8/26/2010

நண்பர்களுக்கு நன்றி - 7

நண்பர்களுக்கு நன்றி - 1

நண்பர்களுக்கு நன்றி - 2
நண்பர்களுக்கு நன்றி - 3
நண்பர்களுக்கு நன்றி - 4
நண்பர்களுக்கு நன்றி - 5

நண்பர்களுக்கு நன்றி - 6


இந்த வரிசையில் மே மாதம் 2-ஆம் தேதி இதற்கு முந்தையப் பதிவை போட்டபோது இவ்வளவு சீக்கிரம் இந்த ஏழு லட்ச கவுண்டர் எண்ணிக்கைக்கான பதிவு போடுவேன் என சத்தியமாக நினைக்கவில்லை.

ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. மூன்று லட்சம் வந்த நேரம் 07.11.2008, 12.54 hrs. நான்கு லட்சம் வந்த நேரம் 14.05.2009 காலை 10.45. ஐந்து லட்சம் வந்த நேரம் 11.11.2009, 23.13 hrs. ஆறு லட்சம் வந்த நேரம் 03.05.2010 காலை 10.26 மணி. இப்போது ஏழு லட்சம் வரும் தருவாயில் அதற்கும் ஆறு லட்சத்துக்கும் இடையில் 4 காலண்டர் மாதங்களுக்கு குறைவாகவே (117 நாட்கள்?) எடுத்து கொள்ளப்படும் என எண்ணுகிறேன்.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த முறை டோண்டு முக்கியமாகக் கருதுவது சோ அவர்களையே கண்டித்து பதிவு போட்டதுதான் என முரளி மனோகர் கூறுகிறான். பின்னே என்ன, இவ்வளவு அற்புதமான மெகா சீரியலான எங்கே பிராமணனை இப்படியா சொதப்பலாக முடிப்பது? அப்பதிவிலிருந்து சில வரிகள் மீண்டும் இங்கே.

எங்கே பிராமணன் முதல் பகுதியில் கடைசி எபிசோட் என்பதை நான் முதலிலிருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை நான் அவ்வாறு காண இயலவில்லை. ஆகவே இந்த சீரியல் இம்மாதிரி முடிந்தது என்னையும் ஆச்சரியத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தி விட்டது. காரணம் கதையில் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்.

எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை.


இந்த ஏழு லட்சத்துக்கன பதிவுக்கும் ஆறு லட்சத்துக்கான முந்தையப் பதிவுக்கும் இடையே இருப்பவை மொத்தம் 81 பதிவுகளே. அவற்றில் எங்கே பிராமணன் சம்பந்தப்பட்ட பதிவுகள் 20. மீதி அறுபதில் நான் முக்கியமாகக் கருதுவது அவதூறு ஆறுமுகம் மீது நேரடியாகத் தாக்கிய பதிவு முதலில் வருகிறது. போலி டோண்டு விவகாரத்தின் கடைசி தொக்குகளில் ஒன்றாக இது வருகிறது. இனியாவது போலி டோண்டு பற்றி மேலும் எழுத வேண்டிய அவசியம் இல்லாது இருக்கும் என நம்புகிறேன்.

நூறுக்கும் மேல் பின்னூட்டங்கள் பெற்ற பதிவு எல்லாவற்றுக்குமே இட ஒதுக்கீடு தந்து விடலாமா என்னும் பதிவு, இரண்டாம் உலக மகாயுத்தத்தில் சோவியத் யூனியனின் பங்கு, ஒட்டகத்துக்கு நடந்தது என்ன?, சாதியே கூடாது என கூத்தடிக்கும் பதிவர்களை பற்றிச் சாடிய பதிவு, பாப்பானைத் திட்டணும்னா பகுத்தறிவையே மறக்கலாம் என செயல்படுபவர்கள் பற்றிய பதிவு, பார்ப்பான் பூணல் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன என நான் கேள்வி கேட்ட பதிவு, ரொம்ப நாளுக்கப்புறம் புதிர்கள் பதிவு, பெரியாரை வீரமணி வகையறாக்கள் கேவலப்படுத்தியது பற்றிய பதிவு ஆகியவை இந்த 81 பதிவுகளில் குறிப்பிடத் தக்கவை.

போன தடவை போலவே இம்முறையும் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளை அல்லது நாளை மறுநாள்தான் 7 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது தேதி 26.08.2010, நேரம் பிற்பகல் 12.14 மணி (இந்திய நேரம்), ஹிட்கள் 6,98,914.

தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 1086, 1085, 1084, 1083, 1082 .......

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

அருள் said...

வாழ்த்துகள்

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் டோண்டு சார்.

ஸ்ரீ....

dondu(#11168674346665545885) said...

ஆர்.கே.சதீஷ்குமார் has left a new comment on your post "நண்பர்களுக்கு நன்றி - 7":

வாழ்த்துக்கள்!

Publish

Mark as spam

Moderate comments for this blog.

Posted by ஆர்.கே.சதீஷ்குமார் to Dondus dos and donts at August 26, 2010 12:58 PM
நன்றி. தவறுதலாக அழித்து விட்டேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Congratulations.

Sridhar

dondu(#11168674346665545885) said...

லேட்டஸ்ட் கவுண்ட் டௌன் 320, 319, 318... என வந்து விட்டது. போகிற போக்கில் இன்று இரவே ஆட்டம் ஓவர் என நினைக்கிறேன்.

பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

நான் 699777 வது ஆள்!

dondu(#11168674346665545885) said...

லேட்டஸ்ட் கவுண்ட் டௌன் 22, 21, 20... என வந்து விட்டது.

போகிற போக்கில் இன்னும் சில நிமிடங்களில் ஆட்டம் ஓவர் என நினைக்கிறேன்.

பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

கடைசியில் நான் தான் 7,00,000 மா?

dondu(#11168674346665545885) said...

இப்போது ஹிட் கவுண்டர் 700008 என காட்டுகிறது. எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஒரு காசு said...

வாழ்த்துகள் ஐயா.
மீ த ஏழு லட்ச்சத்தி ஒன்றாவது ஆள்.

dondu(#11168674346665545885) said...

கடைசி ஒரு லட்சம் வர 115 நாட்கள் 8 மணி 28 நிமிடங்கள் பிடித்துள்ளன.

நானே எதிர்பார்க்காத ஸ்பீட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பத்மநாபன் said...

700070 ல் சேர்ந்துகொண்டேன் .. வாழ்த்துக்கள்..எல்லோரயும் ஜோட்டாளியாக்கிக் கொள்ளும் உங்கள் பண்புக்கு பரிசு.

ஈஸ்வரன் said...

டோண்டு SIR
நீங்கள் அருளுக்கு சிறப்பு நன்றிகள் தெரிவிக்க வேண்டும். அவருடைய பின்னூட்டங்கள் இல்லாவிட்டால் கவுன்ட் இவ்வளவு ஏரியிருக்குமா என்பது சந்தேகமே.

பி.கு. நீங்கள் counter ஐ ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாம். நான் ஜாதிபற்றிய பதிவோ என்று பார்த்து ஏமாந்துபோனேன். I presume it was done with that purpose.

ஈஸ்வரன்

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள் ஏழு லட்சங்களுக்கு. சீக்கிரமே ஏழு கோடி ஆக வாழ்த்துக்கள்.


எங்கே பிராமணனை விட்டு தள்ளுங்கள், இப்போது வந்துள்ள சௌந்தரவல்லி பார்க்கிறீர்களா

வடுவூர் குமார் said...

தூள்.

Krishnan said...

Congratulations Sir.

Anonymous said...

ஹிந்து நாளிதழில் அன்பு மணி ராமதாஸ் அவர்கள் சாதிகளை அகற்றிட ஒரு தொலை நோக்குப்பார்வையினை
கவனித்தீர்களா !

if u touch what he says, possibly ur blog may cross 10 lakhs hits in one month.

அருள் said...

Anonymous said...

// //ஹிந்து நாளிதழில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சாதிகளை அகற்றிட ஒரு தொலை நோக்குப்பார்வையினை
கவனித்தீர்களா !

if u touch what he says, possibly ur blog may cross 10 lakhs hits in one month.// //

மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் அக்கட்டுரையை இங்கே படிக்கவும்:

http://www.hindu.com/2010/08/27/stories/2010082753561300.htm

Anonymous said...

இட்லி வாடையோட கௌண்டர் 33 லட்சம் காட்டுது!!

மரண மொக்கை மோகன் said...

இட்லி வடையில் பார்ப்பானர்கள் தர்பார் ஓடுவதாக அல்லவா நினைத்தேன். 33 லட்சம் கௌண்டர்கள் அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது