8/17/2010

முரளி மனோகர் நெட்டில் பார்த்த சில விஜய் ஜோக்ஸ்

இன்னிக்கு டோண்டு பெரிசை தாஜா செய்து இப்பதிவைப் போட அவரிடம் அனுமதி வாங்கியது முரளி மனோகர். நெட்டிலிருந்து சுட்ட இந்த ஜோக்குகள் அரதப் பழசுதான், ஆனால் நான் முதன் முறையா பார்க்கறேன், ஆகவே என்னைப் பொருத்த வரைக்கும் அவை புதுசுதான்.

ஜோக் 1:
அம்மா : பவித்ரா.... டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?
பவித்ரா : OKம்மா....
அம்மா : அய்யோ.... என்ன படம்னு சொல்லலையே, ஒருவேளை விஜய் படம் வாங்கிட்டு வந்துட்டா.... வாந்தி வருமே.... தலை சுத்துமே.... சூசைட் பண்ணிக்கலாம்-னு தோனுமே.... என் பொண்ணுக்கு பைத்தியமே பிடிச்சுடுமே.... அய்யோ.... பவித்ரா... பவித்ரா... !!!!

பவித்ரா : அம்மா.... டிவிடி வாங்கிட்டேன்.... (கையில் “வரலாறு” பட டிவிடி)
அம்மா : அஜித் இருக்க.....
பவித்ரா : பயம் ஏன்...

ஜோக் 2:
போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?
கைதி : படம் பார்க்கணும்...
போலீஸ் : சரி வேட்டைக்காரன் போகலாமா ?
கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

ஜோக் 3:
விஜய் : சன் டிவி மேல கேஸ் போடனும்
எஸ் ஏ சி : ஏன் என்னாச்சி
விஜய்: என் அடுத்த படம் வெற்றி பெறும்னு சொன்னதை விளையாட்டு செய்திகளில் காமிச்சிட்டாங்க

ஜோக் 4:
டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?
விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்.

ஜோக் 5:
நண்பர் : நான் elevator ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....
விஜய் : நீங்களாவது பரவாஇல்லை,நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்சு...

ஜோக் 6:
விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....
இளயதளபதி: நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....

ஜோக் 7:
கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக, "யார் அந்த குருவி விஜய்"

ஜோக் 8:
ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர்:யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

ஜோக் 9:
ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...

ஜோக் 10: (சற்றே பெரிய ஜோக்)
ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.
அந்தப் பெண் பக்கத்து சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது. இதனால் வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர்.
உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.
அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப்பட்ட ஊர் மக்கள் அந்தக்
காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.
உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.
அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்ணின்
தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.
இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.
மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.
அடுத்த நாள் காலையில் அழைப்பு மணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.
உடனே இவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,”லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்” என்றது.

“அது சரி, என் காதலன் ஏன், யாரால் லாரி ஏறி மாண்டான் என அப்பெண் கேட்க, “ஓ, அதுவா, லாரி டிரைவர் வில்லு படம் பார்த்து விட்டு லாரி விட்டிருக்கான். மன உளைச்சலே இந்த விபத்துக்குக் காரணம் என்றதாம் அந்த தேவதை.

அன்புடன்,
முரளி மனோகர்

14 comments:

Anonymous said...

read more mokkai about vijay http://dummipiece.blogspot.com/

virutcham said...

ரஜினி, விஜய் படங்கள் குறித்த என் சமீபத்திய விமர்சனம்

http://www.virutcham.com/?p=3383

Anonymous said...

பிற்படுத்தப்பட்ட இனத்தில் வந்த நடிகர் என்பதால் தானே இத்தனை இளக்காரம்.

இதே ஜோக்-ஐ பார்ப்பன நடிகர்கள் எஸ்.வி.சேகர், ராகவேந்திரா, ஒய்.ஜி.எம், ரஜினி, கமல் போன்றவர்களுக்கு எதிரா போடவேண்டியது தானே.

இருளப்பன்
(அருள் அண்ணன் சார்பாக)

(முரளி மனோஹருக்கு ஒரு டோண்டு பதிவு போடலாம், ஆருயிர் சார்பா நான் போடக்கூடாதா ?)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆனாலும் இவ்வளவு கொலைவெறி கூடாது விஜய் மேல...

Madhavan Srinivasagopalan said...

//ஜோக் 9:
ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்..//


Classic...

மெனக்கெட்டு said...

"விஜய்க்கு வெடி வைப்போர் வலையமைப்பு - V.V.V.V" ல நீங்களும் சேர்ந்திட்டீங்களா?

நல்வரவு!.

”விஜய் பேரா கேட்டவே அதிருதுங்க...
தியேட்டர் இல்ல
வயிறு...”

வால்பையன் said...

தமிழக மக்களுக்கு கலைச்சேவை செய்து கிச்சுகிச்சு காட்டும் டாக்குடர் விசய் வாழ்க!

ரவிஷா said...

இதெல்லாம் ரொம்ப பழசுங்ணா!

விஜய் படம் வெளிவரும்போதெல்லாம் எஸ்.எம்.எஸ். டெக்ஸ்டிங் அதிகமா புழங்குதாம்! அதனால, எஃப்.எம்.எஸ். ரைட்ஸ் மாதிரி எஸ்.எம்.எஸ். ரைட்ஸும் கேக்குறாராம் இப்போதெல்லாம்!

Anonymous said...

எங்க தலீவரு கோக்க மணியோட மவன் நடிச்ச படம் கூடிய சீக்கரம் வர போகுது.. அப்போ பாருங்க எங்க வன்னிய நடிகர்கள் தெரமய...
திருமாவளவன் நடிச்ச படம் எல்லாம் போட்டிகுல்லையே இருக்கு, இருளப்பன்னே, நீங்க பினான்ஸ் பண்ணி உதவுங்களேன்...

என்றும் ஜாதி வெறியுடன்,
குருள்

RAVI said...

டியர் dondu சார் வணக்கம்.
மக்களின்,ரசிகர்களின் பணத்தில் குப்பை கொட்டும் திரைப்பட கதாநாயகனைப் பற்றிய
காமெடி விமர்சனம் மிக மிக ரசிக்கும் விதத்தில் உள்ளது.
நான் மக்கள் வரிப்பணத்தில் வாழும் உலக விஞ்ஞானிகளை காமெடியாகவும் கோபமாகவும்
5-நிமிட படம் எடுத்து வெளியிட்டுள்ளேன்.தயைகூர்ந்து தாங்கள் வந்துபார்த்து உங்கள் மேலான கருத்துகளை அனுப்புங்கள்.
நன்றி.ரவி.

www.avasaramda.blogspot.com

dondu(#11168674346665545885) said...

அன்புள்ள ரவி,

வீடியோ பார்த்தேன். அதை சொல்வதற்கு முன்னாலே ஒரு வார்த்தை. நீங்கள் தந்திருக்க வேண்டிய சுட்டி http://avasaramda.blogspot.com/2008/07/blog-post_24.html

அதை விடுத்து வெறுமனே http://avasaramda.blogspot.com/ எனக் கொடுத்திருப்பது துல்லியத்துக்கு துணைபோகாது. இப்போதைக்கு அப்பதிவு முதலில் இருக்கலாம். ஆனால் அதுவே நீங்கள் மேலும் நான்கைந்து பதிவுகள் போட்டால் அது காணாமல் போய், அதை ஸ்க்ரால் செய்து தேட நேரிடும்.

விஞ்ஞானிகள் இதில் என்ன செய்ய முடியும்? தினமணி, தினமலர் ஆகிய பத்திரிகைகளும் என்ன செய்ய முடியும்? நீங்கள் குறிப்பிட்ட உற்பாதங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. நீங்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகத்தான் குரல் கொடுத்து வருகிறீர்கள்.

நீங்கள் செய்தி யாருக்கெல்லாம் அனுப்பினீர்களோ அவர்களிடம் என்ன அதிகாரம் உள்ளது இதையெல்லாம் சரி செய்ய? மேலும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் இதே வேலையாக பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கின்றனர், ஒவ்வொருவரையும் பார்த்து கொண்டிருக்க முடியுமா?

நீங்கள் கோபப்படுவதால் உங்களது ரத்த அழுத்தம் மட்டுமே அதிகரிக்கும். நீங்கள் சித்தூர் முருகேசன் என்னும் பதிவரை எனக்கு நினைவூட்டுகிறீர்கள். அவரும் இப்படித்தான் இந்தியாவை முன்னேற்றுவதற்காக சில திட்டங்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் தபால் போட்ட வண்ணம் உள்ளார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்கள் இதில் ஒன்றும் ஸ்பெஷலாகக் கூறிவிடவில்லை. அமைதியாக இருங்கள், உங்கள் அளவில் சுற்றுப்புற சூழலுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை விடாமல் சொல்லிய வண்ணம் இருங்கள். எனது இந்த அஞ்சலே உங்களை சாந்தப்படுத்தத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சித்தூர் முருகேசன் பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்கு காத்திருக்கிறது. பார்க்க: http://kavithai07.blogspot.com/2010_10_29_archive.html#3520581760030752411
//சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.//
நான் ஆக்சுவலாக எழுதினதை பார்க்க:http://dondu.blogspot.com/2010/08/blog-post_17.html
//அன்புள்ள ரவி,
வீடியோ பார்த்தேன். அதை சொல்வதற்கு முன்னாலே ஒரு வார்த்தை. நீங்கள் தந்திருக்க வேண்டிய சுட்டி http://avasaramda.blogspot.com/2008/07/blog-post_24.html

அதை விடுத்து வெறுமனே http://avasaramda.blogspot.com/ எனக் கொடுத்திருப்பது துல்லியத்துக்கு துணைபோகாது. இப்போதைக்கு அப்பதிவு முதலில் இருக்கலாம். ஆனால் அதுவே நீங்கள் மேலும் நான்கைந்து பதிவுகள் போட்டால் அது காணாமல் போய், அதை ஸ்க்ரால் செய்து தேட நேரிடும்.

விஞ்ஞானிகள் இதில் என்ன செய்ய முடியும்? தினமணி, தினமலர் ஆகிய பத்திரிகைகளும் என்ன செய்ய முடியும்? நீங்கள் குறிப்பிட்ட உற்பாதங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. நீங்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாகத்தான் குரல் கொடுத்து வருகிறீர்கள்.

நீங்கள் செய்தி யாருக்கெல்லாம் அனுப்பினீர்களோ அவர்களிடம் என்ன அதிகாரம் உள்ளது இதையெல்லாம் சரி செய்ய? மேலும் உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் இதே வேலையாக பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கின்றனர், ஒவ்வொருவரையும் பார்த்து கொண்டிருக்க முடியுமா?

நீங்கள் கோபப்படுவதால் உங்களது ரத்த அழுத்தம் மட்டுமே அதிகரிக்கும். நீங்கள் சித்தூர் முருகேசன் என்னும் பதிவரை எனக்கு நினைவூட்டுகிறீர்கள். அவரும் இப்படித்தான் இந்தியாவை முன்னேற்றுவதற்காக சில திட்டங்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் தபால் போட்ட வண்ணம் உள்ளார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்கள் இதில் ஒன்றும் ஸ்பெஷலாகக் கூறிவிடவில்லை. அமைதியாக இருங்கள், உங்கள் அளவில் சுற்றுப்புற சூழலுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை விடாமல் சொல்லிய வண்ணம் இருங்கள். எனது இந்த அஞ்சலே உங்களை சாந்தப்படுத்தத்தான்.//

//ஆஹா.. என்னே உங்க ஞாபக சக்தி. நான் மொத்தம் 1500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கன். அது ராம் மந்திர் விவகாரத்துல உங்களாவாவோட சுய லாபம் மாதிரி எங்கனயோ ஒளீஞ்சிருக்கு. அதுக்குண்டான லிங்கை தாங்க 24 மணி நேரத்துல ப்ரூவ் பண்றேன்.//
லிங்க்தானே, கீழே கூகளிலிருந்து பிடிச்சேன். போன ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதிக்கு இடப்பட்டது உங்களது அந்த பதிவு. ஆனால் இப்போது உங்கள் வலைப்பூவில் அதை காணவில்லை. ஓசைப்படாமல் நீக்கி விட்டீர்கள் என நினைக்கிறேன். அல்லது அது டிராஃப்டில் இருந்தால் பப்ளிஷ் செய்து உங்கள் ப்ரூஃபை தரவும். கூகள் சுட்டி கீழே:

நிர்வாண உண்மைகள்: தமிழுக்கு தடை ...
அது என்ன துபாஷி தொழில் மேல் அவ்வளவு காண்டு உங்களுக்கு? ... சித்தூர்.எஸ்.முருகேசன் said... தொழிலை பற்றி நான் குற்றம் கூறவில்லை. ...
kavithai07.blogspot.com/2009/10/2_31.html?showComment...

அன்புடன்,
டோண்டு ராகவன்

SURY said...

Hello, Dondu,you have an English blog? Pl give url
sury

dondu(#11168674346665545885) said...

Yeah, urich.Please see http://raghtransint.blogspot.com/

Regards,
Uttam

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது