரியாருக்குப் பிறந்தநாள் விழா எடுக்கக் கூடப் பாப்பாத்தியோ, பார்ப்பனனோ தான் வர வேண்டியிருக்கிறது!//
வகுப்புரிமையை எதிர்த்த பார்ப்பனர்கள் தான் இன்று எங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் பெரியார் வழியில் வகுப்புவாரி உரிமை வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்கள்.
பெரியார் வழிக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
//இராஜாஜி குலக்கல்வி முறையைக்கொண்டுவந்தால் அதற்கு அக்கிரகாரத்தை ஏன் கொளுத்தவேண்டும்? இதட்குபெயர்தான் பகுத்தறிவோ?//
குலக்கல்வித் திட்டம் வரக் காரணமாயிருந்ததே வருணாச்சிரமத்தை கடைப் பிடிக்கும் அக்கிரகாரக் கும்பல்தான் எனவே தான் அக்கிரகாரத்தை எரிக்க அணியமாக இருக்கச் சொன்னார் பெரியார்.
////இராஜாஜி குலக்கல்வி முறையைக்கொண்டுவந்தால் அதற்கு அக்கிரகாரத்தை ஏன் கொளுத்தவேண்டும்? இதட்குபெயர்தான் பகுத்தறிவோ?//
பகுத்து, அல்ல பொகுத்தறிவோ இங்க இல்ல.
பாப்பான் மிரட்டலுக்கு ரொம்ப பயப்படுவான்.
‘பெரிய துரை என்றால் உடல் வேப்பான். அஞ்சி அஞ்சி சாவான்’ என்றார் பாரதி.
இண்டெர்னெட்டிலே இருட்டறையிலேதான் தைர்யம். நேரிலெ ஆள் இருக்குமிடம் தெரியாது.
பாப்பான் அருவாளை எடுத்து யாரையும் குலோசு பண்ணினதா சரித்திரம் இல்ல.
கிரேசி மோகன் இந்தியன் படத்திலே, மயிலாப்பூர் மாமாவா வருவார்; லஞ்சம் கொடுக்கமாட்டேன்னு ச்அடம்புடிப்பரர். கமல், முதுகைத்தொட்டுப் பாத்துட்டு, ‘மிஞ்சிபோனா லெட்டர் டு த எடிட்டர்’ போடுவே. போட்டுக்கோ! என்பார். அதுக்கு மேலே ஒன்னும் செய்யமுடியாது.
வசன்ம் எழுதியது: கிரேசி மோகன் (திருவல்லிக்கேணி ஐயங்கார்) பேசியது கமல் (பரமக்குடி ஐயங்கார்). இவியங்களுக்குத் தெரியாதா பாப்பானைப்பத்தி?
எனவே பெரியார் சொன்னது ரொம்ப் ப்ராக்டிகலான விசயம். மிரட்டினவுடனேயே குலக்கல்வித்திட்டம் அம்போன்னு போட்டுட்டாங்கல்லையா?
> Anonymous said...
>பாப்பான் மிரட்டலுக்கு ரொம்ப >பயப்படுவான்.
அனானி, ஈழ பிரச்சினை, ஆர்பாட்டங்கள் போது - 30 வருடமாக - சுப்ரமணியம் சுவாமி, இந்து ராம், சோ ஆகிய பாப்பான்கள் யார் மிரட்டலுக்கும் பயப்படாம தங்கள் கொள்கைகளை பேசி வந்தனர்.
அதை திராவிட “தலைவர்~ கூட்டத்துடன் ஒப்பிடுக. கருணநிதியே, ஒரு பக்கம் புலிகளுக்கு சாவு மணி அடித்து, குழி தோண்டினாலும், அதை வெளிப்படையா சொல்லாத கோழைகள். திராவிட “தலைவரக்ள்” தான் மிரட்டலுக்கு பயந்து வாயை போத்திக் கொண்டு, மத்திய அரசுக்கு வால் பிடிக்கிறார்கள். பாப்பான் அப்படி இல்லை. யார் மிரட்டலுக்கும் பயப்படாம தங்கள் கருத்தை சொன்னார்கள்.
> Anonymous said...
>மிரட்டினவுடனேயே >குலக்கல்வித்திட்டம் அம்போன்னு >போட்டுட்டாங்கல்லையா?
குலக்கல்வி திட்டம்னு யாரும் போடவில்லை. அது ஈவேராவே கொடுத்த பெயர். அதனால் இல்லாத திட்டத்தை “வாபஸ் வாங்கிய” பெருமை ஈரோடு ராமசாமி நாயக்க்ரை சாரும்
Both the bramins propagating and teaching their young generation that they r superior to other communists, and the so-called atheists saying only bramins r the sole reason for all these problems our country is facing are nothing but lies... as usual innocent masses not knowing who is right and who is wrong gets fragmented further. I remember overhearing one of my bramin frnd's father on phone scolding him to restrict his frndshp only to bramins. That too in chennai... again in mid 2000s...horrible... as for veeramani n co.. sigh...... :-/
> Phantom said...
>Both the bramins propagating and >teaching their young generation >that they r superior to other >communists, and the so-called >atheists saying only bramins r >the sole reason for all these >problems our country is facing
Phantom, brahmin parents don't have to teach brahmin children that they are superior, it is done by EVR baktas and DK. Without any government power for the last 50 years, if the Brahmins have super influence in Tamilnadu as the DK, EVRist propoganda says, then they must be superior.
எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய் முடிந்த கதையாகிவிட்டதே இந்த இடுகை.
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு! இதைச் சொல்ல வந்தால் கோவம் வருகிறது பலருக்கு.
ஒரே ஒரு தலைவர் மட்டுமே, பெயர் மூலமாக, இத்தனை வருசமாப் போராடுறார், ஏன் வேறு தலைவர்கள் எல்லாம் பெரிதாகப் பேசப்படவில்லை இப்போது?! அதுவும் தலைவராகவே மதிக்கப்படவில்லை தற்போது?! எல்லாம் நம்பிக்கை தான் காரணமோ? மிக்க நன்றி ஐயா.
Post a Comment