3/13/2010

வேழம் இணைய பத்திரிகையில் எனது செவ்வி பகுதி - 1

கார்த்திக் என்பவரிடமிருந்து கீழ்கண்ட பின்னூட்டம் வந்தது.

LK has left a new comment on your post "சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 42 ...":

@ராகவன்

நான் அடுத்த வாரம் துவங்க உள்ள தமிழ் இணைய பத்திரிக்கை முதல் இதழில் உங்களுடய பேட்டி ஒன்றை வெளியிடலாம் என்று எண்ணி உள்ளேன். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி எனக்கு அனுப்ப இயலுமா?

நானும் எனது மின்னஞ்சல் முகவரியை அனுப்பினேன். பிறகு அவரிடமிருந்து 11 கேள்விகள் வந்தன.

2010/3/6 LK

திரு ராகவன் அவர்களுக்கு ,

முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

1. உங்களை பற்றிய சிறு சுய விபரம்
நான் சொந்த முறையில் தொழில் புரியும் ஒரு ஜெர்மானிய/பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளன் மற்றும் துபாஷி. இம்மொழிகளில் எனக்கு 1975/1978-லிருந்து அனுபவம் உண்டு. நான் 23 வருடங்களாக ஒரு மின்பொறியாளனாகவும் பணி புரிந்திருக்கிறேன். ஆகவே நான் தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். கூடவே அவ்வப்போது இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்க்கிறேன். சென்னைக்கு நிரந்தரமாக திரும்ப வந்தது 2001-ல். தமிழ் வலைப்பூ தொடங்கியது 2004-ல். அதிலிருந்து ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கும் வேலைகளும் வருகின்றன.


2. பொறியியல் வல்லுனராக இருந்த நீங்கள் எவ்வாறு மொழிபெயர்ப்பு துறைக்கு வந்தீர்கள்?
எல்லாமே தற்செயலாக நிகழ்ந்ததே. பொறியியல் கடை ஆண்டில் இரு சப்ஜெக்டுகளில் ஃபெயில் ஆனேன். மனப்புழுக்கத்தில் இருந்த என்னை எனது தந்தைதான் தேற்றி, மேக்ஸ் ம்யுல்லர் பவனில் அப்போது துவங்கவிருந்த ஜெர்மானிய மொழிவகுப்பில் சேரச் சொன்னார். பிறகு நடந்தவை எல்லாம் தாமாகவே நூல்பிடி கணக்காக நடந்தன.

1971-லிருந்து பொறியியலாளராக மத்திய பொதுப்பணி துறையில் வேலைக்கு சேர்ந்தேன். கூடவே இணையாக 1975-லிருந்து ஜெர்மன் மொழிபெயர்ப்பு வேலைகளையும் ஆரம்பித்தேன். அதே ஆண்டு பிரெஞ்சு வகுப்பிலும் சேர்ந்து 1978-ல் முடித்தேன். அப்போதிலிருந்து பிரஞ்சு மொழிபெயர்ப்பும் சேர்ந்து கொண்டது. இங்கு நான் செயலாற்றியது பற்றி மேல்விவரங்கள் இங்கே.

பிரெஞ்சு ஜெர்மன் கற்ற கதையை இங்கே பார்க்கலாம்.

1981-ல் ஐ.டி.பி.எல். என்னும் அரசு மருத்துவ நிறுவனத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேவை என கேட்டிருந்தனர். நானும் விண்ணப்பம் அனுப்பினேன். நேர்காணலில் பொறியியல் வேலையும் தந்தனர். ஆகவே இரட்டை டெசிக்னேஷனில் அடுத்த 12 ஆண்டு காலம். தில்லி வாசம். 1993-ல் விருப்ப ஓய்வுக்கு பின்னால் எட்டு ஆண்டுகள் தில்லியிலேயே இருந்து ஃப்ரீலேன்சராக மொழிபெயர்ப்பு வேலைகளை ஏற்று செய்தேன். 2001-ல் சென்னைக்கு வந்து அதையே இதுவரை செய்து வருகிறேன். ஐ.டி.பி.எல். விவரங்கள் இங்கே.

3. எந்த ஒரு தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் உண்டு? உங்களிடம் அந்த மாதிரி யாராவது ஏமாற்றியது உண்டா?
அது இல்லாமலா. ஆனால் கடவுள் புண்ணியத்தால் அம்மாதிரி சந்தர்ப்பங்கள் கடந்த 35 ஆண்டுகளில் மூன்றோ நான்கோதான். எல்லாம் வாடிக்கையாளர்களை அணுகும் முறையில்தான் உள்ளது. அது பற்றி எனது எண்ணங்கள் இங்கே.

4. தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு பிரதானமாக இருந்த சமயத்தில் நீங்கள் படித்துகொண்டு இருந்திருப்பீர்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி உங்களுடைய கருத்து என்ன?
அப்போது சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை நடந்த அப்போராட்டத்தல் நான் இரண்டாம் ஆண்டில் மூன்று பேப்பர்களில் தோல்வியடைந்து ஓர் ஆண்டு வீட்டில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அப்போராட்டத்தை எதிர்த்தவர் பெரியார் என்பது இக்காலத்தில் பலருக்கும் நியூஸ்.

5. உங்களுடைய பதிவை படிப்பவர்களுக்கு உங்கள் எழுத்துகளை பற்றி நன்கு தெரியும். எல்லோருக்கும் ஒருவித வழிகாட்டி அல்லது முன்மாதிரி என்று யாரவது ஒருவர் இருப்பார். அப்படி உங்களின் முன்மாதிரியாக நீங்கள் கருதுவது யார்?
சோ அவர்கள்தான் எனக்கு ரோல் மாடல். அவரது தரத்தில் எழுதவே எனது முயற்சி எப்போதும் இருக்கும். அதே போல செயற்கரிய செயல்கள் செய்த இஸ்ரவேலர்களும் எனது ரோல் மாடல்களே.

இன்று வேழம் பத்திரிகையில் முதல் ஐந்து கேள்விகள்/பதில்கள் வந்துள்ளன. அடுத்த பகுதி இம்மாத நான்காம் சனிக்கிழமை, அதாவது 27.03.2010 அன்று வரும் என அறிகிறேன்.

அவருக்கு எனது எல்லா பதில்களையும் அனுப்பிய மின்னஞ்சலில், அவற்றை நான் எனது பதிவிலும் போட்டுக் கொள்வேன் என்பதையும் தெரிவித்திருந்தேன். அவரும் அதற்கு சம்மதம் அளித்தார். ஆனால் முதலில் தனது இணைய பத்திரிகையில் அவை வரட்டுமே என்றார். நானும் வெயிட் செய்தேன். இப்போது முதல் தவணையாக அவர் முதல் ஐந்து பதில்களை ரிலீஸ் செய்துள்ளார். நானும் அவற்றை இங்கே ரிலீஸ் செய்கிறேன்.

நன்றி

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

dondu(#11168674346665545885) said...

உங்கள் பத்திரிகையில் வந்த எனது செவ்வியின் முதல் பகுதியில் நானும் பின்னூட்டம் இட்டுள்ளேன். அது இதோ:
“இதே பேட்டியின் இப்பகுதி நான் உங்களிடம் ஏற்கனவே கூறியது எனது பதிவிலும் வந்துள்ளது, பார்க்க: http://dondu.blogspot.com/2010/03/1.html

ஆமாம், அது என்ன எனது அத்தனை ஹைப்பர்லிங்குகளையும் கோட்டை விட்டீர்கள்? என் பதிவில் அவற்றை ரிடெய்ன் செய்துள்ளேன். உங்களுக்கு வந்த மின்னஞ்சலிலும் அவை உள்ளன.

இதன் அடுத்த பகுதி இப்பத்திரிகையில் ரிலீஸ் ஆனதும் அங்கும் வரும்”.

ந்ன்றி,
டோண்டு ராகவன்

கானகம் said...

//அதே போல செயற்கரிய செயல்கள் செய்த இஸ்ரவேலர்களும் எனது ரோல் மாடல்களே.//

அப்படி என்ன செயற்கரிய செய்தனர் இஸ்ரேலியர்கள்?

dondu(#11168674346665545885) said...

2010/3/13 Tamilish Support
- Hide quoted text -


Hi Dondu,

Congrats!

Your story titled 'வேழம் இணைய பத்திரிகையில் எனது செவ்வி பகுதி - 1' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th March 2010 05:49:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/203048

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
நன்றி தமிலிஷ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது