சமீபத்தில் 1962-ல் மிட்லண்ட் தியேட்டரில் ஞாயிறு காலைக்காட்சியாக சர் ஆர்தர் கானன் டாயில் எழுதிய The Hound of Baskervilles என்னும் நாவலின் திரையாக்கம் போட்டிருந்தார்கள். நானும் என் அத்தைப் பிள்ளையும் போயிருந்தோம். முதல் சீன் முடிந்ததுமே கூவினேன், “அடடா இது மருங்காபுரி மாயக்கொலை” கதையல்லவா” என்று. அப்படம் பார்ப்பதற்கு முந்தைய நாள்தான் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய அப்புத்தகத்தைப் படித்திருந்தேன்.
போன நூற்றாண்டு இருபது முப்பதுகளில் இவர் ரொம்பவும் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். எனது எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஜயராம ஐயங்காருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். ஆனால் அதே ஜெயராம ஐயங்கார் சின்னப் பசங்கள் அவரது புத்தகங்களை படிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு செய்தார் என்பது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயம்.
திடீரென அவர் ஏன் நினைவுக்கு வந்தார்? இப்போதுதான் அவரது நாவலான “துரைக்கண்ணம்மாள் அல்லது திரிசங்கு சாஸ்திரியார்” புத்தகம் படித்து முடித்தேன். பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட நாவல். வழக்கம்போல கடைசி காட்சியில் நல்லவர்கள் சிறப்பாக வாழ, தீயவர்கள் தண்டனை பெறும் அதே ஃபார்முலா உள்ளக் கதை. அவரைப் பற்றி பதிவு எழுத கூகளிட்டு தேடியதில் சொல்வனம் இதழில் வெளியான, நண்பர் ச. திருமலைராஜன் எழுதிய இந்தக் கட்டுரை கிடைத்தது. நான் சொல்ல நினைத்த பல விஷயங்களை அக்கட்டுரை கூறுவதால் முதலில் அதிலிருந்து சில வரிகள்:
1900களின் ஆரம்பத்தில், ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள் மக்களிடம் புஸ்தகம் படிக்கும் ஆவலைத் தூண்ட, தொடர்ந்து ஜெ ஆர் ரெங்கராஜு என்பவரின் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அச்சக உரிமையாளரான ரெங்கராஜூ தன் ஒவ்வொரு நாவலையும் பத்தாயிரம் காப்பிகள் அச்சடித்து விற்று தமிழ் நாவல்களுக்குப் பெரும் வாசகக் கூட்டத்தை உருவாக்கினார். ரெங்கராஜுவின் நாவல்கள் காப்பியடிக்கப்பட்ட நாவல்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனை கிடைக்கும் வரை ரெங்கராஜு பெரும் வணிக எழுத்தாளராக இருந்து வந்திருக்கிறார். முதன் முதலில் தமிழ் நாவல்களை பெரும் அளவில் அச்சடித்து, பதிப்புத்துறை என்றொரு தொழிலை இவர் உருவாக்கினார்.
ரெங்கராஜுவைத் தொடர்ந்து அதே பாணியில் நிறைய எழுத்தாளர்கள் உருவாகி மக்களின் வாசிப்புப் பழக்கத்திற்குத் தீனி போட ஆரம்பித்தனர். அவர்களில் பெரும் புகழ் பெற்று பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். ரெங்கராஜு, வடுவூரார், வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆகியோர் பிரபலமான எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டு கதைகளை எழுதிக் குவித்து தமிழ் வாசகக் கூட்டத்தை உருவாக்கினர். இவர்கள் எழுதிய கதைகள் பெரும்பாலும் ஆங்கில பரபரப்பு இலக்கியக் கதைகளைத் தழுவியவையே. மேலைப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங்களையும் தமிழ் நாட்டில் பரப்பி தமிழ் வாசகர்களை அநாச்சாரப் படுகுழியில் தள்ளுவதாக இந்த வகை எழுத்துக்கள் அன்றே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
”என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “நான் ஒரு எழுத்தாளர்” என்று ஒருவர் பதில் சொன்னாராம். “அது சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?” என்று மீண்டும் கேள்வி எழுந்ததாம். அதுதான் என்றும் தமிழ் எழுத்தாளர்களின் பொருளாதார நிலை. புதுமைப்பித்தன் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரையில் தமிழில் வறுமையில் வாடிய எழுத்தாளர்களே அதிகம். தமிழில் முழுநேர எழுத்தாளராக மட்டும் இருந்தால் இரண்டு வேளைச் சாப்பாட்டுக்குக்கூட வழி பிறக்காது என்பது நிதர்சனம். ஆக, ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு, கூடவே எழுதவும் செய்யலாம் என்பதுதான் தமிழ் எழுத்தாளர்களுக்கு விதிக்கப்பட்ட விதி. தமிழில் எழுதிப் பிழைத்த்வர்களே குறைவு; பணம் பார்த்தவர்களோ வெகு அரிது. ஆனால் அன்றே, எழுத்தை மட்டுமே முழு நேரத் தொழிலாகத் தேர்ந்தெடுத்து, தன் எழுத்து வருமானத்தை மட்டுமே வைத்து, வீடும் கட்டிச் செல்வாக்காக வாழ்ந்தவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். தமிழில் கேளிக்கை எழுத்துக்களைப் பிரபலமாக்கி, அச்சகங்களை, நூல் பதிப்பை ஒரு தொழிலாக முன்வைத்ததில் வடுவூராருக்குப் பெரும் பங்குண்டு.
1880ல் மன்னார்குடி வட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிறந்த துரைசாமி ஐயங்கார், பி.ஏ பட்டம் படித்துவிட்டு அரசு வேலையில் சேர்ந்தவர். தான் பார்த்து வந்த தாசில்தார் வேலையை உதறி விட்டு, எழுத்து ஆர்வத்தில் முழுநேர எழுத்தாளராகத் துணிந்தார் வடுவூரார். எழுத்து அவரைக் கைவிடவில்லை. புகழையும், செல்வத்தையும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் வந்த மாத நாவல்கள், பாக்கெட் நாவல்களின் முன்னோடியாகத் தனது மனோரஞ்சிதம் என்ற மாதப் பத்திரிகை வாயிலாக, மாதம் ஒரு நாவல் எழுதியுள்ளார். அவற்றைத் தனது கலைமகள் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்து, எழுத்து, அச்சு, பதிப்பு என்று நாவல் வெளியிடுவதை ஒரு லாபகரமான தொழிலாக நிறுவினார்.
தன் எழுத்து வருமானத்தில் தங்க பித்தான் கோட்டு, அங்கவஸ்திரம், தலைப்பாகை, ஷூ, கைத்தடி, பட்டுக்கரை வைத்த பஞ்ச கச்சம், டாலடிக்கும் வைரக் கடுக்கன், தங்க பஸ்பம், நண்பர்கள், இலக்கிய உரையாடல், வரலாற்று ஆராய்ச்சி என்று வாழ்க்கையை உல்லாசமாகவே கழித்திருக்கிறார். அவருக்குப் பின்னால் தன் எழுத்தால் மட்டும் செல்வாக்காக போக-வாழ்க்கை வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே இல்லை. பின்னாட்களில் கல்கி, சுஜாதா, ராஜேஷ்குமார், சாண்டில்யன், ரமணிச்சந்திரன் போன்ற ஒரு சில வணிக எழுத்தாளர்கள் எழுத்தின் மூலமாகக் கணிசமாகச் சம்பாதித்தாலும் கூட பொழுதுபோக்கு வாசிப்பு என்ற ஒரு வழக்கமே இல்லாதிருந்த கால கட்டத்தில் அப்படி ஒரு வாசிப்பை உருவாக்கி வெற்றி பெற்றவர் என்ற வகையில் வடுவூரார் பொழுதுபோக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாகிறார்.
இந்த இடத்தில் டோண்டு ராகவனின் சில வார்த்தைகள். மேலே உள்ள லிஸ்டில் ரமணி சந்திரனை சேர்ப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. பாசிடிவாக எழுதும் மிகச்சில எழுத்தாளர்களில் அவர் ஒருவர் என்பதே எனது எண்ணம். இருக்கட்டும், இப்பதிவு வடுவூர் துரைசாமி ஐயங்கார் பற்றியதல்லவா, அவரைக் குறித்து மேலே பார்ப்போம்.
திருலைராஜன் மேலே எழுதுகிறார்.
‘கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும்’, ’வசந்த கோகிலம் அல்லது பூரண சந்திரோதயம்’, ’விலாசவதி’, ’திகம்பர சாமியார்’, ’மேனகா’, ’கும்பகோண வக்கீல்’, ’மாயா விநோதப் பரதேசி’, ’மதன கல்யாணி’, ’பாலாமணி அல்லது பக்காத் திருடன்’, ’சௌந்திரா கோகிலம்’ போன்ற தலைப்புகளில் நாவல்களை எழுதிக் குவித்து இருக்கிறார். இவரது ’மேனகா’, ’திகம்பர சாமியார்’ போன்ற கதைகள் சினிமாவாகவும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற்ன. தன் பெரும் செல்வத்தை வைத்து, சென்னையில் பைஃகிராஃப்ட்ஸ் சாலையில் ஒரு வீட்டை வாங்கி மாற்றிக் கட்டி வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு வாழ்ந்திருக்கிறார்.
வடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.
வாழ்க்கை முழுவதையும் எழுத்துடனே செலவிட்ட இவருடைய சாவும் எழுத்துடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இவருடைய ‘மைனர் ராஜாமணி’ என்ற நாவல் திரைப்படமானபோது ஒரு சமூகத்தாரை கீழ்த்தரமாகச் சித்தரிக்கிறது எனக் கடுமையான எதிர்ப்பு வந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் இறந்திருக்கிறார் வடுவூர் துரைசாமி ஐயங்கார்.
வடகலை ஐயங்கார்கள் ஃபரோக்களா, ஹாஹாஹா நல்ல ஜோக் எனக்கூறுவது முரளிமனோகர். அந்த நூல் விலை போகாதது மட்டுமல்ல, ஆங்கில அரசால் தடையும் செய்யப்பட்டது என்பது கூடுதல் விஷயம். இவருக்கு ஏன் இந்தத் தேவையில்லாத ஆராய்ச்சி என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
அது இருக்கட்டும், அவரது உண்மையான தோற்றத்தை இந்த உரலில் பார்க்கலாம்:
நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்தமேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்கவஸ்திரம், பஞ்சகச்சம், தலையில் குல்லா, காலில் கட் ஷூ,கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை, புகையிலை, தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார் இளமையோடிருக்க.மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.
அவரது வடுவூர் ஹவுஸ் திருவல்லிக்கேணியில் பைக்ராஃப்ட்ஸ் சாலையில் இருந்ததாக அறிந்ததிலிருந்து நானும் என் மண்டையை போட்டு குடைந்து கொண்டேன். நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவைக் கேட்டால் அவருக்கு தெரியவில்லை. என் பால்ய நண்பர்கள் குலசேகரன், பாபு, ஸ்ரீனிவாச தேசிகன் ஆகியோருக்கு ஃபோன் போட்டு கேட்டதில் தேசிகன் மட்டும் குன்சாக அந்த வீட்டை பைக்ராஃப்ட்ஸ் சாலையில் லொகேட் செய்தான். (பெரிய தெருவை தாண்டி பழைய ட்ரிப்ளிகேன் கஃபேக்கு எதிரில்). இதை வேறு பலரிடமும் கேட்டு ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டும்.
இவரது துரைக்கண்ணம்மாள் என்னும் நாவலில் ஓரிரு பக்கங்களுக்கு சுய எள்ளலும் செய்திருக்கிறார். அந்த வரிகளின் சாரம்:
அவன் (துரையப்பன்) சென்னையில் தங்கியிருந்த காலத்தில் திருவல்லிக்கேணி சமுத்திரக் கரைக்கு காற்று வாங்கப் போவதாக வைத்துக் கொள்வோம். நடந்தபடி இரஸ்தாவிலுள்ள கட்டிடங்களை இஞ்சினீர் தணிக்கை செய்வது போல மேலும் கீழும் பார்த்து ஏதேனும் ஷராக் கூறிக் கொண்டும், அவற்றின் சொந்தக்காரர் யார் என அறிந்து கொண்டு அவரைப்பற்றி ஏதேனும் புரளி வார்த்தைகள் சொல்லிக் கொண்டு போவான். அவன் பார்வையில் ‘வடுவூர் ஹவுஸ்’ பட்டது என வைத்துக் கொள்வோம்.
யாரதுப்பா இந்த வீடு என்று கேட்பான். வடுவூர் துரைசாமி ஐயங்கார் எனத் தெரிந்து கொண்டு உதிர்க்கும் சில மொழிகள் தமாஷாக இருக்கும். இந்த வீட்டைப் பார்த்தால் பத்தாயிரமாவது செலவழிஞ்சிருக்கும் போலிருக்கே, இந்தப் புளியோதரைக்கு இத்தனைப் பணம் ஏது என்பான். ஐயங்கார்கள் வளைச்சு வளைச்சு தம் உடம்பில் இட்டுக் கொள்ளும் நாமங்கள், ஐயங்கார் பெண்டுகளின் கவர்ச்சியான மடிசார் உடை ஆகியவையும் அவன் வாக்கில் சரளமாகப் புரளும். மேலே சொன்ன ஃபரோக்கள் பற்றிய புத்தகமும் பிரஸ்தாபத்துக்கு வரும்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் வடுவூராருக்கு சுய எள்ளல்கூட செய்யும் தன்னம்பிக்கை இருந்தது என்பதே.
சீரியஸ் எழுத்தாளர்கள் வணிக எழுத்தாளர்கள் என்னும் பிரிவினை அக்காலத்திலும் இருந்திருக்கிறது. இவர் வணிக எழுத்தாளர்தான் என்பதில் அவருக்கே சந்தேகம் இருந்ததில்லை. அவர் காலத்தில் அவரது புத்தகங்கள் கன்னாபின்னாவென்று விற்பனையாயின, இப்போது இல்லை அதனால் என்ன? அவரும்தான் உயிருடன் இல்லை. ஆகவே இப்போதைய நிலைமை அவரை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. அதுவே காலத்தை வென்றவர்கள் என இருக்கும் பல இலக்கியவாதிகள் தங்கள் சமகாலத்தில் கடுமையான வறுமையால் பீடிக்கப்பட்டனர். இப்போது அவர்கள் பெயர் நிலைத்து நிற்கிறது. அதனால் அவர்களுக்கோ அவர்கள் சந்ததியினருக்கோ என்ன பலன்? பேர் இருக்கு பெத்தப் பேர், அதை வைத்து நாக்கைத்தான் வழிக்க வேண்டும்.
அக்கால அமர இலக்கியவாதிகளின் மனைவியரை காலயந்திரம் கொண்டு இங்கு அழைத்துக் கேட்டால் கண்ணால் ஜலம் விடுவார்கள்.
உதாரணத்துக்கு 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையிலிருந்து சில வரிகள்:
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
அமர இலக்கியமோ வேறு எதுவோ முக்கியமாக குடும்பத்தாரின் நலனையும் பேண வேண்டும். அது முடியவில்லை என்றால் கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண்ணையும் அவள் குழந்தைகளையும் துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
12 hours ago
16 comments:
வடுவூராரைப் பற்றி இன்னும் ஒரு பதிவு இங்கே, அவர் எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டப்போது எழுதப்பட்டது - http://koottanchoru.wordpress.com//2009/04/18/வடுவூர்-கேதுரைசாமி-ஐயங்/
\\அவர் காலத்தில் அவரது புத்தகங்கள் கன்னாபின்னாவென்று விற்பனையாயின, இப்போது இல்லை அதனால் என்ன? \\
எனக்குத் தெரிந்து இப்போதும் வாங்க வாசகர்கள் தயாராக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அல்லையன்ஸ் பதிப்பகத்தார் வடுவூராரின் புத்தகங்களை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வெளியிட்டு வருகிறார்கள். இது வரை வெளியிட்டதில் நான் எல்லாவற்றையும் வாங்கிப் படித்துவிட்டேன்!
திகம்பர சாமியார் படித்திருக்கிறேன். அவர் இங்கிலீஷ்காரர்களுக்கு பெயர் வைக்கும் விதம் அலாதியாக இருக்கும். Mr. Small சின்னானாக மாறுவார், Mr.Wood கட்டையனாக மாறுவார். விறுவிறுப்பாக ஓடும் கதை!
வடூவூரார் எழுதியது எதையும் படித்ததில்லை... ஆர்வத்தைக் கிளப்பி விட்டீர்கள்.
'மரகதம்' கதை எழுதியவரும் இவர் தானோ?
அந்தக்கால சென்னை பற்றிய குறிப்புகள் சுவையாக இருக்கின்றன. மிட்லன்ட் தியேடர் இன்னும் இருக்கிறதா? பைகிராப்ட் சாலைக்கு தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்களே?
அதாவது 1920-1930 களில் மிகவும் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் என்கிறீகள். The Hound of Baskervilles கதை 1901-1902 ல் கானன் டாயல் எழுதி வெளியிடப்பட்டது. 1960 களில் படமாக வெளிவந்தது.
ஆக, வடுவூர் துரைசாமி ஐயங்கார் அக்கதையை சுட்டு மருங்காபுரி மாயக்கொலை எழுதியிருக்கிறாரா ? இல்லை அவர் மொழிபெயர்ப்பாளரா ?
@வஜ்ரா
என்ன குழந்தை மாதிரி கேள்வி கேட்கிறீர்கள்? சுட்டதுதான். இதற்கெல்லாம் அனுமதி ஒன்றும் வடுவூராரோ அவரைப் போன்றவர்களோ எப்போதுமே பெற்றதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திருமலை ராஜன் எழுதிய சொல்வனம் கட்டுரையைப் படித்தேன். தமிழில் நெடுங்கதையின் துவக்கம் 1940 களில் கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்றவை என்கிறார்.
ஆனால் பள்ளியில் 1850களில் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரமே தமிழில் முதல் புதினம் என்று படித்ததாக நினைவு!
டோண்டு சார்
நலமா? சொல்வனம் கட்டுரையைச் சுட்டியதற்கு நன்றி. அவரது நாவல் ஒன்றையும் உதாரணத்திற்கு விமர்சித்துள்ளேன் முடிந்தால் அதையும் படிக்கவும்.
நான் ரமணிச் சந்திரனை சுஜாதா, சாண்டில்யன், கல்கி, பாலகுமாரன்,ராஜேஷ்குமார் வரிசையில் வைத்ததன் காரணம் அவர் ஒரு பெரும் வர்த்தக வெற்றி பெற்ற எழுத்தாளர் என்பதினால்தான். மற்றபடி பாசிட்டிவ், நெகடிவ் அடிப்படையில் எல்லாம் நான் அவர்களை ஒரே குரூப்பாகச் சேர்க்கவில்லை. இவர்கள் எல்லாம் எழுத்தின் மூலம் சம்பாதித்தவர்கள் என்ற அர்த்தத்தில் சக்ஸஸ்ஃபுல் ரைட்டர்ஸ் என்ற பொருளில் ஒரே குரூப்பாகச் சேர்த்துச் சொன்னேன். மற்றபடி எனக்கு எல்லோர் மீதும் மதிப்பு உண்டு ஒவ்வொருவரின் தளமும், இடமும் வெவ்வேறானவை என்றாலும்.
வடுவூரின் புத்தகங்களுக்கு இன்றும் கூட நல்ல கிராக்கி இருப்பது போலத்தான் தெரிகிறது. அல்லையன்ஸில் கேட்டால் தெரியும்.
வஜ்ரா:
ஆம் பிரதாப முதலியார் சரித்திரமே முதல் புதினம். அதன் பின் ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் முதலிய நாவல்கள் வந்தன. ஆனால் அவற்றிற்குப் பிறகு நெடுங்கதைகள் மீண்டும் வர 35ம் வருட வாக்கில் ஆனது என்பதே நான் சொல்ல வந்தது. ஒரு இடைவெளி இருந்தது. அதன் பின்னால் வாசிக்கும் வழக்கத்தைப் பரவலாக்க உதவியவர்கள் வடுவூர், வை மு கோதைநாயகி அம்மாள், ரெங்கராஜு போன்றோர் அதன் பின் கல்கி அதை பெரிய அளவில் எடுத்துச் சென்றார். பி வி ஆ, லட்சுமி, சுஜாதா, பாலகுமாரன் ஆகியோர் அதைத் தொடர்ந்து கொண்டு சென்றனர். மேலும் பரவலாக்கினார்கள்
அன்புடன்
ச.திருமலை
”அமர இலக்கியமோ வேறு எதுவோ முக்கியமாக குடும்பத்தாரின் நலனையும் பேண வேண்டும். அது முடியவில்லை என்றால் கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண்ணையும் அவள் குழந்தைகளையும் துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்" - DONDU RAGAVAN SAYS.
பாமரர்கள் பார்வையில் நீங்கள் எழுதியது சரி. ஆனால், இன்னொரு பார்வை வேறாக இருக்கும்.
கலைஞர்கள் - எழுத்தாளர்கள், ஓவியர்கள் - போன்றவர்கள், தங்கள் கலையைத் தொழிலாக மட்டும் செய்யாமல் அதை ஒரு வேள்வியாக எடுத்து தம் வாணாளை அர்ப்பணிப்பர். இவர்களுடன் விஞ்ஞானிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்கள் திருமணங்கள் நிர்ப்பந்தத்தால் செய்யப்படும். மேலை நாடுகளில் இவர்கள் live-in வாழ்க்கையை பெண்ணோடு கூடி வாழ்ந்து குழந்தைகள பெறாமல் வாழ்வார்கள்.
But in a conservative society like the one Bharathiyaar had, he had to get married. No one was willing to give a bride as he had no permanent job. Only from the poorest of his community, he got one - the diminutive and unattractive Chellamaal. (But he 'desired' her physically; and no doubt, she must have had a wild and pleasing sexual life with him. He wrote many sensual poems of their sexual liaision; but the idiot Appadurai, her brother destroyed all as he wanted her sister not to be heroine of such poems. In a few poems, he changed the word Chellaal into Kannamma)
இப்படிப்பட்ட கலைஞரையோ விஞஞானியையோ மணம் செய்த பெண் அதை ஒரு பொதுநலச் சேவையாக ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்.
The wife of Edison lived like that. Switzer's wife was willing to live in the deep forests of Africa. She died of leprosy along with him. The Noble Prize for Peach should hve been shared between the two as she worked as a nurse in his forest hospital administering the decaying limbs of black lepers. Karl Marx's wife lived in utter penury in London. None of them complained. Only Sellamal complained to the Tamil public in the quote you give.
Sellammaal was told by her brother Vishwanatha Iyer to understand and sacrifice. She had forgotten that.
The case of Mrs Janaki Ammal, w/o the mathematician Ramanujan is similar. She told the interviewer that he almost abandoned her. He used to come home from office, and never asked anything, nor exchanged any pleasantries. She gave him a cup of coffee after he came home in the evening. He took it and sat on the unjal and went on doodling on paper on paper, bewildering variety of numbers, numbers and numbers. She could not understand. No child was born of the wedlock. How could? In simple words, she did not get the life of a woman as a wife to a husband. She was present physically. But he was absent mentally in the same house.
Now imagine Mr Dondu. ஒருவேளை அவர் ஒரு சாதாரணமான ஆசைக் கணவனாகயிருந்திருந்தால் ?
No Ramanujam today.
So, also Bharathiyar.
We have him today, talk and write about him, read him. and take him as an enduring legacy of Tamil literature. Only because he was a maverick.
Psychiatrics have said the uncommon trait of being uncommon propels the creative powers in them. All artists are like that: mavericks and more often, beyond the comprehension of common man like you and me: We can’t confine them within the narrow frames we are capable of.
This is from an American poet; herself a being 'out of course'!
"Much madness is divinest sense
To a discerning eye;
Much sense the starkest madness. “
Again, a British poet said:
"Great wits are to madness near aligned
And thin partitions do their bounds divide”
அவர்கள் அப்படி இருந்தபடியாலே அவர்களின் சாதனைகளை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். மனைவிமார்கள் தியாகம் பண்ணித்தான் தீரவேண்டும்!
Mr அப்பாதுரை!
அதன் பெயர் இன்று - பாரதியார் நெடுஞ்சாலை.
ஜோ மலம்.
பெரிய பெரிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொஞ்சம் சைக்காக இருந்திருக்கலாம்.
அதுக்காக சைக்காக இருக்கும் சிலர் பெரிய புடுங்கியாட்டம் பேசுவது ரொம்பவே ஓவர். அதில் நீயும் ஒருத்தன்.
நீ காட்டும் ஒவ்வொரு சைக்கோ கலைஞன் உதாரணத்துக்கும் காவியம் படைத்த குடும்பஸ்த கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆகவே SFU.
வடகலை ஐயங்கார்கள் ஃபரோக்கள் என்று அவர் ஆராய்ச்சி செய்து 900 பக்கத்துக்கு புத்தகம் எழுதியிருக்கிறார்.
ஹஹ்ஹா என்று ஒற்றை வார்த்தையில் மறுதலித்துப் பேச நீர் என்ன ஆராய்ச்சி செய்தீர்?
குறைந்தபட்சம் அந்தப் புத்தகத்தையாவது படித்தீர்களா?
என்ன நேர்மை இது?
"நீ காட்டும் ஒவ்வொரு சைக்கோ கலைஞன் உதாரணத்துக்கும் காவியம் படைத்த குடும்பஸ்த கலைஞர்கள் இருக்கிறார்கள்"
Excellent comment. You have applied your mind now. Sometimes, you are sane.
You are correct: indeed there are so many who are 'sane' in general perception. However, all such persons did not take literature as their only occupation of life although they are dedicated to it.
எடுத்துக்காட்டாக: ஜெயமோகன், வண்ணதாசன் போன்றோர்.
ஜெயமோகன் பலவாண்டுகளாக அரசுப்பணியில் இருந்தார். அவர் எழுத்தாளனாக உருவாகிகொண்டிருந்த நாட்களில், அவரது குடும்பத்தேவைகளை அப்பணி கவனித்துக்கொண்டது. ஒருவகையில் உருவாகி தன்னம்பிக்கை பிறந்தவுடன் அரசுப்பணியை விட்டுவிட்டு எழுத்தை முழநேரமாக எடுத்துக்கொண்டு, எழதித் தள்ளிக்கொண்டேயிருக்கிறார். சகிக்கமுடியவில்லை!
வண்ணதாசன் ஒரு SBI தொழிலாளி. அவர் AGM ஆகி ரிடையர் ஆனார். அவர் எழுத்தை பாமரகள் படிக்கமாட்டார்கள். அது விலை போகாது, குடும்பத்தைக்காப்பாற்றாது என அவர் சரியாக நினைத்ததால், அவர் வங்கி வேலையை விடவேயில்லை.
சிலர், எழுத்தில் வணிகவெற்றியடைந்தாலும், தம் தொழிலை விடவில்லை. YGP.
As I understand, he was a Dy.Commissioner of Customs, Chennai. Sujaatha, Bharatidasan (school teacher)
Many many examples can be cited here.
However, the mind of an artist is different from yours and Dondu's. In his art, he never mixes any materialistic thought like: how to feed my family? etc. If he does, then his art will suffer: i.e. it will become artificial.
If someone tries hard to write a poem to win a prize, such a poem cant be a masterpiece, but it may win prizes at times.
பாரதியின் வாழ்க்கை பரிதாபகரமானது. நிலையற்ற மனம். நிலையற்ற வாழ்க்கை. அஃது ஒரு நாடோடி வாழ்க்கையே.
நாடோடிகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, ஒரு gayக்கு ஒரு பெண்ணைமணம் செய்துவைப்ப்து போலாகும்.
In the west, gay accept their sexual orientation and the parents or others wont conceal it in order to marry them off.
Here, parents force the gay sons in marriage hoping physical companionship of a girl in marriage will change their sons.
பாரதி ஒரு கேயல்ல. He was a very sexy fellow. His wife conceived many times. But he was unsuitable to have a wife and family.
If he lived today, he would go for a live-in relationship with a woman, just for sex; and wont hve a family so that a person like Dondu Ragavan will not finish his blogpost condemning him.
More can be said. Bharati is an interesting personlity for analysis.
Keep up your probing questions. I will answer to you and you can enjoy reading them.
As St Thomas Aquinas said:
"There is some soul of goodness in things evil,
Would men observingly distil it out:"
This is for you. You are basically a good fellow, but are misdirected. We can distil your goodness out. Ask probing questions.
என் தாத்தா வீட்டுக்கு பக்கத்தில் தான் இருந்தாராம்.இவரைப் பற்றி என் அம்மா மற்றும் மாமாக்களிடம் விஜாரித்த போது அவர் எழுத்தைப்பற்றி எதுவுமே தெரியாதது போலவே சொன்னார்கள்,ஒருவேளை வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்திருக்ககூடும்.
naan payanpaduththiyu sol: maverick. Not psycho.
Psycho can be used for a variety of persons like caste and religious fanatics and sex mainacs.
Mavericks only for genuises,scientists, creative artistics, and sometimes, common people. Their behavior in certain areas of thinking is beyond the comprehension of man. Their imagiation and work is not destructive.
But the imagination and working of the mind of a pshycho like religious, sexual and caste fanatics is always destructive.
Honor killings in Northern States is a recent example.
Jo Amalan Rayen Fernando
Post a Comment