வலைப்பூக்களை பாவிப்பதில் இன்னொரு மைல்கல்லை தாண்டும் எண்ணத்தில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. உண்மை தமிழன், கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோர் இதற்காக இனிஷியேட்டிவ் எடுத்தவர்களில் சிலராவர்.
எனது கார் டிஸ்கவரி புக்பேலசை அடையும்போது மணி மாலை 06.15. வாசலில் தண்டோரா, உண்மை தமிழன், கேபிள் சங்கர் ஆகியோரை பார்த்தேன். வருபவர்களை வரவேற்று கூட்டம் நடக்கும் இரண்டாம் தளத்துக்கு அவர்களை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
மாடியில் ஏற்கனவே சிலர் குழுமியிருந்தனர். எனது நோட் புத்தகத்தில் என்னால் முடிந்த அளவு பெயர்களை குறித்து கொண்டேன். அவை பின்வருமாறு:
தண்டோரா, கேபிள் சங்கர், டி.வி. ராதாகிருஷ்ணன், உண்மை தமிழன், ஜெய மார்த்தாண்டம், விந்தை மனிதன், செந்தில் (எங்கே செல்லும் இந்த பாதை), பலாபட்டறை சங்கர், பூங்குன்றன், ஜி. பாண்டியன் (வேர்கள்), விநாயக முருகன் (என்விஎம் ஆன்லைன்), தினேஷ் (புது தமிழ்.காம்), அரவிந்தன், கன்ணன், கே.என். ஹரிஹரன், ராஜேஷ்வரி (மூடுபனி), தளபதி, மணி (ஆயிரத்தில் ஒருவன்), துளசி மற்றும் அவர் கணவர் கோபால் (பின்னவர் நைசாக எஸ்ஸானார்), உழவன் (நவநீத கிருஷ்ணன்), அப்துல்லா, ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன், ஜாக்கி சேகர், ஸ்ரீவத்சன், கே. ரவிசங்கர், அனந்த கிருஷ்ணன், சுந்தரராஜ், வானம்பாடிகள், அதியமான், ஞாநி, பழனியப்பன், ஹேம சந்திரன், சுகுமார், நர்சிம், பட்டர்ஃப்ளை சூர்யா, லிவிங் ஸ்மைல் வித்யா, மணிகண்டன், விதூஷ், அதிஷா, லக்கிலுக், குகன், பாண்டியன், சுகுணா திவாகர், நந்தா, அகிலன், காவேரி கணேஷ் ஆகியோர். (பெயர் விட்டு போனவர்கள் பின்னூட்டங்கள் மூலம் தெரிவித்தால் பெயர் சேர்க்கப்படும்).
மீட்டிங் ஹாலில் பயங்கர எதிரொலி. அகௌஸ்டிக் சரியில்லை. மிகவும் கஷ்டப்பட்டு பேச்சுக்களை கேட்க வேண்டியிருந்தது. ஆகவே அவற்றை இங்களிப்பதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சம்பந்தப்பட்டவர்கள் திருத்துமாறு கேட்டு கொள்கிறேன்.
முதலிலே ஒரு பேப்பரை எல்லோருக்கும் வினியோகம் செய்தனர். அதில் சில கேள்விகள் இருந்தன.
1. இனி வலைப்பதிவர்கள் சமூகம் என்ன செய்ய வேண்டும்?
2. எப்படி செயல்பட வேண்டும்?
3. குழுமமாகவா அல்லது ஒரு தொழிற்சங்கத்தைப் போன்றா அல்லது ஒரு கட்சியைப் போன்றா?
4. அந்தக் குழுமத்தின் நோக்கம் என்ன?
5. குழுமத்தின் நோக்கங்கள் யாவை (கேள்வி 5 ஏற்கனவே 4-ல் வரவில்லை?)
6. அதன் செயல்பாடுகளை எப்படி வடிவமைப்பது?
7. எப்படியெல்லாம் செயல்பட வைக்க வேண்டும்?
8. குழுமத்தின் லோகோ எப்படி இருக்க வேண்டும்?
9. குழுமத்தை நிர்வகிப்பது எப்படி?
10. அலுவலகம் எங்கே, எப்படி அமைக்கப்படுதல் வேண்டும்?
11. நிர்வாகச் செலவுகளை யார் ஏற்பது?
12. குழுமத்தின் செலவுகளுக்காக பணம் எப்படி வசூலிப்பது?
13. அதனை பொறுப்பாகக் கவனித்துக் கொள்வது யார்?
14. நிர்வாகக் குழுவில் என்னென்ன பொறுப்புகளை அமைப்பது?
15. முதல் அமைப்பில் யார், யார் குழுமத்தில் பொறுப்பேற்பது?
16. முதல் அமைப்பாளர்களை எப்படி தேர்வு செய்வது?
17. தேர்தல் நடத்தி ஜனநாயக முறையில் தேர்தல் என்றால் தேர்தலை நடத்திக் கொடுக்க முன்வருவது யார்?
18. தேர்தலில் போட்டியிட விதிமுறைகள் என்ன?
19, எந்த மாதம், எந்த தேதியில் தேர்தலை வைத்து கொள்வது?
20. தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களை எப்படி தேர்வு செய்வது?
21. தேர்தல் நடத்தாமல் ஒரு மனதாக தேர்வு செய்து விடலாமா?
22. ஒரு மனதாக என்றால் யார், யாரை தேர்வு செய்வது?
மேலே உள்ள பட்டியல் முழுமையானதல்ல. மேலும் கேள்விகள் மீட்டிங்கிற்கு வருபவர்கள் மனத்தில் இருக்கலாம். அவற்றை தயங்காமல் வெளியிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
முதலில் உண்மை தமிழன் மேலே சொன்ன பாயிண்டுகளை படித்தார். பிறகு மைக்கை கையில் எடுத்த கேபிள் சங்கர் இது ஒரு அதிகாரபூர்வமற்ற சந்திப்பே என்பதை வலியுறுத்தினார். அடுத்து பேசிய மணிகண்டன் பிளாக்கர்கள் ஏற்கனவேயே குழுவாகத்தான் செயல்படுகின்றனர். இப்போது என்ன புதிதாக வந்தது எனக் கேட்டார். கேபிள் சங்கர் மீண்டும் தான் முதலில் சொன்னதை வலியுறுத்தினார்.
விக்னேஷ் தமிழ் வலைப்பதிவர் அமைப்பு வேண்டும் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னே பேசப்பட்டது என்பதை சுட்டிக் காட்டினார்.
ஞாநி அவர்கள் முதற்கண் வலைப்பதிவர் குழுமம் தேவையா என்பதை குறித்தே விவாதம் வேண்டுமென்றும், அதற்கு ஒரு மட்டுறுத்துனர் இருந்தால் நலம் எனக் கூறினார். அப்படியே குழுமம அமைந்தாலும் அதை எந்த அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும், அதன் சட்ட ஹோதா என்ன? வலைப்பதிவர்கள் எல்லோருமே ஒரே கருத்துடன் இருப்பவர்கள் அல்ல. அத்தனை பேரும் மாற்று கருத்துகளுடன் உள்ளவர்கள். அப்படிப்பட்டவர்கள் கூடி செயலாற்ற, ஒரு மினிமம் காமன் ப்ரொக்ராம் உருவாக்கி அதன்படி நடப்பதே முக்கியம். குழுமம் என்ன செய்ய இயலும், என்னென்ன செய்ய இயலாது என்பதையெல்லாம் வக்த்துக் கொள்ள வேண்டும். அதன் எல்லையை மீறி குழுமம் செயல்பட்டால் அது உடைந்துதான் போகும் எனவும் அவர் கூறினார்.
முதலில் நான்கு மாற்று கருத்துடையவர்கள் கூடி இந்த மினிம காமன் செயல்திட்டத்தை வரைவது நலம் எனவும் கூறினார். அதை மின்னஞ்சல்கள் மூலம் மற்ற பதிவர்களுக்கு சர்குலேட் செய்து எல்லோரது கருத்தையும் அறியலாம் என்றும் அவர் கூறினார். அவர் சொன்ன மினிமம் ப்ரொக்ராம் தொழில்நுட்ப பிரச்சினைகள், சைபர் கிரைம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகிய மூன்று விஷயங்களையே தொட்டன. அவற்றில் ஒத்த கருத்துடையவர்கள் பலர் இருப்பார்கள் என்பது அவரது துணிபு.
அவர் மேலும் சொன்னது: பணம் சேர்ந்தாலே சங்கங்களுக்கு பிரச்சினை, பிறகு வரும் பதவிப் போட்டிகள். இவை இரண்டும் எந்த சங்கத்திலும் பிரச்சினையே என அவர் கூறினார்.
பிறகு பேசிய சிவராமன் குழுமம் என்னென்ன செய்யலாம் எனக்கேட்டார். சில சங்கங்கள் சுற்றுலா செல்வது, போட்டிகள் நடத்துவது ஆகியவற்றை செய்கின்றன. பெங்களூர் அரவிந்தன் ஏதேனும் ஒரு அமைப்பு என இருந்தால்தான் அரசு மற்றும் அதிகார மையங்களுடன் பேச இயலும் என்றார்.
பிறகு நான் மைக்கை எடுத்து கொண்டேன். போலி டோண்டு விஷயத்தில் நான் போலீசை தனியாக சந்தித்தபோது என்னை அவனுடன் சமாதானமாக போவதையே வலியுறுத்தினர் என்றும், பிறகு பல பதிவர்களாக சேர்ந்துதான் அவனை மாட்டிவிட முடிந்தது என்றும் கூறினேன். அதே சமயம் ஞாநி சொல்வதுபோல காமன் மினிமம் செயல்பாட்டை வைத்து கொண்டு அதை மீறாதிருப்பதே நலம் என்றும் கூறினேன்.
டி. வி ராதாகிருஷ்ணன் பேசும்போது இந்த லிஸ்ட் பூனைக்கு மணி கட்டுவது போன்ற இனிஷியேட்டிவ் என்றார். சிங்கைநாதன் ஆப்பரேஷனுக்கு முப்பத்தைந்து லட்சம் ரூபாய் சேமிப்பு பதிவர்கள் ஒற்றுமையால் வந்தது என்றார். முக்கியமாக பொது நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதற்கான செலவை தனிப்பட்டவர்கள் ஏற்பதற்கு பதிலாக சங்கமே ஏற்பது நல்லது என்றார். ஜ்யோவ்ராம் சுந்தரும் பைத்தியக்காரனும் சேர்ந்து ஆர்கனைஸ் செய்த சிறுகதை பட்டறையிலும் செலவை அவர்கள் இருவரே ஏற்றுக் கொண்டது சரியல்ல என்றும் கருதினார். இங்கும் குழுமமே இருந்திருக்க வேண்டும் என்றார். அதே போல இண்ட்ர்னெட் குழுமம் சென்னைக்கென்று தனியாக பிரிக்க வேண்டாம் என்றார். தமிழ் பதிவர்கள் இணையத்தின் மூலம் ஒன்று பட்டிருக்கும்போது இம்மாதிரி பிரிவினை வேண்டாம் என்றும் கூறினார்.
பாண்டியன் பேசும்போது சங்கமாக இருப்பதே நலம் என அபிப்பிராயப்பட்டார். மொழிக்கு மரியாதை செய்ய வேண்டும் எனவும் கூறினார். மறுபடியும் பேசிய சிவராமன் குழுமத்தின் இருப்பையே கேள்வி கேட்பது கடைசியில் அதன் நன்மைக்கே என்றார். சிறுகதை பட்டறைக்கு தானும் ஜ்யோவ்ராம் சுந்தர் செய்ததும் தங்கள் விருப்பத்தினாலேயே என்றும் சொன்னர்.
மீண்டும் மைக்கை கையில் பிடித்த ஞாநி உதவிகள் செய்வதிலும் பிரச்சினைகள் வரலாம் என சுட்டிக் காட்டினார். சங்கத்தின் அஜெண்டாவுக்கான வரைவை மீண்டும் வலியுறுத்தினார். அதே போல தற்போதைக்கு சென்னை பதிவர்களுக்கு மட்டுமே ஆரம்பிப்பது நலம், ஏனெனில் அதன் அங்கத்தினர்கள் நேரடியாக சந்திப்புகளில் பங்கேற்பது நலம் என அவர் கருத்து தெரிவித்தார்.
லக்கிலுக் பேசும்போது சங்கம் தேவை என வலியுறுத்தினார். அவர் பேசும்போது எனக்கு செல்பேசி கால் வந்து வெளியே செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே சரியாக கேட்க இயலவில்லை. அதிஷாவும் லக்கிலுக்கும் இந்தவ்விஷயத்தில் மாறுபட்ட கருத்துகளை வலியுறுத்தியதாக எனக்கு பட்டது. அதிஷா நாம் ஏற்கனவேயே ஒற்றுமையாக இருக்கும்போது ஏன் சங்கம் தேவை என கேள்வி எழுப்பினார்.
சுகுணா திவாகர் அடுத்து பேசினார். சங்கம் அமைப்பதில் உள்ள சிக்கல்களையும் எடுத்துரைத்தார். தனிநபர் தாக்குதலுக்கெல்லாம் சங்கம் ஏன் தலையிட வேண்டும் எனவும் கேட்டார்.
செந்தில் குமார் பேசுகையில் சங்கம் வேண்டுமா வேண்டாமா எனப்தை முதலில் முடிவு செய்யலாம் என்றார். ஏற்கனவே மட்டற்ற சுதந்திரம் உள்ளது. முதலில் சங்கம் ஆரம்பித்து பார்ப்போம், பிரச்சினை வந்தால் பிரிவோம் என்றார். (சிவாஜி படத்தில் அங்கவை சங்கவையை வைத்து சாலமன் பாப்பையா பேசியது ஏனோ என் மனதுக்கு வந்தது) சங்கம் தேவை என அவர் கடைசியில் கூறினார்.
உண்மை தமிழன் பேசுகையில் தான் வலைப்பூ ஆரம்பித்த தருணம் என்ன செய்வது என்று கூட தெரியாத நிலை என்றார். இப்போது சங்கம் மூலம் புதியவர்களுக்கு சொல்லித் தரலாம் என கூறினார். சங்கம் மூலம் நட்புகளும் பெருகும் என்றார்.
நந்தா பேசும்போது, முதலில் சங்கம் வேண்டாம் என்பவர்கள் பேசட்டும், ஏனெனில் அதுவரை பேசியவர்கள் பொதுவாக சங்கம் வேண்டும் எனவே அபிப்பிராய படுகின்றனர் என்றார்.
குடிசை படத்தின் இயக்குனரின் உதவியாளரான அகிலன் தாங்கள் குடிசை படத்தை உண்டியல் குலுக்கி வந்த கலெக்சனிலேயே தயாரித்ததாக கூறினார். மனதிருந்தால் மார்க்கமுண்டு என அவர் கூறுவதாக எனக்கு பட்டது. தயாரிப்புடன் சம்பந்தப்படாவிட்டாலும் சமையற்காரர்கள் சங்கம் நினைத்தால் ஷூட்டிங்கையே நிறுத்தும் வலிமை வாய்ந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஞாநி மறுபடியும் மினிமம் காமன் செயல்பாட்டுக்கான வரைவின் அவசியத்தை வலியுறுத்தினார். இனிமேலும் சங்கம் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி தேவை இல்லை, ஏனெனில் வேண்டம் என்றிருப்பவர்கள் மீட்டிங்கிற்கு வரமாட்டார்கள், அல்லது இன்னேரத்துக்கு போயிருந்திருப்பார்கள் என கருத்து தெரிவிக்க, அதை மறுத்தார் அதிஷா. வேண்டாம் என்பவர்கள கையை தூக்கலாம் என கூறப்பட இருவர் மட்டும் கை தூக்கினர். அவர்களில் ஒருவராக கே. ரவிசங்கர் என்பவர் பேச வந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரை கோட் செய்து சும்மா இருப்பதே சுகம் என்னும் கதையை சொன்னார்.
பின்னால் வந்த லிவிங் ஸ்மைல் வித்யா இம்மாதிரி எந்த கருத்துக்கும் வேண கதைகள் கூறலாம் என்றார். நாம் செய்யும் பிளாக்கர் வேலைகளை செய்யலாம். பிடிமானத்துடன் வேலை செய்யலாம். காமன் மினிமம் செயல்பாட்டை அமைப்போம் என அவர் கூறினார்.
தொழிற்சங்கம் போல செயல்பட முடியாது என சிவராமன் கூறினார். லயன்ஸ் க்ளப், ரோட்டரி கிளப் போன்றுதான் செயல்பாடுகள் இருக்கும் எனவும் கூறினார். ரத்ததான முகாம், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் அளிக்க உதவி செய்வது ஆகியவற்றையும் அவர் உதாரணங்களாக் குறிப்பிட்டார்.
பிறகு பேசிய காவேரி கணேஷும் ஜாக்கி சேகரும் சங்கம் வேண்டும் என்றனர்.
கேபிள் சங்கர் இந்த சங்கத்துக்கு ஆஃபீஸ் பேரர்கள் எக்லாம் கிடையாது, எல்லாமே இன்ஃபார்மலாகவே நடக்கும் என கூற, ஞாநி அதுவும் சாத்தியமில்லை என்றார். ஒரு சங்கத்தை பதிவு செய்ய குறைந்த பட்சம் ஏழு ஆஃபீஸ் பேரர்ஸ் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கேபிள் சங்கர் எல்லோருக்கும் நன்றி கூற கூட்டம் இனிமையாக முடிந்தது.
போகிற போக்கில் எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தை வாங்கி சென்றேன். பத்து சதவிகிதம் டிஸ்கௌண்ட் தந்தனர்.
துளசி அவர்கள் நான் கேட்டுக்கொண்டதற்குஇணங்க அன்புடன் தான் எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அவை கீழே:
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
-
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும்
நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஓர்
ஆய்வ...
1 hour ago
40 comments:
சடச்சுட பதிவு..
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
ம்ம்ம் சுடச்சுட பதிவர் கலந்துரையாடல்களை வர்ணனையுடன் மீண்டும் ஒருமுறைக் கொடுத்து உள்ளீர்கள்.
Tack så mycket. (இது சுவிடீஷ் நன்றி)
குழுமம் / சங்கம் அமைத்து விதிகள் வகுத்தல் எழுத்து சுதந்திரம் அடியோடு போய் விடும்.
சிறிய உதாரணம்: நாளையே ஒரு சமூக பிரச்னையை , பதிவர் குழுமம் ஒரு மந்திரியை வைத்து சிறப்பாக முடிக்கும்.
அடுத்த நாள் பதிவர்களால் அந்த மந்திரியியோ அல்லது அந்த கட்சியையோ எதிர்த்து பதிவு எழுத முடியாது, நிர்வாக குழு அந்த பதிவை தணிக்கை செய்யும். பதிவர் குழுமமும் அரசு விளம்பர வருமானதிற்கு ஆசை பட ஆரம்பித்து விடும்.
வலைப்பதிவுகளின் வெற்றிக்கு முக்கிய காரணம் தணிக்கையற்ற எழுத்து சுதந்திரம்.
அதில் கையை வைத்தால், வலைப் பதிவுகளும் குமுதம், விகடன் போல சுவை அற்றதாகி விடும்.
Thanks for instant post , sir
நீங்க என்ன நினைக்கறீங்கன்னு சொல்லவே இல்லையே....
I know tomorrow will not be the same of yesterday. But just want to quote this:
3 months back in Chennai Orkut Tamil users group meet was conducted and there too it was agreed to disagree. I mean orkut users were reluctant to choose president, secretary, joint secretary, treasurer.
Same thing happened with Muziboo users meet in Banglore.
டோண்டு சார், பதிப்பிக்க வேண்டாம். தலைப்பு கால்ந்துரையாடல் என்றிருக்கிறது. ல் க்குப்பதிலாக ல மாற்றிவிடுங்கள்
சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்..:))
உங்க அர்ப்பணிப்பு இன்னொருமுறையும் சொல்லிக் கொள்கிறேன், நன்றி!!
சங்கம் எந்த பதிவின் கருத்துக்கும் தடையாக இருக்கப்போவதில்லை.
சங்கம் யாரின் எழுத்துக்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டல்ல.
சங்கத்தின் விதிமுறைகள் சங்கத்தை நடத்துவத்ற்கே தவிர எழுத்துக்களை நெறிமுறைப்படுத்த அல்ல
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
அருமையான பதிவர் சந்திப்பு.., நான் இங்கே இருப்பதால் கலந்து கொள்ளமுடியவில்லை.
ஊருக்கு வந்ததும் தொடர்பு கொள்ளலாம்.
சுடசுட செய்திகள் தந்ததிற்கு நன்றி.
2010/3/28 Tamilish Support
Hi Dondu,
Congrats!
Your story titled 'சென்னை வலைப்பதிவர் கால்ந்துரையாடல் சந்திப்பு 27.03.2010' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th March 2010 01:25:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/212665
Thank you for using Tamilish.com
Thanks Tamilish,
Regards,
Dondu N. Raghavan
அருமையான பதிவர் சந்திப்பு....
சுடசுட செய்திகள் தந்ததிற்கு நன்றி சார்...
இது போன்று ஒரு கூட்டம் நடக்கிறது என்பதே தெரியாமல் போய்விட்டது.
சுப்பு ரத்தினம்.
ரொம்ப நன்றி சார், அனைத்தையும் கவனித்து எழுதி இருக்கிறீர்கள்,
பழகி பார்க்கலாம் ( அங்கவை, சங்கவை போல) அப்போதுதானே தெரியும் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று...
ரொம்ப நன்றி Dondu sir
சங்கம் ஆரம்பிச்சி, கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி எங்கியாவது திருச்சியிலேயோ, சென்னையிலேயோ இல்லை மதுரையிலேயோ ஒரு 100 ஏக்கர் நிலம் இலவசமா சங்கத்துக்கு வாங்கற ஐடியா இருந்தாச் சொல்லுங்க.. நானும் சேந்துக்கலாமின்னு இருக்கேன்.. மிரட்டியெல்லாம் கூப்பிடவேண்டாம்.. கலைஞருக்குப் பாராட்டு விழான்னு சொன்னாலே வந்திருவேம்லா..
ஒரு படம் இரண்டுமுறை வந்துள்ளது. ஞாநி இருக்கும் படம் ஒன்று அனுப்பி இருந்தேன்.
கூட்டத்தின் முடிவுவரை (குறைஞ்சபட்சம் அந்த 'டீ' வரும்வரையிலாவது)நடுவில் எழுந்து போகும்படி ஆகிவிட்டது.
விவரங்களுக்கு நன்றி.
@துளசி
இப்போது சரி செய்து விட்டேன். படங்களுக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமையான தொகுப்பு சார்.
உங்க முடிவு என்ன?
மெஜாரிட்டி கருத்து என்னங்க?
நல்ல தொகுப்பு . நன்றி
மேலே கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது சிலர் கீழே கையில் தம்மோடு பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் லக்கியை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் மற்றொருவரிடம், இந்த வலைபதிவர்கள் உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்களே, நீங்கள் பேசுங்களேன் என்றார்.
அதற்கு அவர் "பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு ஆலோசனைகளோ, ஆலோசகர்களோ தேவையில்லை" என்று படுகூலாக கூறினார்.
ஏலேய் எல்லாம் தெரிஞ்சுதாம்ல வந்திருக்கானுவ. நாமதான் தெரியாமபோயி சிக்கிட்டோம்போல..
// உண்மை தமிழன் பேசுகையில் தான் வலைப்பூ ஆரம்பித்த தருணம் என்ன செய்வது என்று கூட தெரியாத நிலை என்றார். இப்போது சங்கம் மூலம் புதியவர்களுக்கு சொல்லித் தரலாம் என கூறினார். சங்கம் மூலம் நட்புகளும் பெருகும் என்றார். //
என்னுடைய கருத்தும், உண்மைத் தமிழனின் கருத்து தான்.
உறுப்பினராய் சேருகின்ற பதிவர்களிடமிருந்து வருட சந்தாவாக - அவர்களின் ப்ளாக் ஃபாலோயர்ஸ் - எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அவ்வளவு ரூபாய் வசூலிக்கலாம்.
நான் ரொம்ப சின்னவன்....வலைப்பூ ஆரம்பித்து ஒரு ஆறு மாசம் தான் ஆகுது. என் அபிப்ராயம் என்னவென்றால் சங்கம் அது இது என்பது வலைப்பதிவர்களுக்கு சரிப்பட்டு வராது. அவங்கவங்க தோணுறதை எழுதுறாங்க. எப்ப எப்படி முடியுதோ, பிற பதிவர்களை தொடர்பு கொள்ளுறாங்க, இது போதாதா?
Dondu sir thanks for the photos (thanks to Tulasi madam as well).
As Aravindan Banglore says, if Bloggers will have independence then according me the group/association/forum could be formed.
சார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது கருத்தைப் பதிந்து இருக்கிறேன்.. படித்துவிட்டு கமெண்ட் செய்யவும்..
http://anbudan-mani.blogspot.com/2010/03/blog-post.html
//Anonymous said...
மேலே கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது சிலர் கீழே கையில் தம்மோடு பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் லக்கியை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் மற்றொருவரிடம், இந்த வலைபதிவர்கள் உருப்படியாக ஏதாவது செய்யவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டீர்களே, நீங்கள் பேசுங்களேன் என்றார்.
அதற்கு அவர் "பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு ஆலோசனைகளோ, ஆலோசகர்களோ தேவையில்லை" என்று படுகூலாக கூறினார்.
ஏலேய் எல்லாம் தெரிஞ்சுதாம்ல வந்திருக்கானுவ. நாமதான் தெரியாமபோயி சிக்கிட்டோம்போல..
//
டோண்டு சார்..இவருக்கு ஒரு பதில் சொல்லுங்களேன்..(அனானி ஆப்ஷன் உண்டா உங்கள் தளத்தில்? மாடரேஷன் வேறு இருக்கு!!
உங்கள் பதிவு தான் எல்லா நிகழ்வுகளையும் அழகாய் படம் பிடித்து காட்டியது..மிக்க நன்றி..
என் கருத்து:
http://blogsenthilnathan.blogspot.com/2010/03/blog-post_28.html
//டோண்டு சார்..இவருக்கு ஒரு பதில் சொல்லுங்களேன்..(அனானி ஆப்ஷன் உண்டா உங்கள் தளத்தில்? மாடரேஷன் வேறு இருக்கு!!//
அனானியின் கருத்து அது. அம்மாதிரி கருத்துடையவர்கள் எந்த முயற்சிக்குமே அவ்வாறுதான் பேசுவார்கள்.
ஆனால் நிஜமாகவே லக்கியிடம் இம்மாதிரி கூறப்பட்டதா என்பதற்கு அவர்தான் உண்டு இல்லை பதில் சொல்லவேண்டும். நான் மாடியில் இருந்ததால் எனக்கு அது தெரிய வாய்ப்பில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா டோண்டு ராகவன் அவர்களுக்கு, டிஸ்கவரிபுக் பேலஸ் சார்பாக வேடியப்பன் கேட்டுக் கொள்வது. பதிவர்கள் சந்திப்பு சம்மந்தமாக தாங்கள் முழு நிகழ்வையும் அழகாக எழுதியுள்ளீர் வாழ்த்துக்கள்.நமது நிகழ்வுக்காக டிஸ்கவரி புக் பேலஸ்-ம் நிறைய உதவியிருக்கிறது. சந்திப்பு நடந்த ஹாலுக்கு அன்று மதியம் மூன்று மணிக்குதான் பெயிண்ட் அடித்து முடித்தோம்.மிக மிகக்குறைந்த வாடகையில் (கிட்டதட்ட இலவசம்)அந்த இடத்தை தயார் செய்தோம். 10 சதவீத கழிவு என்பது பெரும்பாலும் பதிவர்களுகு மட்டுமே தரப்படுகிறது. இதயெல்லாம் சொல்வதின் நோக்கம் நீங்கள் எழுதும் தகவல்களோடு உபரியாக டிஸ்கவரி புக் பேலஸின் வசதிகளையும் சேர்த்துக்கொண்டால் அது எனது வியபாரத்திற்க்கும் பயனுள்ளதாக இருக்கும். பதிவர்களுக்கும் இன்னும் கூடுதலாக உதவமுடியும். நன்றி
@வேடியப்பன்
நிச்சயமாக.
மேலும் அன்றைய மீட்டிங் முடிந்து கீழே வந்து உங்கள் கடையில் எஸ்ராவின் உபபாண்டவம் வாங்கினேன்.
எனது வேண்டுகோளுக்கிணங்கி அன்புடன் 10 % டிஸ்கௌண்டும் தந்ததை கூட இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பகிர்வுக்கு மிக்க நன்றி ராகவன் சார்
நான் சென்னையில் இருக்கிறேன் அன்று கம்பர் விழாவுக்காக காரைக்குடியில் இருந்தேன்..
உங்க இடுகை குட் ப்ளாக்ஸில் வந்து இருக்கு ..வாழ்த்துக்கள் ..!
அங்கே என்ன முடிவு எடுக்கப்பட்டது சார்
//மனநலமில்லாத மருத்துவர் ஆகியோரது பார்ப்பன வெறுப்பு அவர்களிடம் வேறு விஷயங்களை பகுத்தறிவுடன் பேசும் திறனை பாதிக்கிறது என்பதுதான்//
டோண்டு இது எச்சரிக்கை. தேவைல்யில்லாமல் என்னைச் சீண்டினால் அடுத்த முறை நாம் சந்திக்க நெரும்போது தகுந்த பாதுகாப்புடன் வரவும்.
@ருத்ரன்
வேறு பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டம் இங்கு ஏன்? என்ன ஆச்சு உங்களுக்கு? கவலையளிக்கிறது.
டோண்டு ராகவன்
வணக்கம் !!! பதிவு அருமை! வாழ்த்துக்கள்!
முழு விபரங்களுக்கு நன்றி.
Well written minutes.
Alas, marred by the reference to Dr Rudhran!
It is a mischievous reference.
Dr Rudhran is justified in his anger.
"தமிழ் புளொகர்ஸ் பாரும்" என்று பெயர் சூட்டுங்கள், பொருத்தமாக இருக்கும்.
very nice mr.dondu hmm i juz miss
Post a Comment